. ரகுபரன்
சென்ற சனிக்கிழமை 16.04.2011 அன்று உரும்பிராய் வாழ் சிட்னி மக்கள் சிட்னியில் லிட்கத்தில் ஒன்றுகூடி கொண்டாடிய நிகழ்வு இடம் பெற்றிருந்தது. மங்கல விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. திரு திருமதி சோமசுந்தரம், திரு திருமதி சிவகுருநாதன், திரு திருமதி ஈஸ்வரலிங்கம் ஆகியோர் மங்கல விளக்கை ஏற்றிவைக்க செல்வன் சரவணன் சிவகுமார் தமிழ்வாழ்த்தையும் ஒஸ்ரேலிய கீதத்தையும் பாடினார். அதனைத்தொடர்ந்து உரும்பிராய் இந்துக்கல்லூரியின் கீதத்தை திருமதி கலா இளங்கோ, திருமதி குமுதினி அன்ரனிப்பிள்ளை, திருமதி சாந்தி பாஸ்கரன், திருமதி வாசுகி ஈஸ்வரலிங்கம் திரு சிவகுமார் சிவகுருநாதன் ஆகியோர் இசைத்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்பு கல்லூரி கீதத்தை சிட்னில் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.