.
பேர்த் தடுப்பு முகாமிலிருந்து இந்த கவிதையை அனுப்பியிருக்கிறார் இந்த இளையன் முழுப்பெயர் போடப்படவில்லை
பேர்த் தடுப்பு முகாமிலிருந்து இந்த கவிதையை அனுப்பியிருக்கிறார் இந்த இளையன் முழுப்பெயர் போடப்படவில்லை
கடலில் உயிரை இரை போட்டு
கிடைத்த பயணப் பரிசொன்று
கரையைக் கண்டு மகிழ்வுற்றோம்
தாய் நாட்டில் வாழ முடியாமல்
அச்சம் உறைந்து வாழ்ந்த நாங்கள்
மிச்சம் இருந்த உயிரை மட்டும்
துச்சம் என்று மதிக்காது
கடலே சாவு என்றறிந்தும்
துணிந்தே கடலில் கால் பதித்தோம்
வயித்தைக் கட்டி வாயடக்கி
வாழ்விற்கான நோய் சுமந்து
நிமிடம் தோறும் சாவோசை
கேட்டே கடலில் எம்பயணம்
அன்னை பிள்ளை உறவிளந்தோம்
அன்பு மனையாள் நினைவிளந்தோம்
நாங்கள் பெற்ற பிள்ளைகளை
நடுத் தெருவில் விட்டு வந்தோம்
உயிர் இருந்தால் போதுமென
என் மனையாள் விடை கொடுத்தாள்
உயிரே பிள்ளை போரையோ
என்றே தாயும் அடம் பிடித்தாள்