மழை நாளும்.. மாடிவீடும்.. (கவிதை) வித்யாசாகர்!

.

ழைஒழுகும் வீடு
மல்லிகை உதிர்ந்த முற்றம்
கைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு
தொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம்
மண்வாசத்தோடு வீசும் காற்று
மழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா
வேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா
புயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி
டமடமவென இடிக்கும் வானம்
இருள் அடையும் பொழுது
கறுத்துச்சூழும் மேகம்
ஓரக்கண்ணால் முகம் பார்த்துக் கத்தும் காகம்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்
காற்றில் கிளையாட இலைசொட்டும் மழைதேங்கிய நீர்
பசியில் பரபரக்கும் வயிறு
பள்ளிக்கு போகயிருக்குமோ இருக்காதோ எனும் படபடப்பு
மழையொழுகும் வீட்டினுள் நிரம்பிய
பாத்திரத்திலிருந்து எழும் கூரையின் வாசம்
மண் கிளறி மழையோடு நுகர்ந்த மண்வாசமென
எல்லாவற்றோடும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது மனசு..
மனதை என்னசெய்வேன்.. ?
அடுக்குமாடி கட்டிடத்தின் மேலமர்ந்துக்கொண்டு
மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..

சிட்னி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா 17.03.14

.மரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை விசாகேஸ்வரன்

.
கந்தர்மடம் மணல்தறை  ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், 
சிட்னியை வசிப்பிடமாகவும், யாழ் மத்திய கல்லூரியின்
பழைய மாணவரும்,    Aussie Unity Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமானதிரு.வேலுப்பிள்ளை 
விசாகேஸ்வரன்(ஈசன் விசா) 13.03.2014  வியாழக்கிழமையன்று  கா மரணமடைந்தார்.

இவர் சானிக்காவின்      அன்புக்கணவரும், திரு செல்லையா வேலுப்பிள்ளை ,காலஞ்சென்ற திருமதி சரஸ்வதி வேலுப்பிள்ளை
அவர்களின் அன்புப் புதல்வரும், மாலா தயானந்தன், மீரா பார்த்தீபன்,
ரவிராஜ், கீத்தா இரட்ணசீலன், தரன், கோபி அரவிந்தன், சக்தி 
ஆகியோரின் அன்புச் சகோதரரும், தயானந்தன், பார்த்தீபன், வாணி, 
இரட்ணசீலன், பானுமதி, அரவிந்தன், தீபாஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின்  பூதவுடல்  17ம்  திகதி திங்கட்கிழமை, மாலை 5.00 மணி முதல்  9.00 மணிவரை  2, Lane Street(corner of Veron Street) Wentworthville இல்  உள்ள RedGum Function Centre இல் பார்வைக்காக வைக்கப்படும்.

 தகனக் கிரியைகள் 18ம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியிலிருந்து 1.15 மணி வரை,  South Chapal Rockwood Crematorium Lidcombe இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன்  கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு        
கீத்தா இரட்ணசீலன் - 98964503                                         
சக்திதரன்                          - 0416195282    
அரவிந்தன்         - 0422202905         

விழிப்பு ஒன்று கூடல் 19.03.14


டக்கு கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டித்த போதும், சர்வதேச சமூகம் கேட்க மறுத்தது.  ஆனால் இன்று, சிறீலங்கா அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைக்குப் பதில் தர வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சரியான முடிவெடுக்க சர்வதேச அரசுகளுக்கும் செய்தி சொல்லும் வகையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர் எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம் இது. 
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த விழிப்பு ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, சர்வதேச சமுகத்திற்கு எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிரிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன் கூட இருக்கின்றார்கள்.
அன்புத் தமிழ்ச் சமூகமே, அல்லலுறும் எம் மக்களின் துயர் தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டிய காலம் இது.  அனைவரும் பெருந்திரளாக ஒன்று கூடி, எமது ஒருங்கிணைந்த ஆதரவை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் சர்வதேசத்தின் கவனத்தை எம்மக்களின் பால் திசை திருப்பவும் ஒன்று கூடுங்கள்.
மார்ச் மாதம் 19ம் திகதி (புதன்கிழமைகாலை 11:30 மணிமுதல் 2 மணி வரைகன்பரா பராளுமன்றத்திற்கு முன்பாக
சிட்னியிலிருந்து பிரயாண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.  மேலதிக விபரங்களுக்கு 0469 089 883 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.

கங்காருவும் அதன் குட்டியும் போல (சிறுகதை) - கானா பிரபா

.


 க்க்க்ர்ர்ரீஈஈஈச்ச்

ஒரு சடுதியான ப்ரேக் போட்டதில் கார் கொஞ்சம் நிலை குலைந்து நடுங்கியது போல இருந்தது. 
"என்னப்பா நடந்தது"
பதற்றத்தோடு பின் இருக்கையில் இருந்து வாணியின் குரல்.

நீண்ட பயணத்தின் சீரான காரோட்டத்தின் சுகத்தை ஒரு மொபைல் தொட்டிலாக நினைத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ரிஷி எதிர்பாராத அந்த நிறுத்தத்தால்  வீறிட்டு அழத்தொடங்கினான்.

இருக்கையிலிருந்தபடி அப்படியே பின் இருக்கைப் பக்கம் திரும்பிப் பார்த்தான் முரளி. 

தன் மனைவி வாணி, ரிஷியை அணைத்துக் கொண்டு வானத்தில் பருந்தை எதிர்கொள்ளும் கோழி தன் குஞ்சை இறுக அணைத்து மறைப்பதுபோலப் பதற்ற முகத்தோடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.

அந்தப் நெடுஞ்சாலையில் இருந்து மெல்ல நிதானமாக, பக்கத்தில் போடப்பட்டிருக்கும் தற்காலிகப் புல்தரை நிறுத்தத்துக்கு காரைச் செலுத்தி நிறுத்தி விட்டு ஸ்டியரிங் இல் அப்படியே கொஞ்ச நேரம் முகம் புதைத்தான்.
சனக்குவியல்,
றோட்டெல்லாம் இரத்தம், ஆட்டிறச்சிக்கடை, உரைப்பை எல்லாம் சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது மண்டைக்குள். 
அப்படியே ஸ்டியரிங்க்கில் பற்றிய கைகளுக்குள் முகத்தைப் போட்டபடி கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்.

விட்டு வெளியே வந்து அந்த நெடுஞ்சாலையை நோட்டமிட்டான்.

தனக்கு முன்னால் வந்த இன்னொரு வாகனம் செய்த வேலை அது.
சாலையைக் கடக்க முயன்ற கங்காரு ஒன்று அப்படியே கை, கால்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செத்துக் கிடந்தது. 
000000000000000000000000000000000000
தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டின் ஒரு மறக்கமுடியாத மாலைப்பொழுது அது.
மாலை ஆறு மணிக்கெல்லாம் யாழ்ப்பாண நகரப்பகுதி மயான அமைதியில் தன்னைப் போர்த்துக்கொண்டிருந்தது. நகரப்பகுதியில் அமைந்த கடைக்காரர் ஐந்து மணிக்கெல்லாம் பூட்டுப் போட்டு விடுவார்கள். 

வள்ளுவர் விழா 23 .03 14திரும்பிப்பார்க்கின்றேன் - 28 - முருகபூபதி


.
ஒரு      கூடைக்கொழுந்தின்    இலக்கிய     வாசம்

சாயி    இல்லத்தில்      பக்தர்களின்     பாதணிகளை  ஏந்திய  எளிமையான மலையகப்படைப்பாளி   என்.எஸ்.எம்.  ராமையா
                                                                                                                                                  

       இயற்கைச்   சூழலின்   மத்தியில்   ஏகாந்தமாயிருந்து  கலையம்சம்   மிக்ககலை - இலக்கியங்களைப் படைக்க    வேண்டிய    மணிக்கரங்கள் இரும்புக்கடையின்   மத்தியில்     கணக்கு    ஏட்டுடன்   சதா   கருமமாற்றம் நிலை    என்றுதான்   மாறுமோ ?     என்று    நண்பர்     மேகமூர்த்தி     பல வருடங்களுக்கு    முன்னர்     என்.எஸ்.எம்.     ராமையாவைப் பற்றி மல்லிகையில்    எழுதியது    நினைவுக்கு  வருகிறது.

மேகமூர்த்தி     இன்று    கனடாவில்.   முன்பு    வீரகேசரியில்     துணை ஆசிரியராக     பணியிலிருந்தவர்.     தற்பொழுது     வீரகேசரி   மூர்த்தி    என்ற பெயரில்   எழுதிவருகிறார்.

 நானும்   முதல்   முதலில்  என்.எஸ்.எம்.   அவர்களை    அந்த இரும்புக்கடையில்தான்     சந்தித்தேன்.     அறிமுகப்படுத்தியவர்  மு.கனகராசன்.

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் கலை - இலக்கிய சந்திப்பு அரங்கு

.
அவுஸ்திரேலியாவில்   கடந்த     பல வருடங்களாக    தமிழ்  எழுத்தாளர் விழாக்களையும்    கலை  -  இலக்கிய    சந்திப்புகளையும்     அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளையும்     நடத்திவரும்  தமிழ்    இலக்கிய   கலைச்சங்கம்   முதல் தடவையாக    குவின்ஸ்லாந்து    மாநிலத்தில்  கலை  -  இலக்கிய   சந்திப்பு அரங்கை     முழுநாள்  நிகழ்ச்சியாக  ஏற்பாடு  செய்துள்ளது.
எதிர்வரும் மார்ச்  22  ஆம்   திகதி  குவின்ஸ்லாந்து     மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில்      Centenary  Community  Hub           சமூக    மண்டபத்தில் காலை   10    மணி  முதல்  கலை  - இலக்கிய   சந்திப்பு   அரங்கு    நடைபெறும்.
இலக்கிய    கருத்தரங்கு  -  கவிதை  அரங்கு  -   மாணவர்  அரங்கு  - நூல் அறிமுகம்  -   தமிழ்  விக்கிபீடியா    பயிலரங்கு    -   கலந்துரையாடல்    முதலான நிகழ்ச்சிகள்     இடம்பெறவுள்ள    இந்நிகழ்வை    அவுஸ்திரேலியா    தமிழ் இலக்கிய  கலைச்சங்கம்   அங்கிருக்கும்     சங்கத்தின்     உறுப்பினர்களுடன் இணைந்து    நடத்தவுள்ளது.
மெல்பனை    தளமாகக்கொண்டியங்கும்    இச்சங்கத்தில்     அவுஸ்திரேலியா மாநிலங்கள்    விக்ரோரியா  -    நியூசவுத்வேல்ஸ்  -  கன்பரா   முதலான இடங்களில்    வதியும்  கலை  -  இலக்கியவாதிகள்   அங்கம்    வகிக்கின்றனர்.
விக்ரோரியா    மாநிலத்தில்     பதிவுசெய்யப்பட்ட    அமைப்பாகவும் பல்தேசிய   கலாசார    ஆணையத்தின்  அனுசரணைகள்   பெற்ற சமூகச்செயற்பாட்டு  இயக்கமாகவும்     பதிவுபெற்றுள்ள     இச்சங்கத்தின் வருடாந்த     எழுத்தாளர்     விழாக்கள்    கடந்த     காலங்களில்    மெல்பன்  - சிட்னி  -  கன்பரா    முதலான     இடங்களில்   நடந்துள்ளன.
மெல்பனில்   இரண்டு    நிகழ்ச்சிகள்
எதிர்வரும்   மே    மாதம்  24  ஆம்   திகதி    தமிழ்க்கவிதை     இலக்கியம் அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சியையும்     ஜூன்    மாதம் 14   ஆம்   திகதி  14 ஆவது     தமிழ்     எழுத்தாளர்     விழாவையும்     அவுஸ்திரேலியா     தமிழ் இலக்கிய   கலைச்சங்கம்  விக்ரோரியா    மாநிலத்தில்     மெல்பனில் நடத்தவுள்ளது.

                                ---0--- 

சிட்னி முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா 16.03.14

.
படப்பிடிப்பு ஞானி 
சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா இன்று 16.03.2014இல் இடம் பெற்றது ஆயிரக்கணக்கான  மக்கள்  இந்த திருவிழாவில் கலந்து கொண்டார்கள். இன்று முருகன் தேரில் ஏறி தெற்கு வீதிக்கு வந்தபோது மழை தூற  ஆரம்பித்து  வடக்கு வீதிக்கு தேர் வந்தபோது  மழை சற்று பலமாக இருந்தது. மழையையும் பொருட்படுத்தாது காவடிகள் ஆடிவர பக்தர்கள் பிரதிஸ்டை செய்ய பெண்கள் அடி அழித்து தேரை பின்தொடர தேவார பாராயணம் பாடிக்கொண்டு அடியார் கூட்டம் பின்செல்ல ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் திரு வீதி உலாவந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 

வருகை தந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு  தண்ணீர்ப்பந்தல் தாகசாந்தி செய்துகொண்டிருந்தது. மழையும் பொருட்படுத்தாது தொண்டர்கள் சேவையாற்றிக்கொண்டிருந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிகழ்ச்சியை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடியாக அஞ்சல் செய்துகொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இலங்கைச் செய்திகள்

.
6500 ஏக்கர் காணி அரசாங்கத்துக்குரியது: இராணுவம்

சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. முன்றலில் ஆர்ப்பாட்டம்

ரணிலை சந்தித்தார் சந்திரிகா

6500 ஏக்கர் காணி அரசாங்கத்துக்குரியது: இராணுவம்


12/03/2014    வலி.வடக்கில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட  6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அனைத்தும்  அரசாங்கத்திற்குரிய காணிகள் என்று இராணுவத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
அதேவேளை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
நலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கிவாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ்.காங்கேசன்துறை படைமுகாமில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே 515 ஆவது பிரிகே டியர் ஈஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரியின் மேற்படி கருத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நலன்புரி நிலையங்களின் தலைவர்களும் மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகளும் இராணுவத்தினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த யாழ் - தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு.

News Service
400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர்.

.

மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல் பட்டதாரியானார். 2007இல் பிரித்தானியாவின் மிகச் சிறந்த அறிவியல் மாணவர்கள் 18 பேரில் ஒருவராகிப் பதக்கம் பெற்றார்.
கேம்பிரிட்சுப் பல்கலையில் முதுநிலை அறிவியல் பட்டம் பின்னர் முனவர் பட்டம் பெற்றார்.

உலகச் செய்திகள்

.
அமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்ததாம்  மலேசிய விமானம் கடத்தப்பட்டது? 

மாயமான விமானம்: மூன்று சந்தேகத்திற்குரிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா

=====================================================================

அமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்ததாம்  மலேசிய விமானம் கடத்தப்பட்டது? 


13/03/2014   காணாமல் போன மலேசிய விமானம் இறுதியாக காணப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு பின்னர் 4 மணி நேரமாக வானில் பறந்ததாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த அதிகாரிகள் அந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கருதுவதாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக அவர்களுக்கு நெருக்கமான உத்தியோகபூர்வமற்ற இரு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க வோல் ஸ்றீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.

பர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாளத்தை தக்கவைக்கும் முயற்சிகளும்

.
மியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர்.

1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்டில் பர்மா என அறியப்படும் மியான்மாருக்கு புலம்பெயர்ந்தனர்.

தென்னிந்தியாவிலிருந்து சிறிலங்கா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்த மக்களைப் போலல்லாது பர்மாவில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் கொலனித்துவ ஆட்சியில் சரியான முறையில் நடாத்தப்படவில்லை. இவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்ப்பதற்குப் பதிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

மானதின் வலி. - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.
அந்த முள்ளி வாய்க்கால் கனவுடனே வரும் சுசியுடைய 
நினைவினூடே நான் நடக்கையில்
அதிசீக்கிரத்தில் மாறாது  மானதின் வலி.

அன்பின் தோழியாக இருந்த உறவின் 
நெருக்கத்தில்  இழப்பின் தாக்கம்.

நாடி நர்ம்புகளுடனே  ஓடிய  
குருதி யோட்டங்களுக்குப் 
பின்னால் உயிருக்கு
வழிவிட்டு 
முள்ளி வாய்க்காலில்  நான்.

தாமதமாகத்தான் தெரிந்தது அது
தாக்குதலிருந்து கசிந்து போனது 
நான் ஊட்டிய என்  சுசியுடைய 
ரத்த வாடை என்று....!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி