சொல்லி விடாதீர்கள் - முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

.
பேன்ட் சட்டை அணிந்த
அனைவருமே
அவன் கண்களுக்கு
கோடீஸ்வரர்கள் தான்
நானும் அப்படித்தான்
தெரிந்திருக்கக் கூடும்!
நான் அவனைக்
கடந்துபோன அந்த சில
நொடிகளில்…
நடைபாதையில்
அமர்ந்திருந்தான் அவன்
கைகளை நீட்டி
என்னிடம் எதையோ
எதிர்பார்த்தபடி…
நிச்சயமாய்
என்னிடம் அவன்
பணத்தையோ உணவையோ தான்
எதிர்பார்த்திருக்கக் கூடும்
கல்வி வணிகமாகிப் போன
எங்கள் பண(ஜன)நாயக நாட்டின்
விலைவாசி ஏற்றத்தால்
இப்பொழுதெல்லாம்
நானுங்கூட அவனைப்போல்
ஒரு நாளைக்கு ஒருமுறையோ
இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான்
அரைகுறை வயிறோடு
உணவருந்துகிறேன்
என்ற உண்மையை
யாரும் அவனிடம்
சொல்லிவிடாதீர்கள்…

முனைவென்றி நா சுரேஷ்குமார்

யூனியன் கல்லூரியின் 200 வது விழா சிட்னியில் - செ.பாஸ்கரன்

.

சென்ற சனிக்கிழமை 28.05.2016 மாலை சிட்னி பஹாய் சென்டரில் உள்நுளைகின்றேன்  நேரம் மாலை 5.50  யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரின் 200வது ஆண்டு விழா. 200வது ஆண்டு விழா  கொண்டாடும் யாழ்ப்பாணத்து முதல் கல்லூரி இதுதான் என்ற பெருமையோடு பாடசாலை பழைய மாணவர்கள் புன்னகையோடும் கூப்பிய கரங்களோடும் எங்களை வரவேற்று ஊடக அனுசரனையாளர்களுக்கான இருக்கையில் அமரவைக்கின்றார்கள். ஏறக்குறைய மண்டபம் நிறைந்து காணப்படுகின்றது. இன்னும் பார்வையாளர்கள் வந்துகொண்டே இருக்கின்றார்கள். பல தொண்டர்கள் பல்வேறு திசைகளிலும் பறந்துகொண்டிருக்கின்றார்கள். பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு A.J.ஜெயச்சந்திராவையும்  செயலாளர் Dr.ஞானராஜனையும்  மூன்று நாட்களுக்கு முன்பாக ATBC  வானொலியில் பேட்டி கண்டபோது நிகழ்வு 5.59 மணிக்கு ஆரம்பமாகும்   என்று கூறியது ஞாபகத்தில்வர கடிகாரத்திலும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டேன் . 5.58 மணிக்கு ஒலிவாங்கியில் தட்டும் சத்தம் கேட்டது 

சேக்கிழார் குருபூசை 08 06 2016

.கன்பராவில் ஞானம் ஆசிரியருக்கு பாராட்டு விழா

.

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கமும் கன்பரா  கலை இலக்கிய  வட்டமும்  
இணைந்து,  கன்பராவில்  கலை இலக்கியம் - 2016  என்னும்  நிகழ்ச்சியை  கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள் மண்டபத்தில்  (Canberra Tamil Senior Citizens Hall, 11 Brumby Street, Isaacs, ACT 2607) சென்ற சனிக்கிழமை  4 ஆம்  திகதி  (04062016)   சனிக்கிழமை  மாலை 3.00மணிஇலிருந்து 7.00 மணிவரை இடம் பெற்றது.

நான்கு   அமர்வுகளாக  இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  தலைவர் பேராசிரியர் ஆசி.கந்தராஜாவின்    தலைமையில்  நடைபெற்ற  இந்நிகழ்வில்   இலங்கையின் மூத்த  படைப்பாளியும்  ஞானம் ஆசிரியருமான  டொக்டர்  திஞானசேகரனின் அயராத இலக்கியசேவைகளை   பாராட்டி  எழுத்தாளர்  திருமதி  யோகேஸ்வரிகணேசலிங்கம்   உரையாற்றினார் .

 ஞானசேகரனுக்கு    அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்   சார்பில் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டது 
டொக்டர்  ஞானசேகரன்  தமது  ஏற்புரையுடன்  "  ஈழத்து இலக்கியமரபின் இன்றைய  நிலை "  என்னும்   தலைப்பில்  உரை நிகழ்த்தினார். 

முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்

.


ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29-05-2016   ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை   மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது  இல்லத்தில்  காலமானார்.
ஆரம்பத்தில்  இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியில்  அங்கம்  வகித்திருந்த   இவர்,   கட்சியின்  உத்தியோகபூர்வ  இதழ்களான புதுயுகம்,   தேசாபிமானி  ஆகியவற்றில் தொடர்ச்சியாக  எழுதியிருக்கிறார்.
ஆங்கிலம்,   சிங்களம்  ஆகிய மொழிகளில்  சிறந்த  புலமை இவருக்கிருந்தமையால்   அரசியல்  மற்றும்  இலக்கிய  மேடைகளில் மொழிபெயர்ப்பாளராகவும்   செயல்பட்டார்.   இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்   சங்கத்தின்  மூத்த  உறுப்பினராகவும்  இவர்  இயங்கிய காலத்தில்   சங்கத்தின்  மாநாடுகள்,   கருத்தரங்குகளில்  பல சிங்களத்தலைவர்கள்,    எழுத்தாளர்களின்  உரையை  அழகாக  தமிழில் மொழிபெயர்த்தவர்.
இலங்கை   கம்யூனிஸ்ட்  கட்சியிலிருந்து  அதிருப்தியுற்று வி.பொன்னம்பலம்   வெளியேறி  செந்தமிழர் இயக்கம்  என்ற அமைப்பை   உருவாக்கிய வேளையில்  வி. பொன்னம்பலத்துடன் இணைந்து  இயங்கியவர்.
இலங்கை   அரசசேவையில்  பணியாற்றியிருக்கும்  சிவா சுப்பிரமணியம்   சிறுகதைகள்,   கட்டுரைகள்,  விமர்சனங்கள் முதலானவற்றையும்   சிங்களச் சிறுகதைகளின்  தமிழ் மொழிபெயர்ப்புகளையும்   மல்லிகை   இதழில் எழுதியவர்.
குணசேனவிதான  என்ற   பிரபல  சிங்கள  எழுத்தாளரின்  பாலம என்னும்   தேசிய  ஒருமைப்பாட்டை  வலியுறுத்திய  பிரபல்யமான  சிங்களச் சிறுகதையை  தமிழில்  மொழிபெயர்த்தவர்.  இதே சிறுகதையை   ஆங்கில  மூலத்திலிருந்து  தமிழ்நாட்டில்  ஜெயகாந்தன்   மொழிபெயர்த்து  தமது  கல்பனா   இதழில் வெளியிட்டிருப்பதும்   குறிப்பிடத்தகுந்தது.
அவுஸ்திரேலியாவில்   முன்னர்  வெளியான  உதயம்  இதழிலும் இலங்கை  அரசியல்  விவகாரங்கள்  பற்றிய  பத்திளை எழுதியிருக்கும்  சிவா சுப்பிரணியம்  இறுதியாக   தினகரன் பத்திரிகையிலும்   ஆசிரியராக   பணியாற்றி  ஓய்வுபெற்றார்.   கொழும்பு தினக்குரலில்  மனக்காட்சி  என்ற  தலைப்பில்  அரசியல்  விமர்சன பத்திகளையும்   அண்மைக்காலத்தில்  எழுதியவர்.
அமரர்  சிவாசுப்பிரமணியத்தின்  இறுதி  நிகழ்வுகள்  கடந்த  2   ஆம் திகதி  யாழ்ப்பாணத்தில்  நடைபெற்றது.
 ( தகவல்: முருகபூபதி - அவுஸ்திரேலியா )


சிட்னி முருகன்(TSM) கலைகோலம் 2016

.
 29.05.16 சிட்னி முருகன்(TSM) கலைகோலம் 2016 மிக சிறப்பாக பௌமன் ஹால், BLACKTOWN மண்டபத்தில் நடைபெற்றது
அதில் இடம் பெற்ற நாடகம் , வீணை, நடன காட்சிகளை   காணலாம். பாராளுமன்ற அங்கத்தவர் சிறப்புரையும்  சிறப்பாக இருந்தது.


சூ...,சூ...சுதி வாத்மீகம் (மலையாள சின்மா) கானா பிரபா

.சூ....சூ....சுதி வாத்மீகம் (மலையாளம்)

தொண்ணூறுகளில் இருந்து மலையாள சினிமாவைச் சுவைத்து வந்ததாலோ என்னமோ இன்று கேரளத்தை ஆட்கொண்டிருக்கும் நவ யுகப் படைப்புகளின் அதீத ஆட்கொள்ளல் ஒரு வகையில் சலிப்பையும் கொடுப்பதை உணர்வேன். 

தன் ஆதார ஸ்ருதியான கேரளத்து வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களையும், உளவியல் சிக்கல்களையும் அபாரமான திரைக் கலைப்படைப்புகளாக எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் காட்டியது  இந்த மலையாளத் திரையுலகம்.
அந்த வகையில் மீண்டுமொரு ஆத்ம பந்தத்தை ஏற்படுத்திய ஒரு சினிமாவை இன்று தரிசிக்க நேர்ந்தது. அந்தப் படத்தின் பெயர் தான் சூ சூ சூதுவாத்மீகம் (Su...Su...Sudhi Vathmeekam).

In திருமந்திரம் there is a line

.
பிறர்க்கு  இன்னுரை தானே -Offer A kind word to someone

யாவர்க்கும் ஆம்  இறைவற்கு ஒரு பச்சிலை 
யாவர்க்கும் ஆம்  பசுவுக்கு ஒரு வாயுறை 
யாவர்க்கும் ஆம்  உண்ணும் போது ஒரு கைப்பிடி 
யாவர்க்கும் ஆம்  பிறர்க்கு இன்னுரை தானே.   [தி. 252]

Yaavarkkum aam Iraivarkku oru pachilai
Yaavarkkum aam pasuvukku oru vaayurai
Yaavarkkum aam uNNum podu oru kaipidi
Yaavarkkum aam pirarkku innurai thanE

All can [offer] a green leaf in worship to God
All can [offer] a mouthful of grass to the cow
All can [offer] a handful, sitting down to  eat
All can [offer] sweet and kind words to others
All people want to be happy, healthy, peaceful, free from sorrow and free from all strains.
Saint Thirumoolar says that all can achieve these by doing just four simple things:

 1. always offer a green [Vilva] leaf to God with prayerful attitude
 2. always offer a mouthful of grass to a cow with compassion
 3. always offer a handful of food to the hungry, when eating and
 4. always offer sweet and kind words to all in need of them.உலகச் செய்திகள்


5 நிமிடங்களில் டெல்லியை தாக்க முடியும் பாக். விஞ்ஞானி கருத்தால் சர்ச்சை

குழந்தைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா : பெற்றோர் மீது வழக்கு தொடர தீர்மானம்

பலூஜா நகரை கைப்பற்ற ஈராக் படை தீவிரம்; ஐ.எஸ். இற்கு  பின்னடைவு

நவாஸிற்கு மோடியிடமிருந்து வந்த அழைப்பு

கொரிலாவிடம் சிக்கிய சிறுவனின் புகைப்படம் வெளியானது : தாய் நன்றி தெரிவிப்பு

மாயமான எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு

மோடி அமெரிக்காவிற்கு விஜயம் 

பிரான்ஸ், ஜேர்மனியில் தொடர்ந்து வௌ்ளப்பெருக்கு ; 11 பேர் பலி


சேக்கிழார் விழா 12 06 2016

.

தொலைத்துவிட்டவற்றை தொலைத்த இடத்திலேயே தேடும் வாழ்க்கையை கடக்கும் மூத்தவர்கள்

. 
தமிழ்  மூத்த  பிரஜைகளுடன்  ஒரு  பகல் நேரப்பொழுது
மெல்பன்   கே.சி. தமிழ்  மன்றத்தின்  தலைமுறை  சார்ந்த ஆக்கபூர்வமான  பணிகள்.
                                        முருகபூபதி"   நான்  மலரோடு  தனியாக  ஏன்  அங்கு  நின்றேன்,   என்  மகராணி உனைக்காண  ஓடோடி  வந்தேன்  "  என்ற  பழைய  திரைப்படப்பாடல்  அந்த மண்டபத்தில்   ஒலித்துக்கொண்டிருந்தது.
அதனைப்பாடிய  பெண்மணிகள்  60  வயதையும்   கடந்துவிட்டவர்கள்.   புலம்பெயர்ந்து   அவுஸ்திரேலியாவில்  வதியும்  தமது  பிள்ளைகளின் குழந்தைகளை   பராமரிக்க  அழைக்கப்பட்ட  பல  மூத்த  பிரஜைகளும்   அந்தச்சபையில்  இருந்தனர்.   தமிழ்  முதியோர்  மத்தியில்  நடந்த  மாதாந்த  ஒன்று கூடலில்  அந்தப்பெண்கள் மேலும்   சில  பாடல்களைப்பாடி  மூத்தவர்களை மகிழ்வித்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள்   பாடிய  பாடல்கள்  யாவும்  1970  காலகட்டத்திற்கு முன்பின்னானவை.   பி. சுசீலா,  எம். எஸ்.ராஜேஸ்வரி,  ரி.எம். சவுந்தரராஜன்,   ஜமுனாராணி,  ராஜா - ஜிக்கி  காலத்துப்பாடல்கள். அந்தக்கால நினைவுகளை  அவர்கள்  தமது  பாடல்களினூடாக அழைத்துக்கொண்டிருந்தனர்.

இலங்கைச் செய்திகள்


படையினர் சிவில் விடயங்களில் தலையிட்டால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் 


மிருக பலிக்கு தடை? - அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க தீர்மானம்

இலங்கை பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை.!

லலித், ஜயந்த, நிசாங்க ஆகியோர் குற்றவியல் விசாரணைப் பிரிவில் .!

அதிக கொத்தடிமைகளை கொண்ட நாடு எது தெரியுமா? ஆய்வில் வெளியானது

ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிவேண்டி  மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வடக்கு முதலமைச்சர், ஆளுநரை சந்தித்தார்

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு

கிராமசேவகரை தாக்கியமைக்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை

கொழும்பிலிருந்து கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: டொரேவிடம் சி.வி. தெரிவிப்பு

மற்றுமொரு தடையை நீக்கியது அரசாங்கம்

சிறுபான்மையினர் சார்பில் உப ஜனாதிபதி:  அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறி குழுவின் அறிக்கை வெளியானது

 முல்லைத்தீவில் விவசாய அமைச்சின் பாரம்பரிய உணவு விற்பனை மையம்

துப்­பு­ரவு பணி­களில் அமெரிக்க படையினர்

யாழில் 26 வருடங்களின் பின் சொந்த இடங்களில் மீள ஆரம்பிக்கப்பட்ட இரு பாடசாலைகள்

 நீதிமன்றத்தில் சரணடைந்த திலின கமகேவிற்கு பிணை

வெள்ள நிவாரண உதவி நடவடிக்கைக்கு 36 மில்லியன்  ரூபாவை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா


சாரு நிவேதிதாவின் நாய் சொன்ன கதை

.

‘என் பெயர் சீஸர்’ உயிர்மை டிசம்பர் 2015 இதழில் சாரு நிவேதிதாவின் சிறுகதை.
நாம் சிறு வயதில் “ஒரு வாழைப்பழம் தன் வரலாறு கூறுதல்” , “ஒரு கோபுரம் தன் வரலாறு கூறுதல்” என்று எழுதச் சொல்லுவார்கள். அதற்கு என ஒரு முன் மாதிரி துவக்கம் வேறு என் நண்பர்கள் எல்லோரும் எழுதுவார்கள் “இந்த உலகில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருளுக்கும் தத்தமெக்கன ஒரு வரலாறு உண்டு ” எனக்கு ஒரு மேஜைக்கான தன் வரலாறு கூறும் கட்டுரை. நான் மரம் எந்த வனத்தில் இருந்தது அங்கே மான்,குயில், மயில் எனத் துவங்கி கொஞ்சம் அதிகமாகவே கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டேன். தமிழ் ஐயா காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சி விட்டார். “உன்னை என்ன எழுதச் சொன்னேன்? நீ என்ன எழுதிக் கொண்டு வந்திருக்கிறாய்?”
சிறுகதை விமர்சனம் என்று துவங்கி சம்பந்தா சம்பந்தமில்லாமல் இது என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். சரிதான். ஆனால் கதையில் வரும் நாய் ஷீனா போரா கொலை வழக்கு முதல் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ரமணர், குடும்ப நல நீதிமன்றம் என்று உதிரியாகப் பல விஷயங்களைப் பேசுகிறதே. மனித இன ஜாதி வித்தியாசம் முதல் நாய இன ஜாதி வித்தியாசம் வரை விளக்குகிறதே. தன் அப்பா (வளர்க்கும் எழுத்தாளர்)வுக்கு அவர் வாசகன் எழுதும் மின்னஞ்சலை ஒரு வார்த்தை பிசகாமல் சொல்லுகிறதே. ஒரு நாய்க்கு என்னென்ன மாதிரி மன்னிக்கவும் ஒரு உயர்ஜாதி நாய்க்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டும் அது காலைக்கடன் கழிக்கும் நித்தியப்படி எவ்வாறானது மருத்துவர் எப்படி மருத்துவம் செய்வார் என்பது ஒன்று மட்டும்தான் அது தன் சம்பந்தமாகப் பேசுவது.

தமிழ் சினிமா - இது நம்ம ஆளு
இது நம்ம ஆளு ( வீடியோ உள்ளே ) - Cineulagam
கன்னித்தீவு கதை போல் ஒரு முடிவில்லாமல் நீண்ட வருடங்களாக சென்றது இது நம்ம ஆளு படப்பிடிப்பு. ஆனால், ஒரு வழியாக எல்லோரின் உழைப்பிற்கும் பலனாக இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளிவந்துள்ளது.
தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில்சிம்பு நடிக்கும் படம் என்பதை விட, பிரிந்த காதலர்கள் படத்தில் இணைந்தார்கள் என்று சிம்பு நயன்தாரா இப்படத்தில் நடிப்பதே பலரின் எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், இந்த எதிர்ப்பார்ப்பை இது நம்ம ஆளு பூர்த்தி செய்ததா? பார்க்கலாம்.

கதைக்களம்

ஐடி பாய் சிவாவாக சிம்பு, அவருடைய சகோ சூரி ஆடம்பர வாழ்க்கையுடன் சந்தோஷமாக அரட்டை, கலாட்டா என செல்ல, சிம்புவிற்கு நயன்தாராவுடன் நிச்சயதார்த்தம் நடக்கின்றது.
நயன்தாரா சிம்புடனான முதல் மீட்டிங்கிலேயே ஆண்ட்ரியா காதல் பற்றி கேட்கிறார், சிம்புவும் அதிர்ச்சியுடன் இந்த இடம் செட் ஆகாது என்று கிளம்ப, நயன்தாரா திருமணத்திற்கு ஓகே சொல்கிறார். அதன் பின் மெல்ல ஆண்ட்ரியா பற்றி கேட்கிறார்.
சிம்புவும் ப்ளாஷ்பேகை ஓபன் செய்ய, ஆண்ட்ரியாவுடன் ஒரு அழகிய காதல், எப்போதும் போல் ஆரம்பத்தில் சந்தோஷமாக செல்ல பின் ஒரு சண்டையில் பிரேக் அப், என்று ப்ளாஷ்பேக்கை முடிக்கின்றார். சிம்புவிற்கே தெரியாமல் சூரி நயன்தாராவை நோட்டமிட, அவருக்கு ஒரு காதலர் இருப்பதாக தெரிய வருகிறது.
இதை தொடர்ந்து இருவருக்கும் ஒரு கட்டத்தில் சண்டை வர, பிறகு அம்மு, செல்லம், சாரி என மீண்டும் இணைகிறார்கள், இவர்கள் இணைந்த நேரத்தில் சிம்பு-நயன்தாரா குடும்பத்தினருக்கிடையே சண்டை வர இந்த திருமணம் நிற்கும் நிலைமை வருகிறது. பிறகு எப்படி இவர்கள் இணைந்தார்கள் என்பதை 2.15 மணி நேரம் கலகலப்பாக கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.

படத்தை பற்றிய அலசல்

சிம்பு இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும், அப்பாடா ஒரு வழியா விட்ட இடத்தை பிடித்துவிட்டார், தனக்கே உரிய துறுதுறு நடிப்பால் எல்லோருக்கும் பிடித்தது போல் கலக்கியுள்ளார். நயன்தாராவை காதலிக்கும் இடத்தில் ஓ இப்படி தான் சிம்பு லவ் பண்ணாரா என்று நமக்கே எண்ண தோன்றுகின்றது. அதிலும் எத்தனை பெரிய ஹீரோ செம்ம பல்ப் வாங்குகிறார் சூரியிடம் பல இடங்களில். மேலும் அவரே அவரை எனக்கு நடிக்க தெரியாதுங்க என்று சொல்லி கலாய்ப்பது எல்லாம் சூப்பர் சார். அனைத்திற்கு மேல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புவிற்கு பெண் ரசிகைகள் இதில் அதிகமாவார்கள்.
நயன்தாரா எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று தெரியவில்லை. முதலில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தைரியமாக இவர் நடிக்க சம்மதித்ததற்கே ஹேட்ஸ் ஆப். ஏனெனில் பல காட்சிகள் ரியல் லைப் சம்மந்தப்பட்டவை. நயன்தாரா நடிக்க கூட வேண்டாம், வந்தாலே போதும் என்ற மனநிலையில் இதில் செம்ம ட்ரீட் கொடுத்துள்ளார் ரசிகர்களுக்கு.
சூரி எப்படிங்க ஐடி பாய், போங்க காமெடி பண்ணாதீங்கள் என்று கூறியவர்கள் வாய் அடைத்துவிட்டார். சிம்புவை பல இடங்களில் கவுண்டர் கொடுக்கும் கதாபாத்திரம், அவர் பேசும் போன் டாக்கிற்கு இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்கின்றது. சந்தானம் கெஸ்ட் ரோல் தான் என்றாலும் கலக்கிவிடுகிறார். தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். ஆண்ட்ரியா முதன் முறையா நல்ல நடிச்சுருக்காங்க...Note This Point நடிச்சுருக்காங்க.
பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு கண்களுக்கு செம்ம விருந்து. இதைவிட சிம்பு, நயன்தாராவையும் இத்தனை அழகாக வேறு யாராலும் காட்ட முடியாது. குரளரசன் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடிக்க, பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார். அதிலும் காதல் காட்சிகளுக்கு கொஞ்சம் மெனக்கெடுத்துள்ளார், பின்ன சிம்பு தம்பியாச்சே.

க்ளாப்ஸ்

சிம்பு-நயன் தாரா கெமிஸ்ட்ரி, பலரையும் பொறாமை பட வைக்கும். படம் முழுவதும் காதல் நிரம்பி வழிகிறது.
சூரி படம் முழுவதும் தன் ஒன் லைன் காமெடியில் அதகளம் செய்துள்ளார். சிம்புவை கலாய்க்கும் இடத்திலும் சரி, நயன்தாரவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் இடத்திலும் சரி செம்ம அப்லாஸ் அள்ளுகிறார்.
பாலசுப்ரமணியனின் கலர்புல் ஒளிப்பளிவு, இதையெல்லாம் விட வசனம்.
பாண்டிராஜ் இதில் PHD முடித்திருப்பார் போல, வசனம் என்ற ஏரியாவில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. மேலும் இத்தனை வருடம் கழித்து வந்தாலும் படம் ப்ரஸ்ஸாகவே உள்ளது.
பிறகு அவ்வபோது படத்தில் வரும் சர்ப்ரைஸ் காட்சிகள்.

பல்ப்ஸ்

படத்தில் கதை இல்லை என்று பாண்டிராஜ் முன்பே சொன்னாலும், கொஞ்சம் கதை என்று இருந்திருக்கலாம்.
ஒரு சில கதாபாத்திரங்களை நம்பியே கதை நகருவது. படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் டல் அடிக்கின்றது.
மொத்தத்தில் இது நம்ம ஆளு ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சிம்பு இஸ் பேக், காதலர்களுக்கு ரசிகர்களுக்கும் இது நம்ம படம்.
ரேட்டிங் 3/5  நன்றி cineulagam