மரண அறிவித்தல்

.
    திரு .மயில்வாகனம் சிவகுரு கந்தசாமி
மறைவு 22.12.2016


முல்லைதீவை பிறப்பிடமாகவும், யாழ்பாணம் பிறவுண் வீதி, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவகுரு கந்தசாமி அவர்கள் 22.12.2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார் காலம் சென்ற சிவகுரு அன்னம்மா தம்பதியரின் செல்லப் புதல்வரும், காலம் சென்ற மகேஸ்வரி,  சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலம் சென்ற விஜயலக்ஷ்மியின் அன்பு கண்வரும்,
காலம் சென்றவர்களான  துரைசிங்கம், குகதாசன், பரமநாயகி, மற்றும் கலாநிதி கணேசன்(இலங்கை), ஜெயலக்ஷ்மி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைத்தியகலாநிதி அமலகுகன்(கனடா), விஜயகுகன்(கனடா), கிரிதரகுகன்(கனடா), உருத்திரகுகன்(கனடா), றேணுகா (சிட்னி வைத்தியகலாநிதி மேனகா (சிட்னி), ஆகியோரின் தந்தையும்,
கனடாவைச் சேர்ந்த தவ ரஞ்சிதம், றேணுகா,, ரோகினி, சவுந்தரா சிட்னியைச் சேர்ந்த கருணாகரன், கிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனடாவை சேர்ந்த பிரதீபன், வைத்தியகலாநிதி பிரவீன், வைத்தியகலாநிதி நிஷாதரி, புருஷோத்தமன், ஜனோஷன், துஷான், மயூரி, ரமணா, லக்கி, சிட்னியைச் சேர்ந்த ஹரேஷன், சகாணா, நிர்த்தனன், அம்ரித்தா ஆகியோரின் அன்பு பாட்டனாரும்
வேத்தின் பூட்டனாரும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 26.12.2016 திங்கட்கிழமை           101 south street Granville  இல் அமைந்துள்ள கிரான்வில் லிபேட்டி பாலரில் 10.30 மணி தொடக்கம் 12 மணிவரை வைக்கப்பட்டு பின்னர் 28.12.2016 புதன் கிழமை ரூக்வுட் மயானத்தின் South Chapel லில்10.30  மணிக்கு கிரிகைகளின் பின்னர் தஹனம் செய்யபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் .

மேலதிக தகவல்களுக்கு   
றேணுகா கருணாகரன் (சிட்னி )  6706 7434, 0435850033
மேனகா கிருஷ்ணன் (சிட்னி) 0435870430
விஜயகுகன் (கனடா), 416 564 5505 

கண்ணன் -- என் சேவகன்- பாரதியார் கவிதை

.
கண்ணன் -- என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்;
5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெலாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
10

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு, கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்,
எங்கிருந்தோ வந்தான், ‘இடைச்சாதி நான்’ என்றான்;
“மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்;
15

ஓபன் தமிழர் கழக நத்தார் விழா

.
ஓபன் தமிழர் கழகத்தின்  நத்தார் விழா நிகழ்வுகள் 

இலங்கையில் பாரதி அங்கம் -03 - By முருகபூபதி

.
பத்து ரூபா செலவில் திருமணம் செய்துகொண்ட பாரதியின் பக்தர் 
இலங்கையில்  பாரதியின் புகழ் பரப்பிய முன்னோடிகள் மூவர்

அண்மையில்   இந்தியாவில்   ஆயிரம்  ரூபா,  ஐநூறு  ரூபா நாணயத்தாள்  மாற்றப்பட்ட  விவகாரம்  இன்னமும் சூடுபிடித்திருக்கிறது. 
அந்தத்தேசம்  இவ்வாறு  அமளியில்  ஆர்ப்பரிப்பதற்கு      முன்னர்  தென்னிந்திய  மாநிலமான  கர்நாடகாவில்  ஒரு  முன்னாள்  அமைச்சரும்   சுரங்க  அதிபருமான ஜனார்த்தன  ரெட்டி  என்பவரின்  மகளுடைய  திருமணம்  74 மில்லியன் டொலர்கள் செலவில்   நடந்தேறியிருக்கிறது.
இதன்  இந்திய -  இலங்கை  நாணயப்பெறுமதியை  வாசகர்கள் ஊகித்து தெரிந்துகொள்ளமுடியும்.
அதே  இந்தியாவில்  கடந்த  நூற்றாண்டில்  ஒரு  தமிழ்த்தலைவரின் திருமணம்  பத்து ரூபாவில் நடந்திருக்கிறது.  அவர்  இந்திய அரசியலில்  மதிப்பிற்குரிய  இடதுசாரித் தோழராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும்  பத்திரிகை  ஆசிரியராகவும்   தமிழக  சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.   

வெற்றிச்செல்வியின் "ஆறிப்போன காயங்களின் வலி" - கானா பிரபா

.

புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடையவும் சனக்கூட்டத்தில் இருந்து விலகி அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டு முழுதையும் படித்து முடித்தது மூன்று மணி நேரத்துக்கு முன்புதான்.
சிட்னியில் மழை கனத்துப் பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுக் கொளுத்திய உச்சபட்ச வெயிலுக்கு எதிர்மாறாகக் குமுறிக் கொட்டிய அந்த மழைதான் இந்த நூலில் வெற்றிச்செல்வி கொணர்ந்த உணர்வின் வெளிப்பாடோ எனத் தோன்றியது.

அந்த மழைக் கதகதப்போடு என் கண்ணீரும் சேர்ந்து கொள்ள இலக்கியா இருக்கும் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் நோக்கி நடந்தேன். எதிர்ப்படுபவருக்கு நான் அழுது கொண்டே பயணித்ததைக் கண்டுணர நியாயமில்லை. அப்படிப்பட்டாலும் ஏதோ காலநிலை மாறுதலால் சளி பிடித்த முகம் என்று நினைத்திருக்கக் கூடும். இங்கே நான் எழுதிக் கொண்டு வரும் இந்த உணர்வின் பிரதிபலிப்பைக் கொச்சையாகக் கூட பார்க்கலாம். ஆனால் எனது பலமும் பலவீனமும் அதுதான். அதனால் தானோ என்னமோ 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போர் என்று  முடிவு கட்டப்பட்ட பின்னர் வெளிவந்த, இறுதிப் போர் அனுபவங்களை நூலுருவாக்கிய படைப்புகளை வாங்கி வைத்திருந்தாலும் அவற்றைப் படிக்கக் கூடிய மன ஓர்மம் என்னுள் ஏற்படுத்தப்படவில்லை.

இலங்கைச் செய்திகள்


அச்சத்திலும் சந்தோசத்திலும் மக்கள் : 32 வருடங்களின் பின்னர் வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி மரணம்

புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை தெரியுமா ? மரணமடைந்த பொதுமக்கள், புலிகள், இந்திய அமைதிப் படையினரின் எண்ணிக்கை தெரியுமா? : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மேனன்

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. கொலை : பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கொழும்பு கதிர்காம  வீதியை மறித்து ஹம்பாந்தோட்டை மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டு.மங்களராம விகாராதிபதி பிணையில் விடுதலை.!

ஊடகவியலாளரை  தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்

எமில் காந்தனுக்கு பிடியாணை

துறைமுக ஊழியர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது.!

மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மலேஷியாவில் ஆர்ப்பாட்டம் ; முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்கிறது மலேஷிய அரசு

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் மரணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசிய மன்னரை சந்தித்தார்

நாமல் ராஜபக்ஷ நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜர்



நதியைத் தேடிச் சென்ற கடல் - உமா வரதராஜன்

.


2014 சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டிய ஒரு தினம் .வெயில் மங்கத் தொடங்கும்  நேரம் மெரீனா கடற்கரை சாலை நடைபாதையில் சென்று  கொண்டிருந்தேன்.இயல்புடன் இருந்த சாலையில் திடீரென பரபரப்பு சூழ்ந்து கொண்டது  . நிறை மாத கர்ப்பிணிகளை நினைவூட்டிக் கொண்டிருந்த  போக்குவரத்துப் பொலிஸ்காரர்கள்  மிகவும் உஷார்  நிலையுடன்  ஓடியாடி மக்களுடையதும் ,வாகனங்களினதும்  நகர்வுகளைக்  கட்டுப் படுத்திக்  கொண்டிருந்தார்கள் .அதைத்  தொடர்ந்து ஓரிரு  நிமிடங்களுக்குள் முகப்பு  விளக்குகளை  ஒளிர விட்டபடி வாகனங்களின்  அணியொன்று  சாலையைக்  கடந்து சென்றது . வாகனங்களிலிருந்து  முளைத்த  மரக்கிளைகள் போல் கறுப்பு சீருடையணிந்த ,துப்பாக்கியேந்திய காவலர்கள்  [Black  cats ] வாகனங்களில்  முன்னேயும் பின்னேயும்  செல்ல  நடுவில்  சென்ற  வாகனமொன்றில்  தமிழ்நாட்டின்  முதலமைச்சர்  செல்வி  ஜெயலலிதா  புன்னகை ததும்பும்  வட்டமுகத்துடன் ,   இரு  விரல்களை  உயர்த்திக்  காட்டிய படி கடந்து  சென்றார். சாந்தம் ததும்பும் முகம். மிடுக்கு . அவர் அமர்ந்திருந்த  வாகனத்தின் உட்புறம் மிகவும் பிரகாசத்துடன்  ஒளிர்ந்து  கொண்டிருந்ததற்கு  வாகன விளக்குகள்  மட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் நிறமும் ,தோற்றமும்  கூட காரணங்களாக  இருந்திருக்கலாம் . அங்கு குழுமி  நின்ற  மக்களைப் போல  ஓர் உணர்வின்  உந்துதலில் நானும் கையசைத்தேன் .'ஆயிரத்தில் ஒருவனி'லிருந்து  உங்களை அறிவேன் 'என்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின்  கையசைப்புக்குள் என்னுடையதும் அடங்கும்  .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி எழுதிய 'தெளிதல்', 'எம்மவர்கள்', 'பூதத்தம்பி இசை நாடகம்' ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா  செவ்வாய்க்கிழமை(13) யாழ். கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.
ஜீவநதி வெளியீட்டகத்தின் வெளியீடாக அமைந்த இம் மூன்று நூல்களுக்குமான வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் சாகித்யரத்னா தெணியான் நிகழ்த்தினார்.
தெளிதல்' நூலுக்கான நயப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணாவும், 'எம்மவர்கள்' நூலுக்கான நயப்புரையை ஓய்வுபெற்ற வங்கியாளர் எழுத்தாளர் கொற்றை பி.கிருஷ்ணானந்தனும், 'பூதத்தம்பி' இசைநாடக நூலுக்கான நயப்புரையை யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கே.ஆர். கமலநாதனும் ஆற்றினர்.

தமிழ்முரசு வாசகர்களுக்கு எமது நத்தார் தின வாழ்த்துக்கள்

.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள்  புனித நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இன்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில் யேசுபிரான் இதேபோன்ற ஒரு தினம் பிறந்தார்.
இந்த தினத்தை நினைவு கூறும் விதமாகவே உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

சசிகலாவுக்கும், அஜீத்துக்கும் சரியான போட்டி...

.

2016ம் ஆண்டு நிறைவடைந்து 2017ம் ஆண்டு புது வருடம் பிறக்கப் போகிறது. தற்போது 2017ஆம் ஆண்டுக்கான காலண்டர்கள் அச்சடிக்கும் பணி நடைப்பெற்று வருகின்றது. மேலும் காலண்டர் மற்றும் டைரி விற்பனைகளும் தற்போது ஜோராக நடந்து வருகிறது.


அரசியல் கட்சியினர் தங்களுக்குப் பிடித்த தலைவர்களின் படங்களை அச்சிட்டு வருகின்றனர். 2017ம் ஆண்டு புத்தாண்டு காலண்டர்களின் வடிவமைப்பில் கூட சசிகலாவை முன் நிறுத்தி தாயாரிக்க சொல்லி கடைகளில் ஆர்டர் அளித்து வருகின்றனர் அதிமுகவினர். ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்களுக்கு கொடுத்த ஆர்டர்களை கேன்சல் செய்தும் விட்டனர் அதிமுகவினர்.

உலகச் செய்திகள்


சென்னையில் கோர தாண்டவமாடும் 'வர்தா' : கார்கள் பறந்தன, பலமாடி கட்டிடங்களின் கண்ணா சரிந்து விழுந்தன ( காணொளி இணைப்பு)

வர்தாவின் தாக்கம் : 9 பேர் பலி, 40 பேர் காயம், 3,384 மரங்கள், 3,400 மின்கம்பங்கள் பலத்த காற்றில் விழுந்தன

சீரமைப்பு பணிகள் தீவிரம் : முதல்வர் ஓ.பி.எஸ். நேரில் சந்தித்து ஆறுதல்

16 வருடங்களுக்கு முன்னர் உயில் எழுதினாரா ஜெயலலிதா.?

மிகையில் கோர்பச்சோவ்: பேரரசை இழந்த மனிதர்  - பி.பி.சி

இந்தோனேசியாவில் விமான விபத்து : 13 பேர் பலி


மாவிடிக்கும் இயந்திரம் கண்டுபிடித்த மாணவிக்கு வெள்ளிப் பதக்கம் !!


15542044_1196461623778287_6408914019364064742_n

.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது தரம் 06 இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் புவனேசராசா நகுமி என்ற மாணவியினது மாவிடிக்கும் இயந்திரம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கப் போட்டியிலே இன்று(16) தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு-கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற இம்மாணவியை வித்தியாலய அதிபர் க.சிவலிங்கராஜா வாழ்த்தியதோடு அம்மாணவியை தயார்படுத்திய ஆசிரியை தயாமதி பிரேம்குமாருக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
பாடசாலை ரீதியாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான குறித்த மாணவி இறுதிப் போட்டியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற புத்தாக்க போட்டியிலும் இப்பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்ற மாணவன் ஜீவரெத்தினம் பிரதீபன் நீரூற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தமைக்காக தேசிய மட்டத்தில் 5 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சிகள்

.

                   அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் அடுத்துவரும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவலை  அறியத்தருகின்றோம்.
அனைத்துலகப்  பெண்கள்  தின விழா
 11-03-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரையில்
பிரஸ்டன் நகர மண்டபம், Gower Street, Preston, Victoria 3072.
17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா
06-05-2017 சனிக்கிழமை  5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையில்
Stirling  Theological college Auditorium 
 44-60 Jacksons Road,  Mulgrave , Victoria - 3170
இந்நிகழ்ச்சிகளில்  கலந்து  சிறப்பிக்குமாறு   தங்களை  அன்புடன் அழைக்கின்றோம்.
முருகபூபதி  (தலைவர்)   நடேசன்   (செயலாளர் )   தெய்வீகன் ( நிதிச்செயலாளர்)
0416 62 57  66                                  0452 63 19 54                                      0433 00 26 21
                      அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கியக்கலைச்சங்கம்
                                    ATLAS Email: atlas25012016@gmail.com

முல்லை மண் தந்த இலக்கிய ஆளுமை கலாநிதி முல்லைமணி காலமானார்

.


பண்டார வன்னியன் நாடகத்தை எழுதியவரும் வன்னி மண்ணின் சரித்திரத்தை தன் எழுத்துக்களில் வடித்தவருமான கலாநிதி முல்லைமணி நேற்று காலமானார்.  முல்லைமணி என்ற புனைபெயரில் பல்வேறு படைப்புக்களை எழுதிய கலாநிதி வே. சுப்பிரமணியம் எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு என பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாக பதித்தவர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்தவர் முல்லைமணி. இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றவர். இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி  பட்டம் வழங்கி கௌரவித்தது.

சுகுமாரனுக்கு இயல் விருது 2016

.


தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் இயல் விருதை அளித்துவருகிறது. 2016-ம் ஆண்டுக்கான விருது கவிஞர் சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுகுமாரன், 1957-ல், கோயம்புத்தூரில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். குங்குமம், குமுதம் போன்ற தமிழ் வார இதழ்களிலும் சன், சூர்யா தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியராக உள்ளார்.
இவர் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுவதுடன் மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். இயல் விருதைப் பெறும் 18-வது தமிழ் ஆளுமை இவர். சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜார்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர். மயூரநாதன் ஆகியோர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு பரவலான கவனம் பெற்றது. ‘வெல்லிங்டன்’ என்னும் நாவலை எழுதியுள்ளார். மலையாள இலக்கியத்தின் ஆளுமைகளான வைக்கம் முகம்மது பஷீர், சச்சிதானந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், சக்கரியா போன்றவர்களின் படைப்புகளை சுகுமாரன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘அஸீஸ் பே சம்பவம்’, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, ‘பட்டு’ ஆகியவை இவரது மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை. 2,500 டாலர் பணப் பரிசும் கேடயமும் கொண்டது ‘இயல் விருது’. விருது வழங்கும் விழா டொரொண்டோவில், 2017 ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.

தமிழ் சினிமா


மாவீரன் கிட்டு 

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு என ஒரு பேவரட் கூட்டணி இருக்கும். அப்படி ஒரு கூட்டணி தான் விஷ்ணு-சுசீந்திரன். ஏற்கனவே வெண்ணிலா கபடி குழு, ஜீவா என்ற தரமான படங்களை தந்த இந்த கூட்டணி ஹாட்ரிக் அடிக்க இந்த முறை மாவீரன் கிட்டுவில் களம் இறங்கியுள்ளது, ஹாட்ரிக் அடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

Maaveeran Kittu
மேல் ஜாதி, கீழ் ஜாதி என பிரிவினை உச்சத்தில் இருந்த 80களில் படம் தொடங்குகின்றது. ஊரில் கீழ் ஜாதியை சார்ந்த ஒருவர் இறந்தால், ஊருக்குள் கொண்டு வரக்கூடாது என கூற, பார்த்திபன் இதை எதிர்த்து போராடுகிறார்.

இந்நிலையில் விஷ்ணு கீழ் ஜாதியை சார்ந்தவராக இருந்து படிப்பில் சிறந்து விளங்கி, மாவட்ட கலெக்டர் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றார்.
ஆனால், வேண்டுமென்றே இவரை ஒரு கொலை வழக்கில் ஒரு சிலர் சதியால் கைது செய்ய, பின் ஜாமினில் வெளியே வருகிறார். அதை தொடர்ந்து போலிஸான ஹரிஸ் உத்தமன், விஷ்ணுவை ஒரு பிரச்சனையில் ஜெயிலில் கொண்டு சென்று அடித்துவிடுகிறார்.
இதன் பிறகு விஷ்ணு மாயமாகிறார், அவர் எங்கு இருக்கிறார் என்று ஊரே தேட ஆரம்பிக்கின்றது. பார்த்திபனும் இனி அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது, தன் போராட்டத்தை தொடங்க, இறுதியில் கிட்டு கிடைத்தாரா? பார்த்திபன் போராட்டம் வெற்றி பெற்றதா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மாவீரன் கிட்டு பெயருக்கு ஏற்றார் போலவே மிகவும் கம்பீரமான கதாபாத்திரம் தான் விஷ்ணுவிற்கு. ஆரம்பத்தில் கதைக்குள் வர கொஞ்சம் தடுமாறினாலும் போக, போக எளிமையான நடிப்பால் கவர்ந்து இழுக்கின்றார்.
படத்தின் முதல் ஹீரோ என்றே சொல்லிவிடலாம் பார்த்திபனை. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர் பேசும் வசனங்கள் விசில் பறக்கின்றது, ‘அடிக்க அடிக்க வாங்கிக்கொள்கின்றோம், திருப்பி அடித்தால் திமிருன்னு சொல்றீங்க’, ’சட்டம் விரோதமா செயல்பட கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா, இங்கே சட்டம் எங்களுக்கு விரோதமா இருக்கு’ போன்ற வசனம் கவர்கின்றது.
படம் 80 களில் நடப்பது போல் உள்ளது. அதற்கான காட்சியமைப்பில் ரசிக்கவும் வைத்துள்ளார்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர் இறந்த தகவலை கூறுவது, காமராஜரால் தான் கல்வி தமிழகத்தில் பரவியது என பல காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. ஜாதி வெறி ஒரு மனிதனை எத்தனை கொடூரமாக மாற்றுகின்றது என்பதை ஒரு பெரியவர் தன் மகளை கொல்லும் காட்சி நெஞ்சை உறைய வைக்கின்றது.
புரட்சி, போராட்டம் என படம் டாக்குமெண்ட்ரி பீல் கொடுக்குமோ என பலரும் நினைத்த நிலையில் முடிந்த அளவிற்கு கமர்ஷியலாக அனைத்து ஆடியன்ஸையும் திருப்திப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இருந்தாலும் இரண்டாம் பாதியில் பாடல்கள் தேவை தானா?
டி.இமான் பாடல்களை விட பின்னணி இசையில் கலக்கியுள்ளார். அதிலும் கிளைமேக்ஸில் வரும் இசை உருக வைக்கின்றது. ஒளிப்பதிவும் நம்மை 80களில் அழைத்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், பார்த்திபன், விஷ்ணுவின் யதார்த்தமான நடிப்பு.
கிளைமேக்ஸ் மற்றும் இணைவோம் இணைவோம் பாடல்களை படமாக்கிய விதம்.

பல்ப்ஸ்

சூரி எதற்கு இந்த படத்தில், ஒரு வேளை பெயர் வாங்கிக்கொடுத்த இயக்குனர் என்பதால் நடித்தாரா?
இரண்டாம் பாதியில் புரட்சி வெடிக்கும் சமயத்தில் காதல் பாடல் தேவையா?

Direction:
Music:
நன்றி  cineulagam