மரண அறிவித்தல்

.
              எழுத்தாளர் திருமதி.அருணகிரி விஜயராணி ( அருண் விஜயராணி )
                             

அன்னையின் மடியில் 16.03.1954 ஆண்டவன் மடியில் 13.12.2015
யாழ்ப்பானம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேணை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர் அருண் விஜயராணி என்று அறியப்பட்ட அருணகிரி - விஜயராணி இன்று 13.12.2015 மெல்பேணில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கே.ரி.செல்லத்துரை - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்ற நாகலிங்கம் - நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமளும் ஆவார்.
அவர் நாகலிங்கம் அருணகிரியின் அன்பு மனைவியும், ஆதித்தன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கலைச்செல்வியின் அன்பு மாமியாரும் ஆலனின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னார் லண்டனைச் சேர்ந்த இந்திராணி, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரவீந்திரன், செல்வராணி, புவீந்திரன், சக்திராணி, விக்கினேஸ்வரன் (தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், லண்டனைச் சேர்ந்த நித்தியானந்தன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நளாயினி,(ஜெசி), இராஜரட்ணம், தர்மினி, அரசரட்ணம், சிவராஜதேவி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஜெயானந்தராஜா, பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனியும், இலங்கையைச் சேர்ந்த நாகபஞ்சேஸ்வரி மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அண்ணியும் ஆவார்.

 
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு 


18 12 2015 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அன்னாரின் பூதவுடல் 513 Greensborough road, Greensborough வில் அமைந்துள்ள Le Pine மன்றில் மலரஞ்சலிக்காக வைக்கப்படும் 

20 12 2015 ஞாயிற்றுக்கிழமை மதியம்  12  மணிக்கு 1187 Sydney Road  Fawkner இல் அமைந்துள்ள   Fawkner  Memorial Park இல் தகனக்கிரிகைகள்  நடைபெறும். 

உற்றார் உறவினர் நண்பர்கள் தயவுசெய்து இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும். 

தொடர்புகளுக்கு -
அருணகிரி - + 61 416 255 363
ஆதித்தன் - + 61 432 714 719
ஆரூரன் - + 61 423 799 802

தண்ணீர் மூழ்கிவிட்டது - கவிக்கோ அப்துல் ரகுமான்

.


வானத்துக்கு
வாந்தி பேதியா?
வருணனுக்குப்
பைத்தியம் பிடித்துவிட்டதா?
மேகக் கூந்தலை
அவிழ்த்துப் போட்டு
வானம்
பேயாடியதோ?
சூரியனுக்கே
புவி வெப்பமானதால்
வானத்திற்கு உடலெல்லாம்
அபரிமித வேர்வையோ?
வானம்
பாக்கி வைத்திருந்ததை எல்லாம்
வட்டியோடு
சேர்த்துக் கொடுத்துவிட்டதோ?
வானத்தின்
சல்லடை
என்னவாயிற்று?
அப்படியே
ராட்சஸ அண்டாக்களைக்
கவிழ்த்துக்
கொட்டிவிட்டதே.
மேகங்கள்
பயங்கரவாதிகளாகிவிட்டனவோ
சரமாரியாக
நீர்க் குண்டுகளை
வீசுகின்றனவே?
தண்ணீர்
‘தண்ணி’ அடித்ததோ?

விஜயா அக்கா கதைக்கிறன் என்ற குரல் இனிக் கேளாது - கானா பிரபா

.



."அருண் விஜயராணி அக்காவுக்குக் கடுமையாம், எந்த நேரமும் அவர் நம்மை விட்டுப் பிரியலாமாம்"
செய்தியை நண்பர் எடுத்து வந்த போதே கடவுளே இதையும் அவ கடந்து வர வேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டேன். இன்று மாலை அவர் நம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு இந்த நிமிஷம் இதை எழுதிக் கொண்டிருக்கும் வரை இதையெல்லாம் மாயமோ என்ற நிலையில் இறுகிப் போயிருக்கிறேன். இதே நிலை தான் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்த போதும்.

இலக்கிய உலகில் பேரிழப்பு என்ற வார்த்தைகளில் சம்பிரதாயம் இல்லை. அவுஸ்திரேலிய மண்ணின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர் என்ற இலட்சணத்தை வெறுமனே இந்த ஒற்றை வார்த்தைகளால் கடக்க முடியாது.

மெல்பர்னில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலக்கிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்வில் ஓவியர் அமரர் திரு.செல்லத்துரை அவர்களது ஓவியக் கண்காட்சியும் இருந்தது. சிவயோக சுவாமிகளின் திருவுருவத்தை வரைந்த வகையில் அவரின் தனித்துவமான ஒரு ஈழத்து ஓவியர். அவரின் மகள் தான் எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.


நமது வரலாறு நமக்கு அவசி...யம் தெரிந்திருக்க வேண்டும்................‏ராஜ் சிவநாதன்

.
தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்................பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசி...யம் தெரிந்திருக்க வேண்டும்................
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்குஇ
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும்இ நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியைஇ கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை இ இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

திரும்பிப்பார்க்கின்றேன். அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் முருகபூபதி

.
திரு முருகபூபதி எழுதி தமிழ்முரசுஅவுஸ்ரேலியாவில் 06 10 2015 அன்று பிரசுரமான  இக்கட்டுரை அருண் விஜயரானியின் மறைவை ஒட்டி மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது .

கன்னிகளின்  குரலாக  தனது  எழுத்தூழியத்தை தொடர்ந்த   அருண். விஜயராணியின்  வாழ்வும் பணிகளும்
இலங்கை   வானொலி  ' விசாலாட்சிப்பாட்டி ' இலக்கியத்துறையில்   ஆற்றிய  பங்களிப்பு


" வணக்கம்....  பாருங்கோ.... என்னத்தைச் சொன்னாலும்  பாருங்கோ, உங்கடை   விசாலாட்சிப்பாட்டியின்ர  கதையைப்போல  ஒருத்தரும் சொல்லேலாது.    இந்தக்குடுகுடு  வயதிலையும்  அந்தப்பாட்டி  கதைக்கிற கதையளைக்   கேட்டால்  பாருங்கோ.... வயதுப்பிள்ளைகளுக்கும்  ஒரு நப்பாசை    தோன்றுது.    என்ன  இருந்தாலும்  திங்கட்கிழமை  எண்டால் பாட்டியின்ர   நினைவு   தன்னால  வருகுது.   அதனால  சில திங்கட்கிழமையில  அவவுக்கு  தொண்டை  கட்டிப்போறதோ  இல்லை... வேற  ஏதேன்  கோளாறோ    தெரியாது.   இவ  வரவே  மாட்டா..... பாவம் கிழவிக்கு  என்னாச்சும்  நேந்து போச்சோ   எண்டு  ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை    எண்ணிக்கை  எத்தனை   எண்டு  உங்களுக்குத்தெரியுமே...?
அதனாலை  ஒண்டு  சொல்லுறன்  கோவியாதையுங்கோ...  பாட்டியின்ர பிரதியளை   இரண்டு  மூண்டா  முன்னுக்கே  அனுப்பிவைச்சியளென்டால் பாட்டி    பிழைச்சுப்போகும்.   தடவித் தடவி   வாசிக்கிற  பாட்டிக்கு  நீங்கள் இந்த  உதவியை   எண்டாலும்  செய்து  குடுங்கோ "

படித்ததில் மிகவும் பிடித்தது. எழுதியவருக்கு வாழ்த்துக்கள்...

.
"கல்யாணம் பண்ணிப்பார்"
"புது வீடு கட்டிப்பார்"
*
"வெளிநாடு வந்துப்பார்"......
இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
*
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.
ஆனாலும் இது ஒரு மாய வலை...
*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது.
வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.
*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,
வரவு, செலவு இவையெல்லாம்,
ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.
*
வலிக்கும்...
ஆனாலும் சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.
யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
*

கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு

.

ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.
இலங்கை வானொலியிலும்  அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும்  நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான  அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் - தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.
தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.
இவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது.
இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1970 களில் ஈழத்து இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அறிமுகமான இவர் - பின்னாளில்மத்திய கிழக்கிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருப்பவர்.
1989  இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தொடர்ந்து கலை - இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்டவர்.
 மெல்பன் வானமுதம் வானொலியின் சார்பில் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தினால்  அருண். விஜயராணி இதுவரைகாலமும் மேற்கொண்ட வானொலி ஊடகசேவைக்காக   அண்மையில்  பாராட்டி கௌரவிக்கப்பட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்: முருகபூபதி
அவுஸ்திரேலியா