ஹரிஷ் கல்யாணின் நண்பர்களாக நடித்துள்ள பாலசரவணன், மகபா ஆனந்த் காமெடியில் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.
க்ளாப்ஸ்:
ஒரு சாதாரண காதல் கதை, அதில் சில ஏற்ற இறக்கங்களை கொடுத்து வித்யாசமான கிளைமாக்ஸுடன் படத்தை முடித்த இயக்குனர், இன்னும் சில மாற்றங்களை செய்திருந்தால் படம் இரண்டாம் பாதியில் நம் பொறுமையை சோதிக்காமல் இருந்திருக்கும்.
முதல் பாதியில் போர் அடிக்காமல் சொல்லவந்ததை கச்சிதமாக காட்டியிருந்த இயக்குனர், இரண்டாம் பாதியில் பெரிய தடுமாற்றம் அடைந்துள்ளார்.
பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் சாம் சி எஸ்சின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. கவின் ராஜின் ஒளிப்பதிவு பெர்பெக்ட்.
பல்ப்ஸ்:
- பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி படம்.
- படம் பார்ப்பவர்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. ஹரிஷ் கல்யாணுக்கு அந்த பெண் பின்னாடி சுத்துவதை தவிர வேறு வேலையே உலகத்தில் இல்லை என்பது போல காட்டியிருப்பது. மொத்த படத்தையும் சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக எடுத்திருந்தாலும் சில விஷயங்களில் இயக்குனர் கோட்டை விட்டுள்ளார்.
மொத்தத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நாம் நிஜ வாழ்விலேயே பலமுறை பார்த்துள்ள ஒரு சாதாரண காதல் கதையாக இருந்தாலும், நிச்சயம் அனைத்து இளைஞர்களுக்கும் கனெக்ட் ஆகும். நன்றி CineUlagam