மரண அறிவித்தல்

 .

இளைப்பாறிய  சட்டதரணி  திரு சங்கரப்பிள்ளை யோகராஜா 


 


சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட  இளைப்பாறிய  

சட்ட வழக்கறிஞர் , பிரசித்த நொத்தாரிஸ்  திரு சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்கள்  12 10 2021 செவ்வாய் கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார்  சண்டிலிப்பாயை சேர்ந்த காலம் சென்றவர்களான  சங்கரப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் மகனும் , காலம் சென்றவர்களான சபாரட்ணம் ,  நல்லம்மா ஆகியோரின் மருமகனும். காலம் சென்ற டாக்டர் பேர்ள் (PEARL ) அரிய மலர் அவர்களின் அன்புக் கணவரும்,  ஜெயந்தா பொறியியலாளர், பேர்த் , அஜித்குமார் பொறியியலாளர் சிட்னி, மதுரா ஆம்புலன்ஸ் சேவீஸ் நியூ சவுத் வேல்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்.


காலம்சென்ற  லலிதா,  சாந்தி, லலிதாம்பிகை, மகாதேவ்  ஆகியோரின் அன்பு மாமனாரும்.


சபரிகா , சபரீஷ் அரவிந்தன்,  அனிதா ஆகியோரின் பேரனும் 

காலம் சென்றவர்களான பாலசுப்பிரமணியம் , கந்தையா, ஞானசௌந்தரி ஆகியோரின் சகோதரனும்  ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 16.10.2021 சனிக்கிழமை காலை 9.30 மணியில் இருந்து 12.15 மணிவரை LIDCOBMBE , ROOKWOOD CEMETERY, SOUTH SAPEL  இல்  இறுதிக்  கிரிகைகளுக்காக வைக்கப்பட்டு பின்பு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


COVID தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் அரச அறிவுறுத்தலுக்கு அமைய இறுதிக்கிரியைகள் இடம்பெறும். இரண்டு  தடுப்பூசிகளையும் போட்டவர்கள் மாத்திரம்  இறுதிக்  கிரிகைகளில்  கலந்து கொள்ளுமாறு  பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


 மேலதிக தொடர்புகளுக்கு

ஜெயந்தா    0450 982 818 

 அஜித் குமார் 0427 785 062

 மதுரா மகாதேவ் 0403 319 971

 மகாதேவ்  0450 329 212


சட்டத்தரனி யோகராஜா அவர்ளின் மறைவுக்கு தமிழ்முரசு அவுஸ்ரேலியாவின் ஆழ்ந்த அனுதாபங்கள்
தமிழ்முரசு அவுஸ்ரேலியா வின் ஆசிரியர்களில் ஒருவரான மதுரா மகாதேவ் அவர்களின் அன்புத் தந்தையார் சட்டத்தரனி 
சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்கள் நேற்று  ( செவ்வாய் ) இரவு காலமானார். அன்னாரின் மறைவுக்கு தமிழ்முரசு அவுஸ்ரேலியாவின் ஆழ்ந்த அனுதாபங்கள்


By Mathura.

  RIP my dearest appa. I am grieved to say good bye to you. You have been a wonderful father and filled the void of my mother's absence after her demise in 1986. Thank you very much for all the sacrifices you have done to the family. You lived a dignified life. Helped so many in so many ways when you worked as a Labour Officer. Got jobs for many people. When you started to practice as a Lawyer and as a Notary Public you have helped so many especially the people of Sandilipay. You were a people's person and everyone addressed you in Sandilipay as "yogi annai". God did not give us kids but you were our child for the past few years. You are now in a better place and will be blessing us from heaven with amma. You are free from all the pain and from this evil world. Good bye appa until we meet again.

அஞ்சலி  மாப்பாண முதலியார் யாழ்ப்பாணச் சொத்து !கவிஞர்  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

 மெல்பேர்ண் .... ஆஸ்திரேலியா 


குடையோடு வருவார் குனிந்தபடி நடப்பார்
குறையில்லா நல்லூரை கொண்டுமே வந்தார் 
எளிமையாய் இருப்பார் இறைவனை நினைப்பார் 
எல்லோர் மனதிலும் நிறைகிறார் மாப்பாணர்

அடக்கம் அவரிடம் அடைக்கலம் ஆனது
அமைதியை விரும்பி அவருமே ஏற்றார்
ஓரமாய் நிற்பார் ஒதுங்கியே நிற்பார் 
யாரையும் பாரார் நல்லூரானையே பார்ப்பார் 

சத்தம் போடார் சட்டம் உரைக்கார்
சகலதும் சிறப்பாய் நடந்திடும் அங்கு
நித்தியம் பூசை நிமிடம் தவறாது
பக்தியாய் யாவும் பாங்குற நிகழும் 

சத்தித் தாயே வருவாய்! (அறுசீர் கழி நெடிலடி விருத்தம்)

  NN Photo 2_CROP.jpgத. நந்திவர்மன்

           திட்டந் தீட்டித் தீமை

                   செய்வோர் கூடிப் போனார்

          பட்டோந் துன்பம் அதனால்

                   பார்த்துக் கொண்டோ இருப்பாய்?

          இட்ட மான அன்பர்

                   இன்னல் தீர்க்க இரந்தோம்

          கொட்டம் அடக்கி ஆளக்

                   கோமே தகமே வருவாய்!                 1

 

          ஞால மீதில் தீயோர்

                   நடத்தும் ஆட்சி கண்டுஞ்

          சீலம் பலவுஞ் சிதைத்துச்

                   சிறுமை பெருக்கக் கண்டும்

          ஓலம் இட்டு அழுதோம்

                   ஓயா துன்னைத் தொழுதோம்

          நீல மயிலே வருவாய்

                   நினைவில் அமைதி தருவாய்!                   2

“ நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலாசிரியர் பிறைசூடன் - கானா பிரபா

 


அன்புக்குரிய பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடன் நவராத்திரி காலத்தில் வானகம் சென்றிருக்கிறார்.  

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்ட அதிர்ஷ்டம் கொண்ட பாடலாசிரியர்.
தன் பேட்டிகளில் வறுமையோடு கவி பாடியதையும், ஒரு பாட்டுக் கேட்க அந்தரப்பட்டதையும், ஏன் தன் முதல் பாடலையே கேட்க அவர் பட்ட துன்பியலையும் சொல்லியிருப்பார். ஆனால் அவரின் பாடல்கள் எல்லாம் வற்றாத செல்வம் கொழித்த வரிகள்.
 
அறுபத்தைந்து என்பது கவிஞனைப் பொறுத்தவரை அகால மரணமே தான். ஆனால் அள்ளிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.

புதுக்கோட்டை சாந்தானந்த ஸ்வாமி வழி வந்தவரால் “சந்திரசேகரன்” என்ற இயற் பெயர் கொண்டவர் “பிறைசூடன்” ஆகி முப்பத்தாறு ஆண்டுகள் தொட்டிருக்கின்றது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ராசாத்தி "ரோசாப்பூவே வெட்கம்" 

https://www.youtube.com/watch?v=yVqz6AQakOc
 என்ற சிறை படப் பாடலோடு வெளிவராத எம்.ஜி.ஆர் இல்லம் படம் உட்பட ஏராளம் தனிப் பாடல்களுக்கும் மெல்லிசை மன்னரோடு இணைந்து பணிபுரிந்திருக்கின்றார் கவிஞர்.

செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


நிலையாக நில்லாமல் நீள்சுகத்தை நல்காத

அலைபாயும் பொருள்நாடி அனைவருமே அலைகின்றார்

அலைமகளே உன்னருளை அவர்நாடா ஓடுகிறார்
அவரகத்தை மாற்றிவிட அருள்சுரப்பாய் அலைமகளே 

இவ்வுலக வாழ்வினுக்கு இன்பமே பொருளாகும்

இன்பமதை மனமிருத்தி பொருள்நாடல் முறையல்ல
பொருளெம்மை வந்தடைந்தால் போகமதை மனமகற்றி
அலைமகளின் அருள்கிடைக்க அனுதினமும் வேண்டிடுவோம்

தளர்வறியாச் செல்வமதை தந்தருள வேண்டுகிறோம்
நிலைதழும்பா வாழ்க்கையினை நீயருள வேண்டுமம்மா
விலையில்லாச் செல்வமென்று விளம்பிநிற்கும் மனமகல
அலைமகளே அருள்புரிவாய் அடிபணிந்து பரவுகிறோம்

அளவான பொருளமைய அலைமகளே அருளிடம்மா
அறம்செய்யும் அகமமைய அருள்புரிவாய் அலைமகளே
ஆசைவலை அறுவதற்கு அம்மாநீ உதவிடுவாய்
அனுதினமும் திருவடியைப் பரவுகிறோம் அனைவருமே

கொள்ளையிடும் குணமுடையார் குவலயம்விட்  டகலவேண்டும்
குணமுடையார் குவலயத்தில் குறைவிலா திருக்கவேண்டும்
வறுமையெனும் வார்த்தையது வரண்டழிந்து போகவேண்டும்
வையகத்தில் மக்களென்றும் வாழ்வாங்கு  வாழவேண்டும்

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 62 வீரகேசரிக்கு 36 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சோதனை ! “ நூல் விட்டுப்பார்த்த “ செல்வந்தரும் நுண்மையாக பதில் சொன்ன ஊடகவியலாளரும் !! டிஜிட்டல் யுகத்தில் இன்று பல தமிழ்ப் பத்திரிகைகள் !! முருகபூபதி


இந்தத் தொடரின் 60 ஆம் அங்கத்தில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் வருகின்றேன்.

திருகோணமலையில் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து தான் தொடங்கியிருந்த மிட்சூய் சீமெந்து ஆலையை ஒரு ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கம் குண்டு வைத்து தகர்த்துவிட்ட செய்தியறிந்து கோபத்திலிருந்த வீரகேசரி நிறுவனத்தின் தலைவர் ஞானம், ஒருநாள் ஆசிரிய பீடத்துக்கு தொடர்புகொண்டு ஒரு  பத்திரிகையாளரை தனது வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வனும் வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலும் மந்திராலோசனை நடத்திய பின்னர்  அலுவலக ஊடகவியலாளர்  இ. தம்பையாவை தெரிவு செய்து அனுப்பினர்.

தம்பையா சட்டம் பயின்ற பின்னர்  அங்கே இணைந்தவர்.  இவருடன்


இணைந்தவர்கள் மேலும் இருவர். அவர்கள்:  ஶ்ரீகாந்தலிங்கம், மு. பாலச்சந்திரன்.  இவர்கள் மூவரும் எனது நல்ல நண்பர்கள். தம்பையா இடதுசாரி சிந்தனை கொண்டவர். மலையகத்தில் தலவாக்கலையைச் சேர்ந்தவர்.  அவரது அழைப்பில் நானும் நண்பர் சில்லையூர் செல்வராசனும் கமலினி செல்வராசனும் ஒரு தடவை அங்கு நடந்த பாரதி விழாவில் உரையாற்றச்சென்றிருக்கின்றோம்.

தம்பையா, கொழும்பில்  தேசிய கலை இலக்கியப்பேரவையில் சட்டத்தரணி சோ. தேவராஜா,  தணிகாசலம், மற்றும் தோழர் செந்திவேல் ஆகியோருடன் இணைந்து இயங்கிய காலம்.

இவர்கள் நடத்திய கூட்டங்களிலும் நான் உரையாற்றியிருக்கின்றேன். நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபையின் அங்கத்தவன். அத்துடன் கொழும்புக் கிளையின் செயலாளர்.  அரசியல் ரீதியாக தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் தே. க. இ. பேரவையைச் சேர்ந்தவர்களுடன் எனக்கு நல்லுறவு ஆரோக்கியமாக நீடித்தது.

நண்பர் தம்பையா ,  செல்வந்தர் ஞானம் அவர்களின் இல்லத்திற்கு புறப்படும் முன்னர் என்னிடம் வந்து, திருகோணமலை சீமெந்து ஆலைமீதான  தாக்குதல்  சம்பவம் பற்றி மேலதிக தகவல்களை கேட்டுப்பெற்றார்.

வெள்ளவத்தை லில்லி அவனியூவில் அமைந்திருந்த ஞானம் அவர்களின் வீட்டிற்கு தம்பையா சென்றபோது,  அங்கு அவருக்கு அந்த செல்வந்தர் தேநீர் விருந்து வழங்கி உபசரித்துவிட்டே நேர்காணலுக்கு தயாரானார்.

அந்த உரையாடலுக்கு முன்னர், வீரகேசரி ஆசிரிய பீடத்தில் எத்தனைபேர் பணியாற்றுகிறார்கள்..? அங்கு  மலையகம்  ,  வடக்கு – கிழக்கு – மேற்கிலிருந்து எத்தனைபேர் பணியாற்றுகிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்தார்.

பாரதி தரிசனம் – அங்கம் 05 யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் ! பாரதியின் கவிதை வரிகளை தாரக மந்திரமாக ஏற்ற மல்லிகை !! முருகபூபதி


இலங்கை அரசியல் வரலாற்றில் 1971 ஆம் ஆண்டு முக்கிய கவனிப்பினை பெற்றிருக்கிறது.  தமிழ் இன விடுதலை நோக்கிய பயணத்தை  வடக்கில் ஆயுதம் ஏந்தித்  தொடங்கிய தமிழ் இளைஞர்களுக்கு முன்னோடியாக தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் ஆயுதப்புரட்சிக்கு தயாரான காலப்பகுதிதான் அந்த 1971 ஆம் ஆண்டு.

பாரதி நினைவு நூற்றாண்டு நடக்கும் (2021 ) இக்காலப்பகுதியிலிருந்து பார்த்தால், சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த கிளர்ச்சி அது.

இந்தக் கிளர்ச்சி சிங்கள இனத்திற்காகவோ சிங்கள மொழிக்காகவோ நடக்கவில்லை என்பது தெளிவு.  அனைத்து தொழிலாள – விவசாய – பாட்டாளி மக்களுக்காக தொடங்கப்பட்ட புரட்சி. ஆனால், இது தென்னிலங்கையில் கருக்கொண்டமையால்


வடக்கின்  தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஈர்க்கப்படவில்லை.

இந்தப்புரட்சி முறியடிக்கப்பட்ட பின்னர், அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், சுமார் ஐம்பதினாயிரம் இளம் சிங்கள கிளர்ச்சியாளர்களும் அப்பாவி பொது மக்களும் கொடிய அடக்கு முறையின் கீழ் கொல்லப்பட்டதன் பின்னர், புலிகள் இயக்கம் வெளியிட்ட ஒரு நூலில், தாம் குறிப்பிட்ட இந்த 1971 ஏப்ரில்  கிளர்ச்சியின் முடிவிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்தே தமது விடுதலை இயக்கத்தை கட்டமைப்பதாக எழுதியிருந்தனர்.

குறிப்பிட்ட 1971 ஆம் ஆண்டு வழக்கம்போன்று அமைதியாகத்தான் தொடங்கியது.  அந்த ஆண்டு பிறந்ததும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை தைப்பொங்கல் சிறப்பிதழை வெளியிட்டிருந்தது.

அதுவே நான் முதல் முதலில் பார்த்த மல்லிகை இதழ். அதனை, அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவின் கரத்திலிருந்தே பெற்றுக்கொண்டேன்.

அன்றைய நாளை மறக்க இயலாது. அவர் யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் நீர்கொழும்பூருக்கு வந்திருக்கிறார் என்ற செய்தியை எனது நண்பரும் பின்னாளில் தினபதி – சிந்தாமணி பத்திரிகையாளராக பணியாற்றியவருமான தற்போது பாரிஸில் வதியும் நண்பர் செல்வரத்தினம் மூலம் அறிந்து, அவருடன் ஜீவாவை பார்க்கச்சென்றேன்.

ஈழத்துத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்னா நினைவுப் பகிர்வு வழங்குகிறார் பேராசிரியர் கா.சிவத்தம்பி

 11.10.2021 ஈழத்தின் புலமைச் சொத்தாக விளங்கிய தலை சிறந்த திறனாய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஏ.ஜே.கனகரத்ன அவர்களின் 15 வது ஆண்டு நினைவாகும்.


ஏ.ஜே.கனகரத்ன அவர்கள் காலமான தினமன்று (அக்டோபர் 11, 2006) எங்கள் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களைக் கொண்டு ஒரு நினைவஞ்சலிப் பகிர்வொன்றை வானொலியில் கொடுத்திருந்தேன். அதன் ஒலி வடிவத்தை இப்போது பகிர்கின்றேன்.

கேட்க

நவராத்திரி - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

  விழாக்காலங்கள் மனித மனத்திற்கு இன்பம் ஊட்டும் நாட்களாக கழியும்.  உழைத்து களைத்த மனதிற்கு உற்சாகம் ஊட்டுவது விழாக்கள். அதனால் தான் போலும் இயற்கையுடன் வளர்ந்த இந்து மதத்தில் விழாக்களுக்கு குறைவே இல்லை.  இந்தியா  பூராவும் விமரிசையாக கொண்டாடப்படுவது நவராத்திரி விழா. ஆனால் எந்த ஒரு விழாவின் பின்னணியிலும் மனித மனதை பண்பட  வைக்கும் தத்துவம் இல்லாது போகாது.

 நவராத்திரி இது மனிதன் வாழ்வாங்கு வாழ தேவையான அறிவு ,செல்வம், ,வீரத்தை போற்றி அதற்கான தெய்வங்களை வணங்குவது. செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. லட்சுமி படங்களிலே தேவியின் கைகளில் இருந்து தங்க காசு கொட்டுவதாக வரையப்பட்டிருக்கும் உலக அரங்கில் நாணயத்தின் மதிப்பு தங்கத்திற்கு  இணையாக மதிக்கப்படுகிறது. இந்த தங்கத்தின் மூலம் எதையும் வாங்க முடியும் ஆனால் தங்கத்தை அதிகமாக வைத்திருப்பதால் ஒரு நாடு செல்வந்த நாடாக முடியுமா? நாட்டின் செல்வம் என்பது மக்களின் வாழ்க்கை தரம், அதை நிர்ணயிப்பது நாட்டின் உற்பத்தி, உற்பத்தியை சந்தைப் படுத்துவதால் பெறப்படும் செல்வம்.

 விவசாயம் மனித வாழ்வின் உயிர்நாடி. நீர் இல்லாது வரட்சி நீண்டால் விவசாயம் பாதிக்கப்படும். மழை நீரை தேக்கி வைப்பது தகுந்த முறையில் நீர்ப்பாசனம் இவை நாட்டின் செல்வம் அல்லவா. பாய்ந்தோடும்  ஆறு நாட்டிடை வளம்படுத்தும். இயற்கை அளித்த செல்வம் அல்வா இது. தமிழ்நாடு காவேரி மூலம் பாசனம் பெற்று நெல் விளையும் பூமியாக செல்வச் செழிப்புடன் காணப்பட்ட பிரதேசமாக விளங்கியது. கர்நாடக காரன்  அணையை கட்டி காவேரியை தடுத்தான்.  நாளாந்தம் அணையை திறந்து தமிழ் நாட்டிற்கு நீரை  தா என கெஞ்ச வேண்டிய நிலை.  இவற்றை அறியும் போது நாட்டின் செல்வம், இயற்கை வளம்,  என்பதை உணர முடியும்.  நீர்வளம்,நிலவளம், மற்றும் ஆலைகளே  நாட்டின் செல்வம்.  இது மக்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பவை.  இதை உணர்ந்து தானோ என்னவோ எம் வர்கள் அஷ்ட லட்சுமிகளிலே  அன்னலட்சுமிக்கு முதல் இடம் கொடுத்துள்ளார்கள். அன்னம் உணவு.  உணவு கிடைக்காத எவரும் ஏழைதான்.

 

முப்பத்தொரு நாள் கடல் பயணம் ! கப்பலிலிருந்து பெற்ற மறக்கமுடியாத தரிசனங்கள் !! வி. எஸ். கணநாதன் – மெல்பன்

ஆறு நாள் போர் (Six-day war)  அல்லது 1967 அரபு-இசுரேல் மூன்றாம்


அரபு-இசுரேல் போர் எனப்படுவது.  1967 இல் சூன் 5 தொடக்கம் சூன் 10 வரை இசுரேலியரால் அரபு நாடுகளான எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். சூன் 5 இல் இசுரேலின் அதிரடி வான் தாக்குதலுடன் இந்தப் போர் ஆரம்பமானது. இதன் விளைவு இசுரேலின் வெற்றியாக அமைந்தது. இந்தப் போருக்குக் காரணம் இசுரேலின் போர் மூர்க்கம் அல்லது இசுரேலின் தற்பாதுகாப்பே என்று மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. “

சுயெஸ்  கால்வாயில் இஸ்ரேல் தொடுத்த போரின் காரணத்தால், பிரயாணக் கப்பல்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்க முழு ஆபிரிக்க கண்டத்தை  சுற்றி வளைத்தே செல்ல வேண்டியிருந்தது. இதனால் கப்பல் பயண காலம்   இரட்டிப்பாய் அதிகரித்தது. கப்பல் பயணச் செலவும் அதற்கேற்ப அதிகரித்தது.  இவற்றின் விளைவாக ஆகாய விமானப் பயணங்கள் அதிகரித்தன.   


இந்தக் கால கட்டத்தில்தான் நான் எனது  ஐந்து வருட இங்கிலாந்து  வாழ்க்கையை முடித்து,  தாயகம் திரும்ப உத்தேசித்தேன்.   என் குடும்பத்தவருக்கும்  சிநேகிதருக்கும் நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொண்டேன்.  இவற்றை நான் எப்படி விமானப் பயணத்தில் எடுத்துச் செல்லலாம் என்று கவலைப்பட்டேன்.  ஆகாய விமானப் பயணத்தில் குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக எடுத்துச் சென்றால்,  அவற்றுக்கு நிறைய பணம் கட்டவேண்டும்.

ஆனால் கப்பல் பிரயாணத்தில் நீங்கள் தாராளமாக சாமான்களை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேலதிக பணம்  நீங்கள் கட்டத்  தேவை இல்லை,”  என்றார்கள்,   P & O Shipping Lines  ஏஜெண்ட்ஸ், Thomas Cooks.  ஒரு நாள் ஆகாய பிரயாணச் செலவிலும் பார்க்க, தங்கள் உல்லாசப் பிரயாணக் கப்பல் பயணச் செலவு,   வெகு கூடியதாய் இருக்கும் என்றபோதிலும்,  பயணிகள் தாராளமாக சாமான்களை தம்முடன் எடுத்துச் செல்லலாம்,” என்ற தகவலை எனக்கு அளித்தார்கள்.

அதுமட்டுமல்ல, உங்கள் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு மாத கால  உல்லாசப் பிரயாணத்தை, எங்கள் பாதுகாப்புடன், நீங்கள் அனுபவிக்கலாம்," என்ற மேலதிக விபரங்களையும் எனக்கு அளித்தனர்.

இந்த  அரிய வாய்ப்பு மீண்டும் எனக்குக் கிட்டாது   என்றுணர்ந்து, குதூகலத்துடன் என் முப்பத்தொருநாள் கடல் பிரயாணத்துக்கு ஒத்துக்கொண்டேன்.

தமிழன்னை ! ( அந்தாதித் தொடை )

பாட்டுடைத் தலைவி பாங்குறு தமிழாள்


பாக்களில் இனிமை விரவி   

ஏட்டுடைப் புலவர் எழுத்தாணி மேவி

            எண்ணிலாச் செய்யுள் புனைந்து

நாட்டுடை வேந்தர் நயந்து போற்ற

            நாநில மெங்கும் வளர்ந்து

காட்டிடை வளரும் கனிச்சுவை யூறும்

            கன்னி யெம்தமி ழன்னை !

 

அன்னை பொதிகையில் அகத்திய நாவினில்

            அமர்ந்து நடனஞ் புரிந்தாள்

முன்னை மொழியென முத்தமி ழணியென

            வளர்ந்து மதுரையில் தவழ்ந்தாள்

பின்னை உலகினிற் பிறமொழிக் குயர்வெனப்

            பேர்பெற் றெங்கணும் திரிந்தாள்

பொன்னை நிகர்த்துப் பொன்றுந் தமிழாய்ப்

            பாயும் நதியெனத் தவழ்ந்தாள் !

 

நவராத்திரி 2021 – 03 துர்கை


பாரத தேவி! பராசக்தி! எம்முயிரின்
ஆரமது! நாட்டின் அடிநாதம்! நீர்நினைத்தால்
நேரெதிரே காணலாம்! நெஞ்சுபறி போகலாம்
யாரெனினும் தாயவளே தான்!

படிப்படியாய் பாரதத்தைப் பாருக்கே குருவாகப்
பார்த்துயர்த்தி வைக்கவேண்டும் தாயே!, உன்
பரிவைநம்பி வாழுகிறோம் மாயே! பெரும்
கொடியவர்கள் உள்ளிருந்தே குடைவதெல்லாம் தாங்கவில்லை
கொன்றழிக்கச் சூலமெடு தாயே! பல
கோணல்களை நிமிர்த்தவேண்டும் நீயே!

அரக்கர்களின் கொட்டமிங்கே அறிஞர்களின் மெளனமங்கே
ஆன்றதேசம் நின்றுயர்வ தெங்கே? நம்
அந்தநாளின் ஞாபகங்கள் எங்கே? வினை
வரவுசெலவு பார்த்திருக்கும் வழக்கமான நேரமில்லை
வாளெடுத்துக் கதைமுடிக்க வாராய்! நல்
வழியினைநீ மீட்டெடுத்துத் தாராய்!

பாரதத்தின் அறம்விழுந்தால் பார்முழுதும் இருள்சூழும்
பாமரன்நான் உனக்குச்சொல்ல வேண்டுமா! நேரம்
பார்ப்பதெல்லாம் இன்னும்முறை யாகுமா? அடி!
மாரதர்கள் நாரதர்கள் மக்களோடு நடந்த நாடு
மலினப்பட்டுத் தேய்வதென்ன நியாயமோ! உன்
மனத்தில்தான் என்றுவிழும் தாயமோ!

நல்லவர்கள் வாழவேண்டும் அல்லவர்கள் வீழவேண்டும்
நல்லவரைப் பார்த்துமாற வேண்டும், பிறரை
நல்லவரின் ஏற்றமொன்றே தூண்டும், இது
மெல்லமெல்ல மாறுதற்கு மேடைக்கச் சேரியில்லை
மீளவொண்ணா உயிரன்றோ மின்னலே! உன்னை
மீறியேதும் நடந்திடுமோ துர்க்கையே!

கண்ணிமைப்பில் நீகொடுத்த கவிதையினால் கேட்கின்றேன்
கணப்பொழுதில் இந்நிலைமை மாற்றிடு, எம்
கண்ணெதிரில் அறவாழ்வை ஏற்றிடு! இந்த
மண்ணுக்காக உயிரையீந்த மாமனிதர் நினைவினிலே
மண்டியிட்டு மனமுருகிக் கேட்கிறேன்! நீ
மறுக்கமாட்டாய் என்றே எதிர் பார்க்கிறேன்!

இசைக்கவி ரமணன்
07.10.2021 / வியாழன் / 19.55


கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினொன்று ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... அவுஸ்திரேலியா

                                  

    தென்னையினைப் பிள்ளை என்றே யாவரும் அழைத்து

மகிழ்வா
 ர்கள். அப்படிக் கற்பகதருவான பனையினை அழைத்து மகிழ்வதும் இல்லை. ஆனால் கற்பகதரு என்று வியந்து மட்டுமே  நிற்பதையே காணுகிறோம்.தமிழ் மூதாட்டி ஒளவைகூட தென்னையினைப்  பார்த்து " தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் " என்று நட்பினைப் பற்றிச் சொல்லும் பொழுது - மூது ரையில் சொல்லி தென்னையினை முன்னிறுத்திக் காட்டுகிறார். நாலடியாரோ வேறு விதமாய் காட்டுகிறது. நாலடியாரின் நோக்கில் தென்னையை விடப் பனையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

 

கடையார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையார் தெங்கின் அனையர் - தலையாயர்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு 

    தென்னையைவிடப் பனைதான் நட்பு என்று வரும் பொழுது உச்சத்தில் நிற்கிறது என்று நட்பின் நிலைபற்றி சொல்லும் நிலை யில் நாலடியார் இப்படிப் பார்க்கிறது.பாக்கு மரத்துக்கு தினமும்


தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது தான் அது பயன்தரும். நாளும் உதவினால் நட்புடன் இருப்பவர் கமுகு போல்வர். இது கடை நட்பா கும்.இடையிடையே நீர்பாய்ச்சி வந்தால்த்தான் தென்னை உதவும். அவ்வப்போது உதவி செய்தால்த்தான் உதவிடுவார் போல.அந்த நட்பை இடை நட்பு எனலாம். ஆனால் பனை அப்படியல்ல. ஒரு முறை செய்த நன்மையினை நினைத்து நட்புப் பாராட்டும் நட்பு டையார் போல் இருப்பதுதான் பனை.பனை விதையினை வைத்து ஒருதரம் நீர் ஊற்றி விட்டால் அது தனது காலம்வரை உதவிய படியே இருக்கும் என்று நாலடியார் பார்க்கும் பார்வை கற்பகத ருவின் முக்கியத்துவத்தை எப்படிக் காட்டுகிறது பார்த்தீர்களா !

தனக்குத் தானே! – சம்பவம் (11) கே.எஸ்.சுதாகர்


சமீபத்தில் சண்முகசுந்தரம் என்பவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார்.

“தம்பி... எனக்கொரு உதவி செய்யவேண்டும். உங்களுக்கு எங்கடை முதியோர் சங்க செயலாளர் நந்தகுமாரைத் தெரியும் என்று நினைக்கின்றேன். அவர்தான் உங்களிடம் கேட்டால், நீங்கள் செய்து தருவீர்கள் என்று சொன்னார். என்னுடைய பெயர் சண்முகசுந்தரம். எனக்கு நீங்கள் தமிழில் ஒரு கடிதம் தட்டச்சுச் செய்து தரவேண்டும்.”

நந்தகுமாரா... அவர் எனக்கு வேண்டியவராயிற்றே! என்னவென்று சொல்லுங்கள்? கட்டாயம் செய்து தருகின்றேன்.”

“நீங்கள் தட்டச்சு செய்யவேண்டியதை நான் தபாலில் அனுப்பி வைக்கின்றேன். நீங்கள் தட்டச்சுச் செய்தவுடன் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள்.”

“நல்லது. அனுப்பி வையுங்கள்.”

“நன்றி தம்பி.”

°

நவராத்திரி காலம்

அக்டோபர்07 முதல் அக்டோபர் 15 வரை நவராத்தி


நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


அக்டோபர் 7 முதல் 09 வரை  துர்க்கா வழிபாடு  

அக்டோபர் 10 முதல் 12 வரை  மகாலஷ்மி  வழிபாடு  

அக்டோபர் 13 முதல் 14 வரை  சரஸ்வதி  வழிபாடு  

அக்டோபர் 15 விஜய தசமி   

ஆதிபராசக்தியே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவிகளாக ரூபம் கொண்டு வாழத் தேவையான ஐஸ்வர்யம், ஞானம், வீரம் போன்றவற்றை அருள்கிறாள்.

சோழர் காலத்தில், நவராத்திரி விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில், நாயக்கர் காலத்திலிருந்து தான், மக்கள் கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவாக, நவராத்திரி விழா மாறியது
நவராத்திரி காலத்தில் தான், மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை, விஜயநகர மன்னர்கள் ஏற்படுத்தினர்
ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு, முதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை, மன்னர் திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே, தமிழகத்தில், நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது
 நவராத்திரி நாட்களில் பெண்கள், கன்யா பூஜை செய்தால், சகல செல்வங்களையும் பெறலாம்
 நவராத்திரி பண்டிகையை, ராமர் தான், முதன் முதலில் கொண்டாடியதாக, புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவராத்திரி விரதத்தை ராமபிரான், கடைப்பிடித்த பிறகு தான், அவருக்கு, சீதை இருக்கும் இடம் தெரிந்தது என்று, தேவி பாகவதம் சொல்கிறது


ஆர்