அன்பு காட்டிடின் அமரன் ஆகுவாய் !



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண்
 .... ஆஸ்திரேலியா 



போதை ஏறினால் பாதை மாறுவாய்
 வாதை ஏறினால் மடிய எண்ணுவாய்
 வறுமை ஏறினால் வதங்கி வாடுவாய்
 பொறுமை ஏறினால் புவியை ஆளுவாய்

அறிவு மங்கிடின் அசடன் ஆகுவாய்
அதிகம் பேசிடின் அனைத்தும் போக்குவாய் 
அழிக்க எண்ணிடின் அரக்கன் ஆகுவாய்
அன்பு காட்டிடின் அமரன் ஆகுவாய் 

பறித்து வாழ்ந்திடின் பாவம் வாங்குவாய்
அறுத்து நின்றிடின் அழிவை நாடுவாய்
வெறுத்து நின்றிடின் வினையை வெல்லுவாய்
ஒறுத்து நின்றிடின் உலகை வெல்லுவாய்

சரசுவதி கீதங்கள்

             


இயற்றியவர் பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி



கீர்த்தனை1  

                       பல்லவி

செந்தமிழ்த் தேன்மாந்தும் செல்வீ என் கலைவாணீ

பைந்தமிழ்ப் பாமாலை சூடவந்தேன் அம்மா - 

சூடவந்தேன் அம்மா - சூடவந்தேன் அம்மா  

                                                                            (செந்தமிழ்)

அருள் சுரவாய் நீ மருள் களைவோய் நீ

வருந்திருவே நீ அருமருந்தே நீ அம்மா!


             அனுபல்லவி

வான்பொழியும் மாமழைபோல் வற்றாது கலைச்செல்வம்

ஊன்கலந்து உளங்கனிய ஊட்டிடுவாய் அம்மா!

                              (செந்தமிழ்)

சிட்னி இலக்கிய கலை மன்றம் நடாத்திய திருக்குறள் மனனப் போட்டியும் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுத் திறன் போட்டியும்

அனைத்து போட்டிகளும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிறிய  மண்டபத்தில் காலை 10.00 மணியிலிருந்து நடைபெற்றது.  




படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் நடராஜா செல்வராஜா தொகுத்திருக்கும் ஈழத்தின் தமிழ் நாவலியல் கையேடு பதினாறு தசாப்தங்களுக்கு ( 1856 – 2019 ) மேற்பட்ட காலப்பகுதிகளில் வெளியான ஈழத்தவர் நாவல்கள் பற்றிய அறிமுகம் ! முருகபூபதி


ல்கலைக்கழகங்கள், ஆவணக் காப்பகங்கள், அரசு சார்பு தேசிய சுவடிகள் திணைக்களங்கள் மேற்கொள்ளவேண்டிய பெறுமதியானதோர் சேவையை, நீண்ட  காலமாக தனியெருவராக சுமந்தவாறு,  ஆக்கபூர்வமாக அயர்ச்சியின்றி இயங்கிவரும் நூலகரும் எனது இனிய இலக்கிய நண்பருமான திரு. நடராஜா செல்வராஜா  அவர்கள் தமது தொடர் உழைப்பின் ஊடாக மற்றும் ஒரு வரவாக ஈழத்தின் தமிழ் நாவலியல் ஆய்வுக்கையேட்டின் முதலாவது தொகுதியை தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். இதற்காக அவர் செலவிட்டிருக்கும் நேரம் எம்மை பிரமிப்படையவைக்கிறது. இதற்காக அவர், மேற்கொண்ட பயணங்கள்,  இரவு பகலாக முயன்ற தேடல், தொடர்ச்சியான வாசிப்பு அனுபவம் முதலான இன்னபிற செயல்கள் அவரை,  One Man Army ஆகவும் அவதானிக்கத் தோன்றுகிறது. 1856 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரையிலான நீண்டதோர் காலகட்டத்தில் இலங்கையில் வெளியான அனைத்து தமிழ்நாவல்கள் தொடர்பான  குறிப்புகளையும், அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய அறிமுகத்தையும்,  நாவல் வெளியான வருடம்,  பதிப்பகம், உள்ளடக்கம் முதலான துல்லியமான தகவல்களையும் திரட்டி  தொகுத்து வழங்கி, சமூகப்பயன்பாடு மிக்க அரியதோர் மகத்தான சேவையை நூலகர் நடராஜா செல்வராஜா அவர்கள் மேற்கொண்டுள்ளார். ஏறக்குறைய 163 ஆண்டுகாலத்தில்,  அதாவது ஒன்றரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட  காலப்பகுதியில்  வரவாகியிருக்கும் ஈழத்து தமிழ்நாவல்களைப்பற்றிய தரவுகளை  ஒரு தனிநூலுக்குள் அடக்கியிருக்கும் அவரது செயல் போற்றத்தக்கது. நூலகர் செல்வராஜா, யாருக்காக

இந்தச்சிலுவையை தொடர்ந்து சுமந்துவருகிறார்…!?   நாம் எமது வாழ்நாளில் எத்தனையோ நூல் நிலையங்களை பார்த்திருப்போம். பயன்படுத்தியிருப்போம், அவற்றில் பணியாற்றிய நூலகர்களையும் அவதானித்திருப்போம்.   நூல் நிலையங்கள் அரசு சார்பாகவும் அரசு சார்பற்றும் இயங்கியவை. அங்கிருந்த  நூலகர்களும் வேதனத்திற்குத்தான் வேலைசெய்திருப்பார்கள்.  ஆனால், தாம்  நேசித்த தொழிலை, பங்கேற்ற தமிழியல் ஆய்வை இவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடு  எங்கள் நூலகர் செல்வராஜா போன்று மேற்கொண்டிருப்பார்களா..?! இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது,                                                           “ மருத்துவமனைகளையும் நூல் நிலையங்களையும் தாக்கவேண்டாம்.  “  என்றுதான் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் சொன்னதாக தகவலிருக்கிறது!  ஆயுதத்தை நேசித்த அந்த மனிதன் கூட  அறிவையும் ஆவணங்களையும் நேசித்தான். எங்கள் தாயகத்தில் யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு, அந்த வலிசுமந்த காலத்தை நாம் கடந்து வந்திருக்கின்றோம். அந்தக் கோரம் பற்றி தொடர்ச்சியாக எழுதவும் பேசவும்படுகிறது. ஆனால், இழந்தவற்றை தேடி எடுத்து சேகரித்து ஆவணப்படுத்தவேண்டும் என்ற பெரும் பணியில்  யாரும் ஈடுபட்டார்களா..? ஈடுபடுகிறார்களா..? நூலகம் ஆவணக்காப்பகம் தன்னால் முடிந்த பணிகளை தொடருகிறது.  இலங்கையில்  யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி, வடமாகாண சர்வோதய மத்திய நூலகம், முள்ளிப்பொத்தானை பொது நூலகம், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நூலகம், இனத்துவத்துக்கான சர்வதேச நிலையம் முதலானவற்றில்  முன்பு நூலகராக பணியாற்றியிருக்கும் செல்வராஜா அவர்கள் அந்தப்பணிகளையெல்லாம் ஏதோ தொழில் நிமித்தம் வேதனம் பெற்ற ஊழியமாக கொண்டிருந்தவர் இல்லை என்பதை அவரது தொடர் உழைப்பிலிருந்தும், இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்து சென்ற பின்னரும் அயராமல் அதே துறையில் ஆவணப்படுத்தும் பணிக்கு தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் அறியும்போது வியக்காமலிக்கமுடியவில்லை.  

பங்கயச் செல்விக்குப் பாமாலை சூடிய தங்கத் தாத்தா

   











பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.

ஓங்கலிடைத் தோன்றுதல்இ உயர்ந்தோர் வணங்கும் பொருட்டு ஒளி பரப்புதல்இ உலகத்து இருளை அகற்றுதல் ஆகிய தனிப்பெரும் பண்புகள்;இ சகல உயிர்களையும் வாழவைக்கும் வெங்கதிரோனுக்கும்இ பல மொழிகளுத்குத் தாயாகி ஒளிரும் தன்னேரில்லாத் தமிழுக்கும் சாலப் பொருந்துவன என்று;இ தகைமைசால் தமிழ்ப் புலமையாளர்கள் விதந்துரைப்;பது முற்றிலும் உண்மை. கருமேகம்இ பனிஇ  புகார் முதலியவற்றாலே பகலவனி;ன் ஒளி குறிப்பிட்ட சில இடங்களிலேமட்டும இடைக்கிடை மங்கி மறைக்கப்படுவதும் அவை நீங்கியபின்பு மறுபடியும் புத்தொளியுடன் பிரகாசிப்பதும் ஒவ்வொரு நாளும் காணப்படும் காட்சியாக அமைகிறது. இதே போன்ற தாக்கங்கள் இக்காலத்திலே இலக்கியம் படைப்போர்கள் பலர் பெரிதும் கையாளும் பிறமொழிகளாலும் அவற்றின் கலப்பாலும்;;இ உலகிலே பரந்துவாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிற இன மதத்தவர்களுக்குரிய கலாசாரக் கலப்பினாலும்இ அரசியல் தாக்கங்களாலும்;இ தமிழின் மறுமலர்ச்சி - புதுமையாக்கம் என்று  தமிழைச் சிதைப்போரின்  செயல்களாலும்இ தாமரை இலைத் தண்ணீர்போலத் தரணி ஆண்டுவந்த தமிழுக்கும் ஏற்படுகின்றது. ஆனால் எவ்வாறு தற்காலிக மறைப்புகள் ஏற்படினும்  சூரியனின் பெருமையை அதன் ஒளி இன்றுவரை காத்துவருகின்றதோ அதே போன்று  எங்கள் சுந்தரத் தமிழையும் தொன்றுதொட்டு அதற்கு அணிசெய்துவருகின்ற பல்லாயிரச் செந்தமிழ் நூல்கள் காத்துவருகின்றன. அவை தமிழின்; இளமைத் தன்மையையும் புனித மேன்மையையும் சற்றேனும் குன்றாது இலங்கவைத்து வருகின்றன. 

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 35 – பூசாரி கைச்சிலம்பு, கிலுகிலுப்பை, வெண்டையம் மற்றும் அம்மானைக்காய் – சரவண பிரபு ராமமூர்த்தி


பூ
சாரி கைச்சிலம்பு, கிலுகிலுப்பை , வெண்டையம் மற்றும் அம்மானைக்காய் – கஞ்சக்கருவிகள் பூசாரி கைச்சிலம்பு – இது நீண்டு வளைந்த ஓர் அங்குல குறுக்களவுள்ள பித்தளை அல்லது வெண்கல சுருளின் உள்ளே ஒரு சில உலோக ரவை குண்டுகள் போடப்பட்டு இயங்கும் தாளக் கருவியாகும். தமிழர்களின் தாய் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கருவி இது. மாரியம்மன், திரெளபதியம்மன், கண்ணகியம்மன் வழிபாட்டில் இடம்பெறும். 

சக்தி கரகம் அழைத்தல் மற்றும் அம்மன் வர்ணிப்பில் இக்கருவி பம்பை,உடுக்கையுடன் சல்


சல் என்று ஒலிக்கும். சிலம்பை இரு கைகளிலும் வைத்துக்கொண்டு பம்பை, உடுக்கை இசையின் துணையோடு ஆடப்படும் ஒருவகை கூத்து சிலம்பாட்டம். பூசாரி இனத்தவர் இதை நிகழ்த்தி வந்தனர். மிக மெல்லிய உடல்வாகு கொண்டவர்களாலும் உடம்பில் அதிக வலுவுள்ளவர்களாலும் மட்டுமே தாக்குப்பிடித்து ஆட முடியும் என்பதால் இதைக் கற்றுக்கொள்ள எவரும் முன்வருவதில்லை. எட்டு வயது முதல் பத்து வயதுக்குள்ளாகவே இதைக் கற்றுக்கொண்டால்தான் உண்டு. கண்ணகி கையில் சிலம்போடு உக்கிரமாக நடந்துசென்றதன் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாட்டம் தொடங்கியிருக்கலாம். இவ்வளவு அரிதான இந்த கலை இன்று வழக்கொழிந்து விட்டது. ஒரு பம்பைக்காரர், ஒரு உடுக்கைக்காரர் இவர்களுடன் இரண்டு சிலம்புக்கார்கள் தேவை. ஆட்குறைப்பு கலாசாரத்தில் இவர்களும் அழிந்து விட்டார்கள். 

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 12 படைப்புக்கு களம் இல்லை ! விருதுபெற்றால் மாத்திரம் செய்தி !! சுமைகளைச் சுமந்த “ சுமையின் பங்காளிகள் “ முருகபூபதி


டலும்  கடல்  சார்ந்த  நிலமும்  நெய்தல்  என  அழைக்கப்படுகிறது. ஐந்து   திணைகளில்  ஒன்றென  நெய்தல்  கருதப்பட்டாலும்,  இந்தத் தொன்மையான  தகவல்  ஏதும்  தெரியாமல் -  மழைக்கும் பாடசாலைப் பக்கம்   ஒதுங்காமல்  உழைப்பும்,  பரிசுத்த  வேதாகமும்தான் வாழ்க்கை   என  வாழ்ந்த  மக்கள்  மத்தியில்  பிறந்து,  கடலின் அலையோசையை  தினம்  தினம்  கேட்டவாறே   வளர்ந்தேன்.   எங்கள் வீட்டிலிருந்து  பார்த்தால்  கடல்  தெரியும்.   சிறுவனாக இருக்கும்பொழுது   எனது  விளையாட்டு  மைதானம்  எங்கள் கடற்கரைதான். இந்து சமுத்திரத்தாயின்   அரவணைப்பில்  வாழ்ந்த  கடற்றொழிலாளர் குடும்பத்துப் பிள்ளைகள்  எனது  பால்யகாலச்சிநேகிதர்கள். அவர்களின்  பேச்சுமொழியை   சிறுவயதிலேயே உள்வாங்கிக்கொண்டேன். சூரியன்   அஸ்தமிக்கும்  ரம்மியமான  காட்சியையும் அந்தக்கடற்கரையில்  நடு  இரவு  கடற்தொழிலுக்கு  புறப்படவிருக்கும் அந்த   ஏழை மீனவர்கள்,    மீன்பிடி  வலையில்  மீன்களினாலும் கடல்   பாறைகளினாலும்  அறுந்துபோன  நூல்களை இணைத்துக்கொண்டிருக்கும்  காட்சியையும்

  ரசிப்பேன். அதற்கு அவர்கள் தங்களது மொழியில்   “ வலை பொத்தல்  “ என்பார்கள்.   எதற்கெடுத்தாலும்  “ என்னத்தை செல்லிய சோமலமாதாவே.  என்ர ஆண்டவரே…  “ என்பார்கள்.  என்னை மிகவும் கவர்ந்த மொழிவழக்கு.  அவர்களுக்கு கோபம் வந்தால், கெட்ட வார்த்தைகள் தாராளமாக வயது வித்தியாசமின்றி உதிரும்.  அவர்களுடன் பேசும்போது, அவர்களின் மொழிவழக்கிலேயே பேசுவேன். அதனை அவர்கள் ரசிப்பார்கள்.   “  என்ர சோமலமாதாவே… நீங்க… எங்களைப்போலவே பேசிய எலா…. “ எனச் சொல்லி சிரிப்பார்கள்.  எழுத்தாளனாக  நான்  உருவானபொழுது,   நீர்கொழும்பு பிரதேசத்தின்   வீரகேசரி  நிருபராகவும்  பணிதொடங்கினேன் என்பதை முன்னரே  சொல்லியிருக்கின்றேன்.    ஒரே சமயத்தில்  ஊடகவியலாளனாகவும்  படைப்பாளியாகவும்  என்னை வளர்த்துக்கொண்டமையால்   இன்றளவும்  இந்தப்பணிகள்  எனது ஆழ்ந்த   நேசத்துக்குரியன. முதல்  கதையான கன்னிப்படைப்பு  கனவுகள்  ஆயிரத்திற்கு  கிடைத்த  வரவேற்பினால்  மேலும்  சில சிறுகதைகளை   எழுதினேன்.   1975  ஆம்  ஆண்டிற்குள்  ஒரு தொகுதிக்குப்போதுமான   கதைகள்  எழுதிவிட்டேன். எனது   கதைகளைத் தொடர்ந்து  படித்து  ஊக்கமளித்த  மல்லிகை ஆசிரியர்   டொமினிக் ஜீவா,    ஒருநாள்  என்னை  சந்தித்தபொழுது சிறுகதைத்தொகுதியை   வெளியிடுமாறு  ஆலோசனை  வழங்கினார். 

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 19 - என் அண்ணன் - சுந்தரதாஸ்




இன்று திரைப்பட ரசிகர்கள் தாங்கள் விரும்பும் புதிய, பழைய படங்களை தொலைக்காட்சியில் வீட்டில் இருந்தபடி பார்த்து ரசிக்கலாம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி வசதி இல்லாத காலத்தில் கொழும்பு திரையரங்கில் வெளியான புதிய படத்தை பார்க்க முண்டியடித்த ரசிகர்களில் ஒருவனுக்கும், திரையரங்க மனேஜருக்கும் இடையில் ஏற்பட்ட சச்சரவு கத்திக்குத்தில் போய் முடிய மேனேஜர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவம் இடம்பெற காரணமாக அமைந்த படம் எம்ஜிஆர் நடித்த என் அண்ணன். கத்திக்குத்துக்கு பலியான மேனேஜர் ராசையா. இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையை சேர்ந்தவர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இவர் தனது பெல் ட்டினால் சிலரை அடிக்க பாதிக்கப்பட்ட ஒருவனின் கத்திக்கு பலியானார். கொழும்பு கேப்பிடல் தியேட்டரில் இந்த சம்பவம் இடம்பெற்றது.


ஏழை வண்டிக்காரன் ரங்கன். அவரின் தங்கை தங்கம், கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு டாக்டரையும் காதலிக்கிறாள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது ஆனால் அதன் பின்னரே டாக்டர் முரளி தன் தந்தையை கொலை செய்தது தன் மனைவியின் தந்தை என்று தெரிய வருகிறது. ஆனால் இது அபாண்டமான பழி என்று கூறி ரங்கன் உண்மை கொலையாளியை தேடி புறப்படுகிறான். அவனுக்கு அவளின் காதலி வள்ளியும் உதவுகிறாள்.

தென்காசி மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் கேட்டதை அள்ளி கொடுக்கும் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


அகில உலகம் புகழ்பெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் கேட்டதை அள்ளி கொடுக்கும்  தேவி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் சுமார் 6 தலைமுறையாக நடத்தி வரும் இத்திருவிழா தேவி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும், அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதியம்மனுக்கும், மகன் வைரவருக்கும் கடந்த 27 வருடங்களாக நடைபெற்றுவருகிறது.  ஆண்டுதோறும், புரட்டாசி 3ம் செவ்வாய் நடைபெறும் திருவிழாவிற்கு புரட்டாசி 1முதலே பக்தர்கள் கடும் விரதமிருக்கின்றனர் புரட்டாசி 1 முதலே தினமும்  இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது    சிகர நிகழ்ச்சியான அக்டோபர் 5–ந் தேதி.   மாலை : தீச்சட்டி ஊர்வலம் நடந்தது,   இரவு : சங்கரன்கோவில் புகழ் ஆன்மீக இன்னிசைகச்சேரி நடைபெற்றது   தொடர்ந்து நள்ளிரவில் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்புபூஜை நடைபெற்றது.   2-வது நாள் செவ்வாய்கிழமை காலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்  முளைப்பாரியை இறைபக்தியுடன் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்  தொடர்ந்து  மதியம் : பூக்குழிக்கான விறகு


ஏற்றி வருதல்  வருதலும்,  மதியம் :  மாபெரும் அன்னதான நிகழ்வும்,  மாலை(6pm) : குற்றால தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது   இரவு : மணிசங்கரம்மாள் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.  புதன்கிழமை பூக்குழி இறங்குதல்: அதிகாலை 5 மணியளவில்  21அடி நீளம்  கொண்ட பூக்குழியில் பூவளர்த்து, அன்னை தேவி ஸ்ரீமுப்புடாதி அம்மன் ஆலயத்தில்வைத்து உலகின் அனைத்து தெய்வங்களையும் எழுந்தருளசெய்து புதன் அதிகாலை 6 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.   இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். பின்னர் மஞ்சள் நீராட்டும் தொடர்ந்து அம்மனுக்கு மகா சிறப்பு பூஜையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவைக்காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இந்த மூன்று (05, 06, 07) நாள் திருவிழா ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அய்யாபுரம் ஊர் நாட்டாண்மைகளும் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர். 5 நாள் கொடையாக அன்னை தேவி ஸ்ரீமுப்புடாதிஅம்மனுக்கு சித்திரைமாதத்திலும், 2 நாள் கொடையாக மகன் பவரவருக்கு தை மாதத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

செய்தி : கார்த்திகேயன் நடராஜன்.  

ரஸனைக்குறிப்பு: எழுத்தாளர் சமூகப்பணியாளர் முருகபூபதி வாழ்வும் பணியும் - ரஸஞானி ஆவணப்படம் சுபா – மெல்பன்

                               


                                ங்கை வெள்ளத்தைக் கமண்டலத்தில் அடக்க முடியுமா? ஆனால்,  அதன் இயல்பையாவது ஒரு பாத்திரத்தில் அள்ளியெடுத்துத் தந்து உணரவைக்க முடியும் அல்லவா? எல்லைகளற்றுப் பணியாற்றும் ரஸஞானி முருகபூபதி லெட்சுமணனின், ஏறக்குறைய ஐம்பதாண்டு கால வாழ்வும் பணியும் பற்றிய தகவல்களை ஒரு மணிநேர ஆவணப்படத்தினுள் உள்ளடக்கி அளித்திருக்கிறார்கள். இந்த எண்ணத்தை உளம் கொண்டு எழுதி, செயற்படுத்திய திரு. எஸ் கிருஸ்ணமூர்த்திக்கும், ஒளி, ஒலி, படத்தொகுப்பு, ஒலிச்சேர்க்கை செய்த திரு. மூர்த்திக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும். 

எனக்கு முருகபூபதி அவர்களுடன் அண்மைய நாட்களில் நெருக்கமான பிணைப்பு உருவாகி இருக்கிறது. கிழமைக்கு ஒரு தடவையாவது தொலைபேசியில் குடும்பம், இலக்கியம், அரசியல் என மிகச் சுவாரசியமாக என்னுடன் அளவளாவுவார். மிக ஆர்வமாக இருக்கும்.  அதே வேளையில், இந்தத் தகவல் களஞ்சியத்தின் நாட்கள் பற்றிய ஒரு ஒழுங்குமுறையான தொடர்பை மனதில் காட்சிப்படுத்த முடியாமல் நான் தடுமாறுவேன். ரஸஞானி பற்றிய ஆவணப்படம் எனக்குக் கோப்பு ஒன்றை உருவாக்கித் தந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி. திரு. நவரத்தினம் அல்லமதேவன் அளவான வேகம், இடைவெளி, அத்துடன் தெளிவான உச்சரிப்புடன் பின்னணிக்குரல் கொடுத்திருக்கிறார். மிகச்சிறு வயதிலேயே பாரதியார் ஏற்படுத்திய பாதிப்பால் நேர்மை நோக்கும், பாரதியை என்றும் மனதில் பதித்து வைத்துக்கொண்டு, ‘இலங்கையில் பாரதி' என்ற மிகத் தேவையான ஆய்வு நூலை உருவாக்கியவருமான


முருகபூபதி பற்றிய படத்தின் பின்னணி இசையாக 'சின்னஞ்சிறு கிளியே' வீணை நாதம் பொருத்தமாக இருந்தது. இங்கு திருமதி மாலதி முருகபூபதி, எழுத்தாளர் வைத்தியர். நடேசன், திரு லயனல் கோப்பகே, கவிஞர் கருணாகரன், ஞானம் ஆசிரியர் திரு ஞானசேகரன், எழுத்தாளர் ஜேகே, சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன், திருமதிகள் சாந்தி சிவகுமார்,  வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா, கலாநிதி கௌசல்யா அந்தோனிப்பிள்ளை,  கலைஞர்  மாவை நித்தியானந்தன், திருவாளர்கள்  இராஜரட்ணம் சிவநாதன், ஆவூரான் சந்திரன், விமல் அரவிந்தன், கொர்னேலியஸ்  இவ்வளவு பேரிடமும் தகவல்கள் சேகரித்து, குறுகிய நேரத் தொகுப்பாக ஆக்கியது சாதனையே.  இரண்டு விடயங்கள் படத்தைத் தொய்வில்லாமல் பார்ப்பதற்கும், தொடர்புபடுத்தி அறிந்து கொள்வதற்கும் உபயோகமாக அமைந்தன. ஒன்று, தகவல்களுக்குப் பொருத்தமான படங்கள், காணொளிகளை ரஸஞானி பற்றி ஒவ்வொருவரும் கருத்துக்கூறும் காணொளியின் பின்னணியில் இணைத்தது. இரண்டாவது, தனித்தனிப் பகுதியாகப் பிரிக்காமல் முருகபூபதி அவர்கள் தன்னைப்பற்றிக் கூறுவதையும், இடையிடையே மற்றவர்கள் கருத்தையும் கலந்து தொகுத்தது. 

நடையில் வந்த பிரமை ( சிறுகதை ) முருகபூபதி


 “  வீடு திரும்பியதிலிருந்து  என்ன யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்…?   “  வீட்டின் விட்டத்தை பார்த்துக்கொண்டு திக்பிரமையுடன் இருந்த என்னை மனைவி பின்புறமாக வந்து  தோளில் தட்டினாள்.  “  ஒன்றுமில்லை  “ தொடர்ந்தும் மௌனமாக கைத்தொலைபேசியில் வாட்ஸ் அப் அலைப்பறைகளை பார்க்கின்றேன்.  எனது இளைய மகள் என்னை அநாவசியமாக இதற்குள் இழுத்துவிட்டாள். தொடர்புக்கு மாத்திரம் இதுவரை காலமும் பாவித்த கைத்தொலைபேசியில் உலகமே அடங்கிவிட்டது.  தினமும் காலை எழுந்ததும்,  வாட்ஸ் அப்பில் வரும் வேடிக்கைகளுக்கு  பகிர்ந்தமைக்கு நன்றி என்று ஒற்றை வரியில் பதில் கொடுக்காதுவிட்டாலும் ,  ஏன்..? எதற்கு..? என்று விசாரிப்பதற்கும் ஒரு பெரிய வட்டம் உருவாகிவிட்டது. அந்த ஒற்றைவரிக்கு மேல் எதனையும் நான் எழுதுவதும் இல்லை.  இன்று வெளியே நடைப்பயற்சிக்கு சென்றபோது  அறிந்த தகவல் உண்மையா..?   கண்ட காட்சி பொய்யா… ? அவ்வாறாயின்  நேற்று நான்  அந்த எலிஸபெத்துடன் பேசியது  வெறும் பிரமைதானா..? கண்ணுக்குத்

தெரியாத இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் எதிரொலியாக மனப்பிராந்தியும் வருமோ. வீட்டுக்குள்  அதிக நேரம்  அடங்கியிருப்பதனாலும், சமூக இடைவெளி பேணவேண்டி நேர்ந்தமையாலும் குடும்பங்களுக்குள் பிரச்சினைகள் கூடியிருப்பதாகவும், சில சிக்கல்கள் விவாகரத்து வரையும் சென்றுவிட்டதாகவும்,  மன அழுத்தம் சமூகத்தில் கூடிவிட்டதாகவும் சொல்கிறார்களே..?  அவ்வாறாயின் எனக்கு இக்காலகட்டத்தில் என்ன நேர்ந்தது.  பிள்ளைகளையும் கட்டிக்கொடுத்து பேரக்குழந்தைகளையும் பார்த்தாயிற்று.  வீட்டுக்கடனும் தீர்ந்து  வருடங்கள் ஓடிவிட்டன. அரசாங்கம் தரும் ஓய்வூதியம் தாராளம்.  மருத்துவமனைக்கு அம்பூலன்ஸில் செல்லநேர்ந்தாலும் ஓய்வூதிய அட்டை இருப்பதனால் எந்தக்கட்டணமும் இல்லை. வாழ்க்கை நிம்மதியாக ஓடும்போது,  உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக தினமும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோதுதானே  அந்த எலிஸபெத் அறிமுகமானாள். புறநகர் வாழ்க்கையில் நடைப்பயிற்சிக்கு செல்கையில்   தெருவில் காணுபவர்கள்,  “ ஹாய்  “ -   “ ஹவ் ஆர் யூ..?   “ - “ குட் டே “ என்று  புன்னகையுடன்  ஓரிரு சொற்களை உதிர்த்துவிட்டு கடந்து சென்ற பலருக்கு மத்தியில்  நடைக்கே வராமல், வீட்டு வாசலில் அல்லது முற்றத்தில் நின்றுகொண்டு என்னைக்கண்டதும் தரிக்கச்செய்து சில நிமிடங்களாவது உரையாடும் அந்த எலிஸபெத் உண்மையிலேயே இனிமேல் இல்லையா..? அவ்வாறாயின் நான் கண்ட பெண் யார்..? அவளது உருவத்தில் அவளது சகோதரியா..? அப்படியும் இல்லை என்றுதானே, என்றைக்கும் என்னோடு பேசியிருக்காத அவளது கணவன்   சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்னர் சொன்னான். 

இலங்கைச் செய்திகள்

வடக்கில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் 

சர்வதேச அங்கீகாரமுள்ள ஊழியர்களுக்ேக இனி வெளிநாட்டு வேலைவாய்ப்பு

சீன உயர்மட்ட குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்திப்பு


வடக்கில் 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் 

அடுத்த ஆண்டுக்குள் பூர்த்தி - பிரதமர்

வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் முழுமைப்படுத்தி வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமருக்கான கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கிற்கு இந்த வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உலகச் செய்திகள்

வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப் கொரோனா தொற்று பற்றி குறைமதிப்பீடு 

உலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா

மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ்பெற திட்டம்

போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையே அசர்-ஆர்மேனியா தொடர்ந்தும் மோதல்

புர்கினா பாசோ தாக்குதலில் இடம்பெயர்ந்த 25 பேர் பலி

ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து கிரிகிஸ் பிரதமர் இராஜினாமா


வெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப் கொரோனா தொற்று பற்றி குறைமதிப்பீடு 

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூன்று நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார்.

தொடர்ந்து நோய்த் தொற்று இருக்கும் நிலையில் அவர் வெள்ளை மாளிகை மாடி முகப்பில் தோன்றி புகைப்படத்திற்காக தமது முகக்கவசத்தையும் அகற்றினார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அளவுக்கு டிரம்ப் உடல்நிலை தேறிவிட்டதாகவும், கடந்த 72 மணிநேரமாக அவருக்கு மூச்சித்திணறல், காய்ச்சல் எதுவும் இல்லை எனவும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனினும் டிரம்ப் மீது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவரது மருத்துவர், அவர் இன்னும் முழுமையாக ஆபத்து நிலையில் இருந்து விலகவில்லை என்று தெரிவித்தார்.

அண்மைய தினங்களில் டிரம்பின் பணிக் குழுவைச் சேர்ந்த பலருக்கும் கொவிட்–19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

டிரம்பின் உடல் நிலை குறித்து கடந்த வார இறுதியில் முரண்பாடான தகவல் வெளியான சூழலில் அவரது நோய்த் தீவிரத்தன்மை குறித்து இன்னும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், டிரம்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பணிபுரியும் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கும் இதுவரை பதிலில்லை. உலகில் கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 7.4 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 210,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

எழுந்து வாடா தமிழா! (எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)


 

பண்டைத் தமிழன் பாரை ஆண்ட

        பழமை வாய்ந்த திருவா ரூரில்

அண்டை மொழியாம் இந்தி மொழியே

        அரங்கில் ஏறக் கண்டும் அதனைச்

சண்டை போட்டுத் தடுத்தாய் இல்லை

        சங்கம் வளர்த்த தமிழும் இல்லை

கண்டும் வாளா களிக்குந் தமிழா

        கண்ணுங் குருடோ தானுனக் கோடா? 1


இரத்தஞ் சிந்தி உயிரைக் கொடுத்து

        இந்தி வரநீ தடுத்தாய் அன்று

பரத்தை போல உணர்வே இன்றிப்

        பதுங்கி வாழ்வாய்ப் பாரில் இன்று

வரத்தைப் பெற்றோந் தமிழ ரானோம்

        வாழ்வோம் தலையை நிமிர்த்தி யென்றால்

சிரத்தை இன்றி வாழுந் தமிழா

        செருப்பிற் கீழாய்ப் போன தேன்டா?

சண்டி மகா யாஹம் 18/10/2020 - துர்க்கா கோவில் சிட்னி





 


நவராத்திரி விழா


 




மழைக்காற்று ( தொடர்கதை ) – அங்கம் 56 முருகபூபதி


வீ
ட்டுக்கு வெளியே கேட்ட  காரின் ஒலியெழுப்பிய சத்தத்தினால், அபிதா, திடுக்கிட்டு வந்து வாயில் கதவைத்திறந்து பார்த்தாள். லண்டன்காரர் முதல் நாள் இரவு அழைப்பெடுத்து  குறிப்பிட்டுச்சொன்ன வீடு வாங்கவிருக்கும் பகுதியினர்தான் வந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வாயில் கதவடியில் நின்று  பார்த்தாள். வீட்டின் உட்புறம் திரும்பி,  கூடத்தின் இரண்டு மூலைகளிலிருந்தும்  வாசம் எழுப்பிக்கொண்டிருக்கும் ஊதுவத்திகளையும் ஒரு கணம் பார்த்துக்கொண்டாள். வீடு பார்க்க ஆட்கள் வருவார்கள்.  அதனால், வீட்டை துப்புரவாக்கி வைத்திருக்குமாறு முதல் நாள் இரவே ஜீவிகாவின் பெரியப்பா சண்முகநாதன் லண்டனிலிருந்து  அழைப்பெடுத்து சொல்லியிருந்தார். அவரது மகள் தர்ஷினிக்காக அல்லாவிடினும், அவருக்காகவாவது அவரது சொல்லை கேட்கவேண்டும்.  இங்கு வந்து அவர் திரும்பும்வரையில் தன்னோடு  பாசமாக இருந்ததை நன்றியோடு  அடிக்கடி நினைப்பதனால்,  அவர் சொல்லும் கட்டளைகளையாவது செய்யவேண்டும் என்ற தீர்மானத்திற்கு அபிதா வந்திருந்தாள்.  ஜீவிகா, தனக்கு

லீவு இல்லை என்று சாக்குப்போக்குச்சொல்லிவிட்டு வேலைக்குப்போய்விட்டாள்.  வீடு பார்க்க வருபவர்களுக்கு வீட்டையும்  அறைகளையும்  பின்காணியையும்  காண்பிக்கவேண்டிய பொறுப்பும் அபிதாவின் தலையில் சுமையாக விழுந்துவிட்டது. ஒரு வேலைக்காரிக்குத்தான் எத்தனை வேலைகள். அபிதா மனச்சலிப்புடன்தான்,  அதிகாலை காலை எழுந்தது முதல் உட்காராமலேயே சுழன்று சுழன்று வீட்டை சுத்தம் செய்தாள்.  வீட்டுக்கு வெளியே  நின்றது ஒரு பொலிஸ் கார்.  அபிதா அதனைப்பார்த்ததும்  நிலைகுலைந்துபோனாள்.   வீடு பார்க்க பொலிஸ் ஏன் வருகிறது…?   வரவிருப்பவர்கள் வீடு விற்பனைப்பிரதிநிதியும் வீடு வாங்கவிருப்பவர்களும் என்றுதானே அந்த  மனுஷன் சொன்னது. கிணறுதானே வெட்டப்படுகிறது… பூதம் ஏன் அதிலிருந்து கிளம்பி வரல்வேண்டும்.  அபிதா ஒருகணம் நெஞ்சைப்பிடித்துக்கொண்டாள்.