த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்

 

 பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழருக்கு சம உரிமை கோரியவர்

July 1, 2024 12:08 am 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்.

சிரேஷ்ட அரசியல்வாதியான இராஜவரோதயம் சம்பந்தன் (1933 பெப்ரவரி 05) தனது 91ஆவது வயதில் காலமானார்.

எண்ணி எண்ணி அழுகின்றேன் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



      பார்த்தவர்கள் எல்லோரும்
      பக்குவமாய் வந்தமர்ந்து
      
பலகதைகள் பேசிநிதம்
      
பானமெலாம் பருகிடுவர்

      
வேர்த்துதொழுகி நிற்பார்கள்
      
விரைந்தங்கே ஓடிவந்து
      
வியர்வைதனைப் போக்கிவிட்டு
      
வியந்தென்னை பார்த்துநிற்பர்

      
பெரியயவரும் சிறியவரும்
      
பேதமின்றி வந்திடுவார்
      
அருமையாய் பலகதைகள்
      
அவரங்கே பேசிடுவார்

      
உரசல்களும் வருமங்கே
      
ஊர்வம்பும் தேடிவரும்
      
பெருமளவில் சண்டைகளும்
      
பின்னேரம் நடக்குமங்கே

கற்பகதரு நூல் பற்றி விமர்சனம்


சுவைபட சுவைத்ததை சுவையுடன்

சுவைக்கவே சுவையொடு சமைக்கிறேன்…..

சங்கர சுப்பிரமணியன்.


சமீபத்தில் வெளியிடப்பட்ட கற்பகதரு நூல்பற்றி விமர்சனம் செய்யுமாறு திரு. ஜெயராமசர்மா அவர்கள் என்னி டம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்நூலைப் பற்றி என் விமர்சனத்தை இங்கு தருகிறேன். விம ர்சனம் என்பதற்காக பொதுவாக அங்கிங்கே தொட்டு நிறைவு செய்வதுபோல் இல்லாமல் ஒவ்வொரு சுவை யையும் சுவைத்து சுவைத்த அனுபவித்த சொற்களாக்கச் சொன்னார்.

இந்த நூல் சற்று வேறுபட்ட நூல் என்பதோடு பல தகவல்களை வேறுபட்ட கோணத்தில் யாரும் கூறாதவை களை இந்நூலில் கூறி இருக்கிறார். இதன் அடிப்படையில் எந்த சுவையையையும் விட்டு விடாமல்  சுவைத் துணர்ந்து உங்களுக்காக சமைத்ததால் வழக்கத்திற்கு மாறாக தொடராகத் தருகிறேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் வாழ்த்துரை , சிட்னிவாழ் எழுத்தாளரான பேராசிரியர் திரு. ஆசி கந்தராஜா அவர்களின் அணிந்துரை, ஆஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் மேனாள் செயலாளரும் எழுத்தாளருமான திரு. கே. எஸ். சுதாகர் அவர்களின் நயவுரை மற்றும் என்னுரை , பொருளடக்கம் , என்று சிறப்பான எட்டுப் பக்கங்களின் தொடக்க த்தை உள்ளடக்கி சிந்தனையைத் தூண்டும் இருநூற்று நாற்பது பக்கங்ளைக் கொண்டதாக இந்நூல் உள்ளது.

பச்சைப் பசேலென புல்தரை , அதில் நிற்கும் பசுமாடுகள் , உயர்ந்த பனைமரங்கள் , நிழல்தரும் படர்ந்த மரங்கள் மற்றும் அவற்றின் பின்புறமாக வெண் மேக கூட்டங்களோடு தோன்றும் நீலவானமும் முகப்பு அட்டையாக நூலுக்கு பொலிவைத் தருகிறது.

ஒரு நூலில் பல அத்தியாயங்கள் அடங்கியிருப்பது போல் இந்நூலில் நாற்பது சுவைகளாக அங்கங்களாக
வரையறுத்துள்ளார். இப்போது நாற்பது சுவைகளையும் சுவைத்து உணர்ந்த நான் அச்சுவைதனை உங்க ளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதல் சந்திப்பு : சாம்பியா மக்களின் வாழ்க்கைக் கோலங்களை சித்திரித்த உஷா ஜவகார் ! நாட்டுக்கு நாடு வேறுபடும் முருங்கைக்காயின் மகத்துவம் பேசிய கதையை எழுதிய படைப்பாளி ! ! முருகபூபதி


இந்தப்பதிவிற்காக சாம்பியா நாட்டு தாய்மார், மற்றும் அவர்கள் பாசத்தோடு அணைத்து, சுமந்துவரும் குழந்தைகளின் படங்களைத் தேடினேன்.  கிடைத்தது. ஆனால், பதிவேற்ற உரிமம் தேவைப்பட்டது.

அதனால்,  தவிர்த்துக்கொண்டு அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து நீண்டகாலம் கலை, இலக்கிய, கல்விப்பணிகளையும் மேற்கொண்டவாறு,  அங்கிருந்து ஒலிபரப்பாகும்  வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் இளம் தலைமுறை படைப்பாளி உஷா ஜவகார் பற்றி எழுதுகின்றேன்.

இவர் பற்றிய குறிப்புகளுக்கு செல்வதற்கு முன்னர், உங்களுக்கு ஒரு சுவாரசியமான செய்திகளை நினைவூட்டுகின்றேன்.

ஒரு புதிய நாட்டுக்குச்சென்றால்,  அந்த நாட்டின் பிரதான மொழி தெரியாவிட்டால் நாம் மிகவும் அவஸ்தைப்படுவோம்.

எனக்கு இந்தத்  தவிப்பு ருஷ்யா, பிலிப்பைன்ஸ்,  சுவிட்சர்லாந்து, ஜெர்மனி , பிரான்ஸ் சென்ற சந்தர்ப்பங்களில் நேர்ந்திருக்கிறது.

1985 இல் ருஷ்யா – மாஸ்கோ சென்றிருந்தபோது

மொழிபெயர்ப்பாளர்கள் உடன் வந்தமையால் சமாளித்தேன். 


ஏனைய நாடுகளில் வசிக்கின்ற எனது உறவினர்கள், நண்பர்களின் தயவால் சமாளித்தேன்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு சிங்களம் தெரியாத  தமிழ் அன்பர் வெள்ளவத்தை சந்தைக்கு காய்கறி வாங்க வந்து,  தான் எடுத்துச்சென்ற  பேக்கை காண்பித்து, அதிலே அவற்றை போடும்படி சொல்லும்போது சொன்ன வார்த்தையால் அங்கிருந்த சிங்கள அன்பர்கள் அட்டகாசமாக சிரித்தார்களாம்.

பேக்கை ( Bag ) தமிழில் பை என்பார்கள். 

இதற்குமேல் நான் எதுவும் சொல்லவில்லை. புரிந்துகொள்ளுங்கள்.

எழுத்தாளர் உஷா ஜவகார் பற்றிய இந்தப்பதிவை  எனது முதல் சந்திப்பு தொடரில் எழுத முன்வந்தபோது,  ஏன் இந்த மொழிப்பிரச்சினை விவகாரம் வந்தது..? என நீங்கள் யோசிக்கலாம்.

அதற்கு உஷா ஜவகார்,  சாம்பியா நாட்டில் சிறிது காலம் வாழ்ந்தபோது நடந்திருக்கும் இந்த உண்மைச் சம்பவத்தை அவரது வார்த்தைகளிலேயே தருகின்றேன். 

“அது 1987ஆம் ஆண்டு.ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதியில்                       ஓர் நாள். அன்று ஒரு செவ்வாய்க்கிழமை!

 அப்போது நான் சாம்பியாவில் உள்ள சிங்கோலா (Chingola) என்ற சிறிய நகரில் என் அக்காவுடன்                                  தங்கியிருந்தேன். அங்குள்ள அக்கௌன்டன்சி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த நிறுவனத்தின் பெயர் மசூத் ரவூப் அண்ட் கம்பெனி ஒரு பாகிஸ்தானியர்தான் அந்த நிறுவன உரிமையாளர்.

சிங்கோலா ஒரு சிறிய நகர்.  ஆதலால் ஒரே ஒரு போட்டோ                   ஸ்டூடியோதான் அங்கு இருந்தது.

 

படித்தோம் சொல்கின்றோம் : சி. மகேந்திரன் எழுதிய ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் ! நதி வெள்ளம் காய்ந்துவிட்டால், நதி செய்த குற்றம் என்ன…? ! முருகபூபதி

“ வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்பது நதிகளின் மரண


சாசனம். நதியின் உருவமாக , படபடத்து சிறகசைக்கும் வண்ணத்துப்பூச்சிகள், பெரும் துயருடன் என் மனதில் குடியேறின. இதன் விளைவுதான் வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம். இயற்கைக்கு மரணம் இல்லை. மனிதர் செய்யும் இடையூறுகளை கடந்து அது புதிய           பரிமாணங்களைக் கண்டறிந்து வாழ்ந்துகொண்டேயிருக்கும். இதைப்போலவே மரணசாசனம் என்பதும் ஒரு ஆதங்கம். நதிகளை பாதுகாப்பதற்கான எச்சரிக்கை. ஆனால், நதி இன்னமும் மரணமுற்றுவிடவில்லை. மரணம் அடைந்துவிட்டதாக மனம் கொந்தளிக்கிறது. அவ்வளவுதான்.  “ என்று,  வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் என்ற நூலை எழுதியிருக்கும் தோழர் சி. மகேந்திரன், ஏன் இதனை எழுதினேன் என்பதற்கான காரணத்தை சொல்கிறார்.

தலைப்பினைப் பார்த்ததும், இந்த நூல் ஏதோ கவிதைகளை


உள்ளடக்கிய  நூலாகவிருக்குமோ ?  என்ற எண்ணம்தான்  வாசகர்களுக்கு முதலில் வரக்கூடும்.

ஆனால்,  தமிழக நதிகளின் வரலாற்றையும்  சுற்றுச்சூழலினால் மாறிவிட்ட  அதன்  கோலங்களையும் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களின் ஊடாக ஆவணமாகவே இந்நூல்  பதிவுசெய்து வைத்திருக்கிறது.

நூலாசிரியர் , இந்தநூலின்  74 ஆவது அங்கத்தின் தொடக்கத்தில் சொல்லியிருக்கும் ஆதங்கத்தையே இந்தப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

இதுவரையில் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்த நூல் இந்திய சாகித்திய அகடமியின் தெரிவுக்குழுவுக்கு  ஏன் எவராலும் பரிந்துரை செய்யப்படவில்லை..? என்ற ஆதங்கம்தான் எனக்கு வந்தது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள தமிழக நதிகளின் வரலாறு ஏற்கனவே ஜூனியர் விகடனில் 25 இதழ்களில் பிரபல ஓவியர் மருது வரைந்த வண்ணப்படங்களுடன் தொடராக வெளியாகியது.

நீரின் மரணம் என்ற முதல் அத்தியாயத்துடன் தொடங்கும் இந்த நூல் நதித்தாய் காப்போம் என்ற 74 ஆவது அத்தியாயத்துடன் நிறைவுபெற்றாலும்,  மேலும் சொல்வதற்கான செய்திகளை உறைபொருளாகக் கொண்டிருக்கிறது. தேடல் மனப்பான்மைகொண்ட தீவிர வாசகர்களுக்கு  பல பாதைகளையும் திறந்துவிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் குறித்த ஆர்வலர்களுக்கு பல செய்திகளையும் கூறுகின்றது.

மலைகளில் ஊற்றெடுத்து வற்றாத ஜீவநதிகளாகி கடலோடு சங்கமிக்கும் வரையில்,  அவை தமது இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை.  ஆனால், அதன் கரைகளில் வாழ்ந்துவரும் மனிதக்கூட்டம் தனது தேவைகளுக்காக மாற்றுகிறது. அதன் விளைவுகளையும்,  அழிவுகளையும் சந்திக்கிறது.

ஒன்றுபடுவதன் முக்கியத்துவம்

 June 28, 2024


இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு. ஜெய்சங்கர் அண்மையில், தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்திருந்தார். இதன்போது, தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சி களின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டபோது, ஏனையவர்கள் அதற்கு தெளிவான பதிலை வழங்காதபோது ஜெய்சங்கர் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கின்றார் – அதாவது, ‘நீங்கள் அனை வரும் அந்த விடயத்தில் உண்மையான ஈடுபாட்டோடு இருக்கின்றீர்களா?’, ஒரு வெளிநாட்டு அமைச்சர் நமது கட்சிகளின் தலைவர்களைப் பார்த்து இவ்வாறு கேட்கின்றார் என்றால் – அதன் பொருள் என்ன? அந்தளவுக்குத்தான் நமது கட்சிகள் பற்றி இந்தியா புரிந்து வைத்திருக்கின்றது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களை சந்தித்தபோது இவ்வாறான தொனியில்தான் பேசியிருந்தார். தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் பேசப்பட்ட காலத்திலிருந்து இது சாத்தியமா என்னும் கேள்வியும் கூடவே நடைபோடுகின்றது. கொழும்பிலுள்ள தூதரகங்கள் அனைத்திடமும் இவ்வாறான கேள்விதான் இருக்கின்றது, புருவங்களை உயர்த்தி – நீங்கள் தமிழ் பொது வேட்பாளரை போடப் போகின்றீர்களா என்றே கேட்கின்றனர். ஈழத்தமிழர்களால் ஒருபோதுமே ஒற்றுமைப்பட முடியாதென்று எண்ணுபவர்கள்தான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றனர்.

ரணிலின் எச்சரிக்கை…!

 June 29, 2024\


நாட்டு மக்களுக்கான தனது உரையில் ரணில் எதனை உணர்த்த முற்படுகின்றார்? ‘நீங்கள் என்னை நிராகரித்தால் நஷ்டப்படப் போவது நானில்லை – நீங்கள்தான். ஏனெனில், நாட்டை சரியான வழியில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றேன் – இவ் வாறானதொரு சூழலில் நான் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டால், பாதிக்கப்படப்போவது நீங்கள்தான்’, ரணிலின் இந்த எச்சரிக்கை மிகவும் தெளிவாக ஒரு செய்தியைக் கூறுகின்றது.

அதாவது, ஜனாதிபதித் தேர்தல் களம் மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கப் போகின்றது. ஓட்டப் பந்தயத்தில் ரணில் வெற்றிபெறுவாரா என்னும் கேள்வியுண்டு. இதேவேளை, ஓட்டப் பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியும் இதுவரையில் வெற்றியளிக்கவில்லை.

ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவார்கள் என்னும் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அது நிறைவேறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறானதொரு சூழலில் விமல் வீரவன்ஸ தரப்பிலிருந்தும் ஒரு வேட் பாளர் நிறுத்தப்படலாம் என்றும் அபிப்பிராயங்கள் எட்டிப் பார்க்கின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில் நோக்கினால் ரணிலின் வெற்றி மிகவும் தொலைவிலேயே தெரிகின்றது.

நவராத்திரி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 படத்துக்கு படம் ஒவ்வொரு வேடத்தில் நடித்து வந்த நடிகர் திலகம்


சிவாஜி கணேசன் ஒரே படத்தில் ஒன்பது வேடங்களில் தோன்றி அசத்திய படம் தான் . ஒன்று எடுத்தால் எட்டு இலவசம் என்பது போல் சிவாஜி ரசிகர்களுக்கு இந்தப் படம் அமைந்தது. அது மட்டுமன்றி சிவாஜியின் 100வது படம் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டது.


நாடகத் துறையில் இருந்து திரையுலகிற்கு நடிகராக வந்து , கதாசிரியராகி, தயாரிப்பாளராக மாறி , இயக்குனராக உருவெடுத்தவர் ஏ பி நாகராஜன். நடிகர் ஏ பி நாகராஜனுடன் இணைந்து இவர் கதை வசனம் எழுதி தயாரித்த மக்களை பெற்ற மகராசி , நல்ல இடத்து சம்பந்தம் இரண்டும் வெற்றி பெற்றன . ஆனால் தொடர்ந்து தயாரித்து இயக்கிய வடிவுக்கு வளைகாப்பு

தோல்வி கண்டது. அதனை தொடர்ந்து ஏபி என், வி கே ஆர் பாகஸ்தம் பிரிந்தது. இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து தனித்து படம் தயாரிக்க ஆசைப் பட்ட ஏ பி நாகராஜன் , வி கே ராமசாமியை அணுகி சிவாஜியின் கால்ஷீட்டை பெற்று தரும்படி கேட்டுக் கொண்டார். அதன் படி இருவரும் சென்று சிவாஜியை சந்தித்து பேசியதின் பலனாக நவராத்திரி படம் உருவாக தொடங்கியது. தனக்கு உதவிய வி கே ஆருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார் ஏ பி என்.

நவராத்திரி முதல் நாள் அன்று தன் தகப்பன் தனக்கு பார்த்த வரனை பிடிக்காமல் வீட்டை விட்டே இரவோடு இரவாக வெளியேறுகிறாள் நளினா. தற்கொலை செய்ய முயலும் அவளை தடுத்து நிறுத்துகிறான் அற்புதராஜ் என்ற பணக்காரன். ஓர் இரவு அவன் வீட்டில் தஞ்சம் அடையும் அவள் மறுநாள் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி விபசார விடுதி ஒன்றில் போய் சிக்கிக் கொள்கிறாள். அங்கே அவளை அனுபவிக்க துடிக்கும் ஒருவனிடம் தப்பி , மன நோயாளிகள் விடுதியில் மாட்டிக் கொள்கிறாள். இவ்வாறு ஒவ்வோர் இரவும் ஒவொரு ஆடவர் இடத்திலும் சென்று சேரும் நளினா இறுதியில் கற்போடு தன் வீடு திரும்பினாளா என்பதே படத்தின் மீதி கதை.

“குரு அரவிந்தனின் படைப்புக்கள்”


இலங்கைச் செய்திகள்

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு 04 நாள் பயணம்

அமெரிக்க தூதுவர் வாழ்த்து

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம் திறந்துவைப்பு

ஊடகச் செயற்பாடுகளால் கண்டிக்கு பெருமை சேர்த்தவர் அமரர் க.ப.சிவம்


ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 

- கள்ளத் தொடர்பை பேணியதாக 2015 இல் இளைஞர் கடத்தல் சம்பவம்

June 28, 2024 10:49 am 

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உலகச் செய்திகள்

பைடன் – ட்ரம்ப் முதலாவது விவாதத்தில் கடும் மோதல்

மாலைதீவுடனான சீனாவின் நீர் இராஜதந்திரத்தை முறியடிக்க திபெத்தின் பெயரை மாற்ற முயற்சி

வடக்கு காசாவில் முன்னேறும் இஸ்ரேலியப் படை பலஸ்தீனரை தெற்கை நோக்கி செல்ல உத்தரவு

வடக்கு, தெற்கு காசாவில் குண்டு மழை பொழியும் இஸ்ரேலியப் படை ரபாவில் ஹமாஸுடன் மோதல்

காசாவில் பாடசாலை, வீடுகள் மீது இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்: 40 பலஸ்தீனர்கள் பலி

ஜூலியன் அசாஞ்ச் விடுதலை


பைடன் – ட்ரம்ப் முதலாவது விவாதத்தில் கடும் மோதல்

June 29, 2024 1:40 pm 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக முதல் நேரடி விவாதத்தில் மோதியுள்ளனர்.