தமிழ்முரசு வாசக நெஞ்சங்களுக்கு எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.
சீரும் சிறப்பும் பெருகிட வாழ்க
சீர்மிகு வாழ்வு அமைந்திட வாழ்க
ஒளி  நிறைந்து ஓங்கிட வாழ்க
ஒற்றுமை கண்டு உறவென வாழ்க
உள்ளம் மகிழ உயர்வுடன் வாழ்க
உலக தமிழினம் உயர்ந்தே வாழ்க .

அன்புடன் வாழ்த்தும் ஆசிரியர் குழு .01.01.2014



வசந்த ஆண்டு வருக

.

மிகபெரும் பிரளயங்களை
கடந்தும் இன்னும் 
உயிர்வாழ முடிவதை எண்ணி
பூரித்து நிற்கிறேன் 
நிறங்கள் நிரந்திரமில்லை 
மதங்கள் மாற்றத்திற்குரியவை 
மாதங்களை போல 
அவற்றையும் கடந்து போகும் 
மனதை தந்துவிடு 

நிரப்ப இயலா 
வெற்றிடங்களை 
அன்பால் நிரப்பும் 
வல்லமை கொடு 

வாழ்வின் எல்லை வரை 
சென்று மீண்டவர்களின் 
வலியை உணர செய் 

புலமற்று நிராதரவாய் 
இருக்கும் மனங்களுக்கு 
மருந்தாய் இருக்கும் 
மகத்தான உள்ளத்தை தா 

திரும்பிப்பார்க்கின்றேன் - 21 -முருகபூபதி

.

மருத்துவக்கல்லூரிக்கு        தமது     உடலை                       தானமாக   வழங்கிய     மூத்த     பத்திரிகையாசிரியர்       பொன். ராஜகோபால்



ஒரு   நபர்    இறந்தவுடன்     பத்திரிகைகளில்     மரண    அறிவித்தல்   அல்லது நினைவு     அஞ்சலி   விளம்பரங்களில்   தவறாமல்    பதிவுசெய்யப்படுவது  அந்நபரின்   தோற்றம் - மறைவு    குறித்த   திகதிகள்தான்.
 இந்தத் திகதிகளைப்     பார்த்து     அவரின்     வாழ்நாளின்     தூரத்தை     அறிந்து கொள்கின்றோம்.     எத்தனை     ஆண்டுகள்     அவர்     எம்மத்தியில்    வாழ்ந்தார்    என்ற     தகவலையும்     தெரிந்துகொள்கின்றோம்.
ஆனால்இ     அந்த     நபர்    தமது     வாழ்நாளில் - என்ன   செய்தார்    எப்படி வாழ்ந்தார்    முதலான     விபரங்களை     அவருடன் நெருங்கிப்பழகியவர்களிடமிருந்துதான்     அறியமுடிகிறது.
அந்நபர்     இறந்தபின்னர்     எங்கே    இறுதிச்சடங்கு    நடக்கும்?   எங்கே தகனமாவார்?     அல்லது    எங்கே     அடக்கமாவார் ?  என்ற    தகவலும்   மரண அறிவித்தலில்     சொல்லப்பட்டுவிடும்.    ஆனால்   -    அவ்வாறெல்லாம் நிகழாமல்    மறைந்தவரின்     பூதவுடல்      மயானம்   செல்லாமல் மருத்துவக்கல்லூரிக்கு    -  அங்கு     மருத்துவம்    பயிலும்   மாணவர்களுக்காக   சென்றால்.....?


இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி

.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது விவசாயிகளின் ஏழ்மையும் பின் தங்கிய நிலையும், வானம் பார்த்த பூமியைப் பயிரிடும் அவலமும் இந்த ஆராய்ச்சிக்கு வெளியே உள்ளன என்றறிந்து ஆராய்சியையும் அரசுப் பணியையும் உதறினார்.
நோபல் பரிசு பெற்ற டோமினிக் பைர் என்னும் இயற்கை விஞ்ஞானியால் நிறுவப்பட்ட அமைதித் தீவு (Island of Peace) என்னும் நிறுவனத்தில் இணைந்து 10 ஆண்டுகள் பணி புரிந்தார். செயற்கை உரம் (ரசாயன உரம்) பயன்படுத்து விவசாயிகளுக்கு நட்டமும் மிகுந்த செலவுமே ஆகின்றன என்பதை இவர் கண்டறிந்தார். வினோபா பாவேவால் ஈர்க்கப் பட்ட இவர் 1979ல் குடும்பம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி இணைந்து காணும் முன்னேற்றம் என்னும் அடிப்படையில் விவசாயிகளுடன் இணைந்து உழைத்தார். உரம் இடும் தருணத்தில் கால் நடைகளை வயலிலேயே இரவு தங்க வைத்தார். இதனால் அவற்றின் கழிவுகள் மண்ணுடன் கலந்து இயற்கை உரமாயின. விவசாயிகளுடன் சேர்ந்து உழுவது களையெடுப்பது நாற்று நடுவது என்று எல்லாப் பணிகளும் செய்தார்.

இலங்கைச் செய்திகள்



 மட்டக்களப்பில் இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை

 ஓலைத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் 510 ஏக்கர் காணி தனி நபரால் அபகரிப்பு

80 இலட்சம் ரூபாய் செலவில்மூன்று வைத்திய பிரிவுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் திறந்து வைப்பு

 யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர்கள் 12 ஆவது நாளாக போராட்டம்

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் தோண்டும் பணி இன்று ஆரம்பம்


========================================================================

  மட்டக்களப்பில் இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை
23/12/2013     மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஆரை­யம்­பதி பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள இரு ஆல­யங்கள் உடைக்­கப்­பட்டு உண்­டி­யல்­க­ளி­லி­ருந்த பெருந்­தொகை பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக காத்­தான்­குடி பொலிசில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டு­ள்­ளது.இச்­சம்­பவம் நேற்று அதி­காலை இடம் பெற்­றி­ருக்­க­லா­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
300 வரு­டங்கள் பழைமை வாய்ந்த ஆரை­யம்­பதி வர­லாற்று பிர­சித்தி பெற்ற எள்­ளிச்­சேனை பிள்­ளையார் ஆலயம் மற்றும் 100 வரு­டங்கள் பழைமை வாய்ந்த ஸ்ரீ பேச்­சி­யம்மன் ஆலயம் என்­ப­னவே நேற்று அதி­காலை உடைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆலய பரி­பா­லன சபைத்­த­லைவர் பூபா­ல­சிங்கம் புஸ்­ப­ராசா தெரி­வித்தார்.
ஒவ்­வொரு வரு­டமும் ஆடி மாதத்தில் குறித்த ஆல­யங்­களின் திருக்­க­தவு திறத்­த­லுடன் வரு­டாந்த உற்­ச­வமும் நடை­பெறும் அக்­காலப் பகு­தியில் உண்­டியல் திறக்­கப்­பட்டு அதி­லுள்ள பணம் ஆலய நிர்­வா­கத்­திடம் சேர்க்­கப்­படும். இது பல இலட்சம் ரூபா­யாக இருக்கும். இவ்­வாறு பக்­தர்­களால் போடப்­பட்ட ஆறு மாதங்­க­ளுக்­கு­ரிய பணம் இரு கோயில் உண்­டி­யல்­க­ளி­லு­மி­ருந்து கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.

விஷ்ணுபுரம் விருது 2013 – செல்வேந்திரன் பதிவு

.

முந்தைய ஆண்டுகளை விட இந்த விழாவிற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று தெளிவத்தை ஜோசப் தமிழ் வாசகப் பரப்பு அதிகம் அறியாததோர் ஆளுமை. மேலதிகமாக இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் புலிகள் அல்லது ’சிங்கள காடையர்கள்’ ஆகிய இரண்டு தரப்பு மட்டுமே வசிக்கிறார்கள் என்பது நம்மவர்களின் மனப்பதிவு. இன்னொரு காரணம் எழுத்துரு விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஜெயமோகனை ஒரு கை பார்க்கவேண்டுமென சில ”திடீர் தமிழுணர்வாளர்கள்” விடுத்திருந்த அறைகூவல். எனவே முறையான காவல்துறை அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. விரிவாக விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது. இரண்டையும் கச்சிதமாகவே செய்து முடித்தோம். குறைந்த பட்சம் 400 பேர்களாவது விழாவிற்கு வரவழைப்பதை லட்சியமாகக் கொண்டிருந்தோம். ஆனால், அரங்கத்திலிருந்த 540 இருக்கைகள் போக மண்டபத்திற்கு வெளியேயும் சுமார் 100 பேர் வரை பார்வையாளர்கள் இருந்தனர். இந்த வெற்றி முழுக்க முழுக்க விஜயசூரியன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையே சேரும். அத்தனை உழைத்திருந்தனர்.
***

உலகச் செய்திகள்


தென் சூடானில் எண்ணெய் வளம் மிக்க பிரதான நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

பொலி­வி­யாவின் முதல் தொலைத்­தொ­டர்­பாடல் செய்­மதி

சிரி­யாவில் கார்க் குண்டுத் தாக்­குதல் 5 சிறு­வர்கள் உட்­பட 7 பேர் பலி

தென் சூடானில் எண்ணெய் வளம் மிக்க பிரதான நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

23/12/2013                      ''இராணுவத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் அந்நாட்டிற்கான அமெரிக்க மற்றும் சர்வதேச ஆதரவை முடிவுக்கு கொண்டுவர வழிவகை செய்யும்'' -–அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
தென் சூடானின் எண்ணெய் வளம்­மிக்க முக்­கிய மாநி­ல­மான யுனிட்­டி­யையும் நாட்டின் பெரும்­பா­லான பிர­தே­சங்­க­ளையும் கிளர்ச்­சி­யா­ளர்கள் கைப்­பற்­றி­யுள்­ள­தாக முன்னாள் உப ஜனாதி­பதி ரெயிக் மாசர் தெரி­வித்தார்.
அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போராடும் படை­யினர் தனது கட்­ட­ளையின் கீழேயே செயற்­ப­டு­வ­தாக மாசர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். மாசர் ஒரு வாரத்­துக்கு முன் அர­சாங்­கத்தை கவிழ்க்க சதிப் புரட்­சி­யொன்றை முன்­னெ­டுத்­த­தாக ஜனா­தி­பதி சல்வா கிர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ள நிலை­யி­லேயே மாசரின் மேற்­படி அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.
சிரியாவில் அர­சாங்கப் படை­யி­ன­ரு­ட­னான மோதல்கள் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு இதுவரை குறைந்­தது 500 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். தென் சூடானில் நிலவும் நெருக்­க­டியை களைய அர­சியல் வழி­மு­றை­யொன்றை கண்­ட­றிய அந்­நாட்டில் மோதல்­களில் ஈடு­பட்­டுள்ள இரு தரப்­பி­ன­ரையும் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் கோரி­யுள்ளார்.

மதயானைக் கூட்டம் – தமிழின் முக்கியமான படம்

.

Madha_Yaanai_Kootamசிறந்த தமிழ்த் திரைப்படங்கள் எவையுமே தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை என்பது நமது சாபம். அந்த சாபத்தைப் போக்கும் வகையில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வருவதுண்டு. விருமாண்டி, ஆடுகளம், வம்சம், சுப்ரமணியபுரம், காதல் போன்றவை. அந்த வகையில் இன்னொரு திரைப்படம், அதுவும் வம்சம், விருமாண்டி படங்களின் பலவீனங்கள் இல்லாமல் சிறப்பான ஒரு திரைப்படமாக ‘மதயானைக் கூட்டம்’ உருவாகியிருக்கிறது.
ஒருவனின் இரண்டு மனைவிகளுக்குள்ளான உணர்ச்சிகள், அவர்களின் வாரிசுகளுக்குள்ளே எழும் பிரச்சினைகளை மணி ரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ நகர்ப்புற எலைட்டுகளின் வாழ்க்கையை மையமாக வைத்துச் சொன்னது என்றால், மதயானைக் கூட்டம் அதே பிரச்சினைகளை கிராமத்தையும் ரத்தமும் சதையுமான மனிதர்களை முன்வைத்துப் பேசுகிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் செய்யத் தவறிய நுணுக்கங்களோடு.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே கதை தொடங்கிவிடுகிறது. கதையைச் சொல்லத் தொடங்கும் விதமும் அக்கதை மெல்ல நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விதமும் அழகு. திரையெங்கும் உண்மையான மனிதர்களை உலவவிட்டது போன்ற நடிகர்களின் கச்சிதமான தேர்வு, நடிப்பு. நல்ல பின்னணி இசை (ரகுநந்தன்). காட்சிக்கேற்ற பாடல்கள். மிகத் திறமையான பாடல் வரிகள் (ஏகாதசி). மனதை அள்ளும் ஒளிப்பதிவு. அதிலும் காட்சிகளின் மாறும் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறம் என எல்லாவற்றிலும் மதயானைக் கூட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது.

நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்



சத்யஜித்ரேயின்      சாருலதாவுடன்      போட்டியிட்ட     ஜெயகாந்தனின்        உன்னைப்போல்   ஒருவன்

இந்தியாவின்     ஆத்மாவை      யதார்த்தம்      சிதையாமல் இலக்கியப்படைப்புகளிலும்      திரையிலும்     காண்பித்த     கலைஞன்   ஜெயகாந்தன்.

முருகபூபதி




தமிழ்நாட்டிலிருந்து      சினிமாவுக்காகவே    வெளியான    பொம்மை  இதழில்     பலவருடங்களுக்கு       முன்னர்       ஒரு       சந்தர்ப்பத்தில்    அதன் கேள்வி - பதில்     பகுதியில்    இவ்வாறு    எழுதப்பட்டிருந்தது.
கேள்வி:      தமிழ்     சினிமாவுக்குள்      பிரவேசித்த      ஜெயகாந்தன்      ஏன் இப்பொழுது      அதிலிருந்து     ஒதுங்கிக்கொண்டார் ?
பதில்:      தமிழ்    சினிமா     எதிர்பார்ப்பதுபோல்      ஜெயகாந்தன்      இல்லை. ஜெயகாந்தன்      எதிர்பார்ப்பதுபோல்       தமிழ்     சினிமா     இல்லை.
இந்தத்தகவலை     உயிர்மை    இதழின்     நூறாவது      இதழில்  (டிசம்பர் 2011) திரையுலக    விமர்சகர்     தியோடர்     பாஸ்கரனின்    பின்வரும் கருத்துடன்     ஒப்பிட்டும்     பார்க்கலாம்.
 அவர்     சொல்கிறார்:
எழுத்தாளர்களை        நல்ல    முறையில்     ஒரு      சினிமா பயன்படுத்திக்கொள்ள      வேண்டுமென்றால்    இயக்குநர்களுக்கு    ஆழமான    இலக்கியப்பரிச்சயம்       தேவை.      எழுத்தாளர்களுக்கும் சினிமாவின்     தனி      இயல்புகள்     சாத்தியக்கூறுகள்   -    இவை   பற்றிய ஒரு     பிரக்ஞை     வேண்டும்.     அதுமட்டுமல்ல      திரையும்    எழுத்தும் தத்தம்    இயல்புகளில்    மிகவும்    வேறுபட்ட    ஊடகங்கள் என்பதையும்      உணர்ந்திருக்கவேண்டும்.      வங்காள    -    மலையாள சினிமாக்களில்      இத்தகைய     புரிதல்    இருபுறமும்   இருப்பதைக்காணலாம்.     அங்கிருந்து      வரும்  

பூனைக்கு மணி கட்ட மாட்டாங்க..

.

கடந்த ஆண்டு எனது இந்தியப் பயணத்தின் போது ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். பஃபே சிஸ்டம்தான், எனது தட்டத்தில் தேவையான அளவு மட்டும் குறைவாக எடுத்துக் கொண்டிருந்தேன். உடன் இருந்த நண்பர் இன்னமும் எடுத்துக் கொள்ளச் சொன்னார். இல்லையென்றால் இன்னொரு முறை வரிசையில் நிற்க வேண்டும் என்றார்.


அந்த பஃபேயில் பத்து வகையான இனிப்பு பண்டங்களாவது இருந்திருக்கும். பெரும்பாலும் எல்லோரும் பத்து வகை இனிப்பையும் தங்கள் தட்டத்தில் எடுத்திருந்தார்கள். இனிப்பு தவிர ஐஸ்கிரீம் உண்டு, நீங்கள் சொன்னது போலவே தண்ணீர் பாட்டிலும் உண்டு. அதைவிடவும் அந்தக் பஃபே கூட்டத்தில் இருந்த குழப்பத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே...

-கோபிநாத் வெங்கட்ராமன்

வணக்கம் கோபிநாத்,

ஒருவேளை நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இந்த படோபடங்கள் உங்களுக்கு ஆச்சரியமானதாக தெரியலாம். ஆனால் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. பஃபே சிஸ்டம் என்பது ஒரு விதத்தில் திருமண வீட்டாரின் தகுதியை வெளிக்காட்டும் உத்தி என்ற எண்ணம் மாறி இப்பொழுது அந்த முறை இல்லையென்றால் திருமணத்தை மட்டமாக பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மணமகன் அல்லது மணமகளுக்கு திருமணத்தில் முழு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ- அது பற்றிய கவலை இல்லையென்றாலும் பஃபே சிஸ்டம் பற்றிய கவலை நம்மவர்களுக்கு உண்டு.

சம்மணமிட்டு அமர்ந்து உண்டால் அளவோடுதான் உள்ளே போகுமாம். அந்த முறையை ஒதுக்கிவிட்டு ‘இப்போவெல்லாம் மூட்டுவலி சகஜமாகிடுச்சுல்ல’ என்று டைனிங் டேபிளில் அமரத் தொடங்கிய பிறகுதான் அளவுக்கு மிஞ்சி உள்ளே சென்று ஆயிரத்தெட்டு நோய்கள் நமக்கு. இப்பொழுது ‘டைம் இல்லை...’ என்று டேபிளையும் ஒதுக்கிவிட்டு கையில் ஏந்திக் கொள்கிறோம்.

தமிழ் சினிமா


பிரியாணி

கார்த்தி, பிரேம்ஜி இருவரும் சதா பார்ட்டி, பெண்கள் என ஜாலியாக வளம் வரும் வாலிபர்கள்.
என்னதான் கார்த்திக்கு ஹன்சிகா மாதிரி ஒரு செம லவ்வர் இருந்தாலும், தன் நண்பன் பிரேம்ஜி உஷார் செய்ய விரும்பும் பெண்களையும் விட்டுவைப்பதில்லை. எப்படியோ மடக்கி விடுகிறார்.
இப்படி குஷியாக போயிட்டிருந்த இவங்க வாழ்க்கைல, ஒரு நாள் பிரியாணியை சாப்பிடுவதற்கு ஆம்பூரில் அலைகிறார்கள். இவங்க தேடலுக்கு செம விருந்தா பிரியாணியோட சேர்த்து லெக் பீஸாக மேன்டி டக்கரும் சிக்குகிறார்.
கொஞ்ச நேரத்தில் இவங்க வலையில் சிக்கிய மேன்டி டக்கர் மாயமாகி விட, இன்னொரு பக்கம் போலீஸ் கார்த்தி, பிரேம்ஜியை வலை வீசி தேடி வருகிறது.
அப்புறம் என்ன, இந்த சிக்கலுக்கு காரணமான அந்த டேஸ்டி தம் பிரியாணியை சுடசுட இவங்களுக்கு பரிமாறிய மேன்டி டக்கர இவங்க கண்டுபிடிச்சு தங்கள காப்பாத்திக்கிட்டாங்களா என்பது காரசாரமான க்ளைமாக்ஸ்.
கார்த்தி தொடர் சரிவுக்கு பின்பு, இப்படத்தில் வித்யாசமான தோற்றத்தில் கவருகிறார். ஹன்சிகா பாட்டுக்கும், இடையில் கார்த்தியுடன் மோதி கொள்வதுக்கும் மட்டும் பயன்பட்டிருக்கிறார்.
பிரேம்ஜி தனது சில பன்ச் வசனங்களில் க்லேப் அடிக்க வைத்தாலும், நடிப்பில் தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்ன கொடுமை சார் இது...
மேலும் ராம்கி, நாசர், பிரேம், ஜெயப்ரகாஷ், மதுமிதா, நிதின் சத்யா, சுப்பு பஞ்சு, உமா ரியாஸ், சம்பத், ஷண்முகசுந்தரம், விஜயலக்ஷ்மி ஆகியோரின் நடிப்பு கதையின் தேவைகேற்ப தூவப்பட்டுள்ளது.
யுவனின் இசையில் இது 100வது படம் என்று டைட்டில் கார்டில் போடும்போது மட்டும் தான் தெரிகிறது. ஆனால், படத்தில் 'பே ஆப் பெங்கால், எதிர்த்து நில்' பாடல் மட்டுமே ஓரளவுக்கு ஈர்க்கிறது. பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவும், பிரவீன்-ஸ்ரீகாந்தின் கட்டிங்க்ஸும் செம சார்ப்.
வெங்கட் பிரபு படம்னாலே, பெரிய நட்சத்திர பட்டாளம்,குறிப்பாக 'மகா நடிகன்' பிரேம்ஜி, பின் இன்றைய இளசுகளுக்கு பிடிக்கும் வகையில் ரொம்ப ஜாலியான ஒரு கதைல மசாலாவ கொஞ்சம் தூக்கலா தடவித் தருவது வழக்கம். ஆனா, பிரியாணில கொஞ்சம் திட்டம் தெரியாம மசாலாவ தடவிட்டார்.
மொத்தத்தில் ஆம்பூர் பிரியாணியை தருவதாகக் கூறி, கடைசியில் அம்பத்தூர் பிரியாணியை பார்சல் செய்து கொடுத்து போங்காட்டம் ஆடியுள்ளனர்.
நடிகர்கள்: கார்த்தி, பிரேம்ஜி, ராம்கி, சம்பத், சுப்பு பஞ்சு, பிரேம், ஜெயப்ரகாஷ்
நடிகைகள்: ஹன்சிகா, மேன்டி டக்கர், மதுமிதா, உமா ரியாஸ், விஜயலக்ஷ்மி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: கே.ஈ.ஞானவேல்ராஜா


நன்றி விடுப்பு