மரண அறிவித்தல்

.                    
                                      டாக்டர் பொன்னையா பத்மநாதன் காலமானார்

                                             
                                                   மறைவு - 21.07.2014

PONNIAH - DR. PATHMANATHAN (Veterinary Surgeon of Chulipuram and Colombo). Beloved son of the late Ponniah and of the late Saupackiam, loving son-in-law of the late ‘Malaya’ Krishnar and of the late ‘Malaya’ Ponnammal (Tholpuram, Chulipuram),loving husband of Punithavathi, everloving father of Shanthan (Australia), Dileepan (India) and Aparna (USA), beloved father-in-law of Dharsini, Latha and Shyamalan, loving grandfather of Nivetha, Praveen, Janani, Bairavi, Suvetha and Harini, loving brother of the late Ramanathan, the late Poomani, Parasakthi (Kotahena), the late Annapooranam (Leela teacher), Jeevakanthi (Dehiwala), the late Buvanasingham and Nesaraja (Sudumalai), passed away on 21.07.2014. Remains will be kept for viewing at Jayaratne Parlour on 23.07.2014 from 8.00 a.m. Last rites will begin at 2.00 p.m. and cremation at Borella General Cemetery at 4.30 p.m. Contact: 0750887839.132450 

சங்க இலக்கியக் காட்சிகள் 16- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.


காட்சி 16

ஊடல் தணிப்பான் கூடிக் களிப்பான்!

அவனும் அவளும் கண்களால் கலந்துää காதலில் விழுந்து இல்லறத்தில் இணைந்து இன்பமாக வாழ்ந்து வந்தார்கள். சில வருடங்களில் அவன்-தலைவன்- தன் நிலை பிறழ்ந்து பரத்தையரின் உறவிலே நாட்டம் கொள்கின்றான். ஒருநாள் தன் வீட்டையும். மனைவியையும் பிரிந்து சென்ற தலைவன் நெடுநாட்களாகப் பரத்தையர் வீட்டிலே தங்கிவிடுகின்றான். பரத்தையர்களோடு கூடிக்களித்து இன்பமடைகின்றான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள் என்பதைப்போல சில நாட்களில் அவனுக்குப் பரத்தையரின் உறவு சலித்துவிடுகிறது. அவர்களிடம் கிடைக்கும் இன்பம் புளித்து விடுகிறது. அவர்களின் தொடர்பே 

பல்­துறை ஆளு­மைப்­பே­ராசான் சிவத்­தம்பி -இணு­வையூர் ஆ. இர­கு­பதி பால­ஸ்ரீ­தரன்

.


தமிழ்ப்­பே­ரா­சி­ரியர் தகைசார் ஓய்வு நிலைப் பேரா­சி­ரியர் வரு­கைப்­பே­ரா­சி­ரியர் முது­நிலை ஆய்­வாளர் கர­வையூர் தந்த கண்­மணி இலக்­கியம், விமர்­சனம், சமூக வர­லாறு, நாடகம், கவின்­கலை, அர­சியல் அனைத்­திலும் கரை­கண்ட பேராசான் கால­மாகும் வரை கொழும்புத் தமிழ்ச்­சங்­கத்தின் காப்­பாளர் என்­றெல்லாம் உல­கெங்கும் உள்ள தமிழ்­பேசும் மக்­களால் போற்­றிப்­பு­க­ழப்­பட்ட பல்­துறை ஆளுமைப் பேராசான் தமி­ழி­யலின் தலைமைப் பேரா­சி­ரியர் கார்த்­தி­கேசு சிவத்­தம்பி இன்று நம் மத்­தியில் இல்லை. அன்னார் மறைந்து மூன்று ஆண்­டுகள் ஓடி விட்­டன.
அன்னார் தமிழை நேசிக்கும் எங்கள் அனை­வ­ரி­ட­மி­ருந்தும் மனைவி ரூப­வதி, மகள்மார், மரு­மக்கள், பேரப்­பிள்­ளைகள் அனை­வ­ரி­ட­மி­ருந்தும் 06.07.2011 அன்று பிரிந்தார்.
யாழ்ப்­பாணம் கர­வெட்­டி­யிலே 10.05.1932 அன்று பண்­டிதர் கார்த்­தி­கேசு - வள்­ளி­யம்மை தம்­ப­தி­யருக்குப் புதல்­வ­ராகப் பிறந்தார் சிவத்­தம்பி. அவர் நட­ராஜா தம்­பி­யி­ன­ரது மகள் ரூப­வ­தியைத் திரு­மணம் செய்து மூன்று பெண் பிள்­ளை­க­ளுக்குத் தந்­தை­யாகி மகிழ்ந்தார்.

துயர் பகிர்வு அஞ்சலிக்குறிப்பு குவின்ஸ்லாந்து அன்பர் அமரர் பரமநாதன்

.
                                            

கடந்த  மார்ச்  மாதம்  22  ஆம்  திகதி  குவின்ஸ்லாந்தில்  எமது அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தினரும்  பிரிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளியில்   இயங்கும்   இலக்கிய    அன்பர்களும்  இணைந்து கலை -   இலக்கிய   சந்திப்பு    நிகழ்வை  நடத்தினர்.
நிகழ்ச்சி  நடக்கவிருந்த    பிரிஸ்பேர்ண்     Centenary  Community  Hub           மண்டபத்திற்கு     நானும்   மனைவியும்  காலை  10   மணிக்குள்   வந்து சேர்ந்துவிட்டோம்.
மண்டபத்தின்   முன்றலில்    வேறு   எவரையும்    காணவில்லை.    தவறான முகவரிக்கு     வந்துவிட்டோமோ...?   என    யோசித்துக்கொண்டிருக்கையில் எமக்கு   அருகில்   வந்து  நின்ற    காரிலிருந்து    இறங்கிய    ஒரு    தமிழ்   அன்பர் மிகவும்   சிநேகபாவத்துடன்   -    என்ன   யோசிக்கிறீர்கள்...?    ஊருக்கு புதுமுகமாக  காட்சியளிக்கிறீர்கள்.   நிகழ்ச்சிக்கு    வந்திருக்கிறீர்களா...?   எங்கட   ஆட்கள்    இப்படித்தான்   உரிய    நேரத்துக்கு    வரமாட்டார்கள். எனது   பெயர்    பரமநாதன்.    நீங்கள்...    உங்கள்   பெயர்...?   என்று உரிமையுடன்    கேட்டார்.   
அறிமுகமாகிக்கொண்டோம்.

மெல்பனில் ஐந்து அரங்குகளில் கலை - இலக்கியம் 2014 விழா

          
                       
தனிநாயகம்  அடிகள்  நினைவரங்கு -  இலக்கிய  கருத்தரங்கு  - நூல் விமர்சன அரங்கு -  இசையரங்கு -   நடன அரங்கு

      

                                                                                                                           அவுஸ்திரேலியாவில்   கடந்தபல   வருடங்களாக  தமிழ்   எழுத்தாளர்    விழாவையும்   கலை  -  இலக்கிய   சந்திப்புகள்   மற்றும் அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சிகளையும்   நடத்திவரும்     அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய   கலைச்சங்கம்   விக்ரோரியா    மாநிலத்தில்   பதிவுசெய்யப்பட்ட   அமைப்பாக    இயங்கிவருகிறது.
இச்சங்கத்தின்   வெளியீடுகளாக   சில  நூல்களும் வெளியாகியுள்ளன.
அறிந்ததை  பகிர்தல்  அறியாததை    அறிந்துகொள்ள   முயலுதல்  என்ற   அடிப்படைச்சிந்தனையுடன்  வருடாந்த    விழாக்களில்   நூல் வெளியீட்டு  விமர்சன   அரங்குகளையும்   இச்சங்கம்   நடத்திவருகிறது.

நினைவுகள் இனிமை: துயரங்கள் நிறைந்த தருணங்களுடன் – தி.திருநந்தகுமார்


அமிர்தலிங்கத்தின் தங்குமடம்……


தமிழர் அரசியல் வரலாற்றில் எழுபதாம் ஆண்டுப் பொதுத்தேர்தலும் அதற்குப் பிந்திய காலமும் முக்கியமானவை. அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்ட தங்குமடச் சித்தாந்தத்தை விளங்கிக்கொள்வதற்கு முன்னால் மேற்சொன்ன காலத்து அரசியல் சம்பவங்களை மீட்டுப்பார்த்தல் அவசியமாகிறது. அந்தப் பொதுத்தேர்தல் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அமிர்தலிங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேசிய அளவில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி என்பன ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. யாழ்ப்பாணத்தில் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த கட்சிகளும் போட்டியிட்டன.
இணுவிலில் நடைபெற்ற அத்தனை தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் முன்வரிசையில் இருந்து பார்த்திருக்கிறேன்.  எனது கிராமம் அடங்கிய உடுவில் தொகுதியில் தமிழரசுக் கட்சியில் வி. தர்மலிங்கம், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் சிவனேசன், சமசமாசக் கட்சி சார்பில் செனட்டர் நாகலிங்கம் மற்றும் சுயேட்சையாக கு. வினோதன் ஆகியோர் போட்டியிட்டவர்களில் முக்கியமானவர்கள்.  எனது அப்பாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் தீவிர தமிழ்க் காங்கிரஸ்காரர்கள்.  ஜி.ஜி. பொன்னம்பலமும் சைக்கிள் சின்னமும் தவிர வெறு எதனையும் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். எனது பெரிய தந்தையின் சுருட்டுக்கொட்டிலில் அரசியல் ஆய்வரங்குகள் தினமும் நடந்தன. எல்லாமே தமிழரசுக்கட்சி மீது கடுமையான விமர்சனத்திலேயே முடிவடைவதுண்டு.  எனது நண்பன் சண்முகப்பிரபுவின் தந்தை எனக்கு மைத்துனர். அவர் சமசமாசக் கட்சிக்கு கடுமையாக உழைக்கும் செயற்பாட்டாளர். சமசமாசக் கட்சிப் பிரசுரங்கள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள் என்பவற்றை சண்முகப்பிரபு எனக்கு இடைவிடாது போதிப்பதுண்டு. 

அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு

கம்பனின் உவமைகள் 13 - அயோத்தி மக்களின் கல்விச்சிறப்பு
கம்பனின் உவமைகளில் சில துளிகள் – 13

 
    - அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகர் வாழ் மங்கையரின் சிறப்பைக் கூறிய கம்பனிடம், அங்குள்ள மங்கையர் மட்டும்தான் சிறப்புடையவர்களா கம்ப நாடரே என்று கேட்டேன். அதற்குக் கம்பன், அயோத்தி வாழ் மக்கள் அனைவரும் சிறப்பு வாய்ந்தவர்கள்தான். ஏன், அம்மாநகரமும்கூடச் சிறப்பு வாய்ந்ததுதான் என்று விளக்கினான். கம்பன் என்ன சொன்னான் என்று கேளுங்களேன்.



அயோத்தி மாநகர், ஒரு விதை முளைத்துப் பூமியிலிருந்து மேலே எழுந்து வருவதைப்போல, கல்வியில் மேலோங்கி வளர்ந்து இருந்ததாம். மரத்தில் வலிமையான கிளைகள் வளர்ந்து பரவுவதுபோல மக்களிடம் எண்ணற்ற நூல்களின் கேள்வி அறிவு பெருகி வளர்ந்ததாம்.  அந்தக் கிளைகளில் இலைகள் தழைத்து வளருவதைப்போல கல்வியின் பயனால் மக்களிடம் நல்ல குணங்கள் நிறைந்து இருந்தனவாம். அவ்வாறு வளருகின்ற மரக்கிளைகளில் அரும்புகள் அரும்புவதுபோல எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் குணம் அயோத்தி மக்களிடம் அதிகமாகக் காணப்பட்டதாம். அந்த அரும்புகள் மலர்வதுபோல், அயோத்தியில் அறச்செயல்கள் பெருக ஆரப்பித்தனவாம். அச்சிறப்புகள் அனைத்தும் அங்கே இருந்ததால், பழங்கள் பழுத்து செழிப்பதாப்போல அயோத்தி மக்களிடம் போகம் என்னும் இன்ப அனுபவம் பெருகி, அயோத்தி நகர் ஒரு பழுத்த மரத்தைப்போல சிறந்து விளங்கியது என்று கம்பன் விளக்கிக் கூறினான்.

கம்பனின் அந்தப் பாடல்:

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

        (பாலகாண்டம், நகரப் படலம் பாடல் 75, நூல்பாடல் - 168)

(ஏகம் முதல் – ஒரு வித்து; பணை – கிளை; சாகம் – இலைகள்; போகம் – இன்பம், நில அனுபவம்)

இந்தப் பாடலில் கம்பன் கல்வியை ஒரு விதைக்கும், கேள்வி அறிவைக் கிளைகளுக்கும், நல்ல குணங்களை இலைகளுக்கும், அன்பை அரும்புக்கும், அறச்செயல்களை மலருக்கும், இன்ப அனுபவத்தைப் பழத்துக்கும் ஒப்பிட்டுக் கூறுகின்றான்.

கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள் - - அருண் பாலாஜி

ஆயிரமாவது பிறை காணும் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'மூன்றாம் பிறை' நாயகன் பற்றிச் சில சுவையான தகவல்கள்:

  • தமிழ்த் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.
  • நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன்! களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காகத் தேசிய விருதுகள் பெற்றார். விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள், சிறந்த படத்திற்கான விருதுகள் வென்றார்.
  • இதுவரை, இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள்தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன!
  • இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர்! திலீப்குமாரே 14 பிலிம்பேர் விருதுகள்தாம் பெற்றிருக்கிறார்.
  • கலைச்சேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் 'முனைவர்' பட்டம் அளிக்கப்பட்டவர்.
  • இவரது 'ராஜ்கமல் இண்டர்நேஷனல்' திரைநிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேல் வணிகம் செய்திருக்கிறது.
  • இவரது கனவுப் படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாராணி எலிசபெத்-2 அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • தன் ரசிகர் மன்றங்களை மக்களுக்குச் சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய நடிகர்!
  • கமல்ஹாசனும் அவரது நற்பணி இயக்கத்தினரும் சேர்ந்து இதுவரை 10,000 ஜோடி கண்களைத் தானம் செய்திருக்கிறார்கள். 10,000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
  • 100 கோடி ரூபாய் தருகிறோம் என அரசியல் கட்சி ஒன்று அழைத்தும் அதைத் துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.
  • இரண்டுமுறை ஆந்திர அரசின் விருதுகள் பெற்றவர்.
  • 8 முறை தமிழக அரசின் விருதுகள் பெற்றவர்.
  • இவருக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் காதல் இளவரசன் - ஜெமினி கணேசன், புரட்சி மன்னன் - கே.பாலசந்தர், சூப்பர் ஆக்டர் - பஞ்சு அருணாசலம், கலைஞானி - கலைஞர்.கருணாநிதி, உலக நாயகன் - கே.எஸ்.ரவிக்குமார்.

உலகச் செய்திகள்


காஸாவிலுள்ள பாதுகாப்பு தலைமையகங்கள் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் மோதல் 

ஆப்கான் சந்தையில் கார் குண்டு தாக்குதல்; 89பேர் பலி; 40 பேர் காயம்   

காஸாவிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கைக்கு இஸ்ரேல் இணக்கம்

லிபிய சர்வதேச விமானநிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் : ஒருவர் பலி, 6 பேர் காயம்; 12 விமானங்களுக்கு சேதம்

காஸாவிலுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்­ச­ரிக்­கை

மலேசிய விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் 295 பேர் பரிதாபகரமாக பலி

சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 விமானத்தின் பின்னால் பயணித்த மோடியின் விமானம்   
================================================================

ஊக்குவிப்பு போட்டிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி ஜூலை மாதம் 28ம் திகதி

.
பல பெற்றோர்களினதும் மாணவர்களினதும் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் ஊக்குவிப்பு  போட்டிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி ஜூலை மாதம் 28ம் திகதிவரை நீடிக்கபட்டிள்ளது.  விண்ணப்பபடிவங்களை  எமது இணையத்தளத்திலிருந்து (www.tamilcompetition.org/Information.php) பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பபடிவங்களை தமிழ் பாடசாலைகளில் உள்ள எமது உறுப்பினர்களிடம்  அல்லது பாடசாலை நிர்வாகக்குளிவினரிடம் கையளிக்குமாறு  வேண்டிக்கொள்கின்றோம்.
அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்

இலங்கைச் செய்திகள்


கடும் காற்று காரணமாக 1,215 பேர் பாதிப்பு

யாழ்.நீதி­மன்ற எல்­லைக்குள் ஆர்ப்­பாட்டம் நடத்த தடை

இலங்கை வருகிறார் இந்திய விமானப்படைத் தளபதி

யுத்த குற்றம் தொடர்பான விசாரணை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு





V Productions (Australia) - Q -Short film

.



தமிழ் சினிமா


அரிமாநம்பி !




கும்கி படம் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபுவுக்கு மற்றொரு மைல் கல்லாய் அமைந்திருக்கிறது அரிமா நம்பி. ஆக்சன் படங்களுக்கென வைத்திருக்கும் சில நியதிகளை அப்படியே பின்பற்றாமல் படத்திற்கு தேவையான ஆக்சனை மட்டும் கையிலெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆனந்த் சங்கர். இவர் ஏ.ஆர் முருகதாஸின் சிறந்த உதவி இயக்குனராம். 

கதை என்ன?

ஒரு மதுபான விடுதியில் வைத்து ப்ரியா ஆனந்தை பார்க்கிறார் விக்ரம் பிரபு. இருவருக்கும் இடையில் காதல் பற்றிக்கொள்கிறது. மறுநாளே டின்னருக்கு ப்ரியா ஆனந்தை அழைக்கிறார் விக்ரம். இருவரும் மது அருந்தி போதையில் இருக்கும் போது மர்ம நபர்கள் இருவரால் கடத்தப்படுகிறார்.விக்ரம் பிரபுவால் அவர்களைத் துரத்தியும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. போலீசிடம் புகார் கொடுத்து அவர்களுடன் திரும்பவும் வந்து பிரியா வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் அப்படி எதுவுமே நடக்காதது போல் அவர் வீடு அமைதியாக இருக்கிறது.ஏதோ, சந்தேகம் வந்து விக்ரம் பிரபு, பிரியா ஆனந்தின் அப்பா இருக்குமிடத்திற்குச் செல்ல, அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தொடர்ந்து சில கொலைகள் நடக்க, பிரியா ஆனந்தைத் தேடிப் புறப்படுகிறார் விக்ரம் பிரபு. அவர் பிரியாவைக் கண்டுபிடித்தாரா, அவரை ஏன் கடத்தினார்கள் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.என்ன இவன் வேற மாதிரி படத்தின் கதையை சொல்வது போல் உள்ளதா?, கிட்டத்தட்ட அதே கதை தான். ஆனால் அந்த படத்தை காட்டிலும் இதில் திரைக்கதை சூடு பறக்கிறது. விக்ரம் பிரபுவிற்கும், ப்ரியா ஆனந்திற்கும் காதல் காட்சிகள் குறைவு என்றாலும், கிளைமேக்ஸ் அந்த குறையை போக்குகிறது. 

பலம்

படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதை தான், அதை நேர்த்தியாக அமைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். ட்ரம்ஸ் சிவமணி பின்னணி இசையில் மிரட்டி எடுத்திருக்கிறார். எல்லோரையும் விட ராஜசேகரின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் உள்ளது. 

பலவீனம்

லாஜிக், லாஜிக், லாஜிக் மட்டும் தான். எந்த இடத்திலும் கொஞ்சம் கூட லாஜிக் பார்க்காமலேயே எடுத்திருக்கிறார்கள். பிரியா ஆனந்த் அப்பாவின் சேனல் அலுவலகத்திற்குள் அவ்வளவு கெடுபிடிகளுக்கிடையில் விக்ரம் பிரபு நுழைந்து, எம்டி கேபினில் சுலபமாக நுழைகிறார். அந்த இடத்தில் செய்யும் காமெடிக்கு அளவேயில்லை பெரிய லாஜிக் ஓட்டை.ஆனால் இதுபோன்ற லாஜிக் விஷயங்களையெல்லாம் தவிர்த்து பார்த்தால், கண்டிப்பாக இந்த படம் நம்மை திருப்திப்படுத்தும்.மொத்தத்தில் ’விட்ட இடத்தை பிடித்துவிட்டார் விக்ரம் பிரபு’ 





நன்றி  cineulagam