உலகச் செய்திகள்

.
தாய்லாந்து பொதுத் தேர்தல் : தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி மகத்தான வெற்றி! _


4/7/2011

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தில் இடம்பெற்ற தேர்தலில் அதன் எதிர்க்கட்சி வெற்றியீட்டியது. நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவட்ராவின் சகோதரி கடும் போட்டிக்கு மத்தியில், நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.

உணவுடன் ஒன்று கூடல் என்பார்வையில் - பகீரதன்


04/07/2011



நினைவுகளின் சிதறல்களே வாழ்வின் நம்பிக்கைகளாக.....கவிதை

.
                                                                                                               செ.பாஸ்கரன்


மூடாத விழிகள்
உயிரற்ர ஓவியம்
பழுப்பிலையின் மஞ்சள்
தூரத்தே தெரியும் வானம்
இவையில் என் மனம் லயிக்கும்

அதிகாலை பறவைகளின் ஆரவாரம்
போர்வையின் விலகல்
மெல்லிய குளிரின் உரசல்
ஒலிக்கும் மனைவியின் பாதக்கொலுசு
சுகமான நெஞ்சின் பதிவுகள்


புதிய வார்த்தை - அ.முத்துலிங்கம்

.

எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது.

காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவை தள்ளுகிறான்  இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்கிறான். துங்குபவர்களில் ஒருவர் சிவத்தம்பி, மற்றவர் அவருடைய அறைவாசி. இருவரையும் இளைஞன் உற்றுப் பார்த்தபடி காத்திருக்கிறான். கையை நீட்டி, முறித்து, உறுமி கண்விழிக்கிறார் சிவத்தம்பி. என்னைப் பார்த்ததும் சிரித்து எழும்பி பேசத் தொடங்குகிறார். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார். முழுக்க முழுக்க இலக்கியம்தான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அப்படிச் சென்று அதிகாலை உட்கார்ந்திருந்ததற்கு காரணம் இருக்கிறது. காலையில் சிவத்தம்பி யாரை முதலில் சந்திக்கிறாரோ அதன்படியே அன்றைய நாளின் திட்டம் உருவாகும். அன்றைய நாளை நான் கைப்பற்றி விடுகிறேன். நாங்கள் இருவரும் பக்கத்திலே இருக்கும் காந்தி லொட்ஜிற்கு காலை உணவு சாப்பிட நடந்து போகிறோம். வழக்கம்போல சாப்பாட்டுக்கான பணத்தை சிவத்தம்பியே கட்டுகிறார்.

சீதா கல்யாணம் / பிரகலாத சரித்திரம் - ஹரிகதா - வழங்குபவர் – விசாகா ஹரி


சொந்தக்குரல் - சிறுகதை

.

அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள்
என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது.
இல்லாத எதைஎதையோ பற்றிக் கொண்டு தான் முதுமையில் வாழவேண்டியிருக்கும் போலிருக்கிறது, இருட்டில் தடுமாறி விழுந்து அடிபட்டுவிட்ட அம்மாவை மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.. இரவில் அம்மாவோடு நான் துணைக்கு இருந்தேன். அம்மாவிற்கு வயது எழுபத்திமூன்றைக் கடந்துவிட்டிருக்கிறது.
சமீபமாக அம்மா மின்சார விளக்குகளைப் போட்டுக் கொள்ளாமல் இருட்டிலே நடக்கப் பழகியிருந்தாள். எவ்வளவோ முறை அப்படிச் செய்யாதே என்று நான் திட்டிய போதும். இருட்டு பழகிப்போச்சுடா சோமா. இருட்டை என்ன இன்னைக்கு நேத்தா பாக்குகிறேன். இருட்டு பழக ஆரம்பிச்சி எழுபது வருசம் போயிருச்சி. இன்னும் என்ன பயம் என்பாள்
இல்லைம்மா. பயத்திற்காக சொல்லவில்லை. நீ கிழே விழுந்து வைத்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்பேன்.
விழுந்தா, போய்ச் சேர வேண்டியது தான். என் மனசில இருக்கிற ப்ரகாசம் எல்லாம் அணைச்சி போய் பல வருசமாகிருச்சிடா. இப்போ நான் வெறும் உடம்பு தான் என்றபடியே இருட்டிற்குள் நடந்து போய்க் கொண்டிருப்பாள்.
அப்படி தான் விழுந்து அடிபட்டுக் கொண்டாள்

ஆளுமையும் ஆற்றலும் மிக்க மக்கள் பணியாளன்; பேராசிரியர் சிவத்தம்பி

.
                                                                                                                  முருகபூபதி

நவீன தமிழ் இலக்கிய விமர்சனத்தை நெறிப்படுத்தியவர்களின் வரிசையில் இடம்பெற்ற பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் கடந்த 6 ஆம் திகதி புதன் கிழமை இரவு இலங்கையில் கொழும்பில் காலமானார் என்ற தகவல் தமிழ் இலக்கிய உலகிற்கு மிகுந்த கவலையை தருகிறது.
சிவத்தம்பி கரவெட்டியில் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். நீண்டகாலமாக பல்வேறு உடல் உபாதைகளுடன் போராடினாலும் அவரது சிந்தனைகள் மிகவும் கூர்மையுடன் பதிவாகிக்கொண்டிருந்தன. அந்திம காலத்தில் கண்பார்வை குறைந்தபோதிலும் எதுவித தடுமாற்றங்களும் இன்றி தனது கருத்துக்களை தெளிவாகச்சொல்லி மற்றவர்களைக்கொண்டு எழுத்தில் பதியவைத்தார். அந்தவகையில் அவரது சுறுசுறுப்பான இயக்கம் அனைவருக்கும் முன்னுதாரணமானது.


கண்ணகி வழிபாடு - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
வைகாசித் திங்கள் கண்ணகி கோயில் உள்ள ஊர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு மாதம். வைகாசிப் பூரணையையொட்டிய எட்டுப் பத்து நாட்கள் அந்த ஊர்களெல்லாம் விழாக்கோலம் பூணும். ஆம்மன் கோயிலில் திருவிழா. ஊரிலே பெருவிழா. மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி உலா.

கிழக்கிலங்கையில் சிறப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணகிவழிபாடு மிகவும் பிரசித்திவாய்ந்ததும், பக்திமயமானதுமான வழிபாடாகக் காலம்காலமாக நிலவிவருகின்றது. அந்த வழிபாட்டு முறைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதைச் சொல்வதற்கு முன்னர், கண்ணகி வழிபாடு தொன்றிய வரலாறு பற்றிச் சிலவிபரங்களைத் தருவது இங்கு பொருத்தமெனப் படுகின்றது.

வழிபாடு தோன்றிய வரலாறு

இலங்கை , இந்திய செய்திகள்

.
 இந்தியாவில் திரையிடப்படவிருக்கும் சனல்4 ஒளிப் பதிவுக் காட்சி

4/7/2011
இந்திய தஞ்சை மாவட்ட திலகா திடலில் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளையொட்டி சுடரேந்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை தமிழர் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனியஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. ராசேந்திரன், தமிழர் தேசிய பேரவை தலைவர் துரை குபேந்திரன், அறிவியல் பேரவை தலைவர் பேராசிரியர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து உத்திராபதி, உடல் உழைப்பு சங்க பொதுச் செயலாளர் வெ. சேவையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனியஸ் கட்சி நகர செயலாளர் ராசேந்திரன், மக்கள் விடுதலை கட்சி மாநிலக்குழு உறுப்பினர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உன்னையே மயல் கொண்டு- பாகம் 7

 .

ய்வுக்குத் தேவையான புத்தகம் ஒன்றைப் பேராசிரியர் பாமரின் அறையில்இருந்து எடுத்துவரச்சென்ற சந்திரன் போராசிரியர் சிண்டியிடம்பேசிக்கொண்டிருப்பதை கண்டு திருப்ப எத்தனித்ததும்சந்திரனை “கம் இன்என்ற வழக்கமான பாணியில் கேட்டு சுகம் விசாரித்தார் பேராசிரியர் பாமர். “சந்திரன் இவ்வளவு காலமும் நீ பெற்ற தரவுகளை கட்டுரையாக்கிக்கொண்டுவாஅதை நான் மைக்கிரோ பாயலாஜி மகசினுக்கு அனுப்பவேண்டும்அடுத்த ஆய்வுக்கு பணம் பெற இது உதவும்உனக்கு இரண்டுமாதம் தருகிறேன் என்றார்.” நன்றி கூறிவிட்டு வெளியேறிய சந்திரனை சிண்டிபின்தொடர்ந்து “ஏன் சந்திரன் முகம் நல்லாவில்லையே நீ டல்லாகஇருக்கிறாய்” எனத் துருவினாள்.

காவிரி ஆறும் கைகுத்து அரிசியும் வெள்ளையர் கையில்

.
பாடலைக் கேட்டுப்பாருங்கள்


மறந்து போனதோ -கவிதை --ஆவூரான்

.
மறந்து போகுமோ
மண்ணின் ஞாபகம்
புலம்பெயர்ந்து, பெயர்ந்து
பெயர்ந்து,போனதால்

பாடித்திரியும்
பச்சைக்கிளியே-உன்
கூடு இன்னும்
இருக்கிறதா-உன்
குஞ்சுகள் இன்னும்
வாழ்கிறதா
முற்றத்து பனைமரமே-நீ

அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம்-அவுஸ்திரேலியா அஞ்சலி

.
அனைத்துலகும் போற்றிய அறிஞர் பெருமகன்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இயற்கை எய்திய செய்தி உலகத்தமிழர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டு அறிஞர்களும் தலைவணங்கி மதித்த தமிழ் அறிஞர், ஆய்வாளர், பன்மொழிப் புலவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

பதினேழு வருடங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், கேம்பிறிஜ் பல்கலைக்கழகம், அமெரிக்க பேக்லி பல்கலைக்கழகம், ஹோவாட் பல்கலைக்கழகம், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் முதலிய உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை ஆற்றியுள்ளார். எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அவர் இருநூற்றுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளை அனைத்துலக மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
அடிப்படையில் மார்க்ஸிசச் சிந்தனையாளரான பேராசிரியர் தமிழ்ச் சமூகத்தின் சீர்திருத்தத்திற்கான கருத்துக்களையும், தமிழ்த் தேசியத்திற்கான சிந்தனைகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் எழுதியும் பேசியும் வந்தவர்.

குமார் சங்கக்கார மீது விசாரணைக்கு உத்தரவு


6/7/2011

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் அலுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.

வடமேற்கு லண்டனில் உள்ள Marylebone Cricket Club அழைப்பின் பெயரில், 'வீட்டில் கிரிக்கெட்' எனும் தலைப்பில் குமார் சங்க கார உரை நிகழ்த்தினார். இதன் போது இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாகவும், தவறாக பயன்படுத்தப்படும் நிதி என்பதால் நட்சத்திர வீரர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும், வீரர்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் மற்றும் அவநம்பிக்கையை தூண்டிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தாயக உறவுகளுக்காக நீதியை நாடி நிற்கும் ஒஸ்ரேலிய ஈழத்தமிழர்கள்

.
ஈழத்தமிழினத்தை அழிக்கும் நோக்கோடு வரலாறு காணாத படுகொலைப்படலத்தை அரங்கேற்றிய - இனவாத - சிங்களக்கொடுங்கோலரசின் முகத்திரயை, அனைத்துலக அரங்கில் தோலுரித்துக் காண்பித்த "சனல் - 4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற பெட்டக நிகழ்ச்சியை, கடந்த 4 ஆம் திகதி மீள் ஒளிபரப்பு செய்தமைக்காக ஏ.பி.ஸி. தொலைக்காட்சிச்சேவைக்கு ஒஸ்ரேலியத்தமிழர்கள் சார்பில் எமது உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்து கொள்கின்றோம்.

மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப்பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து , சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் குற்றவாளியாக நின்றுகொண்டிருக்கும் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை மூடி மறைக்கும் பொருட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

யுத்த குற்றங்கள் தொடர்பான மீள் விசாரணைக்கு ஆஸி. கோரிக்கை



[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011]

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான கொடூரங்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஆச்சர்யப்பட வைப்பதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சியொன்று இலங்கை மக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படமொன்றை ஒளிபரப்பு செய்துள்ளது.

அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர்!!

.
அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள்.
இனிப்பாகவும்
கசப்பாகவும்
புதுசாகவும்
பழமை குறையாமலும்
வாழ்வின் முதல் படியிலிருந்து
கடைசிப் படி வரையிலும்
அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள்.


அவர்களை உறவென்று
சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில்
சிநேகமாய் ஒரு பூவும் -
மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!!
----------------------------------------------------------------

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

.
பாகம் 6

வளர்ச்சி:

ஒருவனது ஆன்மிக வளர்ச்சிக்கு அவனது ஒழுக்கம் மேம்பட்டதாக இருக்கவேண்டும். கண்வமகரிஷி, தனது ஆசிரமத்தில் தங்கியிருப்பவாகளுக்குக் கல்வியளிக்க ஒரு குருகுலத்தை நிறுவினார். சகுந்தலையைச் சந்தித்து மனைவியாக ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு பரதன் என ஒரு மகன் பிறந்தான். கணவரின் ஆசிரமத்தில் பிறந்து வளர்க்கப்பட்டதால் அவன் அனைத்து நற்குணங்களும் நிரம்பபெற்றவனாக இருந்தான். தனது சின்னஞ்சிறு வயதிலிருந்தே நல்ல முறையில் கல்வி பெற்று ஆன்மீகமான, நேர்மையும் ஒழுக்கமும் நிறைந்த குணநலன்கள் வாய்த்தவனாகத் திகழ்வான். ஆனால் தந்தை துஷ்யந்தனோ உலகியல் சுகங்களையே பெரிதாக எண்ணினான். ஆசிரம வாழ்க்கையும், கல்வி முறையும் பரதனை அனைத்து நற்குணங்களுக்கும் சிகரமாக உயர்த்திற்று. ஆனால் துஷ்யந்தனிடம் உலகியல் செல்வங்கள் அனைத்தும் ஒரு சேரக் குவிந்திருந்தது. அவன் வலிமைமிக்க அரசன். இத்தனையிருந்தும் நற்குணம் இல்லையெனில் என்ன பயன்? இதனை ஆசிரமக் கல்வி முறைக்கும், நகரத்துக் கல்வி முறைக்கும் எடுத்துக்காட்டாய் வைத்துக் கொள்ளலாம். நகரக்கல்வி முறை சிரமத்துடன் (கஷ்டங்கள்) கூடியது. ஆசிரமக்கல்வி முறை ஆசிரமத்துடன் (கஷ்டங்கள் அற்ற) கூடியது. நகரத்தின் கல்லு}ரிகளில் மாணவாகளாகச் சேர்ந்து படிப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் மாணவன் கல்வியின் நோக்கத்தைச் சரியான முறையில் கொள்ள வேண்டும். தேவையற்ற உறவுகளை ஏற்படுத்தி கொண்டு பாதைமாறிச் செல்லக் கூடாது. உன்னை சுற்றியிருக்கும் சுற்றுச் சூழலை வைத்தே உங்களது குணமும் அமைகிறது. முந்தைய நாட்களில் மக்கள்:

தமிழ் சினிமா

உதயன்

ஒரு கொலைக்கு காரணமானவனை தேடும் தேடுதல் வேட்டை தான் கதை.

மதுரையில் பெரிய தாதாவாக விளங்கும் ஆசிஷ் வித்யார்த்தின் வீட்டில் ஒரு கொலை நடந்து விடுகிறது. அந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ஆசிஷ் வித்யார்த்தின் கும்பலை சேர்ந்தவர்கள் ஊர் ஊராக தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள்.

ஆசிஷ் வித்யார்த்தின் கும்பலானது ஒவ்வொரு ஊரிலிருக்கும் முக்கிய ரவுடிகளிடமும், தன் வீட்டில் நடந்த கொலைக்கு யார் காரணம் என்று மிரட்டுகிறார்கள். அனைவரும் பயத்தில் தான் இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இறுதியாக அப்பு என்ற ரவுடி தான் அதற்கு காரணம் என்று கண்டு பிடித்து சென்னையை வந்தடைகிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் வசந்தாக அருள்நிதி, அறிமுக நாயகியாக பிரணிதா (பிரியா) என்ற கதாபாத்திரத்தில் இணைய தள அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.