மண்ணின் மைந்தர்கள்





நீங்கள் வீழ்ந்ததனால்
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
உங்கள் உடல்கள் சாய்ந்ததனால் எங்கள் தலைகள் நிமிர்ந்தன
இன்று
நாங்கள் வெறும் கவிதை பாடிக்கொண்டிருக்கிறோம்
நீங்களோ காவியமாகிவிட்டீர்கள் --
காலம் வரும்
உங்கள் கனவுகள்
நனவாகும் -----

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இந்த நினைவு நாளில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் அனைத்து போராளிகளுக்காகவும் இக்கவிதையை சமர்ப்பிக்கிறோம். Tamilnation.org இல் படித்ததை ஒரு வாசகர் எமக்கு அனுப்பிருந்தார். அந்த வாசகருக்கு எமது நன்றிகள்.


மே மாதம் 18ம் திகதி அவுஸ்திரேலியாவில் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள்


.
இலங்கைத்தீவில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்வையும், அவர்தம் வளத்தையும் அழிக்கும் நோக்குடன் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட கொடிய போரின் நினைவுகள் எவராலும் மறக்கமுடியாதவையாகும்.

தமிழ் மக்களின் இருப்பை அழித்து, விடுதலை வேண்டிநின்ற மக்களின் விருப்புக்களை, தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மூலம் மௌனமாக்கி, அதன்மூலம் தமிழினத்தின் உணர்வுகளை அடக்கிவிட்டதாக சிறிலங்கா அரசு நினைக்கின்றது.





அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உதவி


.


 02.05.2011 அன்று காலை வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ்வித்தியாலயத்தில் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால்வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் வைபவம் நடைபெற்றது.
வைபவத்தில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார்.

தேர்தலில் அதிமுக வெற்றி




election 2011 அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு அடித்தது யோகம்!
A+  A-
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு, இந்த தேர்தலில் யோகம் அடித்துள்ளது. தே.மு.தி.க., மற்றும் இடதுசாரி கட்சிகள் கணிசமான இடங்களை அள்ளியதுடன், ஒன்றிரண்டு இடங்களைப் பெற்ற குட்டிக் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளன. ஆளுங்கட்சி கூட்டணியில் போட்டியிட்ட, காங்.,-பா.ம.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் பலத்த அடி விழுந்துள்ளது. அதிலும், 10 தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், 7 தொகுதிகளைப் பெற்ற கொங்கு நாடு முன்னேற்றக் கழகமும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் மண்ணைக் கவ்வின.

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2011

.
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் "மலரும் மாலை 2011" மே மாதம் 21ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு Black Town Bowman Hall மண்டபத்தில் காணத்தயாராகுங்கள்.

தேன் தமிழ் மணக்கும் அறிவகமே! - சிறீ ரங்கேஸ்வரி பாரதி

.

விந்தையாய் வளர்ந்து வரும்
வித்தகக் கற்பகமே! – சிட்னி
தந்ததோர் அற்புதமே! – தேன்
தமிழ்மணக்கும் அறிவகமே!

(விந்தையாய்)

இலக்கிய உலகில் ஒரு பொக்கிசம் கே. எஸ். சிவகுமாரன்

.

                                                                                                      முருகபூபதி

 ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தழும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ்..சிவகுமாரன்.
இதுவரையில் தமிழில் 22 நூல்களையும் ஆங்கிலத்தில் இரண்டு நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.  தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா? என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள்.


நீச்சல் உடையில் இந்துக்கடவுளின் படம்

.
 நீச்சல் உடையில் இந்துக்கடவுளின் படம்,  நிறுவனம் மன்னிப்புக் கோரியது விற்பனைக்கு விட்டதை மீளப்பெறுவதாகவும் அறிவிப்பு
 நீச்சல் உடையில் இந்துக் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டதற்காக அந்த நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லிசா ப்ளு ஸ்விம்வேர் நிறுவனத்தின் புதிய நீச்சலுடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது ஒருமொடல் அழகி, அணிந்து வந்த நீச்சல் உடை இந்துக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.






அவுஸ்திரேலியக் கம்பன் கழகவிழா

.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் 23.04.2011சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை அரங்கில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய “ஜெயராஜ்ஜியம்” என்ற நூல் வெளியீட்டையும் “கம்பராமாயண- பாலகாண்டம்” சொற்பொழிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களின் தொகுப்பின் வெளியீட்டையும் வெற்றிகரமாக நடாத்தியதுடன் இலக்கியப் பட்டிமன்றம் ஒன்றையும் வெகு சிறப்பாக அரங்கேற்றித் தனது மங்காப் பெருமையை உயர்த்திக்கொண்டது.
அந்த நிகழ்வின் படங்களை கீழே காணலாம்.




அறமா வெறும் ஆரவாரமா? - ஞானம் இரத்தினம்

.

தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன்



.
 தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவரை, இராம.நாராயணன் தலைமையில் செயல்பட்ட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. உள்ளிட்டோர் அடங்கிய போட்டிக் குழு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்குள் உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொண்டனர்.

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
66. வரதட்சணை

உங்கள் பெற்றோர்களின் ஒருசில அற்பமான ஆசைகளுக்குச் சரணடைந்து விடாதீர்கள். ஓ! மகனே! வுpரைவில் திருமணஞ் செய்துகொள். லட்சக்கணக்கான ரூபாய்கள் உனக்கு ‘வரதட்சணை’ (டவ்ரி)யாகக் கிடைக்கும்!’ என்று கூறுவர். இந்த மாதிரி பெற்றோர்கள் பேசுவது எவ்வளவு அவமானம்? அவர்களின் பையன்களும், அவர்கள் சொன்னபடியே கேட்பது எவ்வளவு அசிங்கம்! ஒரு பெண்ணுக்காகப் பையனை விற்க வேண்டியது அவசியந்தானா? அது பத்து லட்சமாய் இருந்தாலுஞ சரியே… நீங்களே உங்களை விற்றுக்கொள்ளாதீர்கள்! உங்களின் சொந்தக் கால்களிலேயே நீங்கள் நிற்க வேண்டும்: உங்கள் பலத்தையே நீங்கள் சார்ந்து இருக்க வேண்டும். பிறர் கூறுவதைக் கேட்டு நீங்கள் உங்களை இழந்து விடக்கூடாது. ஓர் ‘அடிமை’யாக ஆகிவிடாதீர்கள். அதன் பின்னரே நீங்கள் தலைவராக – பிறருக்கும் மேலாக - திகழமுடியும்!

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) - வித்யாசாகர்!!

.
13
சாரையாக ஊர்ந்துக் கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்கிடையே கைவைத்துக் கலைத்தால் அது எப்படி நகர்ந்து இங்குமங்குமாய் நாலாப்புறமும் சிதறி ஓடுமோ அப்படி ஒரு பத்து பேர் விமானத்தினுள் ஏறி இங்குமங்குமாய் பரவி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர்.

அதில் ஒருவன் எங்களுக்கருகில் வந்தான். அவளை நெருங்கி 'மாதங்கி அக்கா என் பெயர் கிருபன் என்றான். எனக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் திரும்பி என்னைப் பார்ப்பாள் என்று பார்த்தேன் அவள் பார்க்கவில்லை. எல்லாம் தயார் தானே என்றாள்.

'வட இலங்கை செல்ல பாதுகாப்பு அனுமதி தேவை'

.
ஓமந்தை சோதனைச் சாவடி (ஆவணப்படம்)
ஓமந்தை சோதனைச் சாவடி (ஆவணப்படம்)
இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக வன்னிப்பிரதேசம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்களும் இந்த அனுமதியைப் பெற்று பிரயாணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அனுமதி பெறாமல் வடபகுதிக்குச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் தற்போது திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.
இந்த பாஸ் நடைமுறை முன்னறிவித்தலின்றி இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு வருகின்ற வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''இது ஒன்றும் புதியதல்ல ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு விடயமே, இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

திருக்கேதீச்சர ஆலய உற்சவம்




.
                                                 
மன்னார் மாந்தையில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சர ஆலய உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. 

பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சர ஆலய மகோட்சவம் கடந்த எட்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

எதிர்வரும் பதினாறாம் திகதி  திங்கட்கிழமை பஞ்சரத பவனி, தேரோட்டத் திருவிழா என்பன மிகவும் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

பதிழோம் திகதி செவ்வாய்க்கிழமை பாலாவியில் தீர்த்தோட்சவம் இடம்பெற்று மாலை கொடி இறக்கும் நிகழ்வும் இடம் பெறும். 

திருவிழாவுக்கு  நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அலையலையாய் திரண்டு வருவது வழக்கமாகும்.



தமிழ் சினிமா

.   
பட விமர்சனம் சட்டப்படி குற்றம்


காட்டில் பதுங்கி சமூக அவலங்களை சாடும் போராளிகள் கதை... நேர்மையான போலீஸ் அதிகாரி சத்தியராஜுக்கும் தீய அரசியல்வாதி ஏ.வெங்கடேஜுக்கும் மோதல் இதில் சத்யராஜ் குடும்பம் அழிகிறது.


சைவ சமய அறிவுத்திறன் போட்டிப் பரிசளிப்பு 2011

.




ஆன்மீக சொற்பொழிவு

 




நன்றி : உதயன்  

இரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் காங்கிரஸை வீழ்த்திவிட்டனர் தமிழர்கள்

.
மதுரை ஈழத்தில் இரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை தமிழர்கள் இரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள்.இது தமிழ் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.காங்கிரஸின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி என்று நாம் தமிழர் இயக்க அமைப்பாள் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் அமைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத தி.மு.க. காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.

பணபலம்,அதிகாரபலம் இவற்றிற்குப் பணியமாட்டோம்.வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


மேற்கு வங்கத்தில் திரிணாமூல் அபார வெற்றி


.
கேரள மற்றும் அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
.
மமதா பானர்ஜி
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி ஈட்டியுள்ளது.
இதனால் இம்மாநிலத்தில் 34 ஆண்டு கால இடதுசாரிக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் புதிய வரலாறு
கட்சிவாரி முடிவு
திரிணாமூல் 186
காங்கிரஸ் 41
சி.பி.எம். 41

அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில், சுமார் 225 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தனியாகவே திரிணாமூல் காங்கிரஸ் 186 இடங்களில் வென்றுள்ளது . அதனோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 41 இடங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சராக உள்ள மமதான பானர்ஜி முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகி உள்ளது.
அவர் வரும் 18-ம் தேதி பதவியேற்பார் என்று திரிணாமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடதுசாரிக் கூட்டணி 63 தொகுதிகளில் வென்றுள்ளது.

Nantri BBC



உலகச் செய்திகள்

.

கோகோஸ் தீவுகளில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அனைவரும் இலங்கையர்களே

ராஜ் ராஜரட்ணம் குற்றவாளியாக இனங்காணப்பட்டார் : 19 வருட சிறைத்தண்டனை வழங்கப்படக்ககூடிய சாத்தியம்


இலங்கையை பூர்வீகமாக கொண்ட செல்வந்தர் ராஜ் ராஜரட்ணம், பங்கு சந்தை மோசடி தொடர்பில் இன்று புதன்கிழமை அமெரிக்காவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 14 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் அவருக்கான இறுதி தீர்ப்பு எதிர்வரும் ஜுலை மாதம் 29ம் திகதி வெளியிடப்படும் என்று அமெரிக்க மென்ஹட்டன் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரிச்சட் ஹொல்வெல் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் வெஜ்ஜி - அப்துல் காதர் ஷாநவாஸ்

.

நாம் உண்ணும் உணவை நம்மால் தீர்மானிக்க முடியுமா? அது கிட்டத்தட்ட இயலாத காரியம். நம் உணவைத் தீர்மானிப்பவர்களை இப்படி வேண்டுமானால் வரிசைப் படுத்தலாம்.

விவசாயிகள், உணவு பொருள் விற்பனையாளர், மருத்துவர்கள், சமையல்காரர் நம்முடைய தேர்வின் விருப்பம் மிகக்குறைந்த சதவீதமாகத்தான் இருக்கமுடியும்.

இலங்கைச் செய்திகள்

யாழின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றினால் குறையும் சாத்தியம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இம் மாதம் 30 ஆம் திகதி மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தேர்தல் திணைக்களத்தினால் உறுதிபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

மானுடத்தைத் தரிசித்து வாழும் தெய்வமாக வாழ்பவர் பாபா

.

இந்த யுகத்தின் அவதார புருஷர் பகவான் சத்திய சாயி பாபா. 1926 நவம்பர் 23 ஆம் திகதி பிறந்த பாபா, தனது 85 வருடகால வாழ்வின் பெரும் பகுதியை மனிதகுல மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்.

அடிமட்ட மக்களிலிருந்து சமுதாயத்தின் அனைத்து மட்டங்களைச் சார்ந்தவர்களின் அமைதியைத் தேடி வந்தவர்களுக்கு அமைதியையும் அன்பையும் வழங்கியதுடன் தன்னை நாடி வந்தவர்களுக்கு தனது இதயத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவரது வாழ்க்கை இன, மத, மொழி, பேதங்களுக்கு அப்பால் வறுமை, செல்வம் என்ற வரையறைகளைக் கடந்து அனைத்து மக்களையும் ஒன்று சேர வைப்பதிலேயே கழிந்துள்ளது.