Union College Old Students Association Sydney - Dinner


சொல்லமறந்த கதைகள் - 19 கண்டம்


.

முருகபூபதி – அவுஸ்திரேலியா



“ நீந்தத்தெரியுமா?”
சுஜாதாவின் சிறுகதையொன்று இந்தக்கேள்வியுடன் ஆரம்பித்து, இந்தக்கேள்வியுடனேயே முடிவடையும். பல வருடங்களுக்கு முன்னர் படித்தது.
ஒரு காதலனும் காதலியும் இறப்பதற்கு முன்னர் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விதான் “ நீந்தத்தெரியுமா?”
இருவருக்கும் தெரியாது. அதனால் நீரில் மூழ்கி இறந்துவிடுவார்கள். சுஜாதா கதையை இப்படி முடிப்பார்.
இறுதியாக அவர்கள் பேசிய வார்த்தைகள் “ நீந்தத்தெரியுமா?”
என்னிடம் இதே கேள்வியைக்கேட்டால், பதில் “தெரியாது”
இத்தனைக்கும் இந்துசமுத்திரத்தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நீர்கொழும்பில் கடற்கரையோரமாக பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்திருக்கின்றேன். கரையில் நின்று கால் நனைத்ததோடு சரி.
 இந்து சமுத்திரம் எங்கள் நீர்கொழும்பூரின் மேற்குப்பிரதேசத்தை தழுவிக்கொண்டு ஓயாமல் இரைந்துகொண்டிருக்கிறது. வீட்டின் முற்றத்திலிருந்து பார்க்கும் தூரத்தில் கடல். அலைகள் கரையில் மோதிப்பூக்கும் வெண்ணுறை தினம் தினம் கண்கொள்ளாக்காட்சிதான்.
 கடலில் கால்கள் நனைக்க, மணலில் குடுகுடுவென ஓடி வளைகளுக்குள் மறையும் சிறு நண்டுகளை எட்டிப்பிடிக்க, கரையில் ஒதுங்கி மணலில் பரவிக்கிடக்கும சிப்பிகளையும் சோகிகளையும் அள்ளி அள்ளிப் பொறுக்கி காற்சட்டை பைகளுக்குள் திணித்துக்கொள்ள, மணல்வீடுகட்டி அதன் உச்சியிலே பூவரசம்பூவைக்குத்தி அழகு பார்க்க, மணல் தரையில் இரண்டு கை விரல்களின் நகங்களுக்குள் மண் புகுந்தாலும் கவலைப்படாமல் தோண்டித்தோண்டி குழி வெட்டி கால்களை புதைத்து பரவசமடைய... அந்தக்கடற்கரைதான் எங்கள் சொர்க்கபுரி.

சேரன் கவிதைகள்

.
சிறப்புப் பகுதி: புத்தகம்
சேரன் கவிதைகள்
இருள்
பாட்டற்றவர்கள் இருளைத் தேடியலைந்தபோது
வழி தவறி நான் இருந்த கடலோரம் வந்த மூன்று நூறு
குழந்தைகளின் உலர்ந்த கண்ணீரில் தாயைத் தேடிக்
களைத்த சுமைதாங்கிப் பாரம் முடிவிலியாய் தொடருமென
எல்லோர்க்கும் தெரிந்தாலும் ஒருவருமே இதனை எதிர்
பார்க்கவில்லை என்ற போலி அறிக்கைகளின் காயாத மையையும்
கயமையின் நிழலையும் நீங்கள் அறியாவிட்டாலும்
கவிஞன் அறிவான் கதை.
நந்திக்கடல்

எல்லாத் திசைகளிலும்
காலாட்படை முன்னேறுகிறபோது
அங்குலம் அங்குலமாக
நிலம் மறைந்தது
நிலக்காட்சி கருகியது
மௌனத் திரைப்படத்தில் ஓலம் எழுப்புகிறது
மக்கள் பெருந்திரள்
செல்லும் இடம் எங்கே?
கடல்மடியும் கடற்கரையும்
துணை நிற்கும் எனச் சென்றோரின்
கண்முன்னே
குறுகித் தெறித்து மறைந்தது
கடல்

இலங்கைச் செய்திகள்



மட்டு.மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 127.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

தாதியர்கள் மழைக்கு மத்தியிலும் குடை பிடித்து ஆர்ப்பாட்டம்

க்கள் ஆட்சித் தத்துவமும், பாராளுமன்ற ஜனநாயகமும், தலைமைத்துவப் பண்பும்
தேவன் (கனடா)
சுவர்க்க பூமியின் சோகக் கதை


பள்ளிவாசல் தீ வைக்கப்பட்டமை முஸ்லிம்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது: மு.கா.

திருகோணமலையில் மூன்று குளங்கள் உடைப்பெடுப்பு 

 சீரற்ற காலநிலை: நாடு முழுவதும் இதுவரை 49,788 பேர் பாதிப்பு

 மண்சரிவு அபாயம்: நுவரெலியாவில் மக்கள் இடம்பெயர்வு

வட, கிழக்கை விட்டு நீங்கிய சூறாவளி அபாயம் 

அனர்த்த்தை எதிர்நோக்கி முல்லைத்தீவு மக்கள் மழை தொடர்ந்தால் நிலைமை சிக்கலாகும் எச்சரிக்கிறார் மாவட்ட அரச அதிபர்

முல்லைத்தீவில் 1861 பேர் இடம்பெயர்ந்து 10 முகாம்களில் தஞ்சம்

 செல்லும் வழி?

மட்டு.மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 127.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி
By Jawferkhan
2012-10-30
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 127.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.


மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது!








நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிர
ுக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

பாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge

.

தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ.

பழைய புத்தகங்களின் படி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாகவும், 1912ல் கட்டிமுடிக்கப்பட்டு, தென்னக இரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தென்னக இரயில்வே இந்தப் பாலத்தில் சிறிய ரக ரயில்கள் செல்வதிற்கு ஏதுவாக குறுகிய தண்டவாளங்கள் அமைத்தது.

IC 2 + IC3 = H2O சூத்திர(ம்)தாரிகள் !! -எஸ்.எம்.எம்.பஷீர்

.

What Stephen Lawrence has taught us”
What are the trading standards here?
Why are we paying for a police force
That will not work for us?
The death of Stephen Lawrence
Has taught us
That we cannot let the illusion of freedom
Endow us with a false sense of security as we walk the streets,
The whole world can now watch
The academics and the super cops
Struggling to find the definition of institutionalised racism
As we continue to die in custody
As we continue emptying our pockets on the pavements,
And we continue to ask ourselves
Why is it so official
That black people are so often killed
Without killers?
Benjamin Zephaniah (What Stephen Lawrence has taught us)

“ ஸ்டீபன் லோரன்ஸ் எதனை எங்களுக்கு கற்பித்தான் ?”

“இங்கென்ன வர்த்தக நியமங்கள்

எங்களுக்கு பணிபுரியா காவல் படைக்கு

நாம் ஏன் பணம் செலுத்த வேண்டும்

ஸ்டீபன் லோரன்ஸ்ஸின் மரணம்

நாங்கள் வீதிகளில் நடக்கும் வேளை;

எங்களுக்கும் பாதுகாப்பு உரித்தென்ற

பொய்யுணர்வுடனான சுதந்திர மாயை

எங்களை ஆட்படுத்த அனுமதிக்க முடியாது

என்ற பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது

வெள்ளிப் பாதசரம் -சிறுகதை -இலங்கையர்கோன்

.


தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும்வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படிகோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க்குவிந்திருந்தனகுஞ்சுப்பெட்டிஅடுக்குப்பெட்டிதையற்பெட்டிமூடற்பெட்டி,பின்னற்பெட்டி... எத்தனை வகைஅருகில் மாட்டை அவிழ்த்து அதன்வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில்தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாகநுள்ளி 'மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோஎன்று கெஞ்சினாள்.

அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளைஇன்னும் தடவிக்கொண்டிருந்தனகிழக்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்கஆரம்பித்தான்.

அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. 'எவ்வளவு சனம் பாத்தியளே!இதுக்காலை எப்பிடிப் போறதுஎன்று சொல்லிக்கொண்டே நல்லம்மா தன்கணவனின் அருகில் ஒதுங்கினாள்செல்லையா தன் தோளில் கிடந்தசால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு 'பயப்பிடாமல்என்னோடவாஎன்று தன் மனைவியின் கையைப் பற்றினான்.

கோவில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல்லம்மாவின்மனதில் ஒரு குதூகலத்தை உண்டாக்கினவாய் ஓயாது தன் கணவனுக்குஏதோ சொல்லிக்கொண்டே சென்றாள்ஐந்து வயதுச் சிறுமியபைபோல,முழங்கால்கள் தெரியும்படிதன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டுவீதியைச் சுற்றி ஒரு 'கெந்தல்போட வேண்டும் போல் அவளுக்குத்தோன்றியது... செல்லையா மௌனமாகத் தன் மனைவியின் குதூகலத்தில்மெய்மறந்து அவள் இழுத்த வழியெல்லாம் போய்க்கொண்டிருந்தான்.

உலகச் செய்திகள்


சன்டி சூறாவளி: அமெரிக்காவில் 12 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய சொன் ரின்ஹ் புயல்: 24 பேர் பலி

சான்டிப் புயலின் கோரத் தாண்டவம்: மீண்டும் மூடு விழா கண்ட சுதந்திர தேவி

40 பேரின் உயிரைக் காவு கொண்டது சன்டி மின் விநியோகம் , போக்குவரத்து தொடர்ந்தும் முடக்கம்; சேதங்களை ஒபாமா நேரில் பார்வையிட்டார்

யுத்த நிறுத்தத்திற்கு மத்தியிலும் சிரியாவில் தொடர்ந்து வன்முறைகள் கார்க்குண்டுத் தாக்குதலில் 10 பேர் பலி 

சன்டி சூறாவளி: அமெரிக்காவில் 12 பேர் பலி
By General
2012-10-30
அமெரிக்காவின் நியூஜேர்ஸி கரையோரப் பகுதியைத் தாக்கிய சன்டி சூறாவளியால் அங்கு 12 பேர் உயிழந்துள்ளனர்.

மேற்கு வேர்ஜினியா முதல் வட கரோலினா மற்றும் கனெக்டிக்கட் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதில் பலியாகியுள்ளனர்.


மேலும் 3 மில்லியன் பாவனையாளர்களுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க் நரப்பகுதியில் மாத்திரம் 1 மில்லியன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

லெ. முருகபூபதி - மறக்க முடியாதவர்களின் இருப்பிடம்

Wednesday, October 31, 2012


நேகமாக கவனத்தைக் கோருவதும் குவிப்பதும் விலகல்களும்  வேறுபடல்களும் ஆச்சரியங்களுமே. குறிப்பாக எழுத்தாளர்கள் இந்த வகை விலகல்களாகவும் ஆச்சரியங்களாகவும் இருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனத்தைக் குவிப்பவர்களாகவும் அவர்களால் பல மையங்கள் கவனத்துக்குரியனவாகவும் அமைகின்றன.

கவனத்தைக் குவிக்கும் விலகல்களில் ஒருவராக லெ. முருகபூபதியும் இருக்கிறார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு, எழுத்து என்பவற்றுக்கு அப்பால், இலக்கியத்தின் வழியாக அவர் கொண்டிருக்கும் அக்கறைகளும் செயற்பாடுகளும் இந்த விலகலை அடர்த்தியாக்குகின்றன. எனவேதான் முருகபூபதி கூடிய கவனத்தைப் பெறுகிறார்.

தன்னுடைய அக்கறைகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் முருகபூபதி இயங்குகின்ற வேகமும் நுட்பமும் அசாதாரணமானது. துடிப்பும் ஒருங்கு குவிந்த கவனமும் அவரையும் அவருடைய செயற்பாடுகளையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர் சோர்வின்றி உழைக்கிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிறரையும் இயக்குகிறார். பிறரும் இயங்கத்தூண்டுகிறார். இதில் பெரும்பாலானவை பொதுப்பணிகள். உதவிப்பணிகள். ஊக்கப்பணிகள். மறு பக்கத்தில் “எழுதுங்கள் - செயற்படுங்கள்“ என்று ஊக்கப்படுத்தும் காரியங்கள்.


இலங்கையின் உறுதிமொழிகளை  ஏற்‍க  முடியாது - மன்னிப்புச் சபை
மீள்குடியேற்றப்பட்ட இடம்பெயர் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஐ.ஆர்.ஐ.என் ஊடகம் தகவல்
மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த மக்களை அரசாங்கம் காடுகளில் குடியேற்றியுள்ளது முன்னாள் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்
நெஹ்ரு தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைமாற்றியமைக்க gl வேண்டும்
 கண்டி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். 

மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதிமொழிகளை ஏற்‍க முடியாதென சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என அச்சபை கோரியுள்ளது. யுத்தத்தின் பின்னரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிதாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. சில தசாப்தங்களாகவே மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை வெற்று வாக்குறுதிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பாடத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பயமுறுத்தாத கிருமிகள்.. பயமுறுத்தும் விளம்பரங்கள்


.
சி.மதிவாணன் செவ்வாய், 30 அக்டோபர் 2012 14:05

தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றிய பெண்மணியின் குழந்தை பூனைக்குட்டியிடம் சொல்கிறது. ‘உள்ளே வராதே, அம்மா உன்னை அடிப்பார்’. அதற்கு அம்மா சொல்கிறார், ‘நான் பூனையை அடிக்கமாட்டேன். ஆனால், அது கொண்டுவரும் கிருமிகளை இந்த சோப் கொண்டு கொன்றுவிடுவேன்’.

இப்படி நுண்ணுயிர்கள் என்றாலே ஒரு கொலை வெறியை நமது ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இந்த பரப்பல் வேலையைச் செய்வது கிருமிகளை அழிக்கும் சோப்புகளை அல்லது அதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகள்தான்.

ஆனால், நான் எங்கள் வீட்டின் புளிய மரத்தின் கீழ்தான் விளையாடி வளர்ந்தேன். சின்ன பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடுவேன். உடல் முழுவதும் புழுதி இருக்கும். நாங்கள் வளர்த்த கருப்பு என்ற நாயோடு கட்டிப் புரள்வேன். எனக்கு என் குழந்தைப் பருவத்தில் ‘கிருமி’களைப் பற்றி தெரியாதது மட்டுமல்ல, அவை என்னை ஒன்றும் செய்துவிடவும் இல்லை. திடகாத்திரமான ஆளாக வளர்ந்து நிற்கிறேன். காய்ச்சல், தலைவலி, நோய்நொடி என்று நான் படுப்பது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும். அப்படி வந்தால் கூட ஹோமியோ மருத்துவம் எடுத்துக்கொள்ளும் ‘கஞ்சன்’ நான். கிருமிகளைக் கொல்லும் ஆங்கில மருந்துகள் என்றாலே எனக்கு அச்சம்.

சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படவிருந்த தமிழ் அகதி துணிகரமான போராட்டத்தின் பலனாக தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டார்.

.
நான்கு  பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய தமிழ் புகலிடக் கோரிக்கையாளனை சிறிலங்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிமுதல் புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நோக்கம் வெற்றிபெறும்வரை அவரைத் தடுத்துவைத்திருந்த Maribyrnong தடுப்புமுகாமின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள்

.
-சித்தாந்தரத்தினம்ää கலாநிதி க. கணேசலிங்கம்

ஆதீனப்புலவர்ää இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்

சைவம்ää தமிழ் ஆகிய இரு துறைகளிலும் ஈழத்தமிழர் அரும்பெரும் பணிகள் ஆற்றியுள்ளனர். சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பங்களிப்பு கணிசமானது; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் பணிகள் சைவத்தையும் அதன் தத்துவத்தையும் அழியாமல் காத்து வளர்த்தன.

இப்பெருமக்கள் அனைவரினது பணிகளையும் இச்சிறு கட்டுரையில் விளக்குதல் இயலாததொன்று. தவத்திரு ஆறுமுகநாவலருக்கு முன்பிருந்த ஞானப்பிகாசர் தொடங்கி அண்மையில் அமரரான பண்டிதர் மு. கந்தையா வரையிலான அறிஞர் சிலரின் பணிகள் விளக்கப்படுகின்றன. இதிலும் சிலரின் பணிகள் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. பண்டிதரின்; பணிகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

ஞானப்பிரகாசர்

மெய்கண்ட சாத்திர நூல்களிலே மெய்கண்டார் (கி.பி. 1232) எழுதிய சிவஞானபோதத்தை முதன்மை நூலாகக் கொள்வது மரபு. இதற்குப் பின் வந்த சிவஞானசித்தியார் அதன் விருத்தியுரையாகவும் சிறந்த ஆய்வு நூலாகவும் விளங்குகிறது. சுபக்கம்ää பரபக்கம் என இரு பகுதிகளாக அமைந்த இந்நூலின் முதற்பகுதிக்கு ஆறு அறிஞர்கள் எழுதிய உரை சிறந்ததாகக் கொள்ளப்பட்டுää அறுவர் உரை எனப் போற்றப்படுகிறது. அவர்களுள் ஒருவரான ஞானப்பிரகாசர் (17-ம் நூற்றாண்டு) யாழ்ப்பபணத்து திருநெல்வேலியில் பிறந்தவர்.

போர்த்துக்கேயர் ஆட்சியில்ää அவர்களின் கொடூரமான சைவநிந்தனையைச் சகிக்க முடியாதவராக இவர் தமிழ்நாடு சென்றுää அங்கிருந்து வடக்கே போய் வடமொழியும் சாத்திரமும் பயின்றார். பின்னர் தமிழ்நாடு திரும்பிää திருவண்ணாமலை ஆதீனத்தில் சேர்ந்தார்.

22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏

.

(சந்திப்பு: முஹம்மட் பிறவ்ஸ்)
    * கொழும்பில் மறைக்கப்பட்ட வடபுல முஸ்லிம் அகதிகள்
    * 5 வருடங்களாக வாக்குரிமை பறிக்கப்பட் ஒரு சமூகம்
    * நேரசூசிப்படி ஆண்களும் பெண்களும் குளிக்கும் வினோத நடைமுறை
    * 8 கழிப்பறைகளுடன் வாழ்கின்ற 90 குடும்பங்கள்
jaffna muslim_002மனிதனின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூகம் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாகப்போகும் நாட்டினுடைய தலைநகரத்தில் இருப்பதும் ஒரு ஆச்சரியமான செய்திதான். இவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? இவர்களது பிறப்பிடம் எது? இவர்களுக்கு வீடுகள் உண்டா இல்லையா என்று இன்றுவரை பதியப்படவில்லை.

இவ்வாறான மக்கள் வசிக்கும் "முஹாஜிரீன்' அகதிமுகாம் மட்டக்குளி, காக்கைதீவு பிரதேசத்தில் அமைந்திருப்பது நம்மில் அனேகமானோருக்குத் தெரியாது. அங்கு வசிக்கின்ற மக்களின் நிலமைகளை கண்டறிவதற்காக அண்மையில் நான் அங்கு விஜயம் செய்தேன்.
யார் இவர்கள்?
1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள், வாடகை வீட்டில் வாழ்ந்த காரணத்தினாலும், தமிழர்களிடத்தில் தங்களது பூர்வீக காணிகளை பறிகொடுத்த காரணத்தினாலுமே இன்னும் அகதி நாமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், பொதுக் காணிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த குடும்பங்களும் இதற்குள் அடங்குகின்றது.

தமிழ் சினிமா

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் துப்பாக்கி

தீபாவளிக்கு வெளியாகும் விஜய்யின் துப்பாக்கி படம் பற்றி நாளுக்கு நாள் புது தகவல்கள் உலா வருகின்றன.
விஜய்- முருகதாஸ்- தாணு போன்ற பிரபலங்கள் இணைந்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை இப்படி ஒரு படத்தில் நான் நடித்ததே இல்லை என படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் கூறியிருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மேலும் இயக்குனர் முருகதாசும் படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இதற்கு காரணம், துப்பாக்கி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளாராம் முருகதாஸ்.
இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிரசாந்த் நாயர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.