வன்னி ஹோப் - பருவத்தின் நல்வாழ்த்துக்கள் 2023


 "இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"


வன்னி ஹோப் அணி ஆஸ்திரேலியா & இலங்கை

ஆனந்தத் தமிழை அரவணைக்கும் மாதம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


              மார்கழி என்றாலே மனமெல்லாம் குளிரும்


          நீர்பெருகி நிற்கும் நிலம்மகிழ்ந்து சிரிக்கும்
          ஊர்முழுக்க விழித்து உவந்தேற்று நிற்கும்
          கார்மேகம் வானைக் கவ்வியே இருக்கும்

         ஆறு குளமெல்லாம் ஆர்ப்பரித்து நிற்கும்
         வீறுடனே நீரும் வெளியில் வரப்பாக்கும் 
         ஊரவரின் கவனம் நீர்பெருக்கை நோக்கும்
         மார்கழியும் மகிழ்வாய் வந்துமே நிற்கும்

         குளிர்வுடைய மாதம் குறைவதனைத் தருமா

         கீதைதந்த கண்ணன் மார்கழியைப் புகழ்ந்தான் 
         தேவரது மாதம் மார்கழியாய் சிறக்க
         நாமதனைப் பீடை எனவுரைத்தல் தகுமா 

         சீர்காழிச் செல்வர் சம்பந்தர் பிறந்தார் 
         சேந்தனார் தேரை தமிழ்பாடி அசைத்தார் 
         சிவனாரின் நடனம் சிரேஷ்டர்கள் கண்டார்
         சிறப்புகள் அனைத்தும் சேர்ந்ததே மார்கழி 

        தோடுடை செவியனைத் தொழுதேற்றும் மாதம்
        மாதொரு பாகனை மனமிருத்தும் மாதம் 
        மாசிலா மனத்துடை மாணிக்க வாசகர்
        வழங்கிய திருவெம்பா முழங்கிடும் மாதம் 

        மாலவன் மாண்பினைப் போற்றிடும் காலம்
        மாண்புடை திருப்பாவை மலர்ந்திடும் காலம்
        ஊனையும் உருக்கிடும் உன்னதத் தமிழை
        உவந்துமே ஆண்டாள் வழங்கிய காலம் 

        ஆதியந்தம் இல்லா அருட்பெரும் சோதியை
        வீதியெங்கும் பாடி வியந்தேற்றுங் காலம்
        தாளல யமோடு பாடிவரு மடியார்  
        காலையது வேளை காட்டிவிடு காலம் 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 44 தீவுக்கூட்டமாக திகழும் எழுத்தாளர்கள் – கலைஞர்களை ஒன்றிணைப்பதில் சந்திக்கும் சவால்கள் ! முருகபூபதி


எங்கள் ஊரில் சில அமைப்புகளிலும் கொழும்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் நான் அங்கம் வகித்திருந்தமையால், அங்கிருந்து பெற்றுக்கொண்ட புத்திக்கொள்முதலின் அடிப்படையில்தான் புகலிடத்திலும் இயங்கினேன்.

வெகுஜன அமைப்புகளில் பலதரப்பட்ட குணவியல்பு


கொண்டவர்களும் இணைந்திருப்பார்கள்.  இவர்களிடத்தில்  ஊடலும் கூடலும் தவிர்க்கமுடியாதது.

அனைவரையும் சமாளிக்கவும் முடியாது.  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நான் 1973 இல் இணைவதற்கு முன்பே அது இரண்டு அணியாக பிரிந்துவிட்டது.

எஸ். பொ. நற்போக்கு என்று தொடங்கினார்.

நான் இணைந்த காலப்பகுதியில்  கே. டானியல், என். கே. ரகுநாதன், சாருமதி, புதுவை இரத்தினதுரை, சில்லையூர் செல்வராசன் ஆகியோர் விலகிச் சென்றிருந்தார்கள்.

இச்சங்கத்தில் மாஸ்கோ சார்பு எழுத்தாளர்களும் பீக்கிங் சார்பு எழுத்தாளர்களும் தொடர்ந்து இணைந்திருந்தனர்.

இதேவேளை பூரணி காலாண்டிதழை வெளியிட்டவர்கள்  அணியேதும் உருவாக்காமல் மார்க்ஸீய சிந்தனை கொண்ட எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டு, மு. தளையசிங்கத்தின் சிந்தனைக்கு  நெருக்கமாக  இயங்கினார்கள்.

எனக்கு அனைவருடனும் எந்த முரண்பாடுமற்ற நட்புறவு இருந்தது.  அப்போது நான் அங்கே புதிய இளம் தலைமுறை. அதனால் அனைவருக்கும் நான் செல்லப்பிள்ளை.  அங்கிருந்த ஒவ்வொரு எழுத்தாளர்களினதும் குணவியல்புகளை நன்கு அறிந்து வைத்திருந்தேன். அவ்வாறு பெற்ற புத்திக்கொள்முதல் அனுபவத்துடன்தான் அவுஸ்திரேலியாவில் கால் ஊன்றினேன்.

இங்கே இலங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழ் அகதிகள் கழகம், அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம் ஆகியனவற்றை உருவாக்குவதில் முன்னின்று உழைத்திருந்தாலும், இங்கிருந்த ஏனைய தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்தேன்.  இடையில் மக்கள் குரல் கையெழுத்து சஞ்சிகை, உதயம் இருமொழி மாத இதழ் ஆகியனவற்றின் ஆசிரியர் குழுவிலுமிருந்தேன்.

எனினும்,  எனது முழுக்கவனமும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தில்தான் குவிந்திருந்தது.  இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருப்பதனால் மீண்டும் அதுபற்றி பதிவுசெய்யவேண்டிய அவசியமில்லை என கருதுகின்றேன்.

இதில் இணைக்கப்பட்டுள்ள காணொளிகளின் வாயிலாக இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வரலாற்றை வாசகர்கள் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே எழுத்தாளர்களின் முக்கிய கடமை எனக் கருதுபவன் நான். இந்த பால பாடத்தை வீரகேசரி நாளிதழ் எனக்கு கற்றுத் தந்திருந்தது.

ராஜ தந்திரமும் ராஜ விசுவாசமும் அவதானி


மகா பாரதத்தில் வரும் கிருஷ்ண பரமாத்மா,  முக்கிய பாத்திரம். தருமம் குன்றி அதர்மம் மேலோங்கும்போது காட்சி தருபவர்தான் இந்த பரமாத்மா எனவும் சொல்வார்கள்.   கௌரவர்கள்,  அஸ்தினாபுரத்தை ஆண்டபோது, அதில் தமக்கும் பங்கு கேட்டு பேராடியவர்கள்தான் பஞ்சபாண்டவர்கள்.

அந்த பங்காளிச் சண்டையில்  இறுதியில் துரியோதனன் தோற்றான். 


செஞ்சோற்றுக் கடனுக்காக இறுதிவரையில் அவனுடன் நின்ற கர்ணனும்  கிருஷ்ண பரமாத்மாவின் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டான்.  கர்ணன் இருக்கும் வரையில் துரியோதனனை பாண்டவர்கள் வெல்லமாட்டார்கள் என்பது கிருஷ்ணருக்கு நன்கு தெரியும்.

அதனால்தான் குந்திதேவிக்கு மாத்திரமே தெரிந்த அந்தரங்க இரகசியத்தை, அவளிடமே அம்பலப்படுத்தி,  கர்ணனுக்கு தூது அனுப்பி,  அவனை தாயின் பாச வலையில் விழச்செய்து, இறுதியில் குருஷேத்திர போர்க்களத்தில்  கர்ணனை வீழ்த்தினார் கிருஷ்ண பரமாத்மா. போரிடத் தயங்கிய அருச்சுனனுக்கு கீதோபதேசம் செய்து அவனுக்கு உருவேற்றினார்.

அந்தப்போரில் கௌரவர்களை வீழ்த்துவதற்காக கிருஷ்ண பரமாத்மா மேற்கொண்ட ராஜதந்திரங்கள் அனைத்துக்கும், அவருக்கு பாண்டவர் வம்சத்திடமிருந்த ராஜவிசுவாசம்தான் பிரதான காரணம்.

அத்துடன்   பாண்டவர்களையும் கௌரவர்களையும் சோதிக்கவும் அவர் தவறவில்லை. இதனால் மகாபாரத காவியத்தில்  கிருஷ்ணர் பிரதான பாத்திரமானார். 

சமகாலத்தில்  இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடந்த 13 ஆம் திகதி தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும்போது, எமக்கு மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணர்தான் நினைவுக்கு வருகிறார்.

இலங்கையில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வில்லை என்பதையும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளின் தலைவர்கள் சிலர்தான் இதில் பங்கேற்றுள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அநுரா குமார திஸாநாயக்காவின் தலைமையில் இயங்கும் மக்கள் விடுதலை முன்னணியும், குமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ்க்காங்கிரஸும் இடம்பெறாத சந்திப்பே இந்த சர்வகட்சி மாநாடு.

நான் ஏன் பிறந்தேன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 எம் ஜி ஆர் படம் என்றால்,படத்தில் பிரம்மச்சாரியாக வருவார்,கதாநாயகியே அவரை தேடி வந்து காதலிப்பார்,சற்று தயக்கத்துடனே காதலை ஏற்பார்,இடையில் காதலுக்கு இடையூறாக வரும் வில்லனை பந்தாடி விட்டு காதலியின் கரம் பற்றுவார் இவ்வாறே படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும்.ஆனால் இவற்றுக்கு மாற்றாக அத்தி பூத்தாற் போல் அவர் நடிப்பில் ஒரு படம் வந்தது.அந்தப் படம் தான் நான் ஏன் பிறந்தேன்.



இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே எம் ஜி ஆர் ஒரு குடும்பஸ்தராக அறிமுகமாகிறார்.மனைவி,குழந்தை,தாயார்,சகோதரர், சகோதரி, கொழுந்தன் என்று பெரிய குடும்பஸ்தராக காட்சியளித்தார் எம் ஜி ஆர். புரட்சி நடிகரின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல,திரை ரசிகர்கள் எல்லோருக்குமே இது புதுமைதான்.

1970ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஆனந்த விகடன் வார இதழில்

தனது சுய சரிதையை நான் ஏன் பிறந்தேன் என்ற பேரில் எம் ஜி ஆர் தொடர்ந்து எழுதி வந்தார்.அதனை தொடர்ந்து அதே பேரில் உருவான படத்திலும் அவர் நடித்தார்.ஆனால் இது அவரின் சுய சரிதை அல்ல!

பட்டதாரியும்,குடும்பஸ்தனுமான கண்ணன்தான் குடும்பத்துக்கு வருமானம் தேடித் தரக் கூடிய ஒரே ஜீவன். குடும்பமோ கடனில் சிக்கித் தவிக்கிறது,அதனால் பாரம்பரிய வீடும் பறிபோகிறது. இதன் காரணமாக வேலை தேடி பட்டணம் வருகிறான்.வந்த இடத்தில் வேலை கிடைக்கிறது,அதே கையோடு நோயாளியான இளம் பெண்ணின் காதலும் தேடி வருகிறது.தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்கு சேர்ந்த கண்ணன் உண்மையை சொல்ல முடியாமலும்,காதலை ஏற்க இயலாமலும் தத்தளிக்கிறான்.இதற்கு இடையில் கிராமத்தில் இருந்த அவன் குடும்பம் அவனைத் தேடி பட்டணத்துக்கு வருகிறது.வீட்டில் மனைவி,தொழில் செய்யும் இடத்தில் ஒருதலையாய் காதலிக்கும் காதலி என்று சிக்கிக் கொள்கிறான் கண்ணன்.

சிவாஜி.அல்லது ஜெமினி நடித்திருக்க வேண்டிய கதையில் துணிந்து நடித்திருந்தார் எம் ஜி ஆர்.வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் அவரின் நடிப்பும் வித்தியாசமாக இருந்தது.அவருக்கு இணை கே ஆர் விஜயா.பல படங்களில் ஏற்ற குடும்பத்தலைவி வேடம்,சிக்கலில்லாமல் அதனை கையாண்டார் அவர்.எம் ஜி ஆரை விரும்பி காதலிக்கும் வேடம் காஞ்சனாவுக்கு.உருகுவது,துடிப்பது என்று தன் பாத்திரத்தை முறையாக செய்திருந்தார்.வில்லனாக வருபவர் தேங்காய் சீனிவாசன்.அவரின் கை ஆள் நம்பியார்.என்னே காலத்தின் கொடுமை!இவர்களுடன் சுந்தரராஜன்,வி கோபாலகிருஷ்ணன்,எஸ் என் லட்சுமி,வீரராகவன், சேதுபதி,ஆகியோரும் நடித்திருந்தார்கள்.நாகேஷ் இருக்கிறார்,அளவுடன் நடிப்பையும்,நகைச்சுவையையும் வழங்குகிறார்.

காட்சி மொழி ( சினிமாவுக்கான இதழ் ) வாசிப்பு அனுபவம் விதுஷா- பேராதெனிய பல்கலைக் கழகம் , கண்டி


இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது.

 இச்சூழலில் காட்சி மொழி காலாண்டு இதழ் பேசப்படவேண்டிய ஒரு இதழாக வெளிவந்துள்ளது.  இலங்கையில் இருந்து உலக சினிமாவிற்காக வெளிவந்திருக்கும் காட்சிமொழி, சினிமா அரசியலையும் அதன் வடிவங்களையும்,  வரலாறுகளின் வளரச்சிப்  படிமங்களையும் உரையாடலுக்கான களமாக திறந்துவிட்டுள்ளது. 

 இந்திய -  இலங்கைச் சூழலில் இருந்து வெளிவரும் பெரும்பாலான


கதாநாயக  வழிபாட்டை மையப்படுத்திய கமர்ஷியல் சினிமாவின் போக்கும் அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவப் பரப்புரைகளும், விளம்பரங்களும், பெண்ணுடல் பண்டமாக்கப்படுவதும்,  பாலியல் சுரண்டல்களும், கிசு கிசு தகவல்களுமே சினிமாவாக சித்திரிக்கப்பட்டு நமக்குப் பழக்கப்படுத்தப்படுகின்றது.

 இது பெரும்பாலும் சினிமாவை ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே நம்மிடம் நம்பவைக்க முயற்சிசெய்து கொண்டிருக்கின்றது. 

 அதற்கு அப்பால் சினிமாவினை கலைவடிவத்தோடு  இணைந்த உயிரோட்டமான வெகுசன சமூக ஊடகமாக வெளிப்படுத்தக் கூடிய வெளிகளை இந் நிலை மறைத்தும் வைத்துள்ளது. 

 காட்சிமொழி இதழ் அந்த கட்டமைப்புகளை உடைத்து ஒரு சமூக கலை இலக்கிய சினிமாவிற்கான உரையாடலை நிகழ்த்தக்கூடிய தளமாக உருப்பெற்றிருக்கின்றது. 

 நான்கு தமிழ் மொழியிலான கட்டுரைகளுடனும் மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுடனும் வெளிவந்துள்ள இவ் இதழ் , சினிமாவில் வழக்கமாகப் பேசப்படுகின்ற விடயங்களில் இருந்து விலகிய  அல்லது அவற்றிற்கு முரணான வெளிப்படுத்தல்கள் எந்தளவு தூரம்  சினிமாவினை இன்றுவரை ஒரு காத்திரமான கலைப் படைப்பாகவும்  ஊடகமாகவும் கொள்வதற்கு வழிசமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன. 

 முகேஸ் சுப்ரமணியத்தின், "க்ளோஸ்-அப்"  கமெரா ஊடாக க்ளோஸ்-அப் காட்சிகளில் வெளிப்படுத்தப்படும் மனித முகங்கள் மற்றும் உணர்ச்சிகளது எல்லையற்ற தன்மை சித்தரிக்கப்படுகின்றது. 

 அத்துடன் ஒரு பாத்திரத்தின் கதைகளை வசனமின்றி பார்வையாளருக்கு எடுத்துச் செல்லக்கூடிய அக் கலையின் தனித்துவங்களை உலக சினிமா மற்றும் பாலுமகேந்திராவின் படங்களின் உதாரணங்களோடு வெளிப்படுத்துவது தெளிவான பார்வையைத் தருகிறது. 

 அஜயன் பாலாவினால் எழுதப்பட்ட " மொகல் ஈ ஆஸம், திரைக்குப் பின்னால் உள்ள விடயங்களை பார்வையாளர்கள் அல்லது வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி, ஒழுக்கம்            ( Ethics)  மற்றும் உத்தி என்பவற்றின் கையாள்கையுடன் நீள்கிறது. வாசித்து முடிக்கும் தறுவாயில் ,   " அட இதுவே ஒரு நல்ல காதல் கதையாகத் தானே இருக்கிறது இதை சினிமாவாக்கினால் என்ன " என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. 

இலங்கைச் செய்திகள்

புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்

சிறுவர்களை போதைக்கு அடிமையாக்க இரகசிய திட்டம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டுகள்

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்ற ஆய்வு

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர படகுச் சேவை


 புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு

மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு

நாட்டின் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

 மலேசிய நிலச்சரிவில் புதைந்து 13 பேர் பலி

புத்தாண்டில் உக்ரைனுக்கு எதிராக புதிய தரைவழித் தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம்

இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு துருப்புகளும் மீண்டும் பூசல்

கொங்கோ வெள்ளத்தினால் 120 இற்கும் அதிகமானோர் பலி

2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா ஏற்றுமதிக் கட்டுப்பாடு

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ: 5 சிறுவர்களுடன் 10 பேர் பலி


மலேசிய நிலச்சரிவில் புதைந்து 13 பேர் பலி

மலேசியாவின் செலன்கோர் மாநிலத்தில் உள்ள முகாமிடும் தளம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்திருப்பதோடு பல டஜன் பேர் காணாமல்போயுள்ளனர்.

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி டிசம்பர் 23, 2022 வெள்ளிக்கிழமை

 


ஸ்ரீ மாருதி (காற்றின் மகன்), அசுரர்களுக்கு (ராட்சசர்கள்) பயமுறுத்தும் இடமெல்லாம் ஸ்ரீராமனைப் புகழ்ந்து பாடும் இடமெல்லாம், கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு, தலைக்கு மேல் கைகூப்பியபடியே இருக்கிறார். அவருக்கு நமது வணக்கத்தை (நமஸ்காரங்கள்) சமர்ப்பிக்கிறோம்.  பகவான் ஸ்ரீ ஹனுமான், பகவான் ஸ்ரீ ராமரின் தீவிர பக்தர், கடவுள் மீதான அவரது தளராத பக்திக்காக வணங்கப்படுகிறார். ஹனுமன் ஜெயந்தி அல்லது ஹனுமத் ஜெயந்தி இந்து கலாச்சாரத்தில் பரவலாக போற்றப்படும் வானர கடவுளான ஸ்ரீ ஹனுமான் பிறந்ததை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஹனுமான் பக்தி, மந்திர சக்திகள், வலிமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அடையாளமாக வணங்கப்படுகிறார்.  தீய சக்திகளை வென்று மனதிற்கு அமைதியை அளிக்கும் ஆற்றல் கொண்ட ஹனுமான் சாலிசாவை ஜபிக்கப்படுகிறது. திட்டம்:  23.12.2022 - வெள்ளிக்கிழமை - காலை 10.00 மணி: ஸ்ரீ அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை. 


பெர்த் மாநகரில் 20/12/2022 முதல் 25/12/2022 வரை "சித்தாந்த கலாநிதி" "செந்தமிழரசு" திரு கி. சிவகுமார் M.E. அவர்களது " ஞானத்தமிழ் பேருரைகள்"