வாழ்வை குலைப்பதும் நாம் அன்றோ !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா




ஆசை என்பது சிலந்தி வலை
அதிலே சிலந்தி நாம் தானே
சிக்கி திறணித் தவித்து விழும்
செயலில் நிற்பதும்  நாம் தானே 

கங்கை நாடிச் சென்று நிற்போம்
கர்மம் அகலக் குளிக்க என்று 
அங்கே தர்க்கம் தொடங்கி நிற்கும்
ஆணவம் அங்கே தலை விரிக்கும் 

ஆலயம் வணங்கச் சென்று நிற்போம் 
அவசரம் கொண்டு முந்தி செல்வோம் 
பிழையென யாரும் சொல்லி விட்டால்
நிலையினை இழந்து கத்தி நிற்போம் 

நான் படித்து மனதில் பதிந்த கவிதாயினி ஆழியாளுடைய கவிதை - செ .பாஸ்கரன்

கவிதாயினி  ஆழியாளை  அறியாதவர்கள் இருக்க முடியாது.  ஆழமான கவிதைவரிகள் அவர் கவிதைகள். தான்  பார்க்கின்ற விடயங்களை எல்லாம் அழகியலோடு எடுத்துவருபவர்.  கொடூரமான விடயங்களை, பேர்  அநியாயங்களை  கூட அழகியலோடு தந்துவிடுகிறார். இங்கே அவரது கருநாவு என்ற தொகுதியில் இருந்து  செவ்வரத்தம் பூ என்ற கவிதையை கையில் எடுக்கிறேன்  ஆயிரமாயிரம் அர்த்தங்கள், உலக வரலாறு ஒருமுறை கண்முன்னே வந்து போகிறது. படிப்பவர் மனங்களில் தோன்றும் பல விஷயங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது. ஒவ்வொருவரம்  தாங்கள் நினைப்பதற்கு கற்பனை வடிவம் கொடுக்க பார்க்க முடிகிறது. அவர் என்ன எண்ணுகின்றார்  அல்லது அவர் என்ன சொல்லுகிறார் என்பது வேறாக இருக்கும் . ஆனால்  வாசிப்பவர்கள் தங்களுடைய கவிதை அனுபவத்திற்கும் பார்வைக்கும் இடையே ரயில் தண்டவாளங்கள் ஓடுவது போல் கற்பனைகள் விரிந்து கொண்டு செல்லும்.குறுக்காக வெட்டி விடாத அளவிற்கு கற்பனைகள் விரிந்துகொண்டே செல்லும்.

 அந்த வகையிலே நான் படித்து சுவைத்த இந்த கவிதை முப்பது வருடங்களுக்கு முன்பு என்னுடைய வாழ்க்கையிலே, நம்முடைய வாழ்க்கையிலே  நம்முடைய சமூகத்திலே  நடந்த பலவற்றையும் கொண்டு வருகின்றது.  இது கவிஞருக்கு அவுஸ்திரேலிய நாட்டு பூர்வீக குடிமக்களை, அல்லது பிரெஞ்சு புரட்சியை ஏன் பாலஸ்தீன நிலைகளைக்  கூட கற்பனையில் பிடித்திருக்கலாம் நான் கூறியதுபோல் படிப்பவர்களுக்கு  எழுகின்ற கற்பனைகளுக்கு ஏற்ப இந்த கவிதை விரிந்து செல்கிறது. என் வாழ்வில் பல  நிகழ்வுகளில் நாம் பார்த்தவர்கள் அல்லது நினைத்துப்பி பார்க்கக்கூடாது என்று பலரும் நினைப்பது  விரிந்து கிடக்கின்றன. மென்மையான அந்த செவ்வரத்தம் பூவுக்கு கடுமையான சிவப்பு நிறம் அது வீதியில் விழுந்து கிடந்தால்  எப்படி இருக்கும். இது தான் அந்தக் கவிதை .செவ்வரத்தம் பூ. 

விரல்களால் 
குறித்துச் சொல்ல முடியாத 
தருணம் ஒன்றறில் 
 சிவப்பு 
அவனுக்கு பிடிக்காமல் போனது 
ஆனால் சிவப்பபோ  
அவனை  மிகவும் விரும்பியது 

எப்போதும்  அவனைச் 
சுற்றி சுற்றியே வந்தது 
எல்லா இடமும் 
சிவந்த காய்ந்த  ரத்தம் 
எல்லாஇடமும் 
வீங்கிச் சிவந்த மெலிந்த  உடல்கள் 
எல்லா உடலிலும் 
சிவப்பு கீறல் காயங்கள் 
இப்படியாக 
சிவப்போ  அவனை  மிக விரும்பியது 

அவனுக்கோ சிவப்பே  பிடிக்கவில்லை 
சிவப்பை விட்டு  
தூரப்போவதாக 
அவன் முடிவெடுத்துகேக்  கேட்டபோது 
அவர்கள் 
அவனை விடவில்லை 

இந்தியாவின் கடனை இலங்கை உடனடியாக எப்படி அடைத்தது? பின்னணியில் சீனா?


07/02/2021 இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை திருப்பி செலுத்தியதில் இலங்கைக்கு சீனா உதவி செய்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இலங்கையுடன் இந்தியாவும் - ஜப்பானும் முத்தரப்பு ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை சமீபத்தில் இலங்கை அரசு தன்னிச்சையாக இரத்து செய்தது. தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதாகவும், இப்பணி இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்தது.

இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. ஒப்பந்தங்கள், உறுதிமொழிகளை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து வாங்கிய ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தி உள்ளது.

குரு - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

 .



இன்று நாம் குருவின் பலன் பற்றிச் சற்றுச் சிந்திப்போம்.

குரு என்றதும் வியாழ பகவான் பற்றி ஏதோ பேசப்போவதாக நினைத்து விடாதீர்கள். கல்வி அறிவைப் புகட்டும் குருவைப்பற்றித் தான் கூற வருகிறேன்.

திறமையும் அறிவும் கருணையும் பொருந்திய குரு கிடைத்தவர் பாக்கிய சாலிகளே! இதை உணர்ந்து தான் போலும் மகா அலெக்‌ஷாண்டர் பிறந்த போது அவரது தந்தை அரிஸ்டோட்டலிடம், ’நீங்கள் வாழும் இந்தக் காலகட்டத்தில் எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்றாராம். அரிஸ்டோட்டல் என்ற அந்த மேதை தனது சீஷ்யனை உலகம் வியக்கும் வண்ணம் உருவாக்கினார். மகா அலெஷ்சாண்டரின் சாதனை அவன் வாழ்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பின்பும் உலகை வியப்பில் ஆழ்த்துகிறது. அதற்கான  தார்ப்பரியங்கள் / பெருமைகள் யாவும் அவரை உருவாக்கிய குருவான அரிஸ்டோட்டிலையே சாரும்.

இந்தியப் பெருங் கண்டத்தில் சக்கரவர்த்தியாகவிருந்த சந்திரகுப்த மெளரியன் என்ற அரசனை வழிநடத்தியவர் கெளடில்யர் என்ற ராஜ குரு.மெளரிய சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த உதவியது கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம். அர்த்த சாஸ்திரம் என்பது ராஜ்யத்தைப் பரிபாலிக்கும் முறைகளை எடுத்துக் கூறும் நூலாகும். அது இந்தியப் பண்பாட்டின் அறிவுத்திறனையும் ராஜ தந்திரத்தையும் பறைசாற்றும் நூலுமாகும்.

அரசியலைக் கற்கும் எந்த மாணவனும் அர்த்த சாஸ்திரத்தைப் படிக்கத் தவறுவதில்லை. இது ஜேர்மன் உட்பட பல மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை ஆக்கிய கெளடில்யரின் இன்னொரு பெயர் சாணக்கியன் என்பதாகும்.

இவ்வாறு சிறந்த குருவால் வழிநடத்தப்பட்டு வாழ்க்கையில் சித்தி கண்ட சீஷ்யர்கள் பலர். இனி, அன்றய சானக்கியன் காலத்தில் இருந்து இன்றய கால கட்டத்துக்கு வருவோம். குரு சீஷ்ய உறவைச் சற்றே பார்ப்போம்.

ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான போராட்டமே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்!

06/02/2021  தமிழர் தாயகப் பகுதியான கிழக்கு அம்பாறை பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், வடக்கு கிழக்கு மக்கள் 70 வருடங்களாக பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடிவரும் நிலையில், தற்போது அடக்கு முறைக்கு எதிரான மாபெரும் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்துள்ளார்.

 நன்றி  

ஈழத்தில் இருந்து வெளிவரும் "அறிந்திரன்" சிறுவர் சஞ்சிகை ஆசிரியர் திரு.கணபதி சர்வானந்தா பேட்டி

 


"ஒருசஞ்சிகையை ஒரு வடை விற்கும் விலைக்கும் குறைவாகத் தான் கொடுக்க வேண்டும் என்று சிரித்திரன் சிவஞானசுந்தரம் குறிப்பிடுவார் அது போலவே நான் இந்த அறிந்திரன் சஞ்சிகையை ஒரு ப்ளெயின் ரீ விலையான இருபது ரூபாவுக்கே கொடுத்து வருகிறேன். அதனால் தான் இந்தச் சஞ்சிகை சிறுவரிடையே அதிகம் போய்ச் சேருகின்றது. விருப்புடன் வாங்கி வாசிப்பதோடு தங்கள் ஆக்கங்களையும் எழுதி அனுப்புகிறார்கள்"

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜியம் உருவாகியுள்ளது!


 06/02/2021 கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழரும் முஸ்லிமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.

தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இது கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடந்துகொண்டு இருக்கின்றது .

இந்த அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் அணிதிரண்டு இருக்கின்றார்கள் என்றும் அவர்களுக்கு துணையாக நான் களமிறங்குமிறங்குகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்- எங்கே எங்கே உறவுகள் எங்கே? பேரணியில் தமிழராய் ஒன்றிணைந்து ஓங்கி ஒலிக்கும் குரல்கள்!


4/2/2021 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை சற்று முன்னர் அடைந்துள்ளது.2வது நாள் பேரணி இன்று காலை மட்டக்களப்பு தாளங்குடாவில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகர எல்லைக்குள் நுழைந்த போது பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது காத்தான்குடி நகரின் மத்திய பகுதியை பேரணி அடைந்துள்ளது.

இந்த பேரணியின் போது எங்கே எங்கே உறவுகள் எங்கே?, எரிக்காதே எரிக்காதே ஜனாஸாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐ.நா சபையே தலையிடு, வழக்கு வழங்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எஸ்.சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதழ் அறிமுகம் ஞானம் 249 ஆவது இதழில் மல்லிகைஜீவாவுக்கு அஞ்சலி ! ரஸஞானி


ஈழத்தின் மூத்த இலக்கியவாதியும் மல்லிகை இதழியலாளருமான  டொமினிக்ஜீவா அவர்கள்  கடந்த ஜனவரி 28 ஆம் திகதி அமரத்துவம் எய்தியதையடுத்த,      வாழ்நாள் இதழியல் சாதனையாளர் டொமினிக்ஜீவா என்ற தலைப்பில்,  அஞ்சலி செலுத்தும்வகையில்  நீண்ட ஆசிரியத்தலையங்கத்துடன் கொழும்பிலிருந்து  ஞானம் 249 ஆவது இதழ் வெளியாகியுள்ளது.

மல்லிகை ஜீவா மறைந்து மூன்று நாட்களில்  இம்மாதம் 01 ஆம் திகதி வெளியாகியிருக்கும்  ஞானம் இதழ்  அந்த அமரருக்குரிய உயர் கௌரவத்தை இவ்வாறு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தகுந்தது.

மல்லிகை இதழை 1966 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் எத்தனையோ  நெருக்கடிகளுக்கு மத்தியில் நடத்தி  நானூறுக்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிட்டும்


மல்லிகைப்பந்தல் வெளியீடாக ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைப்பதிப்பித்தவருமான  டொமினிக்ஜீவா கடந்த 28 ஆம் திகதி கொழும்பில் மறைந்ததையடுத்து இலங்கையிலும் புகலிட நாடுகளிலும்  வெளியாகும் தமிழ்ப்பத்திரிகைகள்  வானொலி  தொலக்காட்சி  ஊடகங்களிலும் இணைய இதழ்களிலும்  பலரது வலைப்பூக்களிலும் முகநூல்களிலும் பேசுபொருளாகியிருப்பவர் டொமினிக்ஜீவா.

இலங்கையில் சிங்கள ஊடகங்களும்  ஜீவாவுக்கு அஞ்சலிக்குறிப்புகளை வெளியிட்டுள்ளன.

ஜீவாவுடன் கருத்தியல் ரீதியில் முரண்பட்டவர்களும்கூட ஈழத்து இலக்கியத்திற்காக அவர் அர்ப்பணித்த வாழ்வை என்றும் கனம்பண்ணியவாறே  அவரது இழப்பினை அவரது வயது மூப்பின் காரணத்தால் ஏற்றாலும்,  அவரது வாழ்வை தத்தமது கண்ணோட்டத்தில் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

ஜீவாவின் மறைவுக்குப்பின்னர்  வெளியாகும்  நினைவுப்பதிகைகளிலும்  இணைய வழி காணொளி  நினைவேந்தல் அரங்குகளிலும்  இந்த  ஒருமித்த அஞ்சலியில் இழையோடும்  ஆழ்ந்த இரங்கலை அவதானிக்கமுடிகிறது.

இவ்வாறு உலகெங்கும்   ஜீவா  நினைவுகூறப்படும் வேளையில், கொழும்பில் தோன்றியிருக்கும் கொவிட் 19 இரண்டாவது அலை நெருக்குவாரத்திற்கும் மத்தியில் ஞானம் 249 ஆவது இதழை  மல்லிகைஜீவாவின் உருவப்படத்துடன்  வெளியிட்டு நீண்ட ஆசிரியத்தலையங்கத்தில் ஜீவாவின் வாழ்வையும் பணிகளையும் முடிந்தவரையில் சுருக்கமாக பதிவுசெய்துள்ளார் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்.

ஸ்வீட் சிக்ஸ்டி 2- திருடாதே - ச சுந்தரதாஸ்

 .



தமிழ் திரையுலகில் சிறு சிறு வேடங்களில் நடித்து படிப்படியாக முன்னேறி நட்சத்திர நடிகராக உயர்ந்தவர் புரட்சி நடிகர் எம்ஜிஆர். ஆரம்ப காலத்தில் இவர் கதாநாயகனாக நடித்த எல்லா படங்களும் சரித்திர கதைகளை அடிப்படையாக கொண்ட படங்களாகவே இருந்தன. இடையில் அவர் நடித்த சில சமூக கதைகளை கொண்ட படங்கள் வெற்றி பெறாத காரணத்தால் சமூகப் படங்களில் தொடர்ந்து நடிக்க எம்ஜிஆருக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சிவாஜியின் ரசிகர் மன்றத் தலைவராக பின்னர் உருவெடுத்த எழுத்தாளர் சின்ன அண்ணாமலை ஒரு சமூக கதையுடன் எம்ஜிஆரை அணுகினார் படத்தை தான் தயாரிப்பததாகவும் நடித்துத் தரும்படியும் கேட்டார். சமூக கதை அதிலும் திருடன் வேடம் என்று முதலில் பயந்த எம்ஜிஆர் பின்னர் உடன்பட்டார். 1957 ஆம் ஆண்டளவில் படப்பிடிப்பு தொடங்கியது. பல படங்களில் நடித்த சரோஜாதேவி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பு தொடங்கி குறுகிய காலத்திலேயே நாடகத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் எம்ஜிஆரின் கால் முறிந்தது.

இதன் காரணமாக படப்பிடிப்பு ஆறு மாதங்கள் தள்ளிப் போனது. இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை சின்ன அண்ணாமலையால் தாங்க முடியாது என்பதால் எம்ஜிஆரின் ஆலோசனையின்படி படத்தின் தயாரிப்பு ஏ எல் எஸ் புரடக்க்ஷன்ஸ் அதிபர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. கண்ணதாசனின் அண்ணனான சீனிவாசன் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். புதுமுக நடிகையாக வந்த சரோஜாதேவி இதற்குள் பிஸி நடிகை ஆகிவிடவே அவருடைய திகதிகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. சரோஜாதேவி என்று நடிக்க வருகிறாரோ அப்போது தான் எம்ஜிஆர் நடிக்கும் படியான சூழ்நிலை உருவானது.

மல்லிகை ஜீவாவுக்கு இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிடவேண்டும் யாழ்ப்பாணத்தில் நினைவு மண்டபமும் அமைக்கப்படல் வேண்டும்


“ மல்லிகை ஜீவா அவர்கள் ஈழத்து தமிழ்த்தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.  ஈழத்து எழுத்தாளர்கள்

பலருக்கு களம் வழங்கி ஈழத்து இலக்கிய செல்நெறிக்கு உந்து சக்தியாக விளங்கியவர்.

சாதாரண அடிநிலை சமூகத்தில் பிறந்து அச்சமூகத்தின் குரலாக இலக்கியத்தில் ஒலித்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில் 1966ஆம் ஆண்டு காலப்பகுதியில் மல்லிகை மாசிகையை ஆரம்பித்தவர்.

இடையில் போர்க்காலம் தோன்றிய வேளையிலும் சளைக்காது குறைந்த வளங்களுடன் மல்லிகையை வெளிக்கொணர்ந்தவர்.

இலங்கையில் தமிழ் படைப்பு இலக்கியத்திற்கு முதல் முதலில் தேசிய சாகித்திய விருதும் பெற்றவர். அத்துடன் தேசத்தின் கண் என்ற உயரிய விருதையும் சாகித்திய இரத்தினா விருதையும்,  கனடா இலக்கியத் தோட்டத்தின் “இயல் விருது”  உட்பட  பல விருதுகளும் பெற்றவர்.

மல்லிகைஜீவாவின் (1927 -2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் - அங்கம் -02 புறாக்கள் வளர்த்தார் ! தார்மீகக் கோபத்தை காண்பித்தார் ! ! முருகபூபதி


இலக்கியத்திற்கு அப்பால் மல்லிகை ஜீவா  ஆழ்ந்து நேசித்த பறவை இனம் புறா.

நூற்றுக்கணக்கான வகைகளைக்கொண்ட பறவை இனம் புறா மீது அவருக்கு அளவுகடந்த பிரியம். உலகில் சமாதானத்தின் சின்னமாக கருதப்படும் புறா, முற்காலத்தில் நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றத்திற்கும் உதவியிருக்கிறது.
நாமறிந்த புறா இனங்கள்: மணிப்புறா, மாடப்புறா, விசிறிப்புறா, ஆடம்பரப்புறா.


ஆனால், இதற்கு மேலும் பல புறா இனங்கள் உலகெங்கும்

வாழ்கின்றன. அவற்றில் சில படிப்படியாக மறைந்து வருகின்றன.
மல்லிகை ஜீவா யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு அருகில் வசித்தார். இன்றும் அவரது யாழ்ப்பாணம் இல்லம் தினமும் ரயிலின் ஓசையை கேட்டவண்ணமே அந்த வீட்டின் தலைவன் இல்லாமல் மௌனத்தவமியற்றுகிறது ! அந்த இல்லத்தின் பின்புறத்தில் ஒரு கூடு அமைத்து பல புறாக்களை வளர்த்தவர் ஜீவா.

அன்றாடம் வீட்டில் சமையலுக்கு உணவுப்பொருட்கள் இல்லாத நெருக்கடியான நிலை வந்துற்றபோதிலும் தாம் வளர்த்த புறாக்களுக்கு உணவளிப்பதை தவிர்க்காமல் அவற்றை நேசமுடன் பராமரித்து வளர்த்தவர் ஜீவா என்பது வெளியுலகில் பலருக்கும் தெரிய நியாயம் இல்லை.
புறா இனத்தின் வகைகள், அவற்றின் உயிர்வாழும் காலம், அவை விரும்பி உண்ணும் தானியங்கள், நினைவு தப்பாமல் பறந்து சென்று மீண்டு வரும் அதன் இயல்பான ஆற்றல் பற்றியெல்லாம் துல்லியமான அறிவுகொண்டிருந்தவர் ஜீவா என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.

தமிழரின் அவலங்கண்ட 'அகதிப் படகு'


இயற்றியவர்:- பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்



 





ஒருநாளா இருநாளா ஒப்பரிய ஐந்தாண்டு

   உல்லாசப் படகாகப் பலகடல்கள் சுற்றிவந்தேன்

வருகின்ற பயணிகளோ எனைத்தேடி நின்றார்கள்

   வனப்புமிகும் என்னழகு ஈர்த்ததிலே வியப்பேது?

திருமணமும் ஆகாத திடமான வாலிபர்கள்

   தேன்நிலவைக் கழிக்கவரும் மானின் விழி மங்கையர்கள்!

பருவத்து எழில்கொஞ்சும் உருவங்கள் அப்பாடா!

   பார்த்ததிலே இன்பத்தின் எல்லையெலாங் கண்டேனே! 


'நன்னன்'எனும் பெயர்கொண்டான் நாணயத்தை மறந்தறியான் 

   நாளெல்லாம் மறவாது என்சுத்தம் பேணிடுவான்

வன்னப்பூத் தேர்ந்தெடுத்து வகையாகச் சோடிப்பான்

   வடிவழகன் வாசனைக்கு ஏதேதோ பூசிடுவான்

மின்வேக மாயென்னை வெகுகவன மாயோட்டி

   வேடிக்கை யாயவனோ விளையாட்டுக் காட்டிடுவான்

என்னினிய பயணிகளை என்றுமவன் மகிழ்விப்பான்

   இன்முகத்து மாலுமியின் பொன்மனமும் நானறிவேன்

முருகபூபதியின் 25 ஆவது நூல் நடந்தாய் வாழி களனி கங்கை கிழக்கிலங்கை அரங்கம் செய்தி இதழில் தொடராக வெளியான வரலாற்றின் பதிவு பூபாலரட்ணம் சீவகன் அணிந்துரை ( ஆசிரியர் - அரங்கம் செய்திகள் )


கொழும்பு - பார்ப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை சொல்லும் ஒரு மண். இலங்கையின் தலைநகர் என்பதற்கு அப்பால் இலங்கையின் சரித்திரத்தில் மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு  மாநகரம். இலங்கை வாழ் தமிழரைப் பொறுத்தவரையிலும் கூட அவர்களின் தாயகம் வெவ்வேறு நகரங்களாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் கடந்த காலங்களில் அவர்களின் கதையோடு இணைந்துவிட்ட ஒரு ஊர் அது.

 

தமிழர் சந்தித்த கலவரங்கள் பெரும்பாலும் மையம் கொண்ட இடமாக கொழும்பு இருந்துள்ளது. அவர்களது


வாழ்விடமாக அது இருந்துள்ளது. அவர்களுக்கு பொருளாதார ரீதியாக வளம் கொடுத்த மண்ணாக அது இருந்துள்ளது.

 

வடக்கு -  கிழக்கில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் தலைநகர் வாழ்க்கையை நோக்கி ஓடிவருவோருக்கு கொழும்பு காண்பிக்கும் கோலங்கள் பல. ஆனால், எங்களைவிட, கொழும்புக்கு அண்மித்த நகரான நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி அண்ணனுக்கு அது கொடுத்த காட்சிகள் வேறானவை. அனுபவங்கள் வேறானவை.

 

அவற்றைக் கொண்டு கொழும்பின், அதன் அடிநாதமான களனி கங்கையின் தீரத்தில் நடந்த நிகழ்வுகளை இங்கு காவியமாக வடிக்க அவர் முயற்சித்திருக்கிறார்.

 

வீரகேசரி பல எழுத்தாளர்களை விளைவித்த ஒரு களம். அங்கு உருவானவர்களில் மிகவும் முக்கியமானவர்களில் ஒருவர் முருகபூபதி அண்ணர். அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் நான் அங்கு இல்லை.

எழுத்தும் வாழ்க்கையும் -- அங்கம் 27 நான்குவித நாக்குகள் ஒரு காவியத்தின் திருப்பம் ! இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே !! செய்தி ஊடகங்களுக்கு தீனி தந்த அரசியல் ! ! ! முருகபூபதி


இந்து சமுத்திரத்தாயின் அலையோசையையும் அந்த கடலின் மாந்தரையும் அவர்களது அன்றாட வாழ்வையும் சித்திரித்து நான் எழுதிய ஆரம்ப காலச்சிறுகதைகளுக்கு களம் வழங்கி என்னையும் அறிமுகப்படுத்தி,  இலக்கிய உலகில் எனது பெயரும் நிலைத்திருக்கச்செய்த மல்லிகை ஜீவா அவர்கள் பற்றிய  நினைவுப்பதிவுகளும்  வெளியாகி , நினைவேந்தல் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில் இந்த 27 ஆம் அங்கத்தை எழுதுகின்றேன்.

கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால்,  உலகெங்கும் வாழும்


தமிழ் முஸ்லிம் சிங்கள  கலை இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் ஆழமாக நேசித்த அதேசமயம்,  உள்நாட்டில் அவர்களின் இன்ப – துன்ப நிகழ்வுகளிலும் குறிப்பாக மரணச்சடங்குகளிலும் பங்கேற்று,  தனது சகோதர வாஞ்சையை காண்பித்த ஜீவாவின் பூதவுடல்  கொழும்பு கனத்தை மின் மயானத்தில் தகனமாகும்போது  அவரது அருமை ஏகபுதல்வன் திலீபனைத்தவிர வேறு நண்பர்கள், உறவினர்கள் எனச்சொல்லிக்கொள்ளத்தக்கதாக எவரும் இல்லை என்பதை அறிந்தபோது,   “ …….காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ..?   “ என்ற பாடல்வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

கொழும்பில் நண்பர் மேமன்கவி ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்ச்சியில்  பங்கேற்ற மூவினத்தவர்களும் நினைவுபடுத்திய மல்லிகை ஜீவாவின் இயல்புகள் அனைத்தும்  கலை, இலக்கியவாதிகளுக்கு முன்மாதிரியானவை.

அதனால் அவர் வரலாறாகியிருக்கிறார்.  அந்த வரலாறு எமது எழுத்தாளர்களுக்கும் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கும் சமகால இதழாசிரியர்களுக்கும்  பாடமாகவும் திகழும்.


இலங்கைச் செய்திகள்

ஆர்ப்பாட்ட கண்டன பேரணி களுவாஞ்சிக்குடியை சென்றடைவு 

கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணி ஆரம்பம்

காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம்

சட்டப்படி வேலை போராட்டம் கைவிடப்பட்டது

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி, பிரதமரை சந்திப்பு

தனியார் காணியில் விகாரை; நீதிமன்றம் செல்லுமாறு அங்கஜன் எம்.பி அறிவுரை

மணியுடன் இணைந்து செயற்பட்ட 9 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

காணாமல் போனோரது உறவினர்கள் வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்

பொத்துவில் - பொலிகண்டி பேரணி அமைதியாக நிறைவடைந்தது

 

ஆர்ப்பாட்ட கண்டன பேரணி களுவாஞ்சிக்குடியை சென்றடைவு 

தமிழ் கட்சிகளின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மூன்று நாள் தொடர் போராட்ட பேரணி நேற்று (3) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பித்து நேற்று இறுதியாக மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் நிறைவடைந்துள்ளது.

அபிராமி அந்தாதி ABIRAMI ANDHAATHI 11/02/2021

 SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia






















ABIRAMI ANDHAATHI 

Thursday the 11th February @ 4.00pm

 
“Andhaathi” (அந்தாதி, Antāti) is a classification of  Tamil Poetry in which, 
the last word of a previous verse comes as the first word of next verse.
Thus this kind of poem got its name, Antam (அந்தம்,the end) + ādhi (ஆதி, the beginning) = Antāadhi. 
Since this anthadhi was sung on goddess Abhirami it is known as Abhirami Andhaadhi. 

உதிக்கின்ற செங்கதிர்உச்சித்திலகம்உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம்மாதுளம் போதுமலர்க்கமலை 
துதிக்கின்ற மின்கொடிமென்கடிக்குங்கும தோயமென்ன 
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 

நூற்பயன் 

ஆத்தாளைஎங்கள் அபிராமவல்லியைஅண்டம் எல்லாம் 
பூத்தாளைமாதுளம் பூநிறத்தாளைபுவிஅடங்காக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும்கரும்பும்அங்கை 
சேர்த்தாளைமுக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.