கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..


பாலையின் சுடுமணலில்
வாழ்வையும் சுட்டவர்கள் நாங்கள்;
குளிர்க்காற்றில் ஆசைகளைக் கொய்து
விடுமுறையில் மட்டுமே கொஞ்சம்
வாழ்ந்துக்கொண்டவர்கள்..

போர்வைக்குள் சுடும்
கண்ணீரை மறைத்தவர்கள் நாங்கள்;
ஒட்டகத்தோடு சந்தோசத்தையும் விரட்டி
கனவுகளுள்
வயதை தொலைத்தவர்கள்..
வரிசையில் நின்று நின்றே
வானத்திற்கு
ஏணியைப் போட்டவர்கள் நாங்கள்;
கைப்பேசிக்கு தெரிந்த முத்தத்தில்
கருத்தரிக்காத முட்டைகளை உடைத்தவர்கள்..

மெல்பனில்: மூத்த - இளம் தலைமுறையினர் சங்கமித்த கவிஞர் ஒன்றுகூடல் மறைந்த கவிஞர்களையும் நினைவுகூர்ந்த கவிதா மண்டலம் - ரஸஞானி



மெல்பனில் நேற்றைய தினம் ஞாயிறன்று நடைபெற்ற கவிதா மண்டலம் நிகழ்ச்சியில் மறைந்த ஈழத்து, தமிழக கவிஞர்களையும் நினைவு கூர்ந்து கவிதைகள் வாசிக்கப்பட்டன.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் கவிஞர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில் கிளேய்ட்டன நூல் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
மெல்பனில் வதியும் மூத்த - இளம் தலைமுறையினர் தமக்குப்பிடித்தமான பிற கவிஞர்களின் கவிதைகளையும் தமது கவிதைகளையும் வாசித்து சமர்ப்பித்தனர்.

சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 07 சொடக்கு மேலே சொடக்குப்போடும் தாத்தாமாரின் கதை ஊடகங்களும் ராசிபலன் - ஆயுள் பலன் சொல்லும் சோதிடர்களும் - முருகபூபதி - அவுஸ்திரேலியா


எனது பால்யகாலத்தில் எனக்கு பல தாத்தாமார் இருந்தனர். அப்பாவின் வழியில் எவரும் இலங்கையில் இல்லை. அவர்கள் அனைவரும் தமிழகத்தில்.
அம்மாவின் வழியில் பலர் இருந்தனர். அம்மாவின் அப்பா பொலிஸ் தாத்தா 1956 இல் மறைந்த பின்னர் குருநாகலிலிருந்து குப்பமுத்து செட்டியார் என்ற பெயரில் ஒரு தாத்தா வந்து எங்களுடன் தங்கியிருந்தார்.
எமது தாய்மாமனாரின் மனைவியான அத்தையின் வழியில் அவரது அப்பா வேலு செட்டியார் என்ற தாத்தாவும்  மாத்தளையிலிருந்து வந்து அத்தையுடன் இருந்தார்.
இரண்டு செட்டிமாரும் அடிக்கடி சந்தித்து சுகநலம் விசாரித்துக்கொள்வார்கள்.  அப்போது அவர்கள் தத்தம் விரல்களை மடக்கி சொடக்கு போட்டுக்கொண்டே பேசுவார்கள்.  வேலு செட்டியார் மாத்தளையிலிருந்து வந்திருந்தமையால் அவரை மாத்தளை தாத்தா என்றும் குப்பமுத்து செட்டியார் குருநாகலிலிருந்து வந்திருந்தமையால் அவரை குருநாகல் தாத்தா என்றும் அழைப்போம்.

அவுஸ்திரேலியாவில் தமிழ்க் கவிதை இலக்கியம் மெல்பனில் ஞாயிறன்று நடைபெற்ற கவிதா மண்டலத்திற்கு முன்னோட்டமான குறிப்புகள் - முருகபூபதி

  
" கவிதையாக்கங்குறித்து முரண்பட்ட இரண்டு எண்ணங்கள் எம்மிடையே நிலவுகின்றன. இயல்பாகச் சிலருக்கு அமைந்த ஒருவகைப் படைப்பாற்றலின் வெளிப்பாடே கவிதை என்பர் ஒரு சாரார். இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தவர்கள், பயிற்சியினாற் பாடுவது கவிதை என்பர் மற்றொரு சாரார். இவ்விரு கூற்றுக்களிலே ஒன்றே உண்மை என்று நாம் ஏற்கவேண்டியதில்லை. அதுமட்டுமன்று, ஒன்றை மாத்திரம் பிரதானப்படுத்துவது, உண்மையைத்தேடும் முயற்சிக்கு வீணே வரம்புகட்டுவதுமாகும்."  இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கு முன்பே, பேராசிரியர் க. கைலாசபதியும் கவிஞர் இ.முருகையனும் இணைந்து எழுதியிருக்கும் கவிதை நயம் என்னும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழில் நாயன்மார்களுக்கு முன்னரும் பின்னரும் செய்யுள் வடிவத்தில் பாடப்பட்டவை, பின்னாளில் புலவர்களினால் மரபுசார்ந்து எழுதப்பட்டவை பாரதிக்குப்பின்னர் புதிய பரிமாணம் பெற்றது. பாரதி வசன கவிதையையும் அவருக்குப்பின்னர் வந்தவர்கள், புதுக்கவிதையையும் அறிமுகப்படுத்தினர்.
" எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப்புதிய உயிர் தருவோன் ஆகிறான். " என்று மகாகவி பாரதி தாம் எழுதிய பாஞ்சாலி சபதம் காவியத்தின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார்.

மூன்று இலங்கை தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் நாடு அரசு விருது



வன்னியாச்சி 15/04/2018






உலகச் செய்திகள்


புட்டினை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப் 

பாக்கிஸ்தானில் கிறிஸ்தவர்கள் நால்வர் சுட்டுக்கொலை




புட்டினை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார் டிரம்ப் 

03/04/2018 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் புட்டின் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசியில் உரையாடியவேளையிலேயே டிரம்ப் இந்த அழைப்பை விடுத்தார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இலங்கைச் செய்திகள்


வாஸின் மரண தண்­ட­னைக்கு எதி­ரான மேன்­மு­றை­யீடு விசா­ர­ணை திகதி அறிவிப்பு.!

இனி அமெரிக்க விசாவுக்கு இது கட்டாயமாம்.!





வாஸின் மரண தண்­ட­னைக்கு எதி­ரான மேன்­மு­றை­யீடு விசா­ர­ணை திகதி அறிவிப்பு.!

03/04/2018 வர்த்­தகர்  மொஹமட்  சியாம்  படு கொலை விவ­கா­ரத்தில்  மரண  தண்­டனை விதிக்­கப்­பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குண­வர்­தன உள்­ளி ட்ட குற்­ற­வா­ளி­களின் மேன்முறை­யீ­டு­களை எதிர்­வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல்  தொடர்ச்­சி­யாக விசா­ரணை செய்ய உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.   
Image result for வாஸ் குண­வர்­தன
தனக்கு எதி­ராக ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஊடாக வழங்­கப்­பட்ட மரண தண்­ட­னையை நீக்­கு­மாறு கோரி வாஸ், அவ­ரது மகன் ரவிந்து வாஸ்  உள்­ளிட்ட ஐந்து குற்­ற­வா­ளி­களும்  தாக்கல்  செய்த மேன்முறை­யீடு நேற்று  விசா­ர­ணைக்கு வந்த போதே உயர் நீதி­மன்றம் இந்த திகதி குறிப்பிட்­டது. 
அதன்­படி செப்டெம்பர் 25 ஆம் திகதி முதல் இவ்­வ­ழக்கு தொடர்ச்சியாக விசா ரணை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி.


தமிழ் சினிமா - பசிபிக் ரிம் அப்ரைசிங் – திரை விமர்சனம்



பசிபிக் ரிம் முதல் பாகத்தில் மனிதர்களின் உலகத்திற்குள் நுழையும் ஏலியன்களுக்கும், மக்களுக்கும் இடையே சண்டை நடக்கும். இந்த பாகத்தில் ஏலியன்கள் வரும் ரிம்மை மூடுவதற்காக மனிதர்கள் போராடுகிறார்கள்.

அதற்காக ரோபோட்களை உருவாக்கி அதன்மூலமே அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இதில் நாயகன் ஜான் போயகா ரேபோட் பாகங்களை திருடி தனியாக ரோபோட்டுக்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், ஜானை போலவே கேலி ஸ்பேனியும் ரோபோ பாகங்களை திருடி செல்கிறார்.
கேலி ஸ்பேனியை பின்தொடர்ந்து சென்று பார்க்கும் போது, அவளும் ரகசியமாக ரேபோக்களை உருவாக்கி வருகிறாள் என்பது ஜான் போயகாவுக்கு தெரிகிறது. இந்நிலையில் இருவரும் போலீசில் சிக்கிக் கொள்ள அவர்கள் மற்றவர்களுக்கு ரோபோக்களை இயக்கும் பைலட்டுகளாக நியமிக்கப்படுகின்றனர்.
ஜானுடன் மற்றொரு நாயகனான ஸ்காட் ஈஸ்ட்டும் ரேபோ பைலட்டாக வருகிறார். இவ்வாறாக ரோபோக்களை இருவர் அதனுள் சென்று இயக்க வேண்டும். இந்த முறைக்கு மாற்றாக டிரான்ஸ் மூலம் ரோபோக்களை இயக்க முடிவு செய்து அதற்கான வேலைகள் முடியும் நிலையில், திடீரென வரும் ரோபோ ஒன்று ரின்கோ குகுச்சியை கொன்று விடுகிறது.
ரோபோ ஏன் மனிதரை கொள்கிறது என்பது குறித்து விசாரிக்கும் போது, அதில் ஏலியனின் மூளை செயல்படுவது தெரியவருகிறது. கடைசியில் அந்த ரோபோவில் ஏலியனின் மூளை எப்படி வந்தது? அதனை இயக்குவது யார்? ஏலியன்கள், மனிதர்கள் உலகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஜான் போயகா, ஸ்காட் ஈஸ்ட்வுட், ஜிங் டியன், கேலி ஸ்பேனி, ரின்கோ குகுச்சி, பர்ன் கோமேன், அட்ரியா அர்ஜோனா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
ஸ்டீவன் எஸ்.டிநைட்டின் இயக்கத்தில் படம் சிறப்பான ஆக்‌ஷன் படமாக கண்ணுக்கு விருந்தளிக்கிறது. முதல் பாகத்தை போலவே படத்தின் கதை இருந்தாலும், காட்சிகளில் சில மாற்றங்கள் இருப்பது ரசிக்க வைக்கிறது. திரைக்கதை நீட்சி, ஆங்காங்கு தொய்வு என ஒருமுறை பார்க்கும்படியாக இருக்கிறது.
டேன் மிண்டல் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. லார்ன் பால்ஃப் பின்னணி இசையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் `பசிபிக் ரிம் அப்ரைசிங்’ அடிதடி கலாட்டா.
நன்றி tamilcinema.news