சங்கர் மகாதேவனின் இசைஇரவு என்பார்வை - செ.பாஸ்கரன்


.

ஞாயிறு மாலை மீண்டுமொரு இனிய மாலையாக மலர்ந்தது. சிம்பொனி என்ரரைனேர்ஸ் வழங்கிய இசைச்சிகரம் சங்கர் மகாதேவனின் இன்னிசை இரவு. சிட்னி மக்களுக்கு மீண்டுமொரு இனிய இரவை   வழங்கியதற்காக கதிர் அவர்களை பாராட்டுகின்றது தமிழ்முரசு. 5 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்தாலும் வழமையாக சரியான நேரத்திற்கு ஆரம்பிக்கும் சிம்பொனி என்ரரைனேர்ஸ் இம்முறை சற்று தாமதமாகவே தொடங்கினார்கள்

இதயமும் பழஞ்செருப்பும்! -ரிஷ்னா (தியத்தலாவ, இலங்கை)


.

வாழ்க்கை மீதான ஆவல்

கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து போகிறது..

யாரையும் பிடிக்கவில்லை

ஏமாந்தே மாய்ந்து போகும் 
என்னையும் எனக்குப்
பிடிக்கவேயில்லை!

சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு

உள்ள மதிப்பு.......
சாலையோரப் பூக்களுக்கு இல்லை தானே?

வெறுமையாய் இருக்கும் போது கூட

இப்படி இதயத்தில் வெம்மை
பரவியதில்லை..!
அனுபவங்கள் ஆயிரம!;

என்றாலும்....

திருந்தாத என் இதயத்தை தான் 
தேய்ந்த பழஞ் செருப்பால் 
நாலு சாத்து சாத்த வேண்டும்!!!!


Nantri:udaru

யுத்தத்தில் காணாமற் போன இன்னொன்று – கருணாகரன்


-          
maveerarஒழுங்குகள் சிதையும் நிலையை யுத்தத்தின்போது வெளிப்படையாகவே பார்க்கலாம். கண்முன்னே நிகழும் மாற்றங்கள். சடுதியான மாற்றங்கள். ஒரு கிராமம் ஒரு சில மணி நேரத்தில் அப்படியே கைவிடப்பட்டு வெறிச்சோடி விடும். ஒரு நகரம் கணப்பொழுதில் சிதைந்து போகும். கண்ணுக்கு முன்னே பிரமாண்டமாக விரிந்திருக்கும் கட்டிடங்கள் நடக்கின்ற குண்டு வீச்சில் நொடிப்பொழுதில் பொடியாகிக் கற்சிதிலமாகிவிடும். ஒரு அமைதியான நிரந்தர வாழ்க்கை மறு நொடியில் அகதி வாழ்க்கையாகி கொந்தளிக்கும் மனிதரைத் தெருவுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இடம், பொருள், நிலை எதுவும் நிரந்தரமற்றது என்பதை யுத்தத்தின்போது தெளிவாகவே பார்க்கலாம். எல்லா அர்த்தங்களும் அர்த்தமின்மை என்றாகிக் கொண்டிருப்பது யுத்தத்தின்போதே. எல்லா விழுமியங்களும் சிதிலமாகிவிடும் அப்போது. நிறங்கள் உதிரும் விதியைத் தன்னுடைய ஆயுள்ரேகையாகக் கொண்டது யுத்தம். 

மௌனம் கலைகிறது - 4 -


கிழக்கின் உடைவும் கருணாவும் தராக்கியும் - மௌனம் கலைகிறது - 4 - நடராஜா குருபரன்


நடராஜா குருபரன்
கிழக்கின் உடைவும் கருணாவும் தராக்கியும் - மௌனம் கலைகிறது - 4 -
எனது தொடரின் நான்காவது பகுதியை, எனது தொடரின் முன்னைய பகுதிகளை வாசித்த நண்பர் ஒருவர் முன் வைத்த விமர்சனத்தையும் அதற்கான பதிலையும் தந்து தொடர விரும்புகிறேன். ஏனேனில் நீண்டு செல்லவுள்ள தொடர முழவதும் கீழ்க்கண்டவாறான விமர்சனத்தை பலர் முன்வைக்க விரும்புவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.  ஆனால் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் யாவரும் இனிவரும் காலத்தில் மரபுவழியான சிந்தனை முறைகளில் இருந்து வெளியே வந்து கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அணுக வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
நண்பரின் விமர்சனம்:
அன்பின் குருபரன்
தங்களின் மௌனம் கலைகிறது தொடரை இரசித்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன்.

மறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா -யமுனா ராஜேந்திரன்

த டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம்-மறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா - GTNற்காக யமுனா ராஜேந்திரன்


05 ஜனவரி 2012 GTNற்காக யமுனா ராஜேந்திரன்
தமிழ்சினிமா ரசிர்களால் என்றென்றும் மறக்கமுடியாத சில்க் ஸ்மிதா, ஆந்திராவின் எலூரு எனும் இடத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பிறந்து, தனது 35 ஆம் வயதில், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னையில் தற்கொலை செய்து கொண்டு அல்லது கொல்லப்பட்டு மரணமுற்றார். இன்று நினைக்க என்றும் அது துக்க நாளாகவே இருக்கிறது.
மர்லின் மன்றோ உலகின் தேவதை என்றால் சில்க் ஸ்மிதா தென்னிந்தியாவின் தேவதை. குழந்தையின் பேதைமையும் இளம்பெண்ணின் வளர்பருவக் குறுகுறுப்பையும் கள்ளமின்மையையும் இவர்களது புன்னகையிலும் உடல்மொழியிலும் பார்க்க முடியும். இவர்களது மொழியும் கொஞ்சுமொழிதான். மர்லின் மன்றோ உலக சினிமாவிலும் வெகுஜனக் கலாச்சாரத்திலும் இலக்கியத்திலும் அமரத்துவம் பெறுவதற்குக் காரணமாக ஆர்தர் மில்லரும் பாப் பாடகி மடோன்னாவும் இருந்தார்கள். துரதிருஷடவசமாக சில்க் ஸ்மிதாவுக்கு காதலும் காமமும் குறித்த இயந்திரரீதியான தமிழ் பகுத்தறிவு இயக்குனர் வேலு பிரபாகரனும், பாலிவுட் இயக்குனர் மிலான் ருத்ரியாவும்தான் கிடைத்திருக்கிறார்கள்.

இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம் - காண பிரபா


ஆசியாவின் மிகப்பெரும் அறிவுக்களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் அழித்து ஒழிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டது. இந்த நூலகம் மீளவும் நிர்மாணிக்கப்பட்டு அண்மைய வருஷங்களில் மீளவும் இயங்கி வந்தாலும் இன்னமும் முன்னர் நிலைபெற்றிருந்த நூலகத்தில் இருந்த அரிய பல ஆவணங்கள், நூல்கள், ஏட்டுச் சுவடிகளின் மூலப் பிரதிகள் இல்லாது அந்த அரிய பல அறிவுச் சொத்துக்கள் இனிமேல் கிட்டாத நிலை தான் இருக்கப்போகின்றது. இது ஒருபுறமிருக்க, மூன்று தசாப்தங்களாக வீரியம் கொண்டிருந்த போர்ச்சூழலில் எத்தனையோ பல எழுத்தாளர்களின் அச்சு வாகனமேறிய நூல்களின் எஞ்சிய பிரதிகள் கூட, தாம் சந்தித்த இடப்பெயர்வுகளின் போது தொலைந்தும், அழிந்தும் போயின. அச்சுக்கு வராத பல பிரதிகளின் எழுத்து வடிவங்களுக்கும் இந்த நிலை என்பதைச் சில வருஷங்களுக்கு முன்னர் ஒரு எழுத்தாளரோடு பேசும் போது அவர் தம் அனுபவம் மூலம் அறிந்து கொண்டேன். இந்த நிலையில் ஏற்கனவே தம்மிடம் இருந்த நூல்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் வாசகர்கள் பலர், உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுகளின் போதும் பாதுகாத்து வைத்திருந்த நிலையும் இருந்திக்கின்றது.

இலங்கைச் செய்திகள்


பொட்டம்மானின் கட்டளைப்படியே அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்டனர் - கருணா தனது கட்டளையின்படி அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்படவில்லை எனவும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டம்மானின் கட்டளையின்படியே இந்த பிக்குகள் கொலை செய்யப்பட்டதாக புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரும், தற்போதைய இலங்கை

துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்புச் செயலாளர்அங்கீகாரம் வழங்கினார் – விக்கிலீக்ஸ்

துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் அங்கீகாரம் வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.வானொலிமாமா நா.மகேசனின் நூல் வெளியீடு 25.Feb

.

தீர்வு - சிறுகதை - அ. முத்துலிங்கம்


.

அடகு வைப்பதற்கு வீட்டிலே ஒன்றும் இல்லாவிட்டால், எல்லா பெறுமதியான பொருள்களும் முடிந்துவிட்ட நிலையில், குறுக்கு மூளை அப்பா அவனை அடகு வைப்பார். அவன் பெயர் உக்கோ. ஏப்ரல்  மாதம் வரும்போது அவன் தயாராகிவிடுவான். ஆப்பிரிக்காவில் ஏப்ரல் மாதக் கடைசியில்தான் மழைக்காலம் ஆரம்பமாகும். அடகு வைத்தால் மூன்று நான்கு மாதம் கழித்துதான் அவன் மீட்கப்படுவான். ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து தன் உடுப்புகளை அதற்குள் அடைத்தான். உடுப்புகள் என்பது அவன் பள்ளிக்கு அணியும் ஒரு கால்சட்டையும் ஒரு சேர்ட்டும்தான். மீதி இடத்தில் அவன் புத்தகங்களை நிரப்பினான். என்ன நடந்தாலும் அவன் படிப்பை கைவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

தமிழ் மக்களுக்கான பயிற்சிப் பட்டறை 25 Feb

.


பதவியை ராஜிநாமா செய்தார் ஜெர்மனி அதிபர்பெர்லின், பிப்.17: ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் உல்ஃப் (52) தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
christian-wulffதனக்கெதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சூழலில், பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார் உல்ஃப். தலைநகர் பெர்லினில் உள்ள பெல்லிவியு மாளிகைக்கு மனைவி பெட்டினாவுடன் வந்த அதிபர், ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்தது:
""ஏகோபித்த மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே ஜெர்மனியின் அதிபர் பதவிக்கு இப்போது தேவைப்படுகிறார். அத்தகைய தலைவருக்கு வழிவிடும் வகையில் எனது பதவியை இன்று ராஜிநாமா செய்கிறேன். நான் தவறுகள் செய்துள்ளேன். ஆனால் நான் எப்போதுமே நேர்மையானவன்'' என்றார்.
அதிபரின் ராஜிநாமா பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அடியாக அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது. அதிபரின் ராஜிநாமா குறித்து கருத்து தெரிவித்த மெர்கெல், ""அதிபரின் ராஜிநாமாவை மரியாதையுடனும், அதேசமயத்தில் வருத்தத்துடனும்'' ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
2010-ம் ஆண்டு ஜெர்மனி அதிபராகப் பதவியேற்ற உல்ஃப், ஜெர்மன் அதிபர்களிலேயே மிக இளம் வயதில் (51 வயதில்) அதிபராகப் பதவியேற்றவராவார். கடின முயற்சிக்குப் பின்னரே தனது "கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சியின்' சார்பில் உல்ஃபை அதிபராக்கினார் ஏஞ்சலா மெர்கெல்.

கனடாவை அடைவதற்காக ஒவ்வொருவரும் ரூபா 5 லட்சம்

.
கனடாவை அடைவதற்காக ஒவ்வொருவரும் ரூபா 5 லட்சம் செலுத்திய 250 ஸ்ரீலங்காவாசிகள் டோகோ நாட்டில் ஆதரவின்றி தவிக்க விடப்பட்டனர்

- தேவா ஆதிரனின் மேலதிக தகவல்களுடன் லீயோன் பிரென்ஜர்மேற்கு ஆபிரிக்க நகரமாகிய டோகோவில் ஒரு தடுப்புக்காவல் மையத்துள் அடைக்கப்பட்ட ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சோகம் இது, கனடியப் பயணத்துக்காக வழக்கமான பொய் வாக்குறுதிகளை நம்பி புறப்பட்டு பின்னர் ஏமாற்றித் தள்ளிவிடப்பட்ட பின்னர் கையில் பணமின்றி போவதற்கு போக்கிடமுமின்றி தவிப்பவர்களின் கதை இது.

கடந்த ஒரு மாதகாலமாக பிரதானமாக ஸ்ரீலங்காவின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்து ஒரு தொகுதி ஸ்ரீலங்காவாசிகளின் துயரமான நிலை இதுதான். மற்றும் அவர்களில் சிலர் அந்த நாடு மற்றும் அந்தப் பிராந்தியம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் மஞ்சள் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டு உள்ளார்கள்.

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9) நிறைவுற்றது -

"என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே!! விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா?

அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும்? நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது?

போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த விருதை ஒரு ஆபரணமாக கேட்கவில்லை, ஆடம்பரத்திற்காகவோ புகழ் வரும் என்றெண்ணியோ இத்தனை வருடம் காத்திருக்கவில்லை. என்னை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு அங்கீகாரமாகக் கேட்டேன். அதோ அவன் பிரபல்யமானவன் அவன் எழுத்தைப் போட்டால் புத்தகம் நன்றாக ஓடுமென்று நீங்கள் நம்பும் நம்பிக்கையாகக் கேட்டேன். அது கிடைக்க எனக்கு நாற்பத்தாறு வருடம் ஆனது.

காவல் கோட்டம்’-சில பகிர்வுகள் -1


.

சாகித்திய அகாதமி விருது பெறும் திரு சு.வெங்கடேசன் அவர்களுக்கு தில்லி தமிழ்ச்சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில்[15.02.12 மாலை ஆறு மணி] நானும் பங்கேற்றுக் காவல் கோட்டம் குறித்த என் கருத்துக்கள் சிலவற்றைப்பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்; மேலும் தில்லியிலிருந்து பதிவாகித் தமிழகத் தென் மாவட்டங்களை எட்டும்[தூத்துக்குடி,திருச்செந்தூர்,கன்னியாகுமரி] ‘திரை கடல் ஆடி வரும் தமிழ் நாதம்’என்னும் வானொலி ஒலிபரப்பில் 16.02.2 காலை 5 45 அளவில் ‘காவல் கோட்டம்’குறித்த என் சொற்பொழிவு ஒலிபரப்பாகவிருக்கிறது.ஆயினும் இந்தப் பதிவுகளுக்கும் அந்த உரைகளுக்கும் வரிக்கு வரி தொடர்பு எதுவுமில்லை.இவை, வலை வாசகர்களுக்கு மட்டுமேயான தனிப் பகிர்வுகள்.


உலகச் செய்திகள்

.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆராய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க அரச உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என இலங்கை வந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க உதவி செயலாளர் மரியா ஒட்டேரே ஊர்ஜிதப்படுத்தினார்.

தமிழ் சினிமா


 

மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை: திரிஷா


திரிஷாவுக்கு படங்கள் குறைந்துள்ளன மூத்த நடிகை என பட உலகினர் ஒதுக்குவதாக ‘கிசு கிசு’ கிளம்பியுள்ளது. கதாநாயகர்களும், அவருடன் ஜோடி சேர விரும்பவில்லையாம். ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக தெலுங்கில் நடிக்கும் ‘தம்மு’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.

ஆனாலும் புதுப்படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்து ரிலீசான ‘பாடிகாட்’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இருந்தும் படங்கள் வரவில்லை. இது குறித்து திரிஷாவின் தாய் உமாகிருஷ்ணன் கூறும்போது பாடிகாட் படத்தில் திரிஷாவின் நடிப்புக்கு பரவலாக பாராட்டுகள் குவிந்தன. அடுத்து நல்ல கேரக்டருக்கான கதையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றார்.

அதே நேரம் திரிஷாவின் போட்டி நடிகைகளான அனுஷ்கா, காஜல் அகர்வாலுக்கு நிறைய படங்கள் குவிகின்றன. திரிஷா தற் போது தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு உள்ளார். அதிக மேக்கப் இன்றி வருகிறார். இது குறித்து திரிஷா கூறும் போது, அழகை மிகைப்படுத்தி காட்ட மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு தரும். அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். கண்களில் மட்டும் மேக்கப் போடுகிறேன். ஆடைகளிலும் எனக்கு பொருத்தமானவற்றையே தேர்வு செய்து அணிகிறேன் என்றார்.


அதுக்குள்ள மாத்திட்டாங்களே…! சினேகா புலம்பல்!!


மற்ற இயக்குனர்களின் சம்மதத்துடன் கோச்சடையானில் நடிக்கலாம் என்று இருந்தேன்; அதுக்குள்ள என்னை மாற்றிவிட்டார்களே… என்று நடிகை சினேகா வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்யவிருக்கும் நடிகை சினேகா, தற்போது விடியல், முரட்டுக்காளை என இரு தமிழ் படங்களிலும் ஜோஸட்டன்டே ஹீரோ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களில் நடித்து முடித்ததும் திருமணம் செய்யவிருப்பதாக ஏற்கனவே சினேகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.இந்நிலையில் ரஜினியின் கோச்சடையான் படத்தில், ரஜினியின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைத்தது. இதனால் திருமண தேதி தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வந்தநிலையில், சினேகாவை நீக்கிவிட்டு ருக்மணியை தேர்வு செய்துள்ளனர்.

இது குறித்து சினேகா அளித்துள்ள பேட்டியில், கோச்சடையான் படத்தில் நடிக்க கால்ஷீட் பிரச்னைகள் இருந்தன. நான் நடிக்கும் மற்ற படங்களின் இயக்குனர்கள் சம்மதத்துடன், கோச்சடையான் படத்தில் நடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்குள் என்னை மாற்றிவிட்டனர், என்று கூறியிருக்கிறார்

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?


ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் உலக நாயகன் கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.
ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார் அல்லவா. அதில் நடிக்குமாறு கமல் ஜாக்கியை அணுகியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்ற தகவலையும் கமல் கசிய விடவில்லை.

தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் வந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த விழாவில் அவர் கமல் ஹாசனின் நடிப்பை மனதாரப் பாராட்டினார்.
ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.