வாழ்வென்பது வரமாகும்
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம்- 71 பாட்டி சொல்லித்தந்த மகா பாரதக் கதையில் இயல்புகள் ! பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ … ? ! முருகபூபதி
எனது சிறிய பராயத்தில், எனது பாட்டியாரிடம் ( அம்மாவின் அம்மா
தையலம்மா ) கதை கேட்டு வளர்ந்திருக்கின்றேன். எனது வாழ்க்கையில் முதல் ஆதர்சமே இந்தப் பாட்டிதான்.
இவர்பற்றி ஏற்கனவே நிறைய
எழுதியிருக்கின்றேன். மீண்டும் இந்தத் தொடரில்,
கனடா பயணம் பற்றியும் அதனைத் தொடர்ந்து கத்தார்
– இலங்கை பயணங்கள் பற்றியும் எழுத நேர்ந்திருக்கின்றபோதும் எமது குடும்பத்தின் குலவிளக்கான பாட்டியை நினைத்துக்கொள்கின்றேன்.
பாட்டிதான் மகாபாரதக் கதைகளை, இராமாயணக் கதைகளை, பஞ்சதந்திரக் கதைகளை, தென்னாலிராமன்
கதைகளை முதல் முதலில் எனக்குச் சொல்லித்தந்தவர்.
ஒருநாள் இரவு நான் உறங்கும் வேளையில் பாட்டி சொன்ன கதையை இந்த அங்கத்தில் சொல்கின்றேன். இது மகா பாரதக் கதை.
திருதராஷ்டிரனுக்கு கண்
பார்வை இல்லை. தனது மூத்த மகன் துரியோதனனையும் தனது தம்பி பாண்டுவினது மூத்த மகன் தருமனையும் அழைத்து, அஸ்தினாபுரம் நகரத்தை சுற்றிவந்து பார்த்து நிலைமை
எவ்வாறிருக்கிறது..? என்று சொல்லுமாறு கேட்டாராம்.
இருவரும் ஆளுக்கொரு திசையில்
சென்று பார்த்துவிட்டு திரும்பிவந்து தகவல் சொன்னார்களாம்.
துரியோதனன், தனது அவதானத்தின்
பிரகாரம் மக்களின் மோசமான ( பொய் – சூது – திருட்டு – மோசடி – அயோக்கியத்தனம்
) பக்கங்களையே சொல்லிக்கொண்டிருந்தானாம்.
அவனது பேச்சை நிறுத்திவிட்டு, தருமன் பக்கம் திரும்பிய திருதராஷ்டிரன், “ தருமா இனி நீ சொல். நீ எதனை அவதானித்தாய்..?
“
எனக்கேட்டாராம்.
“ பெரிய தந்தையாரே… நான் பார்த்த மக்கள் அனைவருமே
எனது பார்வையில் நல்லவர்கள்தான். அவர்களிடம் சில குறைபாடுகள் இருந்தபோதிலும் மேன்மையான
இயல்புகளும் இருந்தன. அவைதான் எனது கண்களுக்குத் தென்பட்டன. எங்கள் அஸ்தினாபுரத்து
மக்கள் உங்கள் ஆட்சியில் நன்றாக இருக்கிறார்கள்.
“ என்று தருமன் சொன்னார்.
கௌரவம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்
தமிழ் திரையுலகில் தன்னுடைய கௌரவம் எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதை பறை சாற்றுவது போல் நடிகர் திலகம் நடித்து 1973ல் வெளிவந்த படம் கௌரவம்! படத்தின் நாயகன் தோல்வியையே விரும்பாத இறுமாப்பு கொண்ட ஒரு வக்கீல். தன்னுடைய கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யலாம், தனது வாதத் திறமையால் கொலைகாரனுக்கும் வாதாடி விடுதலை வாங்கி தரலாம் , இரவு பகல் என்று இல்லாமல் எந்நேரமும் மது அருந்தலாம் , தன்னுடைய பணியாளர்களிடம் எகிறிப் பாயலாம் , என்பது போன்ற பல குணாம்சங்களை கொண்ட ஒரு கதா பாத்திரத்தை ஹீரோவாக படைத்தது கதாசிரியரின் மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தியது.
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வடபகுதி நிகழ்ச்சிகளில் மாணவர் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும்
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36
வருடங்களுக்கும்
மேலாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப் பெறும் வடமாகாண மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும், தகவல் அமர்வும் அண்மையில் வவுனியா, யாழ்ப்பாணம்,
முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றன.
வவுனியா பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம்
29 ஆம்
திகதியும், யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் செயலக
மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் 01 ஆம் திகதியும் , முல்லைத்தீவில் 02
ஆம்
திகதி விசுவமடுவில் திறன்விருத்தி கேட்போர் கூடத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வவுனியாவில் நீண்டகாலமாக இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ( Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD ) தலைவர் திரு. த. கணேஷ் தலைமையிலும், உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் முன்னிலையிலும் வவுனியா பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடந்தது.
இலங்கைச் செய்திகள்
யாழ். – சென்னை: கப்பல் சேவை ஆரம்பிக்காவிடினும் 7 நாட்களும் விமான சேவை
பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்கும் பணி ஆரம்பம்
ஜனாதிபதியை சந்தித்த முஸ்லிம் தரப்பினர் 11 முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக பேச்சு
மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தால் இனி ஆபத்து
நயினாதீவு நாகதீப விகாரையில் விஹாராதிபதியாக 50 வருடங்கள்
யாழ். – சென்னை: கப்பல் சேவை ஆரம்பிக்காவிடினும் 7 நாட்களும் விமான சேவை
யாழ்ப்பாணத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை முன்னர் திட்டமிட்டபடி ஜூலை 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படாவிட்டாலும், அன்றைய தினம் முதல் வாரத்தில் ஏழு நாட்களும் இந்தியாவிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானசேவைகள் இடம்பெறும் என யாழ் சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.
உலகச் செய்திகள்
நான்கு பொதுமக்கள் பலி - உக்ரைனில் தொடர்மாடி மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
அமெரிக்க ஆளில்லா விமானங்களுடன் மோத வந்த ரஷ்ய போர் விமானங்கள்
ஜெனினில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் காசா மீது தாக்குதல்
ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேல் படை நடவடிக்கை தொடர்ந்து நீடிப்பு
ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேல் வான் தாக்குதல்: 8 பலஸ்தீனர் பலி நகரில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்
நான்கு பொதுமக்கள் பலி - உக்ரைனில் தொடர்மாடி மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
மேற்கு உக்ரைனிய நகரான லெவிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்ய ரொக்கெட் குண்டு விழுந்து குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் கிலிமென்கோ தெரிவித்துள்ளார்.