மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
வேதத்தின் முதல்வன் விடமுண்டன் கண்டன்
ஆதியந்தம் இல்லான் அருளொளியாய் நிறைவான்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை 28/04/2024 - 04/05/ 2025 தமிழ் 16 முரசு 03 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
இயற்கையை தெய்வமாக வழிபடும் மக்கள், அதன் சீற்றத்தை காணும்போது,
அதற்கான காரணம் தெரியாமல் புலம்புவார்கள்.
அத்தகைய ஒரு புலம்பல் மனநிலையில் நானும் 2004 ஆம்
ஆண்டு இறுதிப்பகுதியில் இருந்தேன்.
எனது அம்மா, அதற்கு முதல் வருடம் மே மாதம் இறந்த செய்தியினால்
வந்த அதிர்ச்சியை கடந்து சென்றுகொண்டிருந்தபோது,
அடுத்து வந்த ஆண்டுகளிலும் பதறவைக்கும் செய்திகளே என்னை வந்தடைந்தன.
20-04- 2004 ஆம் திகதி என்னால் மறக்கவே முடியாத தினம், அன்றைய
அவளது கையடக்கத் தொலைபேசிக்கு வந்திருந்த சுருக்கமான செய்தி
இலக்கிய நண்பர் ராஜஶ்ரீகாந்தனின் மறைவைத் தெரிவித்தது.
சகோதரி தேவகௌரி ( தினக்குரல் ) தகவல் அனுப்பியிருந்தார். அதிர்ச்சியான அச்செய்தியை
அனுப்பிய அவருடனான இணைப்பு உடனடியாக கிடைக்காதமையினால், மல்லிகை இதழ் அலுவலகத்திற்கு
தொடர்புகொண்டேன். அங்கே எழுத்தாளர் ஆப்தீன், அச்செய்தியை உறுதிப்படுத்தினார். அவர்
தந்த இலக்கத்தில் தொடர்புகொண்டபோது, ராஜஶ்ரீகாந்தனின் மூத்த மகள் அபர்ணா மறுமுனையில்
கதறினார்.
ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளின் வளர்ச்சியில்
காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்களின் வரிசையில் ராஜஶ்ரீகாந்தன்
குறிப்பிடத்தகுந்தவர். வடமராட்சியில் வதிரி என்னும் கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்து
தனது 56 ஆவது வயதில் கொழும்பில் மறைந்தார். சிறுகதை, கட்டுரை, விமர்சனம்,
திறனாய்வு, இதழியல், மொழிபெயர்ப்பு முதலான துறைகளில் ஈடுபட்டவர்.
வடமராட்சியில் அடிநிலை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த பெரியார் சூரன் அவர்களினால் எழுதப்பட்ட சுயசரிதையை கையெழுத்துப் பிரதியிலிருந்து அச்சுப்பிரதியாக பதிப்பித்து வெளியிட்டவரும் ராஜஶ்ரீகாந்தன்தான்!
இந்த குறிப்புகளுடன்தான், இலங்கை தேசிய கீதத்தை
இயற்றிய கவிஞரை நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம்.
இம்முறை காலிமுகத்திடலில் சுதந்திர தின விழாவில்
முதலில் சிங்களத்திலும் இறுதியில்
தமிழிலும் இந்தக்கீதம் இசைக்கப்பட்டது.
ரசிகப்பெருமக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த
வேண்டும். சிறிது காலத்தில் அந்த
நடைமுறையை அரசு மாற்றியது. திரைப்படம்
தொடங்கு முன்னர் காண்பித்தார்கள்.
மக்கள்
காலப்போக்கில் தியேட்டர்களுக்கே செல்வதை குறைத்தபின்னர் தேசிய கீதம்
காண்பிப்பதும் படிப்படியாக குறைந்தது.
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு
பல்கலைக்கழக மாணவர்களும்,
படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில்
முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது.
அப்போது கைதானவர்கள்தான்
ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன், உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள்.
இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா
இந்தப்பெயர்களை, அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – என். எம். பெரேரா
– பீட்டர்கெனமன் ஆகியோரின் ( ஶ்ரீல. சுதந்திரக்கட்சி – சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட்
கட்சி ) கூட்டரசாங்கத்தின் காலத்தில் நீதியரசர் அலஸ் தலைமையில் நடந்த குற்றவியல் நீதி
ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது வெளியான செய்திகளிலிருந்து அறிந்திருந்தேன்.
தோழர் பாலாதம்பு குறிப்பிட்ட
அரசியல் கைதிகளுக்காக வாதிட்டார். எனினும்
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்தனர். கிளர்ச்சி நடந்தபோது ஆயிரக்கணக்கான
இளைஞர்கள், யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரது சடலங்கள் மாணிக்க கங்கையிலும்,
களனி கங்கையிலும் மிதந்தன.
கதிர்காமத்தில் நடக்கும்
சித்திரை புத்தாண்டு விழாக்களில் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த பிரேமாவதி மனம்பேரி,
அந்த புனித பிரதேசத்தில் ஒரு இராணுவ அதிகாரியினால் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தப்பெண்ணின் கதையை சித்திரிக்கும்
கங்கை மகள் என்ற சிறுகதையை பின்னாளில் எழுதியிருக்கின்றேன்.
இச்சிறுகதை “ கங்காவே துவெனிய “ என்ற தலைப்பில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரும்
இயக்கத்தில் நானும் இணைந்திருந்தேன்.
இவ்வியக்கம், கொழும்பில் மலேவீதியில் அன்றைய கல்வி அமைச்சிற்கும்
பரீட்சைத் திணைக்களத்திற்கும் அருகில் இயங்கிக்கொண்டிருந்த
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனையில் தோழர் லீனஸ் திஸாநாயக்காவால் முன்னெடுக்கப்பட்டது.
அந்த இயக்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தோழர் சண்முகதாசன், வாசுதேவ
நாணயக்கார, குமாரி ஜயவர்தனா, தினேஷ் குணவர்தனா
( இன்றைய பிரதமர் ) ஆகியோருடைய பெயர்களுடன் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது.
குறிப்பிட்ட இலங்கை ஆசிரியர்
சங்க பணிமனையில் நானும் சிறிது காலம் வேலை செய்தேன். அச்சங்கம் வெளியிட்ட ஆசிரியர்
குரல் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தேன். தற்போது இங்கிலாந்தில்
வதியும் தோழர் காதர், எமக்கு அரசியல் வகுப்பு
நடத்தி, சுயநிர்ணய உரிமை பற்றிய விளக்கங்கள்
அளிப்பார்.
1977 ஆம் ஆண்டு
நடந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் படுதோல்வியடைந்து, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக்கட்சியும்
மிகக் குறைந்த ஆசனங்களையே பெற்றது.
அதனால், தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதிநிதியான அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார்.
அதிகாரம் 8 : கொண்டாட்டம்
ஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள்.
வேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாள் புங். குளிர் காலம் வானம் இருண்டு கிடந்தது. மெதுவாக நடந்து ஜோசுவாவின் காரைச் சேர்ந்தாள். கதவைத் திறந்து, கார் சீற்றைச் சரித்துவிட்டு குளிர் உடுப்பின் தொப்பியால் தன் தலையை மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்தாள். இனி அவளைத் தெருவில் போகும் ஒருவரும் கண்டுகொள்ள முடியாது.
ஜோசுவா தன் கழுத்தைச் சரித்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தன் வாயைச் சுழித்தாள். அந்தச் சுழிப்பு அவன் மனதைக் கிறங்க வைக்க காரை மெதுவாகக் கிழப்பினான்.
இந்தக் காட்சியை கார்த்தரிப்பிடத்தில் இன்னொரு காருக்குள்ளிருந்து மக்காறியோ பார்த்துக் கொண்டிருந்தான்.
கார் ஹோட்டலை அடைந்ததும் காரைவிட்டு இறங்க மறுத்தாள் புங்.
“நான் வரமாட்டேன். எனக்குப் பயமாக இருக்கின்றது” அடம்பிடித்தாள் புங்.
அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அவளை இறுக அணைத்து அவளின் கன்னத்தில் ஒரு உம்மாக் கொடுத்தான் ஜோசுவா. குளிரினால் உறைந்து போயிருந்த அவள் கன்னங்கள் சில்லென்று இருந்தன. முத்துக்குளித்த முதல் சுகானுபவத்தில் மூச்சுத் திணறினான் ஜோசுவா.
“பொறு… பொறு… விட்டால் நீ இங்கேயே விஷயத்தை முடித்துவிடுவாய்” சொல்லிக் கொண்டே காரைவிட்டு இறங்கினாள் புங். ஜோசுவாவின் பின்னாலே அற நனைந்த கோழிபோல உரசிக்கொண்டு நடந்தாள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்
சிட்னியில் நடந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வில்,
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் சந்தித்த வசுந்தரா பகீரதனின் வாசிப்பு அனுபவம்
குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டபோது, மேற்குறிப்பிட்ட வரிகளே எனது மனதில் தோன்றியது.
தான் ஒரு இலக்கிய ஆளுமையின்
உறவினர் என்பதே தெரியாமல் வளர்ந்த ஒரு தேர்ந்த வாசகிதான் இந்த வசுந்தரா ! அத்தகைய இவர் பற்றிய அறிமுகத்தைத்தான் இம்முறை எனது
தொடரான வாசகர் முற்றத்தில் வழங்கவிருக்கின்றேன்.
வீரகேசரியில் நான் பணியாற்றியபோது அங்கே
அன்று தொடங்கிய நட்பு, சகோதர வாஞ்சையாக அவர் அவுஸ்திரேலியா சிட்னியில்
குடும்பத்துடன் வசிக்கத்தொடங்கிய காலத்திலிருந்தும் தொடருகிறது.
யாழ்ப்பாணம், நல்லூர் பிரிவிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர்: சுப்பிரமணியம் – ஜெயமணி தம்பதியர்.
தனது ஆரம்பக் கல்வியை
கொக்குவில் நாமகள் வித்தியாலயத்திலும், உயர்வகுப்பை அவ்வூருக்கு மகுடமாக விளங்கும் கொக்குவில் இந்துக்
கல்லூரியிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம்
பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து தொழிற்கல்வியை பெற்றார்.
வசுந்தராவிடம், வாசிப்பு பழக்கம் எவ்வாறு தோன்றியது..? வளர்ந்தது…? எனக்கேட்டேன்.
வசுந்தரா: மிகச்சிறிய வயதிலேயே வாசிப்பு பழக்கம் எனக்கு வந்துவிட்டது.
ஆரம்பக் கல்வியில் வாசிப்பு ஒரு பாடமாக இருந்துவந்தது.
எனது தந்தையார்தான் வாசிப்பை எனக்கு ஊக்குவித்தவர். என்னை மட்டுமல்லாமல், எனது தாயார், உடன்பிறந்தவர்களையும் வாசிப்பை நேசிக்க
வைத்தவர். அவர்தான் எங்கள் வீட்டு நுழைவாயில்
கதவின் நிலையில் வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்ற மில்க்வைற் வாசகத்தை
ஒட்டி வைத்திருந்தார். அந்த வாசகமே வேதவாக்குப்போல் புத்தகங்களின் முக்கியத்துவத்தை
எமக்கு உணர்த்தியது.
எமது தந்தையாருக்கு காலையில் எழுந்ததும் வீரகேசரி படிக்கின்ற
பழக்கம் இருந்தது. அதனால் சிறுவயதிலேயே எங்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
சிலவேளைகளில் அவருக்கு முன்னால் இருந்து அனைத்துச்
செய்திகளையும் தனக்கு வாசித்துக் கூறும்படி கூறுவார். அவர் ஒரு புத்தகப்பிரியர். எங்கள் வீட்டில் சிறிய
நூலகமே இருந்தது.
சிறுவயதில், அம்புலிமாமாவில்
தொடங்கிய வாசிப்பு அனுபவம், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள் என பலவற்றையும் தேடி
வாசிக்கத்தூண்டியது. பள்ளிப் பாடப் புத்தகங்களிடையே,
இவைகளும் பாடப்புத்தகங்கள்போல் சுமக்கப்பட்டன.
புத்தகப்பிரியரான எனது தந்தையார் 70 களில்
வெளிவந்த வீரகேசரிப் பிரசுரங்களை ஒன்றும் தவறவிடாமல் வாங்கி சேமித்து வைத்திருந்தார்.
இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக உள்ளது.
வசுந்தராவிடம், அவரது வாசிப்பின் தேர்வு எவ்வாறிருந்தது…? எனக்கேட்டேன்.
அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் உருவான முக்தா பிலிம்ஸ்
"புகழேந்தி" எனும் பிரமாண்டமா
18/02/2023 யில் சிட்னியில்
மேலதிக தொடர்புகளுக்கு
ஆதி திருநந்தகுமார் 0452553596
ஜனார்த்தன் குமாரகுருபரன்
ஐம்பதுக்கு மேற்பட்ட திறன் வாய்
அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்
மலையகத்தில் இந்திய அரசின் வீடமைப்பு திட்டம் குறித்து ஆராய்வு
"வைக்கோல் பட்டறை நாய்" என கூறிய மாநகர சபை உறுப்பினரின் ஒரு மாத சம்பளம் இரத்து
உலக மக்களை முட்டாளாக்கும் பழ. நெடுமாறனின் செயற்பாடு
2,000 இலங்கையருக்கு இஸ்ரேலில் தொழில்!
அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்
- ஜனாதிபதியின் மகா சிவராத்திரி செய்தி
மகா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன்.
பைடன், ஜின்பிங் இடையே சந்திப்பு இடம்பெற வாய்ப்பு
நியூசிலாந்தில் பூகம்பம்
உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை வீச்சு
கொவிட் தோற்றத்தை அறிவதில் உலக சுகாதார அமைப்பு உறுதி
சவூதியின் முதல் பெண் விண்வெளிக்குப் பயணம்
70 ரொஹிங்கிய அகதிகள் இந்தோனேசியாவில் தஞ்சம்
பைடன், ஜின்பிங் இடையே சந்திப்பு இடம்பெற வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனாவிலிருந்து அனுப்பப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வேவு பலூன் தொடர்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் ஆக்ஷன் த்ரில்லர் துணிவு திரைப்படம் OTT தளத்தில் பல சாதனை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் TOP 10 ட்ரெண்டிங்கில் ‘துணிவு’ படம் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘நொன் இங்கிலீஷ்’ (Non - English) படப் பிரிவுகளில் உலக அளவில் TOP 10 வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது ‘துணிவு’. 4-வது இடத்தில் ‘துணிவு’ படத்தின் இந்தி வெர்ஷன் இடம்பிடித்துள்ளது. ஜனவரி 12ஆம் திகதி பொங்கலுக்கு வெளியான துணிவு, அஜித்தின் திரைப்படத் துறையில் அதிக வசூல் செய்த படமாக ரூபா 200 கோடியை எட்டியது.
சமுத்திரக்கனி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்துள்ள இந்த ஆக்ஷன் அஜித்தின் அற்புதமான திரை பிரசன்னத்தாலும், எச் வினோத்தின் தரமான திரை இயக்கத்தினாலும் படம் வெற்றியடைந்துள்ளது. துணிவு அஜித்தின் ஆக்ஷன் என்டர்டெய்னரான இப்படம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் 90 கோடியை வசூலித்தது மற்றும் உலகம் முழுவதும் படத்தின் வசூல் முதல் வாரத்திற்குள் 150 கோடிகளை கடந்தது. நன்றி தினகரன்