மரண அறிவித்தல்     
               திருமதி திரேசம்மா துரைசிங்கம்


                                                              மறைவு 01 .10 .2010
சில்லாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மன்னார் புனித சவேரியார் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற்றியவரும் கிறேஸ்ரெயினில் வசித்து வந்தவருமான திருமதி திரேசம்மா துரைசிங்கம் அவர்கள் ஒக்ரோபர்
1-ந் திகதி இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற திரு சிறில் துரைசிங்கத்தின் அன்பு துணைவியும், காலம் சென்றவர்களான (சில்லாலையைச் சேர்ந்த திரு நீக்கிலாப்பிள்ளை, திருமதி அந்தோனியாப்பிள்ளை அவர்களின் அருமைப் புதல்வியும்,

அன்னம்மா, றீற்றா, லொறற்றா, காலம் சென்றவர்களான அன்ரன், செபஸ்தியன், மாகிறற், ஆகியோரின் அன்பு சகோதரியும்,

மனோறதி (Australia), அன்ரன் றாஜேந்திரா (Australia), றட்ணேந்திரா (USA), மகிழ்றதி (Australia), ரகுனேந்திரா (USA), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தமயந்தி (Australia), றீகனா (USA), மில்றோய் (Australia), மொயிறா (USA), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மார்க், யோசுவா, சுவிற்னி, மினேஷா ஆகியோரின் ஆசை பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Greystanes Our Lady Queen of Peace Roman Catholic Church-ல் ஒக்ரோபர் 7-ந் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 7:00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு
ஒக்ரோபர் 9-ந் திகதி சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு அதே தேவாலயத்தில் திருப் பலிபூசை ஒப்புகொடுக்கப்படும்
அதைத் தொடர்ந்து Lidcombe Rookwood St John of God Catholic Section- ல் நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மெல்பேர்னில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவு கலைமாலை

.
ஆஸ்திரேலியா மெல்பேர்னில் தியாக தீபம் திலீபனின் 23 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. இந்நிகழ்வில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு ஸ்கோஸ்பியில் அமைந்துள்ள சென்யூட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

மகாத்மாகாந்தியின் 141 ஆவது ஜனனதினம்

.
மகாத்மா காந்தியின் நினைவு நாள் அக்டோபர் இரண்டாம் திகதி
                                                                                               செ .பாஸ்கரன் 

மகாத்மா காந்தியின் நினைவு நாள் அக்டோபர் இரண்டாம் திகதி விமர்சையாக கொண்டாட படுகிறது. இது இன்னும் காந்தியை மறக்கவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு . காந்தி என்றாலே "மகாத்மா என்று சொல்லும் அளவிற்கு சிறு குழந்தைகளின் மனதிலும் பதியப்பட்டுள்ளது .ஒரு மிகப் பெரிய தேசமே காந்தி தேசம் என்று அவரின் பெயர் சொல்லி அழைக்கப்படும் அளவிற்கு காந்தி உயர்த்தப்பட்டுள்ளாரா அல்லது உயர்ந்து நின்றரா ?

ஆர்.சூடாமணிக்கு அஞ்சலி!

.                                                   - எம்.ஏ.சுசீலா -
ஆர். சூடாமணியின் அமைதியான இலக்கியப் பங்களிப்பு!தமிழ்க் கதை உலகில் ஆரவாரமில்லாத அழுத்தமும்,அமைதியும் கூடிய பல தரமான சிறுகதைகளையும் நாவல்களையும் தந்திருக்கும் ஆர்.சூடாமணி அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை உடல்நலக் குறைவு காரணமாகப் படுக்கையிலேயே கழிக்க நேர்ந்த சூடாமணிக்கு வாசிப்பும்,எழுத்தும் மட்டும்தான் வெளி உலகின் ஜன்னல்களாக இருந்து கொண்டிருந்தன.அது குறித்த கழிவிரக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு ‘மானுட அம்சம்’பற்றிய கரிசனையோடு தனது எழுத்துக்களைச் செதுக்கிக் கொண்டிருந்தவர் அவர்.


தமிழ் சினிமா

.
1 . கமலும் கருத்தும்... மைனாவில் ஒரு மாற்றம்!
2 . அசினுக்காகதான் இதெல்லாம்.... விஜய்யின் அட்ஜஸ்ட்மென்ட்!
3 . சென்னையில் நயன்தாரா விளம்பர ஷூட்டிங் பரபர...

1 . கமலும் கருத்தும்...     மைனாவில் ஒரு மாற்றம்!


ஒரு படம் கருவிலிருக்கும் போதே ஏறத்தாழ தெரிந்துவிடும், உள்ளேயிருப்பது காக்கையா, அன்னமா என்று! அப்படி தெரிந்து கொண்டு பலராலும் போற்றப்படும் படம்தான் மைனா. நடிகர் கமல், டைரக்டர்கள் பாலா, இராம.நாராயணன் போன்ற சாதனையாளர்கள் பார்த்து வியந்து போன இந்த படத்தை பற்றி ஒரு லேட்டஸ்ட் தகவல்.



மானிப்பாய் இந்துக் கல்லூரியின் இன்னிசை இரவு


மானிப்பாய்   இந்துக் கல்லூரியின் நூறாவது  ஆண்டு   நிறைவை  ஒட்டி  மானிப்பாய்   இந்துக்கல்லூரி மகளிர் கல்லூரி இனைந்து வழங்கும் இன்னிசை  இரவு



கனடாவில் இதுவரை 345 பேருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

.
கனடாவில் 85.2 சதவீதமானோருக்கு 2010 ஆம் ஆண்டு, முதல் காலப்பகுதியில் அகதி அந்தஸ்து கோரியுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை புதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம்

.
‘M, N’ தொடரிலக்கம்
‘M, மற்றும் ‘N’ என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற விண்ணப் பிக்கும் வகையில் புதிய நடை முறையொன்று அறிமுகப்படுத்தப் படுகிறது. இதற்கென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது. அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார். M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள், கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தை யுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது. சமாதான நீதவானின் சான்று படுத்தவோ, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச் சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது. M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டுகளை பெற்றவர்களின் தரவுகள் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மீண்டும் அதே ஆவணங்களை கேட்பதும் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவதும் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் வேலை என்பதாலேயே இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

நன்றி தேனீ  

மருத்துவம்

                                        .
  காரட் சாற்றின் மருத்துவ குணங்கள்


மிகவும் சத்தான சாறு காரட்தான்! மலச்சிக்கலை உடனடியாக அகற்றும். காரட் சாறு தயாரிக்கும் போது எலுமிச்சம்பழம், புதினாக்கீரை சேர்த்து தயாரித்து அருந்தினால் மலச்சிக்கல் அகலும். இந்தச் சாற்றில் உப்பைச் சேர்க்கக்கூடாது.

கண்களில் பலவீனம் உள்ளவர்கள், படிக்கும் போது கண்களில் எரிச்சல் உள்ளவர்கள், எழுத்தாளர்கள் தினமும் காரட் சாறு அருந்தி வந்தால் 'விழி லென்ஸ் பவர்' குறைவது தடுக்கப்படும். அதில் அதிக அளவு உள்ள வைட்டமின் ஏ, கண்களை தளர்ச்சி, பலவீனம் முதலியவை அண்டாமல் பார்த்துக் கொள்கிறது.




யோகர் சுவாமிகள்

.

யோகர் சுவாமிகளின் வாக்கியங்களில் இருந்து ஒரு சில நம் சிந்தனைக்கு. யோகர் சுவாமிகளைப் பற்றி அறியாதவர்களுக்கு இவர் யாழ்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்தவர்.

தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தால் இறைவன் ஆவாரோ
காலை மேலே ஏற்றிப் பார்த்தால் கடவுளைக் காண்பீரோ



நமது திருமணச் சடங்குகளில் மாற்றம் தேவையா?

   .
                                                                                                      நா. மகேசன்-

தோற்றுவாய்

பண்டைத் தமிழர்களுடைய திருமணங்கள் அன்பின் ஐந்திணை ஒழுக்கம் என்னும் முறையில் நடந்து வந்தன. வயதுவந்த ஆடவரும், மகளிரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு எற்பற்பட்ட இடத்து மனமொத்த காதல் அன்பில் திழைத்தபோது, தமக்குள் திருமணம் செய்துகொண்டு இனிதேவாழ்ந்து வந்தனர்.

கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!


                                              வ.ந.கிரிதரன்


கடந்த சனிக்கிழமை , செப்டம்பர் 18, எழுத்தாள நண்பர்களான தேவகாந்தனையும், டானியல் ஜீவாவினையும் இன்னுமொரு என்னுடைய நண்பருடன் ஸ்ஹார்பரோவில் அமைந்திருக்கும் 'காப்பி டைம்' கடையொன்றில் சந்தித்தேன். எழுத்தாளர் தேவகாந்தனை பற்றிக் கூறத்தேவையில்லை. தமிழ் இலக்கிய உலகு நன்கறிந்த எழுத்தாளர்களிலொருவர். இவரது பல நூல்கள

இலக்கியம் / படித்துசுவைத்தவை

.
கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை – பகிர்வு 9 : கவிதா(நோர்வே)

கனிமொழியின் கவிதைகளுக்கும் அவரின் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை.

பொருள் புதைந்து, பரந்து வரியும் கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை. எந்த ஒளிப்பும் மறைப்பும் இன்றி, நடைமுறையை இலகு மொழியில் எளிமையாக எடுத்துவரக்கூடியது புதுக்கவிதை.

சிறுகதை

.
அழியாச்சுடர்கள் வலைப்பதிவிலிருந்து .. அவர் நினைவாக ஒரு சிறுகதை:
இணைப் பறவை - ஆர்.சூடாமணி 

ஆர். சூடாமணியின் அமைதியான இலக்கியப் பங்களிப்பு!

வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாகப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள்.
 "யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா"
 "தெரியும்."
 "அங்கே வரேளா?"
 "ம்ஹூம்."
 "உங்களைப் பார்க்கத்தானே அவா...."



பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டி

.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டி 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை புதுடில்லியில் நடைபெற வுள்ளது. இதனையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்தியா பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.


இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 08

.
இலங்கையில் சோழர்கள்

பொலன்னறுவையிற் கிடைத்த கல்வெட்டு ஒன்று பரதன் ஒருவனைப் பற்றி குறிப்பிடுகின்றது. அது அவனைச் 'சாகரிக' என்று வர்ணிக்கின்றது. 'சாகரிக' என்பது கடலன் என்பதன் பிராகிருத மொழிபெயர்ப்பாகும். கடலன் என்பது புராதனமான தமிழகத்துச் சாசனங்களிற் பாண்டியர்கள் தொடர்பாகச் சொல்லப்படுகிறது.

கடலன் வழுதி என்பது அவற்றில் காணப்படுகின்ற ஒருவகை வர்ணனை. அவன் கடல் வாணிபம் செய்பவன் என்ற விளக்கம் இந்த கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள கப்பல் வடிவத்தினால் உறுதியாகின்றது. பரத என்று குறிப்பிடப்படுபவர் மீனவர் என்று கொள்வதற்கு நாணயம் ஒன்றில் காணப்படுகின்ற விபரங்கள் ஆதாரமாகின்றன.