மவுண்ட்றூயிட் தமிழ் கல்வி நிலைய ஆசிரியர் பயிற்சிப்பட்டறை – 2020 - பரமபுத்திரன்

.


மவுண்ட்றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை Colyton Public School இல் நடைபெற்றது. மவுண்ட்றூயிட் கல்வி நிலைய அதிபர் உப அதிபர்,  ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பங்குபற்றிய இப்பயிற்சிப் பட்டறையில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆசிரியர் திரு.ரகுராம் நவரட்ணம் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். கடந்த ஆண்டு (2019) நிர்வாகத் தலைவராக செயற்பட்ட திரு.சிவரத்தினம் சுதாகரன் அவர்கள் நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்களின் விருப்புடன் ‘ஆசிரியர் பயிற்சிப் பட்டறை 2019’ நிகழ்வினை முதல் முறையாக ஆரம்பித்திருந்தார். தற்போதைய (2020) பள்ளியின் நிர்வாக தலைவர் திரு. தேவராசா கில்பேட் அவர்கள், நிர்வாகத்தை ஒன்றுகூட்டி  ஆசிரியர் பயிற்சிப்பட்டறையை மீண்டும் இரண்டாவது தடவையாக ஒழுங்குசெய்திருந்தார். நிர்வாகத்தினரின் வேண்டுகைக்கு ஏற்ப கல்விநிலைய அதிபர் திரு.பாலசுப்பிரமணியம் முரளீதரன் அவர்கள் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கி பட்டறைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தார்.


அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்குத் தடை CORONA VAIRUS

.


அவுஸ்திரேலியாவின் NSW, VIC மற்றும் ACT பிராந்தியங்களில் அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்குத் தடை
நாளை திங்கட்கிழமை நண்பகல் முதல் அத்தியாவசியமற்ற தேவைகள் என்று கருதப்படும் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இந்தத் தடை எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள், வங்கித் தொழிற்பாடுகள், மருந்தகங்கள், பொருட்களைக் காவிச் செல்லும் செயற்பாடுகள் (freight and logistics), பொருட்களை வீட்டுக்கு எடுத்து வரும் சேவை (home delivery services) ஆகியவற்றுக்குப் பொருந்தாது என்று அறிவிக்கப்படுகின்றது.
மத வழிபாட்டிடங்கள், களியாட்டச்சாலைகள், மதுபானச்சாலைகள், இருந்து உணவருந்தும் உணவக உள்ளரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவை பொதுப் பாவனைக்குத் தடை செய்யப்படும் இடங்களில் உள்ளடங்கும். உணவுகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் (Takeaway) உணவகச் செயற்பாடுகளுக்குத் தடை இல்லை.
பள்ளிக்கூடங்கள் நாளையும் வழமை போல் இயங்கும் என்றும், ஆனால் பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்க விரும்பும் பெற்றோருக்கும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
விக்டோரியா மாநிலத்தின் பள்ளி விடுமுறைகள் முன் கூட்டியே வரும் செவ்வாய் முதல் ஆரம்பிக்கின்றன.
ATBC ஊடகச் செய்தி

எழுத்தாளர் ஏ.எஸ்.நவாஸ் அவர்கள் காலமானார் - மேமன்கவி

.

நண்பரும் எழுத்தாளருமான  ஏ.எஸ்.நவாஸ்  அவர்கள் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது. சுகவீனமுற்ற நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னதாக அவருடன் தொலைபேசியில் கதைத்து அவரின் நலத்தினை விசாரித்தேன்.
. மேமன் சமூகத்திலிருந்து பத்திரிகைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் பங்காற்றிக் கொண்டிருந்தவர். பத்திரிகைத்துறையிலான அவரது ஆர்வமும் அத்துறை ஊடாக அவருக்கு வாய்த்த ஊடகங்களின் வழியாக எல்லோருக்கும்  முக்கியத்துவம் கொடுத்தும், மதித்தும், அவர்களை பற்றி எழுதி  வந்தவர். அவரது செய்தி அறிக்கைகள் வெறுமனே செய்தி அறிக்கைகளாக அமையாது இலக்கியத் தரமிக்கவையாக இருந்தன. அதற்கான தரவுகளைத் தேடி அவர் பல  இடங்களில் அலைந்து திரிந்து உழைத்த உழைப்பினை நேரில் கண்டவன். கணிசமான  கலை இலக்கிய நிகழ்வுகளுக்குச் சென்று மிகச் சிறப்பான முறையில் அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிக்கைகளை விமர்சன முறையில் அவர் முன் வைத்த பாங்கு சிறப்பான முறையில் இருந்தது. இதற்குக் காரணம் அவர் குறிப்பாக எல்லா கலை இலக்கியவாதிகளுடன் நட்பையும் பேணி வந்தவர். என்பதுதான்.
 இப்படியாக அவரைப் பற்றி எழுதிச் செல்ல ஏராளம்.
பிரிந்து துயரில் முழ்கி இருக்கும் அவரது குடும்பத்தின் துயரில் நானும் பங்கேற்றவனாக......
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று (22. 03. 2020) பிற்பகல் மாபோல முஸ்லிம் மையவாடியில்;நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அவரது குடும்ப அங்கத்தினர்  மட்டுமே கலந்துகொள்ளும்  வகையில் நடைபெறும் என நண்பர் நவாஸின்  குடும்ப நண்பர் கிண்ணியா அமீர் அலி எனக்கு அறிவித்துள்ளார்..

கொல்லுங் கொரோனா - கவிஞர் த. நந்திவர்மன்



கிருமி கொரோனா எம்மைத் தாக்கக்
      கிலிதான் பிடித்து வாழ்கின்றோம்
இருமல் வந்து இறக்கும் நோயால்
      இதயங் கலங்கி நிற்கின்றோம்
செருமல் கேட்டால் கூட நாங்கள்
      செத்தோம் என்றே நினைக்கின்றோம்
வருமோ வருமோ என்றே பயந்து
      வாழ்வை இழந்து நிற்கின்றோம்.          1

எதனால் இந்த நிலைமை எமக்கு
      என்றே எண்ணிப் பார்த்தோமா?
முதலில் அதனை நினைத்துப் பார்த்து
      முழுதாய் வாழ முனைவோமா?
இதயந் தன்னில் அதனை ஏற்று
      இனிதாய் வாழ நினைப்போமா?
அதனை இல்லை என்றே மறுத்து
      அவனி மழுதும் அழிப்போமா?                  2

கோவிட் 19 எவ்வாறு பரவுகிறது



ATFIA 2020 விருது நிகழ்வு விமர்சனம்:



பங்குனி 15 ஞாயிற்றுக்கிழமை, சிட்னியில்பிளாக்டவுனில் அமைந்திருக்கும் "போமன்மண்டபத்தில் ஆஸ்திரேலிய தமிழ்த்திரை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக ATFIA  2020 விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் திரைத்துறை கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக நடந்த முதல் நிகழ்வு இதுதான் எனலாம்ஆகவே இவ்விழாவை நிகழ்த்திய நண்பர்  சிட்னி பிரசாத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

அரங்கை
அடைந்து உள்நுழைந்தோம்சிவப்பு கம்பள வரவேற்புஒலிஒளிப்பதிவு கருவிகளுடன் கலைஞர்களை கேள்விக்கணைகளுடன் வரவேற்றனர் குழுவினர். முடிந்து உள்நுழைந்தோம், மீண்டும் சிவப்பு கம்பளம்எம்மை வெண்ணிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேசை நாற்காலியில் அமரவைத்தனர். பொதுவாகஎம்மவர் நிகழ்வுகளில்நிகழ்ச்சியின் பெயர் அச்சடிக்கப்பட்ட பதாகை (Name Banner), மேடையின் பின் திரையில் தொங்கவிடப்பட்டிருக்கும்,  மேடையின் முன்புறம் இருபக்கமும் மின்விளக்கு கம்பங்கள் (Light Stands) மேடைக்கலைஞர்களை மறைத்தவாறு இருக்கும், அவ்வாறு இல்லாமல்புதிய தொழில்நுட்பஇலக்கமுறை திரையும் (Digital Screen),  வண்ண வண்ண மின்விளக்குகளும்எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும்கவர்ச்சியாகவும் இருந்ததோடு, எமது எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

சரியாக ஐந்து இருபது மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது, ஆரம்பத்தில் பாதி நிரம்பி காட்சியளித்த மண்டபம், போகப்போக மீதியும் நிறைந்துமண்டபம் நிறைந்த நிகழ்வாகவே அமைந்தது. மக்களுக்கு பரிச்சயமான இசைக்கலைஞர் சாரு ராமும்பல நாடகநடன மேடைகளில் மக்களுக்கு அறிமுகமான சகோதரி நர்த்தனா பார்த்தீபனும் கலகலப்புடனும் நகைச்சுவையுடனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏறக்குறைய ஐம்பது திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டதுஇத்தனை உள்ளூர் திரைப்பட படைப்பாளிகளும் கலைஞர்களும் ஆஸ்திரேலியாவில் ஒன்றாக கூடிய முதல் நிகழ்வு இதுவரை இதுவே என்று கூறலாம். விருதுகளுக்கிடையில் உள்ளூர் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும்பாடகர்களின் அசத்தலான பாடல்களும் இடம்பெற்றன, கண்களுக்கும் செவிகளுக்கும் வர்ண, வண்ணசுவையாக அமைந்திருந்ததுகண்ணுக்கும் செவிக்கும் மட்டுமல்லநிகழ்ச்சி முடிவில்வாய்க்கும் வயிற்றுக்கும் கூட சுவையான உணவு உபசரிப்பு அருமைஅருமை. கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட விருது கோப்பையின் தரம், திரைத்துறை வளர்ந்த நாடுகளில் திரைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் கோப்பைக்கு இணையாக உயர்ந்ததாக இருந்தது.

ஸ்வீட் சிக்ஸ்டி - ராஜா தேசிங்கு - சுந்தரதாஸ்

.


 தமிழ் திரையுலகில் புகழ்பூத்த தயாரிப்பாளராக திகழ்ந்தவர் கிருஷ்ணா பிக்சர்ஸ் அதிபர்  லேனா செட்டியார். எம்ஜிஆரின் மதுரை வீரன் படத்தை தயாரித்து மாபெரும் வெற்றி கண்டவர், மதுரைவீரன் வெற்றியை தொடர்ந்து எம்ஜிஆரின் நடிப்பில் அவர் தயாரித்த படம் தான் ராஜா தேசிங்கு. 

இந்த படம் இந்து முஸ்லீம் நட்பையும் உறவு முறையையும் அடிப்படையாகக்கொண்ட சரித்திர கதையாகும். இதில் ராஜாதேசிங்காகவும் தாவுத் கானாகவும் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் எஸ்எஸ் ராஜேந்திரன், பானுமதி, பத்மினி, என் எஸ் கிருஷ்ணன், டி கே ராமச்சந்திரன், பாலைய்யா, எம் ஜி சக்கரபாணி என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. படத்திற்கான திரைக்கதை வசனத்தை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார், ரகுமான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது கண்ணதாசனின் வீச்சான வசனங்களாகும். 

கர்ண பரம்பரை கதையான  ராஜா தேசிங்கு நாடகமாகவும் தெருக்கூத்தாகவும்  தமிழகமெங்கும் நடிக்கப்பட்ட கலைப் படைப்பாகும். சர்ச்சைக்குரிய இந்த கதையை படமாக்குவதில் எம்ஜிஆருக்கு பெரிய அளவில் ஆர்வம் இருக்கவில்லை . ஆனாலும் லீனாவின் மீதுள்ள மதிப்பினால் நடிக்க உடன்பட்டார், படத்தில் இந்துவாகவும் முஸ்லிமாகவும் எம்ஜிஆர் நடித்தார்.  இந்து எம்ஜிஆர் செஞ்சி மன்னனின் மகனாகவும்,  செஞ்சி மன்னனின் முஸ்லீம் ஆசை நாயகிக்கு பிறந்த எம்ஜிஆர் முஸ்லிமாகவும் நடித்தார்.  இந்த முஸ்லீம் கதாபாத்திரத்தை இலங்கையிலும் மலேசியாவிலும் ரசிகர்கள் ஏற்கவில்லை. இதனால் படம் இலங்கையில் திரையிடப்பட எதிர்ப்பு ஏற்பட்டு படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. 


இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்


அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்
நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிலனில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் இங்கு விட்ட தவறுகளிலிருந்தும் அவற்றின் விளைவுகளிலிருந்தும் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். நாங்கள் வீதிகளில் இறங்கத் தடை! காவல்துறையினர் தொடர்ந்து நடந்துகொண்டு, வீட்டிற்கு வெளியே வரும் யாரையும் கைது செய்கிறார்கள். எல்லாம் மூடப்பட்டுள்ளது!... வணிகம், மால்கள், கடைகள், இயக்கம் இல்லாத அனைத்து தெருக்களும். உலக முடிவின் உணர்வை எமக்கு தருகிறது!!
நான் வாழும் நாடான இத்தாலி இருண்ட யுத்தநாடு போல மாற்றப்பட்டுள்ளது! இப்படி ஒரு சூழலில் நான் ஒருபோதும் வாழ்வேன் என்று நினைத்ததில்லை!மக்கள் குழப்பமாகவும், சோகமாகவும், ஆர்வமற்றவர்களாகவும், உதவியற்ற வர்களாகவும் உள்ளனர். மேலும் இந்த யதார்த்தம் அவர்கள் மீது எவ்வாறு திணிக்கப்பட்டது என்பதையும், இந்த கொடிய நிலை எப்போது முடிவடையும் என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரிய தவறு என்னவென்றால், முதல் அறிகுறிகளின் ஆரம்பத்தில் மக்கள் வழக்கம் போல் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்! வேலை, பொழுதுபோக்கு மற்றும் விடுமுறைக் காலம் போன்ற உணர்வுகளுக்காக வீதிகளில் இறங்கினர்! எனவே நண்பர்களுடனும் விருந்துகளுடனும் கூட்டங்களாக ஒன்று கூடினர்! எல்லோரும் இவ்வாறு தவறு செய்தார்கள்! நீங்களும் அப்படித்தான்! என நினைக்கிறேன்.

இனவாதமே எங்களது பொது எதிரி



வடக்கு மாகாண அவைத் தலைவர்  சீ.வீ.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவானம் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி... 

கடவுளது பிரார்த்தனையை கருத்துடனே செய்திடுவோம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


           அறிவித்தல் வரும்வரைக்கும் 
           அணைத்துமுத்தம் தடுத்திடுவோம் 
           ஆரையுமே  தலைதொட்டு
           ஆசிகூறல் தவிர்த்திடுவோம் 
           கைகொடுத்து நிற்காமல்
           கைகூப்பி நின்றிடுவோம் 
           காலனான கொரனோவை
           காணுவதைத் தவிர்த்திடுவோம்  !

           கூழைக்  குடித்தாலும் 
           குளித்துவிட்டு குடியென்போம் 
           கந்தையே ஆனாலும்
           கசக்கியே கட்டுவென்போம்
           சுத்தமதை வாழ்வாக்கி
           வாழ்ந்துவரல் யாவருக்கும் 
           நித்தமுமே தேவையென
           மொத்தமுமே எண்ணுகிறார்  ! 

           வெளியிடத்தில் உண்ணுவதை 
            விரும்புவதை ஒதுக்கிடுவோம் 
            உளமகிழ நண்பருடன் 
            உலாபோதல் தவிர்த்திடுவோம் 
            வெறுமையென நினைத்தாலும்
            தனிமைதனை தேர்ந்தெடுப்போம்
            கொரனோவை விரட்டுவென
            முறையிடுவோம் இறையிடமே  ! 

இது கொரோனா அல்ல - ப தெய்வீகன்

.


உலகின் உயிர்குலையை தொற்றுநோய் கிருமிகள் தின்று செமிக்க முயன்ற காலங்களிலெல்லாம் அந்த கிருமிகளிடம் தப்புவதற்கு மக்கள் தங்களை தனிமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போது பின்பற்றப்படுகின்ற social distancing எனப்படும் நோய்க்கால பண்பாட்டு வடிவமானது மிகப்புராதனமானது. இவ்வாறு தப்பி வந்தவர்கள் பலர் தாங்கள் தனிமையிலிருந்த காலப்பகுதியில் பல கலைவடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஐரோப்பாவையும் ஆசியாவையும் 13 ஆம் நூற்றாண்டில் தின்று தொலைத்த பிளேக் நோயினால் 20 கோடி மக்கள் உயிரிழந்தார்கள். 1347 முதல் 1351 ஆம் ஆண்டுவரை பிளேக் தொற்றுநோய் கிருமியால் இடம்பெற்ற இந்தப்பலிகள்தான் மனிதகுல வரலாற்றில் இதுவரையில் தொற்றுநோய் ஏற்படுத்திய மிகப்பெரிய அழிவெனப்படுகிறது. மத்திய ஆசியாவில் உருவாகி வர்த்தக கப்பல்களின் வழியாக ஐரோப்பாவில் பரவி சுமார் அறுபது சதவீத சனத்தொகையை அழிந்தொழித்தது இந்த பிளேக் தொற்றுநோய். இதிலிருந்து ஐரோப்பா மீண்டுவருவதற்கு இரண்டு நூற்றாண்டுகளானது எனப்படுகிறது.
இந்த நோய்க்காலப்பகுதியை புனைவின் வழியாக வெளிக்கொண்டுவந்தவர் இத்தாலிய எழுத்தாளர் Giovanni Boccaccio. இவர் எழுதிய நூறுகதைகளைக்கொண்ட The Decameron என்ற நூலானது இன்றுவரை உலக இலக்கியத்தின் உன்னதமாக கொண்டாடப்படுகின்றதொரு பிரதியாகும்.
பிளேக் நோய் இத்தாலியில் பரவத்தொடங்கிய காலப்பகுதியில் தங்கள் வீடுகளிலிருந்து தப்பியோடுகின்ற ஏழு யுவதிகளும் மூன்று இளைஞர்களும் நோய் அண்டாத தூரக்கிராமம் ஒன்றுக்கு ஓடிச்சென்று தஞ்சமடைகிறார்கள். வெளி உலகோடு எந்தத்தொடர்புமில்லாத இவர்கள் பத்துப்பேரும் இரண்டு வாரங்களை தனிமையில் களிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மாலைவேளை, பத்துப்பேரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் வேலைசெய்வதற்கு ஒரு நாளும் மத வழிபாடுகளுக்கும் ஒருநாளும் என்றும் போக, இரண்டு வாரங்களிலும் மீதமுள்ள பத்து நாட்களிலும் பத்துப்பேரும் சொன்ன கதைகளின் நூறு கதைகள் கொண்ட தொகுதி The Decameron .

இலங்கைச் செய்திகள்


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பூட்டு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பூட்டு

சவால்களை எதிர்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் தயாராகுங்கள்

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த எம்மால் முடியும்

யாழில் கொரோனாவின் பாதிப்பை உணரவில்லை; பரவினால் பாரதுரமானது

ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெறாது; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி!



யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பூட்டு



உலகச் செய்திகள்


கொவிட்-19: இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் முடக்கம்

கொவிட்-19: உலகில் உயிரிழப்பு எண்ணிக்கை 7000ஐ தாண்டியது

43 வயது தாய்க்கு முதல் தடுப்பு மருந்து சோதனை

இரு வார காலமாக முடக்கப்பட்டுள்ள நிலையில் இத்தாலி

கொரோனா மரணம் 10,000ஐ தாண்டியுள்ளது

இத்தாலியில் 2,600க்கும் அதிக மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று



கொவிட்-19: இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகள் முடக்கம்
Monday, March 16, 2020 - 6:00am

உலகளாவிய வைரஸ் தொற்று 150,000ஐ தாண்டியது

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 28 முருகபூபதி


 லகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வந்திருக்கும் இக்காலப்பகுதியில்  ஏன்தான்  தாயகத்திற்கு வந்தேனோ…?!  என்ற மனப்போராட்டத்துடன்,   சண்முகநாதன் வீட்டின் பின்வளவில் நடமாடினார்.
 தனது  வீட்டிற்கு  எங்கிருந்தோ வந்திருக்கும்  ஒரு சாதாரண வேலைக்காரி,  இவ்வளவு அழகாக தனது வீட்டை பராமரித்து,   காய்கறித்தோட்டமும் உருவாக்கி, அதனையும் நேர்த்தியாக கவனித்துக்கொண்டிருப்பதை அவதானித்த  சண்முகநாதன், தனது பெறாமகள் ஜீவிகாவை மனதிற்குள் மெச்சிக்கொண்டார்.
 ‘ ஜீவிகாவின் தெரிவு சரியானது.  ‘ 
முன்னர் இருந்த வேலைக்காரிகளும் சமையலுக்கும் தனது மனைவிக்கு பணிவிடை செய்யவும்  வந்த பெண்களும் ஏன் இடையில் விட்டுச்சென்றார்கள்..?  என்பதை நனவிடை தோய்ந்தார். மனைவியின் நீண்ட கால சுகவீனத்தினால், தான் இழந்துபோன இன்பங்களை, அந்தப்பெண்களிடம் தேடப்போனதனால், வந்த விபரீதங்களை, பணம் கொடுத்தும் சலுகைகள் தந்தும் சமாளித்துக்கொண்டவர். ஆனால், எந்தப்பெண்ணும் அவரது வலையில் சிக்கவில்லை.  தனது சில்மிஷங்களை தனக்குள் அடக்கிவைக்கத் தெரியாமல் உளரீதியாக நொந்துபோயிருந்தவர், கற்பகத்திடம் வசமாக மாட்டி வாங்கிக்கட்டிக்கொண்டார்.
மனைவியின் இறுதிநிகழ்வுகள் அனைத்திலும் அந்தப்பெண்கள் வந்து நின்று தங்கள் தரப்பு சேவைகளை எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி செய்துகொடுத்ததை நன்றியுடன் நினைத்துப்பார்த்தார்.
மனைவியின் பெரும்பாலான உடு புடவைகளை இறுதியில் அந்தப்பெண்களுக்கே பகிர்ந்தும் கொடுத்தார். அவற்றில், மனைவி நீண்ட காலம் பத்திரப்படுத்திவைத்திருந்த திருமணத்தன்று அணிந்த கூறைச் சேலையொன்றும் இருந்தது.
மனைவியின் நினைவாக அவரிடம் எஞ்சியிருந்தது பதிவுத்திருமணத்தின்போது மனைவி அணிவித்த மாற்று மோதிரம் மாத்திரமே. அதுவும் லண்டனில்  அவரது மகள் வீட்டின் சுவாமி அறையில் ஒரு சிறிய   எவர்சில்வர் கிண்ணத்தில் கவனிப்பாரற்று கிடக்கிறது. மனைவிக்கு அணிவித்த தாலிக்கொடியையும்  மோதிரத்தையும் மகன், அம்மாவின் நினைவாக தனக்கு வேண்டும் என்று எடுத்துச்சென்றான்.
எஞ்சியிருந்த மனைவியின் நகைகளை இரண்டு மகள்மாரும் பங்கிட்டுக்கொண்டனர்.  லண்டனுக்கு எடுத்துச்செல்ல முடியாத  உடைகள், சாரிகளை, வீட்டில் வேலைக்கிருந்த, அம்மாவுக்கு பணிவிடை செய்த  நிகும்பலையூர் பெண்களுக்கு கொடுத்துவிடும்படி மூத்த மகள் ரோகிணிதான் சொன்னாள்.
அந்தப்பெண்களின் முகம் மனதில் வந்து நிழலாடின.  வலது கரத்தால்  தலையின் பின்புறத்தை தட்டிக்கொண்டார்.  அந்த முகங்கள் தனது மனதிலிருந்து முற்றாக அழிந்துவிடவேண்டுமென்று மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டார்.
 “  அய்யா… என்ன கடுமையான யோசனை….?  எப்படி இருக்கிறது உங்களது வீட்டு காய்கறித்தோட்டம்…?   “ எனக்கேட்டுக்கொண்டு வந்தாள் அபிதா.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -05 பெற்றமனமும் பேணி வளர்த்த பாங்கும்


ப்பு, ஆச்சி, பெத்தாச்சி ஆகிய மூவருந்தான் எனது குடும்பத்தில் நான் அறிய உயிர்வாழ்ந்த முதியவர்கள். அவர்கள் பற்றிய சில கதைகளை இனி நினைவுபடுத்துவோம்.
தொழில் காரணமாக அப்பு தென்னிலங்கையிலே மாத்தறையில் ஆண்டிற் பெரும்பகுதியைக் கழிப்பார். ஆக, வீட்டிலே எம்மை வளர்த்து வழிப்படுத்தும் பொறுப்பு, ஆச்சியின் தலையாய பொறுப்பாக இருந்தது.  இங்கு ஆச்சி என நான் குறிப்பிடுவது எனது அம்மா.  பெத்தாச்சியும் ஆச்சிக்குத் தன்னாலான உதவி வழங்குவார்.
எமது குடும்பத்தில் நாம் ஏழு சகோதரர்கள். நாம் வாழ்ந்து வளர்ந்த காலம், இரண்டாவது உலக மகா யுத்தகாலம். உணவுத்தட்டுப்பாடும்  கட்டுப்பாடும் நிலவிய காலம். அரிசி, மா, சீனி போன்ற அத்தியாவசிய பண்டங்கள்  ‘ கூப்பன்  ‘ அடிப்படையில் கட்டுப்படுத்தி விநியோகிக்கப்பட்ட காலம். பல மணி நேரம் வரிசையில் நின்று தவம்செய்து  ‘ கூப்பன் ‘ பண்டங்களைப் பெறுவதற்கு  ‘சங்கக்கடை  ‘ என்னும்  கூட்டுறவுப் பண்டகசாலை முன் நின்று தவம் புரிந்த அனுபவம் பெத்தாச்சிக்கும் எனக்கும் உண்டு. அரிசி என்றால் அவர்கள் வழங்கிய  ‘கண்ணாடி ‘ ப் பச்சை அரிசியையும்  ‘ மா  ‘ என்றால் கோதுமை மாவையும் குறித்த காலம்.
ஏழு வளரும் பிள்ளைகள் – அவர்களுக்குச் சத்துள்ள உணவு அவசியந்தேவை. ஆச்சியும் பெத்தாச்சியும் அப்பொறுப்பைச் செவ்வனே நிறைவுசெய்தல் கடினம் என உணர்ந்த அப்பு, ஏலவே ஊர் நெல்லை வாங்கிச் சேமித்து வைப்பார். அதைப் பக்குவமாகப் பாகஞ் செய்து உணவளிப்பவர் ஆச்சி.
      பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா…?
         பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா…?
இவ்வேளையில் இப்பழைய பாடலடி நினைவுக்கு வருகிறது. திரைப்படப் பாடல்தான். ஆனாலும் உளவியல் அடிப்படையில், பொருள் செறிந்த பாடலடி அதுவாகும். பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் எளிது, ஆனால்  ‘பேணி  ‘ வளர்த்தல் அவ்வளவு எளிதல்ல. எல்லாப் பிள்ளைகளும் வளருதல் இயற்கை.  ஆனால், பிள்ளைகளை வளர்த்தல் என்பது பிறிதொன்று. பேணி வளர்த்தல் என்பது புனிதமானதொரு பணி எனலாம்.
         எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
                 மண்ணிற் பிறக்கையிலே – அது
        நல்லவன் ஆவதும் அல்லவ னாவதும்
                     அன்னை வளர்ப்பினிலே….

திரும்பிப்பார்க்கின்றேன்: தேர்தல்களும் தமிழ் எழுத்தாளர்களும் அரசியல் அதிகாரம் என்பது மக்களின் நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. முருகபூபதி


சங்ககாலத்திலிருந்து புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல் பேசிவந்தவர்கள்தான். அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும் இவர்களில், சங்ககாலப் புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து பாடியே வாழ்க்கையை ஓட்டினர்.
விதிவிலக்காக ” மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ…” என்று தமது தர்மாவேசத்தை கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான் கம்பர் என்றும் சொல்லப்படுகிறது.
திருவள்ளுவரும் இளங்கோவும் அவருக்குப் பின்னர் வந்த பாரதியும் அரசியல், அறம் பற்றியெல்லாம் எழுதினார்கள்.
நவீனகாலத்து எழுத்தாளர்கள் அரசியல் பேசியதுடன் எழுதினார்கள், அரசியல்வாதிகளாக தேர்தல்களிலும் தோன்றினார்கள். அரசியல் தலைவர்களை நம்பி அவர்கள் பின்னாலும் சென்றார்கள்.

NOTICE RELATING TO THE PANDEMIC COVID-19 from SVT

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia




SVT have now decided to close the Temple and the Canteen to the general public effective Monday the 23rd March 2020, in view of the decision made by the State Government of New South Wales to shut down all services other than essential ones. Temple and canteen would come under the category of non-essential services.
SVT will keep you informed about the possible re-opening of the Temple and Canteen to the general public, at the appropriate time, based on any further decision / directive of / from the NSW State Government with regard to the situation created by the corona-virus.
We pray for the safety and health of our devotees and will have their welfare in focus when deciding to re-open the temple.
SVT Management

தமிழ் சினிமா - தாராள பிரபு திரைவிமர்சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தன் வளர்ச்சிக்கான களமாக பயன்படுத்திய மிகச்சிலரில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர் அதன் பின் அவர் பியார் பிரேம் காதல் என்ற சூப்பிர் ஹிட் படத்தை கொடுத்தார். அதன் பின் அவரின் படங்கள் வந்தாலும் அது போன்ற ஒரு திருப்தியை தரவில்லை. அவ்வகையில் அடுத்ததாக வந்துள்ள தாராள பிரபு மீண்டும் அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குமான என பார்க்க தாராள மனதுடன் இந்த பிரபுவை பார்க்க செல்வோம்...

கதைக்களம்

பிரபுவாக நம்ம ஹீரோ ஹரிஷ் கல்யாண். ஃபுட்பால் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டு இவர் வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளை. பியூட்டி பார்லர் அம்மாவும் இயற்கை மருத்துவம் பாட்டியும் தான் இவரின் அழகான உலகம்.
டைமுக்கு சென்று டைமுக்கு திரும்பும் ஆஃபிஸ் வேலையில்லாமல் இருந்தாலு ஜாலியான இளைஞராக சுற்றி வருகிறார். ஒருநாள் தங்களின் ப்ராடக்டை டெலிவரி செய்யும் போது ஹீரோயினை சந்திக்க காதல் துளிர் விடுகிறது.
இதற்கிடையில் செக்சாலஜி டாட்கராக இருக்கும் காமெடி நடிகர் விவேக் குழந்தை செல்வம் வேண்டும் பெற்றோர்களுக்கு நல் ஆரோக்கியமான குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணுவுள்ள அந்த டோனரை தேடி அலைகிறார்.
எப்படி அதற்கு சரியான நபர் ஹரிஷ் கல்யாண் என அவரின் பின்னால் அலைந்து திரிந்து அவரை தானம் செய்ய வைக்கிறார்.
காதல் திருமணம் கைகூடடினாலும் கணவன் மனைவி இருவருக்கிடையிலும் மனக்கசப்பு, இதற்கிடையில் குழந்தை தத்தடுப்பு என வாழ்க்கை செல்ல ஹரிஷின் வாழ்க்கையில் குழந்தை செல்வம் விசயம் ஒரு எதிர்பாராத பிரச்சனை. இருவரும் சேர்ந்தார்கள், விந்தணு தானம் செய்பவராக இருந்த ஹரிஷ்க்கு எதுவும் உடலில் பிரச்சனையா, இல்லை வேறெதுவுமா பிரபுவாக இருந்தவர் எப்படி அவர் தாராள பிரபுவாக மாறினார் என்பதே இந்த கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹரிஷ் கல்யாண் அதிகம் ரசிகர்கள், ரசிகைகளை கொண்டவர். முகராசி கொண்டவர் என்பதில் நோ டவுட். லவ், ரொமான்ஸ் படங்களாக அவருக்கு தொடர்ந்து அமைந்து வருகிறது. வழக்கமான காதல், பிரிவு என்பதிலிருந்து சற்று மாறுபட்டு விந்தணு தானம் செய்பவராக அவர் தேர்வு செய்த இந்த கதை கை கொடுத்துவிட்டது. சிம்பிளான, ஸ்டைலிஷான நடிப்பு ஹரிஷ்..
ஹீரோயின் தான்யா ஹோப். ஆரம்பத்தில் இவர் ஹரிஷ்க்கு இந்த படத்தில் செட்டாவாரா என்ற தோன்றினாலும் ஏற்ற ஜோடிதான் என நம் மனதை மாற்றும் படி நடித்திருக்கிறார். இருவருக்குமிடையிலான ரொமான்ஸ், லவ் காட்சிகள் நோ அலட்டல், நோ திகட்டல்.
படத்தில் முக்கியமனாவரே டாக்டர் கண்ணதாசனாக படம் முழுக்க நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் காமெடி நடிகர் விவேக். இக்கால தலைமுறைக்கு ஏற்றபடியான காமெடியில் டீசண்டான அடல்ட் காமெடியை மிக்ஸ் செய்து அவ்வப்போது சின்ன சின்ன டோஸ் கொடுப்பது ரசனை. அதுவும் காமெடி மூலம் தன் வயதை குறைத்து இளைஞராக ஈர்த்துவிடுகிறார். சூப்பர் விவேக் சார்.
இயக்குனர் கிருஷ்ணா இப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஹிந்தியில் வந்து ஹிட்டான் விக்கி டோனர் என்ற ஹிட் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தை கொடுத்துள்ளார்.
தெருவுக்கு தெரு குழந்தையின்மை மருத்துவமனையின் வியாபாரம் அதிகரித்துள்ள இக்காலத்தில் விந்தணுவின் முக்கியத்துவத்தையும், தாம்பத்ய வாழ்கையின் ஆரோக்கியத்தை சிம்பிளாக எடுத்துசொல்கிறார். வாழ்த்துக்கள் ப்ரோ...
கலர்புல்லான காட்சிகள் ஒளிப்பதிவு, நேர்த்தியான எடிட்டிங், பின்னணி இசை, பாடல்கள் என பலரின் இசை மீட்டல் ஸ்வீட் ரகம்.

கிளாப்ஸ்

தாம்பத்யத்தின் முக்கியத்துவையும், சுய வாழ்க்கை ஒழுக்கத்தையும் ஒரு தந்தை போலவும், மருத்துவராகவும் எடுத்துவைக்கும் விவேக் சாரின் பக்குவம் அருமை.
ஹரிஷ் கல்யாண் தாராள குணமும், படித்த இளைஞராக நடந்து கொள்ளும் மனப்பான்மையும் பாசிட்டிவ் வைப்.
ஹீரோ, ஹீரோயினை படம் முழுக்க அழகாக காட்டிய கிருஷ்ணாவுக்கு ஹேட்ஸ் ஆஃப்.

பல்ப்ஸ்

நோ பல்ப்ஸ். பலரின் முகத்தில் பிரகாசமான பல்ப்ஸ் ஒன்லி.
மொத்தத்தில் தாராள பிரபு ஒரு ஜாலி பிரபு. திருமண மாகாத இளைஞர்கள் மட்டும்மல்ல திருமணமான தம்பதிகளும் பார்க்க வேண்டிய படம் 
நன்றி   CineUlagam 









மரண அறிவித்தல்

தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் மரண அறிவித்தல்
 திரு பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு Bunurong Memorial Park (No 790 Frankston- Dandenong Road, Dandenog South) இல் அமைந்துள்ள The Sanctuary  Chapel இல் இருந்து Stratus and Cumulus Chapel க்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.