தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
யாழ்மண் எமக்களித்த சிவஞானச் சித்தரே யோக சுவாமிகள்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
சித் என்றால் அறிவு , ஞானம் , தெள்ளிய பார்வை ,கூர் நோக்கு, விரிந்த நோக்கு என்று பொருள் சொல் லப்படுவதால் - சித்தர்களை அறிவாளிகள் , ஞானிகள், தெளிந்த பார்வையினை உடையவர்கள் , கூர்ந்த நோக்கினை உடையவர்கள்,கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !
சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். " அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு " என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதை யும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் அவர்கள் எப்பொழுதும் கை கொடுத்திடவே எண்ணுவார்கள். அதன் வழியில் பயணப்படுவார்கள்.
" மக்கள் சேவையினை மகேசன் சேவையாய் " எண்ணி இப்பூவுலகில் வாழ்ந்தவர் - பல சித்தர்கள் இருக் கிறார்கள், அப்படியான சித்தருக்கென்று ஒரு பரம்பரையே இருக்கிறது என்பதை வரலாற்றால் அறிகி றோம்.
தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிலே பாரதி இளமுருகனர் அவர்களால் இயற்றப்பெற்ற செந்தமிழ்ப் பூக்கள் நூலினைச் செஞ்சொற் செல்வர் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள் வெளியிட்டுவைத்தார்.
பாரதி
இளமுருகனார் அவர்கள் இயற்றிய 80 சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல் செந்தமிழ்ப்
பூக்கள்!
நேற்று
அரங்கு நிறைந்த தமிழன்பர்களுடன்
மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிலே வாழ்நாட்சாதனையாளர் சிவஞானச் சுடர் பாரதி இளமுருகனர் அவர்களால் இயற்றப்பெற்ற செந்தமிழ்ப் பூக்கள் நூலினைச் செஞ்சொற் செல்வர் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள் வெளியிட்டுவைத்தார். அந்த நூலில் இருந்து தமிழ்ச் சான்றேர்கள் இருவரின் சிறந்த பதிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

.
யாழப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தகைசார் வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களின் பார்வையில் செந்தமிழ்ப் பூக்கள் ------
மருத்துவர்
பாரதி இளமுருகனார்
அவர்களுடைய செந்தமிழ்ப் பூக்கள் என்னும் கவிதை நூலைப் படித்தபோது எனக்கு
"உரைமுடிவு
காணான் இளமையோன் என்ற
நரைமுது
மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால்
முறைசெய்தான் சோழன்
குலவிச்சை கல்லாமல் பாகம்படும்"
--
என்னும் பாடல்தான் நினைவுக்கு வந்தது. குலவிச்சை கல்லாமல் பாகம் படும் என்பது
டாக்டர் பாரதிக்குப் பொருந்துவதாக உள்ளது. அவர் படித்தது மருத்துவம். யாப்பு -
அணிகளெல்லாம் விரிவாகப் படிக்கும் வாய்ப்பு இருந்திருக்க முடியாது. ஆனால் அவருடைய
தந்தை ஒரு சிறந்த தமிழ் அறிஞர். மரபுவழிக் கவிஞர். தங்கத் தாத்தா என்ற பெயர்பெற்ற நவாலியூர் சோமசுந்தரப் புலவரின்
பேரனான பாரதி அவரின் நேரடிவாரிசு. கவிதை எழுதுதல் பாரதிக்குக் குலவித்தை
ஆகிவிட்டது. இதனால் அவருடைய கவித்துவ மதிப்பு குறைந்துவிடும் என்று
எண்ணவேண்டியதில்லை. தந்தையும் பேரனாரும் கவிஞர்களாக இருப்பினும் அவர்கள் வழிவந்த
மைந்தன் தனக்கென ஒரு பாக்கோலத்தினைப் பெற்றிருப்பதை அவருடைய கவிதைகள் தெளிவாகப்
புலப்படுத்துகின்றன.
செந்தமிழ்ப்
பூக்கள் நூலைத் திறந்தவுடன் கண்ணில்பட்டுக் கனிவுதந்த பாட்டு கடவுள் வணக்கப்
பாடலாகும்.
"கல்வியென
அருங்கலைகள் செல்வமெனத் தருகின்றாய்
அல்லலெலாம்
களைந்துபே ரின்பமெலாம் அருள்கின்றாய்
வல்லமையும்
தந்தெம்மை நல்லவராய் ஆக்கின்றாய்
இல்லையென்ற இடமில்லை இறையருளுக் கேதுஎல்லை?"
பொருளுணர்ந்த நண்பர்!
-சங்கர சுப்பிரமணியன்.
வசனக் கவிதை!
இந்நாளில் அதிகமாக எழுதப்படா கவிதை என்றாலும் இன்றும் சிலர் எழுதியே வருகிறார்கள். இக்கவிதை அருகி வரும் இந்நாளில் குறுகிடாமல் இருக்க கவிஞர்கள் கவிதை எழுதுவதை கைவிடவில்லை.இரு நெருங்கிய நண்பர்கள்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா
உண்மையான உயிர்நண்பர்கள்
முரண்பட்ட கருத்துக்களை கொண்டாலும்
முட்டிக் கொள்ளா நண்பர்கள்
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பழகா நண்பர்கள்
ஒருநாள் ஒருவரிடம் ஒருவர்
ஒரு சட்டத்தைக் காட்டி என்னவென்றார்
சட்டத்தினுள் உள்ளதாளிலோ
சில நேர்கோடுகள் சில வளைந்தகோடுகள்
ஓழுங்கற்று கிறுக்கப் பட்டிருந்தன
ஒன்றும் புரியாததால் கிறுக்கலென்றார்
நண்பர்
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
07-06- 2025 Sat: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta
08-06- 2025 Sun: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta
15-06- 2025 Sun : சைவமன்றம் வழங்கும் இசை நடன நிகழ்வு
22-06-2025 Sun: வராஹி அம்மன் கும்பாபிஷேகம் - சிட்னி துர்க்கை அம்மன் கோயில்
28-06- 2025 Sat: ETA presents Charity Night 2025 - Dinner Dance - Roselea Community Centre, Carlingford
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
பொறுமையைக் கைவிடாதே! – அன்பு ஜெயா பா வகை: சிந்தடி வஞ்சிப் பா.
நமையாண்டிடும்
வலிமையென்னுமோர் நாள்வரட்டுமே!
சுமையாகவே
சினமென்பதை துரத்திடுவமே!
எமையென்றுமே
பொறுமைமட்டுமே இயக்கட்டுமே!
எந்தவேளையும்
குறைகூறுதல் எதிர்த்திடுவமே!
அந்தகாலமே
இங்குமலரும் அமைதிமட்டுமே!
தவறென்பதும்
சிலவேளையில் தவிர்த்தலில்லையே!
மறந்தேயதைப் பொறுத்தருள்வது மாந்தநெஞ்சமே!
அதனால்
சினமதை என்றுமே சிறையில் வைத்தே
மனமதைக் காப்போம் மண்ணிலே,
மனத்தினில் அன்பையே மையமாய் வைத்துமே!
அமுதவிழாவைக்காணும் மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் நினைவுகள் பாரிஸில் அமுதவிழா முருகபூபதி
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸிலிருந்து பாரிஸ் ஈழநாடு, தமிழன் ஆகிய இரண்டு வாரப் பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டிருந்தன.
இவற்றை நடத்தியவர்கள்,
முன்னர் இலங்கை வடபுலத்தில் வெளியான ஈழநாடு பத்திரிகையில்
பணியாற்றியவர்கள். ஈழநாடுவில் தமது எழுத்தூழியத்தை
மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலர் தற்போது உயிரோடு இல்லை.
எனது பூர்வீகம் மேற்கிலங்கையில்
நீர்கொழும்பு. 1972 இற்குப்பின்னர், கெழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு
பிரதேச நிருபராகவும், அதேசமயம், படைப்பிலக்கியவாதியாகவும் நான் அறிமுகமானேன்.
அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து
டொமினிக்ஜீவா வெளியிட்ட மல்லிகை மாத இதழில் எனது சிறுகதைகள் உள்ளிட்ட படைப்புகள் வெளிவந்தன.
மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, ஒவ்வொரு மாதமும் மல்லிகை வெளியானதும், அதன் பிரதிகளுடன் யாழ். ஈழநாடு
பணிமனைக்குச்சென்று அங்கிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு விநியோகிப்பார்.
ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், 1970 களில் எனது ஆக்கங்களை
மல்லிகையில் படித்துவிட்டு, சக பத்திரிகையாளர்களிடம் என்னைப்பற்றி சிலாகித்துச்சொன்ன ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் – மதிப்பிற்குரிய திரு. எஸ்.கே. காசிலிங்கம் அவர்களுக்கு அமுதவிழா நடைபெறுகிறது என்ற நற்செய்தியை லண்டனிலிருந்து எனக்குத் தந்தார், மற்றும் ஒரு நீண்டகால ஊடகவியலாளர் நண்பர் எஸ். கே. ராஜென்.
1995 – 1996 காலப்பகுதியில் பாரிஸ் ஈழநாடுவில் , மறைந்துவிட்ட
மூத்த படைப்பாளிகள் பற்றிய நினைவுத் தொடரை எழுதிக்கொண்டிருந்தேன்.
தனது தமிழன் பத்திரிகையிலும்
நான் எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவர்தான் எஸ்.கே. காசிலிங்கம் என்ற
தகவலை பின்னர்தான் நான் அறிந்தேன்.
திடீரென ஒரு நாள் பாட்டி சொன்ன கதைகள் என்ற உருவகக் கதைத்
தொடரை தமிழன் இதழக்கு அனுப்பினேன். அதனை ஒவ்வொரு வாரமும் தமிழன் இதழில் வெளியிட்ட அதன் ஆசிரியர் காசிலிங்கம், பின்னர் அந்தத் தொடர் நூலுருவானபோது, அதற்கு நீண்டதொரு
கருத்துரையும் எழுதியிருந்தார்.
இந்நூல் டொமினிக்ஜீவாவின்
மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1997
ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியானது.
காசிலிங்கம் அவர்களின்
கருத்துரையிலிருந்து பின்வரும் சுவாரசியாமான குறிப்புகளைத் தருகின்றேன்.
“ எழுத்தாளர்களா, பத்திரிகையாளர்களா உயர்ந்தவர்கள்?
“
இது தேவையற்ற சர்ச்சைதான்.
இதயக் கமலம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
இந்திய சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பெற்றுக் கொண்டவர்
எல் . வி. பிரசாத். ஆந்திர மாநிலத்தில் பிறந்து , பிழைப்பு தேடி பம்பாய் சென்று , அங்கே சாதாரணத் தொழிலாளியாக பணியாற்றி படிப் படியாக முன்னேறி நடிகனாக, இயக்குனராக, படத் தயாரிப்பாளராக, ஸ்டுடியோ அதிபராக உயர்ந்தவர் இந்த பிரசாத்.
இளம் நடிகர்களான கே. ஆர். விஜயா, ரவிச்சந்திரன் இருவரும் இதில் ஜோடியாக நடித்திருந்தனர். ரவிச்சந்திரனுக்கு இது இரண்டாவது படம். கே ஆர் விஜயாவுக்கு இதுவே அவர் நடித்த முதல் வண்ணப் படம். கதாநாயகன், கதாநாயகி இருவரும் கண்ணுக்கு குளிர்ச்சியான இளம் ஜோடிகள் என்றால் படமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கலரில் இயற்கை காட்சிகளை கொண்டிருந்தது.
1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்
67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள் பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள் கொலை செய்தார்கள்.தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து.
தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது.பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள், தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல், போன்றனவும் இடம்பெற்றன.
1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.
1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான கலவரம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் இந்த வன்முறைகள் இடம்பெற்றன.
முதலில் 22ம் திகதி பொலனறுவையிலேயே வன்முறைகள் ஆரம்பமாகின,வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சிக்கு சென்றுகொண்டிருந்த தமிழர்களை சிங்கள காடையர்கள் தாக்கியதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் வெடித்தன..
இலங்கைச் செய்திகள்
யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி
”அமெரிக்காவில் கதிரையிலிருந்து விழுந்த பசில்” : மீண்டும் நவம்பரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !
காணிகள் குறித்த வர்த்தமானியை திரும்பப் பெறுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன; அரசாங்கம் மறுபரிசீலனை செய்வதாக உறுதியளிக்கிறது.
நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் ; பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை
நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி மகஜர் கையளிப்பு
யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி
Published By: Digital Desk 2
25 May, 2025 | 12:27 PM
யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் வெள்ளி விழாவை ஒட்டிய நடைபவனி ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.
இந்த நடைபவணியானது, திருநெல்வேலியில் அமைந்துள்ள பட்டப்பின் படிப்புகள் பீட முன்றிலில் ஆரம்பமாகி யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் பிறவுன் வீதி மருத்துவ பீடம் ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது.
நிகழ்வில் முக்கிய இடங்களில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா பட்டப்பின் படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி. வேல் நம்பி முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன் மற்றும் பீடாதிபதிகள் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் பழைய மாணவர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
உலகச் செய்திகள்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி- குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம்
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்
காசாவில் மனித உரிமை மீறல்கள் - இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் பாடசாலை பேருந்தை இலக்குவைத்து தாக்குதல் - நான்கு மாணவர்கள் பலி
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்: ட்ரம்ப் அறிவிப்பு
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி- குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம்
Published By: Rajeeban
25 May, 2025 | 11:00 AM
வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 50 "ராஜம் கிருஷ்ணனின் பன்முக ஆளுமை"
நாள்: சனிக்கிழமை 31-05-2025
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
சிறப்புப் பேச்சாளர்கள்:
போ.மணிவண்ணன்
கு முத்துக்குமார்
ஒருங்கிணைப்பு:
இரா.செல்வி
மேலதிக விபரங்களுக்கு: - அகில் சாம்பசிவம் (001416-822-6316)