இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் முழு உலகினதும் ஆளுமையின் அடையாளம்

 Saturday, September 10, 2022 - 6:00am

உலக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த மிகப் பெரும் சரித்திர வரலாறு நேற்றுமுன்தினத்துடன் முடிவடைந்தது!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 96. மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்து கொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில், இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின. உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனிடையே, பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தூக்கம் தரும்மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய் !

 















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா



முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்

பண்டார மாயிருந்து பலகவிதை தந்தாயே
தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே

வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே 
தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே 
விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே 
வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு 

மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட

அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட 
பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே 
பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே  

பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே

பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை 
வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்
வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 30 வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ….. முருகபூபதி

“ ஒரு மனிதனின் பெயர் நிலைத்திருக்கவேண்டுமாயின், அவன்


பின்வரும்  மூன்று விடயங்களில் ஏதாவது ஒன்றைச்  செய்தாகவேண்டும்.  அவை:  அவன் ஒரு வீடு கட்டவேண்டும்.  பிள்ளைகள் பெறல் வேண்டும்.  அல்லது குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது எழுதவேண்டும்.     இவ்வாறு சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.

ஆனால், என்னைக்கேட்டால், மனிதன் மனிதனாக மனிநேயத்துடன் வாழ்ந்தாலே போதும் . அவன் பெயர் நிலைத்துவிடும்.  என்பேன்.

நன்றிகெட்ட சமூகத்தில் ஒருவன் மனிதநேயனாக வாழ்ந்தும் பிரயோசனம் இல்லை எனச்சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

எனக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தரவதிவிட உரிமையும் குடியுரிமையும் கிடைத்த,  தாயகத்திலிருந்து குடும்பம் வந்து சேர்ந்த காலப்பகுதியில் எமது விக்ரோரியா மாநிலத்தில்  ஒரு நெருக்கடி தோன்றியது. அதனை Recession என்றார்கள்.

பலர் தமது வேலையை இழந்தனர்.  நான் பணியாற்றிய Australia Textile Printing Company இலும் ஆட்குறைப்பு நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது.

எனது மகனுக்கு அப்போது நான்கு வயது.  ஊரில் ஓடித்திரிந்து விளையாடியவன்.  வீதிக்கு ஓடுகிறான் என்பதனால், வாயிலில் கேட் போட்டிருக்கிறார்கள். ஆனால், அவனோ அந்த கேட்டில் ஏறி வீட்டின் கூரைக்குச்சென்றிருக்கிறான்.

இறுதியில் புதிதாக இணைக்கப்பட்ட கேட்டையும் அப்புறப்படுத்த நேர்ந்துள்ளது.

வெளியீடு காணும் எங்கள் எழுத்தாளர் லெ.முருகபூபதியின் "பாரதி தரிசனம்" மின் நூல்

 வெளியீடு காணும் எங்கள் எழுத்தாளர் லெ.முருகபூபதியின் "பாரதி தரிசனம்" மின் நூல்

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகவும், 
வீடியோஸ்பதி காண் தளத்துக்காகவும் வழங்கியிருந்த நேர்காணல்





நல்ல நேரம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 

புரட்சி நடிகர் எம் ஜீ ஆரின் நடிப்பில் மள மள என்று 16 படங்களை தயாரித்து வெளியிட்ட பெருமைக்குரியவர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர்.அந்த வரிசையில் அவர் எம் ஜீ ஆர் நடிப்பில் தயாரித்த கடைசி படம் நல்ல நேரம்.எம் ஜீ ஆர் நடிப்பில் அவர் தயாரித்த ஒரே ஒரு வண்ணப் படமும் இதுதான்.1972ம் வருடம் இந்தப் படம் வெளிவந்தது.



ஏற்கனவே தெய்வச் செயல் என்ற பெயரில் படமாக்கி பின்னர் சில

மாறுதல்களுடன் அதனை ஹிந்தியில் ஹாத்தி மேரே சாத்தி என்று தயாரித்து வெற்றி கண்டு,மீண்டும் அதனை தமிழில் நல்ல நேரம் என்று எடுத்தார் தேவர்.இது தேவரின் சாமர்த்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எம் ஜீ ஆரின் நடிப்பில் காதல் வாகனம் படத் தயாரிப்பின் போது எற்பட்ட மனத்தாங்களினால் எம் ஜீ ஆரின் நடிப்பில் படம் தயாரிக்காமல் இருந்தார் தேவர்.ஆனால் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் வெற்றி இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது.அதுவே அவர்களுக்கு நல்ல நேரம் ஆனது.

நான்கு யானைகளுடன் ராஜாங்கம் நடத்தும் ராஜு தொழிலில் ஏற்பட்ட சரிவால் யானைகளுடன் தெருவுக்கு வருகிறான்.ஆனால் விடா முயற்சியாக யானைகளை வைத்து வித்தை காட்டி பிழைக்கிறான்.ஆனால் அவன் காதலி விஜயவின் தந்தையோ ராஜுவின் நிலை கண்டு அவர்கள் காதலை எதிர்க்கிறார்.விஜயாவோ வீட்டை விட்டு வெளியேறி ராஜூவை சேர்கிறாள்.ராஜுவின் உற்ற நண்பர்களான நான்கு யானைகளும் எவ்வாறு ராஜுவுக்கு உதவி,அவனை வாழ்க்கையில் வெற்றி பெற செய்கிறது என்பதுதான் படத்தின் கதை.

முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ மதிப்பீடு – நடேசன்


எமது அண்டை நாடான பாரத தேசத்தில்  பிறந்த மூவர் நமது  இலங்கையில் தங்களது சிந்தனைகள் ,  செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள்.    அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர்.  அவர் இலங்கைக்கு வந்தாரோ,   இல்லையோ,  அவரது உபதேசங்கள்  இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன்,  அவரது அரசியல் கருத்து  போராட்ட வழி முறைகள்  இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது.

உண்ணாவிரதம்,   அகிம்சை  வழி,  கடையடைப்பு என  இங்கும்


தமிழர்,  சிங்களவர் என  இரு இனத்தவரும்   அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள்.

 ஆனால்,  இலங்கைக்கு வராதபோதிலும்  பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

மற்றைய இருவரிலும்  பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.

கௌதம புத்தரை இலங்கை,   கடந்த 75 வருடங்களாகத் தேர்தல்  அரசியல் சரக்காக மாற்றியதுடன்,    இனக்கலவரம் , போர் என  மூலப்பொருளாகப்  பாவித்து பெரும்பான்மையான சிங்கள அரசியல்வாதிகள், அவரது கீர்த்தியை அபகீர்த்தியுடைய வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.


அதேபோன்று  தமிழ் அரசியல்வாதிகள் காந்தியின் கொள்கைகளை தங்களது சுயநலவாத அரசியலுக்குப் பாவித்தார்கள். போதாக்குறைக்கு   ஆயுதத்தில்  நம்பிக்கை வைத்திருந்த  விடுதலைப்புலிகளின்  தலைவர் சென்னையில் உண்ணாவிரதமுமிருந்தார். அவரது தளபதியான திலீபன் இந்திய அமைதிப்படைகளுக்கு எதிராக  யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் இருந்து  உயிர் துறந்தார். இவற்றை  மன்னிக்க முடியும். ஆனால், வன்னியில் அவர்களின்  சித்திரவதை  முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவருக்கு காந்தி என்ற பெயரை வைத்திருந்தார்கள்.

இப்படியான எந்த அலங்கோலப்படுத்தலுக்கும் உட்படாது இன்னமும் இலங்கையில் மட்டுமல்ல,  இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கம்பீரமாக பாரதி விழா , பாரதி பாடசாலை எனப் பல வழிகளில் கொண்டாடப்படுவது,  எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி என்ற கவிஞன் மட்டுமே. அதுவே இங்கு முக்கியமானது.

பாரதிக்கு பல முகங்கள்.  ஒவ்வொரு முகங்களைப் பிடித்தவர்கள் கொண்டாடுவார்கள். தேச விடுதலைக்கான மகா கவியாக இந்தியர்கள் கொண்டாடும்போது,  இந்தியரல்லாத தமிழர்கள் பாரதியின் இலக்கியப் படைப்புகளைக் கொண்டாடுகிறார்கள்.

போர் வீரன் தூரத்தில் எதிரியைக் கண்டால் அம்பையும்,  ஓரளவு சமீபத்தில் கண்டால் ஈட்டியையும், அருகில் வந்தால் வாளையும் எடுப்பான் . எதிரியோடு  உடல் பிணைந்து பொருதும்போது குத்துவாளை உருவுவான்.  இவைகள் எல்லாவற்றிலும் திறமை கொண்டவனே  சிறந்த வீரனாக முடியும்.  அதேபோல்  எனது கணிப்பின்படி தமிழில்,  கவிதை,  தாலாட்டு, சிந்து, குழந்தைப்பாட்டு,  காவியம் என  எல்லாவகையான சந்தங்கள் கொண்ட இலக்கிய நடையை எழுதியதுடன்   உரைநடையில் சிறுகதை , கட்டுரை என்பன எழுதியதால்  நவீனத் தமிழின் உரை நடையையும்  உருவாக்கியவர் பாரதியே என்பார்கள்.

மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், பேர்த், அடிலெயிட் தியாகி தீலீபனின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

 தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம்


செய்த தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவு நிகழ்வான தியாக தீப கலை மாலை நிகழ்வு, எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 25ம் நாள்  ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் இடம்பெறவுள்ளது. 
ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.


உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம், எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Details of the THIYAAGI THILEEPAN's Melbourne Memorial Event are:
இடம்: Victorian Tamil Community Centre Palmyra Hall, 40-44 Lonsdale Street, Dandenong, Vic 3175
காலம்: 25/09/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 - 8 மணி.
தொடர்புகளுக்கு: 0433 002 619

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்டோரியா 🙏

வாங்க மச்சான் வாங்க… உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயை பார்த்தானாம் ! அவதானி


இலங்கை அரசியலில் சமகாலத்தில் நடக்கும் மாற்றங்களை பார்க்கும்போது எமக்கு நீண்ட காலத்திற்கு முன்னர் வெளியான தமிழ்த் திரைப்படங்களும் திரைஇசைப்பாடல்களும்தான் நினைவுக்கு வருகின்றன.

சமூக வலைத்தலங்களில்  ‘ மீம்ஸ்  ‘ துணுக்குகளை பதிவேற்றுபவர்களுக்கும் எமது அரசியல்வாதிகள் கேலிக்கைக்குரியவர்களாகிவிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதியை கலைப்பதற்கான  மக்கள் எழுச்சிப்


போராட்டத்தில் முக்கிய தொனிப்பொருளாக இருந்தது Gotha Go Home .  இந்த தலைப்பிலேயே காலிமுகத்திடலிலும் நூறு நாட்களையும் கடந்து மக்கள் தன்னெழுச்சியாக போராடினர்.


பாராளுமன்றத்திற்கு  இறுதியாக அவர் வந்தபோதும் , எதிரணியினர் Gotha Go Home என உரத்து கோஷம் எழுப்பினர்.  அத்தோடு அவர் பதவி விலகியிருக்கவேண்டும்.

ஆனால், 69 இலட்சம் மக்கள் தமது   வாக்குப்பலத்தினால் தன்னை இந்தப்பதவியில் அமர்த்தியிருக்கின்றனர் என்ற இறுமாப்புடன்,  அவர் பதவி விலகாமல் இருந்துவிட்டு,   ஜூலை நடுப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவருக்கும் அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் எதிரான போராட்டம்   காலிமுகத்திடலில் மட்டுமன்றி, கொழும்புக்கு வெளியே பல பிரதேசங்களிலும் தொடர்ந்தது.  குறிப்பிட்ட நூறு நாட்களுக்குள்ளும் அதன்பிறகும் காட்சிகள் மாறின.  கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதியுடன் கோத்தபாய ராஜபக்‌ஷவின் அதிகாரம் அகற்றப்பட்டது.  எனினும் அவ்விடத்திற்கு மற்றும் ஒருவராக ரணில் விக்கிரமசிங்கா 134 வாக்குகளுடன் வந்தார். 

கோத்தபாய  ராஜபக்ச  முதலில்  ஜூலை 14 ஆம் திகதி விமானப்படை விமானம் மூலம் மாலைதீவுக்குச் சென்றார்.

பின்னர்,  அங்கிருந்து சிங்கப்பூர் சென்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை அங்கே  தங்கியிருந்தார். இராமன் இருக்குமிடம்தான் சீதைக்கும் அயோத்தி என்பதுபோல், அவரது மனைவி அயோமா ராஜபக்‌ஷவும், அவர் செல்லுமிடமெங்கும் பின்தொடர்ந்தார். சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட இந்தத் தம்பதியர் கடந்த ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றனர்.  இவ்வாறு மூன்று நாடுகளில் தனது  அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு,  எதற்கும் தான் அஞ்சவில்லை என்பதை நிரூபிக்க தாய்நாடு திரும்பியிருக்கின்றார் கோத்தா.

இலங்கைச் செய்திகள்

மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் அனுதாபம் தெரிவிப்பு

மறைந்த எலிசபெத் மகாராணிக்காக செப்டெம்பர் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம்

எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் 05 சிறுபான்மையினர்

கைதான தமிதா அபேரத்னவுக்கு செப்டெம்பர் 14 வரை விளக்கமறியல்

நடிகை தமிதா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி


மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் அனுதாபம் தெரிவிப்பு

- இன்று முதல் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி
- தேசிய துக்க தினம் தொடர்பில் அறிவிக்கப்படும்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவரும், 1952-1972 வரை இலங்கை ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பில் இங்கிலாந்து அரச குடும்பம், மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

உலகச் செய்திகள்

இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96ஆவது வயதில் காலமானார்

எலிசபெத் ராணியின் மரணத்திற்கு உலகெங்கும் துக்கம் அனுஷ்டிப்பு

பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் ட்ரஸ்

கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி; 15 பேருக்கு காயம்


இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96ஆவது வயதில் காலமானார்

- தனது 70 வருட ஆட்சியில் 15 பிரதமர்களை கண்டவர்
- மூத்த புதல்வர் சார்ள்ஸ் புதிய அரசராக வழிநடத்துவார்

பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை மேற்கொண்டு வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 70 ஆண்டு ஆட்சிக்குப் பின்னர், 96ஆவது வயதில் இன்று (08) காலமானார்.

இன்றையதினம் (08) வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.

ராணியை மருத்துவ கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்த நிலையில், அவர் தற்போது மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.