.
தில்லாலங்கடி

சிட்னி மெல்பேன் திரையரங்குகளில் 23ம், 24ம், 25ம், 26 ம், திகதிகளில் காணத் தயாராகுங்கள்  தில்லாலங்கடி Jayam Ravi , Tamanah ,shaam, vadivelu, Santhanam,
நடித்த திரைக்காவியம்




SYDNEY SHOW TIME

23/7/2010    Fri  09:00 PM   Greater Union Cinema 7 -  Westfield Shopping Center   Burwood
24/7/2010    Sat 06:00 PM   Greater Union Cinema 8 -   Westfield Shopping Center  Burwood
24/7/2010    Sat 09:15 PM    Greater Union Cinema 8 -    Westfield Shopping Center    Burwood
25/7/2010    Sun 06:00 PM    Greater Union Cinema 8 -    Westfield Shopping Center  Burwood
26/7/2010    Mon 08:45 PM   Greater Union Cinema 12 -  Westfield Shopping Center    Burwood

மரண அறிவித்தல்
திருமதி லீலா சொலமன்


திருமதி லீலா சொலமன் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்துள்ளார். அவர் உடுவிலைச் சேர்ந்த காலம் சென்ற திரு அரசக்கோன் சொலமனின் அன்பு மனைவியாரும், காலம் சென்ற அருட்திரு ஜே டபிள்யூ கதிர்காமர் தம்பதிகளின் மூத்த புதல்வியும் இன்பஜோதி, தர்மஜோதி, சன்ஜீவனஜோதி. ஜோதிமகான், ஜோதிஸ்வரனின் தயாரும், தவரத்தினம் ஜெயந்தகுமார்   இந்திரன், வோட்சன், ஜெயந்தி, தர்சினி ஆகியோரின்  மாமியாரும். ரூபி, டேவிட், சொருபி, ஜோதி, தபித்தா, ருசில்லா, பிரியா, ஈவா, சங்கீதா, சிந்துஜா, சன்ஜீவன் ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும், ஜெமெம்மாவின் பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக  Simplicity Funerals,  124-128, Elizabeth Drive, Liverpool  ல்    20 யூலை 2010   செவ்வாய் கிழமை பி.ப 6 .30 மணி தொடக்கம் பி.ப 8 .30 மணி வரை வைக்கப்பட்டு இறுதி ஆராதனை யூலை 21 புதன் கிழமை காலை 10 .00  மணியளவில் North Chapel Pinegrove Memorial park, Kingston St, Minchinbury, ல் நடைபெறும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்

தொடர்புகளுக்கு Mrs Thavaratnam 02 9823 5820

                                     Mr Joe Solomon 02 9618 7265 or 0422 349 832

தேர்தல் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி

.


அவுஸ்திரேலியா பாரளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நோய் நீங்கிய அதிகாலை - கவிதை

.
                          ஃபஹீமாஜஹான்



உனது சொர்க்கமென அமைந்த வீட்டில்

அவள் நோய் வாய்ப்பட்டிருக்கிறாள்
நீ வளர்த்த எல்லாச் செடிகளும்
அவளுடன் வாடிக் கிடக்கின்றன

ஆனந்தமும் அன்பின் பரிமாற்றங்களும்
துள்ளிக் குதிக்கும் அறையெங்கும்
படிந்து போயுள்ளன
அவளது வருத்தங்கள்
கவிழ்ந்து தூங்குகிறது

தண்டவாளத்தின் கொன்கோர்ட்

.
                                                  செய்தித்தொகுப்பு - கரு

தண்டவாளத்தின் கொன்கோர்ட்': பிரிட்டனின் அதிவேக உல்லாச ரயில்

 இன்னும் 15 வருடங்களில் மணித்தியாலத்திற்கு 225 மைல் (362 கிலோமீற்றர்) வேகத்தில் பயணம் செய்யக்கூடிய அதி உல்லாச ரயில் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ரயிலின் வேகம் மாத்திரமல்ல, தோற்றமும் வசதிகளும்கூட வியக்க வைப்பதாக இருக்குமாம்.

காட்சிகள் பார்வையில் மட்டுமல்ல. செ.பாஸ்கரன்

.

ஒரு இளம் தம்பதிகள் இரண்டாவது அடுக்கு மாடியில் குடியிருந்தார்கள். நீளமான பல்கணியை கொண்ட அந்த குடியிருப்பில் இருந்து வெளியே பார்த்தால் பக்கத்து வீட்டுவளவின் பின்புறம் நன்றாகத் தெரியும். பச்சைக்கம்பளம் விரித்ததுபோலிருக்கும் புற்தரையின் நடுவில் துணிகள் காயப்போடும் வட்டமான கம்பி நிமிர்து நிற்கும். வார விடுமுறை நாட்களில் இளம் மனைவி நித்திரையால் எழுந்து வந்து பல்கணியால் பார்க்கும்போது சொல்லிவைத்தாற் போல் பக்கத்து வீட்டின் வயேதிப மாது தனது துணிகளை துவைத்து இந்தக்கம்பில் விரித்துக் காயப்போட்டுக்கொண்டிருப்பாள்.

இவள் அந்த துணிகளை நன்றாக உற்றுப்பார்த்து விட்டு இந்தக்கிழவிக்கு ஒழுங்கா துணிதோய்க்கத் தெரியாது ஊத்தையெல்லாம் அப்பிடியே இருக்க கொண்டுவந்து காயப்போடுது ஒழுங்கான சோப் போடுறதில்லையாக்கும் என்று கூறிய வண்ணம் கணவனைப்பார்பாள். கணவன் எதுவும் சொல்லாமல் தன்பாட்டில் இருப்பான். அது இவளுக்கு இன்னும் சற்று எரிச்சலைக் கொடுக்கும்.

பிரட்மன் வழியில் முரளி

.

டெஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவில் எந்தவித மாற்றத்தினையும் முத்தையா முரளிதரன் செய்யமாட்டார் என அவரது முகாமையாளர் குஷில் குணசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 792 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலகில் அதிகூடிய விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான முத்தையான முரளிதரன் இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருந்தார். எதிர்வரும் 18ஆம் திகதி காலியில் நடைபெறும் இந்தியா - இலங்கை போட்டியே முரளியின் இறுதிப் போட்டியாக இருக்கும்.

99% தமிழர்கள் உண்மையான அகதிகளே

.
புகலிடம் நாடிவரும் 99% தமிழர்கள் உண்மையான அகதிகளே-  பயங்கரவாத விவகார நிபுணர் கூறுகிறார்

புகலிடம் நாடிவரும் இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான அகதிகளே எனவும் அவர்கள் பயங்கரவாதிகளின் அனுதாபிகள் என்பது இலங்கை அரசாங்கத்தின் கட்டுக்கதை எனவும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் கிளைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

பச்சைக் கட்சிக்கு போட்டியிடும் தமிழ்ப் பெண்

.

செல்வி பிரமி ஜெகன் 30 வயது நிறைந்தவரும் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் இங்கு தனது 8 வது வயதில் அகதியாக வந்தவரும் கடந்த 8 வருடங்களாக மக்குவாரி வங்கியிலும் ஜேபி மோர்கன் என்ற நிறுவனத்திலும் வேலை பார்த்தவர் எதிர்வரும் தேர்தலில் செனற் பச்சைக்கட்சி வேட்பாளாராக போட்டியிடுகிறார். இவர் எஸ்பிஎஸ் யிலும் நிறுவராகவும் வேலை பார்த்துள்ளார்.
இவர் நியூ சவுத் வேல்ஸ் செனற் பச்சைக் கட்சியில் நாலாவதாக இருப்பதால் வெல்லுவது மிக கடினமாகும்.

பயங்கரமான ஆயுதம் - அ.முத்துலிங்கம்

.
குறுந்தொகையில் ஒரு பாடலைப் படித்தபோது சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது. இவ்வளவு காலமும் அப்படி தோன்றியதில்லை. இந்த உலகத்தில் பல விசயங்கள் உங்கள் உற்றார் உறவினர் ஊரார் என்ன சொல்வார்கள் என்ற பயத்தினால்தான் நடக்கின்றன. மனிதன் தன் சொந்த புத்தியால் யோசித்து எடுக்கும் முடிவுகள் குறைவு என்றே படுகிறது. இன்று அல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது. மனிதனை நல்வழிப் படுத்துவதோ தீ வழிப்படுத்துவதோ அரச கட்டளைகள் அல்ல; சமுதாயக் கட்டுப்பாடுகள்தான்.

யூனியன் கல்லூரி பழையமாணவர் சங்கம் சிட்னி

.
UNION COLLEGE OLD STUDENTS ASSOCIATION                  SYDNEY
                           “ANNUAL DINNER"

Place:                Granville Town Hall

                          (10 Carlton Street, Granville 2142)
Date:                  18/09/2010
Time:                  6.00 P.M

Contacts:               A J Jeyachandra : 0415 934 591


V Nagarajah : 0432 418 413          Dr. Gnanarajan : 02-9634 4387

மெல்பேர்ணில் வைரத்தில் முத்துக்கள் - எனது அனுபவம்

.

சாந்தினி புவனேந்திரராஜா


ஜுலை நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மெல்பேர்ண் நகரமண்டபத்தில் நடந்த வைரத்தில் முத்துக்கள் நிகழ்ச்சிக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காணும் ஆவலோடும் ஆர்வத்தோடும் அவரின் பரம இரசிகை என்ற வகையில் அங்கு சென்றிருந்தேன்.


தமிழர் புலம்பெயர் நாடுகளில் வதியும் எழுத்தாளர்களின் பார்;வைக்கு……..

.


அன்புடையீர் வணக்கம்,

சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் வருடாந்த ஒன்று கூடல்களை நடத்துவதற்கும் இலங்கையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்துவதற்காக தீர்மானித்தோம்.. இதுதொடர்பாக ஏற்கனவே பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது ஆக்கபூர்வமான பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெறுவதற்காக இம்மடலை எழுதுகின்றோம்.

நான்கு வகை பக்தர்கள் யார்?

.

ஹரே கிருஷ்ணா! வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கடவுளை வழிபடும் அனைவரும் பக்தர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த பக்தர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் என்ன கூறியுள்ளார் என்பதை இந்த வாரம் காண்போம் .


சதுர்விதா பாஜந்தேமாம் ஜனா: ஸுக்ருதினோர்ஜூந
ஆர்த்தோ ஜிக்யசூர்த்தார்தீ க்யாநி ச பரதர்ஷப

- பகவத் கீதை - 7 .16

2014 உலகக்கிண்ண சின்னம் அறிமுகம்

.
2014 உலகக்கிண்ண சின்னம் அறிமுகம்
பிரட்மன் வழியில் முரளி


2014ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக்கிண்ண சின்னம் அறிமுகம் 2014ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் அப்போட்டிக்கான உத்தியோக பூர்வ சின்னத்தினை சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களில் சம்மேளனத்தின் தலைவர் ஜோஸப் எஸ்.பிளட்டர் வெளியிட்டு வைத்திருக்கிறார்.

ஊடகம், படைப்பிலக்கியத்துறைகளில் செவ்விதாக்கம்

.
ஊடகம், படைப்பிலக்கியத்துறைகளில் செவ்விதாக்கம்
செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் கவனிக்கவேண்டிய பக்கம்
செவ்விதாக்கம் பல்கலைக்கழகங்களில் பாடநெறியாகுமா?

2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலில் இடம்பெறும் முதல் நிகழ்ச்சி
 முருகபூபதி
ஊடகத்துறையில் செம்மைப்படுத்தும் (Editing)  பணியானது இந்தத்துறையின் தொடக்க காலத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அத்துடன் மேலைத்தேய நாடுகளில் படைப்பு இலக்கிய வெளியீட்டுத்துறையில் பதி;ப்பாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே கொப்பி எடிட்டர் (Copy Editor)  பணியாற்றுவார். இவரது பணி நூலுருவில் வெளியிடப்படவுள்ள படைப்பின் மூலத்தை சிதைக்காமல் செம்மைப்படுத்துவது.

ஒட்டகம் கேட்ட இசை

.

அரிசி, புளி, உப்பு, காய்கறி வாங்கிவர அம்மா கடைக்கு அனுப்பும்போது நடைஅலுப்பை மறப்பதற்காக, ஒரு மனப்பாடச் செய்யுளைப்போல “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்..” பாட்டை உற்சாகமுடன் பாடிக்கொண்டே ஓடுவேன். அப்போது என் வயது பத்திருக்கலாம். ஏரியில் குளித்துவிட்டு, துவைத்த வேட்டியை உதறி முதுகுப்பக்கமாக இரண்டு கைகளாலும் விரித்துப் பிடித்து உலர்த்தியபடி “ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே..” என்று பாடியபடி அப்பா நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கூடவே நடந்துவந்த காலம் அது.

நீங்களும் அழகிதான்..!

.


பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக வைத்திருப்பதற்கு அரும்பாடுபடுவார்கள். அப்படி அழகாக இருப்பதற்கான சில டிப்ஸ்...
கண்
கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வேண்டுமாயின் வெள்ளரிக்காய் சாற்றை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் வைத்து வரவும்.

இந்திய பணத்திற்கு புதிய குறியீடு

.

இந்திய பணத்திற்கு புதிய குறியீடு ; இனி ஆர்.எஸ்., கிடையாது !

புதுடில்லி : உலக அளவில் உள்ள நாட்டு பணத்தை குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல் இந்திய கரன்சிக்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பார்வைக்கு போயிங் 787

 .

யூலை மாதம் 19ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை நடைபெறும் யு.கே பான்வறோ ஆகாயவிமான காட்சியில் இந்த புதிய விமானம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும்.

உலகமயமாக்கல் செய்தது என்ன?

.

ஒருநாட்டில் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையின் வறுமையை போக்க முடியவில்லை என்றால் அந்த நாடு கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தால் என்ன பயன்? என்று வினவியிருந்தார் நெல்சன் மண்டேலா.

“உலகமயமாக்கல்” என்றால் என்ன? பணக்கார நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவது ஒரு புறமிருக்க ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளுக்கு சென்று குடியேறுவது மறுபுறம் நடந்து கொண்டிருக்கும். இது எவ்வளவு தூரம் யதார்த்தமான கூற்று என்பதை நாம் நாள் தோறும் கண்கூடாக காண்கிறோம்.

இலத்திரனியல் கால்கள் அறிமுகம்!

.

சக்கர நாற்காலிகள் இனி தேவையில்லை: இலத்திரனியல் கால்கள் அறிமுகம்!

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு எழும்பி நடமாட முடியாமல் தவிக்கின்றவர்களுக்கு இனிப்பான செய்தியொன்றினை நியூஸிலாந்து உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஹெய்டன் அல்லன் என்பவர் 5 வருடங்களின் முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தார். இனிமேல் அல்லனினால் எழுந்து நடமாட முடியாது என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அதன்பின்னர் அல்லனின் வாழ்க்கை சக்கர நாற்காலியுடனேயே கழிந்தது.

நடிகர் விஜய்க்கு ஆப்பு…

.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் அவசர கூட்டத்தில் விஜயின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கமுடியாது என அறிவித்திருக்கிறார்கள்.

குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களின் மூலம் திரையரங்க உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் அதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென நடிகர் விஜயிடம் அவர்கள் கோரியிருந்தனர். ஆனால், அந்த நஷ்டஈட்டினை விஜய் வழங்கவில்லை. இதனால் கொதித்துப்போன திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றுசேர்ந்து விஜயின் படங்களுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்கள்.
தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் விஜய்க்கு இந்த அறிவிப்பு மேலும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது.