மரண அறிவித்தல்

.
                                            திருமதி ஜெயமணி சுப்பிரமணியம்.
மறைவு 30.06.2016

கொக்குவில் கிழக்கு, நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்  சிட்னி பிளக்டவுனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயமணி சுப்பிரமணியம் 30.06.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற தம்பாபிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும்
காலஞ்சென்ற சுகுமாரன், ஜெயக்குமாரன்(ஜேர்மனி) சுகுணா(கனடா) மஞ்சுளா(நெதர்லாந்து) மோகனா(நெதர்லாந்து) வசுந்தரா (சிட்னி) காலஞ்சென்ற சாரதா, பாலகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
ஜெயவீரசிங்கம், ரஞ்சன், செல்வராஜா, பகீரதன், நேசன், ராணி, லதா வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்
சிரோன்மணி, காலஞ்சென்ற ருக்மணி, வரதராஜன், வனிதாமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்
பிரியா- உதயஸ்ரீ, பிரபு-கீர்த்தனா, டயானா,காலஞ்சென்ற குரு, கோபி, இந்துமதி-மாறன், அருண், லெவின், சியான், நிலான் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்  பொபி-லதா, சோபி-ஸ்ரீதரன், சுபி, சந்துரு, ஆர்த்தி குமரன், சகானா, ஆரணி-பிரதாப், ராகவன், மாதங்கி, சுதன், சுமி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்  ஜனா, லாவண்யா, கம்சியா, குருஷோத்,அஜய், சஞ்சய், அனிஷ், அஸ்வின்,அசானா, அவினாஷ,ஆகியோரின் பாட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.07.2016 செவ்வாய்க்கிழமை      அன்று லிட்கம் ருக்வூட் மயானத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் சப்பலில் 9.30 மணியிலிருந்து நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பகீரதன் 0419 599 255  
இறுதிக்கிரியைகள்  - 05.07.2016 செவ்வாய்க்கிழமை 9.30 மணிக்கு                                                                             Lidcombe Rookwood Cemetery, East chapel இல் நடை பெறும்

மரண அறிவித்தல்

.
                                       ஆறுப்பிள்ளை சபாரத்தினசிங்கம் 
மறைவு 29/06/2016 
யாழ் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வரும் வறுத்தலைவிளான் அ. மி. த. க. பாடசாலை முன்னாள் அதிபருமானஆறுப்பிள்ளை சபாரத்தினசிங்கம் அவர்கள் 29/06/2016 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார்  காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்
நாகலிங்கம் சிவபாக்கியவதியின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுகிர்தம்மா, பவளம்மா, செல்வரத்தினம், ஜெயரத்தினசிங்கம், புஷ்பம்மா, செகரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
ஞானசோதி (பிரித்தானியா), ஞானராஜன் (அவுஸ்திரேலியா), ஞானதீபம் (இலங்கை) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம் (பிரித்தானியா), அருந்ததி (அவுஸ்திரேலியா), இராசகாந்தன் (இலங்கை)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதன், ஜெபன், அருஜா, அர்ஜுன், சுதா, சுகிர்தா, சுஜந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமிலியா, யோசுவா, சுஜாதா, ஜெபேஷ், சாகித்தியன், சானுகா, சிகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing -  
Saturday  02/07/2016, 10:00 மு. 11:00 மு.
 Merrylands Baptist church, CNR of Newman Rd and Memorial Ave, Merrylands NSW 2160, Australia

Funeral- 
Wednesday   06/ 07/2016, 11:00 மு. 12:30 பி.
Castlebrook Crematorium, Windsor road, Rouse Hill NSW 2155, Australia

தொடர்புகளுக்கு - Gnanarajan (son) -Australia 96344387 or 0413 889 633
                                      Gnanasothy (daughter) - UK  +441444246145
                              Gnanatheepam (daughter) – Sri-Lanka   +94776271852
 

யாதுமாகியவள் - சேயோன் யாழ்வேந்தன்

.

காவல்காரியாய் சில நேரம்
எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும்
புலனாய்வு அதிகாரியாய் சில நேரம்
எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும்
வழக்கறிஞராய் சில நேரம்
எங்கள் பிணக்குகளை விசாரித்து
தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம்
பல வேடம் போடும் அம்மா
எப்போதும் வீட்டுச் சிறையில்
கைதியாய்!

யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் இரவு உணவு நிகழ்வு 2016

.
யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் இரவு உணவு நிகழ்வு 2016 சனிக்கிழமை இரவு  Grantham hall,  seven hill இல் இடம் பெற்றது . யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தினர் வழமை போலவே இம்முறையும் மண்டபம் நிறைந்த பழைய மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நிகழ்வை ஆரம்பித்தனர். சௌந்தரி கணேஷன்  நிகழ்ச்சியை  தொகுத்து வழங்க இவ்வாண்டு தலைவர் திரு விசாகுலன் வரவேட்புரையை வழங்கினார் . யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும் தற்போது சிட்னி பல்கலை கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராக இருப்பவருமான Dr.கணேசலிங்கம் அவர்களும் அவர்தம் பாரியாரும் குத்து விளக்கேற்றி நிகழ்வை மங்களகரமாக ஆரம்பித்து வைத்தார்கள் .

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
காடு  கழுவி  வரும்  கங்கையாளை  இசைத்தட்டுக்கு அழைத்துவந்த    கவிஞர்  முருகையன்
தனித்திருந்து  வாழும்  தவமுனியாக  அந்திம காலத்தை கடந்த  பேராளுமை
இளம்தலைமுறைக்கு  ஆதர்சமாக  விளங்கிய  கலை, இலக்கிய  கல்விமான்
     
                                                                     
இந்தப்பதிவை  எனது  வழக்கமான  திரும்பிப்பார்க்கின்றேன்  தொடரில்  எழுத  முன்வந்தபோது,   இதற்கு  எழுதமறந்த குறிப்புகள் எனவும்   தலைப்பிட்டிருக்கலாமோ   என்றும்  யோசித்தேன்.   எப்படி இருந்தாலும்   எழுதப்படுவதுதானே  முக்கியம்.
கடந்த    ஜூன் 27  ஆம்  திகதி  மல்லிகை ஜீவாவின்  பிறந்த  தினம். அவருக்காக   கொழும்பில்  நண்பர்  கவிஞர்  மேமன்கவி மட்டக்குளியவில்   ஒரு  சந்திப்பு  நிகழ்வும்  நடத்தினார்.
ஜீவாவுக்கு   மேமன்கவியின்  கைத்தொலைபேசி   ஊடாக வாழ்த்துத்தெரிவித்துவிட்டு,    ஜீவாவுடன்  எனக்கிருந்த  நீண்ட கால நட்புறவு   நினைவுகளில்  சஞ்சரித்தபோது,   மல்லிகைக்காக  எமது ஊரில்   அக்காலகட்டத்தில்  நடத்திய  இலக்கிய  நிகழ்வுகளும்  அதில் கலந்துகொண்டவர்களும்   மனக்கண்ணில்  தோன்றினார்கள்.

இலங்கைச் செய்திகள்


50 வெளிநாட்டு பயணங்கள் குறித்து யோஷித்தவிடம் விசாரணை செய்வதற்கு கடற்படை தீர்மானம்

 வடக்கில் காணிகளை விடுவிக்கும் அரசு   முல்லைத்தீவில் அபகரிக்கின்றது  :ஜெனிவாவில் வடக்கு மனித உரிமை அமைப்பு தெரிவிப்பு

பசில் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு இலங்கையர்கள் மீட்பு

பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு

ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் – 15 - - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

  தமிழ் பாரம்பரிய இலக்கிய வளர்ச்சியில் சிற்றிலக்கியமாக குறவஞ்சி பிரபலமானது. தலைவி தோழிகளுடன் பந்தாடும் சமயத்தில் பவனி வந்த தலைவனைக் கண்ட அவள் தன்னை இழக்கிறாள். அவனை நினைத்து நினைத்து ஏங்குவாள். அவனை அடையத் துடிப்பாள். அடைய முடியாமையால் பலவித மன உடல் உபாதைகட்கு ஆளாவாள். மன்மத பானங்கள் அவளைத் தாக்கும். பாலும் கசக்கும். குளிர் நிலவும் சுட்டெரிக்கும். அவள் நிலை காணப்பொறாத தோழி குறிபார்க்க குறத்தியை அழைத்துவருவாள். குறத்தியோ, தலைவன் அங்க அடையாளங்களைக் கூறுவாள். தலைவி பெயரைச் சொல்லும்படி கேட்க, குறத்தி பூடகமாக தலைவன் பெயரையும் சொல்லிவிடுவாள். தலைவி மனமகிழ்ந்து பரிசுகள் கொடுப்பாள்.

டொமினிக் ஜீவா எனும் ஈழத்து இலக்கிய வரலாறு - ஏலையா க.முருகதாசன்

.

ஈழத்து இலக்கியம் பற்றி பேசுபவர்கள் திரு.டொமினிக் ஜீவாவை பற்றிப் பேசாமல்  கடந்து போகவே முடியாது.
திரு.டொமினிக் ஜீவா தனது 88வது வயதை நிறைவு செய்துள்ளார். தனது பிறந்த நாளன்று இன்னொரு இலக்கிய கர்த்தாவான திரு. மாத்தளை சோமுää மல்லிகைத் தோட்டக்காரனின் வீடு சென்று வாழ்த்தியிருக்கின்றார்.
மகாஜனக் கலு;லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மாணவர் மன்றத்தின் அழைப்பை ஏற்று  திரு.டொமினிக் ஜீவா உரையாற்ற வந்திருந்தார். 

அன்றைய தினத்திலிருந்து அவரின் இலக்கியச் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொண்ட நான், யாழ்ப்பாணத்திற்குப் போகும் போதெல்லாம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் மல்லிகை சஞ்சிகையை வாங்கத் தவறுவதில்லை. வண்ண அட்டைகளைத் தாங்கிய இந்திய சஞ்சிகைகளுக்கு நடுவில் எந்தவொரு வண்ண அட்டையும் இல்லாமல் மல்லிகை மனம் வீசிக் கொண்டிருக்கும்.
எனது அயலவரும் வீரகேசரி,தினக்குரல் முன்னாள் ஆசிரியருமான திரு.ஆ. சிவநேசச்செல்வன் தண்ணீரும் கண்ணீரும் என்ற சிறுகதைத் தொகுப்பைத் தந்தார். அது திரு.டொமினிக் ஜீவாவின் கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பாகும்.

அக்பர் விடுதிக்கு வந்த அழகி – குறும் கதை - -சுருதி -

.

அவுஸ்திரேலியாவில் ஒரு காலை நேரம்.
ரெலிபோன் அடித்தது. எடுத்தேன்.
மறுமுனையில் அந்தப்பெண் விக்கி விக்கி அழுதாள். பேச்சு வரவில்லை. எதையும் சரிவரச் சொன்னால்தானே அவர் யார் என்ன சொல்கின்றார் என்பதை நான் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவரது குரலில் இருந்து அவர் தமிழினி என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். தமிழினி நண்பன் ஜெயரதனின் மனைவி.
உங்கடை வைஃப் இருக்கிறாவா? அவரிடம் கொடுங்கள் ஒருவாறு தானே தன்னைத் தேற்றிக் கொண்டு சொன்னாள் தமிழினி.
நான் மனைவியிடம் ரெலிபோனைக் கொடுத்துவிட்டு, அவளருகில் விடுப்புப் பார்க்க நின்றேன்.
மனைவி …’ என்று வாய் பிளந்தாரே தவிர ஒன்றும் கதைக்கவில்லை. குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது. நான் ஒட்டுக் கேட்பதற்காக மனைவியின் காதருகே சென்றேன்.

ஒரு நிமிஷம் பொறுங்கோ. போங்கோ அங்காலைஎன்னைத் தோட்டப்பக்கமாகக் கலைத்தாள் மனைவி. சரிபிறகு சொல்லத்தானே வேண்டும். நான் அங்கிருந்தபடியே கண்ணாடிக்குள்ளால் மனைவியைப் பார்த்தேன். மனைவியின் முகம் பேயறைந்தது போல இறுகிக் கிடந்தது. இன்னும் கொஞ்ச நேரம் கதைத்தால் அவளும் அழுதுவிடுவாள் போல இருந்தது.

மாணிக்கவாசகர் குருபூசை 08 07 2016

.












மலர்ந்துவிடச் செய்துநிற்போம் ! - எம் . ஜெயராமசர்மா... மெல்பேண் ..

.

                 கடவுளில் காதல்  கொள்ளு 
                 கல்வியில் காதல்  கொள்ளு
                 கடமையில் காதல் கொள்ளு 
                 காதலில் காதல்   கொள்ளு
                 இடர்தரும் விதத்தில் காதல்
                 எற்படும் பொழுது ஆங்கே 
                 குறையுனை வந்தே சேரும்
                 குழப்பத்தில் இருப்பாய் நாளும் !

                 ஒருதலைக் காதல் செய்தால்
                 உளமெலாம் வருத்தம் சேரும்
                 நிலவதைப் பார்க்கும் போதும்
                 நெருபென நினைக்கத் தோன்றும்
                 அளவிலா துன்பம் அங்கே 
                 அகத்தினை உடைத்தே நிற்கும்
                  ஒருதலைக் காதல் என்றும்
                 உயிருக்கே ஊறாய் நிற்கும் ! 

சைவ மன்றம் நடாத்தும் சைவசமய அறிவுத் திறன் தேர்வு - 2016

.

http://www.sydneymurugan.org.au/murugan2/index.php/downloads/publications/category/5-model-questions-and-answers


http://www.sydneymurugan.org.au/murugan2/index.php/component/acymailing/archive/view/listid-1-mailing-list/mailid-231-saiva-skills-assessment-2016?Itemid=106



கரைசேரா படகுகள் சிறுகதை தொகுதி நூல் வெளியீடு

.

கிளிநொச்சி திருநகர் இளையதம்பி நடராசாவின் கரைசேரா படகுகள் சிறுகதை தொகுதி நூல் வெளியீடும், அவரது வாழ்கை குறிப்புகள் ஆவணப்படத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை பிறபகல் நான்கு மணிக்கு கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மூத்த எழுத்தாளரான இளையதம்பி நடராசா அவர்கள் ஓய்வு எனும் சிறுகதை தொகுதியை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். தற்போது கரைசேரா படகுகள் அவரது இரண்டாவது சிறுகதை தொகுதியாகும்.

கரைச்சி பிரதேச செயலக கலாச்சார பேரவையின் வெளியிடாக இது அமைந்துள்ளது. அத்தோடு மூத்த கலைஞர் என்ற வகையில் அவரை மதிப்பளிக்கும் நோக்குடன் அவரது வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ஆவணப்படம் இறுவெட்டும் வெளியிடப்பட்டது.
.
அவுஸ்திரரேலிய மெல்பேண் தமிழ்ச் சமூக வானொலிவானமுதம் “தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு அகவு பத்து.


அவுஸ்திரேலியா மெல்பேணில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினால் (Whittlesea Tamil Association) ஆரம்பிக்கப்பட்ட சமூக வானொலியான வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை தனது பத்தாண்டுச் சேவையைப் பூர்த்தி செய்து பதினோராவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பண்பலை வரிசை PVFM 88.6 ஊடாகத் தனது கன்னி ஒலிபரப்பினை வானலையில் தவழவிட்டது.
கடந்த பத்து ஆண்டுகளாகச் சிறுவர் முதல் பெரியோர்வரை அனைவரையும் கவரும் வண்ணம் சகல நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டு வருகின்றது என்பது வானமுதத்தின் ஒரு சிறப்பாகும். ஆரம்பத்தில் ஒரு மணித்தியாலமாக ஆரம்பித்த ஒலிபரப்புச் சேவை தற்பொழுது நான்கு மணித்தியாலங்களாக ஒலிபரப்பினை விஸ்தரித்துள்ளைமை அதன் வளர்ச்சிக்கு சான்று பகிர்கின்றது.

உலகச் செய்திகள்


பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video)

இஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது

ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு 

 'பிறிக்ஸிட்' விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு


எத்தனை காலமும் ஏமாற்றலாம்!- சுப.வீரபாண்டியன்

.

ராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும் என்று 2014 பெப்ரவரி 19ம் திகதியன்று சட்ட மன்றத்திலேயே அறிவித்தார், அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.
இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே ஜெயலலிதாதான்.
பிறகு ஏன் இந்த மாற்றம்? மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன? இந்தப் பச்சை இரட்டை வேடத்தை எவரும் கண்டிக்கவில்லையே ஏன்? இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன.

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்:-

.

இலங்கை மத்திய வங்கியின் 14ம் ஆளுனராக கலாநிதி இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்காக இந்திரஜித்தை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

1950ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதி பிறந்த கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஒர் பொருளிளியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற கலாநிதி இந்திரஜித், இங்கிலாந்தின் ஹாரோவ் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த கலாநிதி இந்திரஜித், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்.

மாணிக்கவாசகர் குருபூசை

.











முழுவதையும் காண கீழே செல்லுங்கள்


தமிழ் சினிமா - அப்பா





அப்பா ( வீடியோ உள்ளே ) - Cineulagam

தமிழ் சினிமாவில் அவ்வப்போதுதான் குழந்தைகளுக்கான படங்கள் வருகின்றது. அதுவும் குறிப்பாக சமீபகாலமாக பேய் படங்களின் வரிசையில் இருந்து கொஞ்சம் இடைவேளை விட்டு இந்த வாரம் குழந்தைகள் ஸ்பெஷலாக அப்பா படம் வந்துள்ளது.
எதையோ நோக்கி ஓடும் மிஷின் வாழ்க்கையை பெற்றோர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகள் LKG சேரும் போதே அவர்கள் தலையிலும் ப்ரஷரை ஏற்றிவிடுகிறார்கள், இதனால் ஏற்படும் விளைவை சமுத்திரக்கனி சாட்டை எடுத்து விலாசியுள்ளார்.

கதைக்களம்

ஒவ்வொரு அப்பாவிற்கும் தன்னுடைய பிள்ளைகளை எதிர்காலத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் இருக்கும். அப்படிப்பட்ட மூன்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதை சமுத்திரக்கனி தன்னுடைய பாணியிலேயே வெளிச்சம் போட்டு காட்டியுள்ள படம் தான் இந்த அப்பா.

படத்தை பற்றிய அலசல்

பொதுவாக சமுத்திரக்கனியின் படங்கள் என்றாலே சற்று எதிர்பார்ப்பும், உணர்ச்சி பூர்வமான வசனங்களும் இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறார் சமுத்திரக்கனி.
தன்னுடைய மகனிற்கு படிப்பு மட்டும் முன்னேற்றமல்ல இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஒரு நல்ல அப்பாவாக சமுத்திரக்கனி வருகிறார்.
தம்பி ராமையா சாட்டை படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் இந்த படத்திலும் ஒரு சுயநலமான மனிதராக நடித்திருக்கிறார். இந்த உலகம் சுயநலமிக்கது இதில் நீயும் சுயநலமாகத்தான் இருக்க வேண்டும் என்று தன் மகனிற்கு சொல்லிக் கொடுக்கும் போதும் ரசிக்க வைக்கிறார்.
என்ன நடந்தால் என்ன நாம இருக்கிற இடம் தெரியக்கூடாது என்று தன்னுடைய பிள்ளையை வளர்க்கும் ஒரு அப்பாவி அப்பாவாக வரும்நமோ நாராயணன்
மேலும் சமுத்திரகனியின் மகனாக நடித்திருக்கும் காக்கா முட்டை விக்னேஷ். இந்த படத்திலும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய சந்தேகங்களை கேட்கும் போதும் அதை சமுத்திரகனி அவருக்கு புரிய வைக்கும் இடத்திலும் ஒரு நல்ல அப்பா மகன் உறவு திரையில் தெரிகிறது.
தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் ராகவ் ஒரு பயந்த சுபாவம் கொண்டவராகவும், தன்னுடைய அப்பாவின் புல்லெட் சத்தத்தை கேட்டு பயந்து ஓடும் போதும் ரசிக்க வைக்கின்றார்.
இதை தவிர நமோ நாராயனணின் மகனாக வரும் நாசத் மற்றும் யுவலக்ஷ்மி, கேப்ரியல்லா, திலிப்பன், வினோதினி அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்துக்கு பொருந்தி நடித்துள்ளனர்.
படத்தின் காட்சியமைப்புகளுக்கு தனியாக எழுந்து நின்று பாராட்ட வேண்டும், அதிலும் சமுத்திரக்கனி தன் மகன் ஒரு பெண்ணின் மீது ஆசைக்கொண்டாலும், இந்த வயதில் இதை எப்படி அணுக வேண்டும் என்று விவரிக்கும் இடம், நமக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே என ஏங்க வைக்கும் காட்சிகள்.
இளையராஜாவின் இசை எப்போதும் இதுப்போன்ற படங்களுக்கு உயிராக இருக்கும், நம்மையும் அதோடு பயணிக்க வைக்கும், இதில் கொஞ்சம் பயணம் பாதியிலேயே நின்ற அனுபவம்.
ரிச்சர்டு M நாதனின் ஒளிப்பதிவும் படத்தின் பட்ஜெட் காரணமா? அல்லது மிகவும் யதார்த்தமாக எடுக்கவேண்டும் என்ற நோக்கமா? என்று தெரியவில்லை. கொஞ்சம் மங்கியே காணப்படுகின்றது.

க்ளாப்ஸ்

பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிபேசும் போதும், தன் மகனிடம் அவனை ஊக்கப்படுத்த பேசும் வசனங்களின் போதும் கைதட்டல்கள் பறக்கிறது.
தம்பி ராமையாவின் யதார்த்தமான நகைச்சுவை கலந்த நடிப்பு படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறது.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை சற்று யோசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் பட்ஜெட் காரணமாக ஏதோ குறும்பட சாயல் போலவே உள்ளது, மற்றபடி ஏதுமில்லை.
மொத்தத்தில் அப்பா அனைத்து அப்பாக்களும் தங்கள் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங்- 3.25/5   நன்றி  cineulagam