அமைதி காத்து அமர்ந்துள்ளார் ! - மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


         புத்தர் மதம் பேசவில்லை
                 புனித வழிதான் சொன்னார் 
        சித்தர் நிலை தானுற்றார் 
                 சொத்தையெலாம்  துறந்து நின்றார் 
         எத்தனையே ஆசை வரும்
                   எல்லாமே அடக்கு என்றார் 
           இன்ப நிலை எய்துதற்கு 
                     இச்சையினை விலக்கு என்றார் !

               மதம் காணா புத்தர்தமை
                     மதங்காண வழி சமைத்தார் 
              மதம் என்னும் மாயைக்குள்
                     மகான் தன்னை நுழைத்துவிட்டார்
               அவர் பெயரால் பலவற்றை
                        ஆக்கியவர் பெயர் கொடுத்து
                 அவர் வெறுத்த ஆட்சியிலே 
                         அவர் பெயரை அமர்த்திவிட்டார் 

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019



இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சிங்களப் பேரினவாத சக்திகளால் இனப்படுகொலைசெய்யப்பட்ட தமிழ்மக்களையும்அந்த இனவழிப்பின் உச்சமாக 2009-ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மாபெரும்மனிதப் பேரவலத்தின்போதும் காவுகொள்ளப்பட்ட தமிழ் மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகடந்த 18-05-2019 சனிக்கிழமை மெல்பேர்ணில்உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மெல்பேர்ணில் அமையப் பெற்றுள்ள கங்கேரியன் சமூக மண்டபத்தில்மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிகாதலைமையில ஆரம்பமாகிய இந்நிகழ்வில்முதல்நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதுமுள்ளிவாய்க்கால்இனவழிப்பின்போதுதனது இரண்டு பிள்ளைகளை இழந்துபின்னர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்திருந்ததிருமதி செல்வச்சந்திரா செல்வராஜா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்

அதனைத் தொடர்ந்து,  அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செயற்பாட்டாளர்  திருமதி வசந்தி சேகர் அவர்கள் ற்றிவைக்கதமிழீழத் தேசியக்கொடியை மூத்த தமிழ்ச்செயற்பாட்டாளரும்ஊடகவியலாளருமான திரு செந்தில் செந்தில்நாதன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இனவழிப்பின்போது காவுகொள்ளப்பட்ட மக்களை இவ்வாண்டு பத்தாவதுஆண்டாக நினைவுகூரும் முகமாமெல்பேர்ண் தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைசார் செயற்பாட்டாளர்கள்இளையோர்கள் என ருங்கிணைந்து, பத்து நினைவுச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன

தொடர்ந்து சிங்களப் பேரினவாதப் படைகளால்இனப்படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ்மக்கள் நினைவாகவடிவமைக்கப்பட்ட நினைவுப் பீடத்திற்குநிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரும் வரிசையாக வந்துமலர்வணக்கம் செலுத்தினார்கள். மலர்வணக்கத்தை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது

இளைய குரு ( யோகன் - கன்பரா )


அடிக்கொரு தடவை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில், உயர் மட்ட நிர்வாகங்களில் மாற்றம் செய்வது, கிளைகளுக்கும், பிரிவுகளுக்கும்  பெயர் மாற்றம் என்று மட்டுமில்லாது வேலையாட்களை இடமாற்றுவது அல்லது குறைப்பது என்பது  அரச திணைக்களங்களில் சகஜம்தான். இது கடந்த ஐந்து வருடங்களில் மூன்று தடவைகளுக்கு மேல் நிகழ்ந்து விட்டதால் எனக்கு  நான் வேலை செய்யும் கிளையின் பெயரே இப்போது மறந்து போய் விட்டது.
இம்முறை வந்த மறுகட்டமைப்பு எங்கள் பிரிவுக்கு, குறிப்பாக எங்கள் குழுவுக்கு வந்த கத்திதான் என்பது விரைவிலேயே புலப்பட்டுவிட்டது. 
எங்கள் குழுவில் ஆறரைப் பேர்கள் செய்யும் வேலையை நான்கரைப்  பேர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று உத்தரவு வந்து விட்டது. அது என்ன அந்த அரைக்கணக்கு என்று  நீங்கள் கேட்பீர்கள். ஆறரை மூளைகளின் வேலையை நான்கரை மூளைகள் செய்ய வேண்டும் என்று சொன்னால் யாரந்தப்  பாதி மதி  கொண்ட பேர்வழி என்று நீங்கள் மீண்டும் கேட்பீர்கள். 
அவர்தான் எங்கள் சூப்பர்வைசர். அவருக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்து ஐந்து மாதம் என்பதால் பிள்ளையை  வீட்டில்  பார்த்துக் கொள்வதற்காக  வாரத்தில் இரண்டரை நாட்கள் மட்டுமே வேலைக்கு வந்து பாதிச் சம்பளத்தில்  வேலை செய்கிறார்.
மறுகட்டமைப்புடன் ஆட்குறைப்பு  என்று வந்த முதல்  மின்னஞ்சலின் அமளி அடங்கு முன்னே இரண்டாவது மின்னஞ்சல்  வந்திறங்கியது.
சில பிரிவுகளில் ஆட்கள் குறைப்புக்கான தேவையும் அதே நேரம் வேறு பிரிவுகளில் ஆட்கள் தேவை என்ற நிலையும் இருப்பதால் விருப்பத்தினடிப்படையில் வேறு பிரிவுகளில்  அல்லது கிளைகளில் வேலை  செய்ய வாய்ப்புண்டு என்றது மின்னஞ்சல்.
கழுத்துக்கு வந்த கத்தி காதை  உரசிக்கொண்டு போனதாகவே எண்ணிக் கொண்டேன். 

தமிழர் என்றோர் இனமுண்டு - ஒத்தோடா அரசியல்


“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு”

என்று எந்தச் சூழலில் நாமக்கல் வே.இராமலிங்கம் பிள்ளை பாடிவைத்தாரோ தெரியவில்லை ஆனால் அது காலாகாலத்துக்கும் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்து விட்டது. அதை மீளவும் நிறுவி விட்டது நேற்றைய இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்.

சொல்லப் போனால் இந்த மாதிரியானதொரு போக்கு தாய்த் தமிழகத்திலும், தமிழீழத்திலும் காலாகாலமாக ஊற்றி வளர்க்கப்பட்டதால் தான் இலங்கையில் கூட ஒவ்வொரு தேர்தலிலும் கோடு கிழித்தால் போல கோட்டுக்கு அந்தப் பக்கம் தமிழர் தரப்பு தேர்தல் முடிவுகள் நின்று கொண்டிருக்கும்.

மானமும் அறிவும் தமிழருக்கு அழகு என்ற பெரியாரிய சிந்தனைகள் புரையோடிப் போன சமூகத்தில் இந்த முறை ஒப்பீட்டளவில் இளம் வாக்காளர்கள் அதிகம் கலந்து கொண்ட தேர்தலில் இந்தத் தொடர்ச்சி நிலை வியப்புக்குரியது. இதே தான் விடுதலைப்புலிகள் இல்லாத பத்தாண்டு கடந்த சமூகத்தில் என்னதான் விமர்சனம் இருப்பினும் தமிழ்த் தேசியம் என்று வரும் போது எல்லோரும் ஒரே குடையின் கீழ் அணி திரளும் போக்கு. இதற்கு முந்திய உதாரணமாக 1995 இல் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆட்சியதிகாரம் கழன்ற பின்னர் கூட தொடர்ச்சியான ஆதரவும் போக்கு அடுத்த தலைமுறையிடம் கடத்தப்பட்டதைக் குறிப்பிட முடியும்.

ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை -- அங்கம் 03 ( பகுதி 02 ) காந்தீயவாதியாக வளர்ந்து - மார்க்ஸீய மனிதநேயவாதியாக மாறிய செ. கணேசலிங்கன் முருகபூபதி



நாவல் சிறுகதை கட்டுரை விமர்சனம் திறனாய்வு மொழிபெயர்ப்பு பயண இலக்கியம் சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதியிருக்கும் கணேசலிங்கனின் எழுத்துக்களை சமூகவியல் பெண்ணியம் மாக்சீயம் தத்துவம் முதலான கண்ணோட்டங்களிலேயே வாசிப்பு அனுபவங்களை நாம் பெற்றுக்கொள்ளமுடியும்.


கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற நாவலின் தலைப்பு ஒரு கட்டுரை நூலுக்கான தலைப்பாக இருந்தபோதிலும் – தமிழ் சினிமாவில் வெளி உலகத்தால் கண்டுகொள்ளப்படாத துணை நடிகர்கள் மற்றும் காதல் பாடல் காட்சிகளில் நாயகன் நாயகிக்குப்பின்னால் உடலை வருத்தி ஆடும் துணை நடிகைகளின் தீனமான அவலக்குரல் அந்த நாவலில் கேட்கிறது.



இவருடைய செவ்வானம் நாவல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ. பட்டப்படிப்பிற்கு இலக்கிய பாட நூலாக தெரிவாகியுள்ளது. நீண்ட பயணம் நாவல் இலங்கையில் தேசிய சாகித்திய விருதைப்பெற்றது. மரணத்தின் நிழலில் நாவல் தமிழக அரசின் பரிசுபெற்றுள்ளது.
மகாகவி பாரதி தொடர்பாக நிறைய ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் கைலாசபதி – தொ.மு.சிதம்பர ரகுநாதன் ஆகியோர். எனினும் அவர்களுடன் பாரதி விடயத்தில் நிரம்பவும் கருத்து ரீதியாக முரண்பட்டு எழுதியவர் கணேசலிங்கன்.



ஆயினும் – அவர்களிடத்தில் துளியளவும் பகைமை பாராட்டாமல் அவர்கள் வாழ்ந்தபோதும் மறைந்தபோதும் உணர்வுபூர்வமாகவும் அதேசமயம் ஆக்கபூர்வமாகவும் செயற்பட்டவர் கணேசலிங்கன்.



கொழும்பு கனத்தை மயானத்தில் கைலாசின் பூதவுடல் தகனத்திற்காக இருக்கிறது. பலரும் அடுத்தடுத்து அஞ்சலி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கணேசலிங்கன் கைலாசின் உருவப்படம் பதிந்த அஞ்சலி பிரசுரங்களை அழுதழுது விநியோகித்துக்கொண்டிருக்கிறார். கைலாஸ் மறைந்து சில நாட்களில் அதாவது 1982 டிசம்பர் 15 ஆம் திகதிய குமரன் இதழில் கைலாஸின் படத்தை அட்டையில் பிரசுரித்து சிறப்பிதழ் வெளியிட்டார்.


பயணியின் பார்வையில் -- அங்கம் --08 - முருகபூபதி




எங்கள் தாயகம் இனம், மொழி, மதம், நிலம் சார்ந்த நெருக்கடிக்குள் -

" நமது மொழி தமிழ் - நம் தாயகம் ஆபிரிக்கா "   என வாதிக்கும்
                       " நாம் கருப்பர்"  நூலின் வரவு!


                                                                                                                     
" எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம் !
எல்லாப் பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை
எல்லாக்கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல
இருந்தபோதும், பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்"

                                                                                                     -- சித்தார்த்தன்

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து பத்தாண்டுகள் நிறைவடைந்த மாதத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவுபெற்ற மாதத்தில்  பிரார்த்தனைகள் தொடருகின்றன. இந்தப்பின்னணியில், இந்தக்காலப்பகுதியில் தொடரும் பயணியின் பார்வையில் - லண்டனில் பெற்றுக்கொண்ட               " நமது மொழி தமிழ் - நம் தாயகம் ஆபிரிக்கா "   என வாதிக்கும்  " நாம் கருப்பர்" என்ற  நூலைப்பற்றி சில வார்த்தைகள்.

இலங்கைச் செய்திகள்


விடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை

கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் 

இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல்  பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் - கனே­டிய பிர­தமர்

கிழக்கு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதி இரத்து

யாழில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆப்கான் அகதிகள்

 இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா-இலங்கை தீர்மானம்

வெளிநாட்டு அகதிகளை தங்கவைக்க பௌத்த குருமார் கடும் எதிர்ப்பு

ரிஷாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் பதவியிலிருந்து விலகுவோம் - மஹ்ரூப்

வெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் பதற்றம் ; இராணுவம் குவிப்பு

இராஜினாமா செய்யத் தயார் - அமைச்சர் ரிஷாத்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

மினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை

வடக்கு ஆளுநரைச் சந்தித்த சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் 

மோடிக்கு பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த வாழ்த்து

உறவு தொடரும் !...மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் மைத்திரி

சட்ட விரோதமாக  அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேர் கைது

பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம் 

 “ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் ?''

“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”

அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் மீள்குடியேறிய மக்கள் 

வரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்

உலகச் செய்திகள்


பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி

மீண்டும் பிரதமராகும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வாழ்த்து

வாழ்த்து தெரிவித்தோருக்கு  தனித்தனியே நன்றி தெரிவித்த மோடி : மைத்திரி, ரணில், மஹிந்தவுக்கு தெரிவித்தது என்ன?

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் திரேசா மே

நியூ­ஸி­லாந்து பாரா­ளு­மன்­றத்தில் மோச­மான பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்கள்

மூடிமறைக்கும் குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் மறுப்பு!

வடகொரிய கப்பலை கைப்பற்றி வைத்துள்ளமை இருதரப்பு உறவுகளில் விரிசலை ஏற்படத்தும்:வட கொரிய தூதுவர்

 "ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்"

 பிரான்சில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்

 மத்திய கிழக்கிற்கு படைகளை அனுப்ப அமெரிக்க முடிவு- பாரிய ஆபத்து என்கிறது ஈரான்

மோடி பிரதமராகக் கிடைக்கப்பெற்றது இந்தியர்கள் செய்த அதிர்ஷ்டம் - ட்ரம்ப்


பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை ; மீண்டும் பிரதமராகிறார் மோடி


 23/05/2019 மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

தமிழ் சினிமா - மான்ஸ்டர் திரைவிமர்சனம்


படங்களின் கதை எப்படி இருந்தாலும் சரி என்ற மனப்பாங்கு சில நேரங்களில் வந்தபோதிலும் சில நடிகர்கள், இயக்குனர்களுக்காகவே படத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணம் வரும். அப்படியான ஈர்ப்பை இப்படம் பெற்றுள்ளது Sj.சூர்யா நடிப்பில் வந்துள்ள மான்ஸ்டர். படம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.. வாருங்கள்...

கதைக்களம்

படத்தின் ஹீரோ Sj.சூர்யா ஒரு அரசு பணியில் இருக்கும் ஊழியர். அவருக்கு தஞ்சாவூரில் ஒரு எளிமையான குடும்பம். கேர்க்டரில் அவர் ரொம்ப சாஃப்ட். மற்ற உயிர்களை கொல்வதில் இவருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. அவருக்கு ஒரே நண்பர் கருணாகரன். சென்னையில் பணியாற்றும் சூர்யாவுக்கு பெற்றோர் நீண்ட நாட்களாக வாழ்க்கை துணையை தேடி வருகிறார்கள்.

ஆனால் அமைந்த பாடில்லை. இப்படியிருக்க ஒரு பெண் பார்க்க சொந்த ஊருக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு அவருக்கு ஒரு ஏமாற்றம். இந்நிலையில் புதுவீட்டிற்கு குடிபெயரும் அவருக்கு ஒரு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவரின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் வருகிறார். திருமணத்திற்காக இருவரும் தயாராகிறார்கள். அதே வேளையில் நகை கடையில் வேலை செய்யும் பிரியா சந்தேகத்திற்கிடமான வைரத்தால் போலிஸில் சிக்குகிறார். அதே வேளையில் வீட்டில் இருக்கும் ஒரு எலி ஒன்று செய்யக்கூடாத அட்டகாசம் செய்ய Sj.சூர்யா எப்படி அதை சமாளிக்கிறார்? சந்தேகமான வைரம் எப்படி வந்தது? எலி என்ன ஆனது என்பதே இந்த மான்ஸ்டர் பட கதை.

படத்தை பற்றிய அலசல்

Sj.சூர்யாவை பற்றி நாங்கள் சொல்வதற்கு முன்பே நீங்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள். தான் ஒரு திறமையான நடிகர் என்பதை இப்படத்திலும் அவர் காட்டியுள்ளார். அவருக்கு இது சாதாரண கதை போல படம் பார்த்த சிலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அவர் கிடைத்த வேடத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அவருக்கே உண்டான சில விசயங்கள் இப்படத்திலும் உண்டு.
அவருக்கு ஜோடியாக வரும் பிரியா பவானி சங்கர், ஒரு காட்சியில் பதறிப்போய் தானாக செய்யும் குறும்பான நடிப்பு கொஞ்சம் இண்ட்ரஸ்டிங். விளம்பர வாய்ப்புகள் வந்தால் மிஸ் பண்ணிடாதீங்க பிரியா!
மறைந்த நாடக நடிகர் சீனு மோகனை இப்படத்தில் பார்க்க முடிந்தது கொஞ்சம் மகிழ்ச்சி. இவர் வந்து போகும் சில காட்சிகளில் காமெடிகளும் இயல்பாக இருந்தது. அவருக்கு இப்படம் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
கருணாகரன் வழக்கம் போல இப்படத்திலும் இயல்பான நடிப்பு. குறிப்பாக எலிக்கும் இப்படி இரு பவரா என கேட்கும் வசனம், மைண்ட் வாய்ஸ் மற்ற வசனங்கள் படத்தில் காமெடிக்கான இடத்தை நிரப்புகிறது. இருந்தாலும் கருணா நீங்க இன்னும் கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணலாமே!
இயக்குனர் நெல்சன் வெங்கட் வழக்கமான படங்களை போல இல்லாமல் ஒரு சிம்பிளான கதையை அழகான படமாக கொடுத்திருக்கிறார். படத்தில் எலி வில்லனா அல்லது செகண்ட் ஹீரோவா என கேட்க வைக்கிறது. திருவருட்பா, வடலூர் வள்ளலாரை காட்டி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு அவருக்கு நாங்கள் தனியாக வணக்கம் சொல்லவேண்டும்.
படத்திற்கு ஏற்ற பின்னணி இசை, பாடல் என ஜஸ்டின் பிரபாகரன் தனக்கான இடத்தை ஃபில் செய்திருக்கிறார். அதீதமான கிராஃபிக்ஸ்களை காட்டாமல், சிம்பிளாக படத்தை கொஞ்சம் சீரியஸாக்கி கொண்டுபோகிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய்.
எலியால் நாம் கூட வீட்டில் அவதிப்பட்டிருப்போம், ஆனால் இங்கு? அத ஏங்க கேக்குறீங்க! என்கிறது எங்களின் மைண்ட் வாய்ஸ்! ஹா ஹா ஹா, சரி எலிக்கு என்ன ஆச்சு என நீங்கள் கேட்கலாம்! இங்கே நாங்களும் சர்ப்பிரைஸ் வைக்கிறோம். போய் தியேட்டரில் பார்த்துவிட்டு வாருங்கள்....

கிளாப்ஸ்

Sj.சூர்யா முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன்களே வசனம் பேசுகின்றன.
கருணாகரனின் சில கவுண்டர்கள் நிஜத்தை பிரதிபலிக்கின்றன்.
இயக்குனரின் சொல்லும் மெசேஜ், படத்தின் குவாலிட்டியான படைப்பு.

பல்பஸ்

இன்னும் கொஞ்சம் திரில்லிங் சேர்த்திருக்கலாமே இயக்குனரே..
மொத்தத்தில் கோடைகால விடுமுறையில் நம் வீட்டு குழந்தைகளோடு கொஞ்சம் நன்றாக டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் இந்த மான்ஸ்டர் படத்தில்.
நன்றி CineUlagam