இருளின் வாசம்

.
அதிர்ந்து விழும் இரைச்சலை 
அப்படியே விழுங்கி செரிக்கும் 
மௌனத்தை போல
 
கடந்து செல்கிறது இரவின்
 
இருள் படிந்த வானம்
 

வண்ணம் அற்ற வானத்தின்
 
நீர்த்த பரப்புகள்
 
பெரும் பீதியை தருகிறது
 
எவ்வளவு முயன்றும் ரசிக்க முடியவில்லை
 

பால்யத்தின் கோர நினைவுகள்
 
கோர்வையாய் அணிவகுக்க
 
உடலும் மனமும்
 
உலுக்கியது போல வெகுண்டு எழுகிறேன்
 

அதன் பிடியில் இருந்து தப்புவிக்க
 
ஓடி ஒளிந்து கொள்கிறேன்
 
கான்கிரீட் சுவர்களுக்குள்
 

இழுத்து மூடி கொண்ட
 
கதவு இடுக்குகள் வழியே
 
கசிகிறது இருள்

 nantri saraladevi.com

திரை இசை ஆரம் - வாணி ஜெயராமின் இன்னிசை நிகழ்வு

.


இன் நிகழ்ச்சி 7ஆம் திகதி ஜூன் மாதம் மலை 6.30 மணிக்கு Kings School Auditorium இல் நடைபெற்றது  15 நிமிடங்கள்  நிகழ்ச்சி தாமதமாக ஆரம்பித்தாலும், வாணி ஜெயராம் என்ற குயில் மேடை ஏறியதும் எல்லாம்மறந்து 
விட்டது. கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் அரங்கமே நிரம்பி வழிந்தது இந்த சாதனை குயிலின் இசை மழையில் நனையத்தான்


வாணி ஜெயராம் அரங்கினுள் நுழையும் போது மக்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை கௌரவப் படுத்தினார்கள். இதை அவ்வாறு ஒழுங்கு செய்த ஒருங்கினைபார்களுக்கு நன்றி. ஏனெனில் சாதனையாளர்களுக்கு மரியாதை தர எம்மவர்கள் என்றும் பின் நிற்பதில்லை.

நான் ரசித்த கார்த்திகாவின் நாட்டிய சங்கமம் - பாணு

.

நாட்டிய சங்கமம் என்ற நிகழ்ச்சி கடந்த 31.05.2014 அன்று Bahai Center இல் நடை பெற்றது .எமது வழமையான அரங்க நிகழ்வுகள் போலல்லாது குறிப்பிட்ட படி நிகழ்ச்சி 6.30 மணிக்கு ஆரம்பமாகி 9.30 இற்கு நிறைவேறியது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நேரத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் வரவேற்க வேண்டியதே .
அலாரிப்பூ என்ற சபைக்கு வந்தனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது .நேர்த்தியான அஞ்சலியை அடுத்து விநாயகருக்கு வணக்கம் இரு பெண்கள் அருமையாக ஆடி சபையின் கரகோசத்தை பெற்றனர் .வெண்மையான உடை நாட்டியத்திற்கு மேலும் மெருகூட்டியது. எந்தவித நேர தாமதமும் இன்றி ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ச்சி நடை பெற்ற வண்ணமே இருந்தது . அழகிய வர்ண உடைகள், வேறுபட்ட நடனங்கள் ,ஆடியவர் பெரியவரோ சிறியவரோ தமது நடனத்தை திறம்பட ஆடினார்கள்.


இலங்கைச் செய்திகள்

. நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகள் மீது சித்திரவதை: பிரித்தானியா

மோடி, ஜெயலலிதாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஒத்துழைக்கவே மாட்டோம் : பேரவையில் இலங்கை திட்டவட்டம்

விசாரணைக்கு ஒத்துழையுங்கள் : நவ­நீதம் பிள்ளை

விசாரணையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் : அமெரிக்கா,பிரிட்டன் கோரிக்கை

மாணவன் தெஹிவளையில் சடலமாக மீட்பு

சொந்தக் காணிகளில் மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும் : சலோகா பெயானி

ஊடகவியலாளர்களை பாதுகாக்க விசேட செயற்றிட்டம் அவசியம் : நவிப்பிள்ளை

 ஐ.நா. விசாரணைக்குழுவும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்

வண்டியை நிறுத்தியதன் பின்னரே நண்பன் மீது மதுபோதையில் இருந்த பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்:உயிரிழந்தவரின் நண்பன் வாக்குமூலம் 

 பாரிய மண்சரிவால் அட்டன்-கொழும்பு வீதி போக்குவரத்து பாதிப்பு, ரயில் சேவையும் பாதிப்பு

நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகள் மீது சித்திரவதை: பிரித்தானியா

12/06/2014 
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவுள்ளது.



பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
லண்டனில் நேற்று ஆரம்பமான வன்முறையின் போது பாலியல் வன்புணர்வை தடுக்கும் பிரகடனத்துக்கான மாநாட்டின் ஆரம்ப நாளில் அகதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குழுக்கள் முன்வைத்த முறைப்பாட்டின் பின்னரே ஹேக் தமது தகவலை வெளியிட்டார்.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.                                               
நிழலாக   நினைவுகளாக   எம்மைத் தொடரும்.
நீர்கொழும்பூர்  முத்துலிங்கம்.
பேனையும் வாளும் சிலம்படிக்கோலும்  ஏந்திய கலைஞர்.
        
 இலங்கையின்   மேற்குகரைதனில்   இந்து   சமுத்திரத்தாயின் அரவணைப்பில் வாழும் நீர்கொழும்பு - ஈழத்து இலக்கிய உலகிலும் இடம்பெற   முழுமுதற்   காரணமாகத் திகழ்ந்தவர்   எழுத்தாளர் நீர்கொழும்பூர்    முத்துலிங்கம்.
இவரது மறைவு எதிர்பார்க்கப்பட்டதே!
நீண்ட  இடைவெளியின் பின்பு 1997 ஆம் ஆண்டில் இலங்கை சென்ற சமயம் கொழும்பிலும்   நீர்கொழும்பிலும்  நடைபெற்ற  மூன்று இலக்கிய  நிகழ்ச்சிகளில்  இருவரும்   கலந்து கொண்டோம்.
கொழும்பு   நிகழ்ச்சிகளுக்கு   இருவரும்   ஒன்றாகவே   பஸ்களில் பயணமானோம்.     மினுவாங்கொடையில்   கள்ளொளுவை   என்ற அழகிய    சிறிய    கிராமத்தில்   நண்பர்    மு.பஷீர் –  பத்திரிகையாளர் நிலாம்    ஆகியோர்    ஒழுங்கு   செய்த   இலக்கிய   சந்திப்பிலும்  கலந்து   கொண்டோம்.
கொழும்பில்  இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கம்  -  விபவி சுதந்திர   இலக்கிய   அமைப்பு    ஆகியன    நடத்திய   கருத்தரங்குகளில்   உரையாற்றினோம்.
நீர்கொழும்பில்   எனது    - பாட்டி  சொன்ன  கதைகள்  - நூல் வெளியீட்டுவிழாவில்   நூலை  ஆய்வு   செய்து  பேசியவரும் நீர்கொழும்பூர்   முத்துலிங்கமே.
இவ்விதம்    இலக்கிய   உற்சாகம்    கரைபுரண்டு   ஓடும்  விதமாக  97 டிசம்பரிலும்   98   ஜனவரியிலும்   என்னுடன்   பேசிப்பழகிய    நண்பரை மீண்டும்   99   ஒக்டோபரில்   சென்று    பார்த்த   பொழுது    மரணத்தை வரவேற்கும்    மனிதராக    அரசமருத்துவமனைக்    கட்டிலில்   படுத்துக் கொண்டு    என்னை   வரவேற்று   கட்டி   அணைத்தார்.

சங்க இலக்கியக் காட்சிகள் 12 - செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா



.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்சி 12

ஊரார் இகழ்ந்தார், உறவோடு கலந்தாள்!


மாளிகை போன்ற விசாலமான மாடி வீடு. அங்கே பருவவயதிலே அழகிய இளம் பெண் ஒருத்தி இருந்தாள்;. அவளுக்கும் வேற்றூரைச் சேர்ந்த ஒருத்தனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவளின் அந்தத் தலைவன் தினமும் அவளைக் காண வருவான். வரும்போது வாசமுள்ள அழகிய வண்ண மலர்களைக் கொண்டுவந்து அவளின் நீண்ட கருங்கூந்தலிலே கூடிவிடுவான். இருவரும் தழுவி மகிழ்வார்கள். பலநாட்களாக இரகசியமாக யாருக்கும் தெரியாமல் நடைபெற்றுவந்த இந்தக் காதல் உறவுபற்றி ஊரிலுள்ள பெண்களுக்கு எப்படியோ தெரியவந்துவிட்டது. அவர்கள் பலதும் பத்துமாக அப்படி இப்படிப் பேசினார்கள். ஊருக்குள் நடக்கும் இந்தப் பேச்சுக்கள் தலைவியின் தாயின் காதுகளுக்கும் எட்டின. சிலநாட்கள் அவளின் தாய் ஏதும் அறியாதவள்போல இருந்தாள். ஆனால் மகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். மகளின் நடத்தையிலே சில மாற்றங்களை உணர்ந்தாள். வித்தியாசமான நறுமணமொன்றை அவளின் கூந்தலிலே நுகர்ந்தாள். இதுவரை அவள் அறிந்திராத புதியதொரு வாசமாக அது இருந்தது. அந்த ஊரிலே இல்லாத மலரொன்றின் மணமாக அது இருப்பதைத் தெரிந்து  கொண்டாள். காரணத்தையும் புரிந்துகொண்டாள். வரவர ஊரவரின் வதந்திப் பேச்சுக்கள் மிகவும் அதிகமாகின. கண்டகண்ட இடங்களிலெல்லாம் தன் மகளைப்பற்றிக் கதை எழும்புவதாக அவளுக்குத் தெரியவந்தது. அதனால் ஒருநாள் மகளிடம் கேட்டுவிடுகிறாள். “மகளே! என்னஇது? நான்தானே தினமும் உன் கூந்தலுக்கு வாசமூட்டுவேன். இப்போதெல்லாம் உன் கூந்தலில் வித்தியாசமான மணமொன்று வீசுகிறதே. அது நான் முன்னர் அறியாத மணமாக இருக்கிறதே. அது எப்படி?” என்று கேட்டாள்.

சுரலயாவின் இசை விழா – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

யூன் மாதம் 9ம் திகதி திங்கட்கிழமை மகாராணியாரின் பிறந்ததினத்தை கொண்டாட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அரச விடுமுறையை அமோகமாக கொண்டாடுபவர் சிட்னி இசை இரசிகர்கள். காரணம் எம்மை மறந்து இரசிக்க சிட்னியிலே இசைவிழா கடந்த 8 வருடங்களாக தவறாது  நடைபெறுகிறது. இதை நடத்திவைப்பவர்கள் Swara Laya Fine Arts Society

தமிழகத்தில் கர்நாடக இசையில் பிரபலங்களான 20க்கும் அதிகமான இசை கலைஞர்களை அழைத்து வந்து 3 நாட்கள் தொடர்ந்து நடத்தும் சாதனையை புரிந்து வருகிறார்கள். இவர்களை வாயார வாழ்த்தாத ரசிகர்களே கிடையாது. சென்னை வரை சென்று மார்கழி இசை விழாவை இரசித்து வந்த இரசிகர்கள் எநதவித சிரமும் இன்றி சிட்னியில் இசையை இரசிக்கிறார்கள். இந்த இசைவிழா இப்பொழுது அவுஸ்திரேலியா பிற மாநிலங்களில் இருந்தும் இரசிகர்களை சிட்னி நோக்கி வர செய்கிறது. கடந்த வருடம் லண்டனிலிருந்தும் வருகை தந்த இருவரை சந்தித்தேன். சென்னைக்கு போவதில் விட இங்கு அவுஸ்திரேலியாவில் வந்து இரசிப்பது எமக்கு வசதியாக அமைகிறது என்றார்கள். இப்படி பலரையும் கவரும் கர்நாடக இசை விழா இவ்வருடமும் அமோகமாக ஆரம்பமானது.

சிட்னி துர்கை அம்மன் ஆலயத்தில் குருமஹா யாகம்

.சிட்னி துர்கை அம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற  குருமஹாயாகத்தின் போது இடம் பெற்ற சில நிகழ்வுகள் .


சிட்னி முருகன் ஆலயத்தில் வைகாசி விசாகம்

.

அலுகோசு என்ற பெயரை இலங்கையில் அறிமுகப்படுத்தியது யார்?

                                                         
                                             முருகபூபதி


அண்மைக்காலங்களில்   ஊடகங்களில்    அடிபடும்  ஒரு   பெயர்   அலுகோசு.   மரண  தண்டனையை நிறைவேற்றுபவரை    இலங்கையில்  அலுகோசு  என  காலம்  காலமாக   அழைத்துவருகிறார்கள்.
அந்தப்பதவிக்கு   நியமிக்கப்படுபவரை   தமிழில்   தூக்குத்தூக்கி   என்று    சில    ஊடகங்கள்   எழுதுகின்றன.    சில   மாதங்களுக்கு முன்னர்   லண்டன்  பி.பி.சி.யிலும்   தூக்குத்தூக்கி    என்றே குறிப்பிட்டார்கள்.
தேனீ    இணையத்திலும்   அவ்வாறே  குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பல   வருடங்களுக்கு   முன்னர்  (1954 இல்)   வெளியான சிவாஜிகணேசன்  -  பத்மினி  -  ராகினி   -  லலிதா  -   பாலையா  -   காக்கா ராதாகிருஷ்ணன்    நடித்த    தூக்குத்தூக்கி   படத்தை மூத்த தலைமுறையினர்    மறந்திருக்க மாட்டார்கள்.
நீண்ட  கோலின்   இரண்டு   புறமும்   பெரிய   பிரம்புகூடைகளை கட்டி   அதில்   பொருட்களை  ஏற்றி   கழுத்திலே   அதனை   சுமந்து கூவிக்கூவி    விற்பவர்களை   இலங்கையில்    பார்த்திருப்போம். வடபகுதியில்    சில   பிரதேசங்களில்   சிவியான்   அல்லது   சிவியார் என்று    தூக்கிச்சுமப்பவர்களை   அழைப்பார்கள்.
அரச   குடும்பத்தினர்   அமர்ந்து   நகர்வலம்   வரும்   பல்லக்குகளை தூக்கிச்   சுமப்பவர்களும்    தூக்குத் தூக்கிகள்     என அழைக்கப்பட்டார்களோ   என்பதும்   சரியாகத்தெரியவில்லை.   ஆனால் -   மூத்த   எழுத்தாளர்   சுந்தரராமசாமி    பல்லக்குத்தூக்கிகள் என்ற   பெயரில்   சிறுகதை   எழுதியிருக்கிறார்.

உலகச் செய்திகள்

.
கராச்சி விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 23 பேர் பலி

கராச்சி விமான நிலையத்தில் மீண்டும் மோதல்

 இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக றிவ்லின் பாராளுமன்றத்தால் தெரிவு

ஈராக்கிய திக்ரித் நகரை கைப்பற்றிய இஸ்லாமிய போராளிகள் - நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகள் விடுவிப்பு


கராச்சி விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 23 பேர் பலி

09/06/2014    பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த 10 பேர் உள்ளடங்குவதாக அந்நாட்டு அரச செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


நிழல் தந்த மான்.

.

பள்ளிக் காலத்தில் தன் துணையான பெண்மானுக்குத் தன் நிழல்தந்தது ஆண்மான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு இலக்கியநயம் வியந்திருக்கிறேன்..

அந்தச் செய்தியை ங்க இலக்கியத்தில் கலித்தொகைப் பாடலில் கண்டு மகிழ்ந்தேன்.

இன்று குறுந்தொகையில் தன் கன்றுக்கு நிழல் தந்த ஆண்மான் பற்றிய செய்தியைக் கண்டு மகிழ்ந்தேன்.

இதோ அந்தப் பாடல்..

தலைவியை நீங்கிப் பொருள் தேடச் சென்றான் தலைவன். அவன் வழியில் காணும் காட்சிகள் அவனுக்குத் தன்னை நினைவுபடுத்தும் என எண்ணியிருந்த தலைவியிடம் தோழி பேசுவதாக இந்தப் பாடல் அமைகிறது.


தமிழ் சினிமா - மஞ்சப்பை

.

 

தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை.  இன்றைய காலகட்டத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள பாசம் எந்த அளவு உள்ளது என்பதை சொல்கிறது இக்கதை. வயது முதிர்ந்த காலத்தில் தாத்தாவும், பாட்டியும் பேரன்களோட விளையாடுவது, கொஞ்சுவது என்று நேரத்தை கழிப்பார்கள்.  ஆனால் இவர்களின் பாசம் பேரன்களின் இளமை காலம் வரை தொடருமா என்று பார்த்தால் அதன் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனுடைய வலியும், யதார்த்தத்தையும் சொல்லி இருக்கும் படம் மஞ்சப்பை.  கதை என்ன ?  நம்ம விமல் சென்னை ஐ.டி கம்பெனியில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞன். சிறுவயதிலே தாய், தந்தையை இழந்திட்ட அவருக்கு எல்லாமே தாத்தா தான். இந்த தருணத்தில் கண் டாக்டர் லக்ஷ்மிமேனனை கண்ட உடனே காதல் தீப்பொறி கசிகிறது.  பிறகு என்ன அவள் பின்னாலே விமல் ஓட, இவரும் விமலை கண்டு உடனே அலறி ஓட கடைசியில் இரண்டு பேருக்கும் காதல் பத்திக்கிறது.  இதில் விமலுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகவேண்டும் என்ற ஒரு குறிக்கோள், அதுவும் லக்ஷ்மி மேனன் காதலித்த நேரத்தில் கைகூட அமெரிக்கா செல்லும் வரை, கிராமத்திலிருக்கும் தன் தாத்தா ராஜ்கிரணை சென்னைக்கு வரவழைத்து தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு அழைத்து வருகிறார் விமல்.  கிராமத்திலிருந்து வரும் ராஜ்கிரனின் அப்பாவித்தனமான பேச்சும் அவர் செய்யும் சில விஷயங்கள் விமலுக்கு எதிராக அமைகிறது. தான் வசிக்கும் அபார்ட்மென்ட் ஆட்களிலிருந்து, காதலி வரை எல்லோரும் தாத்தாவை திரும்ப ஊருக்கு அனுப்பச் சொல்ல, மனம் நொந்து போகிறார் விமல்.  ஒரு கட்டத்தில், தனது நெடுநாள் கனவான அமெரிக்கா செல்லும் வாய்ப்பே ராஜ்கிரணால் கேள்விக்குறியாகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுபதை பதைக்க வைக்கிறது 'க்ளைமேக்ஸ்'.  நடிகர் நடிகர்களின் பங்களிப்பு  கேட்கவே வேண்டாம் இந்த படத்தின் உண்மையான ஹீரோ ராஜ் கிரண் தான். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் பெரியவர்களை அப்படியே பிரதிபலிக்கிறார். அவருடைய வெகுளிதனமான பேச்சும், பேரன் மீது மட்டும் இல்லாமல் அவர் சென்னையில் குடி இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் வாழும் அனைவர் மீதும் அவர் காட்டும் அன்பு கிராமத்து யதார்த்தம்.  நிச்சயமாக தவமாய் தவமிருந்து படத்திற்கு பிறகு அவருக்கு பெயர் சொல்லும் படமாக இந்த படம் இருக்கும்.  விமல் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்து இருக்கிறார், ராஜ்கிரணைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்கும் பேரனாகவும், லக்ஷ்மி மேனனிடம் சில்மிஷம் செய்யும் காதலனாகவும் விமலுக்கு டபுள் டிராக். சிட்டி கேரக்டர் என்பதால் மேக்கப் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.  லக்ஷ்மி மேனன் வழக்கம் போல் நார்மல் ஹீரோயின் டைப்பில் வலம் வந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  பலம்  கிராமத்து உறவுகளின் அன்பையும், இயந்திரத்தனமாக வாழ்கின்ற சிட்டி லைப்பையும் அப்படியே பிரதிபலிப்பதே பெரிய பலம். ராஜ்கிரனின் வெகுளியான நடிப்பு, விறுவிறுப்பாக கொண்டு சென்ற திரைக்கதை அமைப்பையும், படத்தினுடைய ஷார்ப் எடிட்டிங்கையும் கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.  பலவீனம்  வழக்கம் போல் வரும் பாடல்கள், விமலின் காமெடி என்ற பெயரில் மொக்க போட்ட சில காட்சிகள் தவிர பெரிய 'லா லா' அளவுக்கு இல்லை.  இயக்குனர் என்.ராகவன் சற்குணத்தின் சிறந்த சிஷ்யன் என்பதை நிருபித்து உள்ளார்.  மொத்தத்தில் மஞ்சப்பை - நகரத்தில் ஒரு கிராமத்து வாசம்.   நன்றி Cine Ulagam









தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை.
இன்றைய காலகட்டத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள பாசம் எந்த அளவு உள்ளது என்பதை சொல்கிறது இக்கதை. வயது முதிர்ந்த காலத்தில் தாத்தாவும், பாட்டியும் பேரன்களோட விளையாடுவது, கொஞ்சுவது என்று நேரத்தை கழிப்பார்கள்.
ஆனால் இவர்களின் பாசம் பேரன்களின் இளமை காலம் வரை தொடருமா என்று பார்த்தால் அதன் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனுடைய வலியும், யதார்த்தத்தையும் சொல்லி இருக்கும் படம் மஞ்சப்பை.
கதை என்ன ?
நம்ம விமல் சென்னை ஐ.டி கம்பெனியில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞன். சிறுவயதிலே தாய், தந்தையை இழந்திட்ட அவருக்கு எல்லாமே தாத்தா தான். இந்த தருணத்தில் கண் டாக்டர் லக்ஷ்மிமேனனை கண்ட உடனே காதல் தீப்பொறி கசிகிறது.
பிறகு என்ன அவள் பின்னாலே விமல் ஓட, இவரும் விமலை கண்டு உடனே அலறி ஓட கடைசியில் இரண்டு பேருக்கும் காதல் பத்திக்கிறது.
இதில் விமலுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகவேண்டும் என்ற ஒரு குறிக்கோள், அதுவும் லக்ஷ்மி மேனன் காதலித்த நேரத்தில் கைகூட அமெரிக்கா செல்லும் வரை, கிராமத்திலிருக்கும் தன் தாத்தா ராஜ்கிரணை சென்னைக்கு வரவழைத்து தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு அழைத்து வருகிறார் விமல்.
கிராமத்திலிருந்து வரும் ராஜ்கிரனின் அப்பாவித்தனமான பேச்சும் அவர் செய்யும் சில விஷயங்கள் விமலுக்கு எதிராக அமைகிறது. தான் வசிக்கும் அபார்ட்மென்ட் ஆட்களிலிருந்து, காதலி வரை எல்லோரும் தாத்தாவை திரும்ப ஊருக்கு அனுப்பச் சொல்ல, மனம் நொந்து போகிறார் விமல்.
ஒரு கட்டத்தில், தனது நெடுநாள் கனவான அமெரிக்கா செல்லும் வாய்ப்பே ராஜ்கிரணால் கேள்விக்குறியாகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுபதை பதைக்க வைக்கிறது 'க்ளைமேக்ஸ்'.
நடிகர் நடிகர்களின் பங்களிப்பு
கேட்கவே வேண்டாம் இந்த படத்தின் உண்மையான ஹீரோ ராஜ் கிரண் தான். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் பெரியவர்களை அப்படியே பிரதிபலிக்கிறார். அவருடைய வெகுளிதனமான பேச்சும், பேரன் மீது மட்டும் இல்லாமல் அவர் சென்னையில் குடி இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் வாழும் அனைவர் மீதும் அவர் காட்டும் அன்பு கிராமத்து யதார்த்தம்.
நிச்சயமாக தவமாய் தவமிருந்து படத்திற்கு பிறகு அவருக்கு பெயர் சொல்லும் படமாக இந்த படம் இருக்கும்.
விமல் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்து இருக்கிறார், ராஜ்கிரணைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்கும் பேரனாகவும், லக்ஷ்மி மேனனிடம் சில்மிஷம் செய்யும் காதலனாகவும் விமலுக்கு டபுள் டிராக். சிட்டி கேரக்டர் என்பதால் மேக்கப் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
லக்ஷ்மி மேனன் வழக்கம் போல் நார்மல் ஹீரோயின் டைப்பில் வலம் வந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பலம்
கிராமத்து உறவுகளின் அன்பையும், இயந்திரத்தனமாக வாழ்கின்ற சிட்டி லைப்பையும் அப்படியே பிரதிபலிப்பதே பெரிய பலம். ராஜ்கிரனின் வெகுளியான நடிப்பு, விறுவிறுப்பாக கொண்டு சென்ற திரைக்கதை அமைப்பையும், படத்தினுடைய ஷார்ப் எடிட்டிங்கையும் கண்டிப்பாக பாராட்டியாகவேண்டும்.
பலவீனம்
வழக்கம் போல் வரும் பாடல்கள், விமலின் காமெடி என்ற பெயரில் மொக்க போட்ட சில காட்சிகள் தவிர பெரிய 'லா லா' அளவுக்கு இல்லை.
இயக்குனர் என்.ராகவன் சற்குணத்தின் சிறந்த சிஷ்யன் என்பதை நிருபித்து உள்ளார்.
மொத்தத்தில் மஞ்சப்பை - நகரத்தில் ஒரு கிராமத்து வாசம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/reviews-tamil/movie/100119/#sthash.QiY6qLpW.dpuf