Bombay Jayashri Live in concert Sunday 28th April 2013


வாழ்த்துக்கள் 20.04.2013 இல் திருமண வெள்ளிவிழா கண்ட திரு. திருமதி. சச்சிதானந்தம்

                                              
அன்பெனும் ஆலமரமாய் வாழ்க்கை
அறுகுபோல் வேரூன்றி வாழ்வது வாழ்க்கை
வெற்றி பெற்றால் மகிழ்வுறுவது வாழ்க்கை
தோல்விகளின்றி எதிர் கொள்வது வாழ்க்கை
நிபந்தனைகள் அற்றது அன்பு
வரையரையற்றது வாழ்க்கை
அவ்வாழ்வில் லயிப்பது இன்பம்
வாழ்வில் பகிர்ந்தளிப்பு பகிர்ந்தளிக்கப்பட்ட வாழ்க்கை
இவையிரண்டும் கொடுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை
இருபத்திநான்கு வருடங்களின்
அழகிய தருணங்களை நினைவு கூர்ந்து
உங்கள் இதயக் கருவறையில்
ஒருவரையொருவர் சுமந்து பாசமெனும்
சிற்பியாய் உங்கள் வாழ்க்கையை செதுக்கி
வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும்
தோள் கொடுத்து உறுதுணையாய்
ஒருவரோடொருவர் இணைந்து வாழ்வீர்
அன்பெனும் ஓடத்தில் ஏறி
நற்குழந்தைகளின் பாச ஆற்றில் பயணித்து
நூற்றாண்டு வாழ வாழ்த்துகின்றேன்
பரணி

கவியரசரின் பாடல்கள்




இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்   

ஏழாம் கடலும் வானும் நிலவும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்

இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்

என்பாடல் சேய்கேட்கும் விருந்தாகலாம்
என்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என்பாடல் சேய்கேட்கும் விருந்தாகலாம்
என்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என்மேன்மை இறைவா அருளாதலால்
என்மேன்மை இறைவா அருளாதலால்..
எரியாத தீபத்தில் ஓளிவேண்டினேன்
எரியாத தீபத்தில் ஓளிவேண்டினேன்

சிட்னி முருகன் ஆலயச் சிறப்பும் 2013 மகோற்சவச் சிறப்பும் இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்



ஆலயங்கள் தொன்றுதொட்டு நமது கலை, பண்பாடு, மற்றும் இறைவழிவாழ்விற்கு உரமூட்டி வருபவை.  அங்கு ஒலிக்கும் மணி ஓசை உயிரினங்களின் உயிரோடுகலந்து உணர்வூட்டுபவை.  ஓதப்படும்மந்திரங்கள் உள்ளுணர்வின் மாசுக்களை அகற்றி ஒலியாலேயே தூய்மைசேர்ப்பவை.  எந்தமொழித்துதியாயினும் பக்திரஸத்தில் முகிழ்த்தவை ஆயின் அவை இறை உணர்வும் இறைகாட்சியும்பெற உரமூட்டுபவையே.  மனத்தை ஒருவழிப்படுத்தவும், கீழ்ப்படிவு, நீதிவழிநிற்றல், இரக்கம், தன்னலமறுப்பு, பணிவு ஆகிய பலசிறந்த பண்பாடுகளை உண்டாக்கிவளர்க்கவும் இறுதியாக மோட்சத்துக்கு வழிகாட்டவும் திருக்கோயில் வழிபாட்டைத்தவிர வேறு  சிறந்தமார்க்கம் இல்லை.  “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றார் ஒளவையார்.  சாலவும் நன்று என்றால் மன அழுக்கை முற்றிலுமாகத் துடைக்க உதவும் என்றேபொருள்.  முறையான ஆலயதரிசனம் தெளிவான ஞானத்தை நிச்சயம் ஊட்டும்.

உருவகக்கதை ஞானம் முருகபூபதி



அரசமரத்தடிப்பிள்ளையாருக்கு கோயில் கட்டி எழுப்புவதற்கு ஊர்ப்பொதுமக்கள் தீர்மானித்து அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
அரசமரத்துக்கு அருகில் கோயில் நிர்மாணத்துக்காக செங்கற்கள் மற்றும் மரங்கள் கட்டிடப்பொருட்கள் வந்து குவியத்தொடங்கின.

கோயில் நிர்மாணப்பணிகளில் ஈடுபடும் ஸ்தபதிகளும் கூலிவேலையாட்களும் மும்முரமாக வேலைகளை ஆரம்பித்தார்கள்.

கோயிலுக்கான அத்திவாரவேலைகள், விசேட பூசை ஆராதனைகளுடன் ஆரம்பமானது.
அத்திவாரத்துக்கான உறுதியான கற்களை ஸ்தபதிகளின் பணிப்பின் பிரகாரம் கூலியாட்கள் வேறாக தரம்பிரித்து அடுக்கிவைத்தனர்.
அதேசமயம் கோபுரக்கலசத்தை தாங்குவதற்கென விசேட கவனிப்புடன் தருவிக்கப்பட்ட கற்கள்பிரத்தியேகமாக ஒருபுறத்தில் அடுக்கிவைக்கப்பட்டன.
கோபுரக்கலசத்தை தாங்கவிருக்கும் அந்தக்கற்கள் மிகவும் இறுமாப்புடன், அத்திவாரத்துக்கு எடுத்துச்செல்லப்படும் கற்களைப்பார்த்து  ஏளனத்துடன் சிரித்தன.
“ என்ன...சிரிக்கிறீர்கள்...நாம் இந்த அத்திவாரக்கிடங்குகளுக்குள் சமாதியாகின்றோம்....அதைப்பார்க்க உங்களுக்கு சிரிப்பு வருகிறதோ?” – ஒரு அத்திவாரக்கல் கோபத்துடன் கேட்டது.

உண்ணாவிரதத்தின் மூலம் அவுஸ்திரேலியாவின் கொள்கைகளை மாற்ற முடியாது: ஜூலியா கிளார்ட்


16/04/2013 அவுஸ்திரேலிய மெல்பேர்னில் உள்ள தடுப்பு முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துள்ள  உண்ணாவிரதப்போராட்டமானது அந்நாட்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றியடைப்போவதில்லை என பிரதமர் ஜூலியா கிளார்ட் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்னினுள்ள  புரோட்மெடோஸ் தடுப்பு முகாமில் 25  தமிழ்  புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட 27 பேர் முன்னெடுத்துள்ள  உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்குள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு பரிசோதனை என்ற மதிப்பீட்டை அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பான ASIO( Australian Security Intelligence Organisation) மேற்கொள்ளும்.
அவர்களால் அவுஸ்திரேலியாவிற்கோ அல்லது வேறு நாடுகளின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டுமே  அகதிகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகின்றது.

மிகவும் கடுமையான நிபந்தனைகளை இம் முறைகொண்டுள்ளதுடன் சிக்கலானதுமாகும்.
சிலவேளைகளைல் அம் மதீப்பீட்டின் முடிவு எதிர்மறையாக முடியும் பட்சத்தில் அவர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவர்.


இந் நடைமுறையால் பெரும்பாலான இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே காரணத்தினாலேயே புரோட்மெடோஸ் தடுப்பு முகாமில் பல இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களது உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஒரு சிலர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களது போராட்டம் உலகினது கவனத்தினை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் அகதியோ அல்லது புகலிடக்கோரிக்கையாளரோ  பாதுகாப்பு பரிசோதனை கொள்கைகளை மாற்றமுடியாது என கிலார்ட் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
 

பண்ணிசை விழா 2013




சிட்னியில் நூல் அரங்கேற்றம் 26.04.2013

.
சிட்னியில் நூல் அரங்கேற்றம் . கவிஞர் ஆணியின் விந்தையாய் விரியுதடி மற்றும் ஏனெஸ்ட்  மக்கெண்டயரின் ஐராங்கனி .

மெல்பனில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு




இலங்கைச் செய்திகள்


'போரில் ஊனமுற்ற சிறார்களுக்கு உதவிகள் இல்லை'

கைதடி சிறுவர் இல்ல விவகாரம்: முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் (Exclusive)

பதில் பிரதம நீதியரசராக ஷிராணி

இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் சேவை நேற்று முதல் ஆரம்பம்

கிளிநொச்சியில் தனியார் வர்த்தக நிலையம் தீயினால் முற்றாக எரிந்து அழிந்துள்ளது

வெள்ளைக்கொடி 

அவுஸ்திரேலியாவிலிருந்து 39 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
=================================================================

'போரில் ஊனமுற்ற சிறார்களுக்கு உதவிகள் இல்லை'

16/04/2013 இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 19
ஆயிரத்து 420 சிறுவர்கள் அவயவங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள கணிப்பீடுகளில் தெரியவந்திருப்பதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
இவர்கள் கை கால்களை இழந்தும், கண்களை இழந்தும் வேறு பல அவயவங்களை இழந்துமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 
எனினும் இச்சிறுவர்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் போதிய அளவில் வாழ்வாதார நலச் சேவைகள் வழங்கப்படவில்லை. அவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்குக் கூட ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்கிறார் நடனேந்திரன். 
இது குறித்து பிபிசி தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த விசேட கல்விக்கான ஆசிரிய ஆலோசகரும், ஓர்கான் எனப்படும் மாற்று வலுவுள்ளோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவருமாகிய வி.சுப்பிரமணியம், இத்தகைய பிள்ளைகளின் கல்வி விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி செயற்பட்டு வருவதாகக் கூறினார். 

அபயகரத்தின் 21 வருட நிகழ்வு 27 .04 .2013

.

அபயகரம் முருகன் புகழ் மாலை இசைத் தட்டு விற்பனை





உலகச் செய்திகள்

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு!: 3 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்

கடலில் மிதந்த இந்தோனேஷிய விமானம்!


அமெரிக்காவில் மீண்டும் வெடிப்பு: 70 பேர் பலி?

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது நியூசிலாந்து!

========================================================================


அமெரிக்காவில் குண்டு வெடிப்பு!: 3 பேர் பலி, பலரின் நிலை கவலைக்கிடம்

16/04/2013 அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பொஸ்டன் நகரில் இன்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரதன் போட்டியைக் குறி வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2309545-1950E679000005DC-125_964x577.jpg
மரதன் போட்டி முடிவடையும் இடத்தில் இந்த இரு குண்டுகளும் வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ் சினிமா



கேடி பில்லா கில்லாடி ரங்கா 

திரையரங்கங்களை நிரப்ப கதைகளை நம்பாமல் கொமெடியை மட்டும் நம்பி படத்தை எடுக்கும் சமீப காலத் தமிழ் சினிமாவின் இந்த வார படம் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’.
அரசியல்வாதியாக துடிக்கும் இரு வெட்டி இளைஞர்களின் கலகலப்பான கொமெடி தான் கதை.
விமல், சிவகார்த்திகேயன் இருவரும் நண்பர்கள். வேலையின்றி பெற்றோர் பணத்தில் குடி, கும்மாளம் என்று இருக்கிறார்கள்.
மாநகராட்சி ஆணையர் (கவுன்சிலர்) ஆவதே இவர்கள் லட்சியம். இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. நமோ நாராயனணை அண்டிக் கிடக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் விமலுக்கு,மருத்துவமனையில் வேலை பார்க்கும் பிந்து மாதவி மீதும் சிவகார்த்திகேயனுக்கு ஜெராக்ஸ் கடை நடத்தும் ரெஜினாவிடமும் காதல் மலர்கிறது. அப்பெண்களோ வெறுப்பு காட்டி துரத்துகிறார்கள்.
இந்நிலையில் தேர்தலும் வருகிறது. கவுன்சிலர் பதவிக்கு இருவரும் போட்டியிட்டார்களா? காதல் வென்றதா என்பது தான் கிளைமாக்ஸ்.
முழு நீள கொமெடி படம். காட்சிகளை தொடர் சிரிப்பில் நகர்த்துகிறார் இயக்குனர் பாண்டிராஜ். மது பாட்டில்களை பரப்பி வைத்து இந்த சனியனை தலை முழுக வேண்டும் என்று விமல், சிவகார்த்திகேயன், அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம்.
விமலுக்கு மைல்கல் படம். காதல், கொமெடியில் விளாசுகிறார். பிந்துமாதவி அழகில் வழிந்து மருத்துவமனைக்குள் அவர் போவதை பார்த்து என் மனைவி டொக்டர் என்று தனக்குதானே சொல்லி மகிழ்வதும் பிறகு நர்சு உடை அணிவதை பார்த்து பரவாயில்லை என விரக்தியாய் சமாதானமாவதும், டோக்கன் கொடுப்பதை கண்டு அதிர்வதும் திரையரங்கத்தை குலுங்க வைக்கிறது.
சிவகார்த்திகேயன் காதல் இன்னொரு ரகளை... ரெஜினாவின் கடைக்கு போய் ஜெராக்ஸ் எடுத்து காதல் யாசிப்பது தமாஷ்.. குறும்பு பாடி- லாங்குவேஜ், கேலி வசன உச்சரிப்பு, அடிக்கடி மிமிக்ரி என்று 'பட்டை’ முருகனாகப் பட்டை கிளப்புகிறார் சிவகார்த்திகேயன்.
'உங்க அப்பா வர்ற நேரம் வந்திருச்சா... அப்போ நான் கிளம்புற நேரம் வந்திருச்சு’, 'கடத்திட்டுப் போய் அடிச்சா பரவாயில்லை... தலையிலேயே கொட்டுனாங்க’ என்று காதலுக்காக மிரளும் இடமெல்லாம் கலகலக்கவைக்கிறார். ரெஜினா வசீகரிக்கிறார்
கண்ணை சிமிட்டி சாந்தமாக வரும் பிந்துமாதவி அப்புறம் இன்னொரு முகம் காட்டி விளாசுகிறார். விமலை தாவி குதித்து அடித்துப்பதும் அவர் அடி தாங்காமல் ஓடுவதும் கொமெடி தான்.
ஆம்பிளையை கை நீட்டி அடிப்பது தப்பு என்று பிந்துமாதவி தந்தையிடம் முறையிட அவர் என் மனைவி மாமியாரிடமும் அடி வாங்கி இருக்கிறேன். இது பரம்பரையா வருது என்று பதிலுரைக்க திரையரங்கே குலுங்குகிறது. .
மனைவி, மாமனார் குடும்பத்தினரின் கேவல பேச்சை பொருட்படுத்தாமல் அவர்கள் தயவில் இருக்கும் பரோட்டா சூரியும் கலகலப்பூட்டுகிறார்.
மாமனார் வெட்கங்கெட்டவன் என் செருப்பை போட்டுட்டு போறான் என்று சூரியை திட்ட, அது பரவாயில்லை காலையில் என் பிரஸ்ஸில் பல் தேச்சான் என்று மாமியார் புலம்புவது சிரிப்பை அடக்க முடியாமல் செய்கிறது.
அரசியல்வாதி நமோ நாராயணன் பொதுக்கூட்டத்தில் தெரியாதவர்கள் பெயரை அடியாட்கள் மூலம் தெரிந்து பெயர் சொல்லி அழைப்பது தனக்கு போட்ட சால்வைகளை ஜவுளி கடைகளில் விற்பது அரசியல் கொமெடி.
டெல்லி கணேஷ், மனோஜ்குமார் தந்தை கதாபாத்திரங்களில் அழுத்தம் பதிக்கின்றனர். கிளைமாக்சில் இருவரையும் கடவுள், நாயகன் அளவுக்கு உயர்த்தி உருக வைத்து விழிகளில் நீர் மூட்ட செய்கிறார் பாண்டிராஜ்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. விஜய் ஒளிப்பதிவு பலம்.
நன்றி விடுப்பு

மொத்தத்தில் “கேடி பில்லா கில்லா ரங்கா” அவ்லோ பெரிய கொமெடி இல்ல.