தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

நல்லூரான் தேர் நமக்கென்றும் பாக்கியமே !






















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா




வேலவனின் தேர் வீதியெலாம் பக்தர்
காதலுடன் கந்தனைக் கைகூப்பி நிற்கின்றார்
தீராத வினையகற்ற தேரேறி வருகின்றான்
வாருங்கள்  தேரிழுத்து வணங்கியே நிற்போம் 

அந்தணர் மந்திரம் அரிய திருமுறை
ஆனந்த இசை கேட்டபடி  கந்தன்
தேரேறி வருகின்றான் திருமுகத்தைக் காண
ஓடோடி வாருங்கள் உளமுருக வேண்டுங்கள் 

வீதியிலே பக்தர் வெண்மணலில் இடமில்லை
சோதியென கந்தன் சுடர்விட்டு தெரிகின்றான்
மாதவத்தின் காரணத்தால் வந்தமர்ந்தான் நல்லூரில்
நல்லூரான் தேரேறி வருகின்றான் காணுங்கள்

தேர்த் திருவிழா! வருகின்ற வியாழக் கிழமை ( 21 – 08 - 2025) நல்லூர்த் திருமுருகன் தேர்த் திருவிழா! ”சிவஞானச் சுடர்” பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார் வாழ்நாட் சாதனையாளர்

              

 

 














சிவமயம்

 

 

ஊரோடு ஒற்றுமையாய்க் கொண்டாடும் பத்தர்களைச்

சீரோடு வாழவைக்கும் சேந்தனவன் திருவிழாவில்

தாரோடு பொலிந்திலங்கும் சண்முகன்வேல் அமர்ந்ததிருத்

தேரோடு வலம்வருவோர் தெருவெல்லாம் நிரம்பிடுவர்!

 

 

ஆதிரையான் சொரூபநிலைச் சிவமான செவ்வேளே!

அருள்பொழியுஞ் சோதிவைவேல் தேரேறி வருநாளில்

சாதிவேறு பாடின்றிச் சகலரிலுஞ் சிவங்கண்டு

வீதிசுற்றி வினைதீர்க்கும்  தேரிழுக்க ஊர்திரளும்!

 


 

 










மாந்தர் நிலையினை என்சொல்ல எம்பாவாய்!


 -சங்கர சுப்பிரமணியன்.




அங்கிங்கெனாதபடி எங்கும் பேரொளியாய்
இருப்பவனை ஆங்குளான் ஈங்குளானென
இயம்புவதன் பொருள் அறியேன் எம்பாவாய்

எங்கும் பரந்து நிற்கும் பரம்பொருளதனை
ஓரிடத்தில் ஆடாமல் அசையாமல் இருத்தி
ஆடுவதும் பாடுவதும் எதற்கோ எம்பாவாய்

படியளந்து பாதுகாக்கும் பரம்பொருளுக்கு
படைத்து வேண்டுவதின் அவசியம் என்னவோ
பசியாறாமலா படியளப்பார் அவர் எம்பாவாய்

பசுவிலே பாலாக செடியிலே மலராயிருக்க
பாலால் நீராட்டி மலரால் அழங்கரிப்பதேனோ
பாலாக மலராக இருப்பதறியாரோ எம்பாவாய்

காற்றாக நீராக ஒளியெனவே இருப்பவரை
கருவறையில் நிலைத்து நிலைபெற வைத்து
காப்பாய் என்றால் எழுவாரோ எம்பாவாய்

மனதுள்ளே இருப்பவனை உணராமல் இருந்து
வெளியே இருப்பவனை தேடி திரிந்து நிற்கும்
மாந்தர் நிலையினை என்சொல்ல எம்பாவாய்


உரிமைக்காகப் போர்ச்செய்! – அன்பு ஜெயா பா வகை: சிந்தடி வஞ்சிப் பா

 


சிந்தடி வஞ்சிப்பா:

உரிமையென்பதே ஒவ்வொருவரின் உடன்பிறந்ததே!

உரிமையதுவும் உன்தாயவள் உனக்களித்ததே!

பிறந்தநாளிலே பெற்றவுரிமைப் பெருகவாழ்ந்திடு,

மறவனாகவே உரிமைகாத்திடு மறந்திடாமலே!

வங்கக்கடல் அலைக்குரிமையும் வழங்கலாகுமோ?!

திங்கள்தரும் ஒளிதனதெனத் திரியலாகுமோ?

வாக்களித்திடும் உரிமைதன்னையும் வாங்கிநீயுமே

வாக்களித்திடத் தயங்கினாலுனை வாழ்த்தலாகுமோ?

 

தனிச்சொல்:

எனவே,

 

சுரிதகம்:

உரிமை தன்னையே உதறி விடாமலே

பெரிதாய் அதனைப் பேணுவாய்!

உரிமை, உரிமை, ஒலிப்பாய் ஓங்கியே!

 

பக்தியில் திளைத்தார் பக்குவம் பெற்றார் !




     























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 






காவியுடன் வருவாரை பின்தொடர்ந்து செல்வார் 
கடவுளைக் கண்டீரா என்றுமே கேட்பார்
சன்யாசி யாவருமே தலைதெறிக்க ஓடுவார்
விட்டுவிடா அவரும் தொடருவார் பின்னே

விடை கிடைக்கா நிலையிலும் விடவேயில்லை 
ஒடினார் தேடினார் ஒருபயனும் இல்லை
அப்போது அவருக்கு வழிசொன்னார் ஒருவர்
அதுவெளிச்சம் காட்டியது அவர்மாறி விட்டார்

அம்மனின் முன்னாலே அமர்ந்திருந்தார் ஒருவர்
அவரிடமே இவரும் அடைக்கலம் புகுந்தார்
ஐயத்தைப் போக்க அருகில்வா என்றார்
ஐயமும் பறந்தது அனைத்துமே தெரிந்தது

கஸ்தூரி விஜயம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்த சிலருள்


கே. ஆர். விஜயாவும் ஒருவர். அப்படி அவர் நடித்தவற்றுள் பல படங்களை அவரே சொந்தமாக தயாரித்திருந்தார். இதன் காரணமாகவும் அவரால் தொடர்ந்து நாயகியாக நடிக்க முடிந்தது. அதே நேரத்தில் ரசிகர்களும் அவர் நடிப்பை ரசித்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது . அந்த வகையில் 1975ம் வருடம் அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த படம் கஸ்தூரி விஜயம். 


 ரவிசங்கர் என்பவரால் எழுதப்பட்டு பல முறை மேடையேறிய

நாடகமே கஸ்தூரி விஜயமாக படமானது. படத்தை கே ஆர் விஜயாவே தனது பட நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதன் காரணமாக படத்தின் கதையும் அவரை பிரதானப் படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. தந்தையை இழந்த கஸ்தூரி சுந்தரத்தின் வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்தப்படுகிறாள். அந்த வீட்டின் அதிபதி சுந்தரம் ஒரு தொழிலதிபர். அவர் வீடோ ஆண்களை மட்டும் கொண்ட பொறுப்பில்லாதவர்கள் வாழும் இடம். இவர்கள் செய்யும் திருட்டு, ஊதாரித்தனம், அலட்சியம் எதையும் சுந்தரம் பொருட்படுத்துவதில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான். ஆனால் அவனின் தாத்தாவோ இது பற்றி கவலைப்படுகிறார். வீட்டை சீராக்க முயற்சி செய்கிறார். அவரின் திட்டத்தால் கஸ்தூரிக்கும், சுந்தரத்துக்கும் திருமணம் நடக்கிறது. ஆரம்பத்தில் வீட்டில் உள்ளோர்க்கு அடங்கிப் போகும் கஸ்தூரி நாளடைவில் விஸ்வரூபம் எடுக்கிறாள். இதன் காரணமாக அவளுக்கு எதிராக எதிர்ப்பும் கிளம்புகிறது. சுந்தரம் கூட அவளை கண்டிக்கிறான். ஆனால் தாத்தாவின் துணையோடு வீட்டை திருத்தப் பார்க்கிறாள் கஸ்தூரி. 


சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

25-10-2025 Sat: சிட்னி துர்கா கோவிலில்  நிதி திரட்டும் இரவு விருந்து

26-10-2025 Sun: சிட்னி துர்கா கோவில்  மண்டபத்தில் தமிழர் விழா - துர்கா போட்டிகள் மற்றும் திருக்குறள் போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்

09-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

இலங்கைச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி: மேலும் அகழ்வுப் பணிக்கு 8 வாரங்கள் தேவை - நீதிமன்றம் கட்டளை

முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் !

பலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி ; பேதமின்றி ஒன்றுபடுமாறு பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பு அழைப்பு

வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து விவசாயத்திற்கு அனுமதி வழங்க ஜனாதிபதியிடம் உரிமையாளர்கள் கோரிக்கை




செம்மணி மனித புதைகுழி: மேலும் அகழ்வுப் பணிக்கு 8 வாரங்கள் தேவை - நீதிமன்றம் கட்டளை

Published By: Vishnu

14 Aug, 2025 | 11:10 PM

செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மன்று கட்டளையிட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு வியாழக்கிழமை (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உலகச் செய்திகள்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்’ - பாக். ராணுவ தளபதி பேச்சு

97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதி வழங்கும் நேபாளம்

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு : பேசப்பட்ட முக்கிய விடயங்கள் என்ன ?

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு



காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி

11 Aug, 2025 | 11:22 AM

காசா நகரத்தின் அல்சிபா மருத்துவமனைக்கு அருகில்  இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையின் முன்வாயில் தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் கூடாரத்திலிருந்த அனஸ் அல்-ஷரீப் மற்றும் முகமது க்ரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌஃபல் மற்றும் மோமன் அலிவாஆகியோர்கொல்லப்பட்டனர் என  அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இந்த 'இலக்குவைக்கப்பட்ட படுகொலை" ஊடக சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 52 “நூல்களைப் பேசுவோம்”


நாள்:         சனிக்கிழமை 30-08-2025       

நேரம்:  

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

நூல்களைப் பேசுவோம்:

தாமரைச்செல்வியின் “சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு” சிறுகதைத்தொகுப்பு

 

உரை: இரா. பிரேமா

பா.இரகுவரனின் “காத்தவராயன் வழிபாடு காத்தவராயன் நாடகம்” ஆய்வு நூல் 

உரை: சு.குணேஸ்வரன்

ப.சண்முகத்தின் “தென்னிந்தியப் பொருளாதாரம் - சில பரிமாணங்கள் ஆய்வு நூல் 

உரை: எம்.எம்.ஜெயசீலன்

ஒருங்கிணைப்பு: அகில்  சாம்பசிவம்

விநாயகர் சதுர்த்தி & விநாயகர் கலைவு - 31/08/2025

 


வி


சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025



முத்தமிழ் மாலை 29/11/2025