மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஆவணிச் சதுர்த்தி அருள்மிகு சதுர்த்தி !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பசுவும் பரமேஸ்வரியும் ❤️🐄 கானா பிரபா
“கட்டின குழையெல்லாம்
அப்பிடியே கிடக்குது,
ஏன் சாப்பிடேல்லை?
இந்தா...இந்தா...!”
ஆட்டுக் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் குழைக் கொத்தில் இருந்து இரண்டு நொட்டுப் பிடுங்கி நீட்டுவார் அப்பா.
அப்படியே வாய்க்குள் தள்ளி விட்டு
“ம்ம்ம்ம் அஹ்ஹ்ஹ் ம்ம்ம்"
என்று ஆட்டுக்குட்டிகள் அவரோடு கதை
பேசும்.
அவற்றிடமிருந்து ஒன்றையும் அவர்
எதிர்பார்க்கவில்லை.
காது நீண்ட கிழவி போல அதில் ஒரு மூத்த
ஆடு தன் அந்திம காலம் வரை வளர்ந்து எங்கள் வீட்டுப் பின் வளவில் தான் சமாதி
கொண்டது.
ஊருக்குப் போகும் போதெல்லாம்
சொல்லுவோம்.
“நீங்கள் போனாப் பிறகு எனக்கு ஆர் துணை?
“
என்ற அப்பாவின் கேள்விக்குப் பதில் இராது எங்களிடமிருந்து.
என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்"
என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர்.
செந்தமிழ் நடையும் கொடுந்தமிழ் நடையும் ----------------- சென்ற வாரத் தொடர்ச்சியின் நிறைவுக் கட்டுரை)
பாரதி இளமுருகனார் வாழ்நாட் சாதனையாளர்
புதுமை எழுத்தாளர்கள்; சிலர் ஆங்கிலம் தெலுங்கு கன்னடம் இந்தி வடமொழி முதலிய திசை மொழிக் கொடுந்தமிழ்ச் சொற்களைத் தங்கள் இட்டம்போலப் பாவித்து வருபதுபற்றிச் சென்றவாரத் தமிழ் முரசு இதழிலே எழுதியிருந்தேன். இப்படி இட்டம்போலச் செந்தமிழுடன் பிறமொழிக் கலப்பைச் செய்பவர்களால் வருங்காலத் தமிழ்ச் சந்ததியினரும் செந்தமிழ் வழக்கை மறப்பதற்குச் சாத்தியம் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டினேன். செந்தமிழ் வழக்கைப் பற்றி மேலும் சில தகவல்களை நேயர்களுடன் பகிர விழைகிறேன்.
தாங்கள் இழைத்துவரும்
தவறை மறைப்பதற்கு மகாகவி பாரதியார் இப்படி எழுதலாம் என்று சொன்னார் என்ற
புதுக்கதையைப் பரப்புவது எத்துணை கொடுமை?. சுயமாகச் சிந்தித்து
இயல்பாகப் பேசப்படும் இலகுவான செந்தமிழ்;நடையிலே எழுதச்
சொன்னவர் பாரதியார். தாங்கள் கொடுந்தமிழில் எழுதுவதைப் பாரதியாரும் ஆதரிக்கிறார்
என்கிற பொய்யைக் கூசாது பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கவேண்டும் அல்லவா?.
தமிழிலே விழுமிய
புலமைகொண்டு அழிவிலாத இலக்கியமும் இலக்கணமும் படைத்தவர்கள் எமது முன்னோர்கள்.
இவர்கள் வடசொல் திசைச் சொல் ஆகியவற்றை எவ்வளவு விகிதாசாரம் பாவிக்கலாம் என்று வரையறை செய்ததுடன் அதனைக் கடைப்பிடித்தும்
வந்துள்ளார்கள். அதாவது நூற்றுக்கு ஒருசொல் இருசொல் விழுக்காடு மட்டிலேதான் திசைச்
சொற்களைப் பாவித்து வந்துள்ளார்கள். ஆனல் இன்றைய முற்போக்குச் சிறுகதை
எழுத்தாளர்கள் சான்றோர் வரையறை செய்த எல்லையை மீறி நூற்றுக்கு 50 - 60 விழுக்காடாகத்
தங்களின் ஆக்கங்களிலே வழங்கி வருகிறார்கள்.
இந்த முறைகேடான செயல் செந்தமிழுக்கு எத்துணை அழிவைத் தரப்போகுதோ யாம்
அறியோம் பராபரமே!
எங்கள் பொங்கல் – கவிதை நூல் பற்றிய நோக்கு
ராணி சீதரன்
எழுத்தாளர்,
சிரேட்ட விரிவுரையாளர்
(ஓய்வுநிலை)
தேசிய கல்வி நிறுவகம்
இலங்கை
மொழியின் மூலம் மாணவர்களிடம் நான்கு திறன்கள்
வளர்க்கப்படல் வேண்டும். கேட்டல், பேச்சு, ஆகிய இரு திறன்களும் வீட்டுச் சூழலிலே
பிள்ளை கற்றுக்கொண்டு சொற்களஞ்சியங்களை சேகரித்து மூளையில் பதியமிட்டுக்கொண்டு பாடசாலைக்குச் செல்கின்றது. அங்கே எழுத்து
வாசிப்பு ஆகிய இரு திறன்களையும் கற்பதற்கு வீட்டில் பெற்றுக்கொண்ட மொழிசார்ந்த
அனுபவங்கள் வாய்ப்பளிக்கின்றன. இத்தகைய சந்தர்ப்பம் புலம்பெயர்ந்து வாழும்
பிள்ளைகளுக்கு முழுமையாகக் கிடைக்கின்றது எனக்கூறமுடியாது. ஏனெனில் பெற்றோர்களில் அநேகமானோர் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதில் ஆர்வமுள்ளவர்களாக
இருக்கின்றனர். இதனால் தமிழ்ப் பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகள் பலரிடம் உச்சரிப்புத்திறனில்,
இடருறும் நிலையினை அவதானிக்கலாம். அதுமட்டுமன்றித் தொடர்ந்து பேசுதல், பொருள்
விளங்குதல், சிறந்த முன்வைப்பு என்பவற்றிலும் இதேநிலையே காணப்படுகின்றது.
எனவே இங்கு மொழித்திறன்களை மட்டுமன்றித் தமிழரின்
பண்பாட்டுக் கூறுகள் நம்பிக்கைகள், மரபார்ந்த எண்ணங்கள் இலக்கியப் படைப்புகள் என்பவற்றை இவர்களுக்கு ஓங்கி உரைத்து உணர்த்த
வேண்டிய தேவையும், பொறுப்பும் தமிழ்
ஆசிரியரின் கடமையாக உள்ளது. இதனை உணர்ந்து செயற்படுபவர் தமிழ் ஆசிரியராக
விளங்கும் திரு. பரமேசுவரன் இரங்கநாதன்
அவர்கள். மவுண்ட் றூயிட் தமிழ்ப்
பாடசாலையில் தமிழ் கற்பிக்கும் இவர் இயல்பாகவே தமிழில் விருப்பமும்,
ஈடுபாடும் கொண்டவர். ஆடிப்பிறப்பு விழாவில் அவர் பிள்ளைகளுக்கு வழக்காடு மன்றம்
ஒன்றைப் பயிற்றுவித்துத் தனது தலைமயில்
அதனை நடத்தியதோடு மட்டுமன்றி நவாலியூர்
சோமாசுந்தரப் புலவரின் பேரனை கருத்துரை வழங்குவதற்கு அழைத்திருந்தார். இத்தகைய தொலை நோக்குடன் தமிழ் கற்பிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் செயற்படல்
வேண்டும். என்பதனை அவரின் முன்மாதிரியான செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன.
உன் மேல் கோபம் குமரா?
இங்கேதான் ஓலமிட்டு நம்மக்கள் ஓடினர்
எங்கிருந்தாய் ஓடிவரவில்லையே முருகா
கனி ஒன்றுக்காக உலகைச்சுற்றி பறந்தாயே
பிள்ளைக்கனிகள் பலர் மடிந்தனரே வேலா
தேவர்களுக்கு படைத்தலைவனாக நின்றாய்
எங்கோ இருக்கும் தேவர்களைக் காத்தாய்
படைத்தலைவர்களாய் பலர் நம்மை அழிக்க
தடை செய்யமுடியாது நின்றதேன் தலைவா
தமிழ்த் தலைவர்கள் தமிழரை காக்கவில்லை
தமிழ்க்கடவள் நீயும் தமிழரை காக்கவில்லை
காக்க காக்க கனகவேல் காக்க என்றோமே கந்தா
நோக்க நோக்க நொடியில் நோக்க மறந்ததேன் மால்மருகா
மாலுக்கு யானை மீது கொண்ட இரக்கம்
மருகனுக்கு தம்மக்கள் மீது ஏனில்லை ஐயா
இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யென
எம்பாட்டன் இறையனார் குறளில் சொன்னார்
எம்மைக் காக்காது போனாலும் கந்தவேளே
உம்மைக் கைதொழுகின்றோம் அன்பால்!
வடமொழியா? தமிழா? - கார்த்திகா கணேசர்
எமது மொழியான தமிழ்மொழி மிகுந்த தொன்மை வாய்ந்ததும், இலக்கியச் செறிவும் உள்ள மொழி. இவற்றால் நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் எம்மில் ஒருவர் தமிழை மட்டுமே கற்றுத் தேர்ந்தவராக இருந்தவராகவும் அதில் பாண்டித்யம் பெற்றவராகவும் இருந்தால் அவரை தமிழ் அறிஞர் என்கிறோமா? இல்லைத்தான். காரணம் அவர் உலகை அறிந்துகொள்ளக் கூடிய மொழியான ஆங்கிலத்தை அறிந்திராததே காரணமாகிறது. தமிழ் மொழியின் தொன்மையை, சிறப்பை ஆய்வதற்கும் இன்று ஆங்கிலமே கருவி மொழியாக பயன்படுவதை நாம் அறிவோம்.
குடும்ப வன்முறை; முற்றாக ஒழித்தல் சாத்தியமானதா?
September 6, 2024 1:11 am
குடும்பங்கள் ஒரு சமூகத்தின் கட்டுமான தொகுதிகளாகும். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான குடும்பங்கள் உறுப்பினர்களின் நலனுக்கு மட்டுமல்ல, அதை ஒரு சமுதாய மற்றும் மக்களின் நலனுக்கும் அத்தியாவசியமானதாகும். ஆகையால் குடும்பத்தில் நிகழும் வன்முறை குடும்ப நலனை சிதைப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்திலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. குடும்பத்தில் நிகழும் வன்முறை இலட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக பெண்களையும் பாதிக்கும் ஒரு உலகளாவிய பிரச்சினை ஆகும். பெண்களுக்கு எதிரான வன்முறை குடும்ப வன்முறை ஆகும். குடும்ப வன்முறை பெரும்பாலும் உடல் மற்றும் மனரீதியான காயங்கள் மற்றும் இறப்புக்கு விட்டு செல்கின்றது. கடந்த நான்கு வருடங்களில் பல குடும்ப வன்முறைகள் இடம் பெற்றுள்ளன,
குடும்ப வன்முறை என்பது வீட்டிற்குள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது தம்பதிகளுக்கு இடையே நிகழும் பலவித துஷ்பிரயோகங்களாகும். குடும்ப வன்முறையின் பொதுவான உருவம் வயது வந்த ஆண் குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்ட பெண், பெரும்பாலும் அவரது மனைவி அல்லது காதலியை உள்ளடக்கியது. இருப்பினும், குடும்ப வன்முறையில் ஈடுபடும் பெண்களும் உள்ளனர், சில சமயங்களில் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். உண்மையில், எந்தவொரு குடும்பத்தாரும் அல்லது குழு உறுப்பினரும் மற்றொருவரை நோக்கிச் செய்யும் எந்தவொரு வன்முறையும் வன்முறைதான்.
சமையல்காரன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
தமிழ் சினிமாவிலும் , நாடகத் துறையிலும் கொடி கட்டி பறந்தவர்
நடிகவேள் எம் ஆர் ராதா. ஒரு கால கட்டத்தில் இவர் இல்லாத படமே இல்லை என்பது போல் எல்லாப் படங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தார். அப்படி உச்சத்தில் இருந்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆரை துப்பாக்கியால் சுட்ட காரணத்தால் சில ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வந்தது. அவ்வாறு சிறை சென்று மீண்ட எம் ஆர் ராதா, அதன் பின் நடித்த முதல் படம் தான் சமையல்காரன்.
தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. கலைஞர் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்களால் தயாரிக்கப்பட்ட சமையல்காரன் படத்தில் மூலம் தான் ராதா தன்னுடைய திரையுலக மறுபிரவேசத்தை ஆரம்பித்தார். அதே சமயம் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்தவர் வேறு யாருமல்ல, கருணாநிதியின் மகனான மு க முத்து ஆவார். தி மு க விலிருந்து எம் ஜி ஆர் வெளியேற்றப் பட்டு , அண்ணா தி மு க என்ற கட்சியை ஆரம்பித்து கருணாநிதியுடன் அரசியல் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த கால கட்டதில் முத்து படத்தில் ராதா ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக கவனிக்கப் பட்டது.
சிட்னி முருகன் கோவில் சமூக மண்டபம் - கல் நாட்டு விழா - 15/09/2024
வரலாற்றின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு இருக்கும்!!
செப்டம்பர் 15, 2024 அன்று காலை 10:330 மணிக்கு சிட்னி முருகன் சமுதாய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுதல்.
சைவ மன்றம் இதுவரை மேற்கொண்ட மிகப் பெரிய திட்டத்தின் தொடக்கமாக இந்தச் சிறப்புமிக்க நிகழ்வு அமையும்.
உங்கள் வருகை இந்த வரலாற்று நாளின் வெற்றிக்கு பங்களிக்கும்.
உங்கள் குடும்பத்தையும் உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
வரலாற்றின் ஒரு பகுதியாக இருங்கள்
தலைமையற்ற தமிழ் அரசு கட்சி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை யார்?
September 4, 2024
இப்படியொரு கேள்வியை கேட்டால், கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வதை மட்டுமே தமிழ் அரசுக் கட்சியினர் பதிலாகத் தருகின்றனர். ஒருகாலத்தில் ஆளுமைமிக்க அரசியல்வாதிகளின் பாசறையாக இருந்த தமிழ் அரசுக் கட்சி தற்போது தலைமை என்னும் சொல்லை உச்சரிக்கக்கூட தகுதி இல்லாதவர்களிடம் சிக்கிச் சிதைந்து கொண்டிருக்கின்றது. இரா.சம்பந்தன் தலைவராக இருக்கின்றபோது, பல விமர்சனங்கள் இருந்தபோதிலும்கூட தமிழ் அரசுக் கட்சி கீழ்நிலைக்குச் சென்றிருக்கவில்லை. ஒப்பீட்டடிப்படையில் சம்பந்தனின் தலைமைத்துவமே அதற்கான காரணம். ஏனெனில், சம்பந்தன் தீர்மானிக்கும் இடத்தில் இருந்தவரைக்கும் கட்சிக்குள் எவராலும் சம்பந்தனை மீறி முகம் காட்ட முடிந்திருக்கவில்லை.
ஆனால், ‘அண்ணன் எப்போது காலியாவான் திண்ணை எப்போது காலியாகும்’ என்பதுபோல பலர் முகம் காண்பிக்க முற்பட்டனர். கட்சிக்கான புதிய தலைவருக்கான போட்டியில் இரண்டு பேர் போட்டியிடத் தீர்மானித்தபோதே கட்சியின் எதிர்காலம் ஊசலாடத் தொடங்கிவிட்டது. சிறீதரன் வெற்றி பெற்றமையைத் தொடர்ந்து கட்சிக்குள் இரண்டு அணிகள் என்பது நிரந்தரமானது. இதன் விளைவுதான் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தும் – எதிர்த்தும் தமிழ் அரசுக் கட்சிக்குள் அணிகள் உருவாகின. ஒருவேளை கட்சிக்குள் பிளவு ஏற்படாது இருந்திருந்தால் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டுக்கு ஆதரவான பார்வை கட்சிக்குள் ஏற்பட்டிருக்காது. ஏனெனில், முள்ளிவாய்காலுக்கு பின்னரான மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தென்னிலங்கை வேட்பாளர்களை எவ்வித உடன் பாடும் இல்லாமலேயே ஆதரித்திருந்தது.
தமிழ் அரசுக் கட்சி யாருடன்?
September 7, 2024
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சண்முகம் குகதாசன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினர் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். ரணிலுக்காகக் கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர். யார் ரணிலுக்கு ஆதரவாகக் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்களோ – அவர்கள் அனைவரும் தற்போது குகதாசனின் மறைமுக ஆதரவுடன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர் – பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை அறிவித்திருக்கின்றது. உண்மையில் தமிழ் அரசுக் கட்சி யாரை ஆதரிக்கின்றது? தமிழ் அரசுக் கட்சி கொள்கையளவில் இரண்டு அணிகளாக பிளவுற்றிருப்பது உண்மைதானா அல்லது அதுவும் ஓர் அரசியல் நடிப்பா என்னும் சந்தேகமே மேலோங்குகின்றது. ஏனெனில் ஓர் அணியினர் பொது வேட்பாளரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இன்னொருபுறம் பிறிதோர் அணியினர் பொது வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதரிப்பவர்களில் பிரதானமானவர் சிவஞானம் சிறீதரன். ஆனால் அவர் இதுவரையில் தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பொது மேடைகளில் ஏனைய கட்சியினரோடு ஒன்றுபட்டு நிற்கவில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் சிறீதரனின் நிலைப்பாடும் ஓர் அரை ஆதரவு நிலைப்பாடுதான்.
இலங்கைச் செய்திகள்
யாழ் – மதுரைக்கு புதிய விமான சேவை
நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்
13 ஆவதை அமுல்படுத்த இணக்கம் சஜித்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஹக்கீம், ரிஷாத் பதிலளிக்க வேண்டும்
யாழ் – மதுரைக்கு புதிய விமான சேவை
இந்திய ஊடகங்களில் செய்தி
இந்தியாவின் மதுரைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே வாரத்தில் 7 நாட்களும் விமான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை விமான சேவை நிலையத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும்
உலகச் செய்திகள்
மேற்குக் கரையில் ஒரு வாரத்தை தாண்டி இஸ்ரேலின் முற்றுகை நீடிப்பு: பலரும் பலி
தாக்குதலுக்கு இடையே காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்
வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்ததால் 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை
பெங்களுரில் ஒரு பில்லியன் செலவில் உலகளாவிய திறன் நிலையம்
பெரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் நெதன்யாகுவின் நிலைப்பாட்டில் உறுதி
பெரும் அழிவுக்குப் பின் ஜெனினில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ்
மேற்குக் கரையில் ஒரு வாரத்தை தாண்டி இஸ்ரேலின் முற்றுகை நீடிப்பு: பலரும் பலி
காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் அதேநேரம் போர் நீடிப்பு
காசாவில் இரண்டாவது கட்டமாக போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தெற்கில் உள்ள மருத்துவ மையங்களில் நேற்று (05) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஏனைய பகுதிகளில் தொடர்ந்து போர் நீடிப்பதோடு இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.