பாரைவிட்டுப் போனதேனோ ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


             குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும் 
image1.JPG                   எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்
             பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும் 
                  எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   ! 

            எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ 
                  அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள் 
            வழுவின்றி வைகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி 
                   வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        ! 

           வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை 
                அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம் 
           வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார் 
                  வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !
            
             பரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல் 
                   பக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய் 
             படைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே
                    படைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ    ! 


ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் (உண்மைக் கதை) – உஷா ஐவாகர் (அவுஸ்திரேலியா)இளவரசர் ஹரி (Harry) நடிகை மேகன் (Meghan) இருவரின் திருமணம் 19/05/2018 அன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இவர்களின் காதல் ரகசியம் எப்போது முதன் முதலில் வெளியே கசிய ஆரம்பித்தது தெரியுமா? ஹரியும் மேகனும் ஒரே மாதிரியான நீல நிற மணிகளால் ஆன பிரேஸ்லட்டை அணிந்து கொண்டு வெளியே நடமாடிய போதுதான் அந்த ரகசியம் கசியத் தொடங்கியது.

இளவரசர் ஹரி ஆபிரிக்காவுக்குச் சென்றிருந்தபோது இந்த நீல மணிகளாலான பிரேஸ்லட்டுகளை வாங்கி வந்திருந்தார். அதைவிட இளவரசர் ஹரி அவ்வப்போது மேகனுக்கு பிடித்த பியோனி மலர்களைக் கொண்ட மலர்கொத்துக்களையும் அடிக்கடி அனுப்பி வைப்பாரம். ஒரு மலருக்கு மலர்களை அனுப்பியிருக்கிறார் இளவரசர் ஹரி.

ஓக்ரோடபர் 2016 இல் இவர்களது காதல் வெளியுலகிற்கு தெரியவந்தது. இளவரசர் ஹரி மனிதநேயம் மிக்கவர். அவர் தொலைக்காட்சி நடிப்பையும் யுனைட்டட் நேஷன்ஸ் (United Nations) வேர்ல்ட் விஷன் கனடாவுக்கும் (World Vision Canada) பணியாற்றும் மேகனை தேர்ந்தெடுத்தது மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையே அளித்தது என்றே கூறவேண்டும். 

“நம்பமுடியாதளவு விரைவாக நான் மேகனின் மேல் காதல் வயப்பட்டுவிட்டேன்” என்று புன்னகையுடன் கூறும் இளவரசர் ஹரி 33 வயது நிரம்பியவர். இந்த மிகவும் அழகிய பெண் கால் தடிக்கி என் வாழ்வினுள் வீழ்ந்து என் வருங்கால வாழ்க்கையை வசந்தமாக்கிவிட்டார்.” என  அவர் புளுகித் தள்ளுகிறார். 

அஞ்சலிக்குறிப்பு: " எழுத்துச்சித்தர் "பாலகுமாரன் நினைவுகள் ஈழப்போராட்டம் பற்றியும் கேள்விஞானத்தில் நாவல் எழுதவிரும்பியவர் - முருகபூபதி


" என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். " என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார்.
ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார்.
ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன்.
இவரது  நாவலான ' மெர்க்குரிப்பூக்கள்' இவருக்கு கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது.
சின்னச்சின்ன வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து வந்தவையே,  ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே காதலாகி, இரும்புக்குதிரைகள் என்பன.
இதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல் பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான மாத நாவல்களையும் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் இன்னமும் பேசப்படுவார். அவரால் நாவல் இலக்கியமும் பேசப்படும் என்பது முகமூடி அணியப்படாத உண்மை"
இந்த வரிகளை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே வீரகேசரியில் இலக்கியச்செய்திகள் என்ற வாராந்த பத்தியில் எழுதியிருக்கின்றேன்.

நடந்தாய் வாழி களனிகங்கையே - அங்கம் 01 இலங்கைத் தலைநகரை ஊடறுத்துச்செல்லும் நதியின் பின்னணியில் தொடரும் கதைகள் ரஸஞானி


"நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா..?"  என்ற வரிகளும் இடம்பெற்ற திரைப்பாடல் தேசியவிருது பெற்றது. இதனை சைவம் படத்திற்காக எழுதிய கவிஞர் ந. முத்துக்குமாரும் இன்று எம்மத்தியில் இல்லை. நதிகளுக்கு வழித்துணை தேவையே இல்லை. அவை தன்பாட்டில் உற்பத்தியாகி காடு, மலை, நகரம், சோலை, சமவெளி கடந்து கடல் தாயிடத்தில் சங்கமிக்கும். வர்ணபகவானுடன் அவற்றுக்கு காதல் பெருகினால் நாட்டிலும் வெள்ளம் பெருகும்!
நதிகள் தோன்றும் இடத்தை நதிமூலம் என்பர். ஆனால், எம்மால் அதனைப் பார்க்கமுடியாது! இந்த புதிய தொடரில் வரும் இலங்கையின் தலைநகரத்தை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையின் உண்மைப்பெயர் என்ன தெரியுமா...? கல்யாணி.
நடிகர் திலகமாவதற்கு முன்னர் வி. சி. கணேசன், முதலில் தோன்றிய திரைப்படம் பராசக்தியில் இறுதியில் வரும் நீதிமன்றக்காட்சியில், கலைஞர் கருணாநிதியின் அனல் கக்கும் வசனங்களை பேசுவார்.
அதில் ஓரிடத்தில், " ஓடினாள்... ஓடினாள்.... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் கல்யாணி...." என்ற வரிகள் வரும். எங்கள் தேசத்தின் கல்யாணியும் சிவனொளி பாதை மலையிலிருந்து ஊற்றெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவளது வாழ்க்கையின் ஓரம் கொழும்பின் புறநகரில்  முகத்துவாரத்தில் இந்துசமுத்திரத்தாயுடன் சங்கமிக்கிறது.
தற்பொழுது களனி கங்கைக்கரையில் பேலியாகொடை என்ற இடத்தில் அமைந்துள்ள பொலிஸ்நிலையக் கட்டிடத்தில்தான் கல்யாணி என்ற அழகான இல்லம் இருந்தது.
இதன் சொந்தக்காரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள். எனினும் மெதநாயக்க என்ற குடும்பத்தினருக்குச்சொந்தமான அந்த கல்யாணி இல்லத்தை அன்றைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா தமது அரசுக்காக சுவீகரித்தார். அந்த செல்வந்த குடும்பம்தான் பின்னாளில் ஹேமாஸ் என்ற பென்ஸில் தயாரிக்கும் நிறுவனத்தையும், எம். ஜே. இன்சூரன்ஸ் என்ற காப்புறுதி நிறுவனத்தையும் உருவாக்கியது.

புத்தகங்கள் பற்றி உலகத்தலைவர்களும் அறிஞர்களும் சொன்ன கருத்து


ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,

*ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா...
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று ேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*...
என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*...
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*...
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் *நெல்சன் மண்டேலா*...
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி *லெனின்* கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் *சார்லிசாப்லின்*...
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் *வின்ஸ்டன் சர்ச்சில்*...
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் *மார்டின் லூதர்கிங்*...
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் *பகத்சிங்*...
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து

என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
*ஆபிரகாம் லிங்கன்*...

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி

– *ஜூலியஸ் சீசர்*...
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..

– *டெஸ்கார்டஸ்*...
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களாஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு

– *இங்கர்சால்*...

இலங்கைச் செய்திகள்


பதுளை தமிழ் வித்தியாலய அதிபர் விவகாரம்;  அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் இன்று...!

வவுனியாவில் பட்டதாரிகள் கறுப்புக் கொடியேந்தி போராட்டம்

இலங்கையின் வேகம் குறித்து பிரிட்டன் ஏமாற்றம் !

இலங்கை - ஈரான் ஜனாதிபதிகள் சந்திப்பு : இரு நாடுகளுக்குமிடையில் 5 உடன்படிக்கைகளிலும் கைச்சாத்து

யுத்தத்தின் வடுக்கள் தொடர்கின்றன- கனடா

பதுளை தமிழ் வித்தியாலய அதிபர் விவகாரம்;  அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் இன்று...!


14/05/2018 பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை முழந்தாழிடச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் ஒன்றை செய்யவுள்ளது.


இது தொடர்பில், விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் அந்த விசாரணைகள் எவையும் நிறைவு செய்யப்படவில்லை எனவும், இதனாலேயே குறித்த மனு தாக்கலினை செய்ய தீர்மானித்துள்ளதாகவும்  சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி   வவுனியாவில் பட்டதாரிகள் கறுப்புக் கொடியேந்தி போராட்டம்

16/05/2018 வவுனியா மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு முன்பாக  இன்று காலை 10.00 மணியவில் கறுப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும் , 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை  முன்வைத்தே இவ்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தும் மேற்கொள்ளப்பட்டது.  நன்றி வீரகேசரி 


இலங்கையின் வேகம் குறித்து பிரிட்டன் ஏமாற்றம் !


17/05/2018 சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் விடயத்தில்  இலங்கை காண்பிக்கும் வேகம் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் அமைச்சர் மார்க்பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது  இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நான் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்தேன். சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம் என மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார்.
மாற்றம் நிகழும் வேகம் குறித்து பிரிட்டன் ஏமாற்றமடைந்துள்ளது இன்னும் பல நடவடிக்கைகள் இடம்பெறுவது அவசியம் என நான் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம்  தெரிவித்தேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 

இலங்கை - ஈரான் ஜனாதிபதிகள் சந்திப்பு : இரு நாடுகளுக்குமிடையில் 5 உடன்படிக்கைகளிலும் கைச்சாத்து


14/05/2018 இரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவுக்கும்  ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையில் இடம்பெற்றது.
ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையான ஷதாபாத் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அந்நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஜனாதிபதிக்கு  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
இருநாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரண்டு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்துவரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மசகு எண்ணெய், தேயிலை மற்றும் சுற்றுலாத் துறையில் தற்போது இருந்துவரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடினர்.
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்து ஈரான் உதவி வழங்கி வருகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு துறையை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் ஈரான் இலங்கையிடமிருந்து அதிகளவு தேயிலையை இறக்குமதி செய்துவருவதுடன், இதனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈரானிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் ரயில் பாதை முறைமையை மேம்படுத்துவதற்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் சுற்றுலாத் துறையில் இருந்துவரும் ஒத்துழைப்பை மேம்படுத்தி இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.
மேலும் சுகாதார துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி இருநாடுகளுக்குமிடையில் மருந்துப்பொருட்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆடைத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் வசதிகளை இலகுபடுத்துவதற்கு நிதிப் பரிமாற்றத்திற்கான முறையான வங்கிச் சேவையை பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். இது தொடர்பில் விரைவில் உடன்படிக்கை ஒன்று செய்துகொள்வதற்காக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இணைந்த ஆணைக்குழுவின் கீழ் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பலமாக நடைமுறைப்படுத்துவதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2004ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தலைவர்கள் உடன்பட்டனர்.
ஆசிய ஒத்துழைப்புச் சங்கம் மற்றும் அணிசேரா அமைப்பு ஆகியவற்றின் உறுப்பு நாடுகள் என்ற வகையில் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுதல், சர்வதேச பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல், போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயற்படவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.
அணிசேரா அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் அனைத்து நட்பு நாடுகளையும் ஒன்றுபோல் ஏற்றுக்கொண்டு மத்திமமான வெளிநாட்டு கொள்கையின் கீழ் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் வெளிநாட்டு கொள்கையாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் 61 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோதும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு பலநூறு வருடங்கள் பழைமையானது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
உமா ஓயா திட்டம், கிராமிய பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்குதல் மற்றும் புகையிரத துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்காகவும் ஜனாதிபதி ஈரான் அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்குமிடையில் 05 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்.
தரப்படுத்தல், அளவையியல் பயிற்சிகள்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி.
கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.
ஆகிய துறைகளுடன் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
நன்றி வீரகேசரி யுத்தத்தின் வடுக்கள் தொடர்கின்றன- கனடா


19/05/2018 இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும, நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்  மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியுள்ளதை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் சிக்கி உயிர்தப்பியவர்கள் தங்கள் இழப்புகளிற்கான பதில்களை கோரி நிற்கும் அதேவேளை யுத்தத்தின் காயங்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களில் நான்  பாதிக்கப்பட்ட கனடா தமிழர்கள் பலரை சந்தித்துள்ளேன்,அவர்களின் கதைகள் இலங்கை நிரந்தர சமாதானம் உண்மையான நல்லிணக்கத்தை அடையவேண்டியதன் அவசியத்தை நினைவுபடுத்தியுள்ளனஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தில் சிக்கி தப்பியவர்களின் நம்பிக்கையை பெறக்கூடிய பொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரிஉலகச் செய்திகள்


ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது அமெரிக்கா : எதிர்ப்பிலீடுபட்டோரில் 41 பேர் பலி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்

இளவரசர் ஹரி-மேகன் திருமணம் : மணமகளுக்கும் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணத்தை நிறைவேற்றிய ஹரியின் தந்தை

கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து ; 110 பேர் பலி

அமெரிக்க பாடசாலையொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் : 10 பேர் பலி, 12 பேர் காயம்

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டவற்றை வெளியிட்ட மலேசிய பொலிஸ்
ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது அமெரிக்கா : எதிர்ப்பிலீடுபட்டோரில் 41 பேர் பலி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்

15/05/2018 பாலஸ்தீனர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இஸ்ரேலின் தலைநகரரான ஜெருசலேமில் அமெரிக்கா  புதிய தூதரகத்தை திறந்துள்ளது. 

சைவ மன்றம் - சேக்கிழார் குருபூசை - 20/05/2018சேக்கிழார் விழா - சைவ மன்றம் சிட்னி - 27/05/2018