இறுதிக் கடிதம் - கீதா மதிவாணன்

.
இதற்குமுன் எழுதப்பட்ட
எண்ணிலாக் கடிதங்களின்
கதி பற்றியறியும் ஆவலில்
இறுதியாக எழுதப்படுகிறது இக்கடிதம்.

முகவரியைத் தெளிவாகவே
முன்பக்கம் எழுதிவிட்டபடியால்
முன்குறிப்பிட்ட கடிதங்கள் எதுவும்
வந்துசேரவில்லையென்று சொல்லிநழுவ
வாய்ப்பேதுமில்லையுனக்கு.

புல்லாங்குழல் அரங்கேற்றம்

.


"புல்லாங்குழல் அரங்கேற்றம்.... கட்டாயமாக வாருங்கள்!" என்று பிரதீஷன் பெற்றோரும்குருநாதர் சுதந்திரராஜூம் 
அன்புக்கட்டளை விடுத்திருந்தார்கள்.... "என்ன..இன்னுமொரு அரங்கேற்றம்...!" என்று அரை குறை மனத்துடன் சென்ற எனக்கு ஒரு எதிர்பாராத இசை விருந்து ஆச்சரியமாகக் கிடைத்தது.

செல்வன் பிரதீஷன் மிகவும் நேர்த்தியான ஒரு புல்லாங்குழல் இசைக் கச்சேரியை எல்லோர் மனமும் குளிரும்படி சமர்ப்பித்தார்.
இது தான் ஆஸ்திரேலியாவில் முதல் புல்லாங்குழல் அரங்கேற்றம் என்று சொன்னார்கள்.

புல்லாங்குழலில் கர்நாடக இசையை வாசிப்பது ஒன்றும் இலகுவான விடயமல்ல. வாசித்து அவஸ்தைப் பட்டவர்களுக்கு தான் அது தெரியும். சுருதியோடு பலமணி நேரம், காற்றுச் சத்தம் வராமல் வாசிப்பது மிகவும் கடினம்.

மெல்பனில் நடந்த அரங்கேற்றம்


.


இலங்கையின் மூத்த தமிழ் அறிஞர்கள் கி. லக்ஷ்மண ஐயர் திருமதி பாலம் லக்ஷ்மண ஐயர் தம்பதிகளின் பேத்தி குமாரி லக்ஷண்யாää பேரன் குமாரன் வஸீஸ் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் மெல்பனில் மொனாஷ் பல்கலைக்கழக அலெக்ஸான்ட்ரா தியேட்டரில் நடைபெற்றது.
ஸ்ரீநிவாசன்- மங்களம் தம்பதியரின் பிள்ளைகளான இவர்கள் இருவரும் மெல்பன் பரதகலாஞ்சலி நடனப்பள்ளியில் ஸ்ரீமதி ராதிகா சுரேஷ் மகாதேவாவிடம் முறையாக பரதம் பயின்றனர். சென்னையில் பழம்பெரும் நடன நர்த்தகி ருக்மணி அருண்டேலின் கலாஷேத்திரா நடனக்கல்லூரியைச்சேர்ந்த பிரபல நடனக்கலைஞர் ஸ்ரீ பி.ரி. நரேந்திரனிடம் விசேட நடனப்பயிற்சிகளை பெற்றுக்கொண்ட லக்ஷண்யா ஸ்ரீநிவாசன்ää வஸீஸ் ஸ்ரீநிவாசன் சகோதரர்களின் நடனத்தோற்றங்களை இங்கே காணலாம்.

பேரப்பிள்ளைகள் தினத்தில் அருந்திய சிறுகையழாவிய கூழ்

.
                                                                                                     -பத்மினி சோதிராஜா-


சென்ற ஞாயிற்றுக் கிழமை (29.5.2011) அன்று, நியுசவுத் வேல்ஸ் மூத்த பிரசைகள் சங்கத்தினரின் வருடாந்தப் போரப்பிள்ளைகள் தினக் கொண்டாட்டம் ஹோம்புஷ் ஆண்கள் உயர் பாடசாலை மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டம் என்றால் நமக்குக் கொண்டாட்டந்தானே. அதுவும் பேரன் பேத்தியருடைய கொண்டாட்டம் மேலும் சிறப்பான கொண்டாட்டம். விழாவுக்கு சங்கத்தின் தலைவர் சிவா பசுபதியவர்கள் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக ஸ்றத்பீல்ட் நகரபிதாவும் அவரது துணைவியாரும் வந்திருந்தனர். விழா நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணிக்குத் தொடங்க ஏற்பாடாகியிருந்தது.

சிட்னி இசை விழா 2011


சிட்னி இசை  விழா  2011 வருகிற  ஜூன்  மாதம் 11ம் 12ம் 13ம் திகதிகளில் UWS, Rydalmere, Parramatta Campus y; Sir Ian and Nancy Turbot அரங்கில் நடைபெறவுள்ளது

இசை விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

சென்னையிலே மார்கழி மாதத்தில் ஆரம்பமாகும் இசை விழா. அவ் வேளையில் வெளியாகும் வார மாத சஞ்சிகை யாவுமே இசை மயமாகவே இருக்கும். நிகழ்ச்சி விமர்சனம் செய்தி ஏன் நகைச்சுவைத் துணுக்குகள் கூட இசைவிழா தொடர்பாகவே இருக்கும். எமது  Sydney  யிலும் June 10 11 12ம் திகதிகளில் இசை விழா நடைபெற உள்ளது. அதையொட்டி நாமும் சிறிது இசை சம்பந்தமாக சில விடயங்களை வெளியிடலாமே என எண்ணிப்பார்த்ததன் விளைவே இந்தக் கட்டுரையை வரையக் காரணம்.

இலங்கைச் செய்திகள்

வன்னி யுத்தத்தின் போது தொண்டாற்றிய மருத்துவர் சத்தியமூர்த்திக்கு சர்வதேச விருது

[ செவ்வாய்க்கிழமை, 31 மே 2011, 02:11.07 PM GMT ]

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான மருத்துவ உதவிகளை வழங்கிய வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்திக்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தினால் 2011 ம் ஆண்டுக்கான உள்ளக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது போதியளவு மருத்துவ வசதிகள் இல்லாத போதும் பல தடைகளுக்கு மத்தியில் தனது உயிரையும் பொருட்படுத்தாது பொறுப்புணர்வோடு பணியாற்றியமைக்காக சத்தியமூர்த்திக்கு இவ்வாண்டிற்கான விருதை வழங்குவதில் தாம் பெருமையடைவதாக சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருக்குறள் நீதிக்கதைகள் - இலட்சியவாதி கபிலன் மகேசன்

.

புதுமையானதொரு புத்தக வெளியீடு சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையிலே சென்ற ஞாயிறு மாலை மே 29 ம்   நாள் 2011 மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது புதுமை -ஏனெனில் நூலாசிரியர் பதினைந்தே வயது நிரம்பிய கபிலன் மகேசன்

கபிலனின் Moral Stories From Thirukkural    என்னும்  ஆங்கில நூலை வாசித்த போது  எப்படி இச்சிறுவனால் இவ்வளவு ஆழமாகச் சிந்தித்து எழுத 
முடிந்துள்ளது என வியப்பு ஏற்படுகிறது!-  கபிலன் இந்நூலை முதன் முதலில் எழுதத் தொடங்கியபோது அவருக்குப் பன்னிரண்டு வயதுதான் என்பதை அறிந்தபோது மேலும்  பெரு வியப்பு ஏற்படுகிறது!

பாவங்கள் விடுவதில்லை -கவிதை -தமிழருவி மணியன்
பின்னால் விரட்டிய ஊடகங்களும் : தப்பியோடிய புதிய ஐ.பி.எல் காதல் ஜோடியும்!

.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீயும், பாலிவூட் நடிகை பிரீத்தி ஷிண்டாவும், மும்பையில் ஒலிவ் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டதாக வெளிவந்த தகவல் சென்ஷேஷனல் ஹிட்ஸை ஏற்படுத்தியிருக்கிறது.

மீதூண் விரும்பேல் -அ.முத்துலிங்கம்
.
                                                                        அனுஷ்யா என்பவர் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அது முக்கியமான, பயனுள்ள கடிதம் என்பதால் அதை மொழிபெயர்த்து சுருக்கி கீழே கொடுத்திருக்கிறேன்.

‘ஜேர்மனி வளர்ந்த நாடு, பொருளாதாரத்தில் மிகவும் வலுவான நாடு என்பது தெரிந்தது. அப்படியான நாட்டில் மக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். நான் கற்பதற்காக அங்கே போயிருந்தபோது அந்த எண்ணத்தை மாற்ற வேண்டி நேர்ந்தது.

பொரிவிளாங்காய் - யோகேஸ் கணேசலிங்கம் - கன்பரா

.
பொரிவிளாங்காய் என்ற பெயரைப் பார்த்தவுடன் இது என்ன 
பொரித்த விளாங்காயாஅப்படியும் ஒன்று இருக்கிறதாஎன்று 
எம்மிற் பலர் வியப்படைவார்கள்இன்று ஐம்பது வயதைக்  இலங்கையருக்கு மட்டுமே அது ஒரு தின் பண்டம் என்பது   விளங்கும்அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு 
இளம் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வருகை தந்த பொழுது
சில பொரிவிளாங்காய் உருண்டைகளை கொண்டு வந்தார்
அவற்றைக் கண்டதும் எனக்கு எனது இளமைக் காலத்து பசுமையான நாட்கள் 
மனத் திரையில் ஓடத் தொடங்கியது. இன்று கேக்பேஸ்ட்ரி எனப் பட்ட பண்டங்களை செய்வதையே நோக்கமாகக் 
கொண்டு வாழும் பெண்கள் மத்தியில் எமது 
பாரம்பரிய பொரிவிளாங்காயை முயற்சி செய்து உருட்டிய இப் 
பெண்ணிற்கு ஒரு சபாஷ்.

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

பாகம் 1
இளைஞர்களே! யுவதிகளே! இவ்வுலகின் வருங்காலக் குடிமக்களே!

ஓழுக்கம்

இவ்வுலகின் எதிர்காலம் - நன்மையோ அன்றித் தீமையோ – எதுவானலும் உங்களது நடத்தையைப் பொறுத்தே அமையப்போகிறது. இவ்வுலகம், பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும், இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும், ஒழுக்கமும் நல்லதாக இருக்கவேண்டும். இவ்வுலகத்திற்குத் தற்போதையத் தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல்ஓழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான். சரியான வழி முறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகுமானால் நாடு துண்டு துண்டாகச் சிதறிவிடும்.

மீனும் மீனும் பேசிக் கொண்டன - வித்யாசாகர்

“கரையோரம் சென்று மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா..”ஒரு மீன் சொன்னது

“வேண்டாம் வேண்டாம்..மனிதன் நம்மை கொன்று விடுவான்” மற்றொரு மீன் சொன்னது

“அசடே இன்னும் உனக்கு மனிதரை பற்றி புரிய வில்லையா” அந்த மீன் கேட்டது

“உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா..சொல்லேன் பாப்போம்..” மற்ற மீன் கேட்டது..

“மனிதன் எதையும் இருக்கும் இடத்தில் தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்”அந்த மீன் சொன்னது

சிட்னியில் வெள்ளமும் விபத்துக்களும்

.
கடந்த வாரம் சிட்னியில் அடை மழை பெய்ததால் வீதியில் வெள்ளமும் வாகனங்கள் விபத்திற்குள்ளானதுமான படங்களை கீழே காணலாம்.
Sydney's wild weather ... Terrigal

புத்தம் புதியதோர் இராம கதை.....! -- விகடகவி -

.முப்பத்தொரு ஆசனங்கள் மட்டும்

முழுமையாய்க் கிடைக்கப் பெற்று
ஒப்பரும் பதவியைத் துறந்து

ஓதரும் கலைஞர் சென்றார்

கட்டிய காவியோடு அன்னார்

கால்நடை ஆகச் செல்ல

கனிமொழி கண்ணீர் சிந்தி

கதாநாயகன் பின்னே செல்ல

உலகச் செய்திகள்

.

 போர்க்குற்ற விசாரணைகளுக்கெதிரான மிலாடிக்கின் மேன்முறையீட்டை சேர்பியா பரிசீலனை
01/06/2011
பெல்கிரேட்: இன அழிப்பு தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சேர்பியாவின் முன்னாள் இராணுவத் தளபதி, விசாரணைகளுக்காக ஐ.நா.வின் போர்க்குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதற்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டை சேர்பிய போர்க்குற்றவியல் நீதிமன்றம் பரிசீலனை செய்யவுள்ளது.

199295 பொஸ்னியப் போரின் போது 8000 முஸ்லிம்களை படுகொலை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக தேடப்பட்டு வந்த சேர்பியாவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரட்கோ மிலாடிக் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக ஐ.நா.வின் போர்க் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவதற்கு எதிராக மிலாடிக்கினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டை பரிசீலிப்பதற்கு சேர்பிய நீதிமன்றம் இணங்கியுள்ளது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி[ செவ்வாய்க்கிழமை, 31 மே 2011, 06:34.47 மு.ப GMT ]

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

பட விமர்சனம்


.
அழகர்சாமியின் குதிரை
kuthiriசாமி குதிரை காணாமல் போனதால் நடக்கும் நிகழ்வுகளே கதை... அழகர்சாமி கோவிலில் திருவிழா எடுக்க கிராமத்தினர் முயற்சிக்கின்றனர். அப்போது கோவிலில் இருந்த மரக்குதிரை மாயமாகிறது. ஊர் தலைவர் போலீசில் புகார் அளிக்கிறார். குதிரையை சல்லடை போட்டு தேடுகின்றனர். பக்கத்து மலை கிராமத்தில் வசிக்கும் இளைஞன் அழகர் சாமியின் குதிரையும் காணாமல் போகிறது.