கலவரம் ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்


        குத்தென்றான் ஓராள் கொழுத்தென்றான் ஓராள்
             மொத்தமுள்ள வெறியுடனே வெட்டென்றான் மற்றோராள்
       தீயெடுத்தார் கைகளிலே திசையெல்லாம் வைத்தார்கள்
             யாரெரிந்தார் யார்பிழைத்தார் யாருக்கும் தெரியாது 
        ஊர்கொழுத்தி நின்றவர்கள் உரத்தகுரல் எழுப்பிநின்றார் 
              சீரான இடமெல்லாம் தீயாலே பொசுங்கியதே 
        அகப்பட்ட மக்களது அலறலங்கே ஒலித்ததுவே
              அங்கே ஓர்கலவரம்  ஆடியதே தலைவிரித்து !

         இனங்காக்க என்கின்றார் மொழிகாக்க என்கின்றார்
                 இரக்கமதைத் தொலைத்துவிட்டு இரணியராய் மாறியவர்
         மனம்முழுக்க குரோதத்தை வளர்த்தபடி இருக்குமவர்
                 மாசுடனே செயல்பட்டு மக்கள்தமை வதைக்கின்றார் 
         படித்தவரும் இணைகின்றார் பாமரரும் இணைகின்றார்
                  துடித்தெழுந்து ஆயுதத்தைத் துணிவுடனே எடுக்கின்றார் 
          முடித்திடுவோம் எனும்வெறியில் முழுமூச்சாய் இறங்குகின்றார்
                 மூண்டுநின்ற கலவரத்தால் முழுநாடும் அழிகிறதே !

வாழி ஸ்டீபன் ஹாக்கிங்! வாழி தமிழ்போல் வாழி !!


வாழி ஸ்டீபன் ஹாக்கிங்!
 வாழி தமிழ்போல் வாழி !!

சுழலும் சக்கரம் பூமியில் 
சுழன்றது சக்கரம் சாமி!
சுட்டும் விழிகள் அறியும் 
சுட்ட துயரம் தெரியும்!

காலம் கடக்கும் ஹாவ்க்கிங்கை 
காலன் கடத்திச் சென்றான் 
என்னே கொடுமை நிலத்தில்?
எமனே இரக்கம் அற்றாய்!

அண்டம் முழுதும் கண்ணீர் 
அறிஞர், ஆய்வர் கண்ணீர் 

நம்மைத் தேடும் முயற்சி 
நன்று வேண்டும் நமக்கு 
நம்மை மீறி ஒருவன் 
நம்மை ஆளும் இறைவன் 

அண்டம் முழுதும் கண்ணீர் 
அறிஞர், ஆய்வர் கண்ணீர் !

சிட்னி துர்கா ஆலயத்தில் திருக்குறள் போட்டியும் சமய அறிவுப் போட்டியும்

18/03/2018


சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 04 சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகாலத்தில் எங்கள் தேசம் சந்தித்த கலவரங்களும் கண்துடைப்புகளும்!? தீயசக்திகளின் தீர்க்கதரிசனமற்ற தீவிரம் தீயில்தான் சங்கமம்!? - முருகபூபதி- அவுஸ்திரேலியா




இலங்கையில் அண்மையில்  அம்பாறையில் தொடங்கி கண்டி வரையிலும் அதனைச்சுற்றியிருக்கும் பிரதேசங்களுக்கும் பரவியிருக்கும் வன்முறைகளின் பின்னணிகளுக்கு ஏதாவது ஒரு திட்டமிட்ட செயல் அல்லது துர்ப்பாக்கியமான சம்பவம் காரணமாகியிருக்கிறது. அந்தத்துர்ப்பாக்கியமும்  திட்டமிடுதலும் தூரப்பார்வையற்ற முடிவுகளை நோக்கி மக்களை நகர்த்துகிறது.
ஒரு காலத்தில் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களையும், முஸ்லிம்களையும் புட்டும் தேங்காய்ப்பூவும் போன்று  இரண்டறக்கலந்திருக்கும் சமூகங்கள் என்றுதான் எமது இடதுசாரித்தோழர்கள் வர்ணித்தார்கள். இரண்டு இனங்களினதும் பேசும் மொழி தமிழாக இருந்ததும் அதற்கு அடிப்படை.
1915 இல் கம்பளையில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முறுகல் தோன்றி கலவரமாக வெடித்தபோது பிரிட்டிஷாரின் அரசதிகாரம்தான் இருந்தது. அதனை ஒடுக்குவதற்கு சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்த சிலருக்கு மரணதண்டனையையும் அந்த வெள்ளை அரசு நிறைவேற்றியிருக்கிறது.
சுதந்திரத்திற்குப்பின்னர் வெள்ளையர்கள், உள்ளுர் கறுப்புவெள்ளையர்களிடம் தேசத்தை கொடுத்துவிட்டு, தேசத்துக்கு அந்நியசெலாவணியை ஈட்டித்தந்த இந்திய வம்சாவளி மக்களையும் நட்டாற்றில் கைவிட்டுச்சென்றனர்.
அன்றிலிருந்து எங்கள் தேசம் காலத்துக்காலம்-  இலங்கைவந்த சீதையைப்போன்று தீக்குளிக்கிறது. இராவணன் கடத்தி வந்த சீதையை இராமன் தீக்குளிக்க வைத்தமைக்கு ஒரு காரணம் இருந்ததாக இராமாயணம் கூறுகிறது.
அதுபோன்று இலங்கை இனமுரண்பாட்டால் தீக்குளிக்கும் சந்தர்ப்பங்களில் ஏதும் ஒரு பின்னணிக்காரணம் சொல்லப்படுகிறது.

கங்காருநாட்டு காகிதம் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பது ஆண்டுகாலம் (1988 - 2018) - முருகபூபதி






திரும்பிப்பார்ப்பதும் மனிதவாழ்வில் இரண்டறக்கலந்த அனுபவம். அதனால்தான் " நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?" என்று  கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் திரும்பிப்பார்க்கும் இயல்புகொண்டிருப்பவர்கள். அவர்களின் எழுத்துலகத்திற்கும் கலையுலகத்திற்கும் ஆய்வுலகத்திற்கும்  திரும்பிப்பார்த்தல் அவசியமானது. பிரதானமானது. ஆதாரங்களைப்பெற்றுத்தருவது.
இந்தப்புலம்பெயர் தேசத்து வாழ்க்கைக்கு நான் பிரவேசித்தபோது அவ்வாறு என்னையும் திரும்பிப்பார்க்கவைத்த பால்யகால சம்பவம் நினைவுக்கு வந்தது. எனது பாட்டி, அதாவது எனது தாயாரின் தாயார். அவரது பெயர் தையலம்மா.  பாடசாலைக்குச்செல்லாதவர். கையெழுத்தும் போடத்தெரியாதவர். கைநாட்டுப்போடும் அந்த மூதாட்டி,  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பொலிஸ்சார்ஜன்டாக இருந்தவருக்கு வாழ்க்கைப்பட்டவேளையில்  பதிவுத்திருமணம் செய்யாதிருந்தமையால் தாத்தா கார்த்திகேசு இறந்த பின்னரும் அவரது ஓய்வூதியம் பெறமுடியாமல் அவதிப்பட்டவர். அவருக்கு பள்ளிப்படிப்பு இல்லையென்றாலும் பாட்டி வைத்தியத்தில் கைதேர்ந்தவர்.
எங்கள் குடும்பம் ஏழ்மையோடு போராடிய காலத்தில் (1956 இல்) பாடசாலைக்கொப்பி புத்தகம் வாங்குவதற்கும் சிரமப்பட்டவேளையில், எங்கள் பாட்டி கடலைவிற்று பெற்ற பணத்தில் எனக்கு அவற்றை வாங்கித்தந்து பாடசாலைக்கு அனுப்பியவர். அதிகாலையே எழுந்து அம்மா சுட்டுத்தரும் தோசையை வட்டிலில் சுமந்துசென்று விற்றுவந்து எங்கள் பசிபோக்கியவர்.  அவர் எனக்கு என்றைக்கும் ஆதர்சமானவர். அவரது முயற்சியினால் நான் ஆறாம் தரப்புலமைப்பரிசில் பெற்று யாழ்ப்பாணத்திற்கு படிக்கச்சென்றிருக்கின்றேன்.
அந்தப்பாட்டி இரவுவேளையில் உறங்கும்போது தனது மடியில் என்னைக்கிடத்தி சொல்லித்தந்த கதைகளே, பின்னாளில் பாட்டி சொன்ன கதைகள் என்ற தொடரை எழுதவும் அதனை நூலாக்கவும்  என்னைத்தூண்டியிருக்கிறது.
இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலப்பகுதியில்  வடக்கு - கிழக்கில் போர்மேகம் சூழ்ந்திருந்தது. அதனால் நான் தினமும் எழுதிய செய்திகள் போர் பற்றியதாகவும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியதாகவுமே இருந்தன. இதுபற்றி எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.
எந்தவொரு நாட்டிலும் நடக்கும் உள்நாட்டுப்போரில் முதலில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் (தாய்மாரும்) குழந்தைகளும்தான்! இலங்கையிலும் இதுதான் நடந்தது.
எமது தாயகத்தில் நீடித்தபோர், கணவனை இழந்த பெண்களினதும் பெற்றவர்களை இழந்த குழந்தைகளினதும் எண்ணிக்கையைத்தான் பெருக்கும் என்பதை பத்திரிகை வாழ்க்கை தெளிவுபடுத்தியிருந்தது.

இலங்கைச் செய்திகள்


இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த  இரு தரப்புக்களும் தயார் நிலையில்

உலகின் முதல் 50 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 23 ஆவது இடம்

26 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

இலங்­கைக்கு சீனா கோரிக்கை.!

ஜப்பான் சக்கரவர்த்தியுடன் ஜனாதிபதி சந்திப்பு 

ஜெனி­வாவில் இலங்கை குறித்த முத­லா­வது விவாதம்

இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ;  100 மில். அமெரிக்க டொலரை ஒதுக்கியது இந்தியா

கண்டி, அம்­பாறை வன்­மு­றை­கள் ­தொ­டர்பில் இதுவரை 230 பேர் கைது.!



இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த  இரு தரப்புக்களும் தயார் நிலையில்

16/03/2018 ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில்  நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று   வௌ்ளிக்கிழமை இலங்கை  மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம்  நடைபெறவுள்ளது. 

உலகச் செய்திகள்


ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி : டுவிட்டிய ட்ரம்ப்

பிரித்தானிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹோக்கிங் மரணம்!!!

ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் : பிரிட்டன் பிரதமர் கெடு

 4 ஆவது முறையாக ஜேர்மனியின் சான்சிலரானார் ஏஞ்சலா மெர்க்கல்

நடைப்பாதை மேம்பாலம் இடிந்து விழுந்தில் 6 பேர் பலி!!!



ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி : டுவிட்டிய ட்ரம்ப்



12/03/2018 இனி ஏவுகணை சோதனைகள் இல்லை என வடகொரியா வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கு சிவராமன் அவர்களின் "உன்னை உண்ணும் உணவு" 25/03/2018







மகளிர் அரசியலில் மாற்றமா? ஏமாற்றமா? ஜீவா சதாசிவம் - (ஆசிரியர் - சங்கமம் இதழ் - வீரகேசரி)


சர்வதேச மகளிர் தினம். 'இதுதான் நேரம்' (Time is Now) என்பது 2018ஆம் ஆண்டுக்கான மகளிர் தினதொனிப்பொருள்.  இந்தத் தருணம் இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்றதனடிப்படையில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 25% ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டதுஇந்த அறிவிப்பு மகளிர் அரசியலில் மாற்றமா?ஏமாற்றமாஎன்பது பற்றி பேசவேண்டியுள்ளது.

 இலங்கை உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை பெற்றுக்கொடுத்த ஜனநாயக நாடு என பெயர் பெற்றது.அவர் சிறிமாவோ பண்டாரநாயக்கஅதேபோல உலகிலேயே முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க பெண்ஜனாதிபதியையும் பெற்றுத்தந்த நாடு இலங்கையாகும்அவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கஅந்தஇருவருமே ஒரு குடும்ப உறுப்பினர்கள் என்பதும் எஸ்.டபிள்யூஆர்.டிபண்டாரநாயக்க எனும் அரசியல்ஆளுமையின் உதவியோடு அரசியல் களம் கண்டவர்கள்ஆனாலும்இந்த இருவரும் ஆளுமைமிக்க அரசியல்தலைவிகள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

இவ்வாறு அரசியல் ரீதியாக பெண்களின் பெயர்கள் முக்கியத்துவம் பெற்ற நாடாக இருந்தபோதும் ஆண்களின்அரசியல் ஆளுமைகளினால் உள்ளீர்க்கப்பட்டே பெண்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டு வந்த ஒருகலாசாரமே இருந்ததுசிறிமாசந்திரிக்கா போல் கணவன் அல்லது தந்தை அல்லது சகோதரன் என உறவு முறைஇழப்புகளின் பின்பதாகவே பல பெண்கள் அரசியலுக்குள் வந்தார்கள்காமினி திஸாநாயக்க மறைந்ததும் அவரதுமனைவி ஸ்ரீமா திஸாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வேட்பாளராகவே நிறுத்தப்பட்டமை இதற்குமோசமான உதாரணம்.


தமிழ் சினிமா


நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்

நாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார்.
பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் ஒரு வழிக்கு வருவான் என்று ஆரியின் அம்மா பெண் தேடுகிறார். அதில் ஆஷ்னா ஷவேரியை அவருக்கு பேசுகின்றனர். நல்ல பணக்காரனாக, ஐ.டியில் வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஆஷ்னா, ஆரியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.
பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் ஆரியின் நல்ல குணம் அறிந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஆஷ்னாவின் நண்பர், அதுல்யாவை காதலிப்பதாக சொல்லி பெண் கேட்க, சம்மதம் தெரிவிக்கும் ஆரி, அவரை குடும்பத்துடன் வந்து பெண் கேட்கும்படி அழைக்கிறார்.
பின்னர் அதுல்யாவுக்கும், அவளது காதலருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. பின்னர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பதற்காக அதுல்யா பெயரில் இருக்கும் நாகேஷ் திரையரங்கத்தை விற்க ஆரி முடிவு செய்கிறார்.
அதற்காக ஆரி மற்றும் காளி வெங்கட் அந்த திரையரங்கிற்கு செல்கின்றனர். அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. அந்த திரையரங்கில் பேய் இருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதேநேரத்தில் ஆரியின் கனவில் வரும் நபர்கள், நிஜத்தில் ஒவ்வொருவராக இறக்கின்றனர்.
இவ்வாறாக குழப்பங்களுக்கு இடையே கடைசியில் ஆரி, நாகேஷ் திரையரங்கத்தை விற்றாரா? அதுல்யா திருமணத்தை நடத்தினாரா? ஆஷ்னா சவேரியுடன் இணைந்தாரா? அந்த கனவில் நடந்தது சம்பவத்திற்கும், என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆரி எந்தவித அலட்டலுமின்றி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். குடும்பம், தொழில் என முதல் பாதியில் வீட்டு புரோக்கராகவும், அடுத்த பாதியில் நாகேஷ் திரையரங்கத்தில் அமானுஷ்ய காட்சிகளுக்கு நடுவே ரசிக்க வைத்திருக்கிறார். ஆஷ்னா ஷவேரி கொடுத்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார். அதுல்யா ரவி மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். மாசூம் சங்கர் கவர்ச்சியுடன் வந்து கலகலப்பூட்டுகிறார். பேயாக வந்தும் அலட்டலின்றி தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
காளி வெங்கட் காமெடியில் முத்திரை பதிக்க முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பலன் கிடைத்துள்ளது என்று சொல்லலாம். சித்ரா லட்சுமணன், மனோபாலா, அணில் முரளி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.
முதல் பாதியில் குடும்பம், காதல், காமெடி என மசாலாவாகவும், அடுத்த பாதியில் பேய், பயம் எனவும் ரசிக்கும்படியாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஐசாக். முதல் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும், இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் தொய்வு இருப்பது போன்று தோன்றுகிறது. அதேபோல் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி வித்தியாசமான, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பயம் வரும் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. இ.ஜே.நுசாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `நாகேஷ் திரையரங்கம்’ திரையரங்கில் பார்க்கலாம்.
நன்றி tamilcinema.news