மரண அறிவித்தல்

.
                                                                    மரண அறிவித்தல்

மறைவு:  05-10-2013

                                                     திரு. செல்லையா நடராசா
                                       வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர்.


ஆனைப்பந்தி, கரவெட்டியை பிறப்பிடமாகவும் ரத்தொழுகம தேசிய வீடமைப்புத்திட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும், வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியரும், சுடரொளியின் முன்னாள் செய்தி ஆலோசகருமான செல்லையா நடராசா அவர்கள் 05-10-2013 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற மயில்வாகனம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், ராஜேஸ்வரியின் அன்பு கணவரும், ராஜ்மோகன் (கனடா), வதனா (கனடா), மீனா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் திலகவதி (கனடா), கமலநாதன் (கனடா), சிவதீர்த்தன் (ஜேர்மனி) அன்பு மாமனாரும், லாதாஞ்ஞினி, பரணி, பிருந்தாஞ்ஞினி, துஷ்யந்தனி,பிரஷோதயா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள், 8B 11R  தேசிய வீடடைப்புத்திட்டம், ரத்தொழுகமவிலுள்ள அன்னாரின் இல்லத்தில் 09-10-2013 புதன்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்று லியனகேமுல்லயிலுள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவத்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
8B 11R
தேசியவீடமைப்புத்திட்டம் ரத்தொழுகம
தொ. எண்: 0112291648,  0777110745,  0777963671

ஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீவெங்கடேசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்றம் 05/10/2013

படப்பிடிப்பு ஞானம்நான்தான்… ஆறாம் திணை! -

.
முல்லையும் தென்றலும் கூடி விளையாடும் உங்கள் வீட்டு முற்றத்திற்கு புதுக்கோலம் போடவந்த மகவு நான். என் அன்னையின் மார்சுரக்கும் திசுக்களில் பாய்ந்த இலத்திரன்களையும், என் தந்தையிடம் நான் பெற்ற கணித அறிவியலையும், ஊடகமாக்கி, எங்கும் என்றும் தமிழர் வாழ்வியலை வியாவிக்கச் செய்ய பிறந்த குழந்தை நான். எனக்கு இல்லை வேலி.. என்னை அடைக்க எதுவும் இங்கு இல்லை.. என்ன.. நான் யார் என்றா சிந்திக்கின்றீர்கள்….
நான்தான்… ஆறாம் திணை!
பூச்சியமும் ஒன்றும் கொண்ட காதலில்
மலர்ந்த முதற்குழந்தை நான்
அணுக்களில் ஏற்றங்களாக
எடுத்து வைத்தேன் முதல் அடி
இலத்திரன் ஓட்டமாக நடைபயின்றேன்
கணிப்பொறிகளில் பருவங்கொண்டு
கணணி மொழிகளாக நாளும் மிளிர்ந்தேன்

விரிந்த கணிதம் என்றும் என் தாய்வீடு
மிளிரும் மின்வெளிகள்
நான் மையல் கொள்ளும் புகுந்தவீடு
மீகணணிகள் நான்
துயில் கொள்ளும் பஞ்சணைகள்
அண்டம் இன்று என் அரியாசனம்
மாயவெளிகளிலும் நுழைந்தேன்
மலர்த்தோட்டம் அங்கும் வைத்தேன்
மலர்களுக்குள் மகரந்தமானேன் என்
மகரந்தத்திற்குள்ளும் மலர்களை வைத்தேன்
மல்லிகையை முல்லையாக்கினேன்
முல்லையை மல்லிகையாகவும் மாற்றினேன்
இரகசிய காப்புக்கள் வகுத்தேன்
தரவு(ஆ)ழிகளை எனக்குள் அடக்கினேன்
ஆழிகளை பிரித்து தொகுத்து
பயனாய் தடாகங்கள் வைத்தேன்
காற்றும் புகாவிடினும் நொடியில் புகுந்தேன்
காலங்கள் கடந்தேன் கற்பனைகளை
கண் முன் காட்டினேன்

சிட்னி முருகன் ஆலய நவராத்திரி விழா 1ம் நாள்


Sri Venkateswara Temple Helensburg Brahmotsavam
முதல் பிரதமர் நேருவுக்கு காந்தி கொடு்த்த பரிசு என்ன?

.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  பிறப்பு அக்டோபர் 2, 1869


1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந்தேதி நாடு விடுதலைப் பெற்ற அந்த பொன்னான பொழு தில் உற்சாக பெருவெள்ளம் தேசமெங்கும் பெருக்கெடுத்து ஓடியது. சுதந்திரக் காற்றை சுவாசித்த மக்கள் ஆடிப் பாடிக் கொண்டாடி னார்கள். ஆனால் காந்தியின் மனம் மகிழ்ச்சி யடையவில்லை. மாறாக உழுத நிலம் போல அந்த ஆத்மாவின் இதயம் அழுது கொண்டி ருந்தது. விடுதலை பெற்ற தேசத்திற்கு நீங் கள் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்ட தற்கு “ஒன்றுமில்லை” என்றே அவர் பதி லளித்தார்.
காரணம் பிரிக்கப்பட்ட நாட்டின் எல்லைப் பகுதியில் மத வன்செயல்களின் காரணமாக ரத்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அவரை அப்போது ஒரு வெளிநாட்டுப் பத் திரிகையாளர் சந்திக்க வந்தார்.

அப்போது காந்தி மவுன விரதம் இருந்ததால் அவருடன் பேசவில்லை. பிரதமராக பொறுப்பேற்கும் நேருவுக்கு உங்களது பரிசு என்ன என்று கேட் டதற்கு, அவ்வளவு பெரிய நாட்டின் பிரதம ருக்கு பரிசளிக்கும் அளவுக்கு இந்த எளியவ னிடம் எதுவும் இல்லை என்று எழுதிக் காட்டி னார். ஏதாவது தரக்கூடாதா என்று கேட்ட தற்கு, நடந்துகொண்டிருந்த காந்தி மரத்திலி ருந்து உதிர்ந்து விழுந்துகிடந்த உலர்ந்த பூ ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார். இப்போதைக்கு எனக்குக் கிடைத்தது இதுதான் என்று எழுதிக்காட்டினார் காந்தி. ஒரு துறவி போல நடந்து கொண்ட காந்தியின் செயல் கண்டு மனமுடைந்து அழுதார் அந்த பத்திரிகையாளர். ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்த பூ மீது விழுந்தது. அப்போது காந்தி, நன்றி நண்பரே, நான் ஒரு உயிரில்லாத பூவைத்தான் உங்களிடம் தந்தேன். உங்களது தூய்மையான கண்ணீர் அதற்கு உயிர் தந்துவிட்டது என்று எழுதிக்காட்டினார்.

Nantri செல்வன்


நவராத்திரி விழா 09.10.2013

.

இலங்கைச் செய்திகள்

.
வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்பு

நியமனக் கடிதத்தை ஆளுநரிடமிருந்து பெற்றார் விக்கினேஸ்வரன்

ஓமந்தை– பலாலி ஒரு கி. மீ. ரயில் பாதைக்கு 270 மி.ரூபா : மாத்தறை– பெலி­யத்தைக்கு 1412 மி. ரூபா செலவென அதிர்ச்சி

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
இலங்கை தொடர்பான நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு


வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்புடமாகாண சபை முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ் மொழியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள்.
இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா, அஸ்வர் ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தன், அ.விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ஐ.தே.க. பிரமுகர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், பிரபா கணேசன் உட்பட அரசியல் பிரமுகர்கள், மற்றும் விக்னேஸ்வரனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


முருகன் ஆலய நவராத்திரி பூசை

.


துர்காதேவி ஆலயத்தில் நவராத்திரி விழா

.

திருப்பிப்பார்க்கின்றேன் - 10 -முருகபூபதி

.

கலை  இலக்கியம்  இதழியல்  சினிமா  வானொலி  ஊடகத்தில்
‘அதிசயங்கள்’   நிகழ்த்திய   பல்கலைவேந்தன்   சில்லையூர்  செல்வராசன்


தேனாகப்    பொன்நிலவு     திகழ்கின்ற     ஓரிரவில்
 தெய்வத்துள்      தெய்வம்ää    என் தாயானாள்     எம் மனைமுற்ற        மணல்திருத்தி      அன்பொடு   தன் அருகணைத் தென் விரலைப்பற்றி ‘ஆனா’ என்றோரெழுத்தை
அழித்தழித்தம்   மணல்   மீது   அன்றெழுதப்    பயிற்றää
 இன்றோ   பேனாதனைப்    பிடித்தெழுதும்    உரையெழுத்தும்  கவியெழுத்தும்
தலையெழுத்தாய்ப்    பிழைப்பாய்க்    கொண்டென்
நானான    போதும்    தம்நாளாந்தச்    சோற்றுக்கும்    ஆடைக்கும்
நலிவோர்க்காய்ப்    பொருத   என்   வாளானாளே
தமிழ்   என்றிங்கன்ப   ரெல்லாம்    போற்றுகின்ற
ஆச்சிää   உனை    முதலில்    அடிபணிந்தேன்   போற்றி

பல்கலைவேந்தன்    சில்லையூர்   செல்வராசன்ää  மேடையில்   தோன்றினால்  முதலில்  இந்தப்பாடலை  ராகத்துடன்  பாடியபின்னரே  தமது  பேச்சை  தொடங்குவார்.  அவர்  கவியரங்குகளுக்கு   தலைமையேற்றாலும்   தப்பாமல்   பாடுவார்   இக்கவிதையை.
கணீரென்ற  கம்பீரமான  குரல்  அவருக்குக்  கிடைத்த  வரம்.
அடிக்கடி   உறக்கத்தில்   கனவு   காணும்  எனக்கு 1980 களில்  ஒரு  நாள் வந்த  கனவில்  நண்பர்  சில்லையூர்  இறந்துவிட்டார்.  திடுக்கிட்டு  எழுந்து  நேரத்தைப்பார்க்கின்றேன்.  அதிகாலை   3 மணி  கடந்துவிட்டது.  அதன்பிறகு  உறக்கம்  நழுவிப்போய்விட்டது.
காலை  எழுந்து  வேலைக்குப்புறப்படும்பொழுது  அம்மாவிடம்   நான்  கண்ட  கனவு  பற்றிச்சொல்லிக்கவலைப்பட்டேன்.  எனது  அம்மாவுக்கு  சில்லையூரை  நேரில்  தெரியாது. ஆனால்  அவர்களுக்கு  சில்லையூரின்  குரல்  நல்ல  பரிச்சியம்.

கம்பன் கழக மாருதி விருது 26, 27 OCT

.

எதிர்பாராதது - அ.முத்துலிங்கம்

.            
வாழ்க்கை என்பது எதிர்பாராத கணங்களினால் நிறைந்தது. உலகத்திலேயே ஆகச் சிறிய சிறுகதையை எழுதியவர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே. அந்தச் சின்னஞ்சிறு கதை உச்சத்தை எட்டியது அதனுடைய எதிர்பாராத முடிவினால். ஆறே ஆறு வார்த்தைகள். ‘விற்பனைக்கு. குழந்தையின் சப்பாத்து. புத்தம் புதிது. அணியப்படவேயில்லை.’

சிவாஜியும் பத்மினியும் நடித்த ’எதிர்பாராதது’ திரைப்படம் 1950 களில் வெளிவந்தது. படத்திலே சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா இரண்டாம்தாரமாக பத்மினியை மணந்து கொள்கிறார். சிவாஜி நாகையாவின் மகன் என்பதால் இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை முறையாகி விடுகிறார். நாகையா இறந்துபோக ஒருநாள் சிவாஜி பத்மினியை தொடுகிறார். பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி அவர் மூன்று நாட்களாக படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியை பார்க்க பத்மினி அவர் வீட்டுக்கு போய் சமாதானம் செய்து அவருக்கு  புத்தம்புது ஃபியட் கார் ஒன்றை பரிசாகக் கொடுக்கிறார். அதுதான் சிவாஜியுடைய முதல் கார். எதிர்பாராத அடி; எதிர்பாராத பரிசு. இந்தச் சம்பவம் நான் பத்திரிகைகளில் படித்தது அல்ல. பத்மினியே என்னிடம் சொன்னது.

வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் ‘நடா’ நடராஜாவுக்கு அஞ்சலி

.
இலங்கையில்   வடமராட்சியில்    பிறந்து   1956  ஆம்  ஆண்டு  முதல்   வீரகேசரி   பத்திரிகையில்    பணியாற்றி   சில   வருடங்களுக்கு   முன்னர்    இளைப்பாறிய  நடராஜா   கடந்த   5 ஆம்  திகதி  சனிக்கிழமை   இரவு  கொழும்பில்  தனியார்  மருத்துவமனையில்   காலமானார்.
கரவெட்டி   விக்னேஸ்வரா   கல்லூரியின்   முன்னாள்  மாணவரான  நடராஜா   தமது   கல்வியைத்தொடர்ந்து   கொழும்பில்  அரசகரும  மொழித்திணைக்களத்தில்   பணியாற்றினார்.   அதன்பிறகுää   வீரகேசரி   பத்திரிகையின்   விளம்பர  இலாகாவில்  பணியிலிருந்துää   வீரகேசரி   செய்திப்பிரிவுக்கு  வந்தார்.   அங்கு  துணை  ஆசிரியராகவும்   சிரேஷ்ட   பதில்  செய்தி  ஆசிரியராகவும்  செய்தி  ஆசிரியராகவும்   பணியாற்றி   பிரதம  ஆசிரியராக  பதவி  உயர்வுபெற்று   பலவருடங்கள்    சேவையாற்றினார்.
வீரகேசரியில்   சுமார்   ஐம்;பது  ஆண்டுகளுக்குமேல்   பணியிலிருந்து   ஓய்வுபெற்ற நடராஜாää    கடந்த   சிலவாரங்களாக   சுகவீனமுற்றிருந்தார்.   பல  தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு   ஊடகத்துறையில்   சிறந்த  வழிகாட்டியாகவிருந்த  நடராஜாவைப்பற்றிய    விரிவான   கட்டுரையை    சமீபத்தில்  அவுஸ்திரேலியா  தமிழ்முரசு   இணைய   இதழில்  எழுதியிருந்தேன்.  குறிப்பிட்ட   கட்டுரையை  கனடாவில்   பதிவுகள்   இணைய  இதழ்ää    கனடா  செந்தாமரை   இலங்கை   தினக்குரல்  ஆகிய  பத்திரிகைகள்   மீள்பிரசுரம்   செய்திருந்தமை   குறிப்பிடத்தக்கது.
நடராஜாவின்   மறைவுச்செய்தியை   கொழும்பு   மாநகர  சபை  உறுப்பினரும்  அகில  இலங்கை   கண்ணதாசன்  மன்றத்தின்  தலைவருமான  கவிஞர்  வேலணை  வேணியன்   தொலைபேசி   ஊடாகத்     தெரிவித்தார்.
நடராஜாவின்   துணைவியாருடன்   தொலைபேசியில்   தொடர்புகொண்டு   ஆழ்ந்த  அனுதாபங்களைத்தெரிவித்தேன்.
மூத்த   பத்திரிகையாளரான   நடராஜாவின்   மறைவு  ஈடுசெய்யப்படவேண்டிய  இழப்பாகும்.
முருகபூபதி

எளிமையான சமோசா ரெசிபிக்கள்!!!

.
மாலையில் நல்ல மொறுமொறுப்பாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது அனைவருக்கும் நினைவில் வருவது பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவை தான். பெரும்பாலும் இவற்றில் சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த சமோசாக்களை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதுமட்டுமின்றி, சமோசாக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமான சுவைகளைக் கொண்டவை. இப்போது அவற்றில் சில எளிமையான சமோசாக்களின் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, வீட்டில் செய்து மகிழுங்கள்.
வெஜிடேபிள் சமோசா குழந்தைகள் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டால், அவர்களுக்கு 2-3 காய்கறிகளைக் கொண்டு சமோசா செய்து கொடுக்கலாம். இதனால் அந்த சமோசா சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.


ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring - ரமணன்

.

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று A Gun and a Ring ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.

சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது.

நம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி.

அந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது.

நீங்காத நினைவுகள் – 17 -ஜோதிர்லதா கிரிஜா

.

C.N.Annathurai - Murasu
செப்டம்பர் மாதத்தில் நிறைய எண்ணிக்கையில் பல பெரிய மனிதர்களும் புகழ் பெற்றோரும் பிறந்துள்ளனர். ‘அதென்ன, பெரிய மனிதர்கள், புகழ் பெற்றோர் என்று இரண்டு வகைகள்?’ என்கிறீர்களா? அது அப்படித்தான்! ‘புகழ் பெற்றோர் எல்லாருமே உண்மையில் பெரியமனிர்கள் அல்லர்; பெரியமனிதர் யாவருமே புகழ் பெற்றோர் அல்லர்’ – ‘All the popular men are not really great and all the great men do not become popular’ எனும் பொன்மொழியைப் படித்ததன் விளைவு!
செப்டம்பரில் பிறந்தவர்களில் அறிஞர் அண்ணா என்றழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரை அவர்கள், பேராசிரியர் கல்கி அவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை பேசப் போகிறது.
பதவியில் இருக்க முடிந்த வரையில், வாயையும் எழுதுகோலையும் மூடிக் கொண்டிருந்து விட்டு, இனித் தமது பதவிக்காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், போகிற போக்கில், இந்திய அரசு இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருந்த விதத்தை – திறமையற்ற நிர்வாகம், முறையற்ற செயலாட்சி (Mismanagement and maladministration) என்று – விமர்சித்துவிட்டுப் போனார். தாம் பதவியில் இருந்த நாள் வரையில் இதை ஏன் அவர் சொல்லவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரிய தத்துவ ஞானி என்றும், பேராசிரியர் என்றும் புகழப்பெற்ற இவருக்கு சோவியத் ஒன்றியத் தலைவர் ஜோசஃப் ஸ்டாலின் அவர்களின் பேட்டி அவர் தேடாமலே கிடைத்தது என்று சொல்லுவார்கள்.

திருவள்ளுவரை தெய்வமாக கோவில்கட்டி வணங்கும் கேரள மாநில மக்கள்

.

                                                                                                  ஜே.எஸ்.செல்வராஜ்


இரண்டடி பாடல் மூலம் உலகிற்கு பல்வேறு அரிய கருத்துக்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் வாரி வழங்கியவர் தெய்வப்புலவர் என்றழைக்கப்படும் திருவள்ளுவர் ஆவார். தமிழராகி திருவள்ளுவரை  தெய்வமாக வணங்கி அவரது குறள் வழிவாழ்பவர்கள் தமிழகத்தில் மிகச்சிலரே உள்ளனர்.கற்புக்கரசி கண்ணகிக்கு நமது அண்டைய மாநிலமான கேரளத்தில் கோவில் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருர்பீர்கள். ஆனால் கேரளாவில் தமிழராகிய திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் மதத்தினர் உள்ளனர் என்பதும் திருவள்ளுவருக்கு கோயில்கட்டி வணங்கி  வருகிறார்கள் என்கிற ஆச்சரியமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
                   கேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வழிபாடுபவர்கள் ''சனாதான'' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப்படுகின்றனர்.
திருவள்ளுவரை கடவுளாக கொண்டுள்ள இந்த மதம் ''சமாதானமதம்'' என்றும் அழைக்கப்படுகிறது.இவர்கள் திருவள்ளுவருக்கு கேரளமாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இக்கோயில்களில் திருவள்ளுவருக்கு தினம் தோறும் முறைப்படி பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர்தட்டம்பட்டி  என்ற ஊரில் உள்ள கோவிலாகும். மற்ற அனைத்து கோவில்களில்களிலும் இந்த மதத்தினர் திருவள்ளுவரை  அவர்களின் முறைப்படி வணங்கி வழிபட்டு வருகின்றனர்.   

உலகச் செய்திகள்


நைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி

அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவு

அமெ­ரிக்கா கடனில் மூழ்கும் அபாயம்: ஒபாமா எச்­ச­ரிக்கை


--------------------------------------------------------------------------------------------------------
நைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி

30/09/2013   நைஜீரியாவில் கல்லூரியொன்றுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் வரை உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோப் மாகாணத்தில் குஜ்பா நகரில் விவசாயக்  கல்லூரியொன்று அமைந்துள்ளது.
அங்குள்ள விடுதியில் நள்ளிரவில் மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது போகோ ஹராம் தீவிரவாதிகள் கும்பலாக திடீரென்று புகுந்தனர்.
ஒவ்வொரு அறையாக சென்று சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய மாணவர்களையும் இறக்கமின்றி சுட்டு தள்ளினர்.
வகுப்பறைகளுக்கும் தீ வைத்தனர். இதில் 50 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் இராணுவத்தினர் சென்று பலியான 26 மாணவர்களின் உடல்களை மீட்டனர்.

தமிழ் சினிமாதங்கமீன்கள்

தன் தங்க மகளின் ஆசைகளை நிறைவேற்ற அவமானப்பட்டு போராடும் ஒரு தந்தையின் கதை.
கற்றது தமிழ் படத்திற்குப் பிறகு ராம் இயக்கியிருக்கும் படம் தங்க மீன்கள்.
ராமின் ஒரே பெண் குழந்தை செல்லம்மாள். வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி, பக்குவம் இல்லாத குழந்தை.
மனிதர்கள் இறந்த பின்பு தங்க மீன்கள் ஆகிவிடுவார்கள் என்ற கதையைக்கூட அப்படியே நம்புபவள்.
செல்லம்மாவோடு எந்நேரமும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த ஊரில் வருமானமே வராத பாத்திரம் செய்யும் பட்டறையில் வேலை செய்கிறார் ராம்.
சம்பாதிக்காமல் தனக்கு பாரமாக இருக்கும் ராமை அவமானபடுத்தி உதாசினப்படுத்தி கொண்டே இருக்கிறார் நல்லாசிரியர் விருது பெற்ற ராமின் தந்தை ‘பூ’ ராம்.
அவுஸ்திரேலியாவில் இருக்கும் ராமின் சகோதரியின் சிபாரிசால் அந்த ஊரின் மிகப்பெரிய தனியார் பள்ளியில் செல்லம்மாவை படிக்க வைக்கிறார் ராம்.
அவளின் மந்தமான படிப்பாலும், பீஸ் கட்ட முடியாமல் போனதாலும் செல்லம்மாள் ஆசிரியையால் கடுமையாக தண்டிக்கப்படுகிறாள்.
இதனால் ஆசிரியைக்கும் ராமிற்கும் வாக்குவாதம் வர, பள்ளி நிர்வாகத்தால் கடுமையாக அவமானபடுத்தபடுகிறார் ராம்.
பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக ராமின் தந்தை ராமை அடித்து விடுகிறார். இதனால் தனிக்குடித்தனம் போக மனைவியை அழைக்க அவரது மனைவி தயங்குகிறார்.
இதனால் கோபத்தில் யாரிடமும் சொல்லாமல் கேரளா போய் விடுகிறார்.
மகளுக்கு இருக்கும் ஒரே ஆசையான ஹட்ச் விளம்பரத்தில் வரும் நாய் குட்டியை வாங்கி பிறந்த நாள் பரிசாக கொண்டு போக நினைக்கிறார்.
ஆனால் தகுதிக்கு மீறி அவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாததால் கஷ்டப்படுகிறார்.
கேரளாவின் ஒரு பழமையான பாரம்பரிய இசை கருவியை வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.25,000 பணம் கிடைக்கும் என்று தெரியவர அதை தேட தொடங்குகிறார்.
இன்னொரு பக்கம் பிறந்த நாள் பரிசாக அப்பா நாய் குட்டி வாங்கி வரவில்லை என்றால் தங்கமீன்கள் ஆகிவிடவேண்டும் என்று செல்லம்மா முடிவெடுக்கிறாள்.
கேரளாவின் மலையுச்சியில் பழங்குடி மனிதரிடம் இருக்கும் இசை கருவியை வாங்க போகும் ராமின் பயணமும் தங்க மீன்களாக மாற தற்கொலையின் விளிம்பில் நிற்கும் செல்லம்மாவின் பயணமும் ஓரிடத்தில் இணைகிறது.
அதன் பின்பான முடிவை அழகான கவிதையாக சொல்லியிருக்கிறார்.
தனது முதல் படத்தைப்போலவே காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்.
இயக்குனர் ராம் அப்பாவாக, கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு ராமைத்தவிர வேறு யாரும் ஒத்துவந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளார்.
ஆசிரியர்களுடன் தனது மகளுக்காக பரிந்து பேசுவது, தனது மகள் விலை உயர்ந்த நாய்க்குட்டியை கேட்டாலும், தனது மகள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்வது என ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ராமின் மகளாக நடித்திருக்கும் சிறுமி சாதனா, ராமிற்கு இணையான கதாபாத்திரம் மட்டும் அல்ல, நடிப்பிலும் ராமிற்கு இணையாகவே நடித்துள்ளார்.
சில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடித்திருந்தாலும், அது அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே உள்ளது.
எந்த விடயமாக இருந்தாலும், வெகுளியாக கேள்வி கேட்பது என்று சின்ன சின்ன எக்ஷ்பிரஷன்கள் மூலம் நடிப்பில் சிக்சர் அடித்துள்ளார்.
ராமின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை ஷெல்லி கிஷோர், மகேந்திரன், பாலுமகேந்திரன் படங்களில் வரும் நாயகியைப் போல இருக்கிறார்.
நடிப்பிலும் மிளிர்கிறார். நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து அவருக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராமின் அப்பாவாக வரும் பூ ராம், நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர் கதாபாத்திரம் இவருடையது.
கோபத்தில் பளார் பளார் என ராமின் கன்னத்தில் அறைந்துவிட்டு ‘சீ போடா’ என்று சொல்லுமிடத்திலும் சரி, தனது மகன் ரொம்ப நல்லவன், அவன் கொஞ்சம் கெட்டுப்போய் தான் வரட்டுமே என்று தனது மகனின் நிலையை நினைத்து வருந்தும் இடத்திலும் சரி, ராமின் வேதனைகளை தன்னில் பிரதிபலித்திருக்கிறார் பூ ராம்.
இசை யுவன் ஷங்கர் ராஜா, பெரிய இடைவெளிக்கு அப்புறம் அவருடைய பாடல் கேட்க பிடிக்கிறது.
பின்னணி இசையில் நிறைய இடங்களில் அப்பாவின் ஞானம். சில இசை கண்ணில் பொங்கி நிற்கும் கண்ணீரை கிழே விழ வைத்து விடுகிறது.
அர்பிந்துசாரா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் திறமையான ஒளிப்பதிவாளர்.
சில காட்சிகள் உலக சினிமா அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக மனைவியோடு இரவில் சைக்கிளில் பயணம் செய்து ரயில்வே பாலத்தில் இருந்து பேசும் காட்சி.
செல்லம்மா இரவில் ஊஞ்சல் ஆடும் காட்சி கேரளாவின் பசுமை மலை. இரவில் தெரியும் கொச்சி ஹார்பர், ராம் தங்கியிருக்கும் அறையை படம் பிடித்த விதம் கதையோடு சேர்ந்து பயணப்பட்டிருக்கிறார்.
தனது மகளிடம் இருக்கும் குறைகளை கூட நிறையாக எண்ணி, தனது மகளுக்காக ஒவ்வொரு இடத்திலும் போராடும் ராம், ஒட்டு மொத்த அப்பாக்களுக்கும் இந்த படத்தை பாடமாக்கியிருக்கிறார்.
ஆண்டுகள் பல ஆனாலும், தரமான திரைப்படத்தையே இயக்குவேன் என்ற ராமின் பிடிவாதத்திற்கும், சினிமா மீது உள்ள பார்வைக்காகாகவும் அவரை முதலில் பாராட்ட வேண்டும்.
மொத்தத்தில் தங்கமீன்கள் ஜொலிக்கும் வைரமீன்கள்.
நடிப்பு: ராம், பேபி சாதனா, பூ ராம், ஷெல்லி கிஷோர், ரோகிணி
ஒளிப்பதிவு: அர்பிந்து சாரா
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: போட்டான் கதாஸ்
எழுத்து - இயக்கம்: ராம்
நன்றி விடுப்பு