மரண அறிவித்தல்

.
                                    பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் 
வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி-அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்ட, முன்னை நாள் கொழும்பு, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்கள் வியாழக்கிழமை, 19.09.2019 அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார் காலம்சென்ற பொன்னையா உடையார், சோதிரட்ணம் அகியோரின் அன்பு மகனும், தனபாலதேவியின் அன்புக் கணவரும், பூபாலனின் அன்புத் தந்தையும்

காலஞ்சென்ற செல்வரட்ணம், சரஸ்வதி, காலஞ்சென்ற கதிரவேலு, கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வியாழக்கிழமை, 26/9/2019, 1.30 மணிக்கு South Chappell, Rockwood crematorium இல் வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இறுதிக் கிரியைகள் நடைபெற்று, 4.30மணிக்கு அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

பேராசிரியர் திரு.பொன். பூலோகசிங்கம் இயற்கை எய்தினார்.

.

சான்றோன்' பேராசிரியர் திரு.பொன். பூலோகசிங்கம் எனும் தமிழ்க் களஞ்சியம் (சிட்னி) வியாழக்கிழமை  மாலை (19.09.19) இயற்கை எய்தினார். தமிழ்முரசுஅவுஸ்ரேலியா . அவர்தம் குடும்பத்தாரிற்கு ஆழ்ந்த இரங்கல்களைச் சமர்ப்பிக்கின்றது.

சிட்னியில் இளங்கோ அடிகளிற்கு சிலை திறப்புவிழா 27/09/2019


சிலப்பதிகாரம் உலக மக்கள் அனைவருக்கும் குடிமக்கள் காப்பியமாக விளங்கும் காப்பியமாக அமைந்துள்ளது. சமய நல்லிணக்கத்தைப் போற்றவும் நல்லறத்தை வலியுறுத்தவும் தமிழும் தமிழினமும் உலகப் புகழ் பெறக் காரணமான சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இயைந்த காப்பியமாகின்றது. தமிழக்துத் தமிழர்களை மட்டுமல்லாது உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்த இளங்கோ அடிகளிற்கு முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாட்டில் 6 அடி உயர திருஉருவச் சிலை திறப்புவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னியில் தமிழர் மண்டபத்திற்கு முன்பாக மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியல் கழகம் சென்னை தலைவர் நாவுக்கரசி பா. வளர்மதி அவர்களால் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார்கள்

தமிழ் வளர்ச்சித்துறை சென்னை இயக்குநர் முனைவர் கோ விசயராகவன் அவர்கள் மாநாட்டை தலைமை ஏற்று இளங்கோவடிகள் சிலையைத் திறந்து வைப்பார்கள்.

சென்னை அம்மா தமிழ்பீடம் தலைவர் சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் அவர்கள் மாநாட்டில் நிறைவுப் பேருரையை ஆற்றுவார்கள்.


மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இயக்குநர் (ஒய்வு) முனைவர் கா மு சேகர் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நோக்க உரை ஆற்றுவார்கள்.


உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


போகவிட்டுப் புறஞ்சொல்லி திரியுதொரு கூட்டம்
பொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம்

வாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம்
வையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம்
தாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம்
தள்ளாடும் முதுமைதனை தவிர்க்குமொரு கூட்டம்
நீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம்
நீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கே கூட்டம் !

கடவுளில்லை என்றுரைத்து கட்சிகூட்டும் கூட்டம்
கடமை செய்வார் கழுத்தறுக்க காத்திருக்கும் கூட்டம்
தனியுடமை என்றுரைத்து தான்பிடுங்கும் கூட்டம்
சகலதுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம்
தத்துவத்தை சமயத்தை சாடிநிற்கும் கூட்டம்
சன்மார்க்க நெறிமுறையை தகர்த்துநிற்கும் கூட்டம்  
உத்தமர்கள் போல்நடித்து உருக்காட்டும் கூட்டம்
உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் !

முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு 2019


சிலப்பதிகாரம் தமிழர் இலக்கியப் படைப்புக்களிலே ஒரு முக்கிய இடத்தைப் பெற்ற அற்புதக் காவியமாகும்.
இதனால் தான் பண்டைத் தமிழர் அதனை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக வைத்துப் போற்றி வந்தார்கள்.
இது தமிழர் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் காப்பியமாக அமைந்துள்ளது.  இராமாயணம், பாரதம் போன்றின்றித் தமிழர்களையே கதாபாத்திரங்களாகக் கொண்டது.  சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு ஆகிய மூன்று தமிழ் நாடுகளிலும் நடக்கும் கதையாக அமைந்தது.
இந்தக் காப்பியத்தின் சிறப்புக்கள் மேலும் நீளும். 
இவற்றையெல்லாம் புலம்பெயர் தமிழருக்கு நினைவு படுத்தவும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவும் இந்த மாநாட்டை சிட்னியின் தமிழ் இலக்கியக் கலை மன்றத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.  இந்த மாநாடு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது.  நிகழ்ச்சிகள் சனிக்கிழமை 28 ஆம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் திகதியும் நடைபெற இருக்கின்றது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து வந்து கலந்து கொள்கின்றார்கள்.
சிலம்பைப் படைத்த இளங்கோவடிகளுக்கு ஒரு சிலையும் எதிர்வரும் 27ஆம் திகதி நிறுவப்பட இருக்கின்றது.
நிகழ்ச்சியிலே சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் கண்டு தமிழறிஞர்கள் பேச இருக்கின்றார்கள்.  இது தவிர, வில்லுப்பாட்டு, நாட்டிய நாடகம், கவியரங்கம் என்று பல்வேறு சிலம்பை ஒட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.
சுமார் 700 பக்கங்களிலே மாநாட்டு மலரும் வெளியிடப்பட இருக்கின்றது.
அவுத்திரேலியா வாழ் தமிழர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மாநாட்டில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியக் கலை மன்றத்தின் தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவிஞர் த. நந்திவர்மன்
    
-->
அஞ்சலிக்குறிப்பு: தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் மறைந்தார் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவான முதலாவது கலாநிதியும் இவரே ! ! - முருகபூபதி

.

நீண்ட நாட்களாக  அவுஸ்திரேலியா – சிட்னியில்  முதியோர் காப்பகத்தில் நனவிடை தோய்ந்துகொண்டிருந்த தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்  அவர்கள் கடந்த 19 ஆம் திகதி மறைந்தார் என்ற செய்தி, தற்போது இலங்கையில் நிற்கும் எனக்கு வந்து சேர்ந்தது.
இவர் பற்றி சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழில்  இவ்வாறு எழுதியிருந்தேன். " பேராசிரியர்   பூலோகசிங்கம்  அவர்கள்  தமிழ்  உலகில் கொண்டாடப்படவேண்டியவர்    என்ற   வார்த்தை  வெற்றுப்புகழாரம் அல்ல. 

எங்கள்  நாவலரை,  " வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் " -  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு  எதிராக  நீதிமன்றில்  அவர்  வழக்காடியதையும்  அறிந்திருப்போம்.

ஆனால்,  அவர்  தமது  இளமைக்காலத்தில்  கோபமும்  மூர்க்க  குணமும் கொண்டவர்   என்பதை  அறிந்திருப்போமா  ?  தமது  உறவினர்  மீது  தமக்கு வந்த  கோபத்தை  வெளிப்படுத்துவதற்கு    ஒரு  கத்தியை  எடுத்துக்கொண்டு அவர்   துரத்திய  கதை  எத்தனைபேருக்குத் தெரியும்  ?
ஆறுமுகநாவலர்  நூற்றாண்டு  இலங்கையில்  நாடுதழுவிய  ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில்   நடைபெற்ற  விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான்  அந்த  சுவாரஸ்யத்தை  வெளிப்படுத்தினார்.
அவர்தான்   தகைமைசார்  பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம்.

இவ்வாறு   கூட்டங்களிலும்  விழாக்கள்  மற்றும்  சந்திப்புகளிலும்  பல சுவாரஸ்யங்களை  அவிழ்த்து  கலகலப்பூட்டும்  பூலோகசிங்கம்  அவர்கள் அவுஸ்திரேலியா,  சிட்னியில் புலிடம் பெற்றபின்னரும் அயராமல் இயங்கிவந்தவர். அங்கு நடைபெறும் தமிழ்க் கல்வி  – தமிழ் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிப்பார். சிட்னி தமிழ் முதியோர் சங்கத்திலும் இணைந்திருந்தவர்.
நாம் 2001 ஆம் ஆண்டு மெல்பனில் ஆரம்பித்த தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திலும் இணைந்திருந்தவர். அந்த ஆண்டு மெல்பனில் பிரஸ்டன்  நகரமண்டபத்தில் நடைபெற்ற முதலாவது விழாவில் இடம்பெற்ற நூல்கள் – இதழ்கள், மறைந்த எழுத்தாளர்கள் – கலைஞர்களின் ஒளிப்படக்கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாக திறந்தும் வைத்தார்.  அதன்பின்னர் அடுத்த ஆண்டு  ( 2002 இல் )  சிட்னி தமிழ் எழுத்தாளர் விழாவிலும் பங்கேற்றார்.
எனது நூல்களின் வெளியீடு,  மறைந்த வானொலி ஊடகக்கலைஞர்  ‘ அப்பல்லோ  ‘ சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் நினைவு அரங்கில் நடைபெற்றவேளையிலும் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேராசிரியரின் மாணவி ( திருமதி) கலையரசி சின்னையா. இவர் ( அமரர் ) வித்துவான் வேந்தனாரின் புதல்வி.

நிர்ப்பந்தம்


21/09/2019 அர­சியல் உரி­மை­க­ளுக்­கான தமிழ் மக்­களின் போராட்டம் நீண்­டது. எழு­பது வரு­டங்­க­ளாக உயிர்ப்­புடன் தொடர்­வது. பல வழி­களில் வீரியம் மிக்­கது. வியந்து நோக்­கத்­தக்க பல்­வேறு வழி முறை­க­ளையும் உத்­தி­க­ளையும் கொண்­டது. ஆனாலும் அது விளை­வு­களைத் தரத்­த­வ­றி­யுள்­ளது. இது கவ­லைக்­கு­ரி­யது - கவ­னத்­துக்கும் ஆழ்ந்த சிந்­த­னைக்கும் மீள் பரி­சீ­ல­னைக்கும் உரி­யது. 
இந்த அர­சியல் போராட்டம் பிர­தா­ன­மாக இரண்டு வழி­மு­றை­க­ளி­லா­னது. சாத்­வீகப் போராட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட அது, பின்னர் ஆயுதப் போராட்­ட­மாகப் பரி­ண­மித்­தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து, மீண்டும் அது சாத்­வீக வழிக்குள் வலிந்து தள்­ளப்­பட்­டுள்­ளது. 

உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களும் ஆட்­சி­யா­ளர்­க­ளினால் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, சாத்­வீகப் போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்­தி­யாவில்  ஆங்­கி­லேய சாம்­ராஜ்­ஜி­யத்தின் கடும்­போக்கைக் கரைத்து வெற்­றி­ய­ளித்த  விடு­தலைப் போராட்­டத்தை முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு இதனை தமிழ்த்தலை­வர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். 

கூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்


21/09/2019 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் எவ்­வித முடிவை எடுக்க வேண்­டு­மென்று வட­, கி­ழக்கு தமிழ்மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்­களோ அந்த எதிர்­பார்ப்­பையும் விருப்­பத்­தையும் நிறை­வேற்றும் பாணியில் நடந்­து­கொள்ள இரா.சம்­பந்தன் முற்­ப­டு­கிறார் என்­பது அண்­மைய சந்­திப்­பு­களில் அவர் தெரி­வித்த கருத்­து­க்க­ளி­லி­ருந்து அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாகவுள்­ளது.

கடந்த காலத்தில் நடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருக்­கலாம் அல்­லது பொதுத் தேர்­த­லாக இருக்­கலாம், மாற்று தேர்­தல்­க­ளாக இருக்­கலாம், தீர்க்க தரி­ச­ன­மாக, நடந்து கொள்­ளா­மையின் கார­ண­மா­கவே பல இழப்­பு­க­ளையும் தோல்­வி­க­ளையும் எல்­லா­வற்­றுக்கு மேலாக ஏமாற்­றங்­க­ளையும் தமிழ் மக்கள் சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது. அதே தவறை மீண்டும் விடும் நிலை­யொன்றை கூட்­ட­மைப்பு தலை­வர் விடுவாராயின், இனி எக்­கா­லத்­தி­லுமே விமோ­ச­ன­மற்ற நிலையே தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­படும் என்று பயந்து கொண்­டி-­ருந்த நிலையில் சம்­பந்­தரின் தீர்க்­க­மான கருத்­து­க்களும் முடி­வு­களும் ஆறுதல் அளிக்­கின்றன என  பொது­வா­கவே தெரி­விக்­கப்­படுகிறது.  

ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்


21/09/2019 ஜனா­தி­பதி தேர்தல் குறித்த முன்­னெ­டுப்­பு­களில்  அர­சியல் கட்­சிகள் ஈடு­பட்டு வரு­கின்­றன. இத்­தேர்­தலில் பல வேட்­பா­ளர்கள் கள­மி­றங்க உள்ள நிலையில் எந்த ஒரு வேட்­பா­ளரும் ஐம்­பது சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது போகக்­கூடும் என்று விமர்­ச­கர்கள் பலரும் கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இதே­வேளை இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்­மை­யினர் நாட்டின் ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக உரு­வெ­டுப்பர் என எதிர்வு கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. சமூ­க­வி­ய­லா­ளர்கள் மேற்­கொண்ட ஆய்­வு­களும் இதனை உறு­திப்­ப­டுத்தி இருக்­கின்­றன. இந்­நி­லையில் பெரும்­பான்மை அர­சியல் கட்­சிகள் சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ளும் பகீ­ரதப் பிர­யத்­த­னத்தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தா­க­வுள்­ளது.

ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான எதிர்­பார்ப்­புகள் நாட்டு மக்­க­ளி­டையே இப்­போது அதி­க­மாக காணப் ­ப­டு­கின்­றன. நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வரப்­போ­வது யார் என்று நாட்டு மக்கள் ஆவ­லுடன் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக குறைக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஜனா­தி­பதி பத­வி­யினை கைப்­பற்றும் நோக்கில் வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கு­கின்­றனர். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை எமது நாட்­டுக்கு உகந்­த­தல்ல என்று ஒரு சாரார் கூறி வரு­கின்­றனர். இதே­வேளை இன்­னு­மொரு சாரார் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை கடந்த காலத்தில் பல்­வேறு சாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது என்றும் இம்­மு­றை­மையும்  நாட்டின் அபி­வி­ருத்­திக்கும், பாது­காப்­பிற்கும் தோள் கொடுக்கும் என்றும் கூறி­யுள்­ளனர். எவ்­வா­றெ­னினும் ஜே.வி.பி. போன்ற கட்­சிகள் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­யினை முற்­றாக ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்­சி­யா­கவே குரல் கொடுத்து வரு­கின்­ற­மையும் நாம் அறிந்­ததே.

பிர­தமர் ரணிலின் உறு­தி­மொழி !


ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்று  ஆட்சி அமைத்­ததும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி  இனப்­பி­ரச்­சி­னைக்கு  ஒரு­வ­ரு­ட­கா­லத்­திற்குள் தீர்வை வழங்­குவேன் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிடம்  உறு­தி­ய­ளித்­துள்ளார்.  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன்  தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் சந்­தித்து  பேசி­யி­ருந்தார்.  
இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வா­றான உறு­தி­மொ­ழி­யினை வழங்­கி­யி­ருக்­கின்றார். அத்­துடன் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்­திற்கும் ஒரு­வா­ரத்­திற்குள் தீர்வு வழங்­கு­வ­தா­கவும் பிர­தமர் கூறி­யி­ருக்­கின்றார்.
ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில்  ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்யும் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் முரண்­பா­டான நிலைமை நில­வி­வ­ரு­கின்­றது.  கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தன்னை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்றார். அவ­ருக்கு கட்­சியின் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்.  இதே­போன்று  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பங்­காளி கட்­சி­களின் ஆத­ர­வையும் சஜித் பிரே­ம­தாஸ பெற்­றுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

"மனமோகனா "ஒரு ரசிகையின் பார்வையில்


ஒரு இனத்தினுடைய முகவரி அந்த இனத்தினுடைய மொழியும்,
கலையும், கலச்சாரமும் பண்பாடும் ஆகும். ஒரு கலையை தொடர்ந்து கற்று அதில் அரங்கேற்றம் செய்து, தான் கற்ற அந்த கலையோடு தொடர்ந்து பயணிப்பது என்பது இளைய சமுதாயதினருக்கு ஒரு சவாலாக இருப்பது தான் நிதர்சனம்..

கடந்த வெள்ளிக்கிழமை சிட்னி முருகன் ஆலயத்தில் அமையந்துள்ள கல்வி காலச்சார மண்டபத்தில் மனமோகனா எனும் பாரதநாடிய நிகழ்ச்சி. செல்வி திவாஷினி ரமேஷ், ரன்ஜீவ் கிருபராஜா அவர்களின் நெறியால்கையில், பக்கவாத்திய கலைஞர்களாக கேஷிகா அமிர்தலிங்கத்தின் குரலிலும், ஆதித்தன் திருநந்தகுமாரின் மிருதங்கம், திவ்யா விக்னேஷ் புலாங்குழலும், ரன்ஜீவின் நட்டுவாங்கத்தில் இந்த நாட்டிய நிகழ்வு அமைந்திருந்தது.


ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை - அங்கம் 05 தமிழ் – சிங்கள இலக்கிய உறவுக்கு பாலமாக விளங்கும் திக்குவல்லை கமால் - முருகபூபதி


 இலங்கையில் முஸ்லிம்கள் என்றாலே – அவர்கள்  ‘ வர்த்தக சமூகத்தினர் ‘ என்ற கணிப்பு பொதுவானதாக நிலைபெற்றிருந்த காலமொன்றிருந்தது. அக்கணிப்பு பின்னாளில் பொய்யானது.
அவ்வாறான மாற்றத்திற்கு அச்சமூகம் கல்வி மீது கொண்டிருந்த நாட்டம்தான் அடிப்படைக்காரணம். அவர்கள் மத்தியிலிருந்து ஆசிரியர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள்   தோன்றினார்கள்.
இலங்கையில் பெரும்பான்மையினத்து பௌத்த  சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் அவர்கள் தமிழில் பேசினார்கள். எழுதினார்கள். அத்துடன் சிங்களம் பேசுவதற்கும் எழுதுவதற்கும்  தெரிந்துகொண்டார்கள்.
அதனால் எமது ஈழத்து தமிழ் இலக்கியவளர்ச்சியில் அவர்களும் உந்துசக்திகளாக மாறினார்கள். தென்னிலங்கையில் மாத்தறைக்கு சமீபமாக இருக்கும் திக்குவல்லை என்ற ஊரின் பெயரை தமிழ் இலக்கிய உலகிற்கு பிரசித்தம் செய்த முன்னோடியாக எம்மத்தியில் திகழ்ந்துகொண்டிருப்பவர்தான்  இலக்கிய நண்பர் திக்குவல்லை கமால்.
ஒரு கடலோரக்கிராமம் தமிழ் இலக்கியத்தில் தனது பெயரை தக்கவைத்துக்கொண்டதற்கு அங்கு பிறந்து ஆசிரியராகவும் இலக்கிய கர்த்தாவாகவும் அறிமுகமான நண்பர் எம். எச். எம். ஷம்ஸ் எமக்கு அறிமுகப்படுத்திய  திக்குவல்லை கமாலின் ஆசிரியர்களும் எழுத்தாளர்கள்தான் என்பதும் ஆச்சரியமானது.
ஏ. இக்பால், சந்திரசேகரன் ஆகியோரிடம் கல்வி கற்றிருக்கும் திக்குவல்லை கமாலின் இயற்பெயர்  முகம்மது ஜலால்தீன் முகம்மது கமால். 1950 ஆம் ஆண்டு, திக்குவல்லையில் பிறந்திருக்கும் கமால், அவ்வூர் மக்களின் பேச்சுத்தமிழை இலக்கியத்திற்கு வரவாக்கியவர்.
1970 களில் தமிழகத்திலும் இலங்கையிலும் புதுக்கவிதைத் துறை பெரும் வீச்சாக வளர்ந்தது. புதுக்கவிதையை ஏற்கலாமா? நிராகரிக்கலாமா? என்ற சர்ச்சைகளும் எழுந்தன.
அதனை குளியலறை முணுமுணுப்புகள் என்றும், ஆற்றுவெள்ளம் எனவும் சிலர்  எதிர்வினையாற்றினார்கள். ஆனால் புதுக்கவிதை புற்றீசல்போன்று பரவியது.
இரண்டு வரிகளில் பல அர்த்தங்கள் தரக்கூடிய புதுக்கவிதைகளும் வந்தன.
வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தொடரையும் எழுதினார். பின்னர் அத்தொடரும் நூலாகியது.  தமிழகத்தில் வானம்பாடிகள் இந்தத் துறையில் சிறகடித்துப்பறந்தனர்.  புதுக்கவிதைகளுக்காகவும் சிற்றேடுகள் மலர்ந்தன. 
மல்லிகையில் நான் எழுதத்தொடங்கிய காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து பல படைப்பாளிகளும் அறிமுகமாகியிருந்தனர்.  இலங்கையில் அவ்வேளையில்  எனக்கு படிக்கக்கிடைத்த முதலாவது புதுக்கவிதை நூல் எலிக்கூடு. அதனை நூல் எனச்சொல்வதிலும் பார்க்க சிறிய பிரசுரம் என்றுசொல்வதுதான் பொருத்தம்.
சின்னச்சின்ன கவிதைகளுக்கு அத்தகைய சிறு பிரசுரங்கள் போதுமானதாகவுமிருந்தது.
இந்திய சுதந்திரம் என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய புதுக்கவிதை இவ்வாறிருந்தது:

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: - முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்

.

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்


மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள கீழடி அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் அங்கிருந்து அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அங்கு அகழ்வாய்வைத் தொடர மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. அதற்குப் பிறகு மாநில தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

பெண்கள் பயன்படுத்திய பொன்னாலான 7 ஆபரணங்கள் கீழடியில் கிடைத்துள்ளன.படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT
Image captionகீழடியில் கண்டெடுக்கப்பட்ட, பெண்கள் பயன்படுத்திய ஏழு பொன்னாபரணங்கள்.

அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. வியாழக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன், தொல்லியல் துறை செயலர் த. உதயசந்திரன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.
2018ம் ஆண்டில் கீழடியில் தமிழக அரசால் நடத்தப்பட்ட 4வது அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து கிடைத்த முடிவுகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர் – ஊடகவியலாளர் முருகபூபதி The Catamaran இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல்: இனப்பகை ஒரு நோய்தான் !


நோய்க்கு மூவினத்தவரும் சேர்ந்து சிகிச்சை செய்யவேண்டும் !!  

புலம்பெயர்ந்து சென்றவர்கள் மேலும் மேலும் கோயில்களை கட்டுவதற்கும் புனருத்தரணம் செய்து கும்பாபிஷகம் நடத்துவதற்கும்தான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள் !!!

எங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டன --  அதனாலும் நாட்டில் சமாதானத்திற்கான சாத்தியங்களும் குறைந்த கால எல்லையும் நீடித்துக்கொண்டிருக்கின்றது!!!!


படைப்பிலக்கிய வாதியும் ஊடகவியலாளருமான  முருகபூபதி இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.


அவுஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் அனைத்துச் சமூகத்தினரையும் இணைத்து இலக்கிய அரங்குகளையும் நிகழ்த்தி வருகிறார். தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்களிடத்திலும் எழுத்தாளர்களிடத்திலும் இவருக்கு நெருக்கமான உறவுண்டு. இன ஐக்கியத்தையும் சமாதானத்தையும் வலியுறுத்தி அதிகமான சிறுகதைகளும்  நாவலும்  எழுதியுள்ளார். தமிழ் -  சிங்கள மொழிப் புலமையுள்ளவர். இவரது சிறுகதைகளில் சில ‘மதக்க செவனெலி’ (SHADOWS OF MEMORIES) என்ற பெயரில் சிங்களத்தில் வெளிவந்துள்ளது. இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ‘இலங்கை மாணவர் கல்வி  நிதியம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் வழியாக உதவிகளைச் செய்து வருகிறார்.

இந்த நேர்காணலில் தன்னுடைய அவதானங்களையும் அனுபவங்களையும் முன்னிறுத்தி இலங்கையின் எதிர்காலத்துக்கான பங்களிப்புகளைப் பற்றிப் பேசுகிறார்.
The Catamaran இணைய இதழுக்காக முருகபூபதி வழங்கிய நேர்காணல்:
த கட்டுமரன்:  இலங்கைச் சமூகங்கள் யுத்தத்திற்குப் பிறகு,
நாட்டினுள் எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டும்?
முருகபூபதி:  ஒருபுறம் முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் ஒருபுறம் கிழக்கு மக்களின் அபிமானம், இடையில் மலையக மக்களின் அனுசரணை,  ஆகிய அனைத்தையும் வடக்கின் தமிழர் தரப்பு தலைமைகள் படிப்படியாக இழந்துவிட்டு தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கிருக்கின்றன.

இந்தப்பக்கம், நீடித்த முப்பது ஆண்டுகாலப்போரில் வெற்றிவாகை சூடியதாக மார்தட்டிக்கொண்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷ என்ன சொன்னார்?
“இனிமேல் இந்த நாட்டில் சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிம்களோ என்ற பாகுபாடு இல்லை! அனைவரும் இலங்கையரே!” ஆனால், போர் முடிந்து பத்து ஆண்டுகளின் பின்னர், பௌத்த துறவிகளையும் கடும்போக்காளர்களையும் இணைத்துக்கொண்டுள்ள ஞானசார தேரர், “இந்த நாடு பௌத்த சிங்களவருக்கு மட்டுமே உரியது!?” எனச்சொல்கிறார். இவை வெறும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. இனப்பிரச்சினைக்குத்தீர்வாக டட்லி – செல்வா ஒப்பந்தம் வந்தபோது அதனை எதிர்த்து ஜே.ஆர். ஜெயவர்தனா, கண்டி தலதா மாளிகை நோக்கித்தான் பாத யாத்திரை தொடங்கினார். இறுதியில் அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது!

முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்கள் பதவி விலகவேண்டும் என்று ஒரு பௌத்த பிக்கு, உண்ணாவிரதம் இருந்து தனது கோரிக்கையில் வெற்றிபெற்றதும் இந்த தலதா மாளிகையின் முன்றலில் இருந்துதான். மற்றும் ஒரு பௌத்த பிக்கு, ‘இது பௌத்த சிங்களவர்களின் நாடு’ என மார் தட்டுகிறார்.

இலங்கைச் செய்திகள்

கொழும்பில் மலர்ந்தது தாமரைக் கோபுரம் 

ஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

பொகவந்தலாவ, டிக்கோயா பகுதிகளில் 3 ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை

ஊடகவியலாளருக்கு பயங்கரவாததடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

தேசிய ரீதியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற விழிப்­பு­ல­னற்ற மலையக மாணவன்: குவியும் பாராட்டுக்கள்

நாளை வரை பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை

8 இணையத்தள ஊடகவியலாளர்களும் விடுதலை 

திலீபனின் நினைவு நாளில் வவுனியாவிலிருந்து நடைப்பயணம்


கொழும்பில் மலர்ந்தது தாமரைக் கோபுரம் 

16/09/2019 தெற்காசியாவின் மிகவும் உயரமானக் கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திங்கட்கிழமை(16)  மாலை 5 மணியளில்  திறக்கப்பட்டு  மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.