தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள் !

 








      






மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 




மார்கழி மாதம் மாண்புடை மாதம்
மாதவன் சிவனை வாழ்த்திடும் மாதம்
கோதைத் தமிழும் வாசகர் தமிழும்
இறையின் தத்துவம் இயம்பிடும் மாதம் 

இறையின் தத்துவம் இயம்பிடும் வகையில்
மாதங்கள் அனைத்தையும் வைத்தனர் முன்னோர்
தையில் தொடங்கி மார்கழி வரைக்கும்
தத்துவம் சமயம் வைத்தனர் முன்னோர்

மார்கழி மகத்துவம் தொடரும் வகையில்
தையில் பொங்கல் தைப்பூசத் திருநாள்
ஆன்மீகம் அறிவியல் அனைத்தும் அளிக்கும்
அற்புத நாளாய் அமைவது சிறப்பே 

உலக சிருஷ்டி தொடங்கிய நாளாய்
அமைவதே தைப் பூசத் திருநாள்
சக்தியும் சிவனும் ஐக்கிய மாகும்
முக்கியம் மிக்கதும் இத் திருநாளே 

கவிதை..."தன்னார் தமிழமுதே!"... மெல்போர்ன் அறவேந்தன்

 










பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்! பயணம்-2



…சங்கர சுப்பிரமணியன்.





துயரம்…..உலாவும்..…இடமே
நம் வாழ்வில் மறவா..…துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

வயதிலே முதியோரென்றும்
வயதாலே சிறியோர் என்றும் வேறுபாடின்றி
அனைவரும் ஒன்றாய் மடிந்தது எம்மண்
அனைவரும் ஒன்றாய் மடிந்தது எம்மண்
அனைத்துமிழந்து அழிந்ததும் எம்மண்
அனைத்துமிழந்து அழிந்ததும் எம்மண்

ஆதலினால் இதுதான்
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே
நம் வாழ்வில் மறவா துயரம் உலாவும் இடமே

கற்பிழந்தோரென்றே பொட்டிழந்தோரென்றே
கற்பிழந்தோரென்றே பொட்டிழந்தோரென்றே
கதறியழுதே கண்ணீர் வடித்தோர் என்றே
கதறியழுதே கண்ணீர் வடித்தோர் என்றே
எல்லோரும் ஒன்றாய் மடிந்தனர் இங்கே 
எல்லோரும் ஒன்றாய் மடிந்தனர் இங்கே 

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 13…..சங்கர சுப்பிரமணியன்.

பிரம்மாண்டமான தெற்கு வாயிலைத் தவிர அரண்மனைக்கு பல வாயில்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான இணக்க வாயில் உள்ளிட்ட தெய்வீக வாயில், புகழ்பெற்ற கிழக்கு வாயில் மற்றும் மேற்கு வாயில் என பல உள்ளன. ஒவ்வொரு மூலையிலும் சீனக் கலைநுட்பத்துடன் கூடிய கோபுரங்கள் வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன.


இவை தவிர பிரம்மாண்டமான அறைகளும் உள்ளன. குறிப்பாக மன அமைதிக்கான அறை மற்றும் இலக்கியப் பெருமைக்கான அறை, இராணுவச் சிறப்பைக்கூறும் அறை என்று பல அறைகள் இந்த அரண்மனையின் புகழுக்கு சான்றாக உள்ளன.

மேலும் தூய்மையான சொர்கம் போன்ற அரண்மனை, அமைதியான

நீண்ட ஆயுள் தரும் அரண்மனை என்ற அரண்மனைகளுடன்
தெற்கு அல்லது முற்பகுதி என்று அழைக்கப்படுகின்ற மூன்று கட்டிடங்கள் இதன் சிறப்பை எடுத்துக்ககூறுகின்றன. இந்த அரண்மனையில் இம்பீரியல் கார்டன் என்பதும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.

சுருக்கமாகச் சொன்னால் சீனப் பேரரசர்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. அரண்மனைத் தோற்றம் அதன் நிலப்பரப்பு கலைநுட்பம் வாய்ந்த வேலும்பாடுகள் வாழ்வியல் முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. இந்த அரண்மனையை ஒரு நாளில் சுற்றிப் பார்க்க முடியாது.

மைசூர் மகாராஜா அரண்மனை போன்றிருந்தால் ஒரு நாளில் சுற்றிப் பார்க்கலாம். இதுவோ பல பேரரசர்கள் வாழ்ந்த அரண்மனைகளை கொண்டதோடு ஒரே இடத்தில் இருக்கின்றன. ஒரு வாரகாலம் கூட பகுதி பகுதியாய் அனுபவித்து சுற்றிப்பார்க்கலாம். நுழைவிடத்தில் இருந்து தொடரந்து பக்கவாட்டிலும் முன்புறமும் கட்டுமானங்கள் விரிந்து சென்றபடி தொடுவானம் போல் கட்டிடங்கள் நீள்கின்றன.

எது சரியென சொல் மனமே?


….சங்கர சுப்பிரமணியன்.





ஒரு மொழி ஒரு இடத்தில் மட்டும் பேசப்பட்டால் பேச்சு வழக்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஒரு மொழியை ஒரு நாட்டிலேயே பல வட்டாரங்களில் பேசப்படும் போது மொழியின் தன்மை மாறுபடும். இருப்பினும் பொருளைப் புரிந்து கொள்வர். சான்றாக சிலவற்றைப் பார்ப்போம். ஒன்ர தம்பிய கேளுங்கோ. இது கோயம்புத்தூர் பேச்சு வழக்கு. ஒரு தம்பி என்றால் சரி. ஒன்றரை தம்பியில் அரை தம்பியை எப்படி தேடுவது?

கேளுங்கள் என்பதை கேளுங்க என்றால் சரி. கோ என்ற அரசன் இதில் எப்படி புகுந்தான். முதலில் இதன் பொருளைப் பார்ப்போம். உன்னுடைய தம்பியை கேளுங்கள் என்பதே இதன் பொருள். இந்த பொருள் தமிழ்நாட்டில் எல்லா வட்டாரங்களில் வாழும் தமிழர்களுக்கும் புரியும். அது திரைப்படம் கொடுத்த கொடை. ஆனால் வேறு நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு புரியும் என்பது ஐயப்பாடே.

இன்னொரு சான்றைப் பார்ப்போம். “மாலையில் தொலைபேசியில் அழைத்தார்” என்பதை இப்படியும் சொல்லலாம். அந்திக்கு அடிச்சு கதைச்சவர் என்றும் வேறுவிதமாக சொல்லலாம். இப்படி சொல்வது அந்த வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு புரியும். மற்றவர்களுக்கு யார் யாரை அடித்தார்கள் என்று நினைக்கவே தோன்றும்.

பெங்களூரில் உள்ள ஒரு காய்கறி கடைக்காரரிடம் ஒரு கிலோ தடியங்காய் கொடுங்கள் என்றால் அவர் கண் முன்னால் தடியங்காயை வைத்துக் கொண்டே அது எங்களிடம் இல்லையே என்பார். ஏனென்றால் அங்கு வெள்ளைப் பூசணிக்காய் என்று சொன்னால்தான் தெரியும். 

தென்காசியில் ஒரு காய்கறிக் கடைக்காரரிடம் ஒரு கிலோ வெள்ளைப் பூசணிக்காய் கொடுங்கள் என்றால் தடியங்காய் இருக்கிறது பூசணிக்காய் இருக்கிறது நீங்கள் கேட்கும் வெள்ளைப் பூசணிக்காய் இல்லையே என்பார். ஏனென்றால் அவருக்கு பூசணிக்காய் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றுதான் தெரியும்.

கண்டிப்பாக தடியங்காய் என்பது வெள்ளைப் பூசணிக்காய் என்று தெரியாது. இதேபோல் சேனைக் கிழங்குக்கும் கருணைக் கிழங்குக்கும் இடையே குளறுபடி உள்ளது. அதுதான் குழப்பம் உள்ளது. எனவே அந்தந்த இடத்தில் இருப்பவர்களுக்கு அதனதன் பொருள் புரியும். எல்லாம் சரிதான். வட்டாரத்தால் வரும் வேறுபாடுதான் வேறுபாடாய்த் தோற்றமளிக்கிறது.

இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம் ஒரு கருத்து பற்றிய விவாதம்தான். விக்டோரிய மாநிலத்தில் தமிழைப் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண்களை பெற்றவர்களை மதித்து கௌரவிப்பதை எப்படிச் சொல்லலாம் என்பதே. ஒரு சாரார் மதிப்பளிக்கும் விழா என்கிறார்கள். அப்படியானால் மதிப்பெண் பெற்ற மற்றவர்கள் எல்லாம் மதிப்பில்லாதவர்களா? என்கின்றனர் இன்னொரு சாரார்.

இன்னொரு சாராரின் வாதம் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களை கௌரவிக்கும் விழா என்பதே சரி என்கின்றனர். அதற்கு மற்றவர்கள், கௌரவிக்கும் விழா என்றால் அதிகம் மதிப்பெண் பெற்ற மற்றவர்கள் எல்லாம் கௌரவமற்றவர்களா என்கின்றனர். இதில் மதிப்பா கௌரவமா என்பதே இங்கு பிரச்சனை. கௌரவமிருந்தால் மதிப்பும் மதிப்பிருந்தால் கௌரவமும் கிடைக்கும் என்றே என் சிற்றறிவு சொல்கிறது.

இரு வல்லவர்கள் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தங்கள் நிறுவனம் மூலம் நூறு படங்களுக்கு மேல் படமாக்கிய பட


நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். இதன் அதிபர் டி . ஆர். சுந்தரத்தின் மறைவுக்கு பின் அவரின் மகன் ராமசுந்தரம் நிர்வாகத்தை பொறுப்பெடுத்து 100 வது படமாக வல்லவனுக்கு வல்லவன் படத்தை தயாரித்து அப் படம் வெற்றி பெற்றது. உஸ்தாத் கி உஸ்தாத் என்ற ஹிந்திப் படத்துடன் தோ உஸ்தாத் என்ற படத்தின் உரிமையையையும் அவற்றின் தயாரிப்பாளரும், நடிகருமான ஷேக் முகத்தாரிடம் பெற்றிருந்த ராமசுந்தரம், உஸ்தாத் கி உஸ்தாத்தை வல்லவனுக்கு வல்லவனாக்கி விட்டு , அடுத்து 1966ம் வருடம் தோ உஸ்தாதை தங்களின் 101வது படமாக இரு வல்லவர்கள் என்ற பெயரில் படமாக்கினார். 



இந்த படத்தை எடுக்க அவர்கள் எண்ணிய தருணம் அதில் ஹீரோவாக

நடிக்க மிகப் பொருத்தமாக வந்து வாய்ந்தவர் ஜெய்சங்கர். நான்கைந்து படங்களில் நடித்திருந்த ஜெய்சங்கர் இப் படத்துக்கு மிக பொருந்தினார் . அதே போல் சிறு வேடங்களில் நடித்து , நடனமாடி வந்த எல் . விஜயலஷ்மி கதாநாயகியானார் . ஜெய்யிடம் இளமை, வசீகரம், ஆக்க்ஷன் எல்லாம் அமைத்திருக்க , விஜலக்ஷ்மியிடம் ஆடும் திறன், துறுதுறுப்பு, கவர்ச்சி இளமை கொட்டிக் கிடந்தன. ஜெய்க்கு ஏற்ற ஜோடி விஜயலஷ்மி என்ற சீல் இந்தப் படத்திலேயே குத்தப் பட்டு விட்டது. 


ஜெய் ஒரு வல்லவன் என்றால், மற்றைய வல்லவன் ஆர் .எஸ் . மனோகர். சுந்தரத்தித்தின் அபிமானத்தைப் பெற்ற மனோகர் எல்லா மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களிலும் இடம் பெற்று அவர்களின் ஆஸ்தான நடிகரானார். இதிலும் அவர் இரண்டாவது ஹீரோவானார். ஜெய், மனோகர் இருவரையும் சுற்றியே படத்தின் கதை அமைக்கப் பட்டிருந்தது. 


பெற்றோரை இழந்த மோகன், ராஜன் இரு சிறுவர்களின் வாழ்வில் கடத்தல்காரனான சுந்தரமூர்த்தி குறுக்கிட , இரு சகோதரர்களும் பிரிகிறார்கள். கொள்ளைக்காரர்களாக உருவெடுக்கும் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் எதிரிகளாக சந்திக்கிறார்கள். ராணி என்ற கோடிஸ்வரியையை கடத்தி சென்று பணத்தை அபகரிக்க அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் போட்டி போடுகிறார்கள் , மோதுகிறார்கள். இந்த மோதலினால் மோகன் தன் மனைவி , குழந்தை இருவரையும் விட்டுப் பிரிந்து சிறை செல்ல நேருகிறது. ஆரம்பத்தில் ராஜனை நல்லவன் என்று எண்ணி காதலிக்கும் ராணி பின்னர் அவன் திருடன் என்று அறிந்து அவனை விட்டு நீங்கி நடன குழுவில் சேர்ந்து வெளிநாடு செல்கிறாள். இதற்கு இடையில் சுந்தரமூர்த்தி ராணியை ஒரு கையாலாகாதவனுக்கு கட்டி வைத்து அவளின் சொத்துகளை அடைய அலைகிறான். இப் பிரச்னைகளில் இருந்து அண்ணன் தம்பிகளான இரு வல்லவர்களும் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் , ஒன்று சேர்ந்தார்கள் என்பதே மீதி படம். 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

07 - 02 - 2026 Sat: சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது.  இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200

நேரம்: மாலை 6 மணி

20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில்  திருவிழா ஆரம்பம்

21 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்

28 - 02 - 2026 Satசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா

01 - 03 - 2026 Sunசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா

02 - 03 - 2026 Monசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா

07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா

                                at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200

இலங்கைச் செய்திகள்

 சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு

ரணிலுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை மார்ச் மாதம்!

பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை - வடக்குமகாண ஆளுநர் வேதநாயகன்

யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு மீண்டும் விளக்கமறியல்



சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு

28 Jan, 2026 | 05:19 PM

(எம்.நியூட்டன்)

தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் புதன் கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது. 

சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில் மங்கல விளக்கேற்ரலுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்  சிவபூமி பாடசாலையை நாடாவெட்டி திறந்துவைத்ததுடன் படிம கல்லையூம் திறந்து வைத்தார்.

இதேவேளை சிவபூமி அறக்கட்டளையானது  கடந்த 25 ஆண்டுகளாக  அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், 2016இல் கிளிநொச்சியிலும் எமது அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன.

உலகச் செய்திகள்

சீனா வர்த்தகமும் விமானத் துறையும்: அமெரிக்கா–கனடா உறவுகளில் புதிய நெருக்கடி 

வெனிசுவேலாவுக்கு மீண்டும் விமான சேவை : அமெரிக்கா அதிரடி

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குடன் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் வரலாற்றுச் சந்திப்பு!

இந்தியாவில் விமான விபத்து ; மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு

பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்!




சீனா வர்த்தகமும் விமானத் துறையும்: அமெரிக்கா–கனடா உறவுகளில் புதிய நெருக்கடி 

31 Jan, 2026 | 01:48 PM

அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், கனடா விமானங்களுக்கு எதிராக கடும் வரி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், அந்த நாட்டின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்த டிரம்ப், தற்போது அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த Gulfstream Aerospace நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாகவே இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிவ மஹோத்ஸவம் 08/02/2026 - 17/02/2026

 




இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களின் தமிழியல் சுவடுகளும் நூற்றாண்டு தின நிகழ்வும்” 07/02/2026

 


ஒருங்கிணைப்பு:  பேராசிரியர் அ.சண்முகதாஸ்

 நாள்:  சனிக்கிழமை 07-02-2026

நேரம்:

 இந்திய நேரம் - மாலை 6.30

இலங்கை நேரம் - மாலை 6.30

கனடா நேரம் - காலை 8.00

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:00

 வழி: ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245...

 சிறப்புப் பேச்சாளர்கள்:

 பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்

இ.இராஜேஸ்கண்ணன்

சு.குணேஸ்வரன்

எம்.எம்.ஜெயசீலன்

சி.ரமேஷ்

மேலதிக விபரங்களுக்கு: அகில் - 001416-822-6316

 https://www.ilakkiyaveli.com

சம்ஹிதா 07/02/2025

 சிவம் நடனப் பாடசாலை பெருமையுடன் சம்ஹிதாவை வழங்குகிறது

இடம்: பிரையன் பிரவுன் தியேட்டர், பாங்க்ஸ்டவுன், NSW 2200

நேரம்: மாலை 6 மணி





சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா 2026 : 20/02/2026 - 04/03/2026


 









அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா 07/03/2026