.
எல்லோரையும் வியந்து மகிழவைத்த இனியதோர் அரங்கேற்றம்
அண்மையில் மெல்பேணில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்கள் அனைவரையும் பரவசம் கலந்த வியப்பில் ஆழ்த்தியது. நிருத்தா இந்தியன் நுண்கலைக் கல்லூரியின் இயக்குனரான திருமதி. நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன் திரு. ந.தர்மகுலேந்திரன் ஆகியோரின் புதல்வியான செல்வி. இளமதி தர்மகுலேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஒக்ரோபர் மாதம் 2ஆம் திகதி மெல்பேணில், சவுத்மோராங் என்றுமிடத்தில் அமைந்துள்ள பிளென்ரி மாவட்டக் கலைக்கூட மண்டபத்தில் நடைபெற்றது. செல்வி இளமதி, நிருத்தா இந்தியன் நுண்கலைக் கல்லூரியில், அவரது தாயாரான நிருத்தசொரூபியிடம், மூன்றுவயதிலிருந்தே பரதநாட்டியத்தை முறையாகக் கற்று வருபவர். இப்பொழுது பதினொரு வயது நிரம்பிய இளமதி கடந்த ஏழாண்டுகளாக பரத நாட்டியத்தில் இடைவிடாத பயிற்சியில் ஈடுபட்டீருப்பவர்.