துலாக்கோலின் சூட்சுமமா..?





கிட்டடியில் நானிவனைக் காணக்
கிடைக்கலையே!
மட்டுப் பிடிப்பதற்கும் மனதிற் பதியலையே!
யாராய் இருக்குமிவன்? பேரேதாய் இருக்குமிவன்?
ஜோராய் இறைக்கிறானே! என்றேநான் அதிசயித்து
“யாரப்பாநீ? ஏனெனக்கு உதவுகிறாய்?
கூறப்பா!” என்று குனிந்தவனைக் கேட்டுவிட,
“யாரெல்லாம் இருக்கட்டும்;
நாளும் வந்திங்கே நல்லதண்ணி பாய்ச்சுகிறாய்
நீளும் உண்மையொன்றை நீயறிந்து கொள்ளு!இந்தத்
துலாக்கோலின் சூட்சுமங்கள் துலங்கிடுதோ
உனக்”கென்றான்
“துலாக்கோலில் சூட்சுமமா…?
தண்ணி இறைப்பதற்கும் தளிர்,கொடிகள்
வளர்ப்பதற்கும்
பண்ணி வைத்ததொரு பொறிமுறையே;
இதனைவிட
எண்ணி விடுவதற்கு இதிலேது?” என்றுரைத்தேன்.
“நீர்நிலையை…,
எட்டிஎட்டிப் பார்த்துவிட்டு அப்பாலே போகாமல்
கெட்டியாய் பிடித்தேறி மிதித்தாய்பார்;
அதுமுயற்சி!
நீர்நிலையுள்…
கொட்டிக் கிடக்கும்நீர் வரமாகும்; ஆங்கதனை
வெட்டி எடுத்ததுபோல் எடுத்தாலே பயனாகும்
சும்மா இருப்பவர்க்கு சுகங்கள் கிடைக்காது
அம்மாவின் பால்கூட அழுதால்தான் ஊட்டுகிறாள்
முயற்சியினால்,
காற்றே இல்லாத கட்டாந் தரையுள்ள
வேற்றுக் கோளுக்கே விண்ஓடம் அனுப்புகிறார்.

மவுண்ட் றூயிட் தமிழ் கல்வி நிலையத்தின் மாதிரி தைப்பொங்கல் விழா – பரமபுத்திரன்


Add caption
.

Add caption

தைப்பொங்கல் என்பது தமிழரின் பண்பாட்டு அடையாளம், வரலாற்று தொடர்ச்சி, பாரம்பரிய நிகழ்ச்சி என்று கூறிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் தைப்பொங்கலின் சிறப்பை, அதன் அவசியத்தை, கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை எங்கள்  இளம் சந்ததிக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தமிழ் மக்களாகிய எமது கடமையும்  பொறுப்பும் மட்டுமல்ல, அதனை அவர்கள் பின்பற்ற பயிற்றுவிக்கவும் வேண்டும். அந்த வகையில் தனித்து ஏட்டுக்கல்வியை மாணவர்களிடம் திணிப்பதை தவிர்த்து, அனுபவக் கல்வியை பெற்றுக்கொடுத்தல் கற்பித்தலில்  மிகவும் அவசியம். உண்ணும் போது பிறருக்கும், பிற உயிர்களுக்கும்  கொடுத்து உண்பது தமிழர் பண்பாடு. அதிலும்  தைபொங்கல் என்றால் தை முதல்நாளே உண்ணும் உணவை  மற்றவருக்கும் கொடுத்து பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை சொல்லும் நாள். உறவுகளுடன் கூடி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் நாள். இயற்கைதான் எம்மை வாழ வைக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய நாள். இதனை தங்கள் கல்வி நிலைய மாணவர்களும் அறியவேண்டும் என்ற நோக்கில் மாதிரி தைப்பொங்கல்  நிகழ்வினை மவுண்ட் றூயிட் தமிழ்  கல்வி நிலையத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 24 - முருகபூபதி

.



                                                                 
                                                                     
சுபாஷினியின் கைத்தொலைபேசி சிணுங்கியது. மறுமுனையில் மஞ்சுளா.
‘ இவள் ஏன்  வேலை நேரத்தில் எடுக்கிறாள்…? ‘  சுபாஷினி, அருகில் தன்னுடன் வேலைசெய்யும் சிங்கள யுவதியிடம், கண்சாடை செய்துவிட்டு  சற்று ஒதுங்கிச்சென்று  பேசினாள். சுபாஷினி கவனிக்கவேண்டிய வாடிக்கையாளர்களை, அந்த சிங்கள யுவதி கவனித்தாள்.
   என்னடி… இந்த நேரத்தில்…?  பிஸியாக இருக்கிறேன். சொல்லு“   என்றாள் சுபாஷினி. மறுமுனையில் மஞ்சுளாவின் குரலில் பதட்டம் தொனித்தது.
 “ சுபா… என்னுடைய அம்மா, என்னைத்தேடத் தொடங்கிவிட்டா. எங்கட பேங் மனேஜருக்கு போன் எடுத்து விசாரித்திருக்கிறா.! என்ன செய்வது என்று தெரியவில்லை. 

 “ சரி… சரி… வேலை முடிந்ததும் இங்கே நேரே வா. எனக்கு இன்று இரவு ஏழுமணிவரையும் வேலை. நேரில் பேசுவோம்.. “
 “ சரி….”  மஞ்சுளா இணைப்பைத் துண்டித்ததும், சற்று கலவரமடைந்த முகத்துடன் சுபாஷினி, கவுண்டருக்கு வந்தாள்.
 " என்ன.. ஏதும் பிரச்சினையா…?  “ அந்த சிங்கள யுவதி கேட்டாள்.
  எனக்காக இங்கே நின்றதற்கு தேங்ஸ். ஒன்றுமில்லை. ஊரில் அம்மாவுக்கு சுகமில்லையாம்.    என்று பொய்சொன்னாள் சுபாஷினி.
எதற்காக திடீரென்று மஞ்சுளாவின் தாய் இப்போது  மகளைத் தேடவேண்டும். துளியளவும் இரக்கமில்லாமல் விட்டுப்போட்டு ஓடிப்போனவளுக்கு, ஏதோ நடந்திருக்கவேண்டும்.  எத்தனை வருடமிருக்கும். தாய் – தகப்பன் பாசமே இல்லாமல் தனித்தே வாழப்பழகிவிட்டவளுக்கு எஞ்சியிருந்த உறவு நாம் வசிக்கும் ஜீவிகாவின் வீடு மாத்திரம்தான்.
இன்று மாலை, மஞ்சுளா எத்தகைய செய்திகளுடன் வரப்போகிறாளோ..?  சுபாஷினிக்கு அன்றைய பொழுது மிகவும் மெதுவாக நகர்வதுபோலிருந்தது.

பிதா ,  கம்பியூட்டர் பயிற்சி வகுப்பிலிருந்து புறப்பட்டு, தாமதிக்காமல் வீடு வந்து சேர்ந்தாள். வீட்டின் கேட்டில் தொங்கும் தபால் பெட்டியின் வயிலிருந்து ஒரு  மாதாந்த இலக்கிய இதழும் சில கடிதங்களும் வெளியே  நீட்டிக்கொண்டிருக்கின்றன.
அவற்றை எடுத்துக்கொண்டு கேட்டை பிணைத்திருக்கும் சங்கிலியில் தொங்கும் பூட்டைத் திறந்து உள்ளே வந்து வாசல் கதவைத்திறந்து வந்து, அவசரஅவசரமாக, அணிந்திருந்த சேலையை களைந்துவிட்டு, வீட்டுடைக்கு மாறினாள்.

நேரம்   மதியம் ஒருமணிக்கு இன்னமும் இருபது நிமிடங்கள் இருந்தன. காலையில் வெட்டித்துப்பரவு செய்து  குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டுச்சென்ற காய்கறிகளை எடுத்து சமையலைத் தொடங்கினாள்.
ரைஸ் குக்கரில் அரிசியை கழுவிப்போட்டுவிட்டு,  அன்று வந்திருந்த கடிதங்களை பிரித்துப்பார்த்தாள். அதில் அவளது பெயருக்கும் ஒரு கடிதம். அது, அவள் நிகும்பலையில் புதிதாக திறந்திருக்கும் வங்கிக்கணக்கின் கடிதம். தான் வைப்பிலிட்டிருக்கும் பணத்திற்கான மாதாந்த வரவுக்கடிதம். அதனை எடுத்துச்சென்று, தனது ஒரே ஒரு உடைமையாக இருக்கும் பேக்கில்  துணிகளுக்கு  அடியில் வைத்தாள்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - அங்கம் 1

.



ஈழத்தின் மூத்த கவிஞரும், அவுஸ்திரேலியா சிட்னியில் வாழ்ந்துவருபவருமான அம்பி அவர்கள் இம்மாதம்  (பெப்ரவரி 17 ஆம் திகதி )  தனது 91 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார் . தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுகள்,  கவிதை நாடகங்கள்  உட்பட பல ஆக்கங்களை வரவாக்கியிருக்கும் கவிஞர் அம்பி, தனது 91 வயதிலும் எழுதத்தொடங்கியிருக்கும் மற்றும் ஒரு பத்தி எழுத்து சொல்லாத கதைகள்.
அம்பியின் வாழ்க்கை சரிதம்போன்று எழுதப்படும் சொல்லாத கதைகள் தொடர் இந்த வாரம் முதல் வெளியாகிறது.

ஓப்படைப்பு

சீரடிகள் தூக்கி வைத்த
சின்னஞ் சிறுவயசில்
ஓரடி போய் ஈரடி போய்
ஓடித் திரிகிற நாள்…
தூய வெள்ளை மண் பரப்பி
சுட்டு விரல் நிமிர்த்தி
தேயாமல் தேய்த்தெனக்கு
செந்தேன் தமிழ் தொட்ட….
தாயாள்….. அவள்  தாயாள்…
தமிழாசான்….. அன்னவரை
வாயார வாழ்த்தி யிந்த
வண்டமிழை ஒப்படைத்தேன்!


அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 7 - கல் நாதஸ்வரம் - சரவண பிரபு

.


கல் நாதசுரம் – காற்றுக்கருவி
அமைப்பு
திருக்குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் ஒரு கல் நாதசுரம் உள்ளது. உலவுப்பகுதி மூன்று உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு வெண்கலப்பூணல் இணைக்கப்பட்டு வெங்கல அனசுடன் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. சுமார் 3 ½ கிலோ எடையுடையது. முகப்பில் உள்ள முக்கிய பாகமான சீவாளி, காவிரிக்கரையில் விளையும் ஒரு நாணல் புல்லில் செய்யப்படுகிறது. (ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர்.  வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது.)

குறிப்பு
சாதாரண நாதஸ்வரத்தை விட சுமார் ஆறு மடங்கு கூடுதல் எடையுடையது கல் நாதசுரம். சுமார் இரண்டடி நீளமுடையதாகவும் வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் மாதிரியான அமைப்பிலும் உள்ளதாகும். மரத்தில் செய்வதற்கும் முந்தைய ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்குச் சான்றாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கல் நாதசுரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது. 1990 வரை திரு குஞ்சிதபாதம் பிள்ளை என்பவர் தொடர்ந்து இசைத்து வந்த இந்தக் கருவி தற்பொழுது ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிற்பியின்  கை  வண்ணத்தில் கல் நாதஸ்வரமாக  பிறந்து, இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும்  இன்னிசையாக தவழ்ந்து ராகங்களின் சுவடுகளை சுமந்து வருகிறது இந்த  கல் நாதசுரம்.  திருக்கோயில் வித்வான் திரு சாமிநாதன் பிள்ளை ஆலய அதிகாரி கேட்டுக்கொண்டால் முக்கிய விழா நாட்களில் இசைக்கிறாராம்.  கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். அதனால் சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்கள் மட்டுமே வாசிக்க முடியும் என்கிறார் இவர். முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே  இதில்  நல்இசை  கிடைக்கும் எனவும் பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்கிறார். இவர் அளித்த பேட்டியும் கல் நாதசுரம் இசைக்கப்படும் காட்சிகளும் காணொளி பகுதியில் உள்ளது.

கொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா? - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

.
கொரோனா வைரஸ் (உலக சுகாதார நிறுவனம் சூட்டிய பொதுப்பெயர் Covid-19 ஆகும்) குறித்து, வௌிவரும் செய்திகளில் உண்மை பாதியாகவும் பொய் மீதியாகவும் இருக்கின்றன.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனா மீதான குரோதம், புதிய வழிகளில் வெளிப்படுகிறது. அறிவியல் ரீதியாக, தன்னை உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மனிதகுலம், விக்கித்து நிற்கிறது.
கொரோனா வைரஸ், இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மிகப் பெரிது. அதேவேளை, இதை மய்யப்படுத்தி ஊடகங்களின் வழி பரப்பப்படும் செய்திகளும் சமூக வலையமைப்புகள் வழி பரிமாறப்படும் தகவல்களும், பெரும்பாலும் பொய்யாகவே இருக்கின்றன.
இவை ஒருவகையான பீதி கலந்த மனநிலையை, சமூகத்தில் உருவாக்கியுள்ளன. “அஞ்சத் தேவையில்லை” என்று, அச்சமூட்டப்படுவது போல, உலக சுகாதார நிறுவனம், பலமுறை திரும்பச் திரும்பச் சொல்லிவிட்டது. ஆனால் யாரும் கேட்டபாடில்லை.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் 1,868 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். சீனாவுக்கு வெளியே ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சீனாவில் மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436.
இந்த நோய் பரவத் தொடங்கியது முதல், நாளொன்றுக்கு 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, முதன்முறையாக 2,000யை விடக்குறைந்து, 1,886 ஆக இருந்தது. இது கொஞ்சம் ஆறுதலான விடயம்.

சுவீட் சிஸ்ட்டி : விடிவெள்ளி - ச.சுந்தரதாஸ்


நட்சத்திர நடிகர்களாக திகள்பவர்களுக்கு  அவ்வப்போது சொந்தத்தில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உதிப்பது உண்டு.
அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும்  இத்தகைய ஆசை உருவானது. அதன் பலனாக தனது மகன்களான பிரபு, 
 ராம்குமார் இருவருடைய பெயரிலும் பிரபுராம் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் தயாரிப்பாளராக தன்னுடைய நீண்ட கால நண்பர் முத்துமாணிக்கம் என்பவரை அமர்த்திக் கொண்டார் சிவாஜி. 

பிரபுராம் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் விடிவெள்ளி இதற்கு கதை வசனம் எழுதியதோடுடைரக்சனும் செய்தவர்  பிரபல இயக்குனர் ஸ்ரீதர். ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த முதல் படமும்  இதுவாகும். இதன்மூலம் கல்யாண பரிசு படத்தில் பிரபலமான சரோஜாதேவி இதில் கதாநாயகியாக சிவாஜியுடன் ஜோடி சேர்ந்தார். 

மற்றுமொரு ஜோடியாக பாலாஜியும், எம்என் ராஜமும் நடித்தார்கள். நகைச்சுவை யோடியாக  டி ஆர் ராமச்சந்திரன், பத்மினி பிரியதர்சினி நடித்தார்கள்.

 தன் தங்கையை அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து தர விழைக்கின்றான் சந்துரு. வைர நெக்லஸ் ஒன்றை அன்பளிப்பாக திருமணத்தின்போது போட்டால் திருமணம் நடக்கும் என்று மணமகன் பெற்றோர்கள் நிபந்தனை விதிக்கிறார்கள். வசதி இல்லாத சந்துரு வேறு வழியின்றி ஒரு யுவதியிடமிருந்து வைர நெக்லஸை திருடுகிறார்.  அதனை சீதனமாக தங்கைக்கு போடுகிறார்.

 சில காலம் கழித்து தங்கையின் கழுத்தில் இருந்து வைர நெக்லஸ் தவறி கீழே விழுந்து விடுகிறது. அதன் பதக்கம் திறந்து கொள்ள அதனுள் ஒரு ஆடவனின் படம் தெரிகிறது. தங்கையின் கணவன் இது யார் என்று கேட்க அவளோ தெரியாது என்று கூறுகிறாள். ஆனால் அவள் கணவனோ அவளை சந்தேகிக்கிறான், அவளை அவள் பெற்றோர் வீட்டிற்கே  அனுப்புகிறான்.  தங்கை திரும்பியதை பார்த்து சந்துரு அதிர்ச்சி அடைகிறான்.  

பலன் தரும் -- Dr.Fajila‌ ‌Azad‌ Amour‌ ‌

.



என்னத்தை செய்து என்ன செய்ய… எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகத் தான் போகிறது என்று புலம்பாதவர்களைக் காண்பதே அரிதுதான். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கும் பலரையும் அப்படி செய்ய விடாமல் தடுப்பது இந்த எண்ணம்தான். 
தனக்கான நல்ல முயற்சியாகட்டும் பிறருக்கு செய்ய நினைக்கும் உதவி ஆகட்டும் அது சரியான பலனைக் கொடுப்பதில்லை என்ற எண்ணம் எந்த முயற்சியையும் எடுக்க விடாமலே பலரையும் விரக்தி கொள்ளச் செய்து விடுகிறது. நியுட்டனின் மூன்றாவது விதியின்படி எந்த விளைவிற்குமான எதிர் விளைவை உடனே எதிர்பார்த்து அப்படி கிடைக்காத போது மனம் அழுந்திப் போகிறது.
பல நேரங்களில் நீங்கள் செய்யும் பல நல்ல காரியங்கள் உங்களுக்கு மட்டுமல்லாமல் நீங்கள் யாருக்காக அந்த செயலைச் செய்கிறீர்களோ அவர்களுக்குக்கூட பலனளிக்காதது போல் தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் நல்ல செயல்கள் என்றும் வீண் போவதில்லை.
உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டால் மூளை instruction கொடுக்க antibodies உற்பத்தியாகி இரத்த நாளங்கள் அவற்றை அது தேவையான பகுதிக்கு கடத்தி சென்று அந்த காயத்தை ஆற்றுவதை நீங்கள் அறிவீர்கள். அதுபோல் இந்த உலகில் யாரோ ஒருவர் எங்கோ செய்யும் ஒரு நல்ல செயல் அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு நேரடி பலனைத் தராவிட்டாலும் இந்த பிரபஞ்சத்தில் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் தேவையை நிச்சயம் அது நிறைவேற்றி இருக்கும். 
‘அமேசான் காடுகளில் உள்ள  ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவின் விளைவாக ஐரோப்பிய கண்டத்தில் புயலடிக்கும்’ என்னும் கெயாஸ் தியரி அறிவீர்களா... அது போல, உங்கள் தேவையையும்  நீங்கள் அறிந்திராத யாரோ ஒருவரின் எங்கோ செய்யும் செயலின் மூலம் இந்த பிரபஞ்சம் நிறைவேற்றும். 

வாசகர் முற்றம் – அங்கம் 07 -- முருகபூபதி

.


பாடசாலை பருவம் முதல் புகலிட வாழ்வு வரையில் வாசித்துக்கொண்டேயிருக்கும் தீவிர வாசகர் !
 “ வாழ்க்கையின் தேடல்களுக்கு வாசிப்பே வழிகாட்டி  “ எனக்கூறும் மெல்பன் கிருஸ்ணமூர்த்தி
                                                                            
     
                                                                        
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் 1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் நான் தஞ்சமடைந்த காலப்பகுதியில், இந்தப்பெரிய தேசத்தில் தமிழ் வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தேடிக்கொண்டிருந்தேன்.
படிப்படியாக பலர் எனது கலை, இலக்கிய, ஊடக வட்டத்தில் இணைந்தனர்.  இன்றும் அவ்வாறு பல புதிய முகங்களை அடிக்கடி சந்திக்கின்றேன்.
1990 களில் நாம் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பினை தோற்றுவித்தபோது, பாரதி விழாவை நடத்துவதற்கு தீர்மானித்தோம். இந்த விழாவில் நான் எழுதிவைத்திருந்த மகாகவி பாரதி நாடகத்தை அரங்கேற்றுவதற்காக அதில் நடிக்கவைக்க பாத்திரங்களை தேடிக்கொண்டிருந்தபோது, சிலர் கிடைத்தார்கள்.
பாரதியாரின் தோற்றத்திற்கு ஏற்ப ஒருவரை தேடத்தொடங்கியதும் அதற்குப்பொருத்தமானவராக திரு. எஸ். கிருஸ்ணமூர்த்தி எனக்குத் தென்பட்டார்.
இவர்,  யாழ். பாஸ்கர், அளவையூர் வித்தியானந்தன், முல்லை சிவா  முதலான நண்பர்களுடன் இணைந்து  ஒரு சில சரித்திர நாடகங்களிலும் பங்கேற்றிருந்தவர்.
இறுதியில் எனது மகாகவி பாரதியில்  பாரதியாக எஸ். கிருஸ்ணமூர்த்தியும்  செல்லம்மாவாக கோகிலவாணி நவநீதராஜாவும், பாரதி பூநூல் சடங்கு செய்வித்த  இளைஞனாக பிரகாஷ் அந்தோனிப்பிள்ளையும் பாரதியின் மகள் தங்கம்மாவாக செல்வி  காயத்திரி குமாரலிங்கமும் வா.வே.சு. அய்யராக வித்தியானந்தனும் அரவிந்தராக தமிழரசனும் செட்டியாராக நவநீதராஜாவும் நடித்தனர்.

சிந்தையைத் திருத்தும் சிவராத்திரி -

.

             மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
                             முன்னாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் 


     
மனிதர்களை மாண்புடன் வாழச்செய்வதற்கு நல்ல நெறிகளைக் காட்டி நிற்கும் உன்னத பணியினை சமயம் ஆற்றி வருகிறது. சமயம் என்பது சமூகத்தின் ஆணிவேர் எனலாம்.காட்டில் விலங்குகளுடன் வாழ்ந்த மனிதனின் வாழ்வில்  காலத்தின் மாற்றத்தினால்  ஏற்பட்ட  பலவித வளர்ச்சிப் படியில் சமயம் என்பது மிகவும்  உன்னதமானது உயர்ந்து என்று கருத முடிகிறது. விலங்குகளுடன் இருந்த மனிதன் விலங்காய் விளக்கமின்றி இருந்த மனிதன் விலங்கினத்தினின்று வேறுபட்டு மாறுபட்டு நிற்பதற்கு சமயமும் அது சார்ந்த கொள்கைகளும் மடை மாற்றம் செய்திருக்கின்றன        என்பது  மறுத்துவிடக்கூடிய விடயமன்று எனலாம்.
  உலகின் தொன்மையான சமயம்,  சனாதனதர்மம் ,  பல வாழ்வியல் கோட் பாடு களைத் தன்னகத்தே கொண்ட சமயம் , நமது சைவசமயம் எனும் பொழுது நாமெல் லாம் எவ்வளவு பெருமை கொள்ளுதல் வேண்டும் !  பக்திப் பாடல்களை கொண்டிரு க்கும் சமயம்கூட எங்கள் சைவசமயமே ஆகும்.! இசையினால் இறைவனை அடைய லாம் என்னும் பாங்கில் பண்கள் பல கொண்ட பக்திப் பனுவல்களை தன்னகத்தே வைத்திருக்கும் சமயமும் எமது சைவசமயமே ஆகும். ! 
    எங்கள் சைவசமயம் இறைவழிபாட்டினை இலகுவாக்குவதற்கு பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவு என்பது மிகவும் முக்கியமானது. அதேவேளை அந்த முக்கியமான உணவுகூட  எங்களின் உள்ளத்தை , உடல் நலத்தைக் கூட பாதித்தும் விடலாம். அதனால் உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும் , வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதை எமது சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  " விரதம் " என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்பு படுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முகியத்துவமும் பெருமையும் உடையதாக சைவர்களால் கருதப்படுகிறது.


மெல்பனில்" இலங்கையில் பாரதி" நூல் அறிமுகம்:

.

மெல்பனில் இலங்கையில் பாரதி நூல் அறிமுகம்:

தமிழக வாசகரின்  பார்வையில் -   இலங்கையில் பாரதி 

மகாகவி பாரதியின் மறுபக்கங்களையும் பதிவுசெய்யும் நூல் !!  

                                                   சங்கர சுப்பிரமணியன்



மெல்பனில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை கேசி தமிழ்மன்றத்தின் தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், அண்மையில் சிட்னியில் மறைந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்களின் நினைவரங்கில் எழுத்தாளர் முருகபூபதியின் – இலங்கையில் பாரதி – ஆய்வு  நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.
திரு. நவரட்ணம் வைத்திலிங்கம் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ந்த இவ்வரங்கில் எழுத்தாளர் திரு. சங்கர சுப்பிரமணியன் நூலை அறிகப்படுத்தி உரையாற்றினார்.
தமிழ் மூத்தபிரஜைகள் அமைப்பின் தலைவர் திரு. சிவசுப்பிரமணியம், எழுத்தாளர் திருமதி சகுந்தலாதேவி கணநாதன் ஆகியோர் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

திரு. சங்கரசுப்பிரமணியன் சமர்ப்பித்த நூல்  நயப்புரை இங்கு பதிவாகின்றது.

    பாட்டுக்கொரு பாரதி, ஏட்டுக்கொரு பூபதி. ஓடிவிளையாடு பாப்பா என்றார், சுப்பிரமனிய பாரதி தேடி நல்ல நூலைப்படி என்கிறார், நமது முருகபூபதி.

சினிமா - மாஃபியா திரை விமர்சனம்

.

Add caption
அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இதனால் அடுத்தடுத்த முயற்சிகளை மிக கவனமாக எடுத்து வைக்கின்றார். அதே போல் துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேனுடன் கைக்கோர்த்த அருண்விஜய் தன் இடத்தை மீண்டும் தக்க வைத்தாரா பார்ப்போம்.

கதைக்களம்

அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் பணிபுரிகிறார். அவருடைய டீமில் ப்ரியா மற்றும் ஒரு இளைஞர். சென்னையின் முக்கியமான இடங்களில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் இருக்கு போதை பழக்கத்தை கண்டறிகின்றார்.
இதையெல்லாம் செய்வது பிரசன்னா என்று இரண்டு பேருக்கு மட்டுமே தெரிய பிரசன்னா அவர்களையும் கொல்கிறார். அருண்விஜய் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவருக்கு ஒரு லீட் கிடைக்கிறது.
அதை வைத்து பிரசன்னாவை தன்னை தேடி வர வைக்கலாம் என முடிவு செய்ய, ஆனால், பிரசன்னா அருண்விஜய் குடும்பத்தை தூக்குகிறார். பிறகு அருண்விஜய் பிரசன்னாவை தேடி செல்ல அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

வேம்படி மகளிர் பழைய மாணவர் சங்கம் - சிட்னி வழங்கும் சிறப்புப்பட்டிமன்றம் 29/02/2020








ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவில் மகோற்சவம் 13/02/2020 - 23/02/2020