சிட்னி முருகன் ஆலய கொடியேற்றத் திருவிழா 14/03/2016
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 14 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்து 25 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 23 ம் திகதியும் பூங்காவனம் 24 ம் திகதியும் இடம்பெற உள்ளது.
மார்ச் மாதம் 14 ம் திகதி இடம்பெற்ற - கொடியேற்றத் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது .அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.
சட்டப் பீச்சல் By எச்.ஏ. அஸீஸ்
.
ஹல்ப்ஸ்டோப்பில்
சட்டத்தைப் பீச்சுகின்ற
காகங்களைக் கண்டேன்
ஒன்றோடு ஒன்று
சொண்டோடு சொண்டு தட்டி
இரண்டு காகங்கள்
மேலே கதைத்திருந்தன
என்ன வழக்கோ என
வியந்து கொண்டேன்
இன்னொரு காகம்
எதையோ இழந்தது போல்
தெறித்துத் தெறித்துக்
கத்துவது கேட்டது
என்ன வழக்கோ அது
நான் அறியேன்
ஹல்ப்ஸ்டோப்பில் மட்டும்தான்
காகங்கள் நூறு நூறாய்
கூடு கட்டி வாழ்கின்றனவோ
காகம் ஒன்றின் வெள்ளைப் பீச்சல்
என் தலையில் விழுந்து தெறித்தது
கண்கள் தப்பின
என் சட்டைப் பைக்குள்
இருந்ததை எல்லாம்
கவ்விப் பறந்தது காகம்
பறந்தது எங்கோ உயர
நான் பார்த்துக் கொண்டே இருக்க
இது காகங்களின் வர்த்தக வலயம்
எல்லாம் கறுப்பு
நண்பனிடம் சொன்னேன்
எல்லாக் காகங்களும்
பீச்சுவதில்லை இவ்வாறு
எல்லாக் காகங்களும்
கவ்வுவதுமில்லை
நண்பனே
ஹல்ப்ஸ்டோப்பில்
சட்டத்தைப் பீச்சுகின்ற
காகங்களைக் கண்டேன்
ஒன்றோடு ஒன்று
சொண்டோடு சொண்டு தட்டி
இரண்டு காகங்கள்
மேலே கதைத்திருந்தன
என்ன வழக்கோ என
வியந்து கொண்டேன்
இன்னொரு காகம்
எதையோ இழந்தது போல்
தெறித்துத் தெறித்துக்
கத்துவது கேட்டது
என்ன வழக்கோ அது
நான் அறியேன்
ஹல்ப்ஸ்டோப்பில் மட்டும்தான்
காகங்கள் நூறு நூறாய்
கூடு கட்டி வாழ்கின்றனவோ
காகம் ஒன்றின் வெள்ளைப் பீச்சல்
என் தலையில் விழுந்து தெறித்தது
கண்கள் தப்பின
என் சட்டைப் பைக்குள்
இருந்ததை எல்லாம்
கவ்விப் பறந்தது காகம்
பறந்தது எங்கோ உயர
நான் பார்த்துக் கொண்டே இருக்க
இது காகங்களின் வர்த்தக வலயம்
எல்லாம் கறுப்பு
நண்பனிடம் சொன்னேன்
எல்லாக் காகங்களும்
பீச்சுவதில்லை இவ்வாறு
எல்லாக் காகங்களும்
கவ்வுவதுமில்லை
நண்பனே
ஓர் இசைப் பாரம்பரியம் மேடை ஏறுகிறது - பராசக்தி சுந்தரலிங்கம்
.
லக்ஷ்மி நுண்கலைக் கழகத்தின் ஆதரவிலே இன்று மார்ச் 12'ம் திகதி 2016 -சிட்னி பரமட்டா ரிவர் சைட் அரங்கிலே செல்வி மதுவந்தி பகீரதனின் இசைஅரங்கேற்ற நிகழ்வு பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தது
திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா என்றால் இலங்கையிலே தெரியாதவர்கள் இருக்க முடியாது. இலங்கையின் எம் எஸ் சுப்புலட்சுமி என்று இசை ;உலகிலே பெயர் பெற்று ஒரு சங்கீத பரம்பரையைத் தோற்றுவித்தவர்.--அவரின் சகோதரி ;தனலக்ஷ்மி சண்முகராஜாவும் சிறந்த பாடகி. இருவருமே இலங்கை வானொலிக் கலைஞர்கள்.இவர்களின் வாரிசு செல்வி மதுவந்தி -
-தனலக்ஷ்மியின் மகள் பாடகி கேதீஸ்வரி பகீரதனின் மகள்.இவர் .
.இந்தப் பாரம்பரியத்திலே வந்த.மதுவந்தி நாம் கேட்டு மகிழ்ந்த அந்த இசை உலகை மீண்டும் எங்களுக்கு வழங்கி மகிழ்வித்துவிட்டார் என்பது பெருமையாக இருக்கிறது
இதிலே வியப்பொன்றும் இல்லை ! மதுவந்தி என்னும் அழகிய ராகத்தைப் பெயராகக் கொண்டுள்ள பாடகி வேறு எப்படி இருக்க முடியும் !
அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்
.
இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்.அவருக்கு வயது 82.
இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்.அவருக்கு வயது 82.
அமிர்தலிங்கம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து லண்டனில் வசித்து வந்த அவரது மனைவி, மங்கையர்க்கரசி நேற்று கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று , புதன்கிழமை மாலை அவர் காலமானார் என்று அவரது மகன்களில் ஒருவரான, டாக்டர் ஏ.ஆர்.பகீரதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
மங்கையர்க்கரசி 1933ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தேதி, இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அருகிலிலுள்ள மூளாய் என்ற இடத்தில் பிறந்தார். ராமனாதன் கல்லூரியில் இசை பயின்ற அவர், பின்னர் 1954ல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான, அமிர்தலிங்கத்தை மணந்தார்.
அருண். விஜயராணி விட்டுச்சென்ற பணிகளை தொடருவோம் - சகுந்தலா பரம்சோதிநாதன்
.
மெல்பனில் கடந்தவாரம் நடந்த அனைத்துலகப்பெண்கள் தினவிழாவில் இடம்பெற்ற
நினைவரங்கில் திருமதி அருண்.விஜயராணிக்காக நிகழ்த்தப்பட்ட நினைவுரை.
அகில உலக பெண்கள் தின விழாவை ஏற்பாடு செய்துள்ள அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கும் இந்த அமைப்பின் தலைவர் , விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைவருக்கும் வணக்கம்.
அருண். விஜயராணி அவர்களின் திருமண நிறைவு வெள்ளிவிழாக்காலத்தில் வாழ்த்திப்பேசியிருக்கும் நான், எதிர்பாரதவிதமாக இன்று அவருக்கான நினைவுரையை சமர்ப்பிக்க வந்துள்ளதை நினைக்கும்பொழுது மனதில் ஆழ்ந்த துயரம் வருகிறது.
இந்த பூவுலகிற்கு வந்தவர்கள் அனைவரும் என்றாவது ஒரு நாள் விடைபெறவேண்டும் என்பதுதான் வாழ்வின் விதியாகும். ஆனால், குறைந்த வயதில் எமக்கு நான்கு தெரிந்தவர்,
நெருக்கமாக உறவாடியவர் பிரியும்பொழுது அந்தத்துயரை எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை.
என்றாலும் அத்தகைய ஒருவரினால் ஏற்பட்டுவிடும் வெற்றிடம் என்றும் வெற்றிடமாகத்தான் இருக்கவேண்டுமா.... ? என்பதற்காகத்தான் நினைவு நிகழ்ச்சிகள், அஞ்சலிப் பிரார்த்தனைகள் எம்மக்கள் மத்தியில் நடக்கின்றன.
ஒருவரினால் ஏற்படும் வெற்றிடத்தை பல வழிகளில் நாம் நிரப்ப முடியும். அதற்கு முன்னர் மறைந்தவரின் சமூகப்பயன்பாடு பற்றி நாம் ஆழ்ந்து பார்க்கவேண்டும்.
அஞ்சலிக்குறிப்பு - புன்னியாமீன் என்ற புண்ணியவான் - முருகபூபதி
.
புன்னியாமீன் என்ற புண்ணியவான் அயராமல் மேற்கொண்ட ஆவணப்பணிகள். புறக்கணிப்புகளுக்கு மத்தியிலும் சோர்வடையாமல் இயங்கிய பேராளுமை
கடந்த சில ஆண்டுகளாகவே பல ஆளுமைகள் எம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டிருக்கும் துயரம் கப்பிய காலத்தை நாம் கடந்துகொண்டிருக்கின்றோம்.
அண்மைக்காலத்தில்
யாழ்ப்பாணத்தில் பாடலாசிரியர் கமலநாதன், நாடகக்கலைஞர் அரசையா, ஊடகவியலாளர்கள் சிவராஜா கேசவன், நவரட்ணராஜா, அவுஸ்திரேலியாவில் அருண். விஜயராணி என்ற
வரிசையில் கடந்த 10 ஆம் திகதி கண்டியில் கலாபூஷணம் பி.எம். புன்னியாமீன் அவர்களும் விடைபெற்றுவிட்டார்.
அன்னாரின் ஜனாசா அன்றையதினமே இலங்கை
நேரப்படி இரவு 8
மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
புன்னியாமீன் அவர்களின் மருமகனுடன் உரையாடி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துவிடடே இந்த அஞ்சலிக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன்.
தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்: - அ. முத்துகிருஷ்ணன்
.
மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். முகாமில் இருப்பவர்களை ஊர்நுஊமுஐNபு செய்கிறோம்இ சுழுடுடு ஊயுடுடு எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்றுஇ அதற்கு ஒரு உறுதியான நாள்இ நேரம் கிடையாது. இவர்களில் வேலைக்கு செல்லும் ஆண்கள்ஃ பெண்கள்இ பள்ளிஃகல்லூரியில் பயிலுபவர்கள் என அனைவரும் இவர்கள் அழைக்கும் போது எல்லாம் அந்த ஊர்நுஊமுஐNபுக்கு வந்து விட வேண்டும். இந்த ஊர்நுமுஊஐNபு என்பது மாதம் ஒருமுறையாக இருந்து பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறையாக மாறிஇ இப்பொழுது வாரத்திற்கு மூன்று நாட்கள் வரை என அவர்கள் நினைத்த படியெல்லாம் வடிவம் எடுக்கும்.

உலகச் செய்திகள்
மாயமாகிய மலேஷிய விமானம் : இன்றுடன் (08/03/2016) இரண்டு வருடங்கள் பூர்த்தி
'@' குறியீட்டை கண்டுபிடித்த டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் காலமானார்
இ-மெயிலை கண்டுபிடித்தது நான், அங்கீகாரம் வேறொருவருக்கா.? அய்யாதுரை ஆதங்கம்
பேஸ்புக் குறை கண்டு பிடித்தவருக்கு 22 இலட்சம் பரிசு (வீடியோ)
ஆடைகளை களைந்து வீதியில் பெண்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு )
அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரான் இரு புதிய ஏவுகணைகளை ஏவி பரிசோதிப்பு
செங்கைஆழியான் பார்வையில் முருகபூபதியின் சமாந்தரங்கள் சிறுகதைத்தொகுதி
.
" சமூகம் இப்படித்தான் இருக்கும். எப்படி இருக்கவேண்டும் என்பதை சித்திரிப்பதே எழுத்தாளன் கடமை "
(தமிழ்நாடு தமிழ்ப்புத்தகாலயம் வெளியீடான முருகபூபதியின் இரண்டாவது கதைத்தொகுதி சமாந்தரங்கள் குறித்து செங்கைஆழியான் 1988 ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான மல்லிகையில் எழுதிய விமர்சனம்.
குறிப்பிட்ட மல்லிகை இதழின் முகப்பை அலங்கரித்தவரும் செங்கைஆழியான்தான். " எழுதுவதில் இன்பம் காண்பவர் " என்ற தலைப்பில் நா.சுப்பிரமணியன் செங்கைஆழியான் பற்றிய குறிப்புகளை இவ்விதழில் எழுதியிருந்தார். சுப்பிரமணியன் தற்பொழுது கனடாவில் வசிக்கிறார். முருகபூபதி அவுஸ்திரேலியாவில். செங்கைஆழியான் விடைபெற்றார்.
அன்னாரின் நினைவாக சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய விமர்சனம் இங்கு பதிவாகிறது )
ஈழத்து ஆக்கவிலக்கியத் தடத்தில் கடந்த பதினைந்தாண்டுகளாக பயணம்செய்து, இன்று தன்னை தக்கதோர் சிறுகதை ஆசிரியராக இனங்காட்டி, இலக்கிய இலக்கினை நோக்கிச்சோர்வடையாது தொடர்ந்து பயணம் செய்துவருபவர் லெ. முருகபூபதி எனக்கருதுகின்றேன்.
இடைநடுவில் தம் ஆக்கவிலக்கியப்பணியை முடித்துக்கொண்டு ஒதுங்கியவர்களும், தடம்மாறிப் போனவர்களும், உள்ளார்ந்த ஆற்றல் வற்றிப்போனவர்களும் முருகபூபதியின் தொடர் யாத்திரையின் இளைப்பாறு மடங்;களாயினர்.
மதுவந்தி பாடிய யோகர்சுவாமியின் நற்சிந்தனை பாடல்
.
மதுவந்தி பகீரதன் சனிக்கிழமை 12 03 2016 அன்று வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தில் பாடிய சிவ யோகர்சுவாமியின் நற்சிந்தனை பாடல்
மதுவந்தி பகீரதன் சனிக்கிழமை 12 03 2016 அன்று வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தில் பாடிய சிவ யோகர்சுவாமியின் நற்சிந்தனை பாடல்
இலங்கைச் செய்திகள்
ஊடகவியலாளர் நவரட்ணராஜா காலமானார்
பாக். ஜனாதிபதி இலங்கை வந்தார்
தாய்லாந்து பிரதிப் பிரதமர் இலங்கை வந்தார்
யோஷிதவின் பிணை மனு : மார்ச் 14இல் இறுதி முடிவு
வீட்டு வேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கறுப்பு ஆடை அணிந்து பெண்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
துபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற சாஞ்சிமலை தோட்ட பெண் மரணம்
மூழ்கிய மதஸ்தலங்கள் மீண்டும் வெளியில்
காணாமல்போனோரின் உறவுகள் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு : வங்கிக் கணக்குகள் முடக்கம்
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் விமான நிலையத்தில் கைது
ஹட்செசன்- சம்பந்தன் பேச்சுவார்த்தை
அட்டன் நுவரெலியா பிரதான வீதியை மறித்து 300 க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரின் பாரியார் காலமானார்
பஷில், திவிநெகும திணைக்கள முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை
யோஷித்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
ஒரு வலிமையான பெண்மணி.. திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்
.
தனது மதுரக் குரலால் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பியது இன்னமும் கண் முன்னே இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 1983 இற்கு பின்னர் தமிழ் நாட்டில் அஞ்ஞாத வாசம் செய்த போது அவ்வப் போது அமிர் அண்ணனை சந்திக்க செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் விருந்தோம்பல் செய்வது கண் முன்னே வந்து செல்கின்றது. எமக்குள் பல அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அமிர்தலிங்கத்தின் கொலையை நாம் என்றும் ஏற்கவில்லை இவரின் மரணச் சடங்கை செய்ய யாவரும் பயந்திருந்த வேளை அவ்வேளை இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை ஆட்சி செய்த ஈபிஆர்எல்எவ் இனர் வடக்கு கிழக்கு எங்கும் அமிரின் பூத உடலை எடுத்துச் சென்று உரிய மரியாதையுடன் அடகம் செய்த போது இறுதியாக இவரை சந்தித்தது மட்டும் ஞாபகம். அமிருடன் இணைந்து செயற்பட்ட ஒரு வலிமையான பெண்மணி.. மனது கனக்கின்றது. தைரியமாக பெண்களையும் வீதிக்கு இறக்கி சத்தியாக்கிரகம் என்ற சாத்வீகப் போராட்டத்தில் ஆண்களுக்கு சமனாக சமராடிய உன்னத செயற்பாடு என்னை இவர்பால் விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இடதுசாரியத்திற்கு எதிரான இவர்களின் நிலைப்பாடு என்னை எப்போதும் இவர்கள் மீது முரண்பாட்டை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்திய உழைப்பில் அமிர் அண்ணாவுடன் தோள் கொடுத்து செயற்பட்டது வரலாற்றில் இடம்பெற்றுத்தான இருக்கப்போகின்றது. முரண்பாடுகளை பேசும் ஒரு வகை அலைவரிசையை இந்தத்தம்பதியினர் கொண்டிருந்ததும் வேறு எந்த மிதவாதத் தலைவர்களிடமும் இல்லாத சிறப்பு அம்சம்ஆழ்ந்த வருத்தங்கள் அமிருடன் அவரின் சகாத்தம் முடிந்துவிட்டது என்ற ஆதங்கங்களும் உண்டு.
Nantri Facebook Siva Easwaramoorthy
தனது மதுரக் குரலால் தமிழ் இளைஞர்களை தட்டி எழுப்பியது இன்னமும் கண் முன்னே இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 1983 இற்கு பின்னர் தமிழ் நாட்டில் அஞ்ஞாத வாசம் செய்த போது அவ்வப் போது அமிர் அண்ணனை சந்திக்க செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் விருந்தோம்பல் செய்வது கண் முன்னே வந்து செல்கின்றது. எமக்குள் பல அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அமிர்தலிங்கத்தின் கொலையை நாம் என்றும் ஏற்கவில்லை இவரின் மரணச் சடங்கை செய்ய யாவரும் பயந்திருந்த வேளை அவ்வேளை இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை ஆட்சி செய்த ஈபிஆர்எல்எவ் இனர் வடக்கு கிழக்கு எங்கும் அமிரின் பூத உடலை எடுத்துச் சென்று உரிய மரியாதையுடன் அடகம் செய்த போது இறுதியாக இவரை சந்தித்தது மட்டும் ஞாபகம். அமிருடன் இணைந்து செயற்பட்ட ஒரு வலிமையான பெண்மணி.. மனது கனக்கின்றது. தைரியமாக பெண்களையும் வீதிக்கு இறக்கி சத்தியாக்கிரகம் என்ற சாத்வீகப் போராட்டத்தில் ஆண்களுக்கு சமனாக சமராடிய உன்னத செயற்பாடு என்னை இவர்பால் விமர்சனங்களுக்கு அப்பால் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இடதுசாரியத்திற்கு எதிரான இவர்களின் நிலைப்பாடு என்னை எப்போதும் இவர்கள் மீது முரண்பாட்டை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்திய உழைப்பில் அமிர் அண்ணாவுடன் தோள் கொடுத்து செயற்பட்டது வரலாற்றில் இடம்பெற்றுத்தான இருக்கப்போகின்றது. முரண்பாடுகளை பேசும் ஒரு வகை அலைவரிசையை இந்தத்தம்பதியினர் கொண்டிருந்ததும் வேறு எந்த மிதவாதத் தலைவர்களிடமும் இல்லாத சிறப்பு அம்சம்ஆழ்ந்த வருத்தங்கள் அமிருடன் அவரின் சகாத்தம் முடிந்துவிட்டது என்ற ஆதங்கங்களும் உண்டு.
Nantri Facebook Siva Easwaramoorthy
மெல்பனில் பெண்ணிய கருத்துக்கள் சங்கமித்த அகில உலக பெண்கள் தினவிழா
அவுஸ்திரேலியத் தமிழ்
இலக்கிய கலைச்சங்கத்தின் அகில உலகப்பெண்கள் தினவிழா கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜாவின் தலைமையில் நடந்தது.
சங்கத்தின் துணைச்செயலளார் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா ஒருங்கிணைத்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
திரு. கணநாதன், திருமதி சகுந்தலா கணநாதன் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்தனர்.
திரு. நாகராஜாவின் வாழ்த்துப்பாடலும் கலைஞர் சந்திரசேகரத்தின் நடனமும் இடம்பெற்றது.
கவிஞர் கல்லோடைக்கரன் தலைமையில் கவியரங்கும், ரேணுகா சிவகுமாரன் தலைமையில் விவாத அரங்கும் திருமதி சாந்தினி புவேனேந்திரராஜா தலைமையில் கருத்தரங்கும் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நினைவரங்கும் இடம்பெற்றன.
நினைவரங்கில் அண்மையில்
மறைந்த பெண்ணிய படைப்பாளிகள் அருண். விஜயராணி நினைவுரையை திருமதி சகுந்தலா பரம்சோதிநாதனும், தமிழினி நினைவுரையை திரு. தெய்வீகனும் நிகழ்த்தினர். தமிழக காலச்சுவடு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடான தமிழினியின் தன்வரலாற்று
நூல் ஒரு கூர்வாளின் நிழலில் பற்றிய அறிமுகமும் நினைவுரையில் இணைந்திருந்தது.
Subscribe to:
Posts (Atom)