உயிர்காற்றிற்கு அஞ்சாதொரு கடற்காற்றில் அறப்போர்.. (கவிதை) வித்யாசாகர்!



pover

ரு பிடி வீரம்
உலுக்கிப்போனதிந்த நகரம்
ஒரு அறமமேந்தியப் போர்
உடைந்துபோனது இந்திய முகம்;

ஒரு காட்சி
விழுங்கித் தின்கிறது பகலையும் இரவையும்
உயிர் சாட்சி
ஒருங்கே நின்றது ஆணும் பெண்ணும்;;

சிறு கடலடி
சினத்தில் பொங்கியது மானம்
இனி ஒரு கொடி
இரண்டாய் ஆனாலும் ஆகும்;

எவர் இவர்
எம் உரிமை பறித்தல் தீது
எது வரினு மெமது
வாக்கு வெல்வதே மாண்பு;

Rudra Abhishekam - Sydney Durga Temple - 19/02/207



நாமுணர்வோம் !


image1.JPG



                               நாமுணர்வோம் !
  
     ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )  

         முள்ளிருக்கும் செடியினிலே
         முகிழ்த்துவரும் ரோஜாவே 
         முள்பற்றி எண்ணாமல்
         முறுவலுடன் மலர்ந்துநிற்கும்
         நல்லவர்கள் வாழ்வினிலே
          நஞ்சுநிறை முள்வரினும் 
          மெல்லவரும் விலக்கிநின்று
           நல்லவற்றை நமக்களிப்பர்  !


இலங்கையில் பாரதி அங்கம் -08 

முருகபூபதி - அவுஸ்திரேலியா

நண்பனுக்கு மற்றும் ஒரு பெயர் மித்திரன். மனிதவாழ்வில் நட்புக்கு மகத்தான அர்த்தம் உள்ளது. நட்பு வலிமையானது. நண்பர்களிடையே உருவாகும் பிரிவு வலிதரக்கூடியது. அத்தகைய பிரிவுகள் வரும்பொழுது பாதிப்புக்குள்ளாகும் நண்பர்கள் விதியையே நொந்துகொள்வார்கள்.
அதனால் விதியும் வலியது. பாரதி விதி குறித்தும்நட்புதொடர்பாகவும் கவிதைகள்  எழுதியிருப்பவர். பாரதியின் நண்பர்கள் சாமியார்களாகவும் எழுத்தாளர்களாகவும்சாதாரண கூ
கடந்த அங்கத்தில்  வீரகேசரியில் பாரதியின் தாக்கம் பற்றிய குறிப்புகளையும்  சலசலப்பு ஏற்படுத்திய விவாதங்கள் பற்றியும் எழுதியிருந்தோம். 
வீரகேசரி 1965 காலப்பகுதியில் ஒரு மாலைத்தினசரியை வெளியிடத்தொடங்கியது.  இந்தியாவில் பாரதியார் சுதேச மித்திரன் பத்திரிகையில்  பணியாற்றியவர். சுதேசிகள் மத்தியில் வாழும நண்பர்களை  இணைக்கும் விதமாக அன்று அவர் அதில் தமது வலிமையான எழுத்துக்களை  வெளியிட்டார்.
சுதேசமித்திரன் இலங்காமித்திரன்இஸ்லாமிய மித்திரன்முஸ்லிம் மித்திரன்மலாயா மித்திரன்உத்தம மித்திரன்முதலான சில பத்திரிகைகள் இலங்கைஇந்தியாமலேசியா முதலான நாடுகளில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. மலேசிய நண்பன் என்றும் ஒரு பத்திரிகை மலேசியாவில் வெளியாகிறது.
தமிழ் வாசகர்களின் நண்பனாக  இலங்கையில் மித்திரன் வெளியானது.
வீரகேசரி  தேர்ந்த  வாசகர்களுக்காக வெளிவந்தாலும்வாசகபரப்பில் மற்றும்  ஒரு  சாராருக்காக   மாலைத்தினசரியாக  கொழும்பிலிருந்து வெளியான மித்திரன்வேலை முடிந்து வீடு திரும்பும் வாசகர்களின் தேவையை  பூர்த்திசெய்தது.

ராஜ ஶ்ரீகாந்தனின் "காலச் சாளரம்" - கானா பிரபா


எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களைப் பற்றிப் புலம் பெயர்ந்த பின்பு தான் அதிகம் அறிந்து கொண்டேன். நான் தாயகத்தில் இருந்த போது  மல்லிகை இதழில் அவரின் எழுத்துகளைப் படித்திருக்கக் கூடும். அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் "ராஜ ஶ்ரீகாந்தன் நினைவுகள்" என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அவர் வழியாகவும், மறைந்த அன்புச் சகோதரி, எழுத்தாளர் திருமதி அருண்விஜயராணி வழியாகவும் அவர் பற்றி அறிமுகம் கிட்டியது, ஏன் இந்த நூல் கூட அருண் விஜயராணி அக்கா தன்னிடமிருந்த ஒரு தொகுதி நூலை எனக்கு அனுப்பிய போது கிட்டியது தான்.

காலச் சாரளம் என்ற நூல் ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியாக,  எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ஓகஸ்ட் 1994 இல் வெளியிட்டது.

ஈழத்தின் வடமராட்சிப் பிரதேசத்தின் குறிச்சியாக விளங்கும் வதிரி மண்ணின் மைந்தன் ராஜ ஶ்ரீகாந்தன். காலச் சாளரம் சிறுகதைத் தொகுதியின் 12 சிறுகதைகளில் மண் வாசனை தழுவிய கதைகள் வரணி மண்ணையே பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களுடைய எழுத்தைப் புதிதாக நுகரும் வாசகனாகவே அணுகி இந்தச் சிறுகதைத் தொகுதியை வாசித்து முடித்த போது எழுந்த உணர்வு என்னவெனில், தான் எடுத்துக் கொண்ட கதைப் பொருளை எடுத்து அமர்த்தும் அந்த உலகத்தை வாசகனுக்குக் காட்ட முனையும் போது கையாளும் வர்ணனை, அவரின் தொழில் சார்ந்த அனுபவங்களைக் கதைகளின் ஓட்டத்துக்குக் கையாண்ட திறன் இவற்றின் மூலம் ஈழத்தின் மிகச் சிறந்த கதை சொல்லியாக மனதில் அமர்கிறார். இவர் எழுதியவை சொற்பம், இன்றைய வாசகர்களுக்கும் இவை பரவலாகப் போய்ச் சேர இந்தச் சிறுகதைகளைப் பத்திரிகைகளில் மீள் பிரசுரம் செய்தல் வேண்டும் என்னுமளவுக்கு இந்த எழுத்தின் முக்கியத்தை உணர்கிறேன்.

சிட்னியில் ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா – 21/01/2017 அன்பு ஜெயா



Inline image



கடந்த சனியன்று  மலேசியா திருமுருகன் திருவாக்குப் பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அருளாசிகளுடன் திருபீடம் பதிப்பகம் வெளியிட்ட இரண்டு ஆன்மீக நூல்கள் சிட்னி முருகன் கோயில் மண்டபத்தில் வெளியிடப்பட்டன.
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதிய LORD OF DANCE’  என்ற நூலினையும்சிவஞானச்சுடர் அன்பு ஜெயா அவர்கள் எழுதிய திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகைஎன்ற நூலினையும் பாராளுமன்ற உறுப்பினர் ஜூலி ஓவன்ஸ் வெளியிட முதல் பிரதியை முறையே வைத்திய கலாநிதி மனோமோகன் , கலாநிதி ராசய்யா ரவீந்திரராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  சிறப்பு பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஜூலிய பின்ஸ் பெற்றுக்கொண்டார்.
திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகைஎன்ற நூலினை  சித்தாந்தரத்தினம் திருமதி கேசினி கோணேஸ்வரனும்,  ‘LORD OF DANCE’  என்ற நூலினை ரோட்டரி சங்க  துணை ஆளுநர் பிப் டெனிஸ்சும்  அறிமுகம் செய்துவைத்தனர்.  

குருவின் கலவி


குருவின் கலவி

.

குருவியின்
கவிதைகள்
தனிப்பட்ட
விமர்சனம் அல்ல

எனக்காக
எழுதும்
எழுத்துக்கள்

நான்
கை விரல்
பிடித்து காலாற
நடந்த நினைவுகளை
தாலாட்டி பார்ப்பேன்

தாயின் மடி
விழுந்து
நரைத்த முடி
தழுவி
செல்ல
கேலி செய்யும்
மந்திர புன்னகையை
சொல்லி பார்ப்பேன்.......

என்னை வம்புக்கு
இழுக்கும் அத்தை
மகள்களை
ரசித்த கதையை
கற்பனையில்
கொண்டு வருவேன் ....

தங்கை
கன்னத்தை
கிள்ளி
சிவக்கிறதா...என
பார்த்து
கருவாச்சி அவளை
கண்ணடித்ததை
கருவாக்குவேன் .... 

ஜீவநதி 100


ஈழத்து இலக்கிய உலகில் பல நூறு சஞ்சிகைகள் இதழ் விரித்துப் போயிருக்கின்றன. இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய சஞ்சிகைகளில் ஒன்றாகவும், காத்திரமான படைப்புகளால் தன் தனித்துவத்தைப் பேணும் வகையிலும் ஜீவநதி சஞ்சிகை வெளிவருவது போற்றிப் பாராட்ட வேண்டியது.

ஈழத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் என் வீடு தேடி வரும் அச்சு இதழாக, என் கையில் கிட்டும் போது அதை நெருக்கமாக நுகரும் ஒரு உணர்வு.
வணிக சமரசங்கள், பொழுது போக்கு நிரப்பல்கள் இன்றி அது தரும் காத்திரமான இலக்கியப் பேட்டிகள், விமர்சனங்கள், சிறுகதைகள் என்று ஈழத்து இலக்கிய உலகின் விசாலமான பார்வையின் திண்ணையாகவே இருக்கிறது.

தோப்பூர் மகாராஜா - கே.எஸ்.சுதாகர்


காரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு முதிய கம் மரத்தில் ஒரு சோடிக்கிளிகள். கிங் பறற்---யாழ்ப்பாணத்து பச்சைக்கிளிகள் போல அல்ல--- ஆண் கிளிக்கு சிகப்புத்தலை, பெண்கிளிக்கு பச்சைத் தலை. அதனைப் பார்த்து ரசித்த எனக்கு, அதன் ஓரமாக அமைந்த அழகான அந்த வீட்டைப் பார்க்க ஆத்திரமாக வந்தது.

யாழ்ப்பாணத்தில் தோப்பு என்ற ஊரில், ஒரு ஓலைக்குடிசையில் வாழ்ந்த ராஜசிங்கம் – அவுஸ்திரேலியா வந்து, அடுத்தவரை ஏமாற்றி அடாத்து வேலைகள் செய்து கட்டிய வீடு அது.

புதிய வீடு. ஹோலிங் பெல் கூடப் பளிச்சிட்டது. அழுத்திவிட்டு நின்றேன். ஒருவரும் வந்து கதவைத் திறக்கவில்லை. கைத்தொலைபேசி மூலம் ராஜசிங்கத்துடன் தொடர்பு கொண்டேன்.

வீட்டின் மேல் மாடியில் ரியூசன் கொடுத்துக் கொண்டிருந்த ராஜசிங்கத்தின் கைத்தொலைபேசி ‘என்னவளே அடி என்னவளேஎனப் பாடியது கேட்டது. ரெலிபோன் நம்பரைப் பார்த்துவிட்டு அடித்து வைத்துவிட்டான் ராஜசிங்கம். சற்று நேரத்தில் ஜன்னல் சீலை சிரித்தது. எட்டி வீதியைப் பார்த்தான் அவன்.

பொறுமை இழந்த நான் வீட்டின் கதவைக் கைகளால் அடித்தேன். குசினிக்குள் அப்பொழுதுதான் காலை ஆகாரத்தை முடித்து ஏப்பம் விட்டபடி கதவைத் திறந்தார் பொன்னுத்துரை.

“எட தம்பி... கணேஷ். நீயே கதவை விழுத்திறமாதிரி அடிச்சனி. வாடாப்பா... வா... கனகாலம் கண்டு. ஊரிலை அப்பா அம்மா எப்பிடிச் சுகமா இருக்கினமே!

“எங்கை ராஜா அண்ணை... நான் அவரோடை ஒருக்காக் கதைக்க வேணும்?
“மகன் மேலுக்கு ரியூசன் குடுத்துக் கொண்டிருக்கிறான். வாரும்... வந்து இரும் கணேஷ்.

பொன்னுத்துரை என்னை உற்றுப் பார்த்தார். அவர் மனம் தனக்குள் பேசியது.

கசங்கிய சட்டை, கருவாடாகிப் போன பான்ஸ். வேலை முடித்து நேரே இங்குதான் வந்திருக்கிறான் போல. வியர்வை வாடை வேறு அடிக்குது. வீட்டுக்குள்ளை கூப்பிட்டு ‘செற்றியிலைஇருத்தினா மருமகள் கத்துவாளோ

தமிழ் சினிமா

சி3   S3 (Singam 3)

ஒரு கூட்டணி ஒரு படம் ஹிட் கொடுக்கலாம் அல்லது இரண்டு படம் ஹிட் கொடுக்கலாம். தொடர்ந்து 4 படங்கள் ஹிட் கொடுத்த கூட்டணி தான் ஹரி-சூர்யா கூட்டணி. சூர்யாவிற்கு எப்போதெல்லாம் ஒரு தடுமாற்றம் வருகிறதோ, இயக்குனர் ஹரி தன் சிங்கம் சீரியஸ் மூலம் தாங்கிபிடிப்பார். அப்படி இந்த முறையும் தாங்கிபிடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

ஆந்திரா பகுதியில் ஒரு கமிஷ்னரை கொலை செய்கிறார்கள். அந்த கொலையை கண்டுப்பிடிக்க, ஆந்திரா போலிஸார் சூர்யாவை அழைக்க, அவர் அந்த கேஸை கையில் எடுக்கின்றார்.
இந்த கேஸை சூர்யா தோண்ட தோண்ட பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றது. இதில் ஆஸ்திரேலியாவில் இருந்து மெடிக்கல் கழிவுகளை இந்தியாவில் ஒரு கும்பல் கொடுக்கிறது.
இதை கண்டுப்பிடிக்கும் சூர்யா பிறகு எப்படி அந்த கும்பலை வேட்டையாடுகிறார் என்பதை ஜெட் வேகத்தில் கூறியிருக்கிறார் ஹரி.

படத்தை பற்றிய அசல்

படத்தின் மொத்த பலமும் சூர்யா தான். தன் தோளில் ஹனுமார் சஞ்சீவி மலையை தூக்கி சென்றது போல், மொத்த படத்தையும் தூக்கி செல்கிறார். அதென்னமோ போலிஸ் உடையை அணிந்தாலே சூர்யா 1000 வாலா பட்டாசாக வெடிக்கின்றார்.
அனுஷ்கா கம்பெனி ஆர்டிஸ்ட் போல் இந்த படத்திலும் வருகிறார். ஸ்ருதி சிங்கம்-2வில் ஹன்சிகா என்ன செய்தாரோ அதை தான் செய்கின்றார். சூரி பொறுமையை சோதிக்கின்றார், ரோபோ ஷங்கர் காமெடியை தவிர்த்து குணச்சித்திரமாக நடித்தது கவர்கின்றது.
படத்தின் இரண்டாவது ஹீரோ எடிட்டிங் தான், ஒரு நிமிடம் கண் இமைத்தாலும் பல காட்சிகள் ஓடிவிடுகின்றது. அதிலும் படத்தின் முதல் பாதியில் ஆந்திரா டான் ரெட்டியை சூர்யா கைது செய்ய முயற்சிக்கும் இடம் நாமே எழுந்து ஓடி விடுவோம் போல, அந்த அளவிற்கு வேகம்.
படத்தின் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் 10 கார் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதற்காக ப்ளைட்டை(Flight) கார் ஓவர்டேக் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர் ஹரி சார்.
ஹாரிஸ் சார் உங்களுக்கு என்ன தான் ஆனது, இதற்கு தேவிஸ்ரீபிரசாத்தே பரவாயில்லை என்று சொல்ல வைத்துவிட்டீர்களே. ப்ரியனின் ஒளிப்பதிவு சக்கரம் கட்டி சுழல்கிறது.

க்ளாப்ஸ்

சூர்யா இன்னும் 10 சிங்கம் எடுத்தாலும் அதே உற்சாகத்தில் மிரட்டுகின்றார்.
ஹரியின் வசனம் அதிலும் இந்தியாவின் வளங்களை பற்றி பேசுகையில் ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் உள்ளது ரசிக்க வைக்கின்றது. வட இந்தியாவிலிருந்து வந்த வில்லன் மிரட்டுகிறார்.
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங், சேஸிங் காட்சிகள்.

பல்ப்ஸ்

ஓவர் ஸ்வீட் கூட கொஞ்ச நேரம் திகட்டும் என்பது போல், மிகவும் வேகவேகமாக செல்லும் திரைக்கதையால், சில காட்சிகள் நம் எண்ண ஓட்டத்தில் இருந்து விலகியே செல்கின்றது.
சூரியின் காமெடி காட்சிகள், பாடல்கள்.

மொத்தத்தில்
 சி-3, 4Gயை மிஞ்சும் வேகம்
.
Direction:
Production:
நன்றி  cineulagam