மரண அறிவித்தல்

.

இணுவில் தெற்கை பிறப்பிடமாைவும் வசிப்பிடமாகவும் கொண் ட நாகமுத்து சின்னராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர் இணுவில் இந்துக்கல்லூரி)
1/05/19 அன்று கொழும்பில் காலமானார்  இவர் அமரர் நாகமுத்து  முத்துப்பிள் ளையின் அன்புப் புதல்வரும், அமரர் நாராயணபிள்ளை  செல்லம்மா ஆகியோ ரின் அன்பு மருமகனும், அமரர் அன்னலடசுமி சின்னராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர் இணுவில் இந்துக்கல்லூரி) அவர்களின்அன்பு  கணவரும், அமரர் தம்பிராசா,அமரர் பொன்னுத்துரை (ஓய்வுபெற்ற ஆசிரியர் இணுவில் இந்துக்கல்லூரி)),அமரர்
நேசம்மா, திரு கணேசு(ஓய்வுபெற்ற  பொறியியலாளர)் ஆகியயாரின்அன்புச்சகோதரனும், செந்தில் ராஜன் (சடட்த்தரணி சிட்னி ), வளர்மதி சுமாதரன்(உதவிஉபஅதிபர் சைவமங்கையர்
கழகம்  ,கொழும்பு) கலைமதி ஜெயபரன்(சிட்னி ), நாகராஜன்(சிட்னி),இந்துமதி சிறினிவாசன் (சிட்னி), தணிகைராஜன் (பொறியியலாளர் சிட்னி), கோமதி          ஜெயதாஸ் (கொழும்பு) ஆகியயாரின் பாசமிகு தந்தையும், சுதாகரி, சுமாதரன் , ஜெயபரன் , ஜமுனா, Dr சிறினிவாசன் , சுபாஜினி, ஜெயதாஸ்
ஆகியயாரின் அன்புமாமனாரும் ,தமிழரசி ஜெகேந்திரா, கெளரிசங்கர் ,  ஶ்ரீசங் கர் , ஜனாரத்தனி,  கெளசிகன் ,தரசிகன் , தநுஜன், பிரவீன் ,
துவாரகன் ,மாதங்கி, தேனுகா , ஜதுஜனன் , யாதவன் , அனகன்  ஆகியயாரின் பாசமிகு பேரனும் ,தமிழ்செல்வி , ஏகலைவன்  ஆகியயாரின் பாசமிகு பூடட் னும் ஆவார.்அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டு பின் னர் அவரது இல்லத்தில் ஞாயிற்றுை்கிழமை  அன்று இறுதிை்கிரிகயைள் யாவும் இடம்பெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பரை்ள் அனைவருக்கும் 
அறியத்தருகின்றோம் .

அகவை 90 காணும் கவிஞர் அம்பி - கவிஞர் செ.பாஸ்கரன்

.அகவை 90 காணும் கவிஞர் அம்பி  -  செ.பாஸ்கரன்



கொஞ்சு தமிழ் நிதமெடுத்து 
 கொஞ்சி விளையாடும் 
விஞ்சு தமிழ் வித்தகனார் 
வியக்கவைத்த கவி தந்து 
எங்கள் மனங்களிலே 
இடம் பிடித்த அம்பி ஐயா 
தன்பேனா முனையினிலே 
தமிழ் உலகை ஒன்றிணைத்தார்  
புன்முறுவல் தவளவிட்டு 
புவியோரை அரவணைத்தார் 
நல்ல பெரும் கவிஞர் 
நாடெல்லாம் போற்றுகின்ற 
வெள்ளிமுடிப்  பாவாணர் 
சிறுவர்க்கு  இலக்கியத்தை 
செப்பிவிட வேண்டுமென 
அம்பி கவிதை என்று 
அழகான கவிதந்தார் 
சாதனைகள் செய்பவரை 
போற்றுகின்ற பண்பாளன் 
மருத்துவத்தின் முன்னோடி 
சாமுவேல் கீரீனுக்கு 
ஆய்வு நூலொன்றை 
அழகாக எழுதி வைத்தார் 
இலங்கை அரசாலே 
முத்திரையும் பதிக்கவைத்தார்

அம்பி 90 பாராட்டு நிகழ்வும் சிட்னிவாழ் தமிழர்களும் - யசோதா பத்மநாதன்

.


      
’மானிலம் வாழ்கவென மழை பொழிகிறது. இருந்தும் உலக மக்களிடம் இருந்து அது எதுவித பிரதி உபகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை; கைமாறு வேண்டாமல் மனித சமுதாயம் பயன் பெற தம் வாழ்வை அர்ப்பணிப்பவரே உண்மையில் உயிர்வாழ்பவராவார்’ - இவ்வாறு தான் எழுதிய புத்தகம் ஒன்றில் கவிஞர் அம்பி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு வாழ்கிறவர் அவர். குழந்தைகவி. திரு. இராமலிங்கம். அம்பிகைபாகர்.
அவருக்கான பாராட்டு நிகழ்வொன்று நேற்றய தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு சிட்னி வாழ் தமிழ் மக்களால் பெண்டில்கில் யாழ் நிகழ்வரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யார் இந்த ‘சிட்னிவாழ் தமிழர்கள்’ எவ்வாறு இவர்கள் இப் பெயரைச் சூட்டிக் கொள்ளலாம் என்ற வினா எழலாம். அது நியாயமான கேள்வி தான். இங்கு பல்வேறு துறைசார் அமைப்புகள் பல்வேறு இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டு இயங்கி வருவது நாம் அறியாத ஒன்றல்ல. அவர்கள் தாம் சார்ந்த அமைப்புகளுடன் கொண்டிருக்கும் தொடர்பால் அந்த அமைப்பின் சாயலோ நோக்கமோ எதுவும் இல்லாது எல்லோரும் ஒன்றிணைந்து ’சிட்னிவாழ் தமிழர்கள்’ என்ற மகுடத்தின் கீழ் இணைந்து பாராட்டிக் கொண்டாட தற்காலிகமாக இணைந்த அமைப்பு தான் இந்தச் ’சிட்னிவாழ் தமிழர்கள்’

அழுகின்ற நிலைமாற ஆண்டுபல ஆகிடுமே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

                        இரக்கமின்றி கொலைசெய்ய 
image1.JPG                              எம்மதமும் சொன்னதுண்டா
                        வணக்கத்தலம் வன்முறைக்கு
                               வாய்ததென்றும் சொன்னதுண்டா 
                       அரக்ககுணம் மனமிருத்தி
                              அனைவரையும் அழிக்கும்படி 
                       அகிலமதில் எம்மதமும் 
                               ஆணையிட்டு சொன்னதுண்டா   !

                        ஈஸ்டர்தின நன்னாளில்
                              இலங்கையினை அதிரவைத்த
                        ஈனச்செயல் தனைநினைக்க 
                               இதயமெலாம் நடுங்கிறதே 
                        துதிபாடி துதித்தவர்கள்
                                 துடிதுடித்தார் குருதியிலே 
                         அதையெண்ணி அகிலமுமே
                                 அழுதேங்கி நிற்கிறதே   ! 

முருகபூபதியின் சொல்லத் தவறிய கதைகள் புத்தகம் சிட்னியில் வெளியீடு

.



எழுத்தாளர் லெ.முருகபூபதியின் “சொல்லத் தவறிய கதைகள்” சிட்னியில் வெளியீடு கண்டது

கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 27 ஆம் திகதி, சிட்னியின் மேற்குப் பிராந்தியமான Parramatta வில் கல்வி அரங்கு ஒன்றில் இந்த நூல் வெளியீடு வெகு சிறப்பாக நிகழ்ந்தது.
“சொல்லத் தவறிய கதைகள்” ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிலும், இலங்கையிலும் நூல் விமர்சன அரங்கில் வெளியிடப்பட்டாலும் சற்றுத் தாமதமாகவே சிட்னி மண்ணுக்கு வந்திருக்கிறது.

ஏற்கனவே “சொல்ல மறந்த கதைகள்”, “சொல்ல வேண்டிய கதைகள்” என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களோடு அமைந்த படைப்புகளை வழங்கிய லெ.முருகபூபதி அவர்கள் அதன் தொடர்ச்சியாக “சொல்லத் தவறிய கதைகள்” என்ற இந்த நூலைப் படைத்திருகிறார். மகிழ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

சிட்னியில் நடந்த இந்த நூல் விமர்சன அரங்கின் தலைவராக கல்விச் செயற்பாட்டாளர், இலக்கிய ஆர்வலர் திரு. திருநந்தகுமார் அவர்கள் இயங்க, வரவேற்புரையை திரு கானா பிரபா நிகழ்த்தினார்.

விமர்சன உரைகளை சட்ட வல்லு நரும்எழுத்தாளருமான கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன்கவிஞர் செபாஸ்கரன் மற்றும்
கலாநிதி மாலினி அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ந்த நூலில் தம்மைப் பாதித்த சம்பவக் கோவைகள், வரலாற்றுப் பதிவுகளைச் சிலாகித்துப் பேசினர். தொடர்ந்து ஏற்புரையை நூலாசிரியர் லெ. முருகபூபதி அவர்கள் ஏற்க இந்த விமர்சன அரங்கு இனிதே நிறைந்தது.  - கான பிரபா 

இது போலத் தானே அன்றும் தேவாலயத்துக் குழந்தைகள் இருந்திருக்கும்? கானா பிரபா

.
கடந்த சனிக்கிழமை ஏழு மணி தாண்டிய இரவில் யாழ் நகருக்கு ஆட்டோவில் பயணிக்கிறேன். பண்ணைப் பகுதியில் தரித்து நிற்கும் தனியார் பேரூந்துச் சேவை வழியாக கொழும்பு பயணமாகத் திட்டம். மணி என்னமோ எட்டு மணியைத் தொட்டாலும் யாழ்ப்பாண நகரப் பகுதி நல்லூர்த் திருவிழாக்கூட்டத்துக்கு நிகராகக் களை கட்டுகிறது. தொண்ணூறு வீதமான வியாபார நிறுவனங்கள், சிறு பெட்டிக் கடைகள் ஈறாக பர பர வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“அட இந்த நேரத்திலும்
இப்பிடி ஒரு சனக் கூட்டம்”
என்று என் வியப்பை வாய் வழியே கூறி விட்டேன்.
“ஓமண்ணை கடையள் எல்லாம் பூட்ட
இரவு பத்து மணி ஆகி விடும்”
எங்கள் இணுவிலூர் ஆட்டோக்காரரின் குரலில் புளுகம் தொனித்தது.
ஒரு காலம் இருந்தது.
எப்போது விமானம் குண்டு போடுமோ?
எப்போது இராணுவ முகாமிலிருந்து ஷெல்லடி வருமோ?
எப்போது இந்த இடத்தை விட்டு இடம் பெயரக் கூடுமோ?
என்றெல்லாம் நிச்சயமற்றதொரு வாழ்வியலைக் கொடையாகக் கொண்டது எங்கள் சனம்.
கடைக்கு முன்னால் வெடித்த குண்டு காவெடுத்த இரத்த வாடை காயுமுன்பே கழுவித் துடைத்து விட்டுக் கடையைத் திறந்து யாவாரத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இன்ன நேரம் தான் வேலை நேரம் என்றில்லை காலை ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை காலை ஒன்பதரையோடே மூடிய காலம் தான் அதிகம்.
என்னுடைய ஒவ்வொரு தாயகப் பயணத்திலும் விருந்துண்டு கொண்டாடி மகிழ்வதை விட, நான் ஓடியாடித் திரிந்த நிலங்கள் எல்லாம் அளந்தளந்து உலாத்தி விட்டு வருவது வழக்கம். பெரும்பாலும் தனியாகத் தான். அதுவும் பெரும்பாலும் சைக்கிளில் தான். நான் எப்படி இந்த நிலத்தில் இருந்து அகன்றேனோ அப்படியானதொரு பழைய நிலையில் இருந்து நிகழ்த்தும் இந்த யாத்திரை தான் எனக்கு ஆத்ம திருப்தி கொள்ள வைக்கும். அதையே தான் இந்தப் பயணத்திலும் செய்தேன். கண்டதைக் கேட்டதை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.
இம்முறை வழக்கத்துக்கு மாறாக வெளிநாட்டவர் வருகை, அதுவும் யாழ்ப்பாணமெங்கும் ஓடித் திரிந்ததைக் காண முடிந்தது. ஏதோவொரு புதிய உலகை அதிசயமாகப் பார்க்கும் வெள்ளைக்காரக் குழந்தைகளின் வியப்பில் நானும் பங்கு போட்டேன்.

கண்ணீர் அஞ்சலிக் குறிப்புகள் "ஏலி! ஏலி! லாமா சபக்தானி " - " என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் " - முருகபூபதி


கடந்த 21 ஆம் திகதி முதல் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. மிகுந்த மன உளைச்சலுடன்தான் இந்தப்பதிவை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.
புலம்பெயர்ந்து வந்தபின்னர், எமது தாயகத்தில் நிகழ்ந்த வன்முறைகளின்போதும், முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்கள் அழிக்கப்பட்ட காலப்பகுதியிலும், சுநாமி உட்பட இயற்கை அநர்த்தங்கள் வந்தவேளையிலும் இருந்த மனநிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டிருக்கும் எனக்கு,  எனது  மனதில்  அந்தகாரம் சூழ்ந்திருப்பதாகவே உணருகின்றேன்.
அவ்வாறன மனத்தாக்கத்திற்கான காரணத்திற்குட்பட்ட  சொல்ல முடிந்த கதைகள் பல இருக்கின்றன.
நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த,  கல்வி பயின்ற நடமாடித்திரிந்த எங்கள் நீர்கொழும்பூரிலும் யேசுநாதர் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நூறுக்கும்  மேற்பட்ட எமது சகோதர சகோதரிகள் குழந்தைகள் தமது இன்னுயிரைத்துறந்துள்ளனர்.
இயேசுகிறிஸ்து ஆறுமணிநேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல்,  ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது.
                      அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். – (மத்தேயு 27:45-46)
இந்த வாசகங்களை ஏற்கனவே படித்திருக்கின்றேன். கடந்த வெள்ளிக்கிழமை  யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட  தினம். அதனால் அதனை பெரிய வெள்ளி என்று தமிழிலும்  Good Friday என்று ஆங்கிலத்திலும் அழைப்பர்.
அத்தகைய ஒரு துக்க  தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே  அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு,  சம்மணசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள்.

பயணியின் பார்வையில் -- அங்கம் 04


" அனைத்தும் சிதைந்து போய்விட்டது - எனது கனவுகள் போல்
எனது நம்பிக்கைகள் போல் - இப்போது எனது வாழ்வுபோல்
அனைத்தும் சிதைந்து போய்விட்டது "
                                                                                         - சி. புஸ்பராஜா
தாயகம் முதல்  புகலிடம் வரையில் அலைந்துழலும் ஈழவிடுதலைக் கனவைச்சுமந்த  ஆத்மாக்கள்
                                                                    முருகபூபதி
பிரான்ஸ்  பயணமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்,  எனது எழுத்துக்களை தேனீ இணையத்தளத்தில் தொடர்ந்து படித்துவந்த ஒரு அன்பர் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டார்.
அவரது பெயரைப்பார்த்துவிட்டு, அந்தப்பெயரில் இலங்கையில் எவரையும் எனக்குத் தெரியாதிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நீங்கள் எவ்விடம்?  எனக்கேட்டிருந்தேன். அவர் தமிழ்நாட்டில் சிறிதுகாலம் வசித்திருந்தாலும், அவரது பூர்வீகம் இலங்கையில் வடபுலம்தான் என்பதை தெரிந்துகொண்டேன்.
இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் இனவிடுதலைப்போராட்டமும் அவரையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் அவரும் ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் அறிவுஜீவி. தொடர்பாடலின் ஊடாக அவரும் பிரான்ஸிலிருப்பதை அறிந்துகொண்டேன்.
நான் அங்கு சென்றதும் என்னைத்தேடி  வந்து சந்தித்தார். அவருக்கு நான் ஏற்கனவே எழுதியிருந்த சொல்லமறந்த கதைகள், சொல்லவேண்டிய கதைகள்  ஆகிய நூல்களை கொடுத்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு, தன்னிடமும் சொல்லவேண்டிய கதைகள், சொல்ல முடியாத கதைகள் ஏராளமாக இருப்பதாகச்சொன்னார்.
எனக்கு கதைகேட்பதில் அலாதிப்பிரியம். அவரிடம் அவரது கதைகளைக்கேட்டேன். அனைத்தும் திகிலையும் அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தன. அவர் சொல்லச்சொல்ல கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
உயிருக்காக போராடிய  தருணங்களையும்  அனுபவித்த சித்திரவதைகளையும் வேதனைக்குரிய விடயங்களையும் சுவாரஸ்யமாக சிரித்துக்கொண்டே  சொன்னார். அவர் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் நடந்த படுகொலைச்சம்பவங்களின்போது உயிர்தப்பியவர்!  அவரது வாழ்வில் அந்த இரண்டு நாட்கள் மட்டுமல்ல, அதன்பின்னர் மட்டக்களப்பு சிறையில் நடந்த சம்பவங்களும் மறக்கப்படமுடியாதவை.

மீள் வருகை ( யோகன் - கன்பரா )


( எல்லா வன்முறைகளிலும், யுத்தங்களிலும் மூன்று தரப்புகள் எப்போதும் தொடர்புபட்டிருப்பதாக நம்பியே இந்த உருவக கதை ஒரு புனைவாக எழுதப்பட்டது.  )                 
நீண்ட பகல் பொழுதின் இரைச்சல்களும், ஓலங்களும் , இரத்தமும் , தசைப் பிண்டங்களும், வெடி மருந்தின் கந்தக மணமும் நிறைந்திருந்த அந்த தேவாலயம் இருளின் அமைதிக்குள் மெல்லப் புதையத் தொடங்கியது. 
அனைத்துமே பீதியில் உறைந்து போய் விட்ட அந்த  இரவில், ஓடுகள்  சிதறிய கூரைக்குள்ளால் எட்டிப்  பார்க்க  பயந்த  நிலவும்  இல்லாது முழு இருளில்  மூழ்கிப் போய் பல நாழிகைகள் கழிந்த பின்னரே யாரோ தொண்டையை செருமும் ஒரு சிறு ஒலி அந்தப் அமைதியைக் கிழித்து எழுந்தது. 
அது இரத்த விளாறு விசிறப்பட்ட வெள்ளாடை அணிந்த  இறைகுமாரன் வாயிலிருந்தே எழுந்தது. பேரிடி போன்ற  வெடி குண்டின் வெக்கையும், புகையும் அவர் தொண்டையை கட்டிப் போட்டிருந்தது. 
பிறகு யாரோ பெண் விசும்பும் குரல்
‘யாரம்மா அது?’  அழுகை ஒலி கேட்ட திசையில் பார்த்துக் கேட்கிறார் இறைகுமாரன்.  கும்மிருட்டில் எதுவும் தெரியவில்லை
‘என்னைத்தெரியவில்லையா மகனே? ‘
‘அம்மா ! ’
‘மகனே ! ’
மரியாளின் குரல் உடைந்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகள் முன் நிகழ்ந்த துயரத்தின் சாயல்.  சிலுவைக்கு தொலைவில் நின்று அழுத அதே மனநிலைதான்.
‘இரத்தம் தோய்ந்த  உன் வெள்ளாடைகளைக்   கண்டதும் என்னையறியாமல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னே போய் விட்டது என் மனம்.’

இலங்கைச் செய்திகள்


இலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்

தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள்  பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வீடு முற்றுகை

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி 

இதுவரை 55 பேர் கைது ;  தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர் 

தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் - பொலிஸ் விசாரணையில் தகவல்

ஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை நடவடிக்கை

இலங்கை தாக்குதலிற்கு உரிமை கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ்

தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்

தாக்குதல் தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை - நியூஸிலாந்து பிரதமர்

தற்கொலைத் தாக்குதல் நடத்தியோரில் இரு சகோதரர்கள் : தற்கொலைதாரிகளின் காணொளி, பெயர் விபரங்கள் இதோ !

தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் பரிசோதகரின்  பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ!

சாய்ந்தமருதில் வெடிச்சத்தம் ; பரஸ்பர துப்பாக்கிச் சூடு ? ஐ.எஸ். பதாகை மீட்பு ; 7 பேர் கைது

ஸஹரானின் வாகன சாரதியிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் : ஐ.எஸ். இன் முதல் தாக்குதல் வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்- இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பேன்- கோத்தபாய

தொடர்கிறது பயங்கரம் : சிறுவர்கள், பெண்கள் உட்பட 15 சடலங்கள் மீட்பு !  - படங்கள் இணைப்பு

தற்கொலை தாக்குதல் குறித்து பிரதமர் தெரிவித்துள்ள அதிர்ச்சி தகவல் என்ன?

இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு வவுணதீவு கொலையுடன் தொடர்பு

தொடர் தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடையதாக தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் கைது


உலகச் செய்திகள்


கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுத ஒழிப்பு நிகழ வேண்டும் - புட்டின்

சமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்

குண்டுவெடிப்பில் பலியானோருக்கு சென்னையில் அஞ்சலி

இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்துவிட்டேன் - டென்மார்க் தொழிலதிபர்

விலகுவதாக முடிவெடுத்தார் ட்ரம்ப்!


கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுத ஒழிப்பு நிகழ வேண்டும் - புட்டின்


26/04/2019 கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுத ஒழிப்பு நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், கிம்யொங் உன்னிடம் எடுத்துரைத்துள்ளார்.

கம்பலாந்து தமிழர் கழகம் பங்குபற்றிய உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை டக்கவிழா

.
 சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய  உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை தொ தொடக்கவிழா  20.04.19 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  துர்கா தேவி தேவஸ்தான தமிழர் மண்டபத்தில் இடம் பெற்றது.  
image.png