சனி பெயர்ச்சி



டிசம்பர் மாதம் 21ம் திகதி புதன்கிழமை சனீஸ்வரர் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பெயர்கின்றார். இரண்டு வருடங்களுக்குப்பின் நடைபெறும் இந்த சனிபெயர்ச்சியன்று சனீஸ்வரரை வேண்டினால் நற்பலன்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

இத்தினத்தன்று, ஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீவெங்கடேஸவரர் கோயிலில் காலை 9.00 மணிக்கு சனி சாந்தி ஹோமம் ஆரம்பமாகும். காலை 10.30 மணிக்கு நவக்கிரகங்களுக்கு அபிஷேகமும், பின் விசேட பூசையும் நடைபெறும்.

மேலதிக விவரங்களுக்கு கோயில் அர்ச்சகர்களை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

42943224

42949233

முதன்மை மாணவியாக யதுசியா மகேந்திரராஜா


.


 சென்றவாரம் உயர்தர வகுப்பு பரீட்சை முடிவுகள் வெளிவந்தது. இதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து நியூசவுத்வேல் மானிலத்தில் முதன்மை மாணவியாக அதிகபுள்ளிகளை பெற்றிருக்கிறார் யதுசியா மகேந்திரராஜா ஹோம்புஸ் தமிழ்க்கல்வி நிலையத்தில் கல்விபயின்ற இவரை தமிழ்முரசு வாழ்த்துகின்றது. 28 மாணவர்கள் இக்கல்வி நிலையத்தில் இருந்து தமிழை ஒரு பாடமாக எடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலையம் சாதனை!

ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிஸ்ட சாலிகள்

.ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிஸ்ட சீட்டிழுப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வென்ற்வேத்வில்லில் இடம் பெற்றது. 
பத்து பரிசில்கள் வழங்கப்பட்ட இந்த நிழ்வில் மூன்று நடுவர்கள் முன்னிலையில் சீட்டிழுப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வை ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடியாக ஒலிபரப்பியது. முதலில் பத்தாவது பரிசுக்குரிய அதிர்ஸ்டசாலியில் ஆரம்பித்து முதலாவது அதிர்ஸ்டசாலிவரையான தெரிவு இடம்பெற்றது. தெரிவுசெய்யப்பட்ட இலக்கங்கள் உடனுக்குடன் வானொலியூடாக அறிவிக்கப்பட்டதுடன் வருகைதந்திருந்த பார்வையாளர்களுக்கும் காண்பிக்கப்பட்டது. திரு.ஈழலிங்கத்தின் உரையோடு ஆரம்பித்து தொடர்ந்து ஜேயமேன் சீட்டீழுப்பை நடாத்தினார். வெற்றி பெற்ற இலக்கங்கள் பின்வருமாறு 

1வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 2679 
2வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1758 
3வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3739
4வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1312
5வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 2654
6வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3584
7வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 1357
8வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 4012
9வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 3557
10வது பரிசிற்கான சீட்டின் இலக்கம் 4003

இந்தோனேசிய கடலில் மூழ்கிய கப்பலில் சென்ற நூற்றுக்கு மேற்பட்டவர்களை காணவில்லை

18/12/2011

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு பிராந்தியத்துக்கு ஏற்றிச் சென்ற படகொன்று நேற்று மாலை இந்தோனேசிய ஜாவா தீவுக்கு அப்பால் மூழ்கியதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படகில் சுமார் 400 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி, பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் பயணித்ததாகக் கூறப்படும் இந்தப் படகில் 182 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 33 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமடைவதாகக் கூறப்படுகின்றது. அந்தப் படகில் பயணிக்கக் கூடிய பயணிகள் தொகையை விட இரு மடங்கிலும் அதிகமான பயணிகள் பயணித்தமையே இந்த விபத்துக்குக் காரணமென நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர். ___
நன்றி வீரகேசரி




இலங்கைச் செய்திகள்

நியாயங்களுக்கு அர்த்தம் கொடுக்கின்றதா மனித உரிமைகள் தினம்

ஜே.வி.பியினர் கொழும்பில் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

எமது பிரச்சினைகளை சர்வதேச பொலிஸிடம் ஒப்படைக்க முடியாது

தமிழ்க் கூட்டமைப்பின் எண்ணம் நிறைவேறாது



திருக்கோணேஸ்வரத்தில் 33 அடி உயர சிவன் சிலை திறந்து வைப்பு (பட இணைப்பு)


நியாயங்களுக்கு அர்த்தம் கொடுக்கின்றதா மனித உரிமைகள் தினம் 10/12/2011







உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அக்கறை/ரையை யாசிப்பவள்





அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி

அதே நிலாஅதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்

எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை

நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்

அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது

இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்

எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய வருடாந்த பரிசளிப்பு விழாவும் விருந்தும் 2011





ஹோம்புஸ் தமிக்கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா சென்ற சனிக்கிழமை இடம்பெற்றது. அதில் திறமையான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது. அதில் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.




வீரிய வாசகம் - எம்.ஏ.சுசீலா


.

 பாரதியின் பிறந்த நாள்!
தமிழர்கள் எல்லோருக்குமே பாரதி செல்லப் பிள்ளை.
எனக்கும் அப்படித்தான்...
பாரதியின் கண்ணன் பாட்டில் குருவாகவும் சீடனாகவும்,ஆண்டானாகவும் சேவகனாகவும் ஒரே வேளையில் கண்ணன் மாறி மாறிப் பாரதிக்குத் தோற்றம் தருவதைப் போலவே எனக்கும் பிரியமான ஒரு மகனாகவும்,வழிநடத்தும் குருவைப் போலவும் மாறி மாறித் தோற்றம் காட்டுபவன் பாரதி..

தமிழறியத் தொடங்கிய நாள் தொட்டு அவன் கரம் பிடித்து அவன் எழுத்தின் வழிகாட்டுதலுடனேயே என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
‘’எள்ளத்தனை பொழுதும் பயனின்றி இராதெந்தன் நாவினிலே 
  வெள்ளமெனப் பொழிவாள் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம்..’’
என்ற வரிகளை உச்சரிக்கும்போதெல்லாம்
‘’விசையுறு பந்தினைப் போல் மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’’என்ற வரிகள் மனதுக்குள் கிளர்ந்தெழும்போதெல்லாம்-
மற்றுமொரு கவிதையில் அவன் குறிப்பிட்டிருக்கும் ‘உயிர்த் தீ’ என்னுள் மகா ஜ்வாலையுடன் பாய்ந்து வந்து பற்றிக் கொள்வதை அனுபவ பூர்வமாக உணர்ந்து சிலிர்த்திருக்கிறேன்..அந்த வரிகளே என் வழிபாடாகவும் கூட அமைந்து போயிருக்கின்றன.

பனங்காய் பணியாரமும் நம்மூர் பெண்களும்!


.

ஈழவயலோடு உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அன்பு உறவுகளே! அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்!
"எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?"
பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை.

இந்திய மேற்கு வங்கத்தில் நச்சு மதுப் பாவனையால் 143 பேர் உயிரிழப்பு

_


சி.எல்.சிசில் 16/12/2011

இந்திய மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களில் நச்சு மதுப் பாவனையால் ஆகக்குறைந்தது 143 பேர் உயிரிழந்துள்ளதாக அறிய வருகிறது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்திலுள்ள 12 கிராமங்களில் மது அருந்தியதால் பலர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர். சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புரோட்டா

.

Parotta.jpg

நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

கட்டிடக் கலைஞர் அமரர் வி.எஸ் துரைராஜ அவர்களுக்கு அஞ்சலி

அண்மையில் தான் தமிழ் ஆய்வாளர் கலாநிதி ஆ கந்தையா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயருற்றோம். புலம்பெயர் மண்ணில் காத்திரமான பணி செய்த கலாநிதி கந்தையா அவர்களின் மறைவைத் தொடர்ந்து இன்னொரு மறைவுச் செய்தி எம்மையெல்லாம் கலங்கவைத்தது. கட்டிடக் கலைஞர் வி.எஸ் துரைராஜா அவர்கள் 14/12/2011 அன்று தனது பூதவுடலை நீக்கி புகழுடல் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஈழத்தமிழர் கலங்கியிருந்தனர்.

ஆஸி. விக்ரோரியா மாநிலத்தில் விருதுபெற்ற முருகபூபதி


.                                                                                                
                                                                                                         அருண்.விஜயராணி


அவுஸ்திரேலியாவில் கடந்த 25 வருடகாலமாக வதியும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு. லெ. முருகபூபதி இவ்வாண்டுக்கான அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில பல்லின  கலாசார ஆணையத்தின் மகத்தான சமூகப்பணியாளருக்கான விருதினை பெற்றுக்கொண்டார்.
குறிப்பிட்ட விருது வழங்கும் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி புதன் கிழமை விக்ரோரியா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. விக்ரோரியா மாநிலத்தில் சமூகம், கல்வி, கலை, கலாசாரம் உட்பட பல துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கான விருதுகள் வருடந்தோறும் பல்லின கலாசார ஆணையத்தினால் வழங்கப்படுகிறது.
தமிழ், சிங்கள, இஸ்லாமிய அமைப்புகள் உட்பட பல்லின அமைப்புகளும் குறிப்பிட்ட விருதுக்காக பல சமூகப்பணியாளர்களை முன்மொழிந்து இறுதிக்கட்ட தெரிவுகளை பல்லின கலாசார ஆணையம் அறிவிக்கும்.
இதன்பிரகாரம் அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அதன் ஸ்தாபகர் திரு. லெ. முருகப+பதியை முன்மொழிந்தது.

ஹர்மொண்ட் சிறைச்சாலைக்கு வெளியே வேற்றின மக்கள் தமிழர்களுக்காகப் போராட்டம் !


.


லண்டனில் உள்ள ஹர்மொண்ட் சிறைச்சாலைக்கு வெளியே வேற்றின மக்கள் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது எனப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இச் செய்தி தமிழ் ஊடகங்களில் பரவியதால் பல தமிழர்கள் அச் சிறைச்சாலை நோக்கிப் புறப்பட்டுச் சென்று தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முதலில் போராட்டத்தை ஆரம்பித்த வெள்ளையின மக்கள் தமது கைகளை பாரிய இருப்புக் கம்பிக்ளில் தாமே விலங்கிட்டுக் கொண்டனர். இதனால் பொலிசாரால் அவர்களை அங்கிருந்து இலகுவாக அகற்ற முடியவில்லை. இதற்கும் ஒரு படி மேலே போய் சில வெள்ளையின மக்கள் கம்பிகளைக் கட்டி அதன்மேல் ஏறி நின்று ஆர்பாட்டத்தை நிகழ்த்தினர். இதனால் அவர்களை கீளே இறக்க முடியாமல் பொலிசார் திண்டாடிப்போனார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கீளே இறக்க முற்பட்டு தற்செயலாக அவர்கள் அடிபட்டு காயத்துக்கு உள்ளானால் அப் பழி பொலிசார் மேல் விழும் என்பதால் பொலிசாரால் எதுவும் செய்யமுடியாத நிலை தோன்றியது. அத்தோடு சுமார் 120 பேரை இன்று இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடாகியிருந்தது. அவர்களை ஏற்றிக்கொண்டு சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த பஸ்ஸை போராட்டக்காரர்கள் வழிமறித்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தைப் போக்க மேலதிகப் பொலிசார் வரவழைக்கப்பட்டதோடு உலங்கு வானூர்தியின் உதவியும் நாடப்பட்டது. வானில் வட்டமிட்ட உலங்கு வானூர்தி பொலிசாருக்கு தகவல்களை வழங்கியவண்ணம் இருந்தது. இதனை அடுத்து பஸ்ஸை ஓட்டுனர் திரும்பவும் சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்றார்.

சிட்னி முருகன் கோவிலில் இடம்பெற்ற கலைக் கோலம் 2011

.
சிட்னி முருகன் கோவிலில் இடம்பெற்ற கலைக்கோலம் நிகழ்வின் சி காட்சிகளை காணலாம்


                                                                                            படப்பிடிப்பு ஞானி        

உலகச் செய்திகள்

மூன்று பெண்களுக்கு நோபல் விருதுகள்

யுனெஸ்கோவில் ஏற்றப்பட்டது பலஸ்தீனக் கொடி: அமெரிக்க, இஸ்ரேல் முகங்களில் கரி

சிரியாவின் வன்முறைகளில் இதுவரை 5000 பேர் பலி

பிலிப்பைன்சில் அகோர புயல்:180 பேர் பலி; 400 பேரைக் காணவில்லை







மூன்று பெண்களுக்கு நோபல் விருதுகள்

11/12/2011

அநீதி, சர்வாதிகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடிய மூன்று பெண்களுக்கு, நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த விழாவில், இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் சினிமா

விமர்சனம்


போராளி
திரையுலகின் நண்பர்களாக வலம்வந்துகொண்டிருக்கும் சசிகுமாரும் சமுத்திரக் கனியும் மறுபடியும் இணைந்திருக்கும் படம்தான் போராளி! நாடோடிகளில் ஹிட் அடித்த இந்தக் கூட்டணி இதிலும் இணைந்திருப்பதாலும் படத்தின் தலைப்பினாலும் இந்தப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

சசியும் நரேஷும் நெடுந்தொலைவு பயணப்பட்டு சென்னை வந்து சேர்கிறார்கள்.

நரேஷின் நண்பன் கஞ்சா கருப்பு ரூமில் தங்குகிறார்கள். பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார்கள். பகுதி நேரமாக பெய்டு சர்வீஸ் தொழில் நடத்துகிறார்கள். இதற்கிடையே கூட வேலை பார்க்கும் பெண் மீது நரேஷுக்கு காதல்... எதிர்வீட்டில் தங்கியிருக்கும் டான்ஸர் ஸ்வாதிக்கு சசிகுமார் மீது மையல்.

பகுதுநேர தொழில் ஹிட் ஆகிவிட கஞ்சா கருப்பு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிறார். அந்த பத்திரிகையைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் சசியைத் தேடி சென்னைக்கு வந்து இறங்க... சசி யார் என்ற விஷயம் அதிர்ச்சியைத் கொடுக்கிறது .

அதீத புத்திசாலியாக இருக்கும் சசியை ஐந்தாம் வகுப்பிலேயே மடக்கிப் படிப்பை நிறுத்திவிடுகிறார் அவருடைய சித்தி. பெரியப்பாவின் சொத்துகளுக்காக சித்தியும் அவர் உறவுகளும் சதி திட்டம் போட, சசி ஊருக்குள் உதவாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அவர்களுடைய நிலத்தில் யுரேனியம் இருப்பதைக் கண்டுபிடித்து கோடிக்கணக்கில் விலை பேசுகிறது ஒரு கூட்டம். அப்போதுதான் பெரியப்பா சொத்துகளை சசி பெயரில் எழுதி வைத்துவிட்டு அனுபவ உரிமையை மட்டும் அந்தக் குடும்பத்துக்கு கொடுத்திருப்பது தெரிய வருகிறது. சசியை மடக்க வருகிறார்கள்.

சசி என்ன செய்தார்... அவர்களுக்கு பணிந்தாரா... சென்னைக்கே தேடி வந்தவர்களை எப்படி சமாளித்தார் என்பதெல்லாம் மீதி கதை!

முதல் பாதி கதையை நகைச்சுவையாக நகர்த்துவது என்று டைரக்டர் முடிவெடுத்து விட்டார் போலும்! அந்த காம்பவுண்டே கதி கலக்குகிறது. இதில் எல்லா கேரக்டர்களுக்குமே அடையாளமாக இருப்பது பஞ்ச் டயலாக் தான்! முடிவை நாந்தான் எடுப்பேன் என்று சொல்லும் ஹவுஸ் ஓனர் ஞானசம்பந்தன், சாந்தி சாந்தி என்று மனைவி மீது உருகும் படவா கோபி, பேச்சைத் தொடங்கிய இரண்டாவது நொடியில் சண்டை வலிக்கும் அவருடைய மனைவி சாண்ட்ரா, சதா போதையில் இருந்தபடி எல்லோரையும் தொட்டு முத்தம் கொடுக்கும் பேச்சுலர் ஆசாமி, சிடுமூஞ்சி சுவாதி என்று எல்லா கதாபாத்திரங்களுமே தனித்து தெரிகிறார்கள். ஆனால், எல்லாமே சொல்லி வைத்தபடி நடப்பது கொஞ்சம் நாடகத்தனமாக இருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த பாலச்சந்தர் பாணி பின்னணியில் கொண்டுபோய் விக்ரமன் ஸ்டைல் வியாபார யுக்தியை கோர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரே பாடலில் பணக்காரர் ஆகும் ஸ்டைல்தான். ஆனால், அதில் உள்ள சிரமங்களையும் சுட்டிக் காட்டியிருப்பதால் ரசிக்க முடிகிறது. இடைவேளை வரையில் இதுவே ஓடிக் கொண்டிருப்பதால் அலுப்பு தட்டாமல் நகருகிறது கதை. இடைவேளையில் உண்மையில் சசி யார் என்ற முடிச்சு அவிழும்போது அதிர்ச்சி ஏற்படுத்துவதில் இயக்குனருக்கு வெற்றிதான்!

இரண்டாம் பாதி கதையில் கிராமத்து சம்பவங்கள் ரொம்பவே இழுவை. சட்டென்று சொல்லி முடித்திருக்கலாம். அவ்வளவு நீட்டி முழக்கியிருந்தாலும் குடும்ப உறவுகளைப் பற்றிய குழப்பங்களை இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தியிருக்கலாம். அதேபோல க்ளைமாக்ஸும் யூகிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது.

அதைத் தாண்டி வரும் கஞ்சா கருப்பு சீன் டிபிகல் நாடோடிகள் பஞ்ச்! சமுத்திரகனி இயக்கத்தில் இன்னொரு வெற்றி என்று தாராளமாகச் சொல்லலாம்.
நன்றி குசும்பு
ஒஸ்தி விமர்சனம்



காஸ்டிங் டைரக்டர் என்ற ஹாலிவுட் சமாச்சாரத்தை தயவு செய்து இறக்குமதி செய்யுங்கப்பா என்று கோடம்பாக்கத்தில் நின்று கத்தலாம் போலிருக்கிறது. மாஸ் ஹீரோக்களை வைத்து தில், தூள், கில்லி என்று கச்சிதமாக மசாலா அரைத்த தரணி, இம்முறை கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான ஹீரோவை காஸ்ட் செய்ததில் செமத்தியாக கோட்டை விட்டிருகிறார்.

வின்னைத் தாண்டி வருவாயா படத்தில் உதவி இயக்குனர் கார்த்திகேயனாக கச்சிதமாகப் பொருந்திய காரணமே சிம்புவின் வயதும், +2 பையனுக்கான அவரது இளமையும்தான். இன்னும் அதே தோற்றத்தொடு இருக்கும் சிம்புக்கு காக்கி யூனிஃபார்ம் மாட்டினால் என்னாகும்?

ஒரு சின்னப் பையன் பெரிய மனிதர்களோடு திருடன் போலீஸ் விளையாடுகிறமாதிரி இருக்கிறது மொத்த படமும். சிம்புவுக்கு காக்கி யூனிஃப்பார்ம் பேன்சி டிரஸ் காம்பெடிஷன் மாதிரித் தெரிவதால் முக்கால் வாசிப் படம் முழுக்க கலர் காஸ்யூம்களில் சிம்புவை நடமாட விட்டிருகிறார்.

தபாங்கில் சல்மானின் ஆஜானபாகுவான தோற்றமே அவர் ஏற்று நடித்த சல்புல் பாண்டே காமெடி கம் ஆக்‌ஷன் போலீஸ் கதாபாத்திரத்துக்கு நெத்தியடியாகப் பொருந்தியது. என்னதான் தரணி சிம்புவை சிக்ஸ் பேக் செய்ய வைத்தாலும் சல்புல் பாண்டேயின் கம்பீரம், காமெடி இரண்டையும் ஒஸ்தி வேலனுக்குள் டிராண்ஸ்ஃபாம் பண்ண முடியவில்லை.

போதக்குறைக்கு சிம்புவுக்கு குசும்பு கைவருமே தவிர அவர் தனியாக காமெடி செய்தால் சிரிப்பு வராது. இதனால் சந்தாணம் உள்ளிட்ட மிகப்பெரிய காமெடி போலீஸ் டீமை நம்பியே காமெடி டிபார்ட்மெண்ட் ஒப்படைக்கப்படிருகிறது.

அதனால் கலகலப்புக்கு பஞ்சமில்லை.தபாங் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்ப தரணி சில மாற்றங்களைச் செய்திருந்தாலும், பரபரப்பாக நகரும் திரைக்கதையில் எப்போதுமே குறியாக இவர், இம்முறை படம் முழுவதும் பர்பெக்ட் மசாலாவை பேக் செய்யும் கவனத்திலேயே,

திரைக்கதையின் வேகத்தில் கோட்டை விட்டுவிட்டார். இடைவேளைக்குப் பிறகு கதை எப்படி டிராவல் செய்யும் என்பதை அழுத்தம் இல்லாத காட்சிகள் உணர்த்தி விடுவதில், அடிக்கடி கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை.

திருநெல்வேலி டவுணுக்கும் போலீஸ் கதைகளுக்கும் அப்படி என்னதான் பந்தமோ, சாமி, சிங்கம் படங்களின் வரிசையில் ஒஸ்திவேலனும், திருநெல்வேலி வட்டாரத்தில் இண்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவிடும் வேலனுக்கு நாசர்தான் ஸ்டெப் பாதர்.

இரண்டாவது கணவர் மூலம் தனது தாய் வயிற்றில் பிறந்தாலும், அவரது தம்பி ஜித்தன் ரமேஷ்( சிம்புவை விட பல வயது மூத்த ஜித்தன் ரமேஷுக்கு அண்ணனாக நடிக்க ஒப்புகொண்டது சிம்புவின் பெருந்தன்மைதான்) நாசர் இரண்டு பேரோடும் சிறுவயது முதலே ஒத்துப் போகாமல் வீம்பாகத் திரிகிறார் சிம்பு.

இந்த நேரத்தில்தான் சிம்பு வேலை செய்யும் ஊருக்கு தேர்தல் வருவருகிறது. அந்த ஊரில் தாதாவாகிய பாக்ஸர் டேனியலுக்கு அடிதடியும், மணல் கொள்ளையும் போரடித்து விட்டதால், தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஒட்டுக்களை காசுகொடுத்து வாங்க மணல் கொள்ளையில் சம்பாதித்த சுமார் ஒரு கோடி ரூபாயை போலீஸ் கையில் மண்ணைத் தூவிவிட்டு தனது குண்டாஸ் கும்பல் மூலம் கடத்துகிறார். ஆனால் ஒஸ்தி வேலன் தனியாளாக அந்தப் பணத்தை மீட்டு, தனது வீட்டில் வைத்துக்கொண்டு யூனிஃபார்ம் மாட்டிய ராபின் ஹுட் மாதிரி செயல் படுகிறார்.

அந்தப் பணத்தை மீட்டால்தான் தனக்கு தேர்தலில் வெற்றி என்கிற நிலையில், தனது ஒரே தலைவலியான ஒஸ்திவேலனை ஒளித்துக் கட்ட பலவகையிலும் காய் நகர்த்த அதையெல்லாம் முறியடித்துக் கொண்டே வரும் ஒஸ்தி இறுதியில் தனது அம்மாவின் சாவு இயற்கை மரணமல்ல�

அவளைக்கொன்றது டேனியல்தான் என்பதைத் தெரிந்து அவனை வேட்டையாடுகிறார். இந்தக் கதையில் ஹீரோயின் டிராக், குயிக் பிக்ஸ் போட்டு ஒட்ட வைத்தது போல இருப்பது பெரும் சறுக்கல் என்றாலும், இந்தமாதிரி மாஸ் மசாலா படங்களில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால்,

ரிச்சாவின் திமிரும் இளமை ரசிகர்களுக்கு விருந்தாக படைக்கப் பட்டிருகிறது. கிராமத்து மண்பாண்டத்தொழிலாளியின் மகள் அழகாக இருப்பாள் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அழகிப் போட்டியில் பங்கு கொள்கின்ற மாதிரி இருப்பாளா மிஸ்டர் தரணி?

சரி போகட்டும்� படத்தின் வில்லன் சோனு சூத்தை ஒரு பாக்ஸராக காட்டியிருப்பது கதைக்கு எந்த வகையில் பயன்பட்டிருகிறது என்பது இயக்குனராக உங்களுக்கு மட்டுமே வெளிச்சம். சில காட்சிகளே வந்து போனாலும் ரேவதியின் நடிப்பில் வயதுக்குரிய முதிர்ச்சி. அதேநேரம் திறமையான கலைஞர்களான தம்பி ராமைய்யா, அழகம்பெருமாள் இரண்டுபேரும் வீனடிக்கப்படிருகிறார்கள்.

இவர்கள் எல்லாரையும் விட சிம்பு அபாரமாக உழைத்திருகிறார், நடித்திருகிறார், நன்றாக நடனமாடி , அசத்தலாக பைட் செய்திருக்கிறார். ஆனால் இது எல்லாமே குருவி தலையில் பெரிய பனங்காயை வைத்த மாதிரி இருக்கிறது.