அவுஸ்ரேலிய செய்திகள்

.
1. முதலாவது பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட்
2. சிட்னியில் ஒலிம்பிக் நடைபெற்று 10வது வருடம் சென்ற புதன்கிழமை கொண்டாடப்பட்டது

 முதலாவது பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட்

தேர்தல் மூலம் தெருவு செயப்பட்ட முதலாவது பெண் பிரதமர்  ஜூலியா கில்லர்ட்  சென்ற புதன் கிழமை பதவிப் பிரமானம் செய்து கொண்டார்.  கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக ஜூலியா எலின் கில்லார்டு  பதவியேற்றார்.

அண்மையில்  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தொங்கு பாராளுமன்ற நிலை உருவானது.

மொத்தமுள்ள 150 இடங்களில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜூலியாவின் கூட்டணி கட்சிக்கு இரண்டு எம்பிக்களின் ஆதரவு தேவைப்பட்டது.

பல்லவி வழங்கும் வயலின் நிகழ்ச்சி

.


கம்பன் கழகத்தின் இலக்கியப் பேருரை

.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் நடாத்திய இலக்கியப் பேருரை மிகவும் சிறப்பாய் அரங்கேறியிருந்தது. 11.09.10 அன்று மாலை ஹோம்புஷ் ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருவியாய்க் கொட்டியது இலக்கிய நயம். கம்பன் கழக வழக்கப்படி, மங்கள விளக்கேற்றல், மங்கள ஆரத்தி, கடவுள் வாழ்த்தோடு ஆரம்பித்த இவ்விழாவில்,

கவிதைகள்


நான் நலம் - நன்றி (ஆங்கில கவிதையின் தமிழாக்கம் நா .மகேசன் )

முளங் காலில் முடக்குவாதம்
முடக்கவே இல்லை என்னை
விளங் காத மூச்சிழுப்பு
விடவில்லை நான் பேசப்பேச
நாடிதளர நல்லிரத்தம் நீராக
நானிருக்கும் நிலை சிறப்பே
தேடிக் கிடைக்காத சுகமெனக்கு
தெரியாதோ எனக்கொன்றும் இல்லையென்று.

யாழ் உலா

.
 நாகலிங்கபூ சுப்பிரமணியம் பூங்கா
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்க போன கதை- கானா பிரபா 


நாகலிங்கபூ சுப்பிரமணியம் பூங்கா
அண்மையில் யாழ் சென்ற போது சுப்பிரமணியம் பூங்காவிற்கும் செல்ல முடிந்தது.



இந்த வரண்ட பூமியில் இந்த அழகான செழிப்பான பூங்காவா என மூக்கில் விரலை வைக்க வைத்தது அது.
மிக அற்புதமாகப் பராமரிப்புச் செய்கிறார்கள்.





தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி

.
அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு, St Jude Community Hall, George Street, Scoresby (Melway Ref: 72 G5)  ல்  தியாகி தீலீபன் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு விக்டோரிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பொருத்தம் -- சிறுகதை --சோனா பிறின்ஸ் --

                           பொருத்தம்


 "பிள்ள! அரிசி ஊறப் போட்டிருக்கன் கொஞ்சம் இடிக்கிறியா?" என்ற அம்மாவின் வேண்டுகோள் கவிதாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
மனதிற்குள் சலிப்படைந்தவளாய்.      "என்னம்மா! எப்ப பார்த்தாலும் அரிசி இடி, மிளகாய் இடி, அதுவும் இல்லையானால் வேலைக்குப் போவதற்கு முன்னால் மீன்குழம்பு வைப்பதற்கு மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, சேர்த்து அம்மியில 
அரைச்சு  வெச்சிட்டு போ பிள்ளைதானா ? எனக்கு மூத்தவவும் , இளையவவும் ,இருந்தவதானே , அவங்களிட்ட கேட்காமல் என்னிடம் மட்டும்தான் கேட்பீங்கள்.  நான்மட்டும்தான் இந்த வீட்டில வேலைக்காரியா? உங்களுக்கு ஒரு வேலைக்காரி வேணும் எண்டுதான் என்ன பெத்தீங்களா அம்மா? சொல்லுங்கோ "என்று  அன்போடும் சலிப்போடும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் கவிதா.

இலக்கியம் / படித்து சுவைத்தவை

குற்றாலக்குறவஞ்சி  -------------------ஜெயந்தி
முறுகல் தோசை மனிதன்------------------ராமராஜன்
தமிழ் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் அண்ணா



குற்றாலக்குறவஞ்சி

குற்றாலக்குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்ப கவிராயர் என்பவர். இவர் தென்காசி அருகிலுள்ள மேலகரம் என்ற ஊர்ல பிறந்தவராம். குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதரைப்பற்றியும் அவரது மனைவி வசந்தவல்லியைப்பற்றியும் பாடியுள்ளார். அதோட அந்த மலையின் வளம், அவர்களின் நாகரீகம் அவர்களின் கடவுள், பழக்கவழக்கங்கள் என்பதை பாடலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். குறவஞ்சி என்றால் குறத்தி வாயிலாக பாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் இதன் பெயர் குறவஞ்சி. குற்றாலத்தைப்பற்றி பாடுவதால் குற்றாலக் குறவஞ்சி. குறத்தி திருக்குற்றாலநாதருக்கும் வசந்தவல்லிக்கும் உள்ள காதலை அறிந்து அதனை வசந்தவல்லியிடம் பாடலாகப் பாடி பரிசு பெறுவதுபோல் அமைந்துள்ளது.

ஆன்மீகம்

.
ஆழ்வார்கள்

வாசகர்கள் எல்லோரையும்  இந்த வாரம் மீண்டும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில வாரங்களாக பாகவதர்களின் அவதார சிறப்பை பார்த்து வருகிறோம்.  அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் தென்னாட்டில் அவதரித்த "12 ஆழ்வார்களை பற்றி காண்போம்.
கிருஷ்ணாவதாரம்  முடிந்து கலி யுகம் தொடங்கும் போது, உலகம் இருளில் மூழ்க தொடங்கி வேதங்களின்  உண்மையான சாரம் மறைய தொடங்கியது. வேத வியாசர் இயற்றிய "ஸ்ரீமத் பாகவதத்தை” புரிந்து கொள்ளவும், வேதங்களின் சாரத்தையும், அந்த பகவானின் பெருமையை , மறுபடியும் பரப்பவும் பாகவதர்கதளான “ பன்னிரு
ஆழ்வார்கள் “ திரு அவதாரம் செய்தனர்.

மாமனிதர் தில்லை ஜெயக்குமார் ஞாபகார்த்த ஒலிக்கூடம்” திறப்பு விழா

.
அவுஸ்திரேலிய தேசத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளாக செய்மதி ஊடாக அவுஸ்திரேலியா, நியுசிலாந்து முழுவதும் தனது சேவையை ஒலிபரப்பி வரும் 24 மணிநேர இன்பத்தமிழ் ஒலி வானொலியின் 2வது கலைக்கூடம், சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் மாதம் 12ம் திகதி உத்தியோகபுர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் கல்வி நிதியம். அவுஸ்திரேலியாவில் தகவல் அமர்வுக்கூட்டம்

.
 இலங்கையில் கடந்த ஆண்டு வன்னியில் நடந்த போரில் பெற்றவர்களை இழந்த தமிழ் மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்கு உதவும்வகையில் தகவல் அமர்வுக்கூட்டமும் குறிப்பிட்ட மாணவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் ஆவணங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மாணவர்களுக்கு அன்பர்களின் ஆதரவைக்கோரும் நிகழ்வும், அவுஸ்திரேலியாவில் கடந்த 22 வருடகாலமாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள்

.
எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்துள்ளவர்களில் முதன்முறையாக ஒரு தாயார் 3 குழந்தைகளுடன் விடுவிப்பு

எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்துள்ள 492 இலங்கையர்களில் முதன்முறையாக தமிழ் தாயார் ஒருவரும் அவரது 3 குழந்தைகளும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அப் பெண்மணி யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஸ்வரலயா வழங்கும் பாலமுரளிக்கிருஷ்ணா அவர்களின் கர்னாடக இசைவிருந்து

சினிமா

1.  பாடகி சுவர்ண லதாவுக்கு திரையுலகம் அஞ்சலி
2.  பாஸ் என்கிற பாஸ்கரன்
3. நீயும் நானும்



1. பாடகி சுவர்ண லதாவுக்கு திரையுலகம் அஞ்சலி

போவோமா ஊர்கோலம் தொடங்கி போறாளே பொண்ணுத்தாயி, குச்சி குச்சி ராக்கம்மா என்று ஏராளமான பாடல்களை பாடி திரைப்பட ரசிகர்களின் இதயத்தையெல்லாம் தன் தேனிசைக் குரலால் நிரப்பிய சுவர்ணலதா திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு வயது 37

கடந்த சில நாட்களாக நுரையீரல் சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வந்தாராம் சுவர்ணலதா. ஞாயிறன்று காலை பத்து மணிக்கு வட பழனியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத சுவர்ணலதா கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்.

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 06

.
பழந்தமிழ் வழக்கில் குறுநிலப் பகுதிகளான நாட்டுப் பிரிவுகளிலே தலைமை அதிகாரங்களைப் பெற்றிருந்தவர்களைக் கோ என்று குறிப்பிடுவது வழக்கம். அவ்வண்ணமாக கி.மு. 2ஆம் நூற்றாண்டிலும் ஆனைக்கோட்டை பகுதியிலே கோ என வழங்கிய தலைவர் இருந்திருக்கலாம் என கருதலாம்.

அகித்தி ஜாதகம் அதே காலமளவில் ஆட்சி புரிந்த ஒரு சிற்றரசைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கந்தரோடையிற் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறித்த சில அரிய காசுகள் கிடைத்துள்ளன.

மருத்துவம்


.

*சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்கும்


காசநோய்க்கு மருந்தாகும் தூதுவளை

தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப்பொடியாக்கிஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கலந்துதினமும் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சிகபநீர்மூட்டு வலி,காசநோய் குணமாகும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோகடைந்தோஉண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.