மரண அறிவித்தல்

.

திருமதி.ஜெயலக்ஷ்மி சண்முகசுந்தரம் ( குஞ்சு )

               
திருமதி.ஜெயலக்ஷ்மி சண்முகசுந்தரம் ( குஞ்சு )

      மலர்வு - 05.03.1959                             உதிர்வு - 02.04.2016

இலங்கை, யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேணை வதிவிடமாகவும் கொண்ட குஞ்சுஎன்று அழைக்கப்படும் ஜெயலக்ஷ்மி சண்முகசுந்தரம் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமையன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ் சென்ற திரு.சுயம்புநாதர், திருமதி.தங்கம்மா சுயம்புநாதர்(கனடா), தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான திரு.திருமதி.சின்னத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கண்ணன் (சண்முகசுந்தரம்) அவர்களின் அன்பு மனைவியும், சுதர்சனா, நிதர்சனா, கஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணலக்ஷ்மி (இலங்கை), வரதலக்ஷ்மி (கனடா), சோமசேகரம் (கனடா), பரமலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், ஜெகதீஸ்வரன்(கனடா), மலர்வதி(கனடா), சுதர்ஷினி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
மீனலோஜினி (இலங்கை), தனலக்ஷ்மி (இலங்கை), காலஞ் சென்ற சோமாஸ்கந்தன், சச்சிதானந்தமூர்த்தி(லண்டன் UK), பத்மாதேவி(மெல்பேண் அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ் சென்ற சண்முகானந்தன், சத்தீஸ்வரன் (இலங்கை), மகாலக்ஷ்மி (இலங்கை), பத்மலோஜினி (லண்டன் UK), ஞானப்பிரகாசம் (மெல்பேண் அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் - கணவன், பிள்ளைகள்
அன்னாரின் பூதவுடல் 06.04.2016 புதன்கிழமை  LE PINE Funerals, இலக்கம் 513 GREENSBOROUGH ROAD, ( Opposite Hobson Street ), GREENSBOROUGH. VICTORIA - 3088 இடத்தில் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை மக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
அன்னாரின் பூதவுடலுக்கு 07.04.2016 வியாழக்கிழமை காலை 10 மணியில் இருந்து 11.30 மணிவரை ஈமக்கிரியைகள் யாவும் நடைபெற்று MULQUEEN PROVINCIALE, 825 SYDNEY ROAD, NORTH COBURG. VICTORIA - 3058 என்ற இடத்தில் இருக்கும் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:-
கண்ணன் (கணவன்) மெல்பேண் - + 61 3 9305 1289  / + 61 433 438 790

கஜாலினி - + 61 412 722 121 அகிலன் (மெல்பேண்) - + 61 410 567 647


என் மேசையில் பூகோளம் - கவிதை - - எச்.ஏ. அஸீஸ்

.

பூகோள உருண்டை என் மேசையில் 
தடவிப் பார்க்கலாம்
சுற்றிப் பார்க்கலாம் 
பழகிப்போன பூகோள உருண்டை
கிழக்கில் இருக்கும் இந்து சமுத்திரம்
அதைப் திருப்பி வைப்பேன் 
மேல் திசையாக
மீண்டும் கிழக்கே மாற்றி வைப்பேன் 
இது உருண்டை
பூகோள உருண்டை
எங்கோ ஒரு தேசத்தில்
குண்டு வெடித்ததாய்
செய்தி வர
தேடித் தடவுவேன் அந்த தேசத்தை
கைகளால் துடைப்பேன் 

Radiothon - அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனத்தின் 15 ஆவது ஆண்டு நிதி சேகரிப்புக்;கான வானொலியில் அறைகூவல்

இவ்வாண்டும், அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனத்தின் 15ஆவது ஆண்டு நிதி சேகரிப்புக்;கான வானொலியில் அறைகூவல் (சுயனழைவாழn) சிறப்பாக பெரிய வெள்ளி தினத்தன்று நடைபெற்றது.
சிட்னியில் இன்பத்தமிழ் ஒலி வானொலி ஊடாகவும், மெல்போர்னில் 3CR வானொலி ஊடாகவும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெற்ற இந்த நிதி சேகரிப்பில் அன்று மட்டும்  $135,000  சேகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்த வாரத்திலும் சேர்த்து அந்த தொகை $150,000  ஐ தாண்டியுள்ளதை பெருமையுடன் அறியத் தருகின்றோம்.
இந்த நிதி சேகரிப்பில் சேர்க்கப்பட்ட நிதி, இரண்டு முக்கிய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

பொன். கனகசபாபதி நினைவு விளையாட்டு நாள் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
இவ்வாண்டும், மகாஜனக் கல்லூரியின் பொன். கனகசபாபதி நினைவு விளையாட்டு நாள் மார்ச் மாதம் 28ம் திகதி அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பூப்பந்தாட்டம் (Badminton) போட்டிகள் இடம்பெற்றன. இதில் ஆண்கள், பென்கள், பொதுவான இரட்டையர் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல சிறந்த பூப்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியை விறுவிறுப்பாக்கினர்.


ஓபன் தமிழர் கழகத்தின் மூத்தோர் வார நிகழ்வுகள்

.
ஓபன் தமிழர் கழகத்தினரால் நடாத்தப்பட்ட  மூத்தோர் வார நிகழ்வு   மருத்துவ கலந்துரையாடலாக இடம் பெற்றது . நிகழ்வில் இருந்து ஒரு சில படங்களை  காணலாம் .


ILAM Thendral 2016 - Anbaalayam 09 04 2016

.சிட்னி முருகன் ஆலயத்தில் நாதஸ்வர தவில் கச்சேரி

.
சிட்னி முருகன் ஆலயத்தில் சென்ற வாரம் இடம் பெற்ற நாதஸ்வர தவில் கச்சேரியில் இசைக் கலைஞர்கள் கௌரவிக்கப் படும் காட்சி


தொலைந்துபோன வாழ்வு - பராசக்தி சுந்தரலிங்கம்

.                                                                                                                        
            1958---- இதுதான் நூலின் பெயர்
                               இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே மனதிலே பழைய  துன்பியல் சம்பவங்கள் நிழலாடின

 58'ம் ஆண்டுக் கலவரம் மூட்டிய ;தீ இன்னுமே எரிந்துகொண்டிருக்கும் அழகிய தேசத்தின் சோக வரலாறு பற்றிக் கூறும் ஒரு நூல் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அந்தச் சோகத்தையும் அதனால் பாதிக்கப்பட்ட ஓர் இனத்தின் அழகிய வாழ்க்கையையும் கவித்துவத்துடன் கூறும்  அழகிய கதை ஒன்றை ''காலச்சுவடு'' பதிப்பித்துள்ள திரு அ .இரவியின் படைப்பிலே தரிசித்தபோது அந்த எழுத்தின் தாக்கம் மனதிலே அழியாத  கோலங்களாக இடம் பெற்றதை பதிவு செய்வது  அவசியம் எனத் தோன்றியது

1958'ம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இனவன்முறை குறித்துப்   பேசுகிற புதினம் இது   இனவன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க்குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது

என்ற வாசகம் நூலின் பின்னட்டையில் காணப்படுகிறது


இது அம்மா சொன்ன கதை இவற்றில் எதுவும் என் சொந்த அனுபவம் இல்லை
இந்தக்  கதையில்    ஓரிடத்திலும் ''நான் ''  இல்லை  என்கிறார் ஆசிரியர்

ஆனால் அவரே  கதை சொல்லியாக வருவதால் நேரடியனுபவத்தை வாசகரும்
பெற்றுவிடுகிறார்கள்--நல்லதோர்  உத்தி என்றே கூறலாம்

மண்ணிலிருந்து ( உருவகக்கதை ) - முருகபூபதி

.
                        
அந்த  வீட்டின்  முன்னறையின்  யன்னலருகில்  வளர்ந்திருந்த  மரத்தில் வந்தமரும்  பறவையொன்று,    பிறக்கவிருக்கும் தனது   குஞ்சுகளுக்காக  ஒரு  கூடுகட்டியது.  அது  கருத்தரித்திருந்தது.   தனது  குஞ்சுகளுக்காக அயலில்  பறந்து  அலைந்து  குச்சிகளை   சேகரித்துவந்து  சிறுகச்சிறுக அந்தக்கூட்டை  அமைத்தது.
அந்தவீட்டிலிருக்கும்  மகனுக்கு   வேலை  எதுவும்  இல்லை.   தினமும்  அந்த அறையில்   முடங்கியிருந்து,  முகநூல்  பார்ப்பதும்,   அருகில் வைத்திருக்கும்   தட்டிலிருந்து  எதனையாவது   எடுத்து கொறிப்பதும், உண்ணுவதும்   உறங்குவதும்தான்   அவனுடைய  அன்றாட  வேலைகள்.
சோம்பலில்   ஐக்கியமாகி  அதுவே  சுகமென  வாழ்ந்தான்.
அவனுடைய  சோம்பேறித்தனத்தை     தாயும்  தந்தையும்  பலமுறை   கண்டித்தும்  அவன்  தன்னை   மாற்றிக்கொள்ளாமல்  அந்த  அறையே   கதியென்று  கிடந்தான்.

வேலணை மத்திய கல்லூரியின் ஒன்றுகூடல் 10 04 2016

.

கவி விதை - 13 - தேசத்(தின்) துரோகம் - -- விழி மைந்தன் --

.

அது பெரும் போர்.

போருக்கெல்லாம் தாய்ப் போர்  என்று கூட அதைச் சொன்னார்கள்.

 எதிரிகள் முன்னேறி வருகிறார்கள்.

எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும், தொழில்நுட்பத்திலும், மிகுந்தவர்கள்.

ஆனால் தர்மத்தில் குறைந்தவர்கள்.

சுருள்  அலை வெள்ளம் போலத் தொகையிலாப் படைகள் கொண்டவர்கள்.

ஆயிரக் கணக்கான விமானங்களும், பதினாயிரக் கணக்கான யுத்த வாகனங்களும், இலட்சக் கணக்கான பீரங்கிகளும் உடையவர்கள்.

இலங்கைச் செய்திகள்


72 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வீட்டுத் திட்டத்தை மீள் பரிசீலனை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

 'நல்லிணக்க படைவீரர்கள் கிராமம்"

முஸ்லிம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய கோத்தபாய

 "இராணுவம் வெள்ளைவானில் கடத்திச் சென்றதை கண்டேன்"

 மகள் திரும்பி வரு­வாளா ? : கதறி அழும் தாய்

வைத்தியர்கள் பாரிய ஆர்பாட்டம்

குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத் தண்டனை

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் தொழில் உரிமைப் போராட்டம்

புனர்வாழ்வுடன் 7 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!

குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குங்கள்: வித்தியாவின் தாயார் ஜனாதிபதியிடம் கோரிக்கை

அவுஸ்திரேலியா: மொழிபெயர்ப்பு முயற்சிகள் - முருகபூபதி

.
'எஸ்.பொ'  : ஆபிரிக்க  இலக்கியங்களை  தமிழுக்குத்தந்த முன்னோடி
மூன்று  நூல்களை  மொழிபெயர்த்த நல்லைக்குமரன்  குமாரசாமி    
                            
ஆங்கிலம்  சர்வதேச  மொழி.  அதனால்   ஏராளமான  பிறமொழி இலக்கியங்கள்  ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்படுகின்றன.  ருஷ்ய இலக்கிய   மேதைகள்  லியோ  டோல்ஸ்ரோய்,  மாக்ஸிம்  கோர்க்கி ஆகியோரினதும்  படைப்புகளின்  ஆங்கில  மொழிபெயர்ப்பின்  ஊடாகவே  சிலர்  அவற்றை  தமிழுக்குத்தந்தனர்.  பல  மேனாட்டு  மொழிகளை தெரியாத   தமிழர்கள்  அவற்றின்  தமிழ்  மொழிபெயர்ப்பின்  ஊடாகவே   அந்தநாட்டு  இலக்கியங்களை  படித்தனர்.

தமிழர்   புலம்பெயரத் தொடங்கியபின்னர்,  அவர்தம்  மத்தியிலிருந்த படைப்பாளிகள்   தமது  படைப்புகளை  ஆங்கிலத்திலும்  மொழிபெயர்த்து வெளியிட  ஆர்வம்  காட்டிவருகின்றனர்.   எனினும்  எதிர்பார்க்குமளவுக்கு  மொழிபெயர்ப்பு  முயற்சிகள்   நடப்பதில்லை.
ஆங்கிலப்புலமையுள்ள   தமிழ்ப்படைப்பாளிகளில்  ஒரு  சிலரைத்தவிர ஏனையோர்  தமது  தமிழ்ப்படைப்புகளை  மொழிபெயர்ப்பு  ஆற்றல் மிக்கவர்களின்  ஊடாகவே   ஆங்கிலத்தில்  வெளியிட்டுவருகின்றனர்.
பெரும்பாலான    மொழிபெயர்ப்பாளர்கள்  குறித்து    இலக்கிய உலகில் கவனிப்பு  குறைவு.

ஈழத்தமிழர்கள்  புலம்பெயர்ந்து  வாழும்  நாடுகளில்  அடுத்த தலைமுறையினர்   தமிழை  மறந்துவிடுவார்கள்  என்ற  அச்சம்  நீடிக்கிறது.   அதனாலும்  எம்மவர்கள்  தமது  தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்தில்   மொழிபெயர்த்து  வெளியிடுவதற்கு  ஆர்வம் காண்பிக்கின்றனர்.   மொழிபெயர்ப்பு  முயற்சிகள்  தொடர்பாக  கடுமையான விமர்சனங்களும்    முன்வைக்கப்படுகின்றன.   சொல்லுக்கு  சொல் மொழிபெயர்த்தால்   நடையில்  வரட்சியருக்கும்,  படிக்க  முடியாது  என்ற கருத்தும்  இருக்கிறது.