ஓட்டு ====================================ருத்ரா




உன் நிறம் என்ன?
உன் திறம் என்ன?
அதர்மத்தை வெட்டும்போது
நீ
கூர்மழுங்கிப் போகிறாய்.
தர்மத்தை நிலை நாட்ட‌
வந்தேன் என்கிறாய்.
நிலை தடுமாறி நிற்கிறாய்.
நீதியை நிறுவ‌
வந்தேன் என்கிறாய்.
பார்.
இங்கே தராசு தட்டுகளே
களவு போய்விட்டனவே.
யானையை
தடவிப்பார்த்தவர்களைப் போலவே
நாங்களும் உன்னைத்
தடவிப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
உன் முகம் எங்கே?
உன் கண்கள் எங்கே?
எங்கள் விழியின்றி
உந்தன் விழி தேடுகிறோம்.
நீ தட்டுப்படுவாய் என்று
கைகளை
காற்றில் அளைகின்றோம்.
நீ கனவா? இல்லை நனவா?
தெரியவில்லை.
இருந்தாலும்
போடுகிறோம்.போடுகிறோம்.
உன்னைப் போட்டுக்கொண்டே இருக்கிறோம்.
போட்டுப் போட்டுக்
குவித்துக்கொண்டேயிருக்கிறோம்.
ஏன்? எதற்கு? எங்கே? எனும்
கேள்விகளே இங்கு மிச்சம்.






கைப்பேசியும் களவுபோன நாட்களும்.. (வசனக் கவிதை) வித்யாசாகர்!


நாட்களை கைப்பேசிக்குள் தொலைக்குமொரு 
ஆபத்தான கனப்பொழுது,

எழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் கண்ணீரும்
இரத்தநெடியோடு நிரம்பிக்கிடக்கும் 

வலிநிறைந்த மனசெனக்கு,



மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் சுகர்
பிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம் 
மலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும் 
திரிந்துக் கொண்டிருக்க, நான் அங்கிருந்து நகர்ந்து 
பின்னறையை நோக்கி நடக்கிறேன்,



இரத்த சகதியில்
கசங்கிய மலர்போன்றோரு மகனை 
ஊர் பேர் தெரியாத சிலர் தூக்கிவந்து
மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்,


மெல்பேண் பாரதி பள்ளி தமிழ்ப் பாடசாலை SOUTH MORANG வளாகத்தின் நாடக விழா - 2018.


அவுஸ்திரேலியா மெல்பேணில் இயங்கிவரும் பாரதி பள்ளி தமிழ்ப் பாடசாலையின் SOUTH MORANG வளாகத்தின் நாடக விழா 11.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் கோலாகலமாக மண்டபம் நிறைந்த, பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தேறியது.
நாடகவிழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டது போல் பிற்பகல் 4.30 மணிக்கு வளாகத்தின் அதிபர், இணையதிபர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக நிருவாக உத்தியோகத்தர்களின் மங்கள் விளக்கேற்றுதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து பாரதி பள்ளியின் பாடசாலைக் கீதத்தினை மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் யாவரும் மேடையில் இணைந்து நின்று இனிமையாக இசைத்திருந்தார்கள்.

















கவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த்தென்றல் விருது!!


லங்கை திருநாட்டின் தலைநகரான கொழும்புவில் 08.08.2018 சனி கிழமையன்று "தடாகம் கலை இலக்கிய வட்டம்" எனும் அரசு பதிவுகொண்ட இலக்கியப் பேரமைப்பு ஒன்று தனது நூறாவது கவிதைப் போட்டியின் விழாவையும்சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழாவையும்தனது முப்பத்தைந்து வருட வெற்றி விழாவையும் சேர்த்து "பன்னாட்டு படைவிழா - 18" எனும் தலைப்பில் கொண்டாடி மகிழ்ந்தது.
அம்மன்றத்தின் தலைமை நிர்வாகியும் அமைப்பாளருமான கவிஞர் திருமதி ஹிதாயா றிஸ்வி அவர்கள் முன்னின்று நடத்ததமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் திரு. வித்யாசாகர் அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அனைவருக்கும் அனைவருக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
ஆஸ்திரேலியாஜெர்மன்லண்டன்நியூசிலாந்துமலேசியாகத்தார்சவுதி அரேபியாஅமீரகம் மற்றும் தாய் தமிழகமென பலரும் பங்குகொண்டு பெருமைச் சேர்த்த அப்பெருமை மிகு விழாவில் தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும் எனும் தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் ஒன்றும் கவிஞர் திரு.வித்யாசாகர் தலைமையில் நடந்தேறியது.

படித்தோம் சொல்கின்றோம்: பார்த்திபனின் - "கதை" மனிதவாழ்வில் அற்றுப்போனவர்களின் அவலக்குரலை பதிவு செய்துள்ள படைப்பாளி அந்நியமாவதற்கு தூண்டும் சமூகத்தின் வாழ்வுக் கோலங்களை சித்திரிக்கும் கதைகள் - முருகபூபதி


உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்திரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், எழுத முன்வந்த எழுத்தாளர்கள் பலர், தென்னிந்திய சிற்றேடுகளில் வெளியான கதைகளின் பாதிப்பில், சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பின்புலமாகக்கொண்டு கதை பண்ணினார்கள்!
அதற்குப்பின்னர் மறுமலர்ச்சிக்காலம் இலக்கியத்தில் பதிவானபோது இலங்கையர்கோன், சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரின் கதைகள் பரவலான  வாசிப்பிற்குட்பட்டு பிரதேச மொழி வழக்குகளும் அறிமுகமாயின.
இலங்கையில் இடதுசாரிகளின் இலக்கியப்பிரவேசத்தையடுத்து, முற்போக்கான சிந்தனைகளை அடியொற்றியும், சமூக ஏற்றதாழ்வு - சாதிப்பிரச்சினைகள் - வர்க்கப்போராட்டம் பற்றியும் கதைகள் தோன்றின.
இக்கால கட்டத்தில் அறிமுகமான பல விமர்சகர்கள் மார்க்ஸீயப் பண்டிதர்களாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் விளங்கினர். இவர்கள் நமது ஆக்க இலக்கியப்பிரதியாளர்களிடம், சோஷலிஸ யதார்த்தப்பார்வையை எதிர்பார்த்தனர்.
இதனால் அந்தப்பார்வைக்கு ஏற்பவும் அதே சமயத்தில் அழகியல் அம்சத்துடனும் பலர் ஈழத்து இலக்கிய உலகில் தமது படைப்புகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப்பின்னணியில் தமிழகப்படைப்புகள் கலைத்துவத்தில் முன்னின்றன. ஈழத்து படைப்பு இலக்கியம் இலக்கிய விமர்சன பிதாமகர்களின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அழகியலை இழக்கநேர்ந்தது. எனினும் குறிப்பிட்ட சில அழகியல் சார்ந்த படைப்புகள் வெளிவந்தன.
1970  இன் பின்னர் தேசிய இனப்பிரச்சினை இனமுறுகலாகியதும்  படைப்பு இலக்கியத்தில் " இஸங்கள்" குறித்த விமர்சனங்கள் கூர்மையடைந்தன. கேள்விக்குட்படுத்தப்பட்டன.
போர்க்காலம் தொடங்கியதும் போர்க்கால இலக்கியமும், போரினால்  மக்கள் இடம்பெயர்ந்ததும், இடம்பெயர்ந்தோர் இலக்கியமும் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்ததும், அவர்கள் மத்தியிலிருந்த இலக்கியவாதிகளினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் பின்னர் புகலிட இலக்கியமும் வரவாகியது.

போர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை)




ரு பகைக் கொண்டு மனிதரைக் கொல்வாய்
விலங்குகளையும் மனிதரென வெட்டுவாய்
பொருட்களை ஒழிப்பாய்
எல்லாம் ஒழிந்து தனியே நிற்கையில்
தனிமை உனைக் கொன்றொழிக்கும்,
உள்ளேயொரு மனசு எதற்கோ வீறிட்டு அழுகையில் உடம்பெல்லாம் ஒரு கேவு கேவும்
கதறியுனை அழச் சொல்லும்,
தனியே வாழ்தல் வாழ்தலல்ல; உயிர்த்திருத்தல்
மட்டுமே அது.,
தனித்திரு, மனதால், ஆசையொழிய தனித்திரு அது வேறு
ஆனால் நீ மகிழ்கையில் மகிழ, வெல்கையில் உனக்குக் கைத்தட்ட
கூடயிருந்து உன்னோடு பூரிப்படைய இந்த மனிதர்கள் வேண்டுமென்பதை உணர்த்திய சில போர்கள் உண்டு.

நடக்கும் அத்தனைப் போரும் வெற்றியை ஈட்டுபவை மட்டுமல்ல. சிலது வேதாந்தம் போதித்தவை. சிலது காவியத்தை படைத்தவை. சிலது கண்ணீர் கதையெழுதிச் சென்றவை. அப்படி நடக்குமொரு போரில் கற்ற வேதாந்தமாய்த்தான் இந்த நாவலையொரு திருமணத்தை மைய்யப்படுத்தி கதையினூடாகவொரு வரலாற்றை நினைவுபடுத்தும் சிறப்புமிக்கதொரு சாதனைக் கதையை தந்திருக்கிறார் திரு. எச். ஜோஸ்.

நவீன இந்திய நாவல்கள்- எனது பார்வை - நடேசன்


(அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல்,  இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை)

நீலகண்டப்பறவையைத்தேடி - வங்காளம்  
ஹோமரின் இலியட் மற்றும்  ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா.
மிருகங்களை பாத்திரமாக்கிய  ஐதீகக்  கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உருவாகின. மகாபாரதத்தில் தருமருடன் இறுதிவரையும் நாயொன்று சொர்க்கத்திற்கு செல்கிறது. பாரதத்திலே  இயற்கை கதைக்களமாக மாறியது. ஆறுகள்,  வனங்கள் மற்றும் கடல்கள் இந்திய இலக்கியமெங்கும் செறிந்தள்ளன. மகாபாரதத்தில் பாண்டவர் வனவாசம் சென்றதுபோல் இராமாயணத்திலும் பதினான்கு வருடங்கள் இராமன்,  சீதை, இலக்குவன் சென்ற காடு வருகிறது.  காளிதாசனின் மேகதூதம் போன்று இயற்கையையும் கொண்டாடும் கதைகள் உருவாகிய இடம் பாரதம்.
வங்காள நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத்தேடி நாவலை வாசித்தபோது,  புதிய முரண்பாடுகளைத் தன்னிடம் கொண்ட பழங்கால இந்திய இலக்கியத்தின் உண்மையான நேரடி வாரிசாக வங்காள இலக்கியம் இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இலங்கைச் செய்திகள்


வெளியாகியது நாடே எதிர்பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!!!

அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை  

மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் -  ரிஷாட் கோரிக்கை

வாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த

நாம் ஆட்சி அமைத்தவுடன்  தமிழருக்கு தீர்வு நிச்சயம்  சம்பந்தனிடம் ரணில் 

போர்க்களமாக மாறிய பாராளுமன்ற காட்சிகள்

இன்றைய சம்பவங்கள்- பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகரின் கருத்து என்ன?

கொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார் : ராஜித தகவல்

வடமராட்சியில் வாள்வெட்டு தாக்குதல்

விரைந்து தீர்வுகாணுமாறு ஜனாதிபதிக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா அழுத்தம்

பலவந்தமாக என்னை பதவி நீக்க முடியாது:மஹிந்த

ஜனாதிபதியின் விசேட அழைப்பு

சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த

நாங்கள் ஒப்படைக்கத் தயார், நீங்கள் தயாரா? - சவால் விடுத்த அஜித் பி பெரேரா

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன் 

வருடாந்த திருத்தொண்டர் விழா 25/11/2018


உலகச் செய்திகள்


பாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

அனுமதியின்றி உள்நுழைந்த இந்தியர்கள் அமெரிக்க சிறையில்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தொடர் ரொக்கட் தாக்குதல்

ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு

காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட்  குண்டுவீச்சு

ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு

ட்ரம்ப் தலைமையில் தீபாவளி பண்டிகை

கருணாநிதி மறைந்து 100ஆவது நாள் 

காட்டுத்தீயில் சிக்கி 50 பேர் பலி - அமெரிக்காவில் சம்பவம் 

பிரெக்சிட் உடன்படிக்கையை வெளியிட்டது ஐரோப்பிய யூனியன்

பத்திரிகையாளரை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் உத்தரவிட்டார்- சிஐஏ

கஜா புயலுக்கு 800 ஏக்கர் வாழை, கரும்பு பாதிப்பு

மாலைதீவின் புதிய ஜனாதிபதியானார் இப்ராகிம் மொகமது சாலிக்


பாகிஸ்தானில் விமான விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

12/11/2018 பாகிஸ்தானில் விமானமொன்று தரையிறங்கும்போது அதன் இரு சக்கரங்களிலும் எதிர்பாராத விதமாக காற்று வெளியேறியமையினால் ஓடு பாதையை கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மெல்பனில் தமிழக படைப்பாளி தமிழச்சி தங்கபாண்டியனுடன் இலக்கிய சந்திப்பு 25/11/2018



அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழக எழுத்தாளரும்  இலக்கிய ஆய்வாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொள்ளும் இலக்கியச்சந்திப்பு மெல்பனில்,  வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில், எதிர்வரும் 25 ஆம் திகதி ( 25-11-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.
மஞ்சனத்தி, வனப்பேச்சி,  எஞ்சோட்டுப்பெண், சொல் தொடும் தூரம், நிழல் வெளி, பேச்சரவம் கேட்டிலையோ, பாம்படம், மயிலிறகு மனசு, மண்வாசம் முதலான நூல்களை எழுதியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் அவுஸ்திரேலியாவில் புகலிடத்தமிழர்களின் கலை, இலக்கிய  வெளிப்பாடுகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். அரங்கச்செயற்பாடுகளிலும் ஈடுபாடுள்ளவர்.
நடைபெறவுள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழச்சி தங்கபாண்டியனின் நிழல் வெளி நூலும் அறிமுகப்படுத்தப்படும்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.
-->




தமிழ் சினிமா - காற்றின் மொழி திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஒதுங்கியிருந்தார். இரண்டாவது சீசனில் மரத்தை சுற்றி ஆடாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
36 வயதினிலே, மகளிர்மட்டும் படத்தையடுத்து ஜோதிகா தற்போது பாலிவுட்டில் ஹிட்டான துமாரி சுலு படத்தின் ரீமேக்கான காற்றின் மொழி படத்தில் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி இப்படம் வந்துள்ளதா பார்ப்போம்.

கதைக்களம்

திருமணமான ஜோதிகா 12 வயது பையனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். விதார்த்தின் மனைவியாக வரும் இவர் வீட்டில் அன்றாட வேலையை செய்யும் வழக்கமான குடும்பப்பெண்ணாக வருகிறார்.
ஒருகட்டத்தில் தானும் வேலைக்கு போகவேண்டும் என முடிவெடுக்கும் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக மாறுகிறார். அவர் குரலில் இருக்கும் ஈர்ப்பை பார்த்து அவருக்கு சமையல் மந்திரம் பாணியிலான ஒரு இரவுநேர ஷோவை தருகின்றனர்.
இதில் முதலில் பேசும் நேயரே மிகவும் காதுகூசும்படியான கேள்வியை கேட்கிறார். ஆனால் அதற்கு ஜோதிகா தரும் பதிலில் ரசிகர்களின் கைதட்டை பெறுகிறார். இதன்பிறகு இவரது குரலுக்கு பல ரசிகர்கள் உருவாகிறார்கள்.
அதன்பின் அவரது குடும்ப வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது. வேலைக்கு செல்வதால் கணவன், மனைவி இடையே என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதே மீதிக்கதை.

படத்தைப்பற்றிய அலசல்

ராதா மோகன் படம் என்றாலே குடும்பத்தோடு போகலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இதை இந்தப்படத்திலும் காப்பாற்றியிருக்கிறார். இரவு நேர வேலைக்கு செல்வதால் குடும்பத்திலும், சமூகத்திலும் எந்த மாதிரியான பிரச்சனையை ஒரு பெண் சந்திக்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளார்.
படத்துக்கு மொத்த பலமே ஜோதிகாதான் டிரைலரில் ஓவர்ஆக்டிங் போல தெரிந்தாலும் படத்தோடு பார்க்கையில் அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் சரியாக செய்திருக்கிறார் என்று சொல்லவைக்கிறார். முந்தைய படங்களை போல அதிக சோகத்தை காட்டாமல் காமெடியில் கலக்கியுள்ளார். அழுகிற காட்சிகளில் அனைவரையும் கலங்க வைக்கிறார்.
யோகி பாபுவின் காமெடியை விட மற்ற ராதாமோகனின் பேவரைட் காமெடி நடிகர்களான குமரவேல், எம்.எஸ் பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி போன்றோரின் காமெடிகளும் ரசிக்கவைக்கிறது.
லட்சுமி மஞ்சு கதாபாத்திரம் மிகவும் கவனிக்கவைக்கிறது. மொபைல் கேமுக்கு அடிமையாக மாறிய ஜோதிகாவின் மகனாக வரும் சிறுவனின் கதாபாத்திரம் இன்றைய அவசர உலகில் பெற்றொர் எப்படி பிள்ளைகளை கவனிக்க மறக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
கணவனாக வரும் விதார்த்தும் தன் நடிப்பை சிறப்பாக செய்துள்ளார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஓரளவு நன்றாகவே உள்ளது.
கெஸ்ட்ரோலில் வரும் சிம்புவும் கைதட்டல் வாங்குகிறார்.
பாடல்களை விட பின்னணி இசையில் அசத்தியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மானின் தங்கை மகனான அறிமுக இசையமைப்பாளர் காஷிப். நம்புறவங்கிட்ட சாரி சொல்ல வேண்டியிருக்கு, நம்பாதவங்ககிட்ட சரி சொல்ல வேண்டியிருக்கு என பல வசனங்களில் அசத்துகிறார் பொன்.பார்த்திபன்.

க்ளாப்ஸ்

அடுத்த லெவலுக்கு முன்னேறியுள்ள ஜோதிகாவின் நடிப்பு, துணிச்சலாக இந்த கதாபாத்திரத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். காமெடி நன்றாகவே உள்ளது.

பல்ப்ஸ்

பெரிதாக இல்லையென்றாலும் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். சில செயற்கைத்தனமான காட்சிகள்.
மொத்தத்தில் காற்றின் மொழி அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் மொழி.
நன்றி