காதலுணர்ந்து காதல் செய் - சரண்ணியா செழியன்

 .நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்குத் தேர்வான முதல் ஈழத்துப் பெண் - கானா பிரபா

 .

நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்குத் தேர்வான முதல் ஈழத்துப் பெண் இலங்கை அரச பயங்கரவாத்தால் கொல்லப்பட்ட ஊடகரால் மனித உரிமை நோக்கிய பயணத்தில்

வனுஷி வால்டர்ஸ் (Vanushi Walters) நியூசிலாந்து நாட்டில் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வட மேற்கு ஆக்லாந்து தொகுதியில் வென்றார். இவர் மனித உரிமைகள் சட்டத்தரணியாக, மனித உரிமைகள் அமைப்பின் மூத்த தலைமை அதிகாரியாகவும் இருந்தவர். இவருக்கு மூன்று குழந்தைகள்.
வனுஷி தனது 5 வது வயதில் நியூசிலாந்து நாட்டுக்குப் புலம் பெயர்ந்தவர்.
தனது உறவினர் பத்திரிகையாளராக இருந்த போது 1990 இல் இலங்கை அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டதைத் தொடந்து தனது மனித உரிமைக்கான பயணத்தைப் பதின்ம வயதில் தொடங்கினேன் என்றும் New Zealand Board of Amnesty இல் தனது முதல் சட்டவாளர் பயணத்தைத் தொடங்கினேன் என்றும் Amnesty’s Global Board இல் தொடர்ந்து தேர்வானேன் என்றும் ஒரு பேட்டியில் வனுஷி முன்னர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் குறிப்பிட்ட உறவினர் ரிச்சார்ட் டி செய்சா என்ற பிரபல ஊடகர். அவரின் கொலை குறித்து விக்கிப்பீடியாவில் வந்த பகிர்வு.
ரிச்சர்ட் இலங்கையின் பெரும்பான்மை சிங்களத் தந்தைக்கும் சிறுபான்மை தமிழ்த் தாய்க்கும் பிறந்தவராவார். இவர் கொழும்பில் பிறந்து வளர்ந்தார். ரிச்சர்ட் பிரபல ஊடகவியலாளரும் மலேசியாவில் வசித்தவருமான மாணிக்கசோதி சரவணமுத்துவின் மகளும், பிரபல மருத்துவருமான மனோராணி சரவணமுத்துவின் மகன் ஆவார்.
ரிச்சர்ட் தனது தாயாருடன் வெலிகடவத்த வீடமைப்புத்திட்டத்தில் வசித்து வந்தார். 1990 பெப்ரவரி 17/18இரவில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய குழு அவரை அங்கிருந்து கடத்திச் சென்றனர்.

பொறிபுலன் கடந்து நிற்கும் இறையினைப் போற்றி நிற்போம் !மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் .. ஆஸ்திரேலியா

  

ஆசைகள் அகல வேண்டும்

ஆணவம் அழிய வேண்டும்

அகமெலாம்  இறையின் நாமம்

அரணென நிற்க வேண்டும்

 

வாய்மையே ஓங்க வேண்டும் 

வன்முறை மடிய வேண்டும்

தாய்மையே எழுதல் வேண்டும்

தரணியே சிறந்து நிற்கும்  !

 

வேற்றுமை விலக வேண்டும்

விரக்தியை விரட்ட வேண்டும்

ஏர்ணஸ்ட் சே குவேரா (1928 ஜூன் 14 – 1967 ஒக்டோபர் 09 ) 53 ஆம் ஆண்டு நினைவு வாழ்வின் அவலத்தை தேடிச்சென்ற கெரில்லாத்தலைவர் -- அங்கம் -01 முருகபூபதி

 முன்கதைச்சுருக்கம்  ஒரு நாட்டில் பிறந்து   மற்றுமோர் இனத்தின் விடுதலைக்காக போராடிய மாபெரும் போராளி                             ஏர்ணஸ்ட் சேகுவேரா நினைவிடத்தை  காண்பதற்காக 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மெல்பன் இலக்கிய நண்பர் நடேசனுடனும் கனடா  ஒளிப்படக்கலைஞர் ருத்ரனுடனும் சென்றிருந்தேன். அந்த மனப்பதிவுகளை சேகுவேராவின் 53 ஆவது நினைவு தினத்தில் வாசகர்களுடன் பகிர்ந்து  கொள்கின்றேன்.  


கியூபா புரட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் சாந்தா கிளாரா. சேகுவேராவின் தலைமையில் புறப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு வாழ்வா- சாவா என்பதைத் தீர்மானிக்கவிருந்த உக்கிரமான போர் நிகழ்ந்த இடம்தான் சாந்தாகிளாரா.    

இந்த நகரத்தின் முக்கியமான முகாம்களில் சர்வாதிகாரி பாடிஸ்டாவின் படையினர்  சுமார் 2500 பேர் இருந்தனர். தவிர, மேலும் ஆயிரம்பேரைக்கொண்ட ஆயுதப்படையினர் சாந்தாகிளாராவைச் சுற்றியிருந்த பிரதேசங்களில் நிலைகொண்டிருந்தனர்.   

ஆனால், சேகுவேராவிடம் 300 போராளிகள் மாத்திரமே தாக்குதலுக்குத் தயாராகியிருந்தனர். இங்கு நிகழ்ந்த போர்தான் கியூபாவின் தலைவிதியையே மாற்றியது.  துணிச்சலும் அயராத  கடினஉழைப்பும் போர்த் தந்திரோபாயமும் கொண்டிருந்த சேகுவேராவின் வீரத்துக்கு அடையாளமாகத்திகழ்ந்த சாந்தாகிளாராவில்தான், பொலிவியா புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது எலும்புகளும் எச்சங்களும் வைக்கப்பட்ட கல்லறையும் நினைவில்லமும் அமைந்துள்ளன.  வீரம்செறிந்த போர்நிகழ்ந்த சாந்தாகிளாராவில் 1958 டிசம்பரில் சேகுவேராவும் அவரது கெரில்லாபடையினரும் முறியடித்து கவிழ்த்த ரயில் பெட்டிகளைப் பார்க்கச்சென்றோம்.  சேகுவேராவிடம் துப்பாக்கிமாத்திரம் இருக்கவில்லை. எப்பொழுதும் கைவசம் பேனாவும் குறிப்புப்


எழுத்தும் வாழ்க்கையும் -- அங்கம் 13 -- முருகபூபதி


வானுயர்ந்த கட்டிடங்கள், கோபுரங்களை அண்ணாந்து பார்த்து வியந்திருக்கிறேன். நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் விரையும்போது காணும்  காட்சிகளின் பரவசத்தை ரசித்திருக்கின்றேன். ஆனால்,  அபூர்வமாகத்தான் அந்த நிர்மாணங்களின் பின்னணியிலிருந்த கடின உழைப்பைப்பற்றி நினைத்திருப்பேன். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதுதான் இயல்பு.  கட்டிடங்கள், கோபுரங்களுக்கு அடியில் கண்களுக்கு புலப்படாமலிருக்கும் அத்திவாரம் பற்றி யாருக்குத்தான் என்ன அக்கறை? என்ன கவலை.? யாருக்குத்தான் அதுபற்றிய  சிந்தனை?  நெடுஞ்சாலைகளுக்கு அடியில் நிரந்தரமாக உறங்கும் அந்தக்கற்களைப்பற்றி யார்தான் நினைத்துப்பார்க்கிறார்கள்.? 

 மழைவெள்ளத்தால் வீதியில் பள்ளமும் திட்டியும் தோன்றி அந்தக்கற்கள் விழித்து மேலெழுந்துவிடும்போது பயணிக்கும்பாதையை திட்டிக்கொண்டே செல்வோம்.  பேசாமடந்தைகளான


வீதிக்கற்களையும் கட்டிட கோபுர அத்திவாரங்களையும் போலவே இந்த உலகத்தில் பலர் மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகத்துக்கு தெரிவது அபூர்வம்.  எனது வாழ்வில் அப்படி ஒரு அபூர்வமான மனிதரை சந்தித்திருக்கின்றேன். எனது முதலாவது சிறுகதையை மல்லிகைக்காக அச்சுக்கோர்த்த சந்திரசேகரம் அவர்களைத்தான் இந்தப்பத்தியில் அபூர்வமான மனிதர்

எனக்குறிப்பிடுகின்றேன்.  எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் வெளியீட்டு நிகழ்வை யாழ்ப்பாணத்தில் மல்லிகைப்பந்தல் சார்பாக ஒழுங்குசெய்துவிட்டு , ஜீவா எனக்கு அஞ்சலட்டை மூலம் அழைத்திருந்தார்.   

யாழ். ராஜா தியேட்டருக்கு சமீபமாக கஸ்தூரியார் வீதிக்கும் காங்கேசன்துறை வீதிக்கும்  இடையில் சிறிய ஒழுங்கையில் சிறுநீரும் மணக்கும்.   மாதாமாதம் மலரும்  மல்லிகையின் அச்சு மையும்  மணக்கும்.   ஆண்கள் தங்களது அவசர உபாதையை  போக்குவதற்கு  ஒதுங்கும் ஒழுங்கை அது.   அங்கே ஒரு  சிறிய கட்டிடத்தை மட்டுமல்ல அதனுள்ளிருந்து அச்சுக்கோர்க்கும் சந்திரசேகரம் அண்ணரையும் அன்றுதான்             ( 1975 இல் ) பார்த்தேன். எல்லாம் நேற்று நிகழ்ந்ததுபோன்று நினைவில் தங்கிய காட்சிகள் அவை.  ஜீவா அறிமுகப்படுத்தினார். “இதுதான் எங்கட முருகபூபதி” மலர்ந்தமுகத்துடன் அன்று  என்னை வரவேற்றமைபோன்றுதான், அந்த மல்லிகை காரியாலயத்தின் படிக்கட்டுகளில்  ஏறிவந்தவர்களையும் உள்ளே அழைத்திருப்பார்.    

நலம் தரும் நவராத்திரி - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்


  தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை எமது பாரம்பரியமானதாகும். அதனால்த்தான் " அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " என்று அன்னைக்கு முதலிடம் அளித்திருப்பதைக் காண்கின்றோம்." தாய் சொல்லைத் தட்டாதே " என்கின்றோம். பூமியைய் தாய் என்கின்றோம் . பொறுமையைத் தாய் என்கின்றோம்.கருணையைத் தாய் என்கின்றோம். கங்கைகளையும் பெண்மையின் நிலையில் கண்டு தாய் என்றே போற்றி நிற்கின்றோம்.

  உலகிலே உயர்ந்து நிற்பது எதுவென்றாய் அது தாய்மைதான். தாய்மைக்கு ஈடாக எதுவுமே இல்லை எனலாம். இதனால்த்தான் தாய்மையை தெய்வத்துக்கு ஒப்பிட்டு சக்தி வழிபாடே தொடங்கியது எனலாம் . உலக இயக்கத்துக்கு சக்தியே முதன்மையானது. சக்தி இல்லாவிட்டால் உலக இயக்கமே அற்றுவிடும். இந்த அடிப்படையில் சக்தியை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே நவராத்திரி ஆகும்.

  சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. ஆனால் சக்திக்கு ஒன்பது ராத்திரிகள். அதுதான் நவராத்திரி.அனைத்து இயக்கங்களுக்கும் ஆதார சக்தியாக அம்பிகை விளங்குவதால் ஒன்பது ராத்திரிகள் அமைந்துவிட்டன என்றுதான் எண்ண முடிகிறது.

  நவராத்திரி எப்பொழு ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது - பாரத காலம்இராமாயண காலம் வந்து நிற்கிறது. நீண்ட காலமாகவே நவராத்திரி கைக்கொள்ளப் பட்டு வந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 36 – பம்பை – சரவண பிரபு ராமமூர்த்தி

 பம்பை – தோற்கருவி  


'பம்பை உடுக்கை கொட்டி, பரிவட்டம் மேலே கட்டி, தங்கரதம் போலே ஆடும் வித்தாரக் கள்ளி; எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு, அச்சாரம் சொல்லி,' என்று ரிக்க்ஷாக்காரன் படத்தில், எம்.ஜி.ஆர்., நடித்த பாடல், அதில் நாம் தமிழகத்தில் புழங்கி வந்த பம்பையின் பழைய வடிவை காணலாம். இரு உருள் வடிவ பகுதிகள் சேர்ந்தது பம்பை. பழைய பம்பையில் ஒரு உருள் மிகப் பெரியதாக இருக்கும். மற்றொன்று சிறியதாக இருக்கும். நீளமும் தற்கால பம்பையின் முக்கால் அளவு தான் இருக்கும். 

பழைய பம்பைகள் மரத்தில் தான் செய்யப்பட்டது. கோவில்களுக்கு ஐம்பொன் அல்லது வெங்கல பம்பைகள் செய்து சிலர் காணிக்கை அளித்தார்கள். பிறகு இந்த முறையே எல்லா


இடங்களிலும் பம்பை தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது பித்தளை/இரும்பில் கூட பம்பை வந்து விட்டது. 

ஆனால் அதில் நாதம் வராது சத்தம் தான் வரும். பம்பையின் ஓலியை அதிகரிக்க அதன் நீளம் அதிகரிக்கப்பட்டதாக கூறுகிறார் 9 தலைமுறைகளாக இக்கலையைப் பேணி வரும் புதுச்சேரி திரு ஞ. செந்தில் அவர்கள். பம்பையின் ஒரு பகுதியை அலங்காரம் என்றும் மற்றொன்றை திம்மி என்றும் அழைக்கிறார்கள். 

மேற்கு தமிழகத்தில் பெரிய உருளையை 'துந்துமி' என்றும், சிறியதற்கு 'திமிரி' என்றும் பெயர்.  அலங்காரம் பகுதிக்கு ஆட்டுத்தோலும் திம்மிக்கு மாடு அல்லது எருமைத் தோலும் கட்டுவார்களாம். மரமும் தோலும் பயன்படுத்தி செய்த பம்பை தான் இனிய நாதம் தரும் என்கிறார் திரு செந்தில். சுமார் 100 ஆண்டு பழமையான செந்தில் அவர்களின் பாட்டனார் திரு பழனி பூசாரி பயன்படுத்திய பாரம்பரிய புதுச்சேரி பாணி கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட பம்பையை படத்தில் காணலாம்.  

பண்ருட்டி வட்டாரங்களில் பம்பையின் வடிவம் வேறு. பண்ருட்டி பலாவின் செழிப்பால் திம்மி பகுதியை பலா மரத்தில் செய்கிறார்கள். தவிலை போல இருக்கும் ஆனால் அதைவிட சிறியது. தோல் எல்லாம் கிடையாது. மலையேறி விட்டது. ஃபைபர் தட்டுகள் தான் என்கிறார் பண்ருட்டியைச் சேர்ந்த பம்பை இசைக்கலைஞர் திரு நாகராஜ் அவர்கள். இது தவிலுக்குப் போட்டியாக இடைக்காலத்தில் உருவான ஒரு பம்பை வடிவம். மற்ற பம்பையை விட ஒசை அதிகம் தரவல்லது.   

பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் 25 வது ஆண்டு நினைவில் - கானா பிரபாஈழத்தின் மிக முக்கியமானதொரு கலை, இலக்கியப் படைப்பாளி சில்லையூர் செல்வராசன் அவர்கள் நம்மை விட்டு மறைந்து இன்று ஒக்டோபர் 14, 2020 யுடன் 25 ஆண்டுகளாகிறது.

ஈழத்துப் படைப்பாளிகள் பலர் ஒரு குறிப்பிட்ட இயங்கு நிலைக்குள் இல்லாது பன்முகத் தன்மையோடு இயங்குகிறார்கள் என்பதற்கு சில்லையூர் செல்வராசன் வாழ்ந்து காட்டிய உதாரணம்.

தான்தோன்றிக் கவிராயர் என்ற புனை பெயரில்  கவிஞராகவும், வானொலிப் படைப்பாளியாகவும், நாடக, திரைப்பட நடிகராகவும் மிளிர்ந்தவர். ஈழத்துத் திரைப்படங்களில் தமிழ், சிங்களத்தோடு புலத்துக்கு வெளியே ஆங்கிலப் படங்களிலும் நடித்தவர்.

இலங்கை வானொலி யுகத்தின் பொற்காலம் சில்லையூர் செல்வராசன் பெயர் தாங்கும்.

எழுத்தாளர் நித்தியகீர்த்தி நினைவில்தொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் ஒக்டோபர் 15, 2009 வியாழனன்று இரவு மாரடைப்பால் இறந்தார்.
வரப் போகும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்தது அப்போது.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 20 - ராமன் எத்தனை ராமனடி - சுந்தரதாஸ்

தமிழ் சினிமாவில் பிரபல டைரக்டராக திகழ்ந்தவர் பி மாதவன். கதை வசனம் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கியவர் பாலமுருகன். இவர்கள் இருவரும் இணைந்து சிவாஜிகணேசனின் நடிப்பில் பல படங்களை உருவாக்கினார்கள், அவற்றில் ஒன்றுதான் 1970இல் வெளியாகிய ராமன் எத்தனை ராமனடி. மாதவன் தனது அருண் பிரசாத் மூவீஸ் சார்பில் தயாரித்தார். முதலில் சாப்பாட்டு ராமன் என்று பெயரிடப்பட்டு சிவாஜி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கிராமத்தில் அப்பாவி இளைஞனாக சுற்றித்திரியும் ராமனுக்கும் ஜமீன்தாரின் தங்கைக்கும் இடையே காதல் அரும்புகிறது. ராமன் வெகுளித்தனமாக ஜமீன்தார் தன் நண்பர்களுடன் கூடி இருக்கும் போது சென்று அவரின் தங்கையை தனக்கு மணமுடித்து தரும்படி கேட்கிறார். ஜமீன்தாரோ பலர் முன்னணியில் அவனை அடித்து கேவலப்படுத்தி விரட்டுகிறார். பிழைப்புத் தேடி பட்டணம் செல்லும் ராமன் திரைப்பட நட்சத்திர நடிகனாகிறான் . லட்சாதிபதியாக ஊர் திரும்புபவன் ஜமீன்தாரிடம் பெண் கேட்டு மிடுக்காக செல்கிறான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இப்படி அமைந்த கதையை எழுதி தனது அருமையான வசனங்களால் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டார் பாலமுருகன். படத்தில் வெகுளியான அப்பாவியான வேடம் சிவாஜிக்கு . இது பின்னர் கமலஹாசனின் சப்பானி பாத்திரத்திற்கு அச்சாணியாக அமைந்தது.

Vanushi Walters ,N Raganayagam, becomes first Sri Lanka born MP in New Zealand Parliament

 .

நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்துக்கள் 


Vanushi Walters (39) became the first Sri Lankan born Member of New Zealand’s Parliament after winning  the race to be Upper Harbour MP in northwest Auckland.

She claimed a narrow victory over National candidate Jake Bezzant, a former tech company chief executive and cricketer for Hamilton, receiving 14,142 votes to Bezzant’s 12,727.

Walters is a Sri Lankan New Zealander who is married with three sons. Before entering Parliament, Walters worked as a human rights lawyer and as a senior manager at the Human Rights Commission.

Vanushi had moved to New Zealand from Sri Lanka when she was just five years of age. (NewsWire)

இலங்கைச் செய்திகள்

ரிஷாட்டுக்கும், யாசீனுக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை

நாட்டை முடக்காது சகலவித முன்னேற்பாடுகளும் முன்னெடுப்பு

பிரதமரின் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில் தொண்டமான்

கைது செய்யப்படப் போவதை அறிந்து தப்பிச் சென்ற ரிஷாட்

20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை

சட்டத்தை மலினப்படுத்த இடமளிக்காதீர்; ரிஷாட் கைதாகாமை குறித்து சட்ட மாஅதிபர் பொலிஸார் மீது கடும் சீற்றம்

ரியாஜ் பதியுதீனின் மனு விசாரணை ஒக்டோபர் 20 இல்

ஏப். 21 தாக்குதல்; ரிசாத், அதாவுல்லா சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை


ரிஷாட்டுக்கும், யாசீனுக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை

ரிஷாட்டுக்கும், யாசீனுக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை-Travel Ban-Rishad Bathiudeen-Samsudeen Mohamed Yaseen

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றம் சம்சுதீன் மொஹமட் யாசீன் ஆகியோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில், வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியமை, அதற்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் கைது செய்யப்பட்டு, ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளார்.

உலகச் செய்திகள்

ஆதரவாளர்களின் கூட்டத்தில் முகக்கவசத்தை எறிந்த டிரம்ப் 

பிரச்சினைக்குரிய பகுதிக்கு கப்பலை அனுப்பும் துருக்கி

பங்களாதேஷில் கற்பழிப்புக்கு மரண தண்டனை அறிமுகம்

நியூஸிலாந்து பாராளுமன்றுக்கு தெரிவான முதல் இலங்கையர் வனுஷி வோல்டர்ஸ்


ஆதரவாளர்களின் கூட்டத்தில் முகக்கவசத்தை எறிந்த டிரம்ப்

கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் முதன்முறையாக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி முகக்கவசத்தை தூக்கி எறிந்துள்ளார்.

வைரஸ் தொற்று உறுதியான நிலையில் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் வெள்ளை மாளிகை திரும்பியிருந்தார். அவர் கடந்த திங்கட்கிழமை மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தைத் ஆரம்பித்துள்ளார்.

புளோரிடாவின் சான்போர்டில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றார். சமூக இடைவெளி இல்லாமல் நடைபெற்ற இந்தப் பேரணியில் பெரும்பான்மையானோர் முகக்கவசமின்றி பங்கேற்றனர். இதில் பேசிய டிரம்ப்், “நான் இப்போது கொரோனாவைக் கடந்துவிட்டேன். நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.மேலும் ”உங்கள் அனைவரையும் நான் முத்தமிடுவேன். ஆண்களையும், அழகான பெண்களையும் முத்தமிடுவேன்” எனக்கூறி தனது முகக்கவசத்தை ஆதரவாளர்களை நோக்கி வீசி எறிந்தார்.

இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 3 “படைப்புலகில் அ.முத்துலிங்கம்” ஞாயிற்றுக்கிழமை 25-10-2020


 மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 57 முருகபூபதி


இரவு  வேலையால் வீடு திரும்பியிருந்த ஜீவிகாவிடம், வீடு பார்க்க வந்தவர்கள் பற்றி அபிதா சொல்லிக்கொண்டிருந்தாள்.  “  பெரியப்பாவும், அவள் தர்ஷினியும் இந்த வீட்டை விற்பதில் வெகு உஷாராகத்தான் இருக்கிறார்கள் போலத் தெரிகிறது.  அவளுக்கு பயம் வந்துவிட்டது என நினைக்கிறேன் அபிதா.  நான் இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடிவிடுவேன் என்ற யோசனை அவளுக்கு வந்திருக்கலாம்.  எல்லாம் பெரியப்பாக இங்கே வந்து திரும்பிய பின்னர் அவளிடத்தில் தோன்றிய மாற்றங்கள்தான். “ ஜீவிகா சொல்லச்சொல்ல அபிதா கேட்டுக்கொண்டிருந்தாள். அபிதாவுக்கு  இந்த பூராயங்களைக் கேட்பதில் ஆர்வம் இல்லை.  

தனக்கு வேலையும்,  தங்குவதற்கு இடமும் தந்து நன்றாக கவனித்துக்கொள்ளும் ஜீவிகா சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கவேண்டியது தனது கடமைதானே என்ற எண்ணத்திலேயே பொறுமையுடன் வீட்டுப்பணிகளை செய்தவாறே அந்தக்குடும்பத்தின் பல உள்விவகாரங்களையும் அபிதா கேட்கநேர்ந்தது. இந்தக்  குடும்ப பிரச்சினைகளில் தான்


சிக்கிவிடாமல்,  வெறும் பார்வையாளராக மாத்திரம் இருக்கவே அபிதா விரும்பினாள். இன்றைக்கு சண்டை பிடிப்பார்கள்.  பின்னர் என்றாவது ஒருநாள் கூடிக்கும்மாளம் போடுவார்கள். சேருவது இனம், மாறுவது குணம்தானே..? நான் எனதுபாட்டை இனிப்பார்க்கவேண்டும்.  

இந்த வீட்டுடனான  எனது சொந்தம் தற்காலிகமானதுதானே.  இதற்கு முன்னர் இங்கே எத்தனை வேலைக்காரிகள் வந்து வந்து போயிருப்பார்கள்.  நானும் அப்படித்தானே..?  பாசம் கண்ணை மறைக்கும்போதுதானே மனக்கவலைகள் ஏமாற்றங்கள் வருகின்றன.  யார் யாரை எங்கெங்கே சந்திப்போம்…?  எங்கெங்கே விட்டுப்பிரிவோம்…?  என்பது கூட தெரியாத வாழ்க்கை.   தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு போகும் வரையில்  “ அபிதா… அபிதா…  “  என்று மாறி மாறி அழைத்துக்கொண்டும் -  வேலை வாங்கிக்கொண்டுமிருந்த  கற்பகம் ரீச்சர்,  சுபாஷினி, மஞ்சுளா படிப்படியாக அகன்றுவிட்டார்கள். அவரவர் தத்தம் எதிர்காலத்தை கவனிக்கப்போய்விட்டார்ள். இடைக்கிடை தொடர்புகொண்டு பேசினாலும்,  கிணற்றில் விழுந்த கல்லினால் தோன்றும் வளையங்கள் படிப்படியாக மறைந்துவிடுவதைப்போலத்தானே இந்த உறவுகளும். 

க.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்


கொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை.

அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில் வெளிவருகிறது. அதில் தற்போது விருமாண்டி என்பவரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள க.பெ. ரணசிங்கம் படமும் OTTயில் வெளிவந்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நான்காவது முறையாக ரம்மி, தர்மதுரை, மற்றும் பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களுக்கு பிறகு அவர்கள் இப்படத்தில் இனைந்து நடித்துள்ளார்கள். விருமாண்டி இயக்கத்தில், கிப்ரான் இசையில், க.பெ. ரணசிங்கம் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் OTTயில் வெளியான க.பெ. ரணசிங்கம் ரசிகர்களை திருப்திபடுத்தியதா? வாருங்கள் பார்ப்போம்

கதைக்களம் :

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தானாக முன் வந்து நின்று நீதிக்கு குரல் கொடுக்கிறார் விஜய் சேதுபதி.

விறுவிறுப்பான கதைக்களமும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதிக்கு ஏற்படும் காதலும் மிகவும் எதார்த்தமாக எந்த ஒரு கமெர்ஷியல் விஷயங்களும் சேர்க்காத ஒன்றாக இருக்கிறது. மேலும் தமிழ் நாட்டில் இருந்து துபாய்க்கு வேலைக்காக செல்லும் இளைஞர்கள் அங்கு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை மையக்கருவாக கொண்டிருக்கிறது க.பெ.ரணசிங்கம்.

விஜய் சேதுபதி துபாய்க்கு சென்று பல விதமான பிரச்சனைகளை சந்திக்கிறார். துபாயில் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் தனது கணவனுக்காக போராடும் மனைவியின் கதை தான் க.பெ. ரணசிங்கம்.

படத்தை பற்றிய அலசல் :

OTTயில் வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

தனது கணவருக்காக, பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல் பாராட்டக்குறியது. அதே போல் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் படும் அவதி, தமிழக மக்களின் வாழ்வாதார பிரதிபலிபாக தெரிகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்படத்தில் உதவும் கதாபாத்திரங்களாக ஜி.வி. பவானி, ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு சோலோ கதாநாயகியாக இப்படத்தை தாங்கி, வெற்றிக்கு எடுத்து சென்றுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

OTTயில் வெளிவரும் படங்களில் க.பெ. ரணசிங்கம் பெரும் வெற்றியை கண்டுள்ளது.

க்ளாப்ஸ் :

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வலுவான பெண் கதாபாத்திரம் படத்தின் பிளஸ் பாயிண்ட்.

ஜிப்ரானின் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இயக்குனரின் சமூக அக்கறை மற்றும் தரமான திரைக்கதை.

இ.கே. ஏகாம்பரத்தின ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்றிணைக்கிறது.

பல்ப்ஸ் :

படத்தின் ரன்னிங் டைம் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் இந்த ஆண்டின் மிக சிறந்த படங்களில் ஒன்றாகும் கணவர் பெயர் ரணசிங்கம்.