மரண அறிவித்தல்

.
  திருமதி சின்னப்பிள்ளை வரதராஜா
                                    
                                                

                          ( தோற்றம்: 27.06.1933                  மறைவு: 12.10.2018 )
யாழ்ப்பாணம் தென் புலோலி ஊரை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட “சின்னப்பிள்ளை டீச்சர்” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட திருமதி சின்னப்பிள்ளை வரதராஜா அவர்கள் 12 ம் திகதி ஐப்பசி மாதம் 2018ல் இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம் சென்ற திரு ஆழ்வாப்பிள்ளை ,திருமதி தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்;
 காலம் சென்ற  திரு வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்;
சாந்தினி ,ரேவதி, முரளிதரன் ,கேதாரகௌரி, கோணேஸ்வரன், நாகநந்தினி ஆகியோரின் அன்பு தாயாரும் ;
ஜெயதேவன், அருள்வேந்தன், மாலதி, மாலா, மஹேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்;
தேஜஸுன் ,அனிதா, ஜோதி, அரன் ,கஸ்தூரி, சங்கர், ரொஷான், விசாலி ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 19ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரைக்கும் பார்வைக்காக Liberty Parlour, 101 south street Granville NSW Australiaல் வைக்கப்பட்டு இருக்கும்
அன்னாரின் இறுதி ஈமகிரியைகள்    Rookwood South Chapelல்  20/Oct/2018  அன்று சனிக்கிழமை காலை 10.30  மணியிலிருந்து பிற்பகல் 1.30 வரைக்கும் நடைபெற்று அதனை தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
முரளிதரன்  Australia +61433630501
கோணேஸ்வரன் Canada +15146193537
அருள்வேந்தன் Australia +61418167181
ஜெயதேவன் Australia +6140500253

நவராத்திரி நன்னாளில் நலந்தரும் நாயகியிடம் வேண்டி நிற்போம் அரவணைப்பாய் தாயேநீயும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


பனைமரக்காடு 🎬 திரைப் பார்வை - கானா பிரபா







போருக்குப் பின்னான வாழ்வியலில் ஈழத்துச் சமூகம் முகம் கொடுக்கும் பண்பாட்டுச் சிக்கல்கள், பூர்வீக நிலங்கள் மீதான வாக்குறுதிகள், நம் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைமைகளின் வெற்று வாக்குறுதிகள் இவற்றை மையப்படுத்தி எழுந்திருக்கும் திரைச் சித்திரமே “பனைமரக்காடு”
ஒரு சிறந்த படைப்பாளி எனப்படுவர் தன் படைப்புகளின் வழியாகச் சமகாலத்தைப் பேசக் கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ வேண்டும். அதன் வழியாகப் பெறப்படும் படைப்புகளே காலம் தாண்டிப் பேசப்படக் கூடியவைகளாக அமையும் என்ற வகையில் திரு கேசவராஜன் அவர்களின் இயக்கமென்பது போரியல் வாழ்வில் அவர் சந்தித்து எடுத்த படைப்புகளோடு இப்போது பனைமரக்காடு வெளிப்படுத்தியிருக்கும் கதைப் பின்புலமும் அவரின் வாழ்வியலோடு இணைந்து அவர் தம் படைப்புலகமும் இயங்கி வருவதை மீள நிறுவியிருக்கிறது.
திடீர் இடப் பெயர்வுகளில் வழியாக அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழி வழியாக வந்த நிலங்களை விட்டு நகரும் மக்கள் மீளவும் திரும்பி அந்த நிலங்களுக்கு உரித்தானவர்களாக நிலை நாட்ட எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது, தம் மக்களுக்காக, தம் நாட்டுக்காகப் போராடி வதை முகாம்களில் இருந்து மீளும் போராளிகளின் இன்றைய நிலை என்ன? ஒரு கட்டுக் கோப்பாக நெறி முறையோடு வாழ்ந்த சமூகத்தில் புரையோடியிருக்கும் போதைப் பழக்கத்தால் எழும் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் விலாவாரியாகக் காட்சியமைப்புகளின் வழி நகர்த்தியிருக்கிறது பனைமரக்காடு. ஒரு முழு நீள சினிமாவாக அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் மையப்படுத்தாது விரிவானதொரு பார்வையில் விரிகிறது இந்தப் படம்.
பனைமரக்காடு திரைப்படத்தின் அத்தனை கதை மாந்தர்களும் தம் பிரதேச வழக்கில் இருந்து வழுவாத மொழி பேசுவதால் அந்நியப்படாத நம் ஈழத்தமிழ் பேச்சு வழக்கு வெகு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக நோக்கிலான சமரசத்துக்கு இடம் கொடுக்காததால் உரையாடல்களில் இருந்து பாடல்கள் வரை ஈழத்துத் திரை மொழிக்குண்டான பக்குவத்தோடு பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஓட்டத்துக்கு ப்ரியனின் இசையமைப்பு பெரும் பலம். குறிப்பாக வஞ்சகர்களின் நகர்வுகளில் ஒலிக்கும் பின்னணி இசை படம் முடிந்த பின்னாலும் நினைவில் தங்கி ஒலியெழுப்புகிறது. படத்தின் இரண்டு பாடல்களையுமே நாம் எப்படி வாழ்ந்திருந்தோம், எதைத் தொலைத்தோம் என்ற ஏக்கம் தொனிக்கும் வரிகளாக ஷாலினி சார்ள்ஸ் கொடுத்திருக்கிறார். அவையும் தேவை கருதிய பட ஓட்டத்துக்கே துணை புரிந்திருக்கின்றன.
நம்முடைய தாயக மண்ணில் காலடி வைத்ததும், அங்கு மட்டுமே கேட்கக் கூடிய இயற்கைச் சூழல் ஒலிகள், பறவைகளின் ரீங்காரம் போன்றவற்றைக் கொண்டே பின்னணி இசையை நகர்த்தியிருப்பது படத்தின் யதார்த்தத்தை அழகுபடுத்துகிறது.

தந்தை செல்வா! இலங்கைத் தமிழ் இனத்தின் இணையற்ற தலைவர்! - பாடும்மீன் சட்டத்தரணி, சு.ஸ்ரீகந்தராசா -


இன்று (15.10.2018) தந்தை செல்வா அவர்களுக்கு மட்டுநகரில் திருவுருவச் சிலை அமைக்கப்படுகிறது.
இந்த வருடம் 2018, ார்ச் மாதம் 31 ஆம் திகதி தந்தை செல்வா அவர்களின் 120 ஆவது பிறந்த தினமும்
ஏப்ரல் 26 ஆம் திகதி, ாற்பத்தோராவது ஆண்டு நினைவு ினமும் ஆகும்.
அவர் மறைந்து நாற்பத்தியொரு ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அவர் விதைத்துச் சென்ற அரசியல் கருத்துக்கள் சாகா வரம்பெற்றவையாக இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் இன்றியமையாதவகையில் இன்னமும் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் சகல உரிமைகளுடனும் முற்று முழுதான சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான பாதையினை வகுப்பதில் தனது வாழ்நாள் முழுவதையும் ர்ப்பணித்துச் செயற்பட்ட மாபெரும் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள். தமிழ் மக்களால் “தந்தை செல்வா” என்று பாசத்துடனும், மதிப்புடனும் போற்றப்படுகின்ற ஒரே தலைவர் அவரே. தொலை நோக்குப் பார்வையுடன் தூய்மையான அரசியல் தலைவராக விளங்கிய அவர் ஒரு தீர்க்கதரிசி ஆவார். தந்தை செல்வா அவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசுத் தலைவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தபோதும், மாற்றுக்கட்சித் தலைவர்களாலும் மதிப்போடு நடாத்தப்பட்ட மாண்புமிக்க பெருந்தகையாளராகவே அவர் விளங்கினார்.

இற்றைக்கு அறுபத்தியைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்து இறக்கும்வரை அவர் தூவிய அரசியல் கருத்துக்களே இன்னமும் இலங்கைத் தமிழ் இனத்தின் அரசியல் பாதையினச் செப்பனிடும் தாரக மந்திரங்களாக விளங்குகின்றன. அவர் ஆரம்பித்த தமிழ் அரசுக்கட்சியே இலங்கைத் தமிழ் மக்களிடம் அமோகமான செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்சியாக இலங்குகின்றது. இவற்றிலிருந்து தந்தை செல்வா அவர்களின் தன்னிகரற்ற தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் நன்கு துலங்குகின்றது.

வாழ்வை எழுதுதல் - அங்கம் 05 தண்ணீர் பற்றி கண்ணீருடன் எழுதவேண்டிய கதைகள் நன்னீருக்கு கோயிலை நாடிய காலத்தில் சாதிபேசிய சமூகம் உவர்நீர் காலத்தில் மௌனமானேதேன்? - முருகபூபதி


எங்கள் ஊரில் அரிவரி வகுப்பு படித்த 1954 ஆம் ஆண்டு காலத்தில் எங்கள் பெரியரீச்சர் அம்மா ( இவர்களை இப்படி அழைப்பதுதான் எனது வழக்கம்) திருமதி மரியம்மா திருச்செல்வம் சொல்லித்தந்த முதல் கதை காகமும் தண்ணீர் குடமும்.
தாகத்தினால் தண்ணீர் தேடி அலைந்து வரும் காகம்,  ஒரு வீட்டு முற்றத்தில் காணும் தண்ணீர் குடத்தை எட்டிப்பார்க்கிறது. அதன் அடிமட்டத்தில்தான் சிறிதளவு தண்ணீர்.  சமயோசித புத்தியினால் அருகில் கிடக்கும் சிறு சிறு கூழாங்கற்களை தனது அலகால் பொறுக்கி எடுத்து குடத்தினுள் போடுகிறது. தண்ணீர் மட்டம் உயர்ந்ததும் அருந்தி,  தாகம் தணித்து பறந்துசெல்கிறது.
இக்கதை காட்சியாக வரையப்பட்ட பெரிய ஓவியத்தை எமக்கு முன்னால் காண்பித்து அந்தக்கதையை ரீச்சர் சொன்னார்கள். அதனைக்கேட்ட நாமும் அவர் முன்னிலையில் அதே கதையைச்  சொல்லவேண்டும். இவ்வாறு எமக்கு சிந்தனையாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்தார்கள் எங்கள் அரிவரி வகுப்பு ஆசிரியை.
ஆறு தசாப்தங்களுக்குப்பின்னர் அவுஸ்திரேலியாவில் எனது பேரக்குழந்தை ஆண்யா,  இதே கதையை எனக்குச்சொன்னாள். அவளுக்கு தற்போது ஐந்துவயதாகிறது. மெல்பனில் இயங்கும் பாரதி பள்ளிக்குச்சென்றுவரும் பேத்தி என்னிடம் கதைகேட்பாள். நான் அவளிடம் கேட்பேன்.

மெல்பனில் ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி - ரஸஞானி


மெல்பனில் வதியும் ஓவியர் மொஹம்மட் நஸீர் அவர்கள் நீண்டகாலமாக ஓவியத்துறையில் ஈடுபட்டுவரும் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தில் 1955 ஆம் ஆண்டு காலத்தில்  நகரபிதாவாக ( மேயர்) பதவியிலிருந்த (அமரர்) எம்.எம். சுல்தான் அவர்களின் புதல்வராவார்.
இவருடைய தாய் மாமனார்தான் இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபரும்  செனட்சபை உறுப்பினருமான ( அமரர்) ஏ. அஸீஸ் அவர்கள்.
இவ்வாறு புகழ்பூத்த குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஓவியர் நஸீர் யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரியில் பயின்ற காலத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்தவர்.
மத்திய கல்லூரியின் கிரிக்கட்  அணியின் தலைவராகவும் பல கிரிக்கட் போட்டிகளில் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்தவர். அன்று கிரிக்கட் மட்டையும் பந்தும் இருந்த இவரது கரத்தில் தற்பொழுது இருப்பது ஓவியம் வரையும் தூரிகைதான்.
இளமையில் படிக்கின்ற பருவத்திலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் காண்பித்து வந்திருப்பவர்.  துடுப்பாட்டத்திலும் விளையாட்டிலும், ஓவியக்கலையிலும் ஈடுபாடு காண்பித்தவரை,  இவரது பெற்றோர்கள் மேற்கல்விக்காக இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பொறியியல் பட்டதாரியான நஸீர், தான் தவமாக கருதிய ஓவியக்கலையை கைவிடாமல் அதன் நுட்பங்களை வெளிப்படுத்திவந்திருப்பவர்.
மத்திய கிழக்கில் தொழில் நிமித்தம் பணிக்காக சென்றவர், அங்கும் பல வர்த்தக நிறுவனங்களுக்கு ஓவியங்கள் வரைந்து வழங்கியிருப்பவர். உள்ளார்ந்த கலையாற்றல் மிக்கவர்கள் எங்கு வாழநேரிட்டாலும் தாம் நேசித்த கலைத்துறையை கைவிடமாட்டார்கள் என்பதற்கு  எம்மத்தியில் மெல்பனில் வதியும் ஓவியர் நஸீர் அவர்களும் ஒரு முன்னுதாரணம்.
1996 ஆம் ஆண்டு இவர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துவந்த பின்னரும் இங்கு கிரிக்கட் அணிகளில் அங்கம் வகித்து பல கிரிக்கட் ஆட்டங்களில் பங்கேற்றிருப்பவர். அத்துடன் தொடர்ந்தும் தான் விரும்பும் ஓவியத்துறையிலும் ஈடுபட்டவர்.

சிட்னி ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் நவராத்ரி -2018








இலங்கைச் செய்திகள்


விஜயகலா பிணையில் விடுதலை

வவுனியாவை வந்தடைந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்கான பல்கலை மாணவர்களின் நடைபவனி

இந்து சமுத்திரம் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்


துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனை ; உறுதிசெய்தது நீதிமன்றம்

அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும்: மாணவர்கள் எச்சரிக்கை

அரசியல் கைதிகளுக்கான நடை பவனி ; பெரும்பான்மையின இளைஞர்களின் குழப்பத்தால் பரபரப்பு

"சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்" : சமாதான நடைப்பயணம்

எந்த நாட்டுடன் யுத்தம் செய்ய 3 ஆயிரம் மில்லியன்   ;அனந்தி


விஜயகலா பிணையில் விடுதலை


08/10/2018 கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உலகச் செய்திகள்


சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியது

ரயில் தடம் புரண்டதில் 7 பேர் பலி!!!

அதி நவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானிற்கு வழங்குகிறது சீனா!!!

தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை- தெளிவான பயங்கரமான ஆதாரங்கள் சிக்கின

இடைநில்லா விமான சேவையை மீண்டும் தொடங்கியது சிங்கப்பூர்

சவுதி பத்திரிகையாளர் தான் கொல்லப்படுவதை தானே பதிவு செய்தாரா?



சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியது

08/10/2018 இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி இதுவரை 2000 பேர் வரை பலியானதோடு சுமார் 5000 பேர் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா தமிழ் மூத்த பிரசைகள் காருண்யக் கழகத்தின் தீபாவளி விழா 13/10/2018






விக்டோரியா தமிழ்ச் சங்கம் - முத்தமிழ் விழா - 20/10/2018







தமிழ் சினிமா - 96 திரை விமர்சனம்



காதலை சொல்லும் எத்தனையோ படங்கள் வந்து போகின்றன. ஆனால் அதில் சில படங்கள் தான் மக்கள் மனதில் இடம் பெறுகின்றன. ரசிகர்களை ஈர்த்து விடுகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளிவந்துள்ளது. இப்படம் சொல்லும் காதல் ஆழம் தானா என 96க்குள் போய் பார்ப்போம்.

கதைக்களம்

படத்தில் ஹீரோவாக வரும் விஜய் சேதுபதி ஒரு சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர். ஹீரோயின் திரிஷா. இருவரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள். இவர்களின் தோழர்களாக ஆடுகளம் முருகதாஸும், தேவதர்ஷினியும். எப்போதும் கூட்டணியாக தான் இருப்பார்கள் இவர்கள்.
விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இவர்களுக்குள் எப்போதும் இணை பிரியாத பாசம். கடைசியில் அது காதலாக துளிர்விடுகிறது. சொல்லத்துடிக்கும் நேரத்தில் சொல்ல முடியாமல் ஒரு நிகழ்வு அரங்கேறுகிறது.
ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முற்படுகையில் என்னென்னவோ நடந்து போகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? காதலை சொன்னார்களா? பிரிவின் காரணம் என்ன என்பதை பின்னோக்கி நம்மை அழைத்துச்சென்று சொல்வதே இந்த 96.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி தான் நடிப்பில் எப்போதும் மாஸ் காட்டுவாரே. கதைகளையும் நன்றாக தேர்ந்தேடுப்பாரே என சொல்வோருக்கு இப்படம் ஒன் மோர் கிரெடிட் என சொல்லலாம். இப்படத்தில் அவர் ஒரு புகைப்படக்கலைஞர். அதிலும் நுட்பத்துடன் கலையையும் ரசிக்கும் வகையில் அவர் செய்கையுடன், சொல்லும் டையலாக்கும் நம்மை அந்த கலைஞராக்கிவிடும்.
திரிஷாவுக்கு காதல் சப்ஜெக்ட் சோ க்யூட் என சொன்னால் அதுவும் இங்கேயும் சாத்தியமே. விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். வழக்கம் போல மரத்தை சுற்றி டூயட் ஆடாமல் இம்முறை ஒரு புதிய முயற்சி. மீண்டும் அவர் தனக்கான இடத்தை ஸ்கோர் செய்துவிட்டார்.
ஹீரோவின் இளம் பருவ தோற்றமாக பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். இவருக்கான காட்சிகள் போதுமானது என்றாலும் மனதிற்கு நிறைவானதாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் ஃப்ரோ.
அதே போல திரிஷாவாக கௌரி என்ற பெண் நடித்துள்ளார். இவரை இப்போது தான் பார்க்கிறோம் என்றாலும் அனுபவம் வாய்ந்தவர் போல நடித்திருக்கிறார். இவர்களின் வெகுளியான அன்பும், காதலும் நம்மை அந்த வருடத்திற்கே அழைத்து சென்றுவிடும். மீண்டும் ஸ்கூல் யூனிஃபார்ம் போட சொல்லும்.
இவர்களின் நட்பு வட்டாரமாக வரும் ஆடுகளம் முருகதாஸும், தேவ தர்ஷினியும் படத்திற்கு போதுமான காமெடி தருகிறார்கள். அதே வேளையில் விஜய் சேதுபதியின் ரியாக்‌ஷன் கூட சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்து விடுகிறது. மீண்டும் பிரபல நடிகர் ஜனகராஜை திரையில் பார்த்தது பலருக்கும் மகிழ்ச்சி. ஆனால் வயதாகிவிட்டதல்லவா. அந்த இளமையான குரல் கொஞ்சம் தளர்ந்து விட்டது வருத்தம் தான்.
படத்தின் இயக்குனர் பிரேம் குமார் சிம்பிளான கதையாக இருந்தாலும் மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார். காதலின் இயற்கை கதையோடு ஆழமாக பயணமாகிறது. ஒரு வசனத்தை மனப்பாடம் செய்து பேசலாம். ஆனால் கடந்த காலத்தை அதிலும் குறிப்பிட்ட அந்த வருடங்களை நம் உணர்வுகளால் கொண்டு வருவது சாத்தியம் என சொல்லியிருக்கிறீர்கள். சலாம் சார்.
ஒளிப்பதிவு சரியான நகர்வு. திட்டமிட்டு காட்சிகளை நகர்த்தி நம்மையும் படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். இசைக்கு கோவிந்த மேனன். அந்த ஒரே ஒரு Lead போதும் சார். இன்னும் பலமுறை கேட்க வேண்டும் போலிருக்கிறது.
சின்மயி குரல் சமந்தாவுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை மாற்றி திரிஷாவுக்கும் பொருந்தும் என காண்பித்து விட்டார். கார்த்திக் நேதா, உமா தேவியின் பாடல் வரிகளில் பாடகர் பிரதீப், சின்மயி பாடிய பாடல்கள் இனிமை.

கிளாப்ஸ்

விஜய் சேதுபதி, திரிஷாவின் ரியாக்‌ஷன் ஃபீல் குட் ஃபிளாஷ் பேக் மெம்மரிஸ்.
இயக்குனர் கதை சொன்ன விதம், காட்சிகளை கோர்த்தது பொருத்தம்.
பாடல்களும், பின்னணியும் இசையும் நம்மை உணர்ச்சி வசமாக்குவது உறுதி.

பல்ப்ஸ்

படம் முழுக்க ஹீரோ ஹீரோயினை கொஞ்சம் வேறு காஸ்ட்டுயூமிலும் காட்டியிருக்கலாமே.
மொத்ததில் 96 அனைவரையும் மீண்டும் காதலை தேடவைக்கும். உங்களுக்கு எப்படியோ....
நன்றி  CineUlagam