சிட்னில் அமைந்துள்ள துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தீர்த்த திருவிழா

 .

சிட்னில் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று 24.02.2024  தீர்த்த  திருவிழா இடம்பெற்றது. இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் இசையை வழங்க   அம்பாள் வீதிஉலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது 



வையத்துள் வாழ்வாங்கு வாழவுரைத்தார் வள்ளுவனார் !

.
மகாதேவ ஐயர் ஜெயரமாசர்மா - மேனாள்தமிழ்மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண் …. அவுஸ்திரேலியா 
  









 நல்லறத்தை நன்னெறியை நாமுணர வைப்பதற்கு வள்ளுவனார் உவந்தளித்த நல்வரமே குறளாகும் சொன்னயமும் பொருணயமும் எமக்கீயும் நன்னூலாய் எஞ்ஞான்றும் விளங்குவது எங்கள் திருக்குறளாகும் 

 ஆயிரத்து முன்னூற்று முப்பதென்ப தெண்ணல்ல அத்தனையும் அனைவருக்கும் வாய்த்தபெரு பொக்கிஷமே 
 ஈராயிரம் வருடம் நிலைத்திருந்து இம்மண்ணில் பேரொளியாய் திகழுவது வள்ளுவத்தின் பெருமையன்றோ 

 தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர்பலராவர்   
அனைவருமே அன்னைக்கு ஆசைமிகு புத்திரரே 
 என்றாலும் வள்ளுவரை எம்மன்னை அணைத்திடுவாள் 
வள்ளுவரால் தமிழமுது வானளவும் சென்றதுவே 

 இல்லறத்தைச் சொன்னார் துறவறத்தைச் சொன்னார் 
நல்லறத்தை அதனூடாய் நயமுடனே பயந்தார் 
சொல்லறத்தை வள்ளுவத்தின் உயிராக்கி நின்றார் 
சுவையோடு கருத்துரைத்து வள்ளுவத்தை ஈந்தார் 

 எதுவுரைத்த போதும் அதுவாகி நின்றார் 
எவருணர்வும் நோகா கருத்துரைக்க நினைத்தார் 
நினைத்த கருத்தை நீதியாய் உரைத்தார் 
நிலையாக நிற்கும்படி வள்ளுவத்தைக் கொடுத்தார் 

 அன்னைக்கும் சொன்னார் அப்பனுக்கும் சொன்னார் 
அவரீன்ற பிள்ளைகட்டும் அருமையாய் சொன்னார் 
 கல்லென்று சொன்னார் நடவென்று சொன்னார் 
 கல்லாமல் இருந்தால் கண்ணில்லை என்றார் 

 கற்றுவிட்டால் எழுமைக்கும் துணையாகு மென்றார் 
கல்லாமை யாவருக்கும் பொல்லாமை என்றார் 
கற்றுவிடு கற்றுவிடு எனவுரைத்து நின்றார் 
கடவுளடி பற்றுவதே கற்றபயன் என்றார் 

 சினமடக்கு என்றார் தீயசெயல் கடிந்தார் 
தனக்குவை இல்லான் தாழ்சேரு என்றார் 
மனக்கவலை மாற்ற மருந்துபல சொன்னார் 
வையத்துள் வாழ்வாங்கு வாழ பலவுரைத்தார் 

 நன்மைதரும் இன்சொல்லை நாடுவெனச் சொன்னார் 
நலனற்ற சொல்லனைத்தைம் கேடுவென வுரைத்தார் 
 இனிமையுடன் பேசுவதே இன்பமெனச் சொன்னார் 
இவையனைத்தும் வள்ளுவத்தின் உயிர்மூச்சு என்றார் 

 கொல்லாதே என்றார் குடியாதே என்றார் 
 கொல்லுவதைத் தின்னுவதை விட்டுவிடு என்றார் 
நீவளர உயிர்வதைத்தல் நீதியிலை என்றார் 
உயிரோம்பி வாழுதல்தான் உயர்வாழ்வு என்றார் 

 புத்துணர்வுக் கருத்துக்களை பொறுப்புடனே சொன்னார் 
புலனெல்லாம் தூய்மைபெற பொருத்தமாய் புகன்றார் 
பொருத்தமில்லா கருத்துக்களைப் புறந்தள்ளி நின்றார் 
புவிவாழ பொருந்துவதை வள்ளுவமாய் கொடுத்தார்



எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 96 கடவுள் நேரில் தோன்றினால் கேட்க வேண்டிய வரம் ! முருகபூபதி

 .

எனது இலக்கிய நண்பர் ஒருவர், வாட்ஸ் அப் ஊடாக எனக்கு ஒரு சுவாரசியமான கதையை அனுப்பியிருந்தார்.

முதலில் அதனை இங்கே பதிவுசெய்துவிட்டு,  எனது எழுத்தும் வாழ்க்கையும் தொடரை ஆரம்பிக்கின்றேன்.

கடவுளும், அவர் படைத்த உயிரினங்களும்

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்:

“ நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன்

 மேல் சுமைகள் இருக்கும். நீ புல்தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ ஐம்பது  வருடங்களுக்கு வாழ்வாய். “

இதற்கு கழுதை சொன்னது:

 “ நான் கழுதையாக இருக்கிறேன். ஆனால்,  ஐம்பது  வருடங்கள்  ரொம்ப

 அதிகம். எனக்கு  இருபது  வருடங்கள்  போதும்.”


கடவுள்,  கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்துவிட்டு,  அதனிடம் சொன்னார்:

“ நீ மனிதனின் வீட்டைக் காக்கும் காவலன். அவனுடைய அன்புத் தோழனாக

 இருப்பாய். மனிதன்,  தான் உண்ட பிறகு எஞ்சியதை உனக்குக் கொடுப்பான்.

நீ  முப்பது வருடங்களுக்கு வாழ்வாய்.”

இதற்கு நாய் கூறியது:

“ கடவுளே, முப்பது வருடங்கள்  ரொம்ப அதிகம். எனக்கு  பதினைந்து

 வருடங்கள்  போதும். ”

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கைப்  படைத்து அதனிடம் சொன்னார்:

“ நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி

 மற்றவர்களை மகிழ்விப்பாய்.  நீ  இருபது வருடங்களுக்கு வாழ்வாய்.”

இதற்கு குரங்கு கூறியது:  “ இருபது வருடங்கள்  ரொம்ப அதிகம். பத்து

 வருடங்கள்  போதும். ”

கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்துவிட்டு,   அவனிடம் சொன்னார்:

” நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவைக்

 கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ

 இருபது வருடங்களுக்கு வாழ்வாய்.”

இதற்கு மனிதன் கூறினான்.

“ கடவுளே, எனக்கு  இருபது வருடங்கள்  ரொம்பவும் குறைவு.

கழுதை வேண்டாம் என்ற  முப்பது வருடங்களையும்,

நாய் வேண்டாம் என்ற பதினைந்து வருடங்களையும்,

குரங்கு வேண்டாம் என்ற  பத்து வருடங்களையும்

எனக்கு கொடுத்து விடுங்கள் 

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினார்.

அன்று முதல்

மனிதன் முதல்  இருபது வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த முப்பது  வருடங்களை கழுதை போன்று

 எல்லாச் சுமைகளையும்  தாங்கிக் கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்த பிறகு, அடுத்த பதினைந்து வருடங்களுக்கு அவன்

 வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்துக் கொள்கிறான். மிச்சம்

 மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி,
Retire ஆன பிறகு குரங்கு போல்  பத்து வருடங்களுக்கு மகன்

 வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி,

 தன் பேரக்குழந்தைகளுக்கு  வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணிக்கின்றான்.

எமது மனித வாழ்வின் யதார்த்தத்தை இக்கதை படம்பிடித்துக்

 காண்பித்துள்ளது.

சிட்னி துர்காதேவி தேவஸ்தானம் தீர்த்தம்

 .



திருமுறைப் பண்ணிசைத் திருத்தல முற்றோதல் 2.05.2024

 .



பார்வையில் மலர்ந்த காதல் -

 .



அவள் பார்வை என்மீது பட்டது
என்னை நான் மறந்தேன்
என்னுள் எல்லாம் அவளானதால்
என்னை நான் மறந்தேன்
நான் பார்ப்பதெல்லாம் அவளானதால்
என்மனம் அவள் மனம் சங்கமமானது
ஈருடல் ஓருயிராய் போவது உணர்ந்தேன்
அது ஓர் காதல் மலரானதோ !
கண் திறந்து பார்த்தேன்
என்னை நானே கொஞ்சம் கிள்ளிப் பார்த்தேன்
என்னை உணர்ந்தேன் இப்போது நான்
என்னைத் தழுவி இப்போது அவள்
என் அரவணைப்பில்
எங்கள் பார்வையில் மலர்ந்த காதல்
நாங்கள் இணைந்தோம்
ஈருடல் ஓருயிராய்....



வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன்

நன்றி https://eluthu.com/kavithai/434384.html

சிட்னில் அமைந்துள்ள துர்க்கா தேவி தேவஸ்தானத்தில்தேர்த் திருவிழா

 .

சிட்னில் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் கடந்த வெள்ளியன்று 23.02.2024 தேர்த்  திருவிழா இடம்பெற்றது. இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் இசையை வழங்க புதிதாக அமைக்கப் பட சித்திர தேரில் அம்பாள் வீதிஉலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது 











மானிடர் ஆத்மாவை வாய்மொழிப் பாடல்களாக வழங்கிய கவிஞி அனார் ! முருகபூபதி

 .

கிழக்கிலங்கை சாய்ந்தமருதைச்சேர்ந்த  இஸ்ஸத்  ரீஹானா  எம். அஸீம் அவர்கள்,   ஈழத்து இலக்கிய  உலகில்  மட்டுமன்றி  தமிழகத்திலும்  நன்கு  அறியப்பட்ட  கவிஞி.  ஆனால் , இவரை  “அனார்”  என அழைத்தால்தான்  இலக்கிய உலகில் தெரியவரும்.

சிறுவயதிலேயே  சாய்ந்தமருது கிராமத்தின்  நாட்டார் பாடல்களை   உள்வாங்கியவாறு,  தனது   மழலை  மொழியில்  பாடிய  சிட்டுக்குருவி. 

ஏன்  அவருடைய பால்யகாலத்தை  சிட்டுக்குருவியுடன்  ஒப்பிடுகின்றேன்  என்றால்,  அந்தப்பருவம்   சுதந்திரமானது.   சிட்டுக்குருவியும்  சுதந்திரமான பறவை.

அனார்,    தமது  குழந்தைப்பருவத்தை  வளர்ந்து விட்ட பின்னரும்,  மறைக்காமல்   மறக்காமல்    குடும்பத்தலைவியாகிவிட்ட பிறகும்   வெள்ளை  உள்ளத்தோடு  சொல்கிறார்.

" என்னுடைய  குழந்தைப்பருவத்தைமென்மையான  கனவு போன்ற உலகம்   சூழ்ந்து  வியாபித்திருந்தது.  அந்தக்கனவுக்குள்ளே தும்பிகளைப்போல   அலைந்து  திரியும்  சிறுவர்  படைக்கு  நானே தலைவியாக  இருந்தேன்.

அணில்   மிச்சம் வைத்த  பாதிப்பழங்களை  தின்பதற்காகவோ, அணிலுக்கென   எந்தவொரு  பழத்தையும் விட்டுவைத்துவிடக்கூடாது   என்ற  பொறாமையினாலோ  என்னுடைய மாலைப்பொழுதுகள்  அனைத்தும்  மரங்களிலேயே   கழிந்தன."

இந்த   வரிகள்   அனாருடைய  '' பொடு பொடுத்த  மழைத்தூத்தல் - கிழக்கிலங்கை   நாட்டார்  காதல்  பாடல்கள் "  என்ற  நூலில்  பதிவாகியிருக்கிறது.

காதலிக்க நேரமில்லை - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று அறியப்பட்ட ஸ்ரீதர் , தனது சித்ராலயா பட நிறுவனத்தின் முதலாவது வண்ணப் படத்தை 1964ம் ஆண்டு தயாரித்தார். முதல் வண்ணப் படம் என்றால் அதனை நட்சத்திர நடிகர்களை கொண்டுதான் தயாரிக்க பலரும் விரும்பும் நேரத்தில் புதுமுக நடிகர்களையும், ஓரளவு அறிமுகமான நடிகர்களையும் போட்டு இப் படத்தை ஸ்ரீதர் உருவாக்க முன் வந்தார். படத்திற்கு அவர் தெரிவு செய்த ஒரே நட்சத்திர நடிகர் டி எஸ் பாலையா தான்!

படத்துக்கு ஸ்ரீதர் வைத்த பெயர் காதலிக்க நேரமில்லை. மலேசியாவில் இருந்து கல்வி பயில சென்னை வந்திருந்த ரவிச்சந்திரன் ஒரு ஹீரோவாகவும் , முத்துராமன் இன்னுமொரு ஹீரோவாகவும் , நாகேஷ் மற்றைய கதாநாயகனாகவும் தெரிவானார்கள். விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்த காஞ்சனா , இரண்டாம் கட்ட நாயகியாக நடித்துக் கொண்டிருந்த ராஜஸ்ரீ , இரண்டு படங்களில் ஹீரோயினியாக நடித்திருந்த
சச்சு ஆகியோர் கதாநாயகிகளாக உள்வாங்கப் பட்டார்கள்.

இளம் கதா பாத்திரங்கள், இளம் நடிகர்கள் என்றவுடனே ஸ்ரீதர் படத்துக்கு இசையமைக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரையுமே அமர்த்தினார். அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார். பாடல்களை எழுதி கொடுத்த கண்ணதாசன் அத்தோடு விட்டுவிடவில்லை. ஸ்ரீதர் ஏராளமாக செலவு செய்து கலரில் படம் எடுக்கிறாய், புதுமுகங்களை போட்டு படம் எடுப்பது பெரிய ரிஸ்க் , இது வேண்டாம் என்று அறிவுரை கூறத் தலைப்பட்டார். அவ்வளவுதான் , அதில் ஏற்பட்ட வாதம் வம்பாகி , இருவரிடையேயும் விரிசல் ஏற்பட்டு விட்டது. பின்னர் விசுவநாதன் தலையிட்டு பிரச்னை தீர்ந்தது! அதே போல் போலீஸ்கரன் மகள் தெலுங்கு படத் தயாரிப்பின் போது ஸ்ரீதருக்கு, பி சுசீலாவுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இனி என் சொந்த தயாரிப்பில் சுசிலா பாட வேண்டாம் என்று ஸ்ரீதர் தடை போட, அனைத்து வாய்ப்புகளும் எஸ். ஜானகிக்கு போயின. இப்போது மீண்டும் விஸ்வநாதன் தலையிட்டு , சுசிலா சிறு விளக்கக் கடிதம் எழுதி பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வந்தது. ஆக காதலிக்க நேரமில்லை படத்தின் பாடல்கள் வெற்றி பெற விஸ்வநாதன் இசையை மட்டும் வழங்கவில்லை, ஸ்ரீதர், கண்ணதாசன், சுசிலா இசைந்து போவதற்கும் வழியமைத்தார்!
இந்தப் படம் தயாரான அதே காலகட்டத்தில் ஸ்ரீதர் , எம் ஜி ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்று ஒரு படத்தை ஆரம்பித்து சில தினம் படப்பிடிப்பு நடந்து பின்னர் எம் ஜி ஆரின் கால்ஷீட் கிடைக்காமல் அதன் படப்பிடிப்பு நின்று விட்டது. புதுமுகங்களை வைத்து கலரில் படம் எடுக்கும் ஸ்ரீதர் தன்னை போட்டு கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறார் என்ற கோபம் எம் ஜிஆருக்கு! இப்படி பல சங்கடங்களுக்கு மத்தியில் காதலிக்க நேரமில்லை தயாரானது.

சிட்னில் அமைந்துள்ள துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் சப்பரத் திருவிழா

 .

சிட்னில் அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் கடந்த வியாழக் கிழமை அன்று 22.02.2024  சப்பரத்   திருவிழா இடம்பெற்றது. அன்றைய இரவு புதிதாக வரவழைக்கப் ப்பட்டிருந்த சித்திர தேர் வெள்ளோட்டம் பார்க்கப் பட்டது.  இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள நாதஸ்வர தவில் இசை கலைஞர்களும் இசையை வழங்க   அம்பாள் வீதிஉலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது .